ஆன்மீகமும்-விஞ்ஞானமும்-பாகம்-1
..
காலத்தை
சுருக்குவதும், காலத்தை விரிப்பதும்.(வ்யக்தம்-அவ்யக்தம்)
..
இந்த
போர் காலத்தில் மகான்கள் என்ன செய்கிறார்கள்? அவர்கள் நினைத்தால் எதிரிகளை கொன்றுவிடலாம்
அல்லவா? அப்படி இருக்கும்போது அப்பாவி மக்கள் உயிர்விடுவதை பார்த்துக்கொண்டு சும்மா
இருப்பதா? உண்மையிலேயே இவர்கள் மகான்கள்தானா? உலகத்தில் எத்தனையோ தெய்வங்கள் இருக்கின்றனவே
அவர்கள் ஏன் இந்த அட்டூளியங்களை பொறுத்துக்கொண்டிருக்கிறார்கள்? உண்மையிலேயே தெய்வங்களுக்கு
சக்தி உண்டா?
என்று
பல்வேறு கேள்விகள் நாம் இக்கட்டான வேளையில் இருக்கும்போது தோன்றும்
.
நாத்திகர்கள்
இதை தங்களுக்கு சாதகமாக பய்னடுத்தி பல கேள்விகளைக் கேட்பார்கள், கோவில்களிலேயே திருடுகிறார்கள். அங்கே இருக்கும்
தெய்வங்களால் ஏன் அதை தடுக்க முடிவதில்லை?.தெய்வங்கள் பொய் என்று பேசுவார்கள்.
..
இதற்கான
பதிலை சற்று விஞ்ஞான பூர்வமாக ஆராய்வோம்.
..
ஒவ்வொரு
செயலுக்கும் உரிய எதிர்செயல் உண்டு. இது ஒரு விஞ்ஞான விதி.
இது
தவறு செய்யும் அனைவருக்கும் பொருந்தும்.
கோவிலில்
திருடும் திருடனுக்கும் பொருந்தும். திருடன் எப்படியானாலும் ஒருநாள் அதற்கான தண்டனையை
அனுபவிப்பான் என்பது விஞ்ஞான விதி.
கோவிலில்
இருக்கும் தெய்வம் ஏன் அதை தடுப்பதில்லை?
தெய்வங்களில்
சிறுதெய்வம்,பெரும் தெய்வம் என்று பல பிரிவுகள் உண்டு.
சிறுதெய்வங்கள்
மிகவும் கோபமானவை. தங்களால் முடியுமானால் உணடனே அதற்கான தண்டனை வழங்கிவிடும்.
சில
நேரங்களில் அதன் சக்திக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் நடக்கும்போது அதனால் ஒன்றும் செய்ய
முடியாது.
சில
திருடர்கள் அந்த தெய்வங்களை வணங்கி, தங்கள் வறுமை காரணமாக திருடுவதாக கூறி திருடுவார்கள்,அவர்களை
மன்னித்துவிட்டுவிடும்.
ஒரு
சிறுதெய்வ கோவிலை ஒரு அரசாங்கத்தின் காவலர்கள் அல்லது பல தீவிரவாதிகள் வந்து இடிக்கிறார்கள்
என்று வைத்துக்கொள்வோம் அப்போது அதனால் ஒன்றும் செய்ய இயலாது. ஏனென்றால் அது அதனுடைய
சக்திக்கு அப்பாற்பட்ட விஷயம். சிறு தெய்வம் என்பது என்ன? ஏற்கனவே இறந்த முன்னோர்.
அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு சக்தி மட்டுமே உண்டு. தீவிரவாதிகள் அல்லது எதிரிகள்
அதிக எண்ணிக்கையில் இருந்தால் அதனால் ஒன்றும் செய்ய இயலாது.
..
இதுவே
பெரும் தெய்வத்தை எடுத்துக்கொண்டால், அவர்கள் மிகவும் பொறுமைசாலிகள்.
ஒவ்வொரு
கோவிலையும் காக்க மன்னர்கள் காவல்களை நியமித்திருப்பார்கள். காவலர்களால் அதை காக்க
முடியாதபோது, அல்லது மக்கள் அந்த கோவிலை காக்க முடியாதபோது கோவிலின் சொத்துக்கள் களவாடப்படுகின்றன,
அல்லது கோவில்கள் எதிரிகளால் இடிக்கப்படுகிறது.
அப்போது
இந்த பெரும் தெய்வங்கள் என்ன செய்யும்?
அவர்களிடம்தான்
எதிரிகளை அடக்கும் அளவுக்கு சக்தி இருக்கிறதே!
உடனே
தண்டனையை கொடுக்க வேண்டியதுதானே!
..
பெரும்
தெய்வங்களைப் பொறுத்தவரை அவர்கள் எல்லாவற்றையும் அறிவார்கள்.
தீயவர்கள்
ஏன் இங்கே வந்தார்கள்? எதற்காக இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்தது?எல்லாம் தெரியும்.
ஒரு
நாட்டில் அதிகம் மக்கள் தர்மத்தைவிட்டு,அதர்மத்தை நோக்கி செல்லும்போது அந்த நாடு அழிவடையும்,
அந்த நாட்டில் தீயவர்கள் பெருகுவார்கள், எதிரிகள் உள்ளே ஊடுறுவார்கள். திருடர்கள் திருடுவார்கள்.தீவிரவாதிகள்
அதிகரிப்பார்கள்.
அதற்கான
பலனை அந்த மக்கள் அனுவித்துதான் ஆகவேண்டும்.நல்லவர்களும் அதில் அகப்பட்டு துன்பத்தை
அனுபவிப்பார்கள்.
..
இப்போது
என்ன செய்வது? அதற்காக இதை அப்படியே விட்டுவிடலாமா? முடியாது. இதை சரிசெய்வதற்காக அந்தபெரும்
தெய்வங்கள் மகான்களை உருவாக்குவார்கள்.
இப்போதுதான்
நாம் மேலே வைத்துள்ள தலைப்பிற்கு வருகிறோம்.
காலத்தை
சுருக்குதல்,காலத்தை விரிவுபடுத்துதல்.
பிரம்மம்
என்பது காலம் முற்றிலும் ஒடுங்கிய நிலையில் இருப்பது.
பிரபஞ்சம்
என்பது காலம் விரிவடைந்த நிலையில், முழுவதும் இங்கும் நிலையில் இருப்பது.
..
இந்த
உலகத்தில் பெரும் துன்பங்கள் வரும்போது அங்கே மகான்கள் தோன்றுவார்கள்.
அவர்கள்
தன்னை பிரம்மத்தில் ஐக்கியப்படுத்திக்கொள்வார்கள். அவர்களைப்பொறுத்தவரை காலத்தை கடந்துவிடுவார்கள்.
அதேநேரம்
அந்த மகான்கள் பிரபஞ்சத்தோடு பந்தப்பட்டவர்களாகவும் ,மக்களின் நலன்மீது அக்கரைகொண்டவர்களாகவும்
இருப்பார்கள். இந்த உலகத்திற்கு தான் செய்ய வேண்டிய கடமை உண்டு என்பதை உணர்ந்தவர்களாக
இருப்பார்கள்.
இதனால்
அந்த மகான்கள் பிரம்மத்தின் தங்களை ஒன்றுபடுத்தும் வேளையில் இந்த பிரபஞ்சமும் பிரம்மத்தை
நோக்கி இழுக்கப்படும்.
பிரபஞ்சம்
காலத்தைக் கடந்து காலமற்ற நிலைக்கு இழுக்கப்படும்.
ஒரு
அணுவை இயங்காமல் நிறுத்தினால் அது இன்னொரு அணுவை இயங்காமல் நிறுத்த முயற்சிக்கும்.,அது
இன்னொறு அணுவை நிறுத்த முயற்சிக்கும் இப்படி ஒரு தொடர் சங்கிலிபோல இது இயங்கிக்கொண்டே
இருக்கும்.
ஆனால்
உண்மையில் ஒரு அணுவை விஞ்ஞானிகள் நிறுத்த முடியாது.
..
இங்கே
மகான் என்ன செய்கிறார்? தனது உடலில் இயக்கத்தை நிறுத்துகிறார்.மனத்தின் இயக்கத்தை நிறுத்துகிறார்.
உடலின்
இயக்கம் நின்றவுடன் அந்த உடலோடு தொடர்புடைய முழுபிரபஞ்சமும் அவரை நோக்கி இழுக்கப்படுகிறது.
அதாவது ஒரு சங்கிலியை மேலே தூக்கினால் அதனோடு இணைக்கப்பட்டுள்ள அத்தனை சங்கிலிகளும்
மேலே வரும்.
இந்த
பிரபஞ்சம் என்பது, தூல பிரபஞ்சம், சூட்சும பிரபஞ்சம், காரண பிரபஞ்சம் என்று மூன்றாக
இருக்கிறது.
கண்ணால்
காணும் அனைத்தும் தூலபிரபஞ்சம். மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம் போன்றவை சூட்சும பிரபஞ்சம்.
உயிர்
காரணபிரபஞ்சம்.அடிப்படையில் இரண்டு உயிர் உள்ளது. ஒன்று ஆண்,இன்னொன்று பெண்.முதலில்
இரண்டும் ஒன்றாக இருந்தது பின்பு அது இரண்டாக பிரிந்தது,அப்போது சூட்சும பிரபஞ்சம்
உருவானது. அதன் பிறகு தூல பிரபஞ்சம் உருவானது.
..
மகான்
தூலபிரபஞ்சத்தை விட்டு சூட்சுமபிரபஞ்சத்திற்குள் நுளைகிறார். அதன்பிறகு சூட்சும பிரபஞ்சத்தைவிட்டு
காரணபிரபஞ்சத்திற்குள் நுளைகிறார். தான் ஒருபாதி ஆணாகவும் ஒருபாதி பெண்ணாகவும் இருப்பதைக்
காண்கிறார். இரண்டு பாதியும் ஒன்றாகும்போது முழுமையடைகிறது. அப்போது காலம் நின்றுவிடுகிறது.
இப்படி
அவரைப்பொறுத்தவரை காலம் நிற்கிறது. அந்த வேளையில் அவரோடு தொடர்புடைய சூட்சும பிரபஞ்சம்
வேகமாக பிரம்மத்தால் உள்இழுக்கப்படுகிறது. அது விரைவாக தனது இயக்கத்தை வேகப்படுத்துகிறது.பிரம்மத்திற்குள்
நுளைவதற்காக வேகமாக செல்கிறது. ஒவ்வொருவரின் மனமும் மஹத் என்ற பிரபபஞ்ச மனத்தின் ஒருபகுதிதான்.
அனைத்து மனங்களும் பிரபஞ்சமனத்தில் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது.
.
மகான்
பிரபஞ்ச மனத்தை(மஹத்) பிரம்மத்தை நோக்கி இழுக்கிறார். இதனால் காலம் விரைவாக்கப்படுகிறது.
காலம்
விரைவாக்கப்படும்போது, ஒரு வருடத்தில் நிகழவேண்டி நிகழ்வுகள் ஒரே நாளில் நிகழத்தொடங்கும்.
நூறு
வருடங்களில் நிகழவேண்டிவை ஒரே நாளில் நிகழும். அனைத்தும் வேகமாக நிகழும்.
மனிதனின்
மனம் சூட்சும பிரபஞ்சத்தோடு தொடர்புடையது.
மனிதர்களின்
துன்பங்கள் அதிகமாகும். நூறு வருடங்களில் அனுபவிக்க வேண்டிய துன்பத்தை ஒரே வருடத்தில்
அனுபவிக்க வேண்டியிருக்கும். பல பிறவிகளில் அனுபவிக்க வேண்டிய துன்பத்தை ஒரே பிறவியில்
அனுபவிக்க வேண்டியிருக்கும்.
..
அதேபோல
தூல பிரபஞ்சத்திலும் மாற்றம் ஏற்படும். நூறு வருடத்தில் நிகழவேண்டிய இயற்கை மாற்றங்கள்
ஒரே வருடத்தில் நிகழ ஆரம்பிக்கும். நூறு வருடத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே வருடத்தில்
பெய்யும். இயற்கை சீற்றங்கள் அதிகமாகும். இவையெல்லாம் காலம் வேகமாக இயங்குவதைக் காட்டுகிறது.
இதனால்
எல்லோருமே பாதிக்கப்படுபார்கள்.
அத்தோடு
அதர்மம் செய்பவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்ய காலமும் விரைவாகும். நூறு வருடங்கள்
கழித்து தண்டனைபெறவேண்ய அதர்மிகள் ஒரே வருடத்தில் தண்டிக்கப்படுவார்கள்.
இவ்வாறு
அதர்மம் ஓரளவுக்கு அழிந்த பிறகு மகான்கள் இந்த உலகைவிட்டு மறைந்துவிடுவார்கள்.
அதன்
பிறகு காலம் மெதுவாக சுற்ற ஆரம்பிக்கும்.
..
இந்த
கட்டுரையின் சுருக்கம் என்னவென்றால் காலத்தை விரைவுபடுத்துவதும்,காலத்தை மெதுவாக்குவதும்
அல்லது விரிப்பதும் எப்படி என்பதை கொஞ்சம் பார்த்தோம்.
காலம்
என்ற தலைப்பில் மிகப்பெரிய தத்துவ கருத்துக்கள் அடங்கியிருக்கின்றன.அவைகளை ஒரே கட்டுரையில்
முடிக்க முடியாது.
..
இதில்
உள்ள சில கருத்துக்கள் தத்துவம் படிக்காதவர்களக்கு புரியாமல் இருக்கலாம்.
உங்கள்
கேள்விகளை +919360209541 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பவும்
சுவாமி வித்யானந்தர்-கன்னியாகுமரி(10-5-2025)
No comments:
Post a Comment