Friday, 29 June 2018

ஆரியர்கள் இந்தியாவிற்கு வெளியே இருந்து வரவில்லை என்பதை நிரூபிக்கும் இந்திய இலக்கியம்(சரஸ்வதி-நதி)


ஆரியர்கள் இந்தியாவிற்கு வெளியே இருந்து வரவில்லை என்பதை நிரூபிக்கும் இந்திய இலக்கியம்(சரஸ்வதி-நதி)
-
வேத காலத்தில் ஒரு பிரம்மாண்டமான நதி ஓடியது; அதன் பெயர் சரஸ்வதி; உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதம் இதன் புகழ் பாடுகிறது. ஆனால் மஹா பாரத காலத்திலேயே (கி.மு.3100) இது வற்றிச் சுருங்கி விட்டது. இப்பொழுதும் மனிதர்கள் நம்புவது என்னவென்றால் இந்த நதி அந்தர்வாஹினியாக த்ரிவேணி சங்கமத்தில் (அலஹாபாத், உத்திரப் பிரதேசம்) கலக்கிறது என்பதாகும்.ஆனால் இது வெறும் நம்பிக்கைதான்
-
சரஸ்வதி நதி பற்றி பாபா அணுசக்தி ஆராய்ச்சி (B A R C) நிலையம் கொடுத்த தகவல்கள் இந்திய வரலா ற்றையே மாற்றிவிட்டது. நாம் இது வரை சிந்துவெளி நாகரீகம் என்று அழைத்தது எல்லாம் தவறு அது, வேத கால சரஸ்வதி நதி நாகரீகம் என்று விஞ்ஞான ஆராய்ச்சி நிரூபித்துவிட்டது!
-
ரிக் வேதம் 50 க்கும் மேலான இடங்களில் சரஸ்வதி நதியைக் குறிப்பிடுகிறது.
-
ரிக்வேதத்தில் நதி ஸ்துதி என்று ஆறுகளை போற்றித் துதிக்கும் அற்புதமான பாடல் ஒன்று உண்டு! இதில் கங்கா, யமுனா, சரஸ்வதி, சுதோத்ரி (சட்லெஜ்) ஆகியன போற்றப்படுகின்றன. ஆரிய-திராவிட வாதம் பேசும் அறிவிலிகளுக்கு செமை அடி கொடுக்கும் பாடல் இது! ஏனெனில் இந்திய நதிகளைக் கிழக்கிலிருந்து மேற்காக வருணிக்கின்றன இந்த நதி ஸ்துதி. ஆக வேத காலத்திலேயே கிழக்கில்- கங்கைச் சமவெளியில் – பெரிய நாகரீகம் நிலவியது. மேலும் ரிக் வேதத்தில் அதிகப் பாடல்களில் பாடப்படும் இந்திரனின் திசை கிழக்கு! ஆகவே இந்துக்கள் மண்ணின் மைந்தர்கள்! வந்தேறு குடியேறிகள் அல்ல!
-
ஆகவே இந்துக்கள் சரஸ்வதி நதி பாயும் இடம் மட்டும் அல்லாமல் கங்கை நதி ஓடிக்கொண்டிருந்த இடங்களிலும் வாழ்ந்துள்ளார்கள்.
-
இப்பேற்பட்ட சரஸ்வதி பாலைவனத்தில் மறைவது பற்றி மஹாபாரதமும் ஐதரேய, சதபத பிராமணங்களும் பேசுகின்றன.
-
(இந்தியாவின் முதல் அணுகுண்டு 1974லும் இரண்டாவது அணுகுண்டு 1998லும் வெடிக்கப்பட்டன)

1998 மே 11ல் பொக்ரானில் நாம் அணுகுண்டு வெடித்துச் சோதித்து உலகையே வியப்பில் ஆழ்த்திய போது, அந்த அணுகுண்டு வெடிப்பினால் நிலத்தடி நீருக்கு என்ன நேர்ந்தது என்பதை ஆராய்வதில் பாபா அணுசக்தி ஆராய்ச்சி நிலையம் ஈடுபட்டது. அபோது அது குடி நீருக்குப் பயன்படுத்தக்கூடியது என்பதும் கீழேயுள்ள தண்ணீர் 8000 முதல் 14000 ஆண்டுப் பழமையானது என்றும் தெரியவந்தது.
-
இது தவிர மத்திய நிலத்தடி நீர் கமிஷன் 24 கிணறுகளை வெவ்வேறு இடத்தில் தோண்டி ஆராய்ந்ததில் 23 கிணறுகளின் நீர் தூய குடிநீர் என்றும் கண்டது.
இதிலிருந்து வரலாற்று நிபுணர்கள் கண்ட முடிவு:
-
கி.மு.6500 முதல் கி.மு3100க்கு இடைப்பட்ட காலம் ஹரப்பா நாகரீகம் .அதற்கும் முந்தைய நாகரீகம் அதாவது 10,000ஆண்டுகளுக்கு முந்தைய நாகரீகம் சரஸ்வதி நதிதீர நாகரீகம் . அப்போதுதான் ரிக்வேதப் பாடல்கள் எழுந்தன. பின்னர் அந்த நாகரீகம் படிப்படியாக அழிந்து பின்னர் சிந்துவெளி/ஹரப்பன் நாகரீகம் தோன்றியது.
-
ராஜஸ்தானிலுள்ள ஜைசால்மர் மாவட்ட விண்கல புகைப்படங்களை ஆராய்ந்தபோது சரஸ்வதி நதியின் மறைந்த தடயங்களில் சில பகுதிகள் தென்பட்டன. இது பற்றி பாபா அணுசக்தி விஞ்ஞானிகள் CURRENT SCIENCE கரண்ட் சயன்ஸ் என்ற சஞ்சிகையில் எழுதினர். 1995ல் டாக்டர் எஸ்.எம் ராவ், டாக்டர் கே.எம்.குல்கர்னி ஆகியோர் ஐசடோப் பிரிவைச் (ISOTOPE DIVISION) சேர்ந்தவர்கள் . அவர்கள் நிலத்தடி நீரின் ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், கார்பன் ஐசடோப்புகளை ஆராய்ந்தனர். ரிக்வேதத்தில் சரஸ்வதி நதி பற்றிச் சொல்லப்பட்ட விஷயங்கள் உண்மை என்று அவர்கள் ஆய்வு முடிவுகள் காட்டின. இப்போது கங்கா நகர் மாவட்டத்திலுள்ள கக்கர் நதியின் வறண்ட நிலப்படுகைகள், பாகிஸ்தானிலுள்ள ஹக்ரா, நரா நதிகள் ஆகியன சரஸ்வதியின் ஒரு சில பகுதிகள். இன்னும் நிலத்தடியில் சரஸ்வதியின் நீர் உள்ளது கோடைகாலத்திலும் இந்த நீர், பயிர்கள் வளர உதவுகின்றன. ஜைசாலமர் பகுதியில் மிகக்குறைந்த அளவு மழை பெய்தாலும் நிலத்துக்கு 50-60 மீட்டர் ஆழத்தில் தண்ணீர் கிடைக்கிறது. இவை எல்லாம் சரஸ்வதி நதியின் மிச்ச சொச்சங்களே என்றும் கண்டனர்.
நிலத்தடி நீர் சில ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்பதை ரேடியோ கார்பன் தேதிகள் நிர்ணயிக்கின்றன.
-
இந்தியாவிலிருந்து பாரசீக நாட்டுக்கு (ஈரான்) குடியேறிய ஜொராஸ்டரும் சரஸ்வதியைப் போற்றுகிறார்.

மனு தர்ம சாஸ்திரமும் இந்த நதியைப் புகழ்கிறது

சரஸ்வதிக்கும் த்ருஷத்வதிக்கும் இடைப்பட்ட பூமியே கடவுளால் உண்டாக்கப்பட்டது. இதுவே பிராமணர்கள் வாழுமிடம் (மனு 2-17-8)
ஆனால் வேத காலம் முடிவதற்கு முன்னரே சரஸ்வதி மறையத் துவங்கியதை பஞ்சவம்ச பிராமணம் தெளிவாகக் குறிப்பிடுகிறது
-
ராஜஸ்தானிலும் பாகிஸ்தானிலும் ஓடிய சரஸ்வதி பூகம்பத்தின் காரணமாக அழிந்துபோனது.பெரும் பகுதி பாலைவனங்களாக மாறிவிட்டன.
-
சரஸ்வதி பற்றி வேதத்தின் குறிப்பு லிங்க் இணைக்கப்பட்டுள்ளது.
-
https://ta.wikipedia.org/s/1jne
-
-
சுவாமி வித்யானந்தர்

No comments:

Post a Comment