ஆன்மீகமும்-விஞ்ஞானமும்-பாகம்-5
..
அனைத்து
மனங்களின் இணைப்பு(மஹத்)
..
விஞ்ஞானகோட்பாட்டின்படி
ஓர் அணு இன்னோர் அணுவோடு இணைக்கப்பட்டுள்ளது. எந்த அணுவுமே தனியாக இயங்க முடியாது.
ஒவ்வொரு அணுவும் இந்த பிரபஞ்சத்திலுள்ள பிற அணுக்களோடு இணைந்துதான் செயல்பட முடியும்.
..
இதே
கோட்பாடு மனத்திற்கும் பொருந்தும். எந்த மனமும் தனியாக இயங்க முடியாது. ஒவ்வொரு மனமும்
பிற மனங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒரு மனத்தில் ஒரு மாற்றத்தை உண்டாக்கினால் அது
பிறருடைய மனங்களில் மாற்றத்தை உருவாக்கும். இவ்வாறு உலகிலுள்ள ஒட்டுமொத்த மனங்களும்
ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது.
இந்த
ஒட்டுமொத்த இணைப்பிற்கு மஹத் அல்லது பிரபஞ்சமனம் என்று பெயர்.
..
ஒவ்வொரு
மனிதனிடமும் செயல்படும் மனம் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. இன்று இருக்கும் மனிதன்
நாளை இருப்பதில்லை. நாளை இருக்கும் மனிதன் அடுத்த வருடம் இருப்பதில்லை. அவனது மனம்
தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது.
..
இந்த
மஹத் என்பது மிகப்பெரிய தத்துவம். ஒவ்வொரு மனிதனுக்கும் பின்னால் ஒரு மனம் இருப்பதுபோல
ஒவ்வொரு விலங்குகளுக்கும் பின்னால் ஒரு மனம் இருக்கிறது. அதை நாம் ஜந்தறிவு,நான்கறிவு,
என்றெல்லாம் வகைப்படுத்துகிறோம். தாவரங்களுக்குகூட மனம் இருக்கிறது. மனிதனிடம் இருப்பதுபோன்ற
மனம் இல்லாவிட்டாலும் அவைகளுக்கு ஓர் அறிவு மனம் உள்ளது.
மனிதனின்
மனம் மட்டும் ஒன்றிணைக்கப்படவில்லை. இந்த உலகத்திலுள்ள எல்லா உயிர்களின் மனமும்கூட
அந்த மஹத் என்ற பிரபஞ்சமனத்தில் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது.
..
முதலில்
தோற்றியது மனமா?உடலா? உடல் தோன்றிய பிறகு மனம் தோன்றியதா அல்லது மனம் தோன்றி பிறகு
உடல் தோன்றியதா? இது ஒரு வட்டம் போல சுழற்சிபோல உள்ளது. மனம் உடலை உருவாக்குகிறது.
உடல் மனத்தை உருவாக்குகிறது.
.
இந்த
பிரபஞ்சத்திலுள்ள மனத்தை வேதகால ரிஷிகள் மூன்றாக பிரித்தார்கள். 1.ஆழ்மனம் 2. பகுத்தறியும்
மனம் 3. உணர்வுக்கு அப்பால் செல்லும் மனம். ஆழ்மனம் என்பது மிருகங்களிடமும்,தாவரங்களிடமும்
பிற உயிர்களிடமும் காணப்படுகிறது. பகுத்தறியும் மனம் மனிதர்களிடம் காணப்படுகிறது. உணர்வுகடந்த
மனம் ரிஷிகளடம், தியானம் செய்பவர்களிடம் காணப்படுகிறது.
..
இந்த
தூல உடல் இயங்குது ஆழ்மனத்தினால். எண்ணங்கள். எண்ணங்கள் வருவது பகுத்தறியும் மனத்தினால்.
உணர்வு கடந்த மனத்தினால் பிரபஞ்சத்தின் ரகசியங்களை அறியலாம்.
..
இந்த
மஹத் என்பதற்கு இன்னொரு பெயர் உள்ளது அதுதான் வேதம்.
பொதுவாக
நாம் ரிக்,யஜுர்,சாம,அதர்வண வேதங்களை வேதம் என்று கூறுகிறோம்.
அவைகள்
வேதத்தின் ஒரு பகுதி மட்டுமே
ஆனால்
வேதம் என்பது மிகப்பெரிய பொருளை உடையது.இந்த பிரபஞ்ச மனத்திற்கு வேதம் என்று பெயர்.
ஆழ்மனம்,பகுத்தறியும்
மனம்,உணர்வு கடந்த மனம் எல்லாமே வேதம்.
வேதத்தில்
அடங்காதது எதுவும் இல்லை. இந்த தூல பிரபஞ்சம் வேதத்திலிருந்து வெளிப்படுகிறது.
..
தோற்றாநிலையில்
முழுவதும் ஒடுங்கிய நிலையில் இந்த பிரபஞ்சம் இருந்தபோது, அதிலிருந்து முதலில் வெளிப்பட்டது
வேதம். அதாவது மஹத் அல்லது பிரபஞ்ச மனம். வேதத்திலிருந்து சூட்சும பிரபஞ்சம் வெளிப்பட்டது.
படைப்பு கடவுள்,காக்கும் கடவுள்,அழிக்கும் கடவுள் வெளிப்பட்டார்கள், அவர்களிலிருந்து
தேவர்கள் வெளிப்பட்டார்கள். இவர்கள் எல்லாம் சூட்சுமஉடலை உடையவர்கள்.
இவர்களிடமிருந்து
தூலஉடலைஉடைய பிரபஞ்சமும்,சூரியர்களும்,கிரகங்களும். மனிதர்களும், பிற உயிர்களும் வெளிப்பட்டார்கள்.
..
சூட்சும
உலகங்களில் வாழும் தெய்வங்களை விஞ்ஞானம் ஒப்புக்கொள்ளவில்லையே என்று நீங்கள் கேட்கலாம்.
சூட்சும
உடகம்,தூல உலகம் இரண்டும் ஒரு வட்டம்போல ஒரு சுழற்சிபோல உள்ளது. தூலஉலகிலிருந்து சூட்சும
உலகிற்கு செல்லலாம், சூட்சும உலகிலிருந்து தூலஉலகிற்கு செல்லலாம்.
மனிதர்கள்
தற்போது தூலஉடலில் வாழ்கிறார்கள். இப்போது உள்ள நிலையில் பிற உலகங்களுக்கு செல்ல முடியவில்லை.
இனி இதே மனிதர்கள் சூட்சும உடலைப்பெறும் காலம் ஒன்று வரும். அப்போது அவர்களே தேவர்களாக
மாறி பிற உலகங்களுக்கு செல்வார்கள். இயற்கையை கட்டுப்படுத்தும் ஆற்றலைப்பெருவார்கள்.
அப்போது அவர்கள் காக்கும் தெய்வங்களாகவும். உலகை அழிக்கும் தெய்வங்களாகவும் மாறிவிடுவார்கள்.
இது
ஒரு சுழற்சி.தேவர்கள் மனிதர்களாக பிறப்பதும், மனிதர்கள் தேவர்களாக உயர்வதும் நடக்கக்கூடியதுதான்
என்று வேதம் கூறுகிறது.
..
இதில்
உள்ள சில கருத்துக்கள் தத்துவம் படிக்காதவர்களக்கு புரியாமல் இருக்கலாம்.
உங்கள்
கேள்விகளை +919360209541 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பவும்
சுவாமி
வித்யானந்தர்-கன்னியாகுமரி(16-5-2025)
No comments:
Post a Comment