சுவாமி விவேகானந்தரின் முதல் சீடர்
-
பிருந்தாவத்திலிருந்து ஹரித்துவார் நோக்கி புறப்பட்டார் சுவாமிஜி.இடையில் உள்ள ஹத்ராஸ் ரயில் நிலையத்தில் பசியும் களைப்பும் மேலிட அமர்ந்திருந்தார் (அந்த காலத்தில் ரயில் நிலையங்களில் ரயில் அதிகநேரம் நிற்கும்) அங்கே ரயில் நிலைய துணை அதிகாரியாக இருந்தவர் சரத் சந்திர குப்தர்.பழகுவதற்கு இனியவர்.
-
சரத் சுவாமிஜியை கண்டார்.அவரை பார்த்ததும் இனம்புரியாத சக்தி ஒன்று தம்மை அவரிடம் கவர்வதாக உணர்ந்தார்.நேராக அவரிடம் சென்று சுவாமிஜி பசியாக இருக்கிறீர்களா? வாருங்கள்.என் வீட்டிற்கு வாருங்கள் என்று அழைத்தார்
-
நான் உன் வீட்டிற்கு வந்தால் எனக்கு என்ன தருவாய் என்று சுவாமிஜி கேட்டார். என் இதயத்தை பிழிந்து இன்சுவையான பண்டம் தயாரித்து தருவேன் என்று துவங்கும் ஒரு பாரசீக பாடலை பாடினார் சரத்.இந்த பதிலால் மிகவும் மகிழ்ந்த சுவாமிஜி அவரது வீட்டிற்கு சென்று உணவருந்தினார்.
-
சில நாட்கள் அவருடன் தங்கும்படி சரத் கேட்டுக்கொண்டார்.சுவாமிஜியும் அதற்கு சம்மதித்தார்.சுவாமிஜி புறப்படும்போது.என்னை உங்கள் சீடனாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்று வேண்டினார் சரத்.சுவாமிஜி அதற்கு சம்மதிக்கவில்லை.நான் பிச்சை எடுத்து வாழ்பவன்.உன்னால் அதேபோல் வாழமுடியாது என்று கூறினார்.ஆனால் சரத் பிடிவாதமாக இருந்தார்.நீங்கள்எங்கே சென்றாலும் உங்களை பின்தொடர்ந்து வருவேன் என்றார் சரத்.
-
அப்படியா! அப்படியானால் ஒரு பிச்சை பாத்திரம் எடுத்து பிச்சை எடுத்து வா! அதன்பிறகு பார்க்கலாம் என்றார் சுவாமிஜி.சரத் தயங்காமல் வீடுவீடாகசென்று பிச்சையெடுத்து வந்தார்.அதன்பிறகு சுவாமிஜியால் அவரை மறுக்க முடியவில்லை.அவரை சீடராக ஏற்றுக்கொண்டார்.
--
-
ஒருநாள் சுவாமிஜி சற்றே கவலையுடன் அமர்ந்திருந்தார்.அவரது முதல் சீடரான சரத் அவரிடம் அதற்கான காரணத்தைக் கேட்டார்.சற்றுநேரம் தன்னுள் ஆழ்ந்து அமைதியாக இருந்த சுவாமிஜி மென்மையாகக் கூறினார்.“என் மகனே! நான் ஆற்ற வேண்டிய மாபெரும் பெணி ஒன்று உள்ளது.அதை செய்வதற்குரிய திறமையோ தகுதியோ என்னிடம் இல்லை என்பதை நினைக்கும்போது என் மனம் தளர்கிறது”
-
“அது என்ன பணி?” என்று சீடர் கேட்டார்
-
“நமது தாய்நாட்டை புனரமைக்க வேண்டிய மாபெரும் பணி.ஆன்மீகம் என்பதே இல்லாமல் போய்விட்டது.பசி,பட்டினியால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் செத்து மடிகிறார்கள்.பாரதம் எப்படி விழித்தெழும்? இந்த மக்கள் உண்ணவே உணவில்லாமல் துன்பப்படுகிறார்கள்.இதில் ஆன்மீகத்தைப்பற்றி யோசிக்க முடியுமா? பாரதம் மீண்டும் விழித்தெழ வேண்டும்,தனது ஆன்மீகத்தால் உலகை வெல்ல வேண்டும்” என்று பேசினார்.
-
அவரது பேச்சில் இருந்த கம்பீரமும்,செய்து முடிக்க வேண்டும் என்ற உறுதியையும் கண்டு சரத்,தன் உயிரையும் கொடுக்க தயாராக இருப்பவன் போல உற்சாகமாக பேசினார்.“சுவாமிஜி,இதோ உங்கள் சீடன் இருக்கிறேன்.உங்கள் பணிக்காக நான் என்ன செய்யவேண்டும் சொல்லுங்கள்” என்றார்.
-
எனக்காக வீடு வீடாகசென்று பிச்சையெடுக்க முடியுமா? என்று கேட்டார்.சுவாமிஜி.
-
“ஆம். உங்களுக்காக நான் எதையும் செய்வேன் ”என்றார் சீடர்
-
சீடருடன் சுவாமிஜி ரிஷிகேசம் சோக்கி பயணத்தை துவக்கினார்.இதற்கு முன்பு சொகுசான வாழ்க்கை வாழ்ந்து வந்தவர் சரத். துறவு வாழ்க்கையின் சிரமங்களைச் சுலபமாக எதிர்கொள்ள இயலவில்லை. நீண்ட தூரம் நடப்பதும்,உணவு கிடைக்காமல் ,பசி தாகங்களைச் சகிப்பதும் அவருக்கு புதிய விஷயங்கள்.அவர் மிகவும் கஷ்டப்பட்டார்.சுவாமிஜி அன்பின் வடிவமாக இருந்தார். சீடரின் சுமைகளை சுவாமிஜியே சுமந்துகொண்டு நடந்தார்.ஒரு காலகட்டத்தில் சீடரையே குரு சுமந்து வந்தார்
-
அதைப்பற்றி பின்னாளில் சரத் கூறினார்...
-
இமயமலையில் ஒரமுறை நாங்கள் இருவரும் சென்றுகொண்டிருந்தபோது பசியாலும் தாகத்தாலும் நான் மயக்கமடைந்தேன்.இதற்கு மேலும் ஓரடி கூட எடுத்துவைக்க சக்தியில்லாமல் இருந்தேன்.அப்போது சுவாமிஜி என்னை சுமந்துகொண்டு நடந்தார். எனக்காக அவர் பலமுறை தன் உயிரையே பணயம் வைத்துள்ளார்...நண்பர்களே அவரைப்பற்றி நான் என்ன சொல்வேன்!--அன்பு, அன்பு, அன்பு, தன்னை நேசிப்பவர்களுக்காக தன் உயிரையும் கொடுக்க தயாராக இருக்கும் அன்பு. இதைத்தவிர அவரைப்பற்றி வேறு என்ன சொல்ல?எனது செருப்பைக்கூட அவர் சுமந்து சென்றுள்ளார்..
-
சரத் ஒருமுறை சற்று மனம் தளர்ந்த நேரத்தில் சுவாமிஜியிடம் கூறினார், “சுவாமிஜி. என்னை நீங்கள் கைவிட்டு விடுவீர்களா? ” அதற்கு. “முட்டாளே,உன் செருப்பைக்கூட நான் சுமந்துள்ளேன் என்பதை மறந்துவிட்டாயா?” என்றார் சுவாமிஜி..
-
சீடருடன் சுவாமிஜியின் பயணம் தொடரும்....
-
சுவாமி வித்யானந்தர்

No comments:
Post a Comment