வர்ணமும்-ஜாதியும்
..
இந்துமத்த்தில் கூறப்படும் வர்ணம் மற்றும் ஜாதி பற்றி பல முரணான கருத்துக்கள் காணப்படுகின்றன.
இதை உருவாக்கியவர்களின் கண்ணோட்டத்தில் இதைப் பார்ப்போம்.
வர்ணம் என்றால் நிறம். ஜாதி என்றால் பிறப்பு என்று அர்த்தம்.
.
நமக்கு ஒரு தூலஉடலும் ஒரு சூட்சு உடலும் இருக்கிறது.
தூல உடல் ஏதவாது ஓர் இடத்தில் பிறக்கிறது. அடுத்த பிறவியில் இன்னோர் இடத்தில் பிறக்கிறது.
இந்த உடலின் பிறப்பை அடிப்படையாக வைத்து வருவது ஜாதி.
ஒருவர் இந்த பிறவியில் பானை செய்பவரின் வீட்டில் பிறக்கலாம். அடுத்த பிறவியில் புரோகிதரின் வீட்டில் பிறக்கலாம்.இப்படி ஒவ்வொரு பிறவியிலும் ஒருவரின் ஜாதி மாறிக்கொண்டே இருக்கிறது.
..
வர்ணம் என்பது சூட்சும உடலை அடிப்படையாகக்கொண்டது.
சூட்சும உடலுக்கு மூன்று குணங்கள் சத்வம்,ரஜஸ்,தமஸ்
சத்வம் என்பது ஒளி குணம். இதன் நிறம் வெண்மை.
ரஜஸ் என்பது செயல்நிலை.இதன் நிறம் சிகப்பு
தமஸ் என்பது இருள். இதன் நிறம் கருமை.
இந்த மூன்றோடு சேர்த்து ரஜஸ் மற்றும் தமஸ் கலந்த இன்னொரு கலப்பு குணத்தையும் சேர்த்துக்கொண்டார்கள். சிலர் அதை பழுப்பு நிறமாகவும் கருதுகிறார்கள்.
..
வெண்மையான நிறம் பிராமணனைக் குறிக்கிறது.
சிகப்பு நிலம் சத்திரியனைக்குறிக்கிறது.
பழுப்பு நிறம் வைசியனைக் குறிக்கிறது.
கருப்பு நிறம் சூத்திரனைக்குறிக்கிறது.
இது சூலஉடலின் நிறம். அதாவது மனிதனின் குணத்தின் நிறம்.
மனம் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது.
ஒருவர் செய்யும் புண்ணியம் மற்றும் பாவத்திற்கு ஏற்ப சூட்சுஉடல் மாறிக்கொண்டே இருக்கிறது.
..
எனவே முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப இந்த வர்ணம் ஏற்படுகிறது.
அதோடு இந்த பிறவியில் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப இந்த வர்ணம் மாறுபடுகிறத.
உதாரணமாக சூத்திர வர்ணத்தோடு பிறக்கும் ஒருவர் அதிக புண்ணிய கர்மங்களைச் செய்தால் வைசிய,சத்திரிய நிலையை கடந்து படிப்படியாக முன்னேறி பிராமணநிலையை அடையலாம்.
..
பழங்கால ரிஷிகள் வர்ணத்திற்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள்.
வர்ணக்கலப்பு ஏற்படக்கூடாது என்று கூறியுளள்ார்கள்.பிராமண குணம் கொண்ட ஆண்,பிராமண குணம் கொண்ட பெண்ணை மணக்க வேண்டும். வேறு வர்ணத்தில் மணக்கக்கூடாது.
யார் எந்த குணம் என்பதை எப்படி அறிவது?
நல்லவனின் செயல்பாடு நல்லதாக இருக்கும். கெட்டவனின்ன் செயல்பாடுகள் கெட்டதாக இருக்கும்.
ஒரு ஜாதியில் பிறந்த மக்களில் இந்த நான்கு வர்ணத்தாரும் இருப்பார்கள்.
இது பற்றி மனுஸ்மிருதி கூறும்போது தாழ்ந்த ஜாதியில் பிறந்த ஒருவனிடம் பிராமண குணங்கள் இருந்தால் அவனை பிராமணனாக மதிக்க வேண்டும் என்றும்.
உயர்ந்த ஜாதியில் பிறந்த ஒருவரிடம் சூத்திரகுணங்கள் இருந்தால் அவரை சூத்திரனாக நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.
எனவே ஒவ்வொரு ஜாதியிலும் நான்கு குணங்கள் உள்ள மக்கள் ஆதிகாலத்தில் இருந்தே இருந்திருக்கிறார்கள்.
..
தாழ்ந்த ஜாதியில் பல ரிஷிகள் பிறந்திருக்கிறார்கள்.
அவர்கள் வாயிலிருந்து வேதம் வெளிப்பட்டுள்ளது.
பக்திமான்களில் பலர் தாழ்ந்த ஜாதியில் பிறந்திருக்கிறார்கள்
இதற்கான பல உதாரணங்களை வரலாறு கூறுகிறது.
..
எப்போது இந்த ஜாதியும்-வர்ணமும் குழப்பத்திற்கு உள்ளானது?
புத்தரும்,மகாவீரரும் பிறந்த பிறகு பழைய நடைமுறைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.
ஜாதி-வர்ணம் போன்ற பிரிவுகள் நீக்கப்பட்டன.இதனால் வர்ணக்கலப்பும், ஜாதிக்கலப்பும் ஏற்பட்டது.
அதன் பிறகு வந்த மொகலாயர்கள் காலத்தில் இது இன்னும் சீரழிவை சந்தித்தது.
மொகலாயர்க காலத்தில் உயர்ந்த ஜாதியினர் அடிமைகளாக்கப்பட்டார்கள்.
தெருக்களை சுத்தம் செய்வது, மனிதக்கழிவுகளை அகற்றுவது,செருப்பு தைப்பது போன்ற வேலைகள் மொகலாயர் ஆட்சிக்காலத்தில் உயர் ஜாதியினருக்கு வழங்கப்பட்டது.
படிப்டியாக உயர் ஜாதியினர் தங்கள் பெருமைகளை இழந்து தாழ்ந்த ஜாதியினரின் போலவே மாறிவிட்டார்கள்.
இன்னும் வடஇந்தியாவில் இதைக் காணலாம்.
பெயரில் மட்டுமே அவர்கள் உயர்ஜாதியினர்.
..
இவ்வாறு மிகப்பழங்காலத்தில் சிறப்பாக இயங்கி வந்த ஜாதி அமைப்புகளும், வர்ண பிரிவும் படிப்படியாக வீழ்ச்சியை அடைந்தது.
வரலாறு என்ன சொல்கிறதென்றால், சக்கரம் போன்றதுதான் வாழ்க்கை.
வீழ்வது மீண்டும் எழும். எழுவது மீண்டும் வீழும்.
கலிகாலத்தில் எல்லாமே வீழ்ச்சியை நோக்கி செல்லும். சத்தியயுகத்தில் எல்லாமே எழுர்ச்சியை நோக்கி செல்லும்.
இப்போது கலி காலம் நடந்துகொண்டிருக்கிறது.
எப்போது சக்தியயுகம் தோன்றுமோ அப்போது எல்லாமே மீண்டும் எழுர்ச்சி பெற ஆரம்பிக்கும்.
..
சத்தியயுகம் எப்போது தோற்றும்?
எப்போது நல்லவனாகவும் தர்மவானாகவும் உள்ள ஓர் அரசன் உலகம் முழுவதையும் ஆட்சி செய்வானோ அப்போது சக்தியயுகம் துவங்கும்.
..
சுவாமி வித்யானந்தா(21-4-2025)
இதில் உங்களுக்கு மாறுபட்ட கருத்து இருந்தால் தெரிவிக்கலாம்.
உங்கள் கேள்விகளை +919360209541 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பவும்.
..
No comments:
Post a Comment