அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-24
-
-
கேகோகேஎந்த நேரம்
வேண்டுமானாலும் வெள்ளம் வந்து வீட்டை அடித்து ச் செல்லலாம்.. பாம்பு பாம்பை க் காண
நேர்ந்தால் உடனடியாக எச்சரிக்கை கொள்ள வேண்டும். அது என்ன செய்யும். எப்போது கொத்தும் என்பது தெரியாது. துறவியின் ஒரு சொல் ஏன் ஓர் எண்ணம் கூட உங்களுக்கு த் தீங்கு விளைக்கலாம். இது உங்களுக்குப்
புரிவதில்லை.அவர் களை க் கண்டால் வணங்க வேண்டும்.வார்த்தைகளால் அவர் களை அவமதிக்கக் கூடாது.காசியில் ஒரு நாள் அன்னையின்
பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.அன்று சுவாமி
கேசவானந்தரின் தாய் வந்திருந்தார்.யாரோ உறவினா் ஒருவரின் மரணத்தை நினைத்து அவர் அழுது கொண்டிருந்தார். அதை
கண்ட அன்னை . சீ! இன்று யாராவது அழுவார்களா! இன்று ஆனந்த திருநாள் ஆயிற்றே! என்றார்.ஒருநாள்
அன்னையும்
-
என்று கூறினார்.அன்னையிடம்
இருந்து தீட்சை பெற்ற சில நாட்களுள் லால்மோகனின் (சுவாமி கபிலேசுவரானந்தர்) மனத்தில்
ஒரு சந்தேகம் எழுந்தது. என்ன செய்து தொலைத்தேன். ஒரு பெண்ணிடம் தீட்சை பெற்று விட்டேனே!.என்ற
எண்ணம் அவரை தொடர்ந்து அலைக்கழித்தது.
-
கோலாப்மா அன்னையிடம் அம்மா எண்ணெய் தேய்த்து கொள்ளுங்கள் என்றார்.அதற்கு
அன்னை வேண்டாம் என்று மறுத்தார். அதற்கு காரணம் கேட்ட போது நான் தேய்த்துகொண்டால் பிறரும்
அப்படியே செய்வார்கள்.எண்ணெய் தேய்த்து கங்கையில் குளிக்ககூடாது என்றார்.ஒரு நாள் ஒரு
பெண் வந்து அன்னையிடம் அம்மா எங்களுக்கு என்ன வழி என்று கேட்டாள்.இந்த கேள்வி அன்னையை
மிகவும் வெறுப்படைய செய்தது.சற்று கடுகடுத்த குரலில் உங்களுக்குஎன்ன வழி ! வருடம் தவறாமல் பிள்ளை பெற்று
கொள்கிறீர்கள் . கட்டுபாடு என்பது கடுகளவும் இல்லை. என்னிடம் வந்து என்ன வழி ? என்று கேட்பதால் மட்டும் எல்லாம் ஆகிவிடுமா? என்று
கேட்டார்.ஒரு முறை ராதுவிற்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்தது.அவளுக்கு ஒரு தாயத்து
கட்டியதும் ஏதோ தெய்வத்திற்கு வேண்டி கொண்டு
சிறிது பணமும் ஒதுக்கி வைத்தார். அது மிகுந்த ஆச்சரியத்தை தரவே ஒரு பக்தை அவரிடம் அம்மா இது என்ன நீங்கள் ஏன் இப்படி செய்ய வேண்டும்?உங்கள்
சங்கல்பத்தினால் அல்லவா எல்லாம் நடக்கிறது.
என்று கேட்டார். அதற்கு அன்னை நோய்கள் வரும் போது இவ்வாறு தெய்வங்களிடம் வேண்டிகொள்வதால்
பெரிய ஆபத்துகள் விலகுகின்றன. மேலும் உரிய தை உரியவருக்குக் கொடுக்கத்தானே வேண்டும்
!என்றார். மாணிக்தலா என்ற இடத்தில் ஒரு பக்தரின் வீட்டில்கௌரிமா ஒருமுறை வைசூரி நோய்
கண்டு படுத்திருந்தார்.அது ஒரு தொற்று நோய்
என்பதையும் பொருட்படுத்தாமல் அந்த பக்தரின் தாயும் வேறு பலரும் அவருக்கு மிகவும் சேவை செய்தனர். அதை க் கேட்ட போது அன்னை அந்த தாய் இந்த பிறவியிலே யே முக்தி பெற்று விடுவாள்.
கௌரியின் நோயின் போது அவளுக்காக ஒரு விளக்கை
த் தூண்டியவர்கள் கூட முக்தி பெற்று விடுவார்கள் என்றார்.மிகவும் மனம்
தளர்ந்தவராக துறவி ஒருவர் எழுதிய கடிதத்தைக்
கேட்டு அன்னை கூறினார்.இது என்னப்பா பேச்சு! குருதேவரின் திரு நாமம் என்ன சாதாரண விஷயமா?
அது எப்படி வீணாக ப் போகும்? பலனளிக்காமல்
இருக்கவே இருக்காது?குருதேவரை நினைத்தபடி இங்கே யாரெல்லாம் வருகிறார்களோ அவர்
களுக்கு இறைக்காட்சி கட்டாயமாக க் கிடைக்கும். மரண வேளையிலாவது கிடைக்து தீரும்.ஒரு பக்தர் மனப்பிரச்சனைகளால் நிலைகுலைந்து
போனார் . குருதேவரும் அன்னையும் இருந்தும் தனக்கு எதுவும்செய்யவில்லையே என்று அவருக்கு
த் தோன்றியது.எனவே இனி அன்னையிடம் போகக்கூடாது.என்று முடிவு செய்தார்.அவர், ஆனால் நண்பர்கள்
வற்புறுத்தியதன் காரணமாக ஒரு நாள் உத்போதனுக்கு ச் சென்றார்.அவர் சென்ற போது ஏராளமான பக்தர்கள் காத்திருந்தனர்.ஒவ்வொருவராக ச் சென்று
வணங்கினர்.அன்னை யாரிடமும் எதுவும் பேச வில்லை .ஆனால் பக்தர் சென்று வணங்கியதும் என்னப்பா
எப்படி இருக்கிறாய்?என்று கனிவுடன் கேட்டார் . அவரது அன்பில் நெகிழ்ந்த பக்தர் உணர்ச்சி வசப்பட்டு நன்றாக இருக்கிறேன் அம்மா
என்றேன்.அன்னை மென்னையாக ச் சிரித்தவாறே அது எப்படி யப்பா ? மனத்தில் .இயல்பே அப்படித்தானே!
அதற்காக இப்படியொரு முடிவெடுப்பார்களா,என்று கேட்டார். அந்த பக்தர் சட்டப் படிப்பு
படித்துக்கொண்டிருந்தார்.ஒருநாள் அன்னையை வணங்கிய போது அம்மா என் மனமோ இந்த நிலைமையைில்
உள்ளது. இதில் வக்கீல் தொழிலுக்கு வேறு போகிறேன்.என் தலையெழுத்து என்னவாகுமோ தெரியவில்லை
என்றார்.அதற்கு அன்னை உறுதியாக நீ ஏன் பயப்பட வேண்டும்,மகனே! அது ஒரு தொழில் அவ்வளவு
தானே? என்று கூறினார்.அன்னையிடம் தீட்சை பெற்ற
சில நாட்களுள் லால்மோகனின் (சுவாமி கபிலேசுவரானந்தர் ) மனத்தில் ஒரு சந்தேகம் எழுந்தது.என்ன
செய்து தொலைத்தேன்.ஒரு பெண்ணிடமிருந்து தீட்சை பெற்று விட்டேனே!என்ற எண்ணம் தொடா்ந்து
அவரை அலைகழித்தது.மெள்ள மெள்ள அது ஒரு மனப்போராட்டமாகவே ஆகிவிட்டது. கடைசியில் இன்னும்
ஒரு நாள் பொறுப்பேன். அதற்குள் குருதேவரே ஒரு வழிகாட்டாவிட்டால் இந்த மந்திரத்தை ஜபிப்பதை விட்டுவிடுவேன்.என்று தமக்குள் முடிவு செய்துகொண்டார்.மறுநாள்
உத்போதனில் பால் கொடுப்பதற்காக சுவாமி பிரேமானந்தர் லால்மோகனை அனுப்பினார்.பாலைக் கொடுத்து
விட்டு அன்னையும் வணங்கினார்லால்மோகன். வணங்கி எழுந்ததும் அவரிடம் இதோ பார்
உனக்கு மந்திரம் தந்தது நான் அல்ல ,குருதேவரே உனக்கு தந்தார். என்று கூறினார்
அன்னை. சிலநாட்கள் எல்லாம் சரியாகியது போல் இருந்தது. ஆனால் மீண்டும் அதே போராட்டம்
தலைதூக்கியது. மீண்டும் லால்மோகன் தமக்குள் ஒருசெய்தார்.ஹரேன் பாபு என்னிடம் வந்து அன்னையிடமிருந்து எனக்கு சக்தி கிடைத்தது. என்று
கூறுவாரானால் அன்னை என்னிடம் கூறியதை நான் ஏற்று க்கொள்வேன்.என்பதே அந்த முடிவு. சில
நாட்களில் ஸ்ரீராமகிருஷ்ண ஜெயந்தி விழா வந்தது.அப்போது ஹரேன் அவரிடம் வந்து அவர் நினைத்ததை
அப்படியே கூறினார். லால் மோகனின் சந்தேகம் தெளிந்தது.ஏதோ ஒரு காரணத்திற்காக உத்போதனில் உள்ள சமையல்காரனை வேலையை நிறுத்த வேண்டியிருந்தது.
உடனடியாக நிறுத்தினால் அன்னையின் சேவைக்கு இடையுறு நேருமே என்பதற்காக அற்குள்ள தலைமை
சுவாமிகள் அவனை நிறுத்துவதற்கு த் தாயங்கினார். விஷயம் அன்னைக்குத் தெரிந்த போது அவர்
கூறினார். நீங்களெல்லாம் துறவிகள் அனைத்தையும் விடுவ தே உங்கள் லட்சியம்.இப்போது ஒரு
சமையல்காரனை விட முடியவில்லையா, பேலூா் மடத்திலுள்ள துறவி ஒருவா் வேலைக்காரனை அடித்துவிட்டார்.அதை
கேள்விப்பட்ட அன்னை கூறினார்.அவர்கள் துறவிகள் நியாயப்படி அவர்கள் மரத்தடியில் களில்
வாழவேண்டும். இப்போதோ பெரிய மடங்கள் கட்டிடங்கள் ,வேலைக்காரர்கள் எல்லாம் வந்து விட்டன.
இப்போது வேலைக்காரனை அடிக்கும் அளவிற்கு போய்விட்டார்கள்,
No comments:
Post a Comment