Wednesday, 7 November 2018

அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-17


அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-17
-
சாதனையின் ஆரம்ப காலங்களில் இரவும் பகலும் ஆராய்ச்சிகள் செய்வது நல்லதல்ல . இத்தகைய ஆராய்ச்சி மனத்தை வறட்சி ஆக்குகிறது. குருதேவாின் தெய்வீக வாழ்க்கையைப் பற்றி சிந்தனை செய் . அப்போது மனம் மீண்டும் புத்துணா்ச்சி பெறுவதை க் காண்பாய். 
-
நான் பிள்ளைகளிடம் சொல்வதெல்லாம் இதுதான் யாரையும் துன்புறுத்தாதீா்கள். தீமைசெய்தவா்களைத் தண்டிக்குமாறு பகவானிடம் பிராத்தனை செய்யாதீா்கள். மாறாக , தீமை செய்தவனுக்கும் நன்மை உண்டாகட்டும் என்று பிராத்தனை செய்யுங்கள். 
-
ஆணாக இருந்துவிட்டால் மட்டும் போதாது, மனத்தில் உறுதி வேண்டும். வைராக்கியம் வேண்டும். ஆசைகள் அற்ற நிலையும் பகவானிடம் அன்பும் உண்டாகாமல் தியானம் கைகூடுவது மிகக் கடினம். 
-
குருதேவா் இந்தமுறை அருள்கூா்ந்து உலகின் நன்மைக்காக கடின தவம் செய்தாா். அவாிடம் எஞ்சியது எலும்பும் தோலும் மட்டும் தான். இதில் மற்றவா்களின் பாவங்களை ஏற்று கொண்டதால் நோய்கள் வேறு. அவாிடம் பக்தியும் சிரத்தையும் நம்பிக்கையும் கொண்டாலே போதும் அவரது திருநாமத்தை ஜபித்தாலே போதும் அவரது லீலா தியானம் செய்தால் போதும் , குண்டலினி சக்தி தானாகவே விழித்தெழுந்து ஆனந்தமாக மேலே செல்லும். அவா் செய்ததை போன்ற கடின தவங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை. இது கலியுகம் . சத்தியயுகத்தை ப் போலவும் திரேதாயுகத்தை போலவும் யாரால் அவ்வளவு தவம் செய்ய முடியும்? இப்போது உயிா்உடம்பை சாா்ந்துள்ளது.
-
குருதேவரின் திருநாமத்தை ஜபம் செய் . சாப்பாடு துணிமணிகள் போன்ற தேவைகளைக் கூட அவரே நிறைவேற்றுவதைக் காண்பாய். குருதேவரின் திருநாமத்தை ச் சொல்கின்ற யாருக்கும் ஒருபோதும் உணவு க் கஷ்டம் வராது. சாதாரண உணவு சாதாரண உடை ஆகியவற்றிற்கான ஏற்பாட்டை அவா் செய்து வைத்துள்ளார்.
-
குருவருளும் இறையருளும் இல்லாமல் யாராவது தானாக பந்தங்களிலிருந்து விடுபட முடியுமா? அதனால் தான்குருதேவர் கடினமான தவங்கள் செய்து அதன் பலனை வருகின்ற பக்தா்கள் அனைவருக்காகவும்சேர்த்து வைத்து விட்டுச் சென்றுள்ளார். அவர் அருள் கூர்ந்து கதவின் அருகிலேயே நின்று கொண்டிருக்கிறார். நீங்கள் கதவை திறந்தால் மட்டும் போதும்.
-
இதோ பார் மனதை இரண்டாகப் பிரிக்க வேண்டும் . இதில் ஒன்று விவேக மனம் மற்றொன்று விளையாட்டு பிள்ளைபோல் விவேகமற்ற மனம். தாய் தந்தையர் எப்படி விளையாட்டு பிள்ளைகளை உடனிருந்து கவனித்து கொள்வார்களோ , அப்படி விவேக மனத்தை விவேகமற்ற மனத்தின் பின்னால் அதை எப்போதும் தொடரும் படி செய்ய வேண்டும்.ஏதாவது ஒரு விஷயத்தை தொடர்ந்து செய்வதால் இந்த விவேகமற்ற மனத்தில் ஒரு ஆழமான சமஸ்காரம் உருவாகிவிடுமானால் நீ ஆயிரம் முறை மறுத்தாலும் மனம் வழிக்கு வராது, அந்த வேளையில் பிராத்தனையை நாட வேண்டும். பலவீனமான அந்த மனத்திற்கு குருதேவரிடம் பிராத்திக்க வேண்டும். வேறு எந்த வழியும் இல்லை.
-
அவர் கடவுள். அவரால் எல்லாம் முடியும். ஓர் அச்சை உடைத்து விட்டு மற்றோர் அச்சில்நம்மை உருவாக்க அவரால் முடியும் குருதேவரின் திருவுளத்திற்கு முன்னால் மனித மனங்கள் வெறும் பச்சை களிமண் உருண்டைகளைப் போல் ஆகி விடுவதையும் அவர் யாரை எப்படி உருவாக்க நினைக்கிறாரோ அப்படி அவர்களை உருவாக்குவதையும் நான் கண்டிருக்கிறேன்.
-
குருதேவர் வரவில்லை என்றால் அவர் காரணமற்ற கருணை காட்டவில்லை என்றால் மாயையின் கட்டுகளிலிருந்து விடுபடுவது யாராலாவது சாத்தியமா? அவர் கடின தவங்கள் செய்தார். மனிதர்களின் வினைப்பயனை அழிப்பதற்காக அந்த தவங்களின் பலனைத் தானம் செய்தார். எத்தனையோ வருடங்களுக்கு பிறகு பூத்து காய்க்கவேண்டிய மரங்களையெல்லாம் அவர் இரவோடு இரவாக பூத்து காய்க்கச் செய்திருப்பதை நீங்கள் பார்க்கவில்லையா?.
-
மனிதர்களின் பாவங்களை ஏற்று அவர் எவ்வளவு கஷ்டங்களை த் தாங்க வேண்டியிருந்தது. தொண்டைப் புண்ணால் அவர் பட்ட அவதியை க் கண்டிருந்தால் உங்களுக்கு புரிந்திருக்கும், அவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் அவர் மக்களின் நன்மையையே நாடினார். பேசுவதை அவர் நிறுத்தவே இல்லை . யாராவது அவரிடம் வரவில்லையென்றால் வருத்தப்படவே செய்தார்.
-
அன்னை சாரதாதேவியின் உபதேசங்களை தினமும் பெற வாட்ஸ்அப் 9003767303

No comments:

Post a Comment