அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-18
-
-
குருதேவா் வரவில்லை என்றால் அவா் காரணமற்ற கருணை காட்ட வில்லை
என்றால் மாயையின் கட்டுக்களிலிருந்து விடுபடுவது
சாத்தியமா? அவர் கடின தவங்கள் செய்தார். மனிதர்களின் வினைபயனை அழிப்பதற்காக அந்த தவங்களின்
பலனை தானம் செய்தார்.எத்தனையோ வருடங்களுக்கு
பிறகு பூத்துக் காய்க்க வேண்டிய மரங்களையெல்லாம் அவர் இரவோடு இரவாக பூத்து காய்க்கச் செய்திருப்பதை நீங்கள் பார்க்கவில்லையா? மனிதர்களின் பாவங்களை ஏற்று அவர் எவ்வளவு
கஷ்டங்களை தாங்க வேண்டியிருந்தது. தொண்டை புண்ணால் அவா் பட்ட அவதியைக் கண்டிருந்தால்
உங்களுக்கு அது புரிந்திருக்கும். அவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் அவர் மக்களின் நன்மையையே
நாடினார். பேசுவதை அவர் நிறுத்தவே இல்லை. யாராவது அவரிடம் வரவில்லையென்றால் வருத்தப்படவே செய்தார்.
-
ஒரு துறவி என்ற முறையில்
அந்த இளைஞன் நல்லவனாக இருக்கலாம். ஆனால் செயல்வீரர்களே எனக்குத் தேவை . மரத்தடியில் வாழும்
துறவியால் என் வேலைகளைச் செய்ய முடியாது . சிலர் கணநேர எழுச்சியால் பல அரிய பெரிய காரியங்களைச்
செய்துவிடுவார்கள். ஆனால் சாதாரண வேலைகளையும் ஒருவன் எவ்வளவு கவனமாகச் செய்கிறான்
என்பதுதான் அவனது உண்மைத் தகுதியைத் தெரியப் படுத்துகிறது .
-
‘ மகனே , இப்போதெல்லாம் என்னால் யாருடைய குற்றங்களையும் காணவோ கேட்கவோ முடிவதில்லை . பிராரப்த கர்மத்தின்படிதானே ஒருவன் நடக்க முடியும் . கலப்பை குத்த வேண்டும் என்றிருந்தால் ஊசியாவது குத்தியே தீரும் . பிறரது குறைகள் ஆரம்பத்தில் என் கண்ணிலும் படத்தான் செய்தது . கண்களில் கண்ணீருடன் நான் இறைவனிடம் , “ பிரபோ! நான் யாருடைய குறைகளையும் பார்க்கவிரும்பவில்லை ” என்று எவ்வளவோ பிரார்த்தனை செய்தேன். அதன்பிறகுதான் அந்த குணம் என்னிடமிருந்து அகன்றது .

வாழ்க்கையும் கடைசி கட்டம் தான் மிகவும் கடினமான பகுதி. வாழ்க்கை
முழுவதும் நன்றாகப் போகும் . ஆனால் கடைசிக் காலத்தில்தான் நோய் நொடி ,சோகம்.தாபம்
,கவலை, கண்ணீர் எல்லாம் . ஓ என்ன கஷ்டம் ! பிராரப்தவினை முடிவுறும் தருணம் அல்லவா? அதனால்
தான் அவ்வளவு துன்ப துயரங்கள்! குருதேவரின் திருவருள் இருக்குமானால் கடைசிகட்டம் நன்றாக
நடக்கும்.யார் அவரிடம் சரணடைகிறார்களோ அவர்களது வினைகளை அவர் அறுத்து விடுகிறார்.அவருக்குத்
தான் என்ன ஒரு கருணை !அவர் கபால மோசனர்! ஆனால் சிலரது பிராரப்தவினை மிகவும் ஆற்றல் மிக்கதாக
இருக்கும். அவர்கள் சிறிது அனுபவித்தேயாக வேண்டும். அதன் பிறகுதான் எல்லாம் சரியாகும்.
-
அறியாமை இருக்கும்வரை இந்த மாயாஜால விளையாட்டும் நடைபெறும். இறைகாட்சி ஏற்பட்டால் இந்த உலகங்கள் எல்லாம் நிழல் போல் மறைந்து விடும்.அப்போது இறைவன் மட்டுமே உண்மை, மற்ற எதுவும் உண்மையல்ல என்பது புரியும்.துால உடம்பு விழுந்த பிறகு , வினைப் பயனுக்கு ஏற்ப நுண்ணுடம்பு இந்த நல்ல மற்றும் தீய உலகங்களுக்கெல்லாம் செல்கிறது. அறியாமையில் இருக்கும் இந்த நுண்ணுடம்பின் பயணத்தைத் தனது பயணமாக கருதுகிறான். பாரேன் மனம் கனவு காண்கிறது. அப்போது புறத்திலுள்ள இந்த உண்மையான உலகம் மறந்து போகிறது. கனவுலகமே உண்மையாக தோன்றுகிறது.
-
சமஸ்காரம் என்றால் என்ன அது சாதாரண விஷயமா? எண்ணற்ற பிறவிகளில் உள்ள எண்ணற்ற சமஸ்காரங்கள் மனதில் உள்ளன. ஒரு கூட்டம் அழிந்தால் மற்றொரு கூட்டம் வருகிறது. ரத்த பீஜ அசுரனைப் போல்.எல்லா ஆசைகளையும் விட்டு விட்டு யார் சச்சிதானந்தப் பரம்பொருளை மட்டும் நாடுகிறார்களோ அவர்கள் முக்தர்கள் ஆகிறார்கள். ஆசைகள் தான் சமஸ்காரங்களை எழுப்புகின்றன.
-
இறைவன் சுதந்திரர். அவரது திருவிளையாடல் எந்த சட்ட திட்டங்களுக்கும் உட்பட்டது அல்ல . அவரது திருவுளம் எப்படியோ அப்படியே அவர் செயல்படுவார். அவரது திருவுளம் இருந்தால் மாயை மனிதனைக் கட்டாமல் விலகிவிடும் .
-
”குழந்தையின் இயல்பு கொண்டவர் இறைவன் ” என்பார் குருதேவர். அவர் யுகம்தோறும் அவதரித்து மனிதனுக்கு எவ்வளவோ உபதேசங்கள் தருகிறாரே!. ஆனால் அதன் படி நடப்பது யார்?.இதோபார் எல்லாம் குருதேவரின் ஆற்றல் . அவர் இழுப்பதால் அனைவரும் வருகிறார்கள்.. குருதேவர் என்ன ஆண்களுக்காக மட்டுமா வந்தார்?பெண்களுக்காகவும் தானே வந்தார் . சிலர் அவருடன் வந்தார்கள் , சிலர் அவரிடமிருந்தே வந்தார்கள்., சிலர் முக்தி பெறுவதற்காக வந்தார்கள். , இனியும் பலர் வருவார்கள் . சிலரை அவர் தமது பணிக்காகவே உடன் அழைத்து வந்தார்.
-
ஸ்ரீராமகிருஷ்ணர் வாட்ஸ்அப் குழு 9003767303

No comments:
Post a Comment