Saturday, 30 June 2018

சுவாமி விவேகானந்தர் எழுதிய உருக்கமான கடிதம்


சுவாமி விவேகானந்தர் எழுதிய உருக்கமான கடிதம்
-
சமுதாயத்தை, உலகத்தை மின்சக்தி பெற்றெழச் செய்ய வேண்டும்.முதலில் குணநலன் அமையட்டும்.புரிகிறதா? இருபதாயிரம் துறவிகள் நமக்குத்தேவை-ஆண்களும்,பெண்களும் வேண்டும்.புரிகிறதா?
-
இல்லற சீடர்கள் வேண்டாம்.தியாகிகளே வேண்டும்.நல்ல கல்வி கற்ற இளைஞர்கள் வேண்டும்.மூடர்கள் வேண்டாம்.நாம் ஒரு கிளர்ச்சி செய்ய வேண்டும்.வெட்டியாக இருக்காதீர்கள்.கச்சையை கட்டிக்கொண்டு தயாராகுங்கள்.எல்லா இடத்திலும் இயக்கங்களை ஆரம்பித்துக்கொண்டே செல்லுங்கள்,சீடர்களை உருவாக்கிக்கொண்டே செல்லுங்கள்.ஆணோ,பெண்ணோ யார் வந்தாலும் அவர்களை துறவியாக்கிவிடுங்கள்
-
ஒரு மாபெரும் ஆன்மீக அலை வந்துகொண்டிருக்கிறது.இதில் பாவிகள் மகான்கள் ஆக மாறுவார்கள்.மூடர்கள் பெரிய பண்டிதர்களுக்கும் குருவாக ஆக்கப்படுவார்கள்.ஸ்ரீராமகிருஷ்ணரின் அருளால் இவைகள் எல்லாம் நடைபெறும்.எழுந்திருங்கள்,விழித்திருங்கள்.லட்சியத்தை அடையும்வரை நில்லாதீர்கள்.
-
தொடர்ந்து விரிந்துகொண்டிருப்பதுதான் வாழ்க்கை.குறுவது சாவு.உயிர்களிடம் கருணைகொண்டு வேலை செய்பவனே ஸ்ரீராமகிருஷ்ணரின் மகன்.மற்றவர்கள் அற்பர்கள்.நமக்கு அனுகூலமான இந்த வேளையில் கிராமம்கிராமமாக செல்லுங்கள்,வீடுவீடாக செல்லுங்கள்,அவரது உபதேசத்தை பரப்புங்கள்.யாரால் இதை செய்ய முடியவில்லையோ அவர்கள் இங்கிருந்து மறைந்துபோகட்டும்
-
ஸ்ரீராமகிருஷ்ணரின் மகன் தன்னலத்தை நாடமாட்டான்.அவன் உயிரைக்கொடுத்தாவது பிறருக்கு நன்மை செய்ய விரும்புவான்.சோம்பல் வாழ்க்கை வாழ்ந்து தனது சுகத்திற்காக மற்ற அனைவரையும் பலியிட தயங்காதவர்கள் நம்மவர்கள் அல்ல.காலம் மிஞ்சிப்போவதற்குள் அவர்கள் மூட்டை முடிச்சுகளுடன் மடத்திலிருந்து வெளியேறிவிடட்டும்.ஸ்ரீராமகிருஷ்ணரின் போதனையை நாற்புரமும் பரப்புங்கள்.இதுவே சாதனை.இதுவே பஜனை.இதவே மோட்சம்
-
முன்னேறிச்செல்லுங்கள்.முன்னேறிச்செல்லுங்கள்.பேரலை புரண்டுவருகிறது.எழுந்திருங்கள்.விழித்திருங்கள்.அவர் நமக்குப் பின்னால் உள்ளார்.இதற்குமேல் என்னால் எழுத முடியவில்லை.இதைமட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.இந்தக் கடிதத்தை யார்யார் படிக்கிறார்களோ,அவர்களிடமெல்லாம் எனது சக்தி வரும்.நம்பிக்கை வையுங்கள்.முன்னேறிச்செல்லுங்கள்.
-
ஹரே,ஹரே! யாரோ என் கையைப்பிடித்து இவ்வாறெல்லாம் எழுதச் செய்கிறார்கள்.ஹரே,ஹரே! எல்லோரும் இழுத்துச் செல்லப்படுவார்கள்.அவருக்கு அல்ல,அவருடைய குழந்தைகளுக்கு யார்யார் சேவை செய்ய ஆயத்தமாக உள்ளார்களோ,ஏழைகளாக,துன்பப்படுபவர்களாக,பாவிகளாக,உள்ளவர்களுக்கு யார்யார் சேவை செய்ய ஆயத்தமாக உள்ளார்களோ அவர்களிடம் அவர் உறைவார்.அவர்களின் நாக்கில் கலைமகள் உறைவாள்.அவர்களின் நெஞ்சில் மகாசக்தியான மகாமாயை வாசம் செய்வாள்.
-
உங்கள்-விவேகானந்தா(நரேந்திரா)
-
சுவாமி விவேகானந்தர் மடத்தில் உள்ள துறவிகளுக்கு எழுதிய கடிதம்(புத்தகம்9பக்கம்437)
-
சுவாமி வித்யானந்தர்

No comments:

Post a Comment