ஆன்மீகமும்-விஞ்ஞானமும்-பாகம்-8
..
பிரபஞ்சமும்
இறைவனும்
..
நன்றாக
வளர்ந்த ஒரு அரசமரத்தை எடுத்துக்கொண்டால், அதில் தண்டு,கிளை, இலை,தளிர்,காய்,கனி,விதை
என்று எல்லாமே இருக்கிறது. ஒவ்வொரு விதைக்குள்ளும் புதிய அரசமரம் ஒடுங்கிய நிலையில்
இருக்கிறது.
இதேபோல
இந்த பிரபஞ்சத்திலும் உள்ளது. இந்த பிரபஞ்சத்தை நன்றாக வளர்ந்த ஒரு அரசமரத்துடன் ஒப்பிட்டுப்
பார்த்தால், அங்கே பல நட்சத்திரங்கள்,கிரகங்கள்,உயிரினங்கள் என்று எல்லாமே இருக்கிறது.
அதோடு பிரபஞ்சம் விதை வடிவில் ஒடுங்கியும் இருக்கிறது. இந்த ஒடுங்கிய விதைக்குள் புதிய
பிரபஞ்சத்திற்கான அனைத்தும் உள்ளது.
..
இதை
இப்போது இரண்டாக பிரித்துப் பார்ப்போம். ஒன்று முழுவதுமாக விரிந்த நிலையில் உள்ள அரசமரம்.
இன்னொன்று அரசமரம் ஒடுங்கிய நிலையில் உள்ள விதை. மனிதனை எடுத்துக்கொள்வோம், மனிதன்
என்று சொல்லும்போது அது ஆண்பெண் இருவரையும் சேர்த்து எடுத்துக்கொள்வோம். இதில் ஒடுக்கம்
என்பது எது?
ஆணும்பெண்ணும்
இணைந்த பிறகு கருமுட்டையும்,விந்துவும் இணைந்தபிறகு ஏற்படும் நிலை.
..
இரண்டு
நிலைகளைப் பார்க்கிறோம். ஒன்று முழுவதும் விரிவடைந்த நிலை. இன்னொன்று ஒடுங்கிய நிலை.
முழுவதும் விரிவடைந்த நிலையில் ஒடுக்கடும் இருக்கிறது.அதாவது முழுவதும் விரிவடைந்த
மனிதனிடம் ஒடுங்கிய மனிதனும் உள்ளது.
..
இப்போது
இந்த பிரபஞ்சத்தை மூன்று பகுதிகளாக பார்ப்போம். ஒன்று கண்களால் காணும் தூல பிரபஞ்சம்.
இரண்டாவது சூட்சும பிரபஞ்சம், மூன்றாவது காரண பிரபஞ்சம். காரணபிரபஞ்சம் என்பது என்ன?
அதுதான் விதைவடிவில் உள்ள பிரபஞ்சம்.
..
சூட்சும
பிரபஞ்சத்தில் என்ன இருக்கும். பல்வேறு தேவர்கள்,அவர்கள் வாழும் உலகங்கள், சிவன்,விஷ்ணு,பிரம்மா
போன்ற மும்மூர்த்திகள்,அவர்களது உலகங்கள், பல்வேறு ரிஷிகள்
இன்னும்
கீழ்நிலைகளில் வாழும் பேய்,பிசாசுகள் போன்ற அனைத்தும் உள்ளது.
..
பிரபஞ்சம்
என்று சொல்லும்போது அது தூலபிரபஞ்சம்,சூட்சும பிரபஞ்சம், காரணப்பிரபஞ்சம் மூன்றையும்
சேர்த்து குறிக்கிறது. இந்த மூன்றிற்கும் பின்னால் எதுவும் இல்லையா? இருக்கிறது. உணர்வு
உள்ளது. அந்த உணர்வுதான் காரணப்பிரபஞ்சத்திற்குள் தூங்கியநிலையில் உள்ளது. அதே உணர்வுதான்
தூலபிரபஞ்சத்தில் இன்பதுன்பங்களை அனுபவிப்பவனாக உள்ளது.
..
இந்த
பிரபஞ்சத்தில் இன்னொருநிலை உள்ளது. அது என்னவென்றால் உருவங்கள் எதுவுமே இல்லாமல் உருவமற்றநிலையில்
இருப்பது. தூலம்,சூட்சுமம்,காரணம் என்ற மூன்று நிலைகளையும் தாண்டி இன்னொரு நிலை உள்ளது.
அது முழுவதும் உருவமற்ற நிலை.
..
இந்த
பிரபஞ்சம் முழுவதையுமே அதிர்வுகளாக எடுத்துக்கொண்டால் கண்களால் காணும் பிரபஞ்சத்தின்
அதிர்வு குறைவு, கண்களால் காணமுடியாத தன்மாத்திரைகளால் ஆன சூட்சுமபிரபஞ்சத்தின் அதிர்வு
அதிகம். இனி காரணபிரபஞ்சத்திற்கு உள்ளே சென்று பார்த்தால் அங்கே உள்ள அதிர்வு இன்னும்
அதிகம். அதற்குள்ளும் சென்று பார்த்தால் எல்லையற்ற அதிர்வு, அதிர்வு எல்லையற்ற நிலையை
அடைந்துவிட்டது. எல்லை என்பதற்கு வரையறை உள்ளது. எல்லையற்றது என்று சொன்னால் அதற்கு
வரையறை இல்லை என்று பொருள்.( "Infinite" )
..
இந்த
பிரபஞ்சத்தில் எல்லாமே உள்ளது. தூலபிரபஞ்சம் உள்ளது. சூட்சும பிரபஞ்சம் உள்ளது.விதைவடிவில்
உள்ள காரண பிரபஞ்சம் உள்ளது. விதைக்குள் ஆழ்ந்து சென்று பார்த்தால் "Infinite" உள்ளது. இந்த மொத்தத்தையும்
சேர்த்து நாம் ஒன்றாக கணக்கில் எடுத்துக்கொள்வோம். அந்த ஒன்றிற்கு இறைவன் என்று பெயர்."Infinite" மட்டும் எடுத்துக்கொண்டால் அதற்கு பிரம்மம் என்று
பெயர்.
..
இப்போது
இரண்டு பெயர்கள் பார்க்கிறோம். ஒன்று இறைவன். இன்னொன்று பிரம்மம்.
பிரம்மம்
என்பது என்ன "Infinite" . இறைவன் என்பது என்ன? தூல,சூட்சும,காரண மற்றும்
"Infinite" எல்லாம் சேர்ந்தது.
இந்த
"Infinite" என்பது ஒவ்வொரு உயிரிலும் உள்ளது. ஒவ்வொரு மனிதனிலும் உள்ளது.
ஒவ்வொரு அணுவிலும் உள்ளது.
அப்படியானால்
பல "Infinite" உள்ளனவா? இல்லை. "Infinite" என்றாலே எல்லையற்றது என்று அர்த்தம். எல்லை உள்ளது
பல இருக்கலாம். எல்லை இல்லாதது பல இருக்காது. எனவே இந்த பிரபஞ்சத்தில்
"Infinite" பல இல்லை. இதை அத்வைதம் என்கிறோம்.
..
இறைவன்
என்று கூறிய தத்துவத்தை விஷிட்டாத்வைத தத்துவம் என்கிறோம். விஷேஷ அத்வைதம் என்பது.
விஷிஷ்டாத்வைதம்.
..
ஆத்மா
என்பது என்ன? ஒவ்வொரு உயிரிலும் உள்ள "Infinite" தான் ஆத்மா.
இந்த
பிரபஞ்சத்திற்கு ஒரு "Infinite" உள்ளதாக பார்த்தோமே அது பரமாத்மா
..
நம்மால்
ஏன் ஆத்மாவை உணர முடியவில்லை? நாம் நமக்குள் இருக்கும் விதை வடிவத்திற்குள் செல்ல வேண்டும்.
அப்போதுதான் ஆத்மாவை உணரமுடியும். நமே அந்த ஆத்மா என்து அப்போது புரியும். பிரபஞ்சத்திற்குள்
இருக்கும் விதைக்குள் செல்ல முடிந்தால் பரமாத்மாவை உணரலாம்.
பரமாத்மா,ஆத்மா
இரண்டும் ஒன்றுதான் என்பது அப்போதுதான் புரியும்.
..
..
இதில்
உள்ள சில கருத்துக்கள் தத்துவம் படிக்காதவர்களக்கு புரியாமல் இருக்கலாம்.
உங்கள்
கேள்விகளை +919360209541 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பவும்
சுவாமி
வித்யானந்தர்-கன்னியாகுமரி(23-5-2025)
No comments:
Post a Comment