ஸ்ரீசாரதாதேவியின் அன்பு மொழிகள்-பாகம்-14
-
மகனே! பொறுமை மிக உயா்ந்த குணம். அதை விடமேலான குணம் எதுவும் இல்லை. பின்னாளில் வீடுதோறும் என்னை வழிபடுவாா்கள். எத்தனைபோ் என்னை ஏற்றுக்கோள்ளப் போகிறாா்கள் என்பதற்கு ஒரு கணக்கு இல்லை என்று குருதேவர் கூறினாா்.நிவேதிதைக்கெல்லாம் இது தான் கடைசிப் பிறவி.
-
பல மக்களுடைய முத்திக்காகப் பயன்பட்டிருக்கக்கூடிய தவவலிமை முழுவதும் ஒரு மனிதனின் பொருட்டுச் செலவழிந்து போகிறது . “கிரீஷ்பாபுவின் பாவங்களை ஏற்றுக் கொண்டதால்தான் எனக்கு இந்த நோய்களெல்லாம் வந்தன” என்று குருதேவர் சொல்வார் .
-
“இந்த உடம்பு என்றைக்காவது ஒருநாள் அழிந்து போவது நிச்சயம் . இந்த நிமிடமே போகட்டுமே . இவனுக்குக் கொடுத்துலிடுகிறேன் ”என்று நினைத்து கொடுத்துவிடுவேன் .
-
எத்தனையெத்தனை ரிஷிகள் யுகயுகங்களாகத் தவம் செய்தும் கடவுள் கிடைக்கவில்லை . இவர்கள் சாதனைகளோ தவமோ எதுவும் செய்யமாட்டார்கள், ஆனால் உடனேயே கடவுளைக் காட்டியாக வேண்டுமாம் ! 'கடவுளின் இயல்பு ஒரு குழந்தையின் இயல்பைப் போன்றது ! சிலர் கேட்கிறார்கள், அவர்களுக்குத் தருவதில்லை . சிலர் விரும்புவதில்லை , அவர்களுக்கு வற்புறுத்தித் தருகிறார் .
-
சிலர் முப்பிறவிகளில் அதிகமாக முன்னேறியிருக்க வேண்டும். அதனால்தான் இந்தபிறவியில் இறையருள் அவர்களுக்குக் கிடைக்கிறது .முன்வினையைப் பொருத்தே அது அமைகிறது. வினைப்பயன் முடிவடைந்ததும் இறைக் காட்சி கிடைக்கிறது , அதுவே கடைசி பிறவியாக ஆகிறது .'
-
இறைவன் எனக்குச்“ சொந்தமானவர் ” என்ற உண்மையான நம்பிக்கை எத்தனை பேரிடம் இருக்கிறது ? கடவுளை நேசிப்பவர் எத்தனை பேர் ?“ இறைவனின் நாமத்தை உச்சரிப்பவருக்கு எந்த விதத்துன்பமும் வராது .அவரது பணிக்காக உலகத்தை துறந்த துறவிகளைப் பற்றியோ சொல்லவேண்டிய அவசியமே இல்லை !” .
-
காமார்புகூரில் ஓருவன் அவரைக் காண வந்தான் . அவன் நல்லவன் அல்ல . அவன் போனதும் குருதேவர் , “ஏய் ,யாரங்கே ? அந்த இடத்திலிருந்து ஒரு கூடை மண்ணை அப்புறப்படுத்துங்கள் ” என்றார் . யாரும் வராததைக் கண்டதும் ஒரு மண்வெட்டியை எடுத்துக்கொண்டு தாமே சென்று , டக்டக் என்று மண்ணை வெட்டி அப்புறப்படுத்திய பிறகே சமாதானம் அடைந்தார் . “இவர்கள் எங்கே உட்கார்கிறார்களோ அந்த இடத்து மண்கூட அசுத்தமாகிவிடும் என்றார் .
-
'வினைப்பயன் மெள்ளமெள்ளத்தான் குறையும் . இறையனுபூதி பெற்றால் இறைவன் நம்முள் உணர்வுப் பேரொளியைத் தருவார் . அதை நாமே உணர முடியும் .
-
'கோலாப்மா யாரையோ திட்டிக் கொண்டிருக்கிறாள் .' தீயதை நினைத்து நினைத்து துன்பத்தைத்தான் அனுபவிக்க நேர்கிறது . “உ ண்மை பேசுகிறேன் , உண்மை பேசுகிறேன் , என்று கோலாப் மென்மையை இழந்துவிட்டாள் . என்னவானாலும் மென்மையை இழக்க என்னால் இயலாது . “உண்மையாக இருந்தாலும் இனியவை அல்லாதவற்றைப் பேசக் கூடாது ”
-
'கருணை காரணமாகக் கொடுக்கிறேன் விடமாட்டார்கள், அழுவார்கள் , மனம் இளகிவிடுகிறது , தீட்சை கொடுக்கிறேன் . இல்லாமல் எனக்கு என்ன லாபம் ? தீட்சை தரும்போது அவர்களின் பாவத்தை ஏற்க வேண்டியுள்ளது . “சரி , எப்படியும் உடம்பு அழியத்தான் பொகிறது . இவர்களுக்கு நல்லது நடக்கட்டும் ”என்று நினைத்துக் கொள்கிறேன்
-
இவர்களின் இயல்பு எப்படியாகிவிட்டது ! சிறிய விஷயங்களுக்கும் ஆ-ஊ என்று கத்தி அமர்க்களம் செய்கிறார்கள் .
-
துாய மனத்தில் ஆன்மப்பேருணர்வு பொலிகிறது . ’ ‘ பகவானைச் சார்ந்து வாழ்வது , நம்பிக்கை வைப்பது இதுவே சாதனை அல்லவா ! ’ ஆகா ! நரேன் ஒரு சமயம் , “ லட்சம் பிறவிகள் ஏற்படட்டுமே ! அதனால் என்ன பயம் ? ” என்று குறிப்பிட்டான் . உண்மைதானே ! பிறப்பதற்க ஞானி பயன்படுவானா என்ன ? அவர்களுக்கெல்லாம் எந்தப் பாவமும் சேர்வதில்லை . அறிவற்றவன்தான் எப்போதும் பயந்து சாகிறான் .
-
துறவிச் சீடர் ஒருவர் ரிஷிகேசத்திற்குச் சென்றார்.அன்னைக்கு கடிதம் எழுதியிருந்தார் . ‘ அம்மா , எனக்கு குருதேவரின் தரிசனம் கிடைக்கும் என்று கூறினீர்கள் . ஆனால் இன்னும் கிடைக்கவில்லையே ! ’என்று எழுதியிருந்தார் ‘ அவனுக்க இவ்வாறு பதில் எழுது-“ நீ ரிஷிகேசத்திற்குப் போயிருப்பதால் குருதேவரும் ரிஷிகேசத்திற்குச் சென்று தங்கமுடியாது . ” இவன் ஒரு துறவி . இறைவனை நினைப்பதைத் தவிர வேறு என்ன செய்வான் ? அவர்விரும்பும்போது தரிசனம் அளிப்பார் .’
-
யாருடைய புண்ணியம் எப்படியோ , வினைப்பயன் எப்படியோ அப்படித்தான் நல்ல வாய்ப்புகளும் நன்மைகளும் வந்து சேரும் . விஷயம் எனனவென்றால் , சம்சாரசாகரத்தைக் கடக்க வெண்டும் என்னு நினைப்பவன் கட்டுக்களை வெட்டி எறிந்துவிட்டுவருவான் . அவனை யாரும் கட்டி வைக்க முடியாது .
-
அன்னை சாரதாதேவியின் உபதேசங்களை தினமும் பெற வாட்ஸ்அப் 9003767303
-
No comments:
Post a Comment