Wednesday, 14 May 2025

ஆன்மீகமும்-விஞ்ஞானமும்-பாகம்-3

 

ஆன்மீகமும்-விஞ்ஞானமும்-பாகம்-3

..

கருந்துளை BLACK HOLE

..

கருந்துளை பற்றி விஞ்ஞானிகள் கூறும் கருத்தை சிலர் படித்திருப்பீர்கள்.

சூரியன் அழியும் காலம் வரும்போது பெரியதாக வீங்கும். பின்பு அது பெரிதாகி பெரிதாக முடிவில் வெடித்து சிதறிவிடும். அப்போது அதன் மையக்கரு கருந்துளையாக மாறிவிடும். அந்த கருந்துளை அதன் அருகில் வரும் ஒளியையும், பிற மாசுக்களையும், அனைத்தையும் தன்னுள் ஈர்த்துள்கொள்ளும், வெளியே விடாது. பின்பு பல காலம் கழித்து ஒருநாள் அந்த கருந்துளை வெடித்து சிதறும் அதிலிருந்து புதிய சூரியன்களும், கிரகங்களும் தோன்றும்.

..

சுவாமி விவேகானந்தர் ஒருமுறை ஸ்ரீராமகிருஷ்ணரிடம் இவ்வாறு கேட்டார்.

நான் தியானிக்கும்போது வெண்ணிறத்தின் ஒன்றைக் ஒன்றைக் கண்டேன், அதிலிருந்து பல பிரம்மாண்டங்கள் வெளிப்பட்டன.அது என்ன? என்று கேட்டார்.அதற்கு ஸ்ரீராமகிருஷ்ணர் கூறினார், அதுதான் பிரம்மயோனி,நானும் அதைப் பார்த்திருக்கிறேன். அது முக்கோண வடிவமாக இருப்பதைப் பார்த்தேன். அதிலிருந்து ஒவ்வொரு நொடியும் கணக்கில்லாத பிரம்மாண்டங்கள் வெளிப்படுகின்றன. அதேபோல கணக்கற்ற பிரம்மாண்டங்கள் உள்இழுக்கப்படுகின்றன என்றார்.

..

இது 1885 கால கட்டத்தில் நிகழ்ந்தது. நமது முன்னோர்கள் இவைகளை தியானத்தின் மூலம் கண்டிருக்கிறார்கள்.

இன்னொன்று ஸ்ரீராமகிருஷ்ணர் கூறுவார். இந்த அண்ட பெரு வெளியெங்கும் அகிலாண்டேஸ்வரியின் கோடிக்கணக்கான வைர வைடூரியங்கள் கொட்டிக்கிடக்கின்றன. அவைகளைப்பற்றி அறிந்துகொள்வதில் மனத்தை செலுத்தினால் அவளை அடைய முடியாது. மனம் அவைகளிலேயே மயங்கி அங்கேயே நின்றுவிடும் என்றும் கூறுவார்.

அவர் வைர வைடூரியங்கள் என்று கூறியது பிரபஞ்சம் முழுவதும் பல நிறங்களில் காணப்படும் பல்வேறு சூரியர்கள்,நெபுலாக்கள் மற்றும் பிற .

 வானஇயல் பற்றி ஸ்ரீராமகிருஷ்ணர் படிக்காததால். இவைகளை வைர வைடூரியங்கள் என்று கூறியிருக்கிறார்.

..

இப்போது இரண்டு நிகழ்வுகளைப்பார்க்கலாம் ஒன்று பல பிரம்மாண்டங்கள் வெளிப்படும் வெண்துளை, அது பிரம்மயோனி.

இன்னொன்று அதற்குள்ளேயே பல பிரம்மாண்டங்கள் இழுக்கப்படுகின்றன என்கிறார். அது கருந்துளை என்று ஏன் கூறவில்லை.

உண்மையில் அந்த கருந்துளையை காணமுடியாது. பிரம்மாண்டங்கள் உள் இழுக்கப்படும்போது வெளிப்படும் வெளிச்சத்தைத்தான் காண முடியும்.இரண்டும் பார்ப்பதற்கு ஒன்றுபோலவே இருந்தாலும் இரண்டும் வேறுவேறு.

..

அனைத்தையும் உள்இழுக்கும் கருந்துளையைப்பற்றி வேதம் எப்படி கூறுகிறது?

..

..

 

இந்த கணக்கில்லாத பிரம்மாண்டங்கள் ஒடுங்கிய பிறகு அங்கே என்ன இருந்தது என்ற கேள்வி கேட்கப்படுகிறது.

அப்போது இருள் இருளில் மூடப்பட்டு கிடந்தது.அப்போது காலம் இல்லை. எதுவும் இல்லை என்று வேதம் கூறுகிறது.

அதை அவ்யக்தம், இயங்காத நிலை, அனைத்தும் ஒடுங்கிய நிலை என்கிறது.

..

இப்போது விஞ்ஞான கோட்பாட்டின்படி பார்ப்போம். ஒரு அணுவில் என்ன இருக்கிறதோ அதுதான் பிரபஞ்சத்திலும் இருக்கும். வேதம் இதை இவ்வாறு கூறுகிறது, ஒரு களிமண் துண்டை அறிந்தால் பிரபஞ்சம் முழுவதையும் அறியலாம், மிகச்சிறியதை அறிபவன் மிகப்பெரியதையும் அறிவான்.

..

பிரபஞ்சத்தில் பல கருந்துளைகள் இருக்கின்றன என்றால் ஒரு சிறிய அணுவிலும் கருந்துளை இருக்கவேண்டும் அல்லவா. அது மட்டுமல்ல ஒரு சிறிய அணுவிலும் வெண்துளை இருக்க வேண்டும்.

.

இதை மனிதனுக்குப்பொருத்திப் பார்த்தால் மனிதனிலும் கருந்துளை இருக்க வேண்டும். வெண்துளையும் இருக்க வேண்டும். அப்படியானால் அது எங்கே இருக்கிறது?

கருந்துளைதான் மூலாதாரம். வெண்துளைதான் சகஸ்ராரம். சகஸ்ராரத்திலிருந்துதான் புதிய உயிர் உருவாகிறது.

மூலாதாரத்தில் உயிர் ஒடுங்குகிறது.

.

புதிய உயிருக்கான விந்தணு சகஸ்ராரத்திலிருந்து உற்பத்தி ஆகிறது.அப்போது அதற்கான காலம் துவங்குகிறது. பின்பு அது மனிதனாக பிறந்து வளர்ந்து ஒரு சுற்றை முடித்துவிட்டு மூலாதாரத்திற்குள் ஒடுங்குகிறது.

ஆனால் ரிஷிகள் மூலாதாரத்திற்குள் ஒடுங்குவதில்லை. அவர்கள் தனது உடலை பிரபஞ்ச உடலாகவும், தனது மனத்தை பிரபஞ்ச மனமாகவும். தனது ஆத்மாவை பரமாத்மாவாகவும் உயர்த்தி அதில் ஒன்றிவிடுகிறார்கள்.

....

..

இதில் உள்ள சில கருத்துக்கள் தத்துவம் படிக்காதவர்களக்கு புரியாமல் இருக்கலாம்.

உங்கள் கேள்விகளை +919360209541 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பவும்

சுவாமி வித்யானந்தர்-கன்னியாகுமரி(13-5-2025)

 

No comments:

Post a Comment

பித்ருக்களுக்கு தினமும் உணவிட வேண்டும்

  பித்ருக்களுக்கு தினமும் உணவிட வேண்டும் .. துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை. -திருக்குறள் ...