ஆன்மீகமும்-விஞ்ஞானமும்-பாகம்-4
சுழுமுனை
நாடியும், பிரபஞ்ச விரைவுப் பாதையும்
..
கடந்த
கட்டுரையில் மனிதனின் மூலாதாரம்தான் BLACKHOLE சகஸ்ராரம்தான் WHITEHOLE என்று கூறியிருந்தேன்.
இப்போது பிரபஞ்சத்தைப் பார்ப்போம்.நாம் வசிக்கும் சூரிய குடும்பம் எந்த BLACKHOLEயை
சுற்றிக்கொண்டிருக்கிறது?
நமது
சூரிய குடும்பம் Milky Way galaxy யின் ஒரு அங்கம். அந்த Milky Way galaxy யில் நமது
சூரியன் போல 100 billion முதல் 400 billion சூரியன்களும் 1000 billion கோள்களும் உள்ளன. (1 billion என்பது
100 கோடி) இந்த Milky Way galaxy யில் மையத்தில் ஒரு BLACKHOLE உள்ளது. இதையே நமது
சூரிய குடும்பமும் பிற 400 கோடி சூரிய குடும்பங்களும் சுற்றி வருகின்றன. நமது
Milky Way galaxy போல பிரபஞ்சத்தில் 2 trillion galaxyக்கள் உள்ளது.
..
இப்போது
விஷயத்திற்கு வருவோம்
இந்த
பிரபஞ்சத்தில் எப்படிப்பட்ட அமைப்பு உள்ளதோ அதேபோன்ற அமைப்புதான் நமது உடலிலும் உள்ளது.
நமது
உடலில் மூலாதாரம் மற்றும் சகஸ்ராரம் இரண்டையும் இணைப்பது முதுகுத்தண்டின் உள்யே ஓடும்
சுழுமுனை நாடி. பொதுவாக இது மூடியிருக்கும். யோகிகளுக்கு மட்டுமே இது திறந்திருக்கும்.
தியானத்தின்போது உயிர் மூலாதாரத்திலிருந்து சுழுமுனை நாடி வழியாக சகஸ்ராரம்நோக்கி செல்கிறது.
அப்போது
பல்வேறு மையங்கள் வழியாக சென்று இறுதியில் சகஸ்ராரத்தை அடைகிறது.ஒவ்வொரு மையத்தை அடையும்போது
புதுப்புது அனுபவங்களை,புதுப்பது காட்சிகளை மனிதன் பாரக்கிறான். இது ராஜயோகம் படித்தவர்களுக்கு
புரியும்
..
இதேபோல
நமது Milky Way galaxyயிலும் ஒரு சுழுமுனை நாடி உள்ளது. அதன் ஒரு பகுதி BLACKHOLE லிலும்
இன்னொரு பகுதி WHITEHOLE லிலும் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த
Milky Way galaxyயின் நீளம் 100,000 light-years .light-years பற்றி தெரியாதவர்கள்
படித்துக்கொள்ளுங்கள்.
இவ்வளவு
நீண்ட ஒளி ஆண்டுகள் கொண்டது Milky Way galaxy மனிதனால் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு
பக்கத்தை அடைய 100,000 light-years பயணிக்க வேண்டும்.
ஒரு
யோகி சுழுமுனைநாடி வழியாக செல்லும்போது என்ன நடக்கிறது?
காலம்
விரைவாக்கப்படுகிறது. மிகவேகமாக பல்வேறு உலகங்களை அடைகிறான்.
சுழுமுனைநாடி
என்பது மிக வேகமாக செல்லக்கூடிய பாதை.
.
இதேபோல
நமது Milky Way galaxyயில் உள்ள சுழுமுனை நாடி வழியாக பயணிக்க முடிந்தால் மிகவேகமாக
ஓர் சூரியகுடும்பத்திலிருந்து இன்னொரு சூரிய குடும்பத்திற்கு செல்ல முடியும்.
இதுதான்
இவ்வளவு நேரம் நான் சொல்ல நினைத்த விஷயம்.
இதை
எப்படி செய்வது? இது சாத்தியமா?
...
மூன்று உடல்கள் உள்ளன. 1. தூலஉடல் 2. சூட்சுமஉடல்
அல்லது ஒளிஉடல் 3. காரணஉடல். இதற்கு பிறகு பிரம்மம்
..
தூல
உடலின் மூலம் இந்த உலகங்களில் பயணிக்க முடியாது. ஆனால் சூட்சும உடல் மூலம் பயணிக்கலாமா?
கண்டிப்பாக
முடியும். முதலில் நமது சூட்சும உடலை ஒளி உடலாக மாற்ற வேண்டும். சூட்சுஉடல் இரண்டுவிதமாக
உள்ளது. 1. ஆவிகளின் சூட்சுஉடல் இருள் உடலால் ஆனது. 2. தேவர்களின் சூட்சுஉடல் ஒளி உடலால்
ஆனது.
நமது
உடலை தேவர்களின் உடல்போன்று ஒளி உடலாக மாற்ற வேண்டும். அதாவது தேவனாக மாறவேண்டும்.
அப்படி
மாற முடிந்தால் galaxyயில் உள்ள சுழுமுனை நாடி வழியாக பயணிக்க முடியும். நமது பூமியைப்போல
உள்ள பல்வேறு பூமிகளை சென்று பார்க்க முடியும். அத்தோடு அங்கே இறங்கவும் முடியும்.
மீண்டும் அங்கே மனித உடலை எடுக்கவும் முடியும்.
..
நமது
தூலஉடலை இங்கேயே விட்டுவிட்டு ஒளி உடலோடு பயணிக்கிறோம். சரி. பிறகு எப்படி இன்னொரு
தூலஉடலை உருவாக்க முடியும்? மனிதர்களால் ஒரு
உடலைப்போல பல தூலஉடல்களை உருவாக்க முடியும்,ஒரே நேரத்தில் பல உடல்கள் மூலம் வேலைசெய்ய
முடியும் என்று பதஞ்சலி யோக முனிவர் கூறுகிறார்.
..
இவ்வாறு
தேவ உடலை ஒருவர் பெறும்போது அவரால் ஒரு
galaxyயில் உள்ள பல்வேறு பூமிகளுக்கு செல்ல முடியும்.
அங்கே
புதிய மனித உடல்களை உருவாக்க முடியும். அத்தோடு மரம்செடி கொடிகளை உருவாக்க முடியும்.
நீர்நிலைகளை
உருவாக்க முடியும். நமது பூமியைப்போல புதிய பூமியையே உருவாக்க முடியும்.
.
இதிலிருந்து
இன்னொரு விஷயமும் புரிகிறது. நமது பூயியில் உள்ள மனித இனம் இதற்கு முன்பு இன்னொரு பூமியில்
வாழ்ந்த மனித இனத்தின் சந்ததிகளாக இருக்கலாம். நாம் இன்னும் சில நூற்றாண்டுகளில் புதிய
பூமிக்கு பயணித்து அங்கே நமது சந்ததிகளை உருவாக்க இருக்கிறோம்.
நமக்கு
இப்போது தெரியாத விஷயம் எதுவென்றால் நமது உடலை எப்படி ஒனிஉடலாக மாற்றுவது என்பதுதான்.
..
இதுபற்றியும்
நமது முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்.
ஒரு
இரும்புத் துண்டில் அதிக அளவு சக்தியை அதாவது வெப்பத்தை செலுத்துவதாக வைத்துக்கொள்வோம்.அது
முதலில் சூடாகி ஒளிர ஆரம்பிக்கிறது. இன்னும் சக்தியை(வெப்பத்தை) செலுத்தினால் அது உருகிவிடுகிறது.
இன்னும் வெப்பத்தை செலுத்தினால் ஆவியாகிவிடுகிறது. இன்னும் சக்தியை செலுத்த முடிந்தால்(தற்கால
விஞ்ஞானத்தால் முடியாது) ஆவியானது அதிர்வுகளாக மாறிவிடும். அவ்வாறு அதிர்வாக மாறியதில்
உள்ள சக்தியை படிப்படியாக குறைக்க முடிந்தால் அது பழையபடி ஆவியாக மாறும் பிறகு இன்னும்
சக்தியை குறைத்தால் உருகியகுளம்மாக மாறும் இன்னும் சக்தி குறைக்கப்பட்டால் திடமான பொருளாக
மாறும்.
..
இதில்
சக்தியின் அளவைப்பொறுத்து ஒரு பொருள் ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலையை அடைகிறது.
மனிதன்
தற்போது தூலஉடலில் இருக்கிறான். அவன் ஒளிஉடலை அடைய வேண்டுமானால் என்ன செய்யவேண்டும்.
அவனுக்குள் சக்தியை செலுத்தவேண்டும். சக்தி அதிகமானால் ஒளிஉடலாக மாறுவான். இன்னும்
சக்தி அதிகமானால் காரண உடலாக மாறுவான். எல்லையற்ற சக்தியை அடைய முடிந்தால் கடவுளாக
மாறுவான்.
..
இப்போது
இன்னொரு விஷயத்தையும் பார்ப்போம் இந்த பிரபஞ்சம் முழுவதும் எல்லையற்ற சக்தி நிறைந்திருக்கிறது.
ஆகாசம்
என்று ஒரு தத்துவம் உள்ளது. இந்த ஆகாசம் என்பது அதிர்வுகளால் ஆனது. இந்த ஆகாசத்தில்
எல்லையற்ற சக்தி அடங்கியுள்ளது. இந்த சக்தியிலிருந்து சிறிது சக்தியை குறைத்தால் ஆகாசம்
வெப்பமாக மாறும், அதிலிருந்து சிறிது சக்தியை குறைக்க முடிந்தால் அது வாயுவாக மாறும்.
அதிலிருந்து இன்னும் சக்தியை குறைக்க முடிந்தால் வாயு. திரவ நிலையை அடையும். திரவநிலை
பின்பு திடநிலையை அடையும்.
..
இந்த
கட்டுரையின் சுருக்கம் இதுதான்
மனிதன்
பிரபஞ்சத்தில் உள்ள எல்லையற்ற சக்தியை தனதாக்கிக்கொள்ள முடிந்தால் அவனால் ஓர் உலகத்திலிருந்து
இன்னொரு உலகத்திற்கு ஒளிஉடல் மூலம் பயணிக்க முடியும். அவ்வாறு பல உலகங்களுக்கு செல்று
அங்கே புதிய உயிரினங்களை படைக்க முடியும். புதிய மனித குலத்தை உருவாக்க முடியும்.
இதேயே
வேதம் இவ்வாறு கூறுகிறது. ரிஷி தனது சக்தியினால் பூமியில் உயிரினங்களை தோற்றுவித்தார்.
....
இதில்
உள்ள சில கருத்துக்கள் தத்துவம் படிக்காதவர்களக்கு புரியாமல் இருக்கலாம்.
உங்கள்
கேள்விகளை +919360209541 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பவும்
சுவாமி
வித்யானந்தர்-கன்னியாகுமரி(14-5-2025)
No comments:
Post a Comment