ராகு-கேது பற்றி பலர் அறியாத தகவல்கள்
-
ராகு-கேது என்பது இந்திய வானியல் ஆராய்ச்சியில் மிக முக்கிய இடம் கொண்டது. ஜாதகம் பார்ப்பவர்கள் இதைப்பற்றி ஓரளவு தெரிந்து வைத்திருப்பார்கள்.எனக்குத் தெரிந்த சில தகவல்களை இங்கே பதிவிட விரும்புகிறேன்.இது எனது தனிப்பட்ட கருத்துதான்.
-
ராகு-கேது என்பது ஒரு பாம்பு.அதன் தலைப்பகுதி ராகு. உடல் பகுதி-கேது.புராணங்களில் அசுரன் ஒருவன் மரணமில்லாநிலையை தரும் அமிருதத்தை குடிப்பதற்காக தேவர்களை ஏமாற்றி அமிர்தத்தை குடித்ததையும்.அப்போது அவனது தலையை வீழ்த்தியதாகவும்.அது இரண்டு துண்டாக மாறி சுற்றி வருவதாகவும் படித்திருக்கிறோம்.இதற்கு பின்னால் இருக்கும் அறிவியலைப்பற்றி இப்போது ஆராய்வோம்
-
இந்த சூரிய குடும்பத்தில் சுய ஒளி உடையது சூரியன் மட்டும்தான்.அதனால் சூரியன் பிராண சக்தியை,அதாவது உயிர்சக்தியை கொடுப்பவனாகிறான்.சூரியனை தந்தை என்று வைத்துக்கொள்வோம்.பூமி உடலை கொடுப்பவன்.சூரியனின் பிராணனை வாங்கி,உடல்களுக்கு உயிர்கொடுத்து,அவர்களை வாழச்செய்பவன் அதனால் பூமி தாய் என்கிறோம்.சந்திரன் பூமியை சார்ந்து வாழ்கிறது.அதனால் சந்திரன், பூமி மற்றும் சூரியனின் குழந்தை.தாயை சுற்றி வருவதே அவனது வேலை
-
சூரியன் பூமியை இழுத்துக்கொண்டே இருக்கிறான்.ஆனால் பூமிக்கு சந்திரன்மீது பற்று இருப்பதால் சூரியனிலிருந்து விலகி சுற்றுகிறது.சந்திரனின் எண்ணம் முழுவதும் பூமிதாயை நோக்கியே இருப்பதால்.சந்திரன் மனம் என்றும் அழைக்கப்படுகிறது.
-
இதில் சூரியன் ஒரு மனிதனின் பிராணனை ஆள்கிறது.பூமி உடலை ஆள்கிறது.சந்திரன் மனத்தை ஆள்கிறது.இந்த மூன்றும் ஒவ்வொரு உயிர்களின் வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது
-
இனி ராகு-கேது பற்றி பார்ப்போம். ஒரு மரத்தின் மீது சூரிய ஒளி பட்டால் அதன் நிழல் எதிர்திசையில் விழும் என்பது நமக்கு தெரியும்.அந்த நிழல் என்பது இருட்டு அல்ல.ஒளியின் குறைந்த அளவு.அல்லது தடுக்கப்பட்ட ஒளி .
-
பூமியின் மீது சூரிய ஒளி படுகிறது.அதன் எதிர்திசை அதாவது மறுபக்கத்தில் உள்ள நாடுகளில் பூமியின் நிழல் விழுகிறது.அதை நாம் இரவு என்கிறோம்.ஆனால் அது பூமியின் நிழல்..இருளிலும் ஓரளவு குறைந்த ஒளி இருக்கும்.இந்த பூமியின் நிழலுக்கு கேது என்று பெயர்.அதாவது எப்போது நமது பிராணன் வலுவிழந்து காணப்படுகிறதோ.அப்போது கேதுவின் ஆதிக்கத்தில் இருக்கிறோம் என்று அர்த்தம்.கேது உடலின் பலவீனமான நிலை. பகவில் பூமி சூரியனிடமிருந்து ஒளியை வாங்குவதால் உயிர்கள் பலத்துடன் காணப்படுகின்றன.இரவில் சூரிய ஒளி குறைவாக விழுவதால் உடல்கள் பலமிழந்துவிடுகின்றன.கேது என்பது தனியான கிரகம் அல்ல.அது பூமிதான். அதன் இன்னொரு பகுதியான நிழல்பகுதி
-
இதேபோல் சந்திரனிலும் நிழல் வருகிறது.அந்த நிழல்தான் ராகு.அந்த நிழல் சில நேரங்களில் பூமியின்மீது விழுகிறது.அப்போது பூமியில் உள்ள உயிர்களின் மனம் பலமிழந்து காணப்படுகிறது. சந்திரனின் ஒளி பூரணமாக பூமியின் விழுந்தால் மனம் பலத்தோடு உள்ளது.நிழல் விழுந்தால் மனம் பலமிழந்து காணப்படுகிறது. ஒளி இல்லாததால் தன் குழந்தையை காண முடியவில்லையே என்ற பூமித்தாயின் ஏக்கம் இதற்கு காரணமாக இருக்கலாம்(நகைச்சுவைக்காக சேர்த்துக்கொண்டேன்)
-
இந்த கேதுவும்-ராகுவும் அதாவது பூமியின் நிழலும் சந்திரனின் நிழலும் ஒருமுறை நேர்கோட்டில் சந்திக்கின்றன.அப்போது அந்த பாம்பு.அதாவது நாம் முன்பு பார்த்தோமே அந்த பாம்பு ஒன்றாக இணைகிறது.அது முன்பு இருந்த அசுரநிலையை அடைகிறது.இந்த நாட்களில் மனிதனுக்கு அசுர இயல்பு மேலோங்கி நிற்கும்.
-
அடுத்து இதேபோல சந்திரன் முழு ஒளியுடனும்,பூமி முழு ஒளியுடனும் ஒரு முறை சந்திக்கின்றன.அது பகல்வேளையில் வருகிறது.அப்போது சந்திரனை நாம் காணமுடியாவிட்டாலும் அது அங்கே இருக்கும்.அப்போது உடல் முழுபலத்துடனும் மனம்முழு பலத்துடனும் இருக்கிறது.மனிதனிடம் தேவஇயல்பு மேலோங்கி இருக்கும்.இது மங்கலமான நான் என்பதால் தவம்புரிபவர்களுக்கு மரணமில்லாப்பெருநிலை மிக எளிதாக கிடைத்துவிடும்
-
ராகு-கேதுவை ஏன் பாம்பு என்றார்கள்?மனித உடலில் இந்த பாம்பு என்பது குண்டலினி சக்தியை குறிக்கிறது.இந்த குண்டலினி மேல்நோக்கி சென்று சிரசை அடைந்தால் மரணமில்லாப்பெருநிலை கிடைக்கும்.மனிதனின் உடலில் உடல் என்பது பூமி. தலை என்பது சந்திரன்.இந்த இரண்டும் இரண்டு முறை ஒன்று சேர்கின்றன.ராகுவும்-கேதுவும் ஒன்று சேரும்போது பாம்பும் அதாவது குண்டலினி சக்தி ஒன்றாக இணைந்து முழுமையாக உள்ளது. இந்த காலத்தில் ஒருவன் மனத்தை முற்றிலும் அடக்கி,உடலை முற்றிலும் அடக்கி பிராணனையும் அடக்கினால் அவனுக்கு மரணமில்லாப்பெருநிலை விரைவில் கிடைக்கிறது.
-
இதை பயிற்சி செய்வதற்காக இந்த காலத்தில் சிலர் சுடுகாட்டில் பிணங்களுக்கு மத்தியில் அமர்ந்து தவம் செய்வார்கள்.சுற்றிலும் பேய்-பிசாசுகள் அந்த காலத்தில் மிக ஆக்ரோசமாக இருக்கும்.ஏனென்றால் அது அவர்களுக்கு பிடித்த நாள்.முறையான பயிற்சி இல்லாமல் சுடுகாட்டிற்கு சென்றால் பிணமாக வேண்டியதுதான்.
-
கட்டுரை..சுவாமி வித்யானந்தர்(11.6.2018)
No comments:
Post a Comment