இந்தியாவோடு இணைய விரும்பும் ஜில்ஜிட் - பால்டிஸ்தான் (பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்)இந்தியா.போர் தொடுத்தாவது அதை மீட்கவேண்டும்
-
இந்திய சுதந்திரத்திற்கு பின் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானிலும்,ஒரு பகுதி இந்தியாவிலும் இருக்கிறது.இந்தியா வசம் உள்ள காஷ்மீரில் பெரும்பான்மையினர் சன்னி முஸ்லீம்கள்.பாகிஸ்தான் வசம் உள்ள காஷ்மீரில் பெரும்பான்மையான இருப்பவர்கள் ஷியா முஸ்லீம்கள்.சன்னி முஸ்லீம்களின் எப்போதும் பாகிஸ்நாயை ஆதரிப்பவர்களாகவும்.ஷியா முஸ்லீம்கள் இந்தியா ஆதரிப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.
-
முதலில் சன்னி,ஷியா என்றால் என்ன என்று பார்ப்போம். முகம்மதுநபிதான் கடைசி இறைத்தூதர் என்று ஏற்றுக்கொள்பவர்கள் சன்னி முஸ்லீம்கள்.அலி என்பவர்தான் கடைசி இறைத்தூதர் என்று ஏற்றுக்கொள்பவர்கள் ஷியா முஸ்லீம்கள்.இந்த இரண்டுபேரும் இந்த பிரச்சினைக்காக ஆயிரம் வருடங்களுக்கு மேலாக சண்டையிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.இன்னும் முடியவில்லை.தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளது.
-
தினசரி பத்திரிக்கைகளில் ஈராக்கில் குண்டுவெடிப்பு,பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு என்று படிக்கிறோமே அதில் சாவது ஷியா முஸ்லீம்கள்.குண்டு வைக்கும் ஐ.ஸ்.ஐ.ஸ்,அல்கைய்தா போன்ற தீவிரவாத அமைப்புகள் சன்னி முஸ்லீம் பிரிவை சேர்ந்தவை.சில வருடங்களுக்கு முன்பு ஒரு முஸ்லீமுடன் பேசிக்கொண்டிருக்கும்போது,இந்தியாவில் 2 கோடி ஷியா முஸ்லீம்கள் இருக்கிறார்கள் என்று சொன்னேன்.அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்..அவர்கள் (ஷியா)அத்தனைபேரும் செத்துபோனால்தான் எங்களுக்கு நிம்மதி. இந்தியாவில் உள்ள சன்னி முஸ்லீம்களில் சிலரின் மனநிலை இப்படி இருக்கலாம்
-
பாகிஸ்தானில் இருக்கும் முஸ்லீம்களில் 6 சதவீதம்பேர் ஷியா முஸ்லீம்கள்.இவர்களில் பெரும்பாலானவர்கள் ஜில்ஜிட் - பால்டிஸ்தான் (பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்)ல் வசிக்கிறார்கள். இந்த பகுதிகளில் கடந்த 50 ஆண்டுகளில் அதிக அளவு சன்னி முஸ்லீம்கள் குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.தற்போது சீனா தனது தொழிலாளர்களுக்கு குடியிருப்பு வீடுகளை கட்டிவருகிறது.இதனால் ஷியா முஸ்லீம்களின் வாழ்விடம் கேள்விக்குறியாகியுள்ளது
-
பாகிஸ்தானில் இதற்கு முன்பு இருந்த அரசுகள் இந்த இரண்டு பிரிவுகளுக்கிடையே ஒற்றுமையை நிலைநாட்ட ஓரளவு முயற்சி செய்தது.ஆனால் இனி வரப்போகும் தேர்தலில் தீவிரவாதி ஹபீஸ் சயீத்தின் கட்சி வெற்றிபெற வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.இவர்கள் சன்னி பிரிவை சேர்ந்த தீவிரவாதிகள்.மும்பையில் குண்டு வைத்து அப்பாவி இந்தியர்களை கொன்றவர்கள்.இவர்கள் ஆட்சிக்கு வந்தால் பாகிஸ்தான் ராணுவம் அவர்கள் வசமாகும். பாகிஸ்தானில் உள்ள 6 சதவீதம் ஷியா முஸ்லீம்களும் சத்தமில்லாமல் கொல்லப்படுவார்கள் என்ற அச்சம் ஷியா முஸ்லீம்களிடம் உள்ளது.
-
கடந்த சில ஆண்டுகளாகவே ஜில்ஜிட் - பால்டிஸ்தான் (பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்) ஷியா முஸ்லீம்கள் பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் எதிராக குரல்கொடுத்து வருகின்றனர்.தற்போது அவர்கள் குரல் சற்று மாறியுள்ளது. நாங்கள் மீண்டும் இந்தியாவோடு இணைய தயாராக இருக்கிறோம்.இந்தியா எங்களுக்கு உதவ வேண்டும். எங்கள் பகுதியை இந்தியாவோடு இணைக்கவேண்டும் என்பதுதான் அவர்களது கோரிக்கை.
-
பாகிஸ்தான் அரசு அவர்களை ஒடுக்குவதற்கு முடிந்த அளவு முயற்சிசெய்து வருகிறது.இதில் இந்தியாவின் பங்கு முக்கியமானதாகும்.அப்பாவி மக்களின் உயிரை பாதுகாக்கும் பொறுப்பை இந்தியா ஏற்றுக்கொண்டு,அந்த பகுதிகளை இந்தியாவோடு இணைக்க தேவைப்பட்டால் போர்புரியவும் தயங்கக்கூடாது.இதுதான் தர்மம். தன்னிடம் அடைக்கலம் புகுந்துள்ள அப்பாவிகளை காப்பதற்காக போர்புரியலாம் என்பதுதான் இந்துமதத்தின் தர்மமாகும்.தர்மத்தை காக்க இந்தியா போர்புரிய தயங்கக்கூடாது.அப்படி தயங்கினால் சரணடைந்தவர்களை காப்பாற்ற தவறியதால் ஏற்படும் பாவத்தை இந்தியா ஏற்கவேண்டியிருக்கும் .
-
-
கட்டுரை..சுவாமி வித்யானந்தர்
No comments:
Post a Comment