மாலத்தீவு வழியாக இந்தியாவை தாக்க தயாராகிக்கொண்டிருக்கும் பாகிஸ்தான்.வரப்போகும் ஆபத்தை அறியாத தமிழர்கள்
-
மாலத்தீவு என்பது பல தீவுக்கூட்டங்கள் சேர்ந்த நாடு.குமரி கடல் பகுதியில் துவங்கி நீண்ட வால்போல பல தீவுக்கூட்டங்கள் இதில் நிறைந்துள்ளது.இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு அது தமிழர்களின் ஒரு பகுதியாக இருந்தது.இந்தியா அதை கண்டுகொள்ளாமல்விட்டதால் தனிநாடாக மாறியுள்ளது
-
முஸ்லீம்கள் நாடுகள் பொதுவாகவே உருவ வழிபாடுசெய்யும் இந்துக்களை மதிப்பதில்லை.அதிலும் இந்துக்களின் ஆதரவோடு நடைபெறும் ஆட்சியை எதிரி ஆட்சியாகவே பார்ப்பார்கள்.
-
தமிழர்கள் இதுநாள்வரை நிம்மதியாக வாழ்ந்து வந்ததற்கு காரணம் இந்திய பெருங்கடல் பகுதிகளில் இலங்கையை தவிர நாடுகளில் இல்லாததுதான்.மாலத்தீவை நாம் ஒரு பொருட்டாகவே கருதவில்லை.அதனால் அதைபற்றி யாரும் கவலைப்படவில்லை.
-
இந்தியப்பெருங்கடல் பகுதியில் சீனா தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட ஒரு நாடு தேவையாக இருந்தது.முதலில் இலங்கையை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நினைத்தது.ஆனால் இந்தியாவின் அழுத்தம் காரணமாக இலங்கை சீனா பக்கம்ம் சாயவில்லை.முன்னாள் மாலத்தீவின் அதிபரும் இந்தியாவிற்கு சாதகமாகவே இருந்தார்.
-
சீனாவுக்கு ஆதரவான யாமீன் என்பவரை சட்டவிரோதமாக சீனா, மாலத்தீவின் அதிபராக அமர்த்தியது.அது மட்டுமல்ல அவரை எதிர்ப்வர்களை சிறையில் அடைத்தது.முன்னாள் அதிபர்கள்,அமைச்சர்கள்,நீதிபதிகள் என பலரை சிறையில் தள்ளியுள்ளது.வீதிக்கு வந்து போராடிய மக்கள் சிறைச்சாலைக்கு அனுப்பபட்டுள்ளார்கள்.,இந்தியா இதை எதிர்த்து குரல் மட்டுமே கொடுக்க முடிந்தது.வேறு எதுவும் செய்ய முடியவில்லை ஏனென்றால்.சீனாவின் 11 போர்க் கப்பல்கள் மாலத்தீவை சுற்றி நிறுத்தப்பட்டிருந்தன.
-
இந்தியவை சேர்ந்த பலர் அங்கு பலர் தொழில்களில் ஈடுபட்டுள்ளார்கள்.இந்தியர்கள் பலர் அங்கு வாழ்ந்து வருகிறார்கள்.இதனால் அவசரப்பட முடியாது.அது எக்கேடுகெட்டு வேண்டுமானாலும் போகட்டும் என்று விட்டுவிட வேண்டியதுதானே என்று நீங்கள் நினைக்கலாம்.அடுத்து பாருங்கள்...
-
மாலத்தீவை இந்தியா கைப்பற்ற நினைக்கிறது.ஆகவே அதை தடுக்க பாகிஸ்தனிடம் உதவி கோரியிருக்கிறோம். பாகிஸ்தான் போர்க்கப்பல் எங்கள் நாட்டிற்கு வந்து இந்தியாவிடமிருந்து எங்களை பாதுகாக்க வேண்டும் என்று புதிய அதிபர் அறிக்கை விட்டிருக்கிறார்.அதை ஏற்று பாகிஸ்தான் போர்க் கப்பல்கள் மாலத்தீவு வர இருக்கின்றன.
-
இதுவரை பாகிஸ்தான் போர்க்கப்பல் இந்திய பெருங்டல் பகுதிக்குள் வரமுடியமல் இருந்தது.இப்போது அதற்கு வழி கிடைத்துள்ளது.பாகிஸ்தான் போர்க்கப்பலும்,சீனாவின் போர்க்கப்பலும் சேர்ந்து மாலத்தீவை பாதுகாக்குமாம்.எதற்கு? மாலத்தீவை பாதுகாக்கவா அல்லது இந்திவின் மீது தாக்குதல் நடத்தவா?
-
கண்டிப்பாக இந்தியாமீது தாக்குதல் நடத்துவதற்குதான். தென்இந்தியா இதுநாள்வரை மிகவும் பாதுகாப்பான பகுதியாக இருந்தது.பாதுகாப்பான பகுதி என்பதால்தான் கூடன்குளம் அணுமின் நிலையம் அங்கே வைக்கப்பட்டுள்ளது.தற்போது அது பாதுகாப்பற்ற பகுதியாக மாற்றப்பட்டிருக்கிறது.சீனாவின் முதல் இலக்கு கூடங்குளம் அணுமின் நிலையத்தை தாக்குவதுதான். அவ்வாறு அது தாக்கப்பட்டால் பெரிய அணுவிபத்து ஏற்பட்டு தென்தமிழ்நாடு முழுவதும் அழியும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.லட்சக்கணக்கான மக்கள் உயிழக்கவேண்டிய சூழல் ஏற்படும்
-
இந்திய ராணுவம் பொதுவாக காஷ்மீர்,வடகிழக்கு இந்தியா,சீன எல்லை போன்ற பகுதிகளில்தான் அதிகம் குவிக்கப்பட்டுள்ளது.மாலத்தீவிலிருந்து வரும் ராக்கெட்டுகளையும்,அணுஆயுதங்களையும் தடுப்பதற்கான போதிய ராணுவதுறைமுகங்களோ,ராணுவ கட்டமைப்புகளோ இதுவரை ஏற்படுத்தப்படவில்லை.இது கவலைக்கரிய விஷயம். நாளையே சீனாவும் பாகிஸ்தானும் தாக்கதல் நடத்தினால் நம்மால் அதை எதிர்கொள்ள முடியாது என்பதுதான் உண்மை.ஏதாவது ஒரு கோரிக்கையை சீனா முன்னிறுத்தி,இதை ஆதரிக்காவிட்டல் கூடங்குளம் அணு உலையை தாக்குவோம் என்று கூறினால்,இந்தியாவால் எதிர்த்து எதையும் செய்ய முடியாது.
-
மாலத்தீவிலிருந்து தாக்குதல் வந்தால்.நமது முதல் வேலை மாலத்தீவை கைப்பற்றுவதாக இருக்க வேண்டும்.இனிமேல் அது தனிநாடாக இருக்கக்கூடாது.இந்தியாவின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக இந்தியாவோடு அது இணைக்கப்படவேண்டும்.
-
கட்டுரை..சுவாமி வித்யானந்தர்(1-6-2018)
No comments:
Post a Comment