உங்கள் கேள்வி இறைவன் ஏன் இந்த படைப்பு நிகழ்த்தினார் ?எதற்காக இந்த உலகத்தை படைத்தார்? என்பது
-
இதை வேறுவிதமாக கேட்டால்.நீங்கள் இறைவனை கேள்விகேட்கிறீர்கள். ஏன் இறைவா இந்த படைப்பை கொடுத்தாய் என்று கேட்கிறீர்கள்.அதாவது இறைவனைவிட உயர்ந்த நிலையில் உங்களை வைத்துக்கொண்டு,அவரை பதில் சொல்ல வற்புறுத்துவதுபோல் உள்ளது.
-
இந்த கேள்வியை மனிதர்களால் ஏன் விளக்க முடியாது?
-
1.தியானத்தில் ஆழ்ந்துபோகும்போது மனத்தில் உள்ள எண்ணங்கள் படிபப்டியாக அகன்றுவிடுகிறது.முழுமையான எணண்ங்கள் அகன்றபிறகு,அதாவது மனத்தை கடந்து சென்றபிறகுதான் இறைவனின் காட்சி கிடைக்கிறது.அந்த காட்சி மனத்தில் பதியாது.ஏனென்றால் அப்போது மனம் இல்லை
-
2 இறைவனை பார்த்த அந்த பதிவை பதிய,அங்கு மனம் இல்லை. மீண்டும் சாதாரண நிலைக்கு வரும்போது மனம் பழையபடி வந்துவிடுகிறது. மனத்தில் இறைவனைப்பற்றி சொல்ல எதுவும் இல்லை.அதனால் தான் மனத்தால் இறைவனை பற்றி புரிந்துகொள்ள முடியாது.மற்றவர்களிடம் இறைவன் இப்படி இருப்பார் என்று விளக்கவும் முடியாது.
-
3. இறைவனை நேரில் பார்க்கும் போது, இந்த பிரபஞ்சமும் அதை பற்றிய பதிவுகள் உள்ள மனமும் இல்லாததால், எந்த கேள்வியும் மனத்தில் இல்லாததால், ஏன் இறைவா பிரபஞ்சத்தை படைத்தாய் என்று கேள்வி கேட்க முடியாது.
-
ஆகவே உங்கள் கேள்விக்கான விடை ஒருபோதும் கிடைக்காது. ஏனென்றால் பதில் சொல்ல வேண்டிய இறைவனை காணும் போது உங்களிடம் கேள்வியே இருக்காது.
----
சுவாமி வித்யானந்தர்
No comments:
Post a Comment