ஆவி உலகம்-தொடர்-பாகம்-1 .. மனிதர்களுக்கும் ஆவிகளுக்கும் உள்ள வேறுபாடு
என்ன? ஆவிகளுக்கும் தெய்வங்களுக்கும் உள்ள வேறுபாடு
என்ன? தெய்வங்களைப்பற்றி இப்போது பார்க்கப்போவதில்லை.அது
உயர்வானது.அது ஆன்மீகம். இப்போது பார்ப்பது தாழ்ந்தது. .. ஒரு மனிதனை எடுத்துக்கொண்டால் அவன் பல உடல்களால்
ஆக்கப்பட்டிருக்கிறான் பஞ்ச பூதங்களால் ஆன தூலசரீரம். இது திடம்,திரவம்,வாயு,அக்னி,ஆகாசம்
என்ற பஞ்ச பூதங்களால் ஆனது. இந்த உலகத்தில் நாம் காணும் எல்லாமே இதேபோல
பஞ்ச பூதங்களால் ஆனதுதான். இந்த பஞ்சபூதத்திற்கு தூல பூதம் என்று பெயர்.கண்களால்
காணக்கூடியது. .. இந்த பஞ்சபூதங்கள் சூட்சுநிலையிலும் உள்ளன.இதே
திடம்,திரவம்,வாயு,அக்னி,ஆகாசம் இவைகள் கண்ணுக்குத் தெரியாமல் சூட்சுமமாகவும் உள்ளது.
இதனால் இதற்கு சூட்சும பஞ்ச பூதங்கள் என்று பெயர். .. தூலம்,சூட்சுமம் என்ற இரண்டு வார்த்தைகள்
அடிக்கடி பயன்படுத்தப்படும் என்பதால் இந்த இரண்டு வார்த்தைகளின் பொருள்பற்றி முதலில்
தெரிந்துகொள்ளுங்கள். தூலபிரபஞ்சம்,சூட்சும பிரபஞ்சம். ஒரே பொருள்தான் இரண்டு விதங்களில்
தெரிகிறது. .. மனிதன் காண்பது தூலபிரபஞ்சம். ஆவிகள் காண்பது
சூட்சும பிரபஞ்சம். இதே கல் மண்,மரம் செடி,கொடி,மனிதர்கள்,விலங்குகள்,கட்டிடங்கள்
உட்படி அனைத்தும் நமக்கு தூலமாக தெரிகிறது. ஆவிகளுக்கு அதே பொருட்கள் சூட்சுமமாக
தெரிகின்றன. .. தூல பொருட்களை நம்மால் காண முடியும். ஆனால்
ஆவிகளால் அவற்றைக் காண முடியாது. சூட்சும பொருட்களை நம்மால் காண முடியாது.ஆனால்
ஆவிகளால் காண முடியும். நமக்கு இந்த உலகம் எப்படி தெரிகிறதோ அதேபோல
ஆவிகளுக்கு இந்த உலகம் தெரியாது. அது சற்று வேறுவிதமாக தெரியும். .. சூடு,குளிர் இந்த இரண்டும் நமது உடலை பாதிக்கிறது.
ஆவி உடலை அவைகள் பாதிக்காது.அவைகளால் அவற்றை உணர முடியாது. அப்படியானால் எது அவர்களை
பாதிக்கும். ஒளி,இருள் இந்த இரண்டும். ஒளியை ஆவிகளால் தாங்கிக்கொள்ள இயலாது. எனவே
இருள் சூழ்ந்த இடங்களையே அவை தேர்ந்தெடுக்கும். .. மனிதனின் உடல் ஒரு வடிவம் கொண்டது. ஆவிகளின் உடல் எப்படிப்பட்ட வடிவம் கொண்டது. ஒருமுறை மனிதர்களின் முற்பிறவிகளை அறிந்துசொல்லும்
பெண்மருத்துவர் ஒருவர் ஒரு நடிகையின் முற்பிறவிகளைப்பற்றி கேட்டுக்கொண்டே வந்தால்
அப்போது ஒரு பிறவியில் அந்த பெண் கூறுகிறாள். இதோ நான் பிறந்த வீட்டைப் பார்க்கிறேன்,
தெருவைப் பார்க்கிறேன், கோவில் கோபுரத்தை பார்க்கிறேன். அப்போது இடை மறித்து அந்த ஆவிமருத்துவர்
சரி உன்னைப்பார் உனது உடல் எப்படி இருக்கிறது. நீ ஆணா பெண்ணா? என்று கேட்கிறாள். அப்போது அந்த பெண் அழுதுகொண்டே கூறுகிறான்.
எனது உடலை பார்க்க முடியவில்லை. எனக்கு உடல் இல்லை என்றாள். அப்போது அந்த மருத்துவர்
அழாதே நீ ஆவி உடலில் இருக்கிறாய் என்று கூறுகிறார். .. ஆவிகளுக்கு ஒரு உருவம் கிடையாது. காற்றிற்கு
எப்படி சரியான உருவம் இல்லையோ அதேபோல ஆவிகளுக்கும் சரியான உருவம் இல்லை. பழைய கால
படங்களில் புகைபோன்ற வெள்ளைநிற தலையும் சிறியதாக வாலும் இருப்பதை பார்த்திருக்கிறோம்.
ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு செல்லும்போது பார்ப்பதற்கு இதேபோலவே தெரியும். .. நான் ஆவியை நேராக பார்த்ததில்லை. ஆனால் பத்துவருடங்களுக்கு
முன்பு ஒருவருடன் பேரும் வாய்ப்பு கிடைத்தது.அவர் கல்லூரியில் படிக்கும் காலத்தில்
பில்லி,சூன்யம் வைக்கும் நபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.அவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை
சேர்ந்வர். அங்கு இறந்தவர்களை புதைப்பது
வழக்கம். அந்த கிராமத்திற்கென்று ஒரு பொது இடம் உள்ளது.புதைத்த இடத்தில் ஒரு மரத்தை
நட்டுவைப்பார்கள். இரவில் அந்த பகுதிகளுக்குள் யாரும் செல்ல மாட்டார்கள். பில்லி
சூன்யம் செய்பவர்கள் இந்த இடங்களில் இரவில் உலவுவார்கள். .. இந்த மாணவனும் இன்னும் சில மாணவர்களும் சேர்ந்து
பேயை காணவேண்டும் என்று மந்திரவாதியிடம் கூறியிருக்கிறார். அவர் இரவில் வா நான் காட்டுகிறேன்
என்றார். ஆனால் அவர்கள் பகவில் காட்டுங்கள் என்று பிடிவாதம் பிடித்தார்கள். சரி மதியம்
12 மணிக்கு வாருங்கள். ஆனால் புதைகாட்டிற்கு வெளியில்தான் நிற்க வேண்டும். உன்ளே
வரக்கூடாது. அதுமட்டுமல்ல.எது நடந்தாலும் யாரும் பயந்து அந்த இடத்தைவிட்டு ஓடிவிடக்கூடாது.
சிறிது நேரம் அப்படியே நிற்க வேண்டும். பகல் நேரத்தில் ஆவிகள் வெளியே வராது. அப்படி
வந்தால் கடும்கோபத்துடன் வெளியே வரும் எனவே கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரித்தான்.
அதன்படி எல்லோரும் மதியம் 12 மணிக்கு அங்கே சென்றார்கள். அவர்களைத்தவிர அந்த பகுதியில்
வேறு யாரும் இல்லை. . மந்திரவாதி ஒரு கோழி,தேங்காய்,பழம்,உடுக்கை
போன்ற சில பொருட்களுடன் உள்ளே சென்றார். ஒரு மரத்தின் அடியில் சென்று சிறிது நேரம்
உட்கார்ந்து கோழியை பலியிட்டு இரத்தத்தை மரத்தின் வேரில் ஊற்றி லேசாக உடுக்கையை அடித்தார்
. .. அப்பபோது வெளியில் நின்றுகொண்டிருந்தவர்கள்.ஒவ்வொரு
மரத்தின் அடியிலிருந்தும் கோபத்துடன் ஆவிகள் வெளியே வந்ததை பார்த்தார்கள்.வெள்ளை
தலையும் சிறிய வாலும் ஒடைய உருவங்கள் ஒள்ளிருந்து பறந்து வந்தன. அதைக்கண்ட அவர்கள் அலறி அடித்துக்கொண்டு
ஒரே ஓட்டமாக வீட்டிற்கே ஓடிவிட்டார்கள்.இன்னும் கொஞ்சநேரம் நின்றிருந்தால் அதிர்ச்சியில்
இறந்தேபோயிருப்போம் என்று அதை பார்த்தவர் கூறினார். .. அந்த மந்திரவாதி பயப்படவில்லை.அடுத்தநாள்
இவர்களைப்பார்த்து கடும்கோபத்தில் திட்டியிருக்கிறார். நீங்கள் பயப்படக்கூடாது என்று நான் கூறியதை
அலட்சியம் செய்துவிட்டீர்கள்.உங்களால் நான் சாகவேண்டியது. நான் சற்று கவனக்குறைவாக
இருந்திருந்தால் என்னை அடித்தே கொன்றிருக்கும் என்றாராம். .. இப்படி பலபேர் பல கதைகளை வைத்திருப்பார்கள்.
எல்லா ஆவிகளும் இதேபோல்தான் இருக்குமா என்றால் இல்லை. பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் தனது சீடர்களுடன்
ஒரு ஊருக்கு சென்றார்.இரவு நேரமாகிவிட்டதால் அங்கிருந்த ஒரு வீட்டில் இரவு தங்குவதற்கு
ஏற்பாடு செய்தார்கள். முதலில் உள்ளே சென்ற ஸ்ரீராமகிருஷ்ணர் வேகமாக வெளியே வந்துவிட்டார்.இங்கு
தங்க வேண்டாம் வேறு இடத்திற்கு போகலாம் என்று கூறி வேறு இடத்திற்கு சென்றுவிட்டார்கள்.
மறுநா்ள் காலையில் சீடர்கள் ஏன் அந்த இடம் வேண்டாம் என்றீர்கள் என்று கேட்டார்கள். அவர் கூறினார் நான் உள்ளே சென்ற போது அருவருப்பான
உடலில் கால்கள் இல்லாமல் இரண்டு பேய்கள் நின்று கொண்டிருந்தன். அவைகள் என்னைப்பார்த்து
நாங்கள் பாவிகள்.நீங்கள் புண்ணிய ஆத்மா.இது நாங்கள் வசிக்கும் இடம். உங்கள் உடலிலிருந்து
எழும் ஒளி எங்களை வேதனைப்படுத்துகிறது.கடும் வேதனையை நாங்கள் உணர்கிறோம்.தயவுசெய்து
இங்கிருந்து சென்றுவிடுங்கள் என்று கெஞ்சி கேட்டுக்கொண்டன.அதனால்தான் இரவில் அங்கே
தங்கவில்லை என்றார். இதைக்கேட்ட சீடர்கள். இரவில் இதை எங்களிடம்
சொல்லியிருந்தால் நாங்கள் பயத்தில் அலறியிருப்போம் என்றார்கள். .. இங்கே ஸ்ரீராமகிருஷ்ணர் முன்பு பார்த்துபோன்ற
உடலைப்பார்க்கவில்லை. மிகவும் கோரமன முகம், தொங்கிய சதைகள் கொட்ட உடல்,கால்கள் இல்லை.அருகில்
உள்ள கசாப்புகடைகளில் உள்ள மாமிசத்தை முகர்த்து அதிலிருந்து வெளிப்படும் வாடையை ருசித்து
வாழ்ந்து வந்துள்ளது. . |
ஆவி உலகம்-தொடர்-பாகம்-2 .. ஒருவர் இறக்கும் சமயம் என்னவாகிறது? .. ஒருவர் தூக்க
மாத்திரைகளை அதிகம் சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்று வைத்துக்கொள்வோம். அப்போது என்ன நடக்கிறது?அவர் நிம்மதியாக இறந்துவிட்டார் என்று சிலர் கூறுவார்கள்.அது தவறு. தூக்கமாத்திரை சாப்பிட்டவுடன் நன்றாக தூக்கம் வந்துவிடும்.அதன்பிறகு மனம் கனவுகாண ஆரம்பிக்கும்.வேதனையான கனவுகள் வந்துகொண்டே இருக்கும்.அப்போது அந்த கனவிலிருந்து விழிப்பதற்காக மனத்தின் இன்னொரு பகுதி முயற்சிசெய்யும்.கை கால்களை அசைப்பதற்கு முயற்சி செய்யும்.ஆனால் முடியாது. உடலை எழுப்புவதற்கு முயற்சி செய்யும் ஆனால் முடியாது.இந்த முயற்சி கடுமையான நரகவேதனையைக் கொடுக்கும். மனம் பதபதைக்கும். ஒருபக்கம் கொடுமையான கனவு வந்துகொண்டே இருக்கும், இன்னொரு பக்கம் மனம் உடலை எழுப்ப முயற்சி செய்யும். ஒவ்வொரு நொடியும் ஒருவருட வேதனையை ஒரேநேரத்தில் வந்திப்பதுபோல இருக்கும். உடலின்மேல் பெரிய பாரத்தை வைத்து யாரோ அழுத்துவதுபோல இருக்கும். .. மனம் பதபதைத்துக்கொண்டிருந்தாலும் மூளை தூக்கமாத்திரை காரணமாக தூக்கத்தில் இருந்துகொண்டிருக்கும். உடலை எழுப்புவதற்காக கட்டளைகள் அங்கிருந்து வராது. கை கால்களை அசைப்பதற்கான கட்டளைகளை மூளையால் இட முடியாது. .. இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் மூளை செயல்படாமல் நின்றால்கூட மனம் இயங்கிக்கொண்டே இருக்கிறது. மனத்தில் பல கனவுகள் வந்துகொண்டே இருக்கிறது என்பதுதான். ஒருவர் கேட்ட கேள்விக்கான பதில் இதுதான். இறந்த பிறகு மூளையும் இறந்துவிடுமே அப்போது மனம் எப்படி இயங்கும்? இதற்கான பதில் மேலே உள்ள சம்பவத்தில் விளக்கியிருக்கிறேன். .. நாம் காணும் உடல் தூலமானது.இதேபோல இன்னொரு உடல் உள்ளது.அது சூட்சுமமானது. தூலமான மூளை இருப்பதுபோல சூட்சுமமான மூளையும் உள்ளது. .. மேலே உள்ள சம்பவத்தை தொடர்வோம். இப்போது தூக்கமாத்திரையின் வீர்யத்தின் காரணமாக மூளையிலிருந்து உடலுக்கு வரவேண்டிய கட்டளைகள் வராமல் போவதால் மூசு்சு படிப்படியாக நிற்க ஆரம்பிக்கும்.அதைத்தொடர்ந்து ரத்த ஓட்டம் நிற்க ஆரம்பிக்கும், இதயம் நின்றுவிடும். உள் உறுப்புகள் செயல்படாமல் நின்றுவிடும். மூளை கட்டளை இட்டால்தான் உடலின் உறுப்புகள் இயங்க ஆரம்பிக்கும் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும் .. நான் ஆன்மீக பயிற்சிகளில் தீவிரமாக இருந்த காலத்தில் ஒருநாள் ஆத்மாவின் தரிசம் கிடைத்தது.அப்போது உடல் எல்லையைக் கடந்து எல்லையற்ற நிலையை அடைந்ததை உணர்ந்தேன்.குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணரின் அருளால் அவரது கோவில் இது நடந்தது.அதன் பிறகு சாதாரண நிலைக்கு வந்துவிட்டேன். ஆனால் மனத்தில் எண்ணங்கள் எதுவுமே எழாத ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது. மனத்தில் எந்த எண்ணங்களும் எழாததால் மூச்சு நிற்க ஆரம்பித்து விட்டது. மூச்சு நின்றதால் இதயம் நிற்க தொடங்கியது. .. உடனே நான் மூச்சுக்காக சிறிது தூரம் நடப்பேன். எதையாவது சிந்திக்கவேண்டுமே என்று எதையாவது சிந்திப்பேன் சிறிது நேரத்தில் மூச்சு வந்துவிடும். கொஞ்சேரம் கழிந்ததும் மீண்டும் மனத்தில் எந்த சிந்தனையும் இல்லாமல் நின்றுவிடும். மறுபடியும் மூச்சு நின்றுவிடும். காலை மாலை இரவு என்று மூச்சுக்காக நான் தவித்த காலம் அது. எதிர்கால திட்டம் எதுவும் இல்லாமல் வாழ்ந்த நாட்கள் அவை. இப்படியே சென்றால் உடலை காப்பாற்ற முடியாது என்பது புரிந்தது. எனவே எதிர்கால திட்டம் ஒன்று தேவை என்பதை உணர்ந்தேன். குருதேவரின் கருத்துக்களையும் விவேகானந்தரின் கருத்துக்களையும் மக்களிடையே பரப்புவேன் என்று குருதேவர் முன் சங்கல்பம் செய்துகொண்டேன். அதற்கான திட்டங்களைப்பற்றி மனத்தில் யோசிக்க ஆரம்பித்தேன். அதன் பிறகு மூச்சு சீராகியது. மனத்தில் எண்ணங்கள் வரத்தொடங்கியது. .. இதிலிருந்து நான் புரிந்துகொண்டது என்னவென்றால் சிந்தனை நின்றுவிட்டால் மூளை செயல்படுவதை நிறுத்திவிடும். மூளை செயல்படுவதை நிறுத்திவிட்டால் இரத்த ஓட்டம் நின்றுவிடும். இதயம் நின்றுவிடும். உடல் உறுப்புள் செயல்படாமல் நின்றுவிடும். அனைத்து கட்டளைகளும் மூளையிலிருந்தே வருக்கின்றன. .. இப்போது ஏற்கனவே கூறிய சம்பவத்திற்கு வருவோம். தூக்க மாத்திரைகளை அதிகம் சாப்பிட்டவரின் மூளை செயல்படவில்லை. எனக்கு என்ன அனுபவம் ஏற்பட்டது. மூளை நின்றாலும் நான் சாகவில்லை. எனது உணர்வு சாகவில்லை. என்பதை கூறினேன். அதேபோல தூக்கமாத்திரை சாப்பிட்டவரின் மூளை நின்றுவிட்டாலும் அவர் சாகவில்லை. அவரது உணர்வு சாகவில்லை. எனது அனுபவத்தில் நான் மனத்தின் எண்ணங்களை நிறுத்திவிட்டடேன்.அதனால் மனம் அமைதியாக இருந்தது. ஆனால் தூக்க மாத்திரை சாப்பிட்டவர் எத்தனைனோ கவலைகள் காரமாக மனவேதனையில் தவித்து வந்துள்ளான். எனவே மனம் அவருக்கு மிகவேகமாக இயங்கிக்கொண்டெ இருக்கும். மனத்தில் பற்பல சிநதனைகள் எழுந்துகொண்டே இருக்கும். .. ஏற்கனவே அவர் கனவுலகில் சஞ்சரித்துக்கொண்டிருப்பதால் அந்த கனவுகளிலிருந்து வெளியே வரவே முடியாது. மனத்தின் ஒரு பகுதி உடலை எழுப்ப முயற்சி செய்துகொண்டே இருக்கும்.மனத்தின் ஒரு பகுதி பல வேதனையான கனவுகளை கண்டுகொண்டெ இருக்கும். இது ஒரு தொடர்ந்துகொண்டே இருக்கும். .. சரி உடல் இறந்துவிட்டது.அதற்கான இறுதி சடங்குகள் செய்ய துவங்கிவிட்டார்கள்.உறவினர்கள் சுற்றி அமர்ந்து அழுதுகொண்டிருக்கிறார்கள். இப்போது அந்த மனிதரின் நிலை எப்படி இருக்கும்?.இப்போதும் அவர் அதே கனவுலகிலேதான் சஞ்சரித்துக்கொண்டிருப்பார். இங்கு நடக்கும் சம்பவங்கள் எதுமே அவருக்கு தெரியாது. அவர் உடலை தொடர்ந்து எழுப்ப முயற்சிப்பதும் அது முடியாமல் மனவேதனை அடைவதும்,கனவில் நிகழும் சம்பவங்களைக்கண்டு கடும் வேதனை அடைவதும் இப்படியே நடக்கும். .. உடலை மயானத்திற்கு கொண்டுசென்று எரித்துவிட்டார்கள் என்று வைத்துக்கொள்வோம்.அப்போது? அப்போதும் அந்த நபர் அதை உணரமாட்டார். கனவுலகிலிருந்து அவரால் வெளியே வரவே முடியாது. எத்தனை நாட்கள் இது தொடரும்? அனைத்திற்கும் ஒரு முடிவு உண்டு. அந்த மனிதரின் பாவ சம்ஸ்காரங்கள் ஓரளவு முடியும்வரை இது தொடர்ந்துகொண்டே இருக்கும். சம்ஸ்காரம் என்றால் பல பிறவியில் சேர்த்து வைத்துள்ள புண்ணியபாவ பலன்கள். தீய சம்ஸ்காரம் அதிகம் இருப்பவர் அதிக நாட்கள் இதேபோல கனவிலேயே நீடிப்பார். .. அவர்களைப் பொறுத்தவரை ஒருமணிநேர வேதனை என்பது உதாரணமாக
நாம் மனித உடலில் ஒரு மாதம் அனுபவிக்கும் வேதனைக்கு ஈடாக இருக்கும்.அவர்கள் சிலமாதம் அனுபவிக்கும் வேதனை என்பது மனிதன் பல பிறவிகளில் அனுபவிக்கும் வேதனைக்கு ஈடாக இருக்கும். எனவே சில நாட்களிலேயே ஓரளவு பாவ சம்ஸ்காரம் முடிந்த பிறகு அந்த கனவுகள் குறைந்து மனம் விழிப்பு ஏற்பட்டுவிடும். தான் இறந்துவிட்டோம் என்பது அவர்களுக்கு புரிய ஆரம்பிக்கும். அதன் பிறகு எங்கு இறந்தார்களோ அந்த இடத்திலேயே சுற்றிக்கொண்டிருப்பார்கள். .. வேதனை மிகுந்த, ஏக்கம் நிறைந்த,இருள் படிந்த ஓர் உடலில் அவர்கள் அலைவார்கள்.அதன்பிறகு தனக்கு அன்பானவர் யார்? அவரை உண்மையிலேயே நேசித்தது யார்? அவர்களைப்பற்றிய எண்ணங்கள் வரத்தொடங்கும். அவர்கள் இருக்கும் இடம் எது? அதைத்தேடும். .. ஆனால் ஆவிகளுக்கு பல நெருக்கடிகள் உள்ளன. அவர்களால் சில இடங்களுக்கு செல்ல முடியாது. பல ஆவிகளின் தொடந்தரவை சந்திக்க வேண்டியிருக்கும். பலர் இந்த ஆவிகளை அடிமைப்படுத்த நினைப்பார்கள். இதுபற்றி இனி வரும்பதிவுகளில் பார்க்கலாம்... .. |
ஆவி உலகம்-தொடர்-பாகம்-3 .. ஆவிகள் சாபம் கொடுக்குமா,ஆசீர்வாதம் கொடுக்குமா?
இந்த உலகத்திலே சுற்றுமா, உடலை எரித்தால் ஆவிகள் வராது என்பது உண்மையா? அகால மரணத்தில்
இறப்பவர்கள்தான் ஆவிகளாக வருவார்களா? சிலர் ஒரு வருடம் நம்மைசுற்றி வாழ்வார்கள் பிறகு
நம்மை விட்டு வெளியேறி விடுவார்களா? இறைநாமத்தை சொல்லிக்கொண்டே இரவில் செல்பர்களை
ஆவிகள் தொந்தரவு செய்யுமா? சும்மா இருப்பவர்களை ஆவிகள் தொந்தரவு செய்யுமா? .. இப்படி பல கேள்விகள். இதுபோன்று இன்னும் பல கேள்விகளை உங்களிடமிருந்து
எதிர்பார்க்கிறேன். கேள்விகள் பிறக்க பிறக்க அதற்கான தேடல்கள்
உருவாகும். .. எண்பது வயதான ஒருவர் இறக்கும் தருவாயில்
என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம். இரண்டு நபர்களை உதாரணமாக எடுத்துக்கொள்வோம். ஒருவர் எப்போதும் இறைசிந்தனையுடனே வாழக்கூடிய
ஆன்மீக மனிதர். இன்னொருவர் எப்போதும் உலகியல் சிந்தனையுடன்
வாழக்கூடிய சாதாரண மனிதர் இரண்டுபேருக்கும் என்ன நடக்கும் என்பதை தனித்தனியாக
பார்ப்போம். .. முதலில் உலகியல் மனிதன். உலகியல் மனிதனின் கடைசி காலம் கண்டிப்பாக
மிக மோசமாக இருக்கும். பல்வேறு நோய்கள் வந்து தாக்கும். உதவினர்கள்
அவரை கவனிக்க மாட்டார்கள். பல மாதங்கள் அல்லது பல வருடங்கள் நடக்க முடியாமல்
ஒரே இடத்திலேயே வாழும்படியான சூழ்நிலை இருக்கும். ஆறுதல் கூறுவதற்கு ஆள் இருக்காது.இதுவரை
யாருக்காக வாழ்ந்தாரோ அந்த மகன்,மகள்,உறவினர்கள் பக்கத்தில் வரக்கூட மாட்டார்கள். இவரது உயிர் எப்போதுபோகும் நாம் எப்போது
நிம்மதியாக இருக்கலாம் என்று நினைப்பார்கள். அதனால் அவர் இருமும்போது, கட்டிலிலே சிறுநீர்
கழிக்கும்போதோ எரிச்சல் அடைந்து ஏசுவார்கள். வாழ்வதைவிட சாவது எவ்வளவோ மேல் என்று அந்த
வயதானவருக்குக்கு தோன்றும் ஆனால் உயிர்போகாது. .. மனத்தில் பழைய காலத்தில் வாழ்ந்த வாழ்க்கை
நினைவுகள் வந்துகொண்டே இருக்கும். இதிலும் சான் மகனுக்காக எப்படியெல்லாம் கஷ்டப்பட்டேன்
மகளுக்காக எப்படி கஷ்டப்பட்டேன் இப்போது என்னை திட்டுகிறார்களே என்ற நினைவுகள்வரும்.
மனவேதனையில் அவர்கள் அழக்கூட செய்வார்கள். ஆனால் என்ன செய்ய முடியும்? ஒவ்வொரு நொடியும் நோயில் வேதனைகளும், அன்பில்லாதவர்களின்
அலட்சியத்தால் வரும் வேதனைகளும் மனத்தை வாட்டி எடுக்கும். அடிக்கடி ஏக்க பெருமூச்சுவிடுவார்கள். .. ஒவ்வொரு நாளும் ஒரு யுகம்போல் கழியும்.இறைவனின்
நாமத்தை எப்போதும் ஜபிக்கும் அளவுக்கு மனதில் தெம்பு இருக்காது. உடல் நோய்கள் காரணமாகவும்
வயது முதிர்வு காரணமாகவும் மனம் தளர்வாக இருக்கும்.அதனால் இறைசிந்தனையை வலுக்கட்டாயமக
கொண்டுவர முடியாது. எவ்வளவுதான் முயற்சிசெய்தாலும் மனம் கட்டுக்குள்
இருக்காது. தானாகவே பழைய சிந்தனைகளில் மூழ்கிப்போதும். மனம் பல்வேறு சிந்தனைகளில் தானாக செல்லும்போது
அதன்போக்கிலே அவர்கள் செல்வார்கள்.அதனால் வேதனை மட்டுமே மிஞ்சும். கண்ணைத் திறந்தால் உறவினர்களின் முகத்தை
பார்ப்பதால் வரும் எரிச்சல்.கண்களை மூடினால் பழைய காலத்து சிந்தனைகளால் வேதனை.நீங்கள்
நல்லா இருக்க மாட்டீர்கள் நாசமாக போவீர்கள் என்று அவரது வாயிலிருந்து சாபம் வந்துகொண்டே
இருக்கும். ஆனால் அது வெளியே கேட்காது. ஒருவேளை அதை அவர்கள் கேட்டுவிட்டால் சாப்பாடுகூட
தரமாட்டார்கள் என்ற பயம்தான் காரணம். ஆனாலும் மனதிற்குள் தொடர்நு சாபமிட்டுக்கொண்டே
இருப்பார்கள். வாழ்வின் கடைசி காலத்தில் மனமறிந்து கொடுக்கும்
சாபம் பலிக்கும். இவர் இவரது பெற்றோர்களை இப்படித்தான் தவிக்க விட்டிருப்பார்.அவர்கள்
கொடுத்த சாபம் இவரைப் பிடித்திருக்கிறது.இப்போது இவர் கொடுக்கும் சாபம் இவரது பிள்ளைகளை
பிடிக்கப்போகிறது. .. இதுதான் கடைசி காலத்தில் உலகியல் மனிதன்
அனுபவிக்கும் நரகவேதனை. இவ்வளவு வேதனைகளை அவர் அனுபவித்தாலும்.அவரை
சுற்றியிருப்பவர்களால் இதை ஒருசிறிதும் உணர முடியாது. அவரது வலியை புரிந்துகொள்ள யாருமே இருக்க
மாட்டார்கள். அவரிடம் அன்பாக பேச யாருமே இருக்க மாட்டார்கள். .. எப்படியோ ஒருவழியாக கடைசி காலம் வந்துவிட்டது. உயிர் இழுத்துக்கொண்டே இருக்கிறது. உடலைவிட்டு போவதா வேண்டாமா என்று ஊசலாடிக்கொண்டிருக்கிறது. இந்த நாட்களில் சுயநினைவு இருக்காது.அப்படியானால்
மனம் அமைதியாக இருக்கும் என்று அர்த்தமா? அதுதான் இல்லை. மனத்தில் தொடர்ந்து எதேதோ
எண்ணங்கள் வந்துகொண்டே இருக்கும். திரைப்படம் பார்க்கும்போது,அதிவேகத்தில்
அந்த படத்தை ஓட்டினால் எப்படி படங்கள் கணிக்க முடியாத அளவுக்கு வேகமாக செல்லுமோ அதேபோல
மனத்தில் எழும் உருவங்கள் கணிக்க முடியாதபடி வேகவேகமாக வந்துகொண்டிருக்கும். அமைதியான
குளத்தில் தொடர்ந்து கல்லை எறிந்துகொண்டிருந்தால் எப்படி குளம் அதிர்ந்துகொண்டே இருக்குமோ
அதேபோல மனத்தில் பல எண்ணங்கள் ஓடிக்கொண்டெ இருக்கும். மூளைவீங்கி புடைத்துபோயிருக்கும். மூளையில்
அதீதவலி ஏற்படும். .. தன்னை சுற்றி நின்றுகொண்டிருக்கும் உறவினர்களின்
முகம் தெரியாது. தன்னை சுற்றியிருப்பவர்கள் பேசுவது கேட்காது. உடல் உணர்வுகூட நின்றுபோயிருக்கும்.
தானாக சிறுநீர் வழியும். பேதி தானாக போகும்.அதை கட்டுப்படுத்த முடியாது. இப்படியே
உடலிலிருந்து உயிர் வெளியேறும். அப்படி வெளியேறும்போதுகூட அவரது மனம் பல
எணண்ங்களை ஏற்படுத்திக்கொண்டேதான் இருக்கும். நான் இறந்துவிட்டேன். உயிர்போய்விட்டது போன்ற
எண்ணங்களை அவரது மனம் உண்டாக்கும். படிப்படியாக அவர் அந்த வேதனையிலிருந்து சிறிதுசிறிதாக
விலகி இறந்துபோன தனது உடலை பார்ப்பார். நாம் பார்ப்பதுபோல ஆவிகளால் பார்க்க முடியாது. .. இருள்படிந்த மங்கலான உடலையும் உடலைசுற்றியுள்ள
சில இடங்களை மட்டுமே அப்போது பார்க்க முடியும். கூடவே எங்கும் மயான அமைதியும் தன்னந்தனியான
உணர்வும் ஆவியின் மனதில் நிறைந்து ஏக்கமும் வேதனையுமாக இருக்கும். ஆவிகளுக்கும் மனம்
உண்டு என்பதை மறந்துவிடாதீர்கள். அந்த மனம் மயான தனிமையாலும் ஏக்கத்தாலும் இருண்ட
எதிர்காலத்தாலும் நிறைந்திருக்கும். இப்போதுதான் இறைவனைப்பற்றிய சிந்தனை லேசாக
எழும். இறைவா! என்று மனம் கதறும். கதறி அழும். .. உடலை சுற்றியிருக்கும் மனிதர்கள் செய்யும்
கடைசி காரியங்கள் எல்லாம் அந்த ஆவிகளால் பார்க்க முடியும். ஏற்கனவே இறந்துபோன ஆவிகள்
அப்போது அங்கே வந்துவிடும். அவை அவருக்கு ஆறுதலாக நிற்கும். அவரை மீண்டும் எதிர்பார்க்க அந்த வீட்டில்
யாரும் இல்லை. எனவே அந்த ஆவிக்கு அங்கே இடம் இல்லை. அன்பில்லாதவர்கள் வீட்டில் அந்த ஆவி எப்படி
தங்க முடியும். .. எனவே அந்த உடலுக்கு இறுதி காரியங்கள் அனைத்தும்
செய்த பிறகு சிலர் சுடுகாட்டில் கொண்டு சென்று எரித்துவிடுவார்கள்,சிலர் இடுகாட்டில்
சென்று புதைத்துவிடுவார்கள். இந்த நிகழ்வுகள் அனைத்தையும் ஆவி பார்த்துக்கொண்டே இருக்கும். முடிவில் ஏற்கனவே அங்கே கூடியிருக்கும் ஆவிகள்
அவரை அழைத்துக்கொண்டு தாங்கள் இருக்கும் இடத்திற்கு சென்றுவிடும். பெரும்பாலும் அந்த ஆவிகள் கோவிலை சுற்றியுள்ள
இடங்களில் அதிகம் உலவும். மனிதர்களுக்கு எப்படி இறைவன் கடைசி புகலிடமோ அதேபோல ஆவிகளுக்கும்
கடைசி புகலிடம் இறைவன்தான். எனவே மனிதர்களைவிட பல மடங்கு ஆவிகள் இறைசிந்தனையுடன்
வாழும். இறைவனை நினைத்து தொடர்ந்து பிரார்த்தனை செய்யும். இந்த ஆவி வாழ்க்கையிலிருந்து விடுபட்டு நல்ல
வாழ்க்கை வரவேண்டும் என்று கோவிலை சுற்றி வலம் வந்துகொண்டிருக்கும்.இப்படியே பல ஆண்டுகள்
ஆவிகளின் வாழ்க்கை சென்றுகொண்டிருக்கும். .. அங்கே கோவில் கொண்டுள்ள இறைவனுக்கு மனிதர்களைவிட
இந்த ஆவிகளிடம் கருணை அதிகம் உண்டு. மனிதர்களுக்கு புண்ணியம் சம்பாதிப்பதற்கான
வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அவன் அதை பயன்படுத்துவதில்லை.ஆவிகளால் புண்ணியம் சம்பாதிக்க
முடியாது. பாவத்தின் பலனை மட்டுமே அனுபவிக்க முடியும். பாவம் குறையக்குறைய ஆவிகளின்
மனதில் நிம்மதியும்,இறைசிந்தனையும் அதிகம் ஏற்படும். இப்படி பக்குவப்பட்டிருக்கும் ஆவிகளைப்பற்றி
அங்கே குடிகொண்டிருக்கும் இறைவன் அறிவார். .. பிள்ளை வரம்வேண்டி சிலர் அங்குள்ள கோவிலை
சுற்றுவார்கள்.அப்போது இறைவன் ஏதாவது ஒரு ஆவியை அழைத்து அங்கே பிள்ளைவரம்வேண்டி கோவிலை
சுற்றிக்கொண்டிருக்கும் பெண்ணின் வயிற்றில் பிறக்கும்படி கூறி அந்த ஆவிக்கு புதிய
வாழ்க்கையைக் கொடுக்கிறார். .. |
ஆவி உலகம்-தொடர்-பாகம்-4 .. எண்பது வயதுடைய நல்லவர்கள் அல்லது ஆன்மீகவாதிகள்
மரணமடையும்போது என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம். உலகியல் பற்றுள்ள மனிதர்களின் மரணகாலத்தில்
என்ன நடக்குமோ அதற்கு மாற்றாக எல்லாமே நடக்கும். கடைசி காலத்தில் உறவினர்கள் அவரிடம் அன்புடன்
நடந்துகொள்வார்கள்.அவர் யாரை பார்க்க வேண்டும் என்று நினைக்கிறாரோ அந்த தூரத்து உறவினர்கள்
திடீரென்று அவரை பார்க்க வருவார்கள். அவரை கடைசி காலத்தில் பக்கத்தில் இருந்து கவனிக்க
யாராவது ஒருவர் இருப்பார்.அவரது மனதில் இறைவன் நாமம் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும்.
வீட்டில் உள்ளவர்கள் நல்லபடி இருக்க வேண்டும் என்று வாழ்த்திக்கொண்டிருப்பார். .. மரணமடையவேண்டிய நாள் வரும்போது அவருக்கே
தெரிந்துவிடும்.தெய்வங்களின் காட்சி அவருக்கு கிடைக்கும். நல்ல மனத்தெளிவு காணப்படும். முகத்தில் அன்பும்
கருணையும் இருக்கும். அவரது இஷ்டதெய்வத்தின் காட்சி கிடைக்கும்
நேரத்தில் சூட்சுமஉடல்(உயிர்) தூலஉடலைவிட்டு புறப்படும். .. உறவினர்கள் இறுதி சடங்குகளை செய்வார்கள்.
அப்போது வீட்டில் அமைதியான, ஆன்மீக சூழல்நிலவும். அன்று முழுவதும் வீட்டில் இறைவனின் நாமஜபம்
அல்லது பஜனை நடந்துகொண்டிருக்கும்.வீட்டில் உள்ளவர்கள் உபவாசம் இருப்பார்கள். யாரும்
அழமாட்டார்கள். வீட்டில் உள்ளவர்கள் அழுதால் இறந்தவரின்
ஆவி இந்த வீட்டைவிட்டு நிம்மதியாக செல்லது என்பதால் யாரும் அழமாட்டார்கள்.இறந்தவர்
முக்தி அடைய வேண்டும் என்று வேண்டிக்கொள்வார்கள். .. உடல் எரிக்கப்படலாம் அல்லது புதைக்கப்படலாம். அனைத்தும்
முடிந்த பிறகு . இறைதூதர்கள் அல்லது தெய்வங்கள் அந்த புண்ணி ஆத்மாவை அவரது இஷ்டதெய்வத்திடம்
அழைத்துசெல்வார்கள்.அந்த ஆன்மா மேல் உலகத்தை அடையும். அவர் அவருக்கு முக்தியை அருள்வார்
அல்லது புண்ணிய ஆத்மாக்கள் வாழும் மேல்உலகில் அவர் வாழ்வார்.அதன்பிறகு அவர் மீண்டும்
இந்த மனித உலகிற்கு வரமாட்டார். .. இப்படிப்பட்ட புண்ணிய ஆத்மாக்கள் மிகமிகக்குறைவு.
எப்போதும் இறை சிந்தனையுடன் வாழ்பவர்கள். ஆசைகள் அனைத்தையும் வென்றவர்கள்,புலன்களை
அடக்கியவர்கள் இப்படிப்பட்டவர்களுக்கே இப்படிப்பட்ட முடிவு ஏற்படும். .. இதற்கு சற்று கீழ்நிலையில் உள்ளவர்கள் அதாவது
நல்லவர்கள் அதேநேரத்தில் குடும்பத்தில் சற்று பற்றும்பாசமும் உள்ளவர்கள். இவர்கள்
மரணமடையும்போது என்ன நடக்கும்? இவர்கள் உடலைவிட்டு ஆவி பிரியும்போது இதற்கு
முன்பு இறந்த ஆவிகளை அவர் அங்கே பார்ப்பார். உறவினர்கள் அழுவார்கள்.குடும்பத்தில் உள்ள
யாரோ ஒருவரிடம் அவருக்கு பற்று இருக்கும்.அவரது பிரிவை தாங்க முடியாமல் குடும்பத்தினர்
தவிப்பார்கள். எனவே அந்த வீட்டைவிட்டு அவரது ஆவி வேறு எங்கும் செல்ல விரும்பாது. வீட்டில் இருந்துகொண்டே குடும்பத்தினருக்கு
ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று அந்த ஆவி விருப்பம் கொள்ளும். .. நல்ல சகுனம் அல்லது கெட்ட சகுனங்களை அறிந்து
முன்கூட்டியே வீட்டிள் உள்ளவர்களுக்கு எச்சரித்தல் அல்லது கனவின் மூலம் வந்து உணர்த்துதல்,
தீய ஆவிகள் வீட்டின் அருகில் வரவிடாமல் தடுத்தல்.வீட்டைவிட்டு யாராவது வெளியே செல்லும்போது
அவருடனே அவருக்கு பாதுகாப்பாக செல்லுதல் போன்ற காரியங்களை அந்த ஆவி செய்யும். இது எதுவரை நடக்கும் என்றால் குடும்பத்தில்
உள்ளவர்கள் அவரை நினைக்கும்வரை.அவரை நினைத்து அழும்வரை. படிப்படியாக ஒரு காலகட்டத்தில் அவரை மறந்துவிட்டால் அந்த ஆவி அதன்பிறகு பாவபுண்ணியத்திற்கு
ஏற்ப அந்த வீட்டில் மனிதனாகவோ அல்லது செல்லபிராணியாகவோ பிறவி எடுக்கும். .. ஆவிகள் சாபம் கொடுக்குமா,ஆசீர்வாதம் கொடுக்குமா?
என்ற கேள்விக்கு பதில் சொல்லிவிட்டேன். உடலை எரித்தால் ஆவிகள் வராது என்பது உண்மையா? அகால
மரணத்தில் இறப்பவர்கள்தான் ஆவிகளாக வருவார்களா? சிலர் ஒரு வருடம் நம்மைசுற்றி வாழ்வார்கள்
பிறகு நம்மை விட்டு வெளியேறி விடுவார்களா? இந்த கேள்விக்கான பதில் .. நமது மதத்தை பொறுத்தவரை உடலை எரித்தாலும்
புதைத்தாலும் பலன் ஒன்றுதான். ஆரியர்கள் உடலை எரிப்பதற்கு ஒரு காரணம் இருந்தது. யாகங்கள் மூலம் தனக்கு பிடித்தவற்றை தேவர்களுக்கு
வழங்குவதுதான் பண்டைய ஆரியர்களின் பழக்கம். அந்த வகையில் உடலை அக்னியில் தியாகம் செய்வது
மிகஉயர்ந்த யாகமாக முற்காலத்தில் கருதப்பட்டது. இப்படி செய்தால் உடல்மீது உள்ள பற்று மறையும்
இறந்தவனின் ஆவி இந்த உலகிலிருந்து மேல் உலகிற்கு உடனே செல்லும் என்று நம்பினார்கள். .. பண்டைய காலத்தில் முன்னோர்கள் வாழ்வதற்கான
பல லோகங்கள் இருந்தன.அவற்றுள் முக்கியமானது பித்ருலோகம். முறையதாக உபநயனம் மேற்கொண்டு
அதன்படி வாழும் மேலானவர்களுக்கு மட்டுமே பித்ருலோகத்தில் இடம் அளிக்கப்பட்டது. அவர்கள்
மட்டுமே தான் உடலைவிட்ட பிறகு பித்ருலோகத்தில் வாழ்வேன் என்று முழுநம்பிக்கையோடு
வாழ்ந்துவருவார். ஆரிய சம்பிரதாயத்தை பின்பற்றாதவர்கள் பித்ருலோகம் செல்வதில்லை.அவர்களின்
ஆவி இந்த உலகத்திலேயேதான் சுற்றும். .. பித்ருலோகம் பற்றி சிறிது பார்ப்போம். .. பித்ருலோகம் என்பது ஆரியர்களின் முன்னோர்கள்
வாழும் உலகம். இதை தென்புலத்தார் என்பார்கள். வடபுலத்தார் என்றால் இமயமலை உச்சியில்
வாழ்பவர்கள். இமயமலையின் பனிமூடிய சிகரத்திற்கு மேலே தேவலோகம்,கைலாயம்,வைகுண்டம்,கந்தர்வலோகம்
போன்ற பல உயர்ந்த லோகங்கள் இருப்பதாக முன்னோர் கூறியிருக்கிறார்கள். இந்த உலகங்கள்
பூமியை விட்டு வெளியே வேகு தூரத்தில் இருப்பதாக நினைக்ககூடாது. அது அப்படி அல்ல. நாம் வாழும் உலகம் தூல உலகம். தேவர்கள் வாழும்
உலகம் ஒளி உலகம். பேய்கள்,ஆவிகள் வாழும் உலகம் இருள் உலகம்..எல்லாமே இந்த பூமியில்தான்
இருக்கின்றன. தேவர்களின் உடல் மனித உடலைவிட பல மடங்கு பெரியது ஒளிவீசக்கூடியது. அவர்களிடம்
பல சக்திகள் இருக்கும். அதேநேரம் ஆவிகளின் உடல் மனித உடலைவிட பலமடங்கு
சிறியது. புண்ணிய பாப பலக்களுக்கு ஏற்ப சிறிய உடல் பெரிய உடல் அமைகிறது. .. இங்கே வடபுலத்தார் என்பது தேவர்கள் வாழும்
உலகத்தை குறிக்கிறது.இது இமயமலையின் உச்சியில் பனிமூடிய பகுதியில் உள்ளது. தற்போது
உள்ள திபெத்தின் மேற்பகுதி என்றும் சொல்லலாம். தென்புலத்தார் என்பது பித்ருக்கள் வாழும்
உலகம். இதுவும் மேல் உலகம்தான்.இங்கு வாழும் பித்ருக்களும் மனிதனைவிட பெரிய உடல்கொண்டவர்கள்
ஒளிவீசும் உடல்கொண்டவர்கள்.இவர்களும் ஒளிஉலகத்தில்தான் வாழ்கிறார்கள்.ஆனால் இவர்கள்
வாழும் இடம் இமயமலை பகுதிக்கு தெற்கே உள்ள பகுதியில் அமைந்துள்ளது. பழைய காலத்தில் ஆரியர்கள் இமயமலைக்கு தெற்கே
இருப்பது தென்திசை என்றும் இமயமலையை வடதிசை என்றும் கருதினார்கள். எனவே பித்ருலோகம் என்பது மனிதர்கள் வாழும்
உலகத்திற்கு மேல் உள்ள பரந்த உலகம். முறையான உபநயனம் மேற்கொண்டு வாழும் ஒருவர்,
மறுபடி பிறக்க வேண்டும் என்ற ஆசைகொண்ட ஒருவர் இறக்கும்போது. மேல் உலகத்தில் உள்ள
பித்ருக்கள் அவரிடம் வருகிறார்கள். ஆன்மீக மனிதர்கள் இறக்கும்போது தேவதூதர்கள்
அவரிடம் வருகிறார்கள். சாதாரணமனிதர்கள் இறக்கும்போது ஏற்கனவே இறந்த
ஆவிகள் அவரிடம் வருகின்றன. இங்கே ஆரிய சம்பிரதாயத்தின்படி வாழ்பவர்
இறக்கும்போது பித்ருக்கள் அவரிடம் வருகிறார்கள். .. உடலை எரித்தபிறகு அந்த பித்ருக்கள் அந்த
புனிதஆவியை பித்ருலோகத்திற்கு அழைத்துசெல்கிறார்கள்.அவருக்கு தேவர்களுக்கு சற்று
இணையான ஒளிஉடல் கிடைக்கிறது அங்கே அவர் தனது முன்னோர்களை காண்பார்.அவர்களுடன்
சந்தோசமாக நீண்ட ஆண்டுகள் வாழ்வார். பித்ருலோகத்தில் ஒரு நாள் என்பது மனித உலகில்
ஓராண்டுக்கு சமம். பித்ருலோகத்தில் அவர் சந்தோசமாக வாழவேண்டுமானால்
பூலோகத்தில் அவரது வாரிசுகள் அவருக்கு தினமும் உணவு படைக்க வேண்டும். பித்ருக்களுக்கு
உணவும், தேவர்களுக்கு உணவும் தினமும் படைக்க வேண்டும். அவர்களுக்கு படைத்த உணவையே
மற்றவர்கள் சாப்பிட வேண்டும்.இதுபற்றி விதிரகள் விரிவாக மனுஸ்மிருதியில் உள்ளது. .. ஆரியர் அல்லாதவர்களுக்கு,ஆரிய சம்பிரதாயத்தை
பின்பற்றாதவர்களுக்கு இந்த விதி பொருந்தாது. ஆரிய பழக்க வழக்கங்களை பின்பற்றுபர்களால்
மட்டுமே பித்ருலோகம் செல்ல முடியும். .. ஒருவேளை ஆரிய சம்பிரதாயத்தை பின்பற்றும்
ஒருவர் பாவம் அதிகம் செய்துவிட்டால் அவரால் பித்ருலோகம் செல்ல முடியுமா? அந்த வீட்டில்
உள்ளவர்கள் பாவபரிகாரங்களை செய்தால் போக முடியும் இல்லாவிட்டால் இந்த உலகத்தில் ஆவியாக
சுற்ற வேண்டியதுதான். ... |
ஆவி உலகம்-தொடர்-பாகம்-5 .. எந்த வீட்டில் உயிர் பிரிகிறதோ அந்த வீட்டில்தான்
ஆவி அலைந்து கொண்டிருக்குமா? வெளிநாட்டில் முன்னோர்களுக்கு உணவு படைக்கலாமா? ஒரு கும்பத்தில் இறந்த முன்னோர் அதே வீட்டில்
மீண்டும் பிறக்க வாய்ப்பு உண்டா? திடீதென்று சிலர் இறந்துவிடுகிறார்கள். அவர்
இறக்கும் தினத்தன்று அவருக்கு இன்று ஏதோ நடக்கப்போகிறது என்பது தெரியுமா? முன் அறிவிப்புகள்
உண்டா? .. கணவன் மனைவி அன்பாக வாழ்ந்துகொண்டிருக்கும்
நிலையில் யாராவது ஒருவர் அகால மரணம் அடைந்தால் அவர்களது ஆவி அந்த வீட்டிலேயே வாழும்.
உதாரணமாக கணவன் இறந்துவிட்டார் என்று வைத்துக்கொள்வோம். அவரது ஆவி அந்த வீட்டிலேயே
வாழும். அதனால்தான் கணவன் இறந்தால் மனைவி இன்னொரு திருமணம்புரிவதில்லை.இது கற்புள்ள
பெண்களுக்கு பொருந்தும். அப்படி அந்த வீட்டிலேயே வாழும் ஆவி அந்த
வீட்டில் உள்ளவர்களது கனவில் அடிக்கடி வருவதுண்டு. முக்கியமாக விடியற்காலையில் காணும்
கனவில் வருவதுண்டு.இதைவைத்து அவரது ஆவி அங்கே வசிக்கிறது என்பதை தெரிந்துகொள்ளலாம். .. பிற மதங்களைப்பொறுத்தவரை இறந்த ஆவி மீண்டும்.
அங்கே வருவதில்லை. இறந்த ஆவியை சாத்தான் என்று கூறி அதை அவமதிப்பார்கள்,வெறுப்பார்கள்.
அத்தோடு கணவன் இறந்ததும் மனைவி இன்னொரு திருமணம்புரிந்துகொள்கிறாள். இறந்த கணவனின்
பொருட்களை அகற்றிவிடுவார்கள்.அவனது நினைவுகளை மனதிலிருந்து அகற்றிவிடுவார்கள். எனவே
பிற மதங்களைப்பொறுத்தவரை இறந்தவரின் ஆவியிடம் யாரும் அன்புகொள்வதில்லை. சாத்தான்
என்ற போர்வையில் அதை விலக்கிவிடுகிறார்கள். .. ஆனால் நமது மதத்தில் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு
பல கடமைகள் உள்ளன.அதில் ஒன்று இறந்த முன்னோர்களுக்கு செய்ய வேண்டி கடன் அல்லது கடமை.
பித்ரு காரியம். இதை இல்லறத்தான் தினமும் செய்ய வேண்டும். சில ஆவிகள் பித்ருலோகத்திற்கு சென்றுவிடும் சில ஆவிகள் வீட்டிலேயே தங்கிவிடும் சில ஆவிகள் வீட்டைவிட்டு வெளியேறி மனிதர்கள்
வசிக்காத வீடுகளில் தங்கும் சில ஆவிகள் சுடுகாடு,கடற்கரை போன்ற பல இடங்களில்
அலையும். சில தீய ஆவிகள் அதேபோன்ற பிற ஆவிகளுடன் கூட்டுசேர்ந்து
பிறருக்கு தொந்தரவு கொடுக்கும். .. பித்ருலோகத்தில் வாழும் ஆவிகளுக்கு தினமும்
உணவு படைக்கவேண்டும் .அந்த உணவை பித்ருக்கள் சாப்பிடுவதில்லை. ஏனென்றால் பித்ருலோகத்தில்
ஒருநாள் என்பது நமக்கு ஒரு வருடம். ஆனாலும் தினமும் பித்ருக்களை நினைக்க வேண்டும்
என்பதற்காகவும், பித்ருக்ள் அங்கே நீண்டநாள் வாழவேண்டும் என்பதற்காகவும் தினமும்
பித்ருக்களுக்கு உணவு படைக்க வேண்டும். அந்த உணவை மற்றவர்கள் சாப்பிடலாம். அது தூய
உணவு. .. அடுத்து வீட்டில் உள்ளவர்களின் அன்பில் கட்டுப்பட்டு
வீட்டிலேயே தங்கிவிடும் ஆவிகளுக்கு தினமும் உணவு படைக்க வேண்டும். அந்த உணவை அவர்கள்
சாப்பிடுவார்கள். ஒவ்வாரு உணவிலும் தூலம்,சூட்சுமம் என்று இரண்டு உள்ளது. நமது உடலில்
எப்படி தூலம்,சூட்சுமம் உள்ளதோ அதுபோல உணவிலும் தூலம்,சூட்சுமம் உள்ளது. தூல உணவு உடலை வளர்க்கும், சூட்சும உணவு
மனத்தை வளர்க்கும். .. ஆவிகளால் தூல உணவை சாப்பிட முடியாது. ஆனால்
சூட்சும உணவை சாப்பிட முடியும். நாம் படைக்கும் உணவை அவர்கள் சாப்பிடுவார்களா?
இல்லையா என்ற கவலை வேண்டாம். அவர்களால் சாப்பிட முடியும். உணவிலுள்ள சூட்சுதன்மைகளான
மணம்,சுவை இவைகளை அவர்கள் சாப்பிடுகிறார்கள். நல்ல சூடான உணவையே அவர்களுக்கு படைக்க வேண்டும் வீட்டில் இவ்வாறு உணவை படைத்தபிறகு அதை நாம்
உண்ணக்கூடாது. ஏனென்றால் அது எச்சிலாக்கப்பட்ட உணவு.அது நமது சூட்சம உடலுக்கு கேடுவிளைவிக்கும்.
எனவே அதை பறவைகளுக்கோ விலங்குகளுக்கோ கொடுக்கலாம். ஆனால் பித்ருலோகத்தில் உள்ளவர்களுக்கு படைக்கப்பட்ட
உணவு அப்படியல்ல.அதை உண்ணலாம். .. எனவே வீட்டில் வசிக்கும் ஆவிகளுக்கு தினமும்
உணவு படைக்க வேண்டும். அது அந்த ஆவிகளுக்கு நன்மை செய்யும். இது அவர்களது மனத்தை
அமைதியடைய செய்யும். வீட்டில் இருந்த படியே அவர்கள் வீட்டில் உள்ளவர்களின் நன்மைக்காக
இறைவனிடம் பிரார்த்தனை செய்வார்கள், ஜெபம் செய்வார்கள். ஒருவர் சூட்சும உடலாகிவிட்டால் அதன் பிறகும் அவர் ஆன்மீக ரீதியாக முன்னேற முடியும்.
அதன்பிறகும் அவர்களால் மற்றவர்களுக்கு உதவ முடியும். சூட்சும உடலில் இருப்பர்களால்
அந்த குடும்பத்தின் நிலையை உயர்த்த முடியும். சகுணங்கள் மூலமாகவும்,கனவுகள் மூலமாகவும்
எச்சரிக்க முடியும். எனவே நல்ல ஆவி வீட்டில் வசிப்பது நல்லது. அத்தோடு வீட்டில் உள்ளவர்கள் ஜபம்,தியானம்,
பக்தி பாடல்களை பாடுவது என்று நல்ல சம்ஸ்காரங்களை மேற்கொள்ள வேண்டும். நாம் கொஞ்சநேரம் ஜபம் செய்துவிடடு நிறுத்திவிடுவோம்
ஆனால் சூடசும உடலில் வசிப்பர்கள் தொடந்து ஜபம் செய்பர்கள். நான் கொஞ்சம் அதிகமாக கதை அளப்பதாக நினைக்காதீர்கள். ஆன்மீக உணர்வுடன் வாழும் மனிதர்கள் இறந்த
பிறகும் அவர்கள் ஆன்மீக செயல்களில் ஈடுபட்டுக்கொண்டே இருப்பார்கள். .. காசியில் நீண்ட ஆண்டுகளாக வசித்த ஒரு வயதான
சாதுவை ஒருமுறை பார்க்க நேர்ந்தது. இரவு நேரத்தில் ஒரு பெண் ஆவி அவரிடம் பேசுமாம்.
அத்தோடு பக்தி பாடல்களை பாடிக்கொண்டே இருக்குமாம். இரவு முழுவதும் இவருக்கு தூக்கமே வராதாம். தனக்கு முக்தி கிடைக்க வேண்டும் என்பதற்காக
இறைவனிடம் பிரார்த்திக்கும்படி அது கூறுமாம். என்னை பார்த்த பல மாதங்கள் கழிந்தபிறகு அந்த
சாது இறந்துவிட்டார் என்ற தகவல் எனக்கு கிடைத்தது. அந்த நேரத்தில் நான் ஜயோ பாவம் என்று நினைத்துக்கொண்டேன். இப்போது என்ன புரிகிறது என்றால் அந்த சாது
முக்தியடையும்போது கூடவே அந்த பெண்ஆவியும் முக்தி அடைந்திருக்கும். எனவே ஆன்மீகவாதிகள் அகால மரணமடைந்தால் ஜபம்,தியானம்,பக்திபாடல்களை
பாடுவது போன்றவற்றை சூட்சும உடலில் இருந்தபடியே செய்துகொண்டிருக்கும். .. ஒருவர் இறந்துவிட்டால் உயிர் அந்த வீட்டில்தான்
இருக்குமா? அல்லது உறவினர்கள் வேறு இடம் சென்றுவிட்டால் அதுவும் வேறு இடத்திற்கு
வந்துவிடுமா? இதை இரண்டுவிதமாக பார்க்கலாம். எனக்கு தெரிந்த ஒரு பெண்ணின் அக்கா காதல்
தோல்வியால் தற்கொலை செய்துகொண்டு இறந்துவிட்டள். பல வருடங்களாக அக்காவின் நினைவில்
தங்கை வாழ்ந்துவந்தான். அவள் திருமணம் செய்யவில்லை. அக்காவில் ஆவி அந்த வீட்டிலேயே
சுற்றி வந்தது. அக்காவைப்போலவே இவளும் பலமுறை தற்கொலைக்கு முயற்சி செய்தாள். காப்பாற்றிவிட்டார்கள்.
எதற்காக சாகபோகிறாய் என்று கேட்டால் தெரியாது அக்கா தனியாக இருக்கிறாள் என்று மடடும்
கூறுவாள். அக்காவின் ஆவி அவளுக்குள் வந்து அவளையும் தற்கொலைக்கு தூண்டிக்கொண்டெ இருந்துள்ளது.
சில ஆண்டுகள் இப்படியே நடந்தது. பிறகு அனைவரும் அந்த வீட்டை விட்டு சென்னைக்கு சென்றுவிட்டார்கள்.
அங்கு சென்ற பிறகு இந்த பெண்ணின் மனநிலையில்
நற்றமாற் ஏற்பட்டது. திருமணத்திற்கு ஒத்துக்கொண்டாள்.திருமணமும் நடந்தது. பழைய பிரச்சினைகள்
எதுவும் இல்லை. இது எதை காட்டுகிறது என்றால் இறந்தவர்கள்
தாங்கள் வாழ்ந்த பழைவீட்டை விட்டு எங்கோ தூர இடத்திற்கு வர விரும்புவதில்லை. .. ஆவிகளால் பல தொல்லைகள் இருந்தால் பழைய வீட்டைவிட்டு,தூர
இடத்தில் வசிப்பது நல்லது. .. வெளிநாட்டில் உள்ளவர்கள் இறந்தவர்களை நினைத்து
உணவு படைக்கலாமா? கண்டிப்பாக படைக்கலாம். ஆனால் ஆவிகளால் அங்கே
சென்று அதை உண்ண முடியாது. மனிதர்களுக்கு எப்படி பல எல்லைகள் உள்ளதோ
அதேபோல கட்டுப்பாடுகளும் எல்லைகளும் ஆவிகளுக்கு
உண்டு. .. ஆவிகளால் அவர்கள் வசிக்கும் வீடு,வீட்டை
சுற்றியுள்ள இடங்கள்,மற்றும் ஆவிகளின் சொந்தக்காரர்கள் வசிக்கும் அருகில் உள்ள இடங்கள்
போன்றவற்றிற்கே செல்ல முடியும். நீண்ட தூரம் செல்ல முடியாது. ஆவி உடல் என்பது ஒரு உடல். நினைத்த நேரத்தில்
எங்கும் செல்லும் அளவுக்கு அவை அசாத்தியமானவை அல்ல. ஆனால் தேவர்கள்,ரிஷிகள் அப்படி அல்ல. அவர்களால்
செல்ல முடியும். .. முற்காலத்தில் வெளியூர் செல்லும்போது தங்கள் குலதெய்வத்தை
கூடவே அழைத்து செல்வார்கள்.நீண்ட தூரம் நடந்துசெல்ல வேண்டியிருக்கும். இரவில் மண்டபங்களில்
தங்க வேண்டியிருக்கும். எனவே அவர்கள் தங்களுடன் குலதெய்வத்தை அழைத்துசெல்வார்கள்.மற்ற
ஆவிகளால் எந்த துன்பமும் வராமல் காப்பாற்றும். திருடர்கள் வந்தால் முன்கூட்டியே எச்சரிக்கும். .. தொடரும்.. இன்னும் நிறைய சொல்ல வேண்டியுள்ளது. .. |
ஆவி உலகம்-தொடர்-பாகம்-6 .. ஆவிகளை கட்டுப்படுத்தி ஆணி அறைந்து வைப்பது செம்பு கலயத்திற்குள் அடைத்துவைப்பது சமாதியைவிட்டு வெளியேறாமல் அடைத்துவைப்பது போன்றவற்றை கேள்விப்பட்டிருப்பீர்கள். இதை எப்படி செய்கிறார்கள்? .. ஆவிகளுக்கு தேவையானது உணவு. உணவுக்காக அவைகள் பல இடங்களில் அலைந்துகொண்டிருக்கும். யார் இறைச்சி வைத்து உணவு படைக்கிறார்களோ அவர்கள் சொல்வதை கேட்கும் அவர்கள் பின்னால் சுற்றும். எனவே மந்திரவாதிகள் இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி திருமணமாகாமல் இறந்த ஆவி,அல்லது தீய ஆவி, வீட்டில் உள்ளவர்களால் கைவிடப்பட்ட ஆவி இவைகளில் எது அவர்களுக்கு சாதகமாக இருக்குமோ அந்த ஆவி வசிக்கும் இடத்தை அறிந்துகொண்டு அதற்கு உணவு படைத்து அவர்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடுகிறார்கள். பிறகு அந்த ஆவியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து தங்களுக்குத் தேவையான பல காரியங்களை சாதித்துக்கொள்வார்கள். .. ஆவிகளால் பிறரது மனத்தை அறிந்துசொல்ல முடியும்.முற்காலத்தில் நடந்தவைகளை சொல்ல முடியும். சில ஆவிகளால் எதிர்காலத்தில் என்ன நடக்க இருக்கிறது என்பதையும் ஓரளவுக்கு சொல்ல முடியும். எனவே குறிசொல்பவர்கள் ஆவிகளை இதற்காக பயன்படுத்துகிறார்கள். குடுகுடுப்பைக்காரர்கள் தங்களுடன் ஒரு ஆவியை வைத்திருப்பார்கள். அது அந்த வீட்டில் நடந்தது,இனி நடக்க இருப்பது,வீட்டில் உள்ள பிரச்சினைகள் இவைகளை சொல்லும். ஆவி எப்படி சொல்லும்? ஆவி மந்திரவாதியிடம் சொல்லும். இது எப்படி நடக்கும் என்றால் சூட்சும உடலில் வசிக்கும் ஆவி,மந்திரவாதியின் சூட்சும உடலுக்கு பதில் சொல்லும். அது மற்றவர்களுக்கு கேட்காது.அதைக்கேட்டு அவர் பிறருக்கு சொல்லிக்கொண்டிருப்பார்கள். குறி சொல்பர்கள் வசிக்கும். இருக்கும் இடத்திற்கு சென்றால் அங்கே சிறுதெய்வ வழிபாடு ஒன்று இருப்பதை பார்க்கலாம். இவ்வாறு ஆவிகளை வசப்படுத்தி தங்கள் நன்மைக்காக பயன்படுத்திக்கொள்பவர்கள் முடிவில் அந்த ஆவிகளாலோ அல்லது பில ஆவிகளால் அழிந்துபோவார்கள் என்பது அந்த மந்திரவாதிக்குத் தெரியாது. .. சில ஆவிகள் பிறருக்கு தொந்தரவு கொடுக்கும். அந்த ஆவிகளையும்
கட்டுப்படுத்தி பிறகு அவைகளை செப்பு கலயத்திற்குள் அடைத்து மண்ணில் மிக ஆழமாக புதைத்துவிடுவார்கள். அவ்வாறு அடைக்கப்பட்ட ஆவி தீண்ட காலம் நரக வேதனையை அங்கே அனுபவித்துக்கொண்டிருக்கும். பிறகு அதன் பாவங்கள் தீர ஆரம்பித்தபிறகு கலசத்திலிருந்து வெளியேறும். .. சிலர் தீய ஆவிகளை மரபொம்மைக்குள் ஏற்றி மரத்தில் ஆணியால் அறைந்து வைப்பார்கள்.பல ஆண்டுகள் இதில் கட்டப்பட்டு சித்திரவதையை அனுபவித்து பிறகு பாபம் நீங்கிபிறகு விடுதவை அடையும். .. கிராமங்களில் ஒவ்வொரு தெருவிற்கும் ஒரு சிறுதெய்வ கோவில் இருக்கும். நாம் அந்த கோவில்களை கடந்துபோக நேர்ந்தால் சிறு காணிக்கையை அந்த தெய்வத்திற்கு வழங்கிவிட்டு அந்த வழியே செல்வது நல்லது. சிறுதெய்வங்களை அலட்சியப்படுத்துவதோ அல்லது அவர்கள் மனம்புண்படும்படி நடந்துகொள்வவோ கூடாது. .. இந்து சமுதாயத்தில் தோன்றிய மகான்கள் அனைவரும் ஆவி வழிபாடுகளை எதிர்த்தே பேசியிருக்கிறார்கள்.ஆவிகளை வழிபடாதீர்கள். அவர்களை அவர்கள் வழிலேயே விட்டுவிடுங்கள்.இறந்தவர்களை நினைத்து அழாதீர்கள்.அவர்கள் அடுத்த பிறவிக்குள் செல்லவிடுங்கள் என்றே கூறியிருக்கிறார்கள். மிக பண்டைய காலத்திலிருந்து இன்றுவரை இந்த உபதேசம் நடந்துகொண்டேதான் இருக்கிறது. என்றாலும் சிறுதெய்வ வழிபாடு ஆவி வழிபாடு போன்றவை தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கிறது. .. எனவே நாம் ஆவிகளை வழிபட்டாலும் சரி வழிபடாவிட்டாலும் சரி அவைகளைப்பற்றிய அறிவை வளர்த்துக்கொள்வது நல்லது. ஒன்றைப்பற்றி தெரியாதவரைதான் பயம் இருக்கும். தெரிந்துகொண்டால் பயம் விலகிவிடும். .. எனக்கு தெரிந்த கிறிஸ்தவர் ஒருவர் இந்துதெய்வங்களை வெறுப்பவர். ஒருநாள் இரவில் சிறுதெய்வம் வசிக்கும் கோவில் ஒன்றின்முன் நின்று வேண்டுமென்றே சிறுநீர் கழித்தார்,பிறகு சாத்தானே அப்பால்போ! நான் ஏசுவை நம்புபவர் என்று கூறிவிட்டு அங்கிருந்து வீட்டிற்கு வந்தார். ஆனால் அன்று இரவு அவர் கடும் காய்ச்சலால் துன்புற்றார். சர்ச்சில் சென்று எவ்வளவோ ஜெபம் செய்து பார்த்தார்கள்.மருத்துவமனையில் வைத்து பார்த்தார்கள் ஆனால் காய்ச்சல் சரியாகவில்லை. கடைசியில் உடம்பு துரும்பாக மாறி இளைத்து இறந்துவிட்டார். இந்துக்கள் ஒருபோதும் இப்படி சிறுதெய்வங்களை அலட்சியப்படுத்த மாட்டார்கள். .. ஒருமுறை ஒருவர் மலை அடிவாரத்தில் இருந்த ஒரு காட்டிலிருந்து
நிறைய பொருட்களை எடுத்து வீட்டிற்கு வந்துவிட்டார். அதன் பிறகு அவரால் தூங்க முடியவில்லை.ஏதேதோ பேச ஆரம்பித்துவிட்டார். ஏதோ ஆவி அவருடன் வந்திருப்பதை வீட்டில் உள்ளவர்கள் உணர்ந்துகொண்டார்கள்.உடனே மந்திரவாதியை அழைத்து பூசைபோட்டு, உடுக்கை அடித்து பார்த்தார்கள்.அப்போது அந்த காட்டில் பாதுகாவலாக இருந்த ஆவி ஒன்று இவரின் உடம்பிற்குள் ஏறி இவரை தொந்தரவு செய்தது தெரிந்தது. ஆவி பிடித்த மனிதர் மலையாளத்தில்
பேசினார் . எனக்கு காட்டில் இருக்க பிடிக்கவில்லை.இங்கே கோவில் கட்டி ஆண்டுக்கு ஒருமுறை பூசை வைத்தால் இவரைவிட்டு வெளியேறுகிறேன் என்றது. அது கூறியதை ஏற்றுக்கொண்டு சிறியதாக கோவில்கட்டி பூசை வைத்தார்கள்.அந்த ஆவி அவரைவிட்டு விலகிவிட்டது. இது நடந்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போதும் அந்த குடும்பத்தினர் ஆண்டுக்கு ஒருமுறை அங்கே பூசை வைத்து வழிபாடு நடத்துகிறார்கள். ஒருவேளை வழிபாடு நடத்தாவிட்டால் என்னவாகும்? பழைய படி அந்த ஆவி குடும்பத்தில் உள்ள யாரையாவது தொந்தரவு செய்யும். .. முற்காலத்தில் அணைகள் அல்லது பெரிய குளங்கள்,ஏரிகள் கட்டும்போது எதிரிகளிடமிருந்து ஏரிகளை,அணைகளை காப்பதற்காக திருமணமாகாத யாரையாவது பலி கொடுத்து, அவர்களுக்கு கோவில் எழுப்பி, ஆண்டுதோறும் விழா எடுப்பார்கள். எனவே நீங்கள் தெரியாத ஊர்களுக்கு செல்லும்போது அங்கே உள்ள குளங்களின் அருகில் உள்ள கோவிலின் அருகே செல்ல நேர்ந்தால் சிறு காணிக்கையை செலுத்துங்கள். .. |
ஆவி உலகம்-தொடர்-பாகம்-7 .. பழைய காலத்தில் ஊர்பகுதிகளில் கிடா(ஆண் ஆடு) நேர்ந்துவிடும் பழக்கம் உண்டு.ஒரு வீட்டில் யாராவது ஒருவர் இறந்துவிட்டால் மறுநாளே சிறிய ஆண்ஆடு ஒன்றை வாங்கி வந்து வளர்ப்பார்கள்.(ஆண்ஆடு) இதன் கருத்து என்னவென்றால் இறந்தவரின் ஆவி சில காலம் ஆட்டிற்குள் சென்று வாழும்.இதனால் அந்த ஆவி மனிதர்களை தொந்தரவு செய்யாது.இது மறுபிறவி மாதிரிதான்.சில இடங்களில் காளையை வளர்ப்பார்கள். நேர்ந்துவிடுதல் என்று கூறுவார்கள். மனிதனின் பாவத்தை ஒரு ஆட்டின்மேல் ஏற்றுதல்.அல்லது ஆவியை ஆட்டிற்குள் இறக்குதல்.இறந்தவரின் பெயர்கொண்டே அந்த ஆட்டை அழைப்பார்கள். இவ்வாறு நேர்ந்து விடப்பட்ட ஆடு, சுதந்திரமாக உலாவரும்.அதை கயிறுகொண்டு கட்டமாட்டார்கள். யாரும் அடிக்க மாட்டார்கள். நேர்ந்துவிடப்பட்ட ஆடு என்பது ஊரில் உள்ள எல்லோருக்கும் தெரியும். ஆடு நன்றாக வளர்ந்த பிறகு கோவில் திருவிழாவின்போது பலி கொடுத்து,அதன் இறைச்சியை அனைவரும் பங்கிட்டுக்கொள்வார்கள். .. இவ்வாறு செய்வதன் மூலம் இறந்தவரின் பாவம் பங்கிடப்படும். அவருக்கு சாந்தி ஏற்படும். மறுபிறவி ஏற்படாது என்பது கருத்து. ... முற்காலத்தில் ஆரியர்கள் இறந்தவர்களின் உடலை, திருமணம் ஆனவரின் உடலை எரிப்பார்கள். அந்த ஆவி பித்ருலோகத்திற்கு செல்லும் . திருமணம் ஆகாதவராக இருந்தால் இறந்த உடலை சுடுகாட்டில் அப்படியே போட்டுவிடுவார்கள்.கை கால்களை நன்றாக இறுக்கி கட்டியிருப்பார்கள்.இரவில் அந்த உடலை நரிகளும் பகவில் கழுகளும் மற்ற பிராணிகளும் சாப்பிடும். சில நாட்களுக்குப்பிறகு எலும்புகளை எரித்து ஆற்றில் கரைப்பார்கள். இதன் கருத்து என்னவென்றால் திருமணம் ஆகாமல் இறந்தவர் பித்ருலோகம் செல்ல முடியாது. எனவே ஆவியாக இங்கேயே உலவிக்கொண்டிருப்பார். அந்த உடலை இவ்வாறு நரிகளும் கழுகுகளும் தின்னக்கொடுத்தால் அந்த ஆவிக்கு நற்கதி கிடைக்கும் என்று நம்பினார்கள். சில நூற்றாண்டுகளுக்கு முன்புவரை எங்கள் ஊரின் பக்கத்தில் வசித்த பிராமணர்கள் இப்படிப்பட்ட நடைமுறையை பின்பற்றினார்கள். .. இதை கூறும்போது ஒரு சம்பவம் நினைவிற்கு வருகிறது. ஒருமுறை 14 வயதுடைய ஒரு சிறுமி பாம்பு கடித்து இறந்துவிட்டாள். இறந்த உடலை இதேபோல சுடுகாட்டில் கையையும் காலையும் நன்றாக கட்டி போட்டு வைத்துவிட்டு அனைவரும் சென்றுவிட்டார்கள். ஆனால் அந்த பெண் மீண்டும் உயிர்பெற்றுவிட்டாள்,இறக்கவில்லை. விடியற்காலையில் சுடுகாட்டிலிருந்து சத்தம்வருவதை கவனித்த ஒருவர்(தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்) அந்த சிறுமியைமீட்டு தூக்கிக்கொண்டு தன்வீட்டிற்கு சென்று சிகிச்சை அளித்தார். சில நாட்கள் சிகிச்சைக்குப்பிறகு அந்த சிறுமி உடல்நலம் பெற்றுவிட்டாள். அதன்பிறகு அந்த பெண்ணை மீண்டும் பெற்றோரிடம் கொண்டு சேர்க்க அந்த வீட்டில் உள்ளவர்கள் விரும்பவில்லை. எனவே அவளை காப்பாற்றிய அந்த இளைஞருக்கே திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். .. சில ஆண்டுகள் கழிந்தபிறகு அந்த பெண் கருவுற்றாள். குழந்தை பிறப்பதற்கு முன்பு தன் பெற்றோர்களை பார்க்க வேண்டும் என்று அவள் விரும்பினாள்.மனைவியின் ஆசையை பூர்த்திசெய்ய வேண்டும் என்பதற்காக கணவன் அவளை அங்கே அனுப்பிவிட்டு சிறிது தூரத்தில் காத்திருந்தார். .. முற்காலத்தில் ஒரு சட்டம் இருந்தது. அது என்னவென்றால் பிராமணப்பெண்ணை சூத்திர ஆண் திருமணம் செய்யக்கூடாது. அவ்வாறு திருமணம் செய்தால் சூத்திரனின் தலையை வெட்ட வேண்டும் என்ற சட்டம் இருந்தது. இந்த சட்டம் பற்றி இருவருக்குமே தெரியாது. .. தனது மகள் உயிரோடு வந்திருப்பதைக்கண்டு பெற்றோர்கள் மகிழ்நதார்கள். இதற்குள் அந்த செய்தி அனைவரின் காதுகளையும் எட்டிவிட்டது. உடனடியாக அந்த இளைஞனைப்பிடித்து தலையை வெட்டிவிட்டாரகள். இந்த செய்தியைக் கேள்விப்பட்ட அந்த பிராமணப்பெண் உடனேயே தன் உயிரை மாய்த்துக்கொண்டு இறந்துவிட்டாள். இறப்பதற்கு முன்பு அப்பாவியான என் கணவனின் உயிரை எடுத்த இந்த ஊரில் உள்ள அனைவரையும் கொல்வேன் என்று கூறிவிட்டு இறந்துபோனாள் .. அவளது ஆவி மிகவும் உக்கிரமாக இருந்ததால் எந்த மந்திரத்திற்கும் கட்டுப்படவில்லை. படிப்படியாக அந்த ஊரில் உள்ளவர்களை அது பழிவாங்க ஆரம்பித்தது.இனி இந்த ஊரில் இருந்தால் உயிர் பிழைக்கமாட்டோம் என்று கருதிய பிராமணர்கள் அனைவரும் அந்த ஊரை காலிசெய்துவிட்டு சென்றுவிட்டார்கள். .. இந்த சம்பவம் எங்கள் பகுதியில் மிகவும் பிரபலமாக பேசப்படும்.நான் இருக்கும் இடத்திலிருந்திருந்து 100 மீட்டர் தூரத்தில்தான் இந்த சம்பவங்கள் முற்காலத்தில் நடைபெற்றிருக்கின்றன. .. வெறும் புறஆசாரங்களை மட்டுமே பார்க்கக்கூடாது. அந்த இளைஞன் மிகவும் நல்லவன். நல்லவன் எப்படி சூத்திரனாக இருக்க முடியும்? யார் தமோ குணம் நிறைந்தவனோ அவன்தான் சூத்திரன் என்று சாஸ்திரம் கூறுகிறது. தமோ குணம் நிறைந்தவன் என்றால் மதுவுக்கு அடிமையாக இருப்பவன்,சூதாடுபவன், திருடன், பிறரை ஏமாற்றி பிழைப்பவன்,எப்போதும் தூங்கும்சோம்பேரி, பிறருக்கு தீமைசெய்வதில் இன்பம் காண்பவன், கொலைகாரன். இவர்கள்தான் தமோகுணம் நிறைந்தவன், இப்படிப்பட்டவன்தான் சூத்திரன். இவர்களை நல்வழிக்கு கொண்டுவருவதற்காகத்தான் பல கடுமையான சட்டங்களை முற்காலத்தில் இயற்றினார்கள். பிறருக்குகீழ் அடிமையாக வேலைசெய்தால்தான் இப்படிப்பட்டவர்கள் திருந்துவார்கள் என்பதற்காக கடும் சட்டங்களை இயற்றினார்கள். ஆனால் ரஜோகுணமோ,சத்வகுணமோ நிறைந்த ஒருவரை சூத்திரன் என்றுகூறி கொடுமைப்படுத்துவது சாஸ்திரத்தை அறியாதவர் செய்யும் செயல். .. ஆவி பழிவாங்குமா என்று முன்பு ஒருவர் கேட்டிருந்தார் அதற்கான பதில் இந்த சம்பவத்தில் உள்ளது. அதேபோல பாவத்தை நீக்குவதற்காக உடலை மிருகங்களுக்கு இரையாக்குவது என்ற கருத்தையும் இங்கே காணலாம். இந்த பழக்கம் இன்னும் திபெத்தில் உள் புத்தமதத்தினரிடம் உள்ளது. அங்குள்ளவர்களை உயர்ந்த மலைப்பகுதிக்கு கொண்டு சென்று இதேபோல கழுகுகளுக்கு இரையாக்குகிறார்கள். .. |
ஆவி உலகம்-தொடர்-பாகம்-8 .. ஆவி அடிக்குமா? ஆவி அடித்து சாகிறார்களா? பொருட்களை
ஆவியால் தூக்க முடியுமா? .. நான் சிறுவயதாக இருக்கும்போது எங்கள் ஊரில் ஒரு பெண்ணை இரவில் ஆவி அடித்துகொன்றுவிட்டதாக பேசினார்கள். முதுகில் பெரிய கைத்தடம் இருந்ததாக பேசிக்கொண்டார்கள்.மனிதனுடைய கையைவிட பெரிய கைத்தடம். ஆவி மருத்துவர் ஒரு பெண்ணின் முற்பிறவிகளைப்பற்றி விசாரித்துக்கொண்டிருக்கும்போது. முற்பிறவியில் ஒரு சர்ச்சிக்குள்
இரவு நேரத்தில் ஒரு ஆவி அடித்து அவள் இறந்துவிட்டதாக கூறியிருந்தாள்.அந்த வீடியோ கிளிப் இன்னும் என்னிடம் உள்ளது. .. ஆவி சூட்டசும உடலோடு கூடியது அப்படி இருக்கும்போது தூவஉடலில் உள்ள மனிதனை எப்படி அடிக்க முடியும்? .. குறிசொல்பவர் ஒருவர் ஒரு ஆவியின் உதவியால் எலுமிச்சம் பழம் ஒன்றை நீண்ட தூரத்திற்கு உருட்டிசெல்வதை நான் பார்த்திருக்கிறேன். பெரிய முக்கோணம் ஒன்றை தரையில் வரைந்தார் அந்த எலுமிச்சம் பழம் பெதுவாக அந்த முக்கோணத்தின்மேல் உருண்டு சென்றது. அந்த எலுமிச்சம்பழம் அவர் கொண்டு வந்தது அல்ல. எங்களிடம் வாங்கியது. குட்டிசாத்தான்தான் இதை செய்தது என்று அவர் கூறினார். அது உண்மைதான் ஏனென்றால் வேறு எந்த வகையிலும் அதை அப்படி உருட்டி விளையாட்டு காட்ட முடியாது. ஆவியை வைத்து மக்களை மிரட்டி பணம் சம்பாதிப்பதுதான் அவரது நோக்கம். அவர் விரும்பியபடியே மக்கள் பயந்து அவர் கேட்ட காணிக்கைகளை கொடுத்தார்கள். .. ஆவிகளால் பொருட்களை தூக்க முடியும் என்பதை பல இடங்களில் கேள்விப்பட்டிருக்கிறேன். சுவாமி விவேகானந்தர்மீது ஒரு ஆவி மணலை வாரி எறிந்தது. ஸ்ரீராமகிருஷ்ணர் வாழ்வில் ஆவி ஒன்று பெரிய மரக்கிளையை முறித்த சம்பவம் ஒன்று உண்டு. .. மனிதனுக்கு தூலஉடல்,சூட்சுமஉடல் என்று இரண்டு உடல்கள் உள்ளன. அதற்கு பின்னால் ஆன்மா உள்ளது. ஆவி களுக்கு சூட்சும உடலும் அதற்கு பின்னால் ஆன்மாவும் உள்ளது. ஆன்மா பற்றிய தத்துவம் தனி. . இரவு நேரத்தில் மனிதர்களுக்கு இயல்பாகவே பயம் இருக்கும். பகல் நேரத்தில் நல்ல தைரியம் இருக்கும். பகல்நேரம் மனிதர்களுக்கு என்றும் விடியற்காலையும் மாலையும் தேவர்களுக்கு உரிய நேரம் என்றும் நடுஇரவு பேய்பிசாசுகளுக்கு உரிய நேரம் என்றும் சாஸ்திரம் சொல்கிறது. .. எனவேதான் முற்காலத்தில் நடு இரவு நேரத்தில் தனியாக வெளியே போகக்கூடாது என்று சொல்வார்கள். சூட்சும உடலில்தான் மனம் இயங்குகிறது. இரவு நேரத்தில் தனியாக வெளியே செல்லும்போது நமது மனம் இயல்பாகவே பயம்கொள்கிறது. உடல் எவ்வளவு வலிமையாக இருந்தாலும், மனம் முக்கியம். ஆவிகளுக்கு இரவு தைரியமான நேரம்.அதனால் பலவீனமான மனிதனை அவர்களால் தாக்க முடியும். மனிதனது சூட்சு உடலை அது தாக்குகிறது. தூல உடலிலும் அது பிரதிபலிக்கிறது. நமது கண்ணுக்குத்தெரியும் மரம் தூலஉடல்,அதற்குப்பின்னால் மரத்திற்கு சூட்சும உடலும் இருக்கிறது. ஆவிகள் சூட்சும உடலில் இருக்கும் கிளையை உடைக்கிறது. அதனால் தூலஉடலில் உள்ள கிளை உடைந்துவிழுகிறது. .. சூட்சும உடலுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அது தூலஉடலையும் பாதிக்கும். தூலஉடலில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அது சூட்சும உடலையும் பாதிக்கும். எனவே ஆவியின் கண்களுக்கு தூலப்பொருட்கள் தெரியாது. எலுமிச்சம் பழம் நமக்கு தெரிவதுபோல் அதற்குத்தெரியாது. ஆனால் எலுமிச்சம் பழத்தின் கூட்சுமஉருவம் அதற்குத்தெரியும். சூட்சும உருவத்தை அது உருட்டுகிறது. அதனுடன் சேர்ந்து தூல உருவம் உருள்கிறது. .. இவ்வளவு பெரிய கோவிலை மனிதர்கள் எப்படி கட்டினார்கள் என்று நான் சிறுவனாக இருந்தபோது தாத்தாவிடம் கேட்பேன். பூதங்கள்தான் இவைகளை கட்டின என்று அவர் பதில் சொல்வார். முன்பெல்லாம் அதை நான் நம்புவதில்லை. ஆனால் தற்போது அதை நம்புகிறேன். பூதங்களை கட்டுப்படுத்தி அதை தங்கள் பணிகளுக்கு பயன்படுத்திக்கொள்வர்கள் முற்காலத்தில் இருந்திருக்கிறார்கள். மிகப்பெரிய பொருட்களை எளிதாக பூதங்களால் தூக்க முடியும் என்பதற்கு ஒரு உதாரணம் கூறுகிறேன். .. நான் சிறுவயதாக இருக்கும்போது நான் பார்த்த சம்பவம் இது ஒருவர்மீது பேய்பிடித்திருப்பதாக கூறினார்கள். பேய் ஓட்டுபவர் வந்து அவரை சிறு கம்பு வைத்து அடித்துக்கொண்டிருந்தார். அவர்மீது ஒருபேய் அல்ல மூன்று பேய்கள் பிடித்திருந்தது. அவர் கம்பு வைத்து அந்த நபரை அடித்து அடித்து நீ யார்? உனக்கு என்ன வேண்டும் என்று கேட்பார். அப்போது அந்த ஆவி இதற்கு முன்பு அந்த ஊரில் அகால மரணமடைந்த தனது பெயரைக் கூறும். மூன்று ஆவிகள் இதேபோல வேறுவேறு விதங்களில் பதில் சொல்லும். ஆவி ஓட்டுபவர் குச்சியால் அந்த நபரை அடிக்கும்போது வலியால் இந்த ஆவிகள் அழும். இவரது உடலைவிட்டு வெளியே போ வெளியே போ என்று மீண்டும்மீண்டும் அடிப்பார். ஆனால் அவைகள் போகிறேன் போகிறேன் என்று சொல்லும் ஆனால் போகாது. கடைசியாக ஒரு பெரிய உரல் ஒன்று இருந்தது. அதை தலைக்கு மேலே தூக்கு என்று அவரை அடித்தார். முதலில் முடியாது,முடியாது என்று கூறிய ஆவிகள் கடைசியல் அந்த உரலை அந்த மனிதரின் தலைக்கு மேலே தூக்கின. பிறகு உடலை கீழே போட்டுவிட்டு அவரது உடலை விட்டு ஓடிவிட்டன. .. அந்த உரலை யாராலும் தலைக்குமேலே தூக்க முடியாது. நம்மால் அதை உருட்டிதான் கொண்டு செல்ல முடியும். அதிக பட்சமாக முழங்கால்வரை தூக்கலாம்,அல்லது இடுப்புவரை தூக்கலாம். ஆனால் பேய்பிடித்தவர் தலைக்குமேலே தூக்கினார். . இரவு நேரங்களில் ஆவிகளுக்கு மனிதர்களைவிட பலம் அதிகம் உள்ளது. எனவே பொருட்களை ஆவிகளால் தூக்க முடியும் என்பது தெரிகிறது. .. பேய் பிடித்திருந்தால் அதை ஓட்டுவதற்கான வழி, மனத்தை தைரியமாக்குவதுதான். யாருக்கு பலவீனமான மனம் இருக்கிறதோ அவர்களைத்தான் பேய் பிடிக்கும். .. நான் மடத்தைவிட்டு வெளியே வந்த பிறகு 5 ஆண்டுகள் கேபிள்டிவியில் எடிட்டிங் வேலை பார்த்துவந்தேன். பல இடங்களில் பயியாற்றினேன்.இரவு வேளைகளில்தான் எனக்கு வேலை. 5 ஆண்டுகளும் தனியாகவே இரவு வேளைகளில் இருந்திருக்கிறேன். ஒரு இடத்தில் வேலை பார்க்கும்போது நடந்த சம்பவம் இது. .. ஒரு பெரிய வீடு அந்த வீட்டின் கீழ்தளத்தில் சில அலுவலகங்கள் இருந்தன.இரவில் அவைகள் மூடிவிடும். மேல் மாடியில் மூன்று அறைகள் இருந்தன.இரண்டு அறைகள் நான் பணியாற்றிய டிவி.அலுவலகம். இன்னொரு அறை வேறொரு டிவி சேனலுக்கு உரியது. பொதுவாக இரவு 8 மணி ஆனால் எல்லோரும் போய்விடுவார்கள். நான் இரவு 2 மணிவரை வேலைபார்த்துவிட்டு. பிறகு படுத்துக்கொள்வேன். காலை 8 மணிக்கு இன்னொருவர் வந்ததும் வீட்டிற்கு வந்துவிடுவேன். .. பொதுவாக இரவில் வெளியில்தான் படுப்பது வழக்கம். எங்கள் அறைக்கு பக்கத்தில் இருந்த அறைக்கு வெளியே நான் படுத்துக்கொள்வேன். அந்த அறையில் பகலில் ஆட்கள் இருப்பார்கள்.இரவில் இருக்கமாட்டார்கள். பல மாதங்கள் இவ்வாறு தொடர்ந்தது. ஒவ்வாரு நாளும் இரவு நன்றாக தூக்கம் வந்ததா என்று கேட்பார்கள். நானும் ஆமாம் என்பேன்.எதற்காக இப்படி கேட்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. இவ்வாறு பல மாதங்களுக்குப்பிறகு ஒரு நாள் இரவில் மூன்றாவது ரூமில் ஒருவர் படுத்திருந்தார். அவருக்கு முன்பாக வெளியே நான் படுத்திருந்தேன். இரவு 3 மணியிருக்கும் திடீரென்று கதலை திறந்து கொண்டு அவர் வெளியே ஓடினார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. எங்கே போகிறீர்கள் என்று கேட்டேன். அது ஒன்றுமில்லை. நீங்கள் படுத்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். அடுத்த நாள்தான் எனக்கு விஷயம் தெரிந்தது. அந்த ரூமில் ஒரு பெண் தற்கொலைசெய்து இறந்திருக்கிறாள். அதனால்தான் அந்த வீட்டில் இருந்தவர்கள் வீட்டை பல்வேறு அலுவலகத்திற்கு வாடகைக்கு விட்டுவிட்டு சென்றுவிட்டார்கள். அன்று இரவு என்ன நடந்தது என்றால் அவர் கட்டிலின்மேல் படுத்திருந்தாராம் அவரை தூக்கி தரையில் வீசியதாம் அந்த ஆவி. இப்படி இதற்கு முன்பே அங்கு நடந்திருக்கிறது.அதனால்தான் அந்த யாரும் இரவில் தங்குவதில்லை.குறிப்பாக அந்த ரூமிற்குள் செல்லவே பயப்படுவார்கள். .. நான் கிட்டதட்ட ஒருவருடம் அந்த ரூமிற்கு முன்னால் படுத்துதூங்கியிருக்கிறேன். இரவு தனியாக அங்கே நடந்திருக்கிறேன். என்னை அந்த ஆவி ஒன்றும் செய்யவில்லை. எந்த தொந்தரவும் கொடுக்கவில்லை. இரவில் எனக்கும் பயம் உண்டு. ஆனால் நான் எப்போதும் அன்னை சாரதாதேவியின் டாலர் ஒன்றை பாக்கெட்டில் வைத்திருப்பேன். இரவில் படுக்கும்போது அந்த டாலரை பக்கத்தில் வைத்திருப்பேன். தூக்கம்வரும்வரை இரவு ஜெபம் செய்துகொ்ண்டே இருப்பேன். ஏற்கனவே இரவில் அதிகநேரம் வேலை செய்ததால் நல்ல தூக்க கலக்கம் வேறு இருக்கும். ஒருபக்கம் தனியாக இருப்பதில் பயம் இருந்தாலும்,அந்த பயமே எனக்கு பக்திஉணர்வை தூண்டிவிடும். அன்னையின் அருகில் இருப்பதுபோன்ற உணர்வை ஏற்படுத்திவிடும். எவ்வளவுக்கு எவ்வளவு பயம் ஏற்படுகிறதோ அந்த அளவுக்கு அதிகமாக அன்னை என் அருகில் இருக்கிறார் என்ற உணர்வும் ஏற்படும்.இதுதான் எனது மனதைரியத்திற்கு காரணம். .. அதன்பிறகு அந்த இடத்தில் நான் அதிக நாட்கள்
வேலை செய்யவில்லை. வெளியில் தூங்கவும் இல்லை. .. பயந்த மனம்கொண்டவர்களைத்தான் ஆவிகளால் பயமுறுத்த முடியும். நான் இறைவனின் தொண்டன்,அல்லது நான் இறைவனின் பக்தன் என்னை எந்த ஆவியாலும் எதுவும் செய்ய முடியாது என்ற மனவுறுதி வேண்டும். இஷ்டதெய்வத்திடமோ, குருவிடமோ நெருக்கமான உறவை வைத்துக்கொள்ள வேண்டும். பயம் தோன்றும்போது, இன்னும் இன்னும் இறைவனின் அருகில் நான் இருக்கிறேன் என்ற உணர்வை கொண்டுவாருங்கள்.அப்போது எந்த ஆவிகளாலும் எதுவும் செய்ய முடியாது. .. நடுஇரவு நேரத்தில் யாரும் இல்லாத சுடுகாட்டில் பிணங்கள் எரிந்துகொண்டிருக்கும்போது,தனியாக அதன் அருகே அமர்ந்து ஸ்ரீராமகிருஷ்ணர் தியானம் செய்வார். தேவி எப்போதும் என்னுடன் உள்ளாள் என்ற உணர்வுதான் அவரை அவ்வாறு செய்ய வைத்தது. சுடுகாட்டில் தியானம் செய்தால் உலகிலுள்ள பற்றுகள் விரைவில் மறைந்துவிடும். இறைக்காட்சி விரைவில் கிடைக்கும் என்று சாஸ்திரம் சொல்கிறது. ஆனால் இது மிகவும் ஆபத்தான வேலை. கொஞ்சம் தவறினாலும் உயிர்போய்விடும். .. |
ஆவி உலகம்-தொடர்-பாகம்-9 .. இறக்கின்ற அனைவரும் மீண்டும் பிறப்பார்களா?
அல்லது சிலர் பிறக்காமல் போவார்களா? மிருகங்கள் எல்லாம் இறந்தபிறகு ஆவியாக சுற்றுமா? .. இந்த கேள்விக்கு விடைகூறும்முன்னர். குண்டலினி
சக்தி பற்றி சிறிது தெரிந்துகொள்வோம். குண்டலினி சக்திக்கு ஏழு மையங்கள் உள்ளன.
அதில் கீழ் உள்ளது மூலாதாரம், மேல் உள்ளது சகஸ்ராரம். சகஸ்ராரத்திற்கு உயிர் சென்றால் பிரம்மத்தில்(கடவுளில்)
கலந்துவிடும். அப்போது உடல் இயங்காமல் நின்றுவிடும், முச்சு
நின்றுவிடும். மனம் நின்றுவிடும். .. இதற்கு நேர் மாறான ஒரு நிலை உள்ளது. அதுதான் மூலாதாரம் இந்த இடத்திற்கு உயிர்
சென்றால்கூட மூச்சுநின்றுவிடும், மனம்நின்றுவிடும். ஒவ்வொரு உயிருக்கும் மூலாதாரம் என்ற ஒரு
மையம் இருக்கிறது. திடீரென்று ஏற்படும் அதிர்ச்சியின் காரணமாக
உயிர் மூலாதாரத்தில் நிலைகொள்ளும். அப்போது உடல் உணர்வற்றநிலைக்கு சென்றுவிடும்.
மனிதன் இறந்தவனாகிவிடுகிறான். இதயம் நின்றுவிடுகிறது. மூச்சும் நின்றுவிடுகிறது. .. மூலாதாரத்தில் உயிர் நிலைகொண்டால் மனிதன்
உயிர் அதற்குள்ளே அடங்கிவிடுகிறது. சகஸ்ராரத்திற்கும்,மூலாதாரத்திற்கும் உள்ள
வேறுபாடு என்பது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு. சகஸ்ராரத்தில் மனிதன் கடவுளாகிறான். மூலாதாரத்தில் மனிதன் எதுவுமற்ற சூன்யமாகிறான். அந்த நிலையில் தொடர்ந்து இருந்தால் உடலைவிட்டு
சூட்சும உடல் பிரியாது. மனம் இயங்கிக்கொண்டிருந்தால்தான் சூட்சும
உடல் தனியாக பிரியும். மூலாதாரத்தில் உயிர் ஒடுங்கிவிட்டால் சூட்சுமஉடலும்
அதற்குள் ஒடுங்கிவிடும். இந்த நிலையில் மனிதன் தூக்கத்தில் இருக்கும்போது
எந்த நிலையில் இருப்பானோ அதேநிலைக்கு சென்றுவிடுவான். எதுவும் தெரியாது. .. ஒவ்வொரு நாளும் நாம் தூங்குகிறோமே அப்போது
மூலாதாரத்திற்கு செல்கிறோமா என்று கேட்டால், முற்றிலுமாக அங்கு செல்வதில்லை. உடல்
உறுப்புகளை இயக்குவதற்காக மூளை இயங்கிக்கொண்டே இருக்கிறது. எனவே முழுவதும் மூலாதாரத்திற்குள் உயிர்
அடங்காது.ஆனால் அதன் அருகில் உள்ள மையத்தில் அது இருக்கும். .. திடீரென்று ஏற்படும் அதிர்ச்சி,அல்லது வேறுபல
காரணங்களால் உயிர் மூலாதாரத்தில் சென்று ஒடுங்கிவிட்டால் பின்னர் எல்லாம் முடிந்துவிடும்.
மறுபிறப்பு ஏற்படாது. .. இந்த விஷயத்தை மிருகங்களுக்கு பொருத்திப்
பார்ப்போம். ஒரு மானை புலி ஓடஓட விரட்டிக் கொல்கிறது. இப்போது அந்த மானின் உயிர் படிப்படியாக மூலாதாரத்திற்குள்
சென்றுவிடுகிறது. எனவே அதன் சூட்சுமஉடல் அதற்குள்ளே அடங்கிவிடுகிறது. உடலைவிட்டு
சூட்சும உடல் வெளியே வராது. அதற்கு மறுபிறப்பு ஏற்படாது. ஆனால் இந்த விதி எல்லா மிருகங்களுக்கும்
எல்லா காலங்களிலும் பொருந்தாது. . உதாரணமாக வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும்
பசுவை எடுத்துக்கொள்வோம். அந்த வீட்டில் இறந்த முன்னோர்தான் அந்த வீட்டில்
பசுவாக பிறக்கிறார் என்ற கருத்து உண்டு. அடுத்து மனித பிறவி எடுப்பதற்கு முன்பு சில
காலம் பசுவாக வாழ்ந்து தனது பாவகர்மங்களை கழிப்பதற்காக முன்னோர் பசுவாக பிறந்து மனிதனுக்கு
எல்லா உதவிகளையும் செய்வதாக ஒரு கருத்து உண்டு. எனவேதான் வீட்டில் வளர்க்கும் பசுவையும்,
உழவுக்கு பயன்படுத்தப்படும் காளைகளையும் கொல்லக்கூடாது. கடைசி காலம் வரை அவைகளை அன்போடு
வளர்த்து இயற்கையாகவே மரணமடையும்படி விட்டுவிட வேண்டும். இஇ அவ்வாறு இயற்கையாகவே மரணமடையும் பசுக்களின்
உயிர் மூலாதாரத்திற்குள் சென்று தங்காமல் சூட்சுமஉடலை எடுத்துக்கொண்டு வெளியேறுகிறது. அடுத்து சில நாட்களில் அது மனிதனாக பிறக்க
வாய்ப்பு உள்ளது. வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகள் அனைத்தும்
இதேபோல மறுபிறப்பு அடைய வாய்ப்பு உள்ளது. .. எனவே மிருகங்கள் விஷயத்தில் இரண்டு கருத்து
உள்ளது. சில மிருகங்கள் மறுபடி பிறப்பு எடுக்காது.
சில மிருகங்கள் மறுபடி பிறப்பு எடுக்கிறது. இதே விஷயம் மிருகங்களுக்கு மட்டும்தான் பொருந்துமா
என்றால், இல்லை. சில மனிதர்களுக்கும் இதுபொருந்தும். எல்லா மனிதர்களும் இற்நத பிறகு ஆவி உடலோடு
அலைவார்கள் என்று கூறமுடியாது. மேலே கூறியதுபோல இறக்கும்போது மூலாதாரத்திற்குள்
யாருடைய உயிர் சென்று ஒடுங்குகிறதோ அந்த மனிதன் மீண்டும் பிறப்பதில்லை. அப்படியானால் அவர்கள் செய்த பாவம் என்ன ஆவது? அவர்கள் செய்த புண்ணியம் என்ன ஆவது? புண்ணியவான்களுக்கு இப்படிப்பட்ட நிலை வாய்க்காது.
அவர்களது புண்ணிய பலன் காரணமாக சூட்சும உடல் இயங்க ஆரம்பிக்கும். மனிதர்களில் மந்தமானவர்கள்,
சோம்பேரிகள், மனிதனா மிருகமா என்று கண்டறிய முடியாத ஜடநிலையில் வாழ்பவர்கள் இப்படிப்பட்டவர்கள்
ஏதோஓர் அதிர்ச்சியில் இறந்துபோனால் அவர்கள் மீண்டும் பிறப்பதில்லை. இப்படிப்பட்ட
மனிதர்கள் தெரிந்து யாருக்கும் பாவம் புரிவதில்லை, புண்ணியமும் செய்வதில்லை. கிட்டத்தட்ட
மிருகமனநிலையில் வாழ்ந்துகொண்டிருப்பார்கள். எப்படி இருந்தாலும் சிறிதாவது பாவம் இருக்குமே
எது என்னவாகும்? அந்த பாவம் அவர்களது குடும்த்திற்கு அல்லது
அன்பிற்குரியவர்களுக்கு சென்று சேரும். .. இதனால்தான் சிறுவயதில் எதுவும் அறியாத வயதில்
யாராவது அகால மரணம் அடைந்தால் அவர்களை எரிக்காமல், ஆறுகளில் விட்டுவிடுகிறார்கள்.
அல்லது மிருகங்களுக்கு உணவாக விட்டுவிடுகிறார்கள். அந்த குழந்தை அல்லது சிறுவர் முற்பிறவிகளில்
செய்துள்ள பாவம் அந்த உடலை தின்னும் பிராணிகளுக்கு செல்லும் என்று நம்பிக்கை உள்ளது. அப்படி இறப்பவர்கள். மீண்டும் பிறக்கவாய்ப்பு
குறைவு. .. இதைத்தவிர இன்னும் சில வழிமுறைகள் மூலம்
மனிதன் மீண்டும் பிறக்காமல் இருக்க செய்வார்கள். உதாரணமாக சில மத பிரிவுகளில் மனிதனுக்கு
மறுபிறப்பு இல்லை என்று நம்புகிறார்கள். அந்த மதப்பிரிவில் பிறந்து வளரும் ஒருவன்
அவ்வாறே நம்புகிறான். இந்த ஒரு வாழ்க்கைதான் உள்ளது.இனிமேல் இந்த
உலகிற்கு வரப்போவதில்லை என்றே நம்புகிறான். ஆனால் அவன் பாவம்,புண்ணியம் இரண்டையும் செய்கிறான் கர்மநியதி கோட்பாட்டின் படி ஒருவன் செய்த
பாவத்திற்கு தக்க பலன் உண்டு .. இப்போது அந்த மனிதன் இறந்துவிட்டான். அவனது
உடலை நன்றான துணியால் சுற்றி இறுக்கி மண்ணில் புதைத்துவிட்டார்கள். அவனது ஆவி என்ன
செய்யும்? பல்வேறு கனவுகளை கண்டுகொண்டிருக்கும். எத்தனை பாவம் செய்தானோ அதற்கு ஏற்றபடி கொடும்
கனவும். பலர் தன்னை துரத்துவதுபோலவும், கொல்ல வருவது போலவும், துன்புறுத்துவதுபோலவும்
பல கனவுகளை கண்டுகொண்டிருப்பான். கனவிலிருந்து விழிப்பு என்பது ஏற்படவே செய்யாது. சிலநேரங்களில் நாம் இதை அனுபவித்திருக்கலாம்,நாம்
நீண்ட கனவு கண்டுகொண்டிருப்போம்,அது முடியவே முடியாது.அப்போது யாராவது வந்து நம்மை
தட்டி எழுப்புவார்கள். அப்போது நாம் விழப்போம்.அதுவேளைகனவும் நின்றுவிடும். இதேதான் ஆவிக்கும் நிகழ்கிறது. அந்த ஆவியை
தட்டி எழுப்புவதற்கு யாரும் இல்லை. எனவே அது கனவு கண்டுகொண்டே இருக்கிறது. பாவம்
நிறைந்த மனிதன் துன்பங்கள் நிறைந்த கனவை கண்டுகொண்டெ இருக்கிறான். காலம் என்பதே அங்கு
இல்லை. எப்போது அந்த கனவு முடியும் என்பது தெரியாது, தொடர்ந்த வேதனைகள் படிப்படியாக
குறையத்தொடங்குகின்றன.இப்போது அவன் செய்த பாவங்களின் பலனை அவன் கனவில் அனுபவித்து
முடித்துவிட்டான். இனி புண்ணியத்தின் பலன் பாக்கி இருக்கிறது. இப்போது நல்ல கனவுகள்
வரத்தொடங்குகின்றன. எந்த அளவு அவன் புண்ணியம் செய்திருக்கிறானோ அதுவரை நல்ல கனவுகள்
வந்துகொண்டே இருக்கும். முடிவில் உயிர் மொத்தமாக மூலாதாரத்தில் ஒடுங்கிவிடும். ஆழ்ந்த தூக்கத்தில் எதுவும் தெரியாததுபோல
உயிர் ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்றுவிடும். இது மீண்டும் எழுந்துவரும் தூக்கம் அல்ல.
இது நிரந்த தூக்கம். .. ஆவிக்கு மூலாதாரம் உண்டா? உண்டு. தூலஉடலுக்கு
இருப்பதுபோலவே சூட்சுமடஉடலுக்கும் உண்டு. .. விஞ்ஞானத்தில் கருந்துளை பற்றிய ஒன்றை படித்திருப்பீர்கள். முன்பு ஒரு கருந்துளை இருப்பதாக கூறினார்கள்.
தற்போது பல கருந்துளை இருப்பதாக கூறுகிறார்கள். இதுபற்றி நமது முன்னோர்கள் ஏற்கனவே கூறிவிட்டார்கள். அவர்கள் கூறிய வார்த்தைதான் வேறு. இதை அவர்கள் அவ்யக்கதம் என்றார்கள். அவ்யக்தம்
என்றால் இயங்காத நிலை. ஒவ்வொருவரின் உடலிலும் அவ்யக்தம் உள்ளது. சத்வம்,ரஜஸ்,தமஸ் என்ற மூன்று சக்திகளும்
இயங்க துவங்குவதற்கு முன்பு உள்ளநிலை. ஒடுக்கநிலை. பிரபஞ்சம் முற்றிலும் ஒடுங்கியிருக்கும்
நிலை. எப்படி ஆன்மா எல்லா உயிருக்குள்ளும் இருக்கிறதோ
அப்படி அவ்யக்தமும் எல்லா உயிருக்குள்ளும் உள்ளது. தற்கால விஞ்ஞான மொழியில் சொன்னால் கருந்துளை. இந்த கருந்துளை ஒவ்வொரு உயிருக்குள்ளும்
இருக்கிறது. இந்த கருந்துளைதான் மூலாதாரம் .. |
ஆவி உலகம்-தொடர்-பாகம்-10 .. பாம்பு புற்று வழிபாடு நாகராஜா,நாகராணி போன்ற வழிபாடுகளின் பின்னணி
என்ன? ஆவி பாதித்த மனிதனை காப்பாற்ற என்ன வழி? . திருமணம் ஆகாத ஆண் அல்லது பெண் பாம்பு கடித்து
இறந்தால் அவர்களை நாகதேவதையாக,நாகராஜாவாக வழிபடும் பழக்கம் முற்காலத்தில் இருந்துள்ளது. நாய் கடித்து இறப்பவன் கடைசி நாளில் நாயைப்போல
கத்திகத்தி சாவதை போல. பாம்பு கடித்து இறப்பவரின் சூட்சும உடல் பாம்பின் குணங்களால்
பாதிப்படைகிறது. இறந்தவரின் சூட்சுமஉடல் பாதி மனித குணமாகவும் பாதி பாம்பின் குணமாகவும்
மாறிவிடுகிறது. பாம்பு தொல்லைகள் ஏற்படாமல் இருப்பதற்காக
மக்கள் நாகதேவதை வழிபாடுகளை செய்வார்கள். .. பெரும்பாலான கடவுளின் உடலில் பாம்பு மாலைபோல
சுற்றிக்கொண்டிருக்கிறதே! விஷ்ணு பாம்பின்மீது படுத்திருப்பதுபோல ஓவியங்கள் உள்ளனவே
இதற்கு பின்னால் உள்ள கருத்து என்ன? .. அது உண்மையில் பாம்பு இல்லை. அது ஒரு தத்துவத்தை
விளக்குவதற்காக வரையப்பட்ட ஓவியங்கள். நாகம் என்றால் ந+அகம் என்று பிரித்து படிக்க
வேண்டும். ”அகம்” என்றால் நான். ”ந” என்றால் இல்லை என்று அர்த்தம். அகம் இல்லாதது. நான்
இல்லாதது என்று அர்த்தம். நான் என்பது ஆன்மா. மாயை என்பது நான் இல்லாதது நான் என்பது மாயையுடன் சேரும்போது உருவம்,மனம்,
தூலஉருவம்,சூட்சுமஉருவம் எல்லாம் ஏற்படுகிறது. நான் மட்டும் தனியாக இருந்தால் அது கடவுள். நான் என்பதுடன் மாயை சேர்ந்தால் அது உயிர்கள் இறைவன் மாயையை கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார். என்பது இதன் அர்த்தம். பாம்பு எப்படி வந்தது? .. மனிதனின் உடலில் மாயை என்பது குண்டலினி சக்தியாக
இருப்பதாக சாஸ்திரம் கூறுகிறது. இந்த குண்டலினி சக்தி பாம்புபோல் சுருண்டுகிடப்பதாக
யோக சாஸ்திரம் கூறுகிறது. மூலாதாராரத்தில் பாம்புபோல சுருண்டு கிடக்கும்
குண்டலினி சக்தி படிப்படியாக முதுகுத்தண்டின் மையம் வழியாக மேலேறி மூளையை அடைகிறது. அப்போது மாயை ஒடுங்குகிறது. மாயையின் பிடியிலிருந்து
ஆன்மா விடுபட்டு கடவுளை அடைகிறது. .. இதை விளக்குவதற்காக இறைவன் பாம்பின்மேல்
படுத்திருப்பதாகவும்.பாம்பை கச்சையாக அணிந்திருப்பதாகவும் ஓவியம் வரையப்பட்டுள்ளது. யோக சாஸ்திரம் இன்னும் சிலவற்றைக் கூறுகிறது.
குண்டலினி சக்தி வாயுபோலவும்.சிலநேரங்களில் பறவைபோலவும்,சிலநேரங்களில் குரங்குபோலவும் முதுகுத்தண்டின் வழிபாக செல்லும் என்று சொல்லப்பட்டுள்ளது. இருந்தாலும் பெரும்பாலானவர்கள் குண்டலினி
சக்தி பாம்புபோல மேலே செல்வதாக கூறியிருக்கிறார்கள். .. இந்த தத்துவத்தை விளக்குவதற்காகத்தான் பாம்பின்மேல்
படுத்திருப்பதாக ஓவியம் வரையப்பட்டுள்ளது. இறைவன் மாயையைக் கடந்தவர். மாயையை கட்டுப்படுத்தக்கூடியவர்
என்பது அர்த்தம். .. |
ஆவி உலகம்-தொடர்-பாகம்-11 .. ஆவியால் பாதிக்கப்பட்ட மனிதனை குணப்படுத்துவது எப்படி? .. ஆவிகளைப்பற்றி நாம் தொடர்ந்து பார்த்துவருகிறோம். மனிதனுக்கு தூலஉடல் சூட்சுஉடல் இருப்பதைப்பார்த்தோம். ஆவிகளுக்கு தூலஉடல் இல்லை. சூட்சும உடல் மட்டுமே இருப்பதையும் விளக்கியிருக்கிறேன். சில நேரங்களில் பலவீனமான மனிதனின் உடலுக்குள் இந்த ஆவிகள் புகுந்து,அந்த தூலஉடலை தங்கள் உடலாக கருதத்தொடங்கிவிடுகின்றன. ஏற்கனவே ஒரு சூட்சுஉடல் உள்ளது,அத்தோடு இந்த ஆவிகளின் சூட்சுமஉடலும் அதற்குள் வந்துவிடுகிறது. இப்போது ஒரு தூலஉடலுக்குள் இரண்டு சூட்சுமஉடல் வந்துவிட்டது. .. இதனால் மனிதன் சாதாரணநிலையிலிருந்து அவ்வப்போது விபரீதமான மனநிலைக்கு சென்றுவிடுகிறான். தேவையிலலாமல் கத்துவது,கோபப்படுவது, எதையெதையோ கண்டு பயப்படுவது.பிறர்மீது எரிச்சலடைவது போன்ற மனிநிலைக்கு அவ்வப்போது செல்கிறான். சில ஆவிகள் அதிகம் ஆக்ரோசமாக இருக்கும் எனவே அந்த உடலை ஆட்டிப்படைக்கும். இதனால் ஆவி பாதிக்கப்பட்டவர்களால் ஓரிடத்தில் சும்மா இருக்கமுடியாது. இதையே பேயாட்டம் என்கிறார்கள். சில ஆவிகள் சாந்தமானவை,அதனால் அதன் தாக்கம் வெளியில் அதிகம் தெரியாது. .. இப்படி ஆவியால் பாதிக்கப்பட்டவரை உடனடியாக அதன் ஆதிக்கத்திலிருந்து மீட்கவேண்டும். காலம் தாழ்ந்துவிட்டால் பிறகு ஆவி அந்த உடலைவிட்டு வெளியே செல்லாது. கேரளாவில் உள்ள சோட்டாணிக்கரை பகவதிஅம்மன் கோவில் போன்ற இடங்களில் ஆவியை பிடித்து கட்டுப்படுத்தி மரத்தில் ஆணியால் அறைந்துவைக்கும் வழக்கம் உள்ளது. இன்னும் சிலர் அந்த வேலைகளை செய்யலாம்.அதுபற்றி எனக்குத்தெரியாது. ஒரு மனிதனின் உடலில் அப்படி ஆவி புகுந்து தொந்தரவு செய்வதை ஏற்க முடியாது. அதற்காக ஆவிகளை தண்டிக்க வேண்டும். .. சில வழிகளை நான் பார்த்திருக்கிறேன். முதலில் ஆவிக்கு சூடாக மாமிசம் வைத்து படையல்போடுவார்கள். அந்த உணவை சாப்பிடுவதற்காக ஆவி அந்த மனிதனின் உடலைவிட்டு வெளியேறும். அந்த நேரத்தில் ஆவியால் பாதிக்கப்பட்ட நபரை அங்கிருந்து அப்புறப்படுத்தி சக்தி வாய்ந்த கோவிலுக்குள் தங்கியிருக்கும்படி வைக்க வேண்டும். பிறகு ஆவியால் பாதிக்கப்பட்ட மனிதருக்கு மனதைரியத்தை வரவழைக்கவேண்டும். சிவன்,விஷ்ணு அல்லது உயர் தெய்வங்களின் ஏதாவது மந்திரங்களை தொடர்ந்து உச்சரிக்கும்படி கூறவேண்டும். ஏதாவது ஒரு தெய்வத்திடம் ஆழ்ந்த பக்தி செலுத்தும்படி கூறவேண்டும். இவ்வாறு அந்த மனிதன் பாதுகாப்பாக கோவிலில் தங்கியிருக்கும்போது இவைகள் எல்லாவற்றையும் செய்ய வேண்டும். தேவையான அளவு நல்ல உணவு உண்டு. ஓய்வெடுத்து,ஆன்மீகத்தில் ஈடுபாடுகொண்டபிறகு வீட்டிற்கு வரலாம். வீடு முழுவதும் தெய்வீக நிலை இருக்கும்படி பாரத்துக்கொள்ளவேண்டும். அகால மரணமடைந்தவரின் படங்களை
வீட்டிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும். இவ்வாறு சில நாட்கள் தொடர்ந்து பக்தி மார்க்கத்தில் பயணித்தால் பிறகு ஆவிகளின் தொந்தரவு ஏற்படாது. .. ஒருவேளை ஆரம்பத்திலேயே இதை கண்டுபிடிக்கவில்லை. நாட்கள் கடந்துவிட்டது. இப்போது என்ன செய்வது? மருத்துவர்கள் இதற்காக சில மாத்திரைகளை கொடுக்கிறார்கள். அந்த மாத்திரை சாப்பிட்ட சிறிது நேரத்தில் நிலமை கட்டுக்குள் இருக்கும். மாத்திரையின் வீர்யம் குறைந்ததும் மீண்டும் ஆவியின் செயல்பாடு எழ ஆரம்பிக்கும். ஆயுள் முழுவதும் இந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். ஆவியால் பாதிக்கப்பட்டவரால் மற்றவர்கள் போல எல்லா வேலைகளையும் செய்ய முடியாது. இந்த மாத்திரை மனத்தை மந்தநிலைக்கு ஆழ்த்துகிறது. இது நிரந்தரதீர்வாக இருக்காது. .. அந்த ஆவியை வலுக்கட்டாயமாக விரட்டினால் விளைவு விபரீதமாக இருக்கும். மனிதன் இறந்துபோகவும் வாய்ப்பு உள்ளது. எனவே ஆன்மீக சாதனைகள் மூலம் ஆவியின் செயல்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும். தவங்கள், விரதங்கள்,ஆன்மீக கருத்துக்களை கேட்டல், ஆன்மீகத்தைக்குறித்து சிந்தித்தல்,கோவில்களில் உழவார பணிகள் செய்தல்
போன்றவைகள் மூலம்மனத்தை படிப்படியாக உயர்ந்த நிலைக்கு கொண்டுவர வேண்டும். இதனால் ஆவி வெளியாறேிவிடுமா? வெளியேறாது. ஆவியும் ஆன்மீகத்தின் பக்கம் திரும்பிவிடும். அதுவும் படிப்படியாக சாந்தமாகிவிடும். இது ஒரு நல்ல வழி. ஆனால் ஆரம்பத்தில் இதற்காக கடும் முயற்சி செய்ய வேண்டும். ஆவியால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆரம்பத்திலேயே தியானம்,ஜெபம் போன்றவற்றை பழகக்கூடாது. அதை ஆவிகளால் தாங்க இயலாது. ஆரம்பத்தில் கோவில்களில் உழவாரப்பணிகள் செய்ய வேண்டும். கோவிலை சுற்றி தினமும் சுத்தமாக வைத்தல், இறைவனுக்கு மாலைகள் தொடுத்தல் போன்ற உடல்வேலைகளையே ஆரம்பத்தில் செயய் வேண்டும். இப்படி தொடந்து செய்ய பிறகு ஆன்மீக பாடல்களை கேட்டல்,பாடுதல் இப்படி படிப்படியாக உயரவேண்டும். .. ஆவி பாதிக்கப்பட்டவர்கள் மனத்தை ஒருநிலைப்படுத்த முடியாது. எந்த அளவுக்கு இதை உறுதியோடு செய்ய முடியும் என்று தெரியாது. இருந்தாலும் முடிந்த அளவு இந்த வேலைகளை செய்யவேண்டும். தினசரி ஒரு ஒழுங்கு முறையுடன் தொடர்ந்நு ஆன்மீக வேலைகளை செய்தால் ஆக்ரோசமாக ஆவிகள்கூட அடங்கிடும். .. ஒருவேளை இந்த முறைகள் எதுவுமே எடுபடாவிட்டால், அவர்களை அப்படியே விட்டுவிடுங்கள். அவர்களை அன்போடு நடத்துங்கள். அவர்கள் செய்யும் சிறுசிறு தவறுகளை மன்னித்துவிடுங்கள். அவர்களை திருத்த முயலாதீர்கள். கண்டிப்பாக அடிக்காதீர்கள். அவர்களை கோபப்படுத்தக்கூடாது. முடிந்த வரை அவர்கள் கூறுவதற்கு எதிர்வாதம் செய்யாமல் இருக்க வேண்டும். சில இடங்களில் ஆவி பாதித்த நபரை சங்கிலியால் கட்டிப்போடுகிறார்கள். சற்று அன்போடு கவனித்தால் சங்கிலியால் கட்டிப்போட தேவை இல்லை. அன்புக்கு எல்லாமே அடிமையாவிடும். மிருகங்கள் கூட அன்புக்கு அடிமையாகிவிடும். அப்படியிருக்கும்போது ஆவிகள் எம்மாத்திரம்? அவர்களும் இதற்கு முன்பு மனிதர்களாக இருந்தவர்கள்தானே.அவர்களது பிடிவாத குணத்தினால்,அறிவற்ற தன்மையினால்.பாவத்தின் விளைவுகளால் ஆவிகளாக சுற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அன்பே அனைத்திற்கும் மருந்து. .. இந்த கட்டுரை உங்களுக்கு எந்த அளவுக்கு பிடிக்கும் என்று எனக்குத்தெரியாது. .. .. |
ஆவி உலகம்-தொடர்-பாகம்-12 .. சிறு தெய்வ வழிபாடும் ஆவி வழிபாடும் ஒன்றா? தேவர்களால் தேவைப்படும்போது மனித உடலை எடுத்துக்கொள்ள
முடிகிறது. ஆவிகளால் அது ஏன் முடியாது? .. தேவர்களின் சூட்சும உடலுக்கும் ஆவிகளின்
சூட்சும உடலுக்கும் மிகுந்த வேறுபாடு இருக்கிறது. .. தேவர்களின் சூட்சுமஉடல் சத்துவ குணத்தால்
ஆனது. மனிதர்களின் சூட்சு உடல் ரஜோகுணத்தால் ஆனது. ஆவிகளின் சூட்சுமஉடல் தமோ குணத்தால்
ஆனது. தேவர்களின் சூட்சும உடல் என்று குறிப்பிடும்போது
அது சிவன்,விஷ்ணு,பிரம்மா,தேவி போன்ற தெய்வங்கள் முதல் சொர்க்கத்தில் வாழும் வாழும்
அனைத்து தேவர்களையும்,தேவிகளையும்,மஹரிஷிகளையும், சேர்த்து குறிப்பிடுகிறேன். புண்ணிய பலனுக்கு ஏற்ப தேவர்களின் உடல் மாறுபடும். .. சத்வகுணத்தின் தன்மை- பற்றற்நிலை, ஒளி, ஞானம்,கருணை
போன்றவை ரஜோ குணத்தின் தன்மை -விருப்பு,வெறுப்பு,பற்று,ஆசை
போன்றவை தமோ குணத்தின் தன்மை- அறியாமை,இருள்,மயக்கம்,
தூக்கம் போன்றவை. .. எனவே ஆவிகளின் சூட்சுஉடலுக்கும் தேவர்களின்
சூட்சுஉடலுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு இருக்கிறது. தேவர்களின் உடலை,ஆவிகளின் உடலோடு சம்மந்தப்படுத்தக்கூடாது.
ஆவிகளின் சூட்சுமஉடல் மனிதர்களின் சூட்சும உடலைவிட கீழானது. .. தேவர்களால் தேவைப்பட்டால் தூலஉடலை எடுக்கமுடியும். இயற்கை
சக்தி முழுவதையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் அவர்களிடம் இருப்பதால் அவர்களால் எளிதாக
எந்த உடலையும் எடுக்க முடியும். சிவபெருமான் மனிதனாக வந்து திருவிளையாடல்
புரிந்ததை படித்திருக்கிறோம். இதேபோல பல இடங்களில் தேவர்கள் மனிதர்களாக
வந்து மனிதர்களுடன் உறவாடிவிட்டு செல்வதை படித்திருக்கிறோம். .. சுவாமி விவேகானந்தர் ஒருமுறை கூறும்போது,
எனது சூட்சுமஉடல் விரிவடைந்துகொண்டே செல்கிறது. இப்படியே சென்றால் இந்த தூலஉடலால்
அதைத்தாங்கிக்கொள்ள முடியாது.அது வெடித்துவிடும்போல உள்ளது.இன்னும் அதிக நாட்கள்
இந்த தூலஉடல் தாங்காது என்று கூறியுள்ளார். மகான்கள் தங்கள் சூட்சுஉடலை விரிவடைய செய்யும்போது
அது தூலஉடலைவிட்டு வெளியேறிவிடுகிறது. சூட்சுஉடல் என்பது மனித உடலைவிட மிகப்பெரியது
என்பது தெரிகிறது. தேவர்கள் வானத்திலிருந்து பூமாரி பொழிவதை
மனிதர்கள் பூமியிலிருந்து பார்ப்பதாக நாம் படிக்கிறோம். அப்படியென்றால் அவர்களின் உடல் எவ்வளவு பெரியது. .. சிறு தெய்வ வழிபாடும் ஆவி வழிபாடும் ஒன்றா? .. சிறுதெய்வ வழிபாடுகள் பலவகைப்படும். 1.திருமணமாகாமல் அகாலமரணமடைந்தவர்களை வீட்டில்
வைத்து வழிபடுவது. இதை கன்னிவழிபாடு என்பார்கள். 2.நல்லபடியாக வாழ்ந்து முடித்து,அதேநேரத்தில்
சில ஆசைகளோடு இறக்கும் பெற்றோரை வீட்டில் வைத்து வழிபடுவார்கள். 3.முற்காலத்தில் ஊரைகாவல் காக்கும் வீரன்
ஒருவன் எதிரிகளிடம் போரிட்டு வீரமரணம் அடைந்தால்,ஊருக்கு வெளியே கோவில்கட்டி அவனை
வழிபடுவார்கள். 4.சுடுகாட்டில் பிணங்களை எரித்தபிறகு அந்த
ஆவிகளை கட்டுப்படுத்தி சுடுகாட்டிற்குள்ளேயே வைத்திருக்க வேண்டும். அந்த ஆவிகள் சுடுகாட்டைவிட்டு
வெளியேறி மறுபடியும் வீட்டிற்கு வந்துவிடக்கூடாது. எனவே இதற்காக சுடுகாட்டு தலைவன் ஒருவன்தேவை.அவனுக்கு
சுடலைமாடன் என்று பெயர்.இந்த வழிபாடும் உள்ளது. 4.முற்காலத்தில் குளங்களை நம்பித்தான் மனிதர்கள்
குளிப்பது,விவசாயம்,மாடுகளுக்கு குடிநீர் போன்றவை நடந்தன. எதிரிகள் இரவுநேரத்தில் அந்த குளத்தில் விஷத்தை
கலந்துவிடாமல் தடுப்பதற்காக குளத்தை காப்பாற்ற காவல் தெய்வங்கள் உள்ளன.இந்த வழிபாடும்
உள்ளது. 5.இதேபோல அணைகளை பாதுகாக்க தெய்வங்கள் உள்ளன. 6.அரசர்கள் மிகப்பெரிய கோவிலை கட்டியபிறகு
அந்த கோவிலை எதிரிகளிடமிருந்தும், எதிரிநாட்டு ஆவிகளிடமிருந்தும் காப்பாற்ற நான்கு
மூலையிலும் காவல் தெய்வங்களை நிறுவுவார்கள். இந்த வழிபாடும் உள்ளது. 7.அரசர்கள் இறந்துவிட்டால் தங்களுக்கென்று
கோவில் கட்டிக்கொள்வார்கள். அந்த கோவிலின் அடியில் அரசர்களின் உடல் புதைக்கப்பட்டிருக்கும்.(கோ-என்றால்
அரசன் இல்-என்றால் இல்லம்) முற்காலத்தில் இருந்த சிறுசிறு கோவில்கள் அரசர்களின் உடல்
புதைக்கப்பட்ட இடமாகும்.அங்கும் அரசருக்கான வழிபாடுகள் நடைபெறும் 8.போரில் ஈடுபடும் முன்னர் சில வீரர்கள்
தங்கள் உடலை தியாகம் செய்து, ஆவிகளாக மாறுவார்கள். இரவு நேரங்களில் நடக்கும் தாக்குதல்களில்
அவர்கள் ஈடுபடுவார்கள். இந்த வீரர்களுக்கான வழிபாடும் உள்ளது. இது தவிர இன்னும் பலவகையான வழிபாடுகள் உள்ளன. இவைகள் எல்லாமே இறந்த முன்னோர்களின் வழிபாடுதான். இந்த வழிபாடுகளில் பல வேறுபாடுகள் இருக்கும் இந்த ஆவிகளின் சக்தியில் வேறுபாடு இருக்கும். .. மேலே கூறப்பட்ட வழிபாடுகளில் அரசன் மற்றும்
அரசியின் வழிபாடு சற்று உயர்வானது. இன்னும் சித்தர் வழிபாடு போன்ற பல வழிபாடுகள்
உள்ளன. .. |
ஆவி உலகம் பற்றிய இந்த தொடர் இந்துடன் முடிகிறதா? இதுவரை வந்த கேள்விகளுக்கு பதில் சொல்லியிருக்கிறேன். இனி உங்களிடம் கேள்விகள் இருந்தால் எனக்கு வாட்அப்பில் கேளுங்கள். .. சுவாமி வித்யானந்தர்-கன்னியாகுமரி WhatsApp+919360209541 முதல் பதிப்பு வெளியிடப்பட்டநாள் : 22-4-2025 |
No comments:
Post a Comment