பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் பற்றிய இந்த நேரத்தில் இந்த பதிவை இடுகிறேன்
..
இந்த இக்கட்டான நேரத்தில் பாகிஸ்தானுடன் போருக்கு செல்லவேண்டும் என்ற கருத்தை பலர் தெரிவிக்கிறார்கள்.
இது பற்றிய நமது முன்னோர்களின் கருத்தை சிறிது பார்ப்போம்.
ஆயுர்வேதம் பற்றிய அறிவியல் என்னவென்றால்.
நோய்கிருமி நம் உடம்பில் தாக்கினால் அதை எப்படி அழிக்க வேண்டும்?
1.நமது உடலை நோய்எதிர்ப்பு சக்தியுள்ளதாக மாற்ற வேண்டும்.அதாவது வலுவுள்ளதாக மாற்ற வேண்டும்.
2.நமது உடலுக்குள் நோய்கிருமிகளை அனுமதிக்கும் கிருமிகளை அழிக்க வேண்டும்.
..
இதுதான் இப்போதைய சூழ்நிலையிலும் செய்யப்படவேண்டும்.
1.நமது நாட்டை மேலும் வலுவுள்ளதாக மாற்ற வேண்டும்.படை பலத்தை அதிகரிக்க வேண்டும்.
2.தீவிரவாதிகளை அனுமதிப்பவர்களை அழிக்கவேண்டும். வீடுதோறும் தேடுதல் வேட்டை நடத்த வேண்டும்.
..
இதைவிட்டு விட்டு எதிரி நாட்டுடன் சண்டைக்கு சென்றால் நமது நாட்டில் தீவிரவாதத்திற்கு ஆதரவாக உள்ளவர்களின் கை ஓங்கிவிடும். நமது நாடு பலவீனமடையும். பிறகு அப்பாவிகள் உயிரைவிட வேண்டியதுதான்.
வெளியில் உள்ள தீவிரவாதிகளை உள்நாட்டில் உள்ள தீவிரவாதிகள் ஆபத்தானவர்கள்.
..
பெரும்பாலான நாடுகள் இந்த உண்மையை அறிவதில்லை.
உடனடியாக எதிரிநாட்டுடன் சண்டையிடுகின்றன.அதன் விளைவாக தாங்களும் அழிந்துபோகிறார்கள்
இந்திய வரலாறு முழுவதும் இதையே காண்கிறோம்.
..
சுவாமி வித்தியானந்தா 24-4-2025
No comments:
Post a Comment