Monday, 25 June 2018

என்னைவிட ஆற்றல்மிக்க வீரபுருஷர் ஒருவர் இந்தியாவில் எப்போதாவது தோன்றுவார்-சுவாமி விவேகானந்தர்


என்னைவிட ஆற்றல்மிக்க வீரபுருஷர் ஒருவர் இந்தியாவில் எப்போதாவது தோன்றுவார்.அவர் இந்த பணிகளை(பாதியில் நிற்கும் பணிகள்) முடித்துவைப்பார்-சுவாமி விவேகானந்தர்
-
சுவாமி விவேகானந்தர் எழுதிய கடிதம்..
-
20-6-1894 சிகாகோ
-
அன்புள்ள திவான்ஜி சாகிப்
-
உங்களுக்கு ஒன்று சொல்ல வேண்டும்..இந்தியாவிலுள்ள சிலர் (பிரம்மசமாஜம்,தியோசப்பிக்கல் சொசைட்டி)அமெரிக்கா முழுவதும் என்னை குறைகூறி பிரச்சாரம் செய்கிறார்கள். நான் அமெரிக்கா போய்தான் முதன்முதலாகக் காவி உடை உடுத்தேன் என்றும். நான் வெறும் ஏமாற்றுபேர்வழி என்றும் கூறுகிறார்கள்.இதை கேள்விப்பட்டு அமெரிக்கர்கள் எனக்கு பணம் தர தயங்குகிறார்கள்.இத்துடன் இங்குள்ள பாதிரிகள் எப்போதும் எனக்கு எதிராக எதையாவது(குற்றத்திற்கு காரணம்) தேடிக்கொண்டே இருக்கிறார்கள்.என்னை குறை கூறி இங்குள்ள பத்திரிக்கைகளில் எழுதிக்கொண்டே இருக்கிறார்கள்.
-
நான் இங்கு(அமெரிக்கா) வந்துள்ளதன் முக்கிய காரணம்,இந்திர்களுக்க சேவை செய்ய நிதி திரட்டுவதற்கே...
பொது மக்களுக்குளுக்கு கல்வியூட்டி அவர்களை உயர்த்தவேண்டும்.வயலில்.தொழிற்சாலையில் எங்கே மக்கள் வேலை செய்தாலும்,கல்வி அவர்களின் இருப்பிடத்திற்கு சென்று சேரவேண்டும்....
-
என் குருபாயிக்களை(சகோதர துறவிகள்) நீங்கள் பார்த்திருப்பீர்கள்.அவர்களைப்போல் சுயநலமற்ற,நல்லவர்களை,படித்தவர்களை இந்தியா முழுவதும் ஒன்று சேர்க்க வேண்டும்.அவர்கள் கிராமம் கிராமமாக போகட்டும்,மதத்துடன் அன்றாட நடைமுறை கல்வியையும் போதிக்கட்டும்.மதக்கல்வி வீடுவீடாக போதிக்கப்படவேண்டும்.இதைப்போலவே துறவி பெண்களையும் ஒருங்கிணைத்து அவர்களையும் அனுப்ப வேண்டும்.
-
இந்தகையை தியாகத்திற்கு,துறவிகளை தூண்டுவது எது தெரியுமா? மதத்தின்மீது அவர்களுக்குள்ள ஆர்வம்.ஒவ்வொரு புதிய அலைக்கும் ஒரு புதிய மையம் தேவை.புதிய மையத்தின் மூலமே பழைய மதத்தை புத்துயிர்பெறச்செய்ய முடியும்.உங்கள் பழைய கொள்கைகளையும் கோட்பாடுகளையும் ஒழித்துக்கட்டுங்கள் அவற்றால் பலனில்லை.ஒரு நற்பண்பு,ஒரு வாழ்க்கை,ஒரு யைம்,ஒரு தெய்வமனிதர்தான் வழிகாட்ட வேண்டும்.அவரை மையமாகக்கொண்டே மற்ற எல்லா அம்சங்களுக் ஒன்றுசேர வேண்டும்.அவை ஒரு பேரலையாக சமுதாயத்தின்மீது மோதவேண்டும்.அனைத்தையும் அந்த அலை அடித்து செல்லும், எல்லா அசுத்தங்களும் கழுவப்பட்டுவிடும்.
-
புராதன இந்து மதத்தை சீர்திருத்தியமைக்க இந்து மதத்தால்தான் முடியும்.போலித்தனமான சீர்திருத்தங்களால் முடியாது.அதேவேளையில் அவர்கள் கீழை மற்றும் மேலை பண்பாடுகளை ஒருங்கிணைக்க வல்லவர்களாக இருக்க வேண்டும்.
-
இத்தகைய பேரியக்கம் முளைவிட்டுள்ளது.பொங்கிவர இருக்கின்ற பேரலைகளின் மெல்லிய ஓசைகள் கேட்கவில்லையா?அந்த மையம் வழிகாட்டி செல்கின்ற அந்த தெய்வ மனிதர் இந்தியாவில் தோன்றினார்.அவரே ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர்.அவரைச்சுற்றி இந்த கூட்டம் மெதுவாக ஒன்றுசேர்ந்து வருகிறது.அவர்கள் இந்தப் பணியை செய்து முடிப்பார்கள்.
-
திவான்ஜி,இதற்கு இயக்கம் வேண்டும்.பணம் வேண்டும் அதை சம்பாதிக்கவே அமெரிக்கா வந்தேன்.இந்தியாவில் யார் பணம் தருவார்கள்?நான் கடல் கடந்து அமெரிக்கா வருவதற்கு ஏழைகளிடமிருந்தே பணம் பெற்றேன் என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம்.பணக்காரர்கள் செய்ய முன்வந்த பண உதவியை நான் மறுத்தேன்,ஏனென்றால் என் கருத்துக்களை அவர்களால் புரிந்துகொள்ள இயலவில்லை.ஓராண்டு அமெரிக்காவில் தங்கியருந்தும் என்னால் நிதி திரட்ட முடியவில்லை.
-
என் நாட்டு மக்களை நான் நேசிக்கிறேன்.மனித உதவியை நான் காலால் ஒதுக்குகிறேன்.மலைகளிலும் பள்ளங்களிலும்.பாலைவனங்களிலும் காடுகளிலும் என்னுடன் இருந்துள்ள இறைவன் என்றும் என்னுடன் இருப்பார் என்று நம்புகிறேன்.
இல்லாவிட்டால் என்னைவிட ஆற்றல்மிக்க வீரபுருஷர் ஒருவர் இந்தியாவில் எப்போதாவது தோன்றுவார்.அவர் இந்த பணிகளை(பாதியில் நிற்கும் பணிகள்) முடித்துவைப்பார்
-
நான் உங்களுக்கு எல்லாவற்றையும் கூறிவிட்டேன்.அன்பு நண்பரே நான் அடியாளம்வரை நேர்மையானவன்.என் மிகப்பெரிய குற்றம் என்நாட்டை அளவுக்குமீறி நேசிப்பதுதான்.நீங்களும் உங்களை சேர்ந்தவர்களும் எல்லா பேறுகளும் பெற்று இருப்பீர்களாக...
-
என்றும் நன்றியுடன்
விவேகானந்த
-
....சுவாமி விவேகானந்தர் எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி...புத்தகம்9பக்கம்292
-
சுவாமி வித்யானந்தர்

No comments:

Post a Comment

பித்ருக்களுக்கு தினமும் உணவிட வேண்டும்

  பித்ருக்களுக்கு தினமும் உணவிட வேண்டும் .. துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை. -திருக்குறள் ...