Thursday 29 November 2018

அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-26

அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-26
-

பூக்களை தொடா்ந்து கையில் வைத்திருந்தால்  மணம் கிடைக்கும். சந்தணத்தை கல்லில் உரச,உரச வாசம் வீசும். அது போல் தெய்வீக  விஷயங்களை ச் சிந்திக்க ,சிந்திக்க ஆன்மீக விழிப்புணா்வு  உண்டாகும். ஆசைகள் அற்றவனாகி விட்டால்  அந்தக் கணமே இறையனுபூதி கிடைத்துவிடும்.அன்னை பூஜை அறையில்  அமர்ந்து இருந்தார். பூஜை நிறைவுற்றிருந்தது. துறவி ஒருவா் அன்னையிடம் அம்மா குருதேவரை நீங்கள் எப்படி பார்க்கிறீா்கள்.? என்று கேட்டார். அன்னை சிறிது நேரம் மௌனமாக இருந்தார்.பிறகு கம்பீரமாக  குழந்தையாக காண்கிறேன் என்றார்.அன்னையின் தினசரி பூஜைக்காக நான் தினமும் பூக்கள் . லில்வ இலை , துளசி இலை  போன்றவை பறித்து க் கொண்டு வருவது வழக்கம். ஒரு நாள் துளசி இலை கொண்டு  வர மறந்துவிட்டேன். அன்னை மிகவும் வருத்தமுற்று துளசி கொண்டு வரவில்லையா? துளசி இலை எவ்வளவு புனிதமானது தெரியுமா ? எதில் துளசி இலையை இட்டாலும் அது தூய்மையாகிவிடும். என்றார்.  நான் மிகவும் வருத்தத்துடன் சென்று துளசி இலையை பறித்து வந்தேன். ஒவ்வொருநாளும்  பூஜை முடிந்த பிறகு அன்னை  தரையில் தலை படும் படி வீழ்ந்து குருதேவரை வணங்குவார். அதன் பிறகு தீா்த்தம் சாப்பிடுவார். இரண்டொரு துளசி இலைகளையும் வில்வ இலைகளையும்  வாயில் இட்டுக் கொள்வார். இல்லறத்தார் ஆன்மீக வாழ்க்கையை க் காரணம் காட்டி கடமைகளை ஏனோ தானோ என்று செய்வதை அன்னை சிறிதும் விரும்புவ தில்லை. குடும்பம் பகவானுடையது. நம்மை எங்கே எந்த வேலையில் அவா் வைத்திருக்கிறாரோ  அந்த வேலையை அவரை நம்பி  நம்மால் இயன்ற அளவு  நன்றாகச்செய்ய முயற்சிக்க  வேண்டும்என்பார் அவா். கடமைகளை ஒழுங்காக.ச் செய்யாமல்  தம்மிடம் வருபவா்களைப் பற்றி அன்னை கூறுவார். கடவுளே! கடவுளே! கட்டிய துணியை ஒழுங்காக வைத்திருக்க த் தெரியவில்லை. அவனுக்கு என்னைப் பற்றி எவ்வளவு கவலை! தபாலில் அன்னைக்கு பக்தா்கள் பணம் அனுப்புவார்கள். தபால் காரன் கொண்டு வருவான். அன்னை கைநாட்டு வைப்பார். அதில் ஒருவா் ஸ்ரீசாரதாதேவியின் கைநாட்டு என்று  எழுதுவார். பணத்தை எண்ணி தபால்காரன் கொடுப்பான்.அன்னை கைகளில் வாங்கி அப்படியே  அறையில் கொண்டு போய் வைப்பார். தபால்காரருக்கு ப் பிரசாதம் கொடுத்து அவரிடம்  இனிமையாக ப்பேசி  அனுப்புவார். யார் பணம் அனுப்பியது , எவ்வளவு பணம் போன்ற விவரங்கள்வேறு யாருக்கு ம் தெரியாது. அதன் பிறகுநேரம் கிடைக்கும் போது அன்னை பணம் அனுப்பியவருக்குக் கடிதம் எழுதுவார். ஆசிகளைத் தெரிவிப்பார்.  சில வேளைகளில்  சேவகா்கள்  யாராவது இருந்து அவா்கள் பணத்தை பெற நேரும்.  அவா்கள் பணத்தைப் பெற்று  அதனை ப் பலரும்  பார்க்கும் படி வைத்து எண்ணி னால் அன்னை மகனே  பணம் எண்ணும் போது எழுகின்ற  சலசலப்பு ச் சத்தத்தை த் கேட்டாலே ஏழையின் மனத்தில் ஆசை தோன்றிவிடும். கண்டாலோ மரப் பொம்மைகூட ஆ என்று வாய் பிளக்கும். பணம் அப்படிப்பட்ட பொருள் என்பார். உள்ளே கொண்டு எசன்று  எண்ணுமாறு கூறுவார். அன்னையின் உறவுப் பையனான பங்கிம்  சிறு வயதில் துறவியாகி வீட்டைவிட்டுப் போய் விட்டான்.அதைக் கேட்டு அன்னை கூறினார். துறவியாகி இருக்கிறான். நல்வ காரியம் செய்தான்! எலும்பும் சதையும் சோ்ந்த இந்த உறையில்  என்ன உள்ளது. என் கதையையே பாரேன்- வாத நோயால் பிராணன்  போகிறது. இந்த உடம்பில் தான் என்ன இருக்கிறது? எதற்காக இப்படி ஒரு மாயையில் உழல வேண்டும். ?  எல்லாம் இரண்டு நாட்களுக்குத் தானே! பிறகு எல்லாம் முடிந்து விடும். உடம்பை எரித்த பிறகு  எஞ்சுவது ஒரு பிடிச் சாம்பல் மட்டுமே. இந்த உடம்பு ஒருபிடி ச் சாம்பலைத் தவிர வேறென்ன ? பங்கிம் சாதுவாகியுள்ளான். பகவானின் பாதையில் போகிறான். நல்லது செய்தான்,நல்லது செய்தான்.ஒரு முறை அன்னை ஜெயராம்பாடியில் இருந்தார். உடல் நிலை சரியில்லாமல் இருந்து அப்போது தான் கொஞ்சம் தேறியிருந்தார். அப்போது கபில் மகராஜ் அன்னையிடம் கல்கத்தாவிற்கு போகுமாறு மீண்டும் மீண்டும் வற்புறுத்தினார். அன்னை அவரது பேச்சை காதில் போட்டுகொள்ள வில்லை. அவர் சென்ற பிறகு மற்றவர்களிடம் கூறினார்.
 அவனுக்கென்ன சொல்லி விட்டான்.அவா்கள் ஒன்றுமில்லாத  துறவிகள் .எழு என்றால்  எழலாம் , உட்கார் என்றால் உட்காரலாம். எந்த கவலையும் இல்லை.குழப்பமும் இல்லை. துண்டைத் தோளில் போட்டுக்கொண்டால்  போதும், புறப்பட்டுவிடலாம்.என்னால் அப்படி முடியுமா? எவ்வளவு விஷயங்களைஆலோசித்து நடக்க வேண்டியிருக்கிறது! யாருக்கும் எந்தச் சிரமமும் இல்லாமல் காரியங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது.!ஒரு பக்தை அன்னைக்குச் சேவை செய்ய விரும்பினார். தமது ஆா்வத்தை அன்னையிடம் தெரிவித்த போது அன்னைகூறினார். வேண்டாம் அம்மா! இது குருதேவரின் பூஜை நடைபெறுகின்ற இடம் . எனவே நீ இங்கே சேவை செய்ய முடியாது.  நான் நல்லவனுக்கும் தாய். கெட்டவனுக்கும் தாய். நல்லவளுக்கும் தாய்.கெட்டவளுக்கும் தாய்.தான். ஆனால் குருதேவரின சேவையில் அது எடுபடாது.  முற்றிலும் தூய பெண்கள் எத்தனை போ்? விரல் விட்டு எண்ணி விடலாம். ஜெயராம்பாடி அன்று அன்னையின் பிறந்த நாள்.அன்னையின் உடல் நிலை சரியில்லை. எனவே அன்று குளிக்க வேண்டாம் என்று  எண்ணியிருந்தார். ஆனால் உடல்நிலைப்பற்றி அறிந்தால் பக்தா்கள்  வருந்துவார்கள் என்பதற்காக குளித்தார். இதன் காரணமாக மாலையில் அவருக்கு காய்ச்சல்  அதிகமாகியது. நான் அவரை காண சென்ற போது என்னிடம்  ”பாரப்பா, மனத்தில் தோன்றுகின்ற சமிக்ஞைகளை அலட்சியம் செய்ய கூடாது. மனம் தான் முதல் குரு. இதோ பாரேன்! இன்று காலையில் நான் எழுந்ததும் , உடல்நிலை சரியில்லை, இன்று குளிக்க வேண்டாம் என்ற எண்ணம் தோன்றியது. ஆனால் பல காரணங்களை நினைத்து குளித்து விட்டேன். இப்போது பலனையும் அனுபவிக்கிறேன் என்றார். சூடாக சாப்பிட வேண்டும், மிருதுவான படுக்கையில் தூங்க வேண்டும் என்று குருதேவர் கூறுவதாக அன்னை குறிப்பிடுவார்

No comments:

Post a Comment