Sunday, 11 May 2025

ஆவி உலகம்-தொடர்-பாகம்-12

 

ஆவி உலகம்-தொடர்-பாகம்-12

..

சிறு தெய்வ வழிபாடும் ஆவி வழிபாடும் ஒன்றா?

தேவர்களால் தேவைப்படும்போது மனித உடலை எடுத்துக்கொள்ள முடிகிறது.

ஆவிகளால் அது ஏன் முடியாது?

..

தேவர்களின் சூட்சும உடலுக்கும் ஆவிகளின் சூட்சும உடலுக்கும் மிகுந்த வேறுபாடு இருக்கிறது.

..

தேவர்களின் சூட்சுமஉடல் சத்துவ குணத்தால் ஆனது. மனிதர்களின் சூட்சு உடல் ரஜோகுணத்தால் ஆனது. ஆவிகளின் சூட்சுமஉடல் தமோ குணத்தால் ஆனது.

தேவர்களின் சூட்சும உடல் என்று குறிப்பிடும்போது அது சிவன்,விஷ்ணு,பிரம்மா,தேவி போன்ற தெய்வங்கள் முதல் சொர்க்கத்தில் வாழும் வாழும் அனைத்து தேவர்களையும்,தேவிகளையும்,மஹரிஷிகளையும், சேர்த்து குறிப்பிடுகிறேன்.

புண்ணிய பலனுக்கு ஏற்ப தேவர்களின் உடல் மாறுபடும்.

..

சத்வகுணத்தின் தன்மை- பற்றற்நிலை, ஒளி, ஞானம்,கருணை போன்றவை

ரஜோ குணத்தின் தன்மை -விருப்பு,வெறுப்பு,பற்று,ஆசை போன்றவை

தமோ குணத்தின் தன்மை- அறியாமை,இருள்,மயக்கம், தூக்கம் போன்றவை.

..

எனவே ஆவிகளின் சூட்சுஉடலுக்கும் தேவர்களின் சூட்சுஉடலுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு இருக்கிறது.

தேவர்களின் உடலை,ஆவிகளின் உடலோடு சம்மந்தப்படுத்தக்கூடாது. ஆவிகளின் சூட்சுமஉடல் மனிதர்களின் சூட்சும உடலைவிட கீழானது.

..

தேவர்களால்  தேவைப்பட்டால் தூலஉடலை எடுக்கமுடியும். இயற்கை சக்தி முழுவதையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் அவர்களிடம் இருப்பதால் அவர்களால் எளிதாக எந்த உடலையும் எடுக்க முடியும்.

சிவபெருமான் மனிதனாக வந்து திருவிளையாடல் புரிந்ததை படித்திருக்கிறோம்.

இதேபோல பல இடங்களில் தேவர்கள் மனிதர்களாக வந்து மனிதர்களுடன் உறவாடிவிட்டு செல்வதை படித்திருக்கிறோம்.

..

சுவாமி விவேகானந்தர் ஒருமுறை கூறும்போது, எனது சூட்சுமஉடல் விரிவடைந்துகொண்டே செல்கிறது. இப்படியே சென்றால் இந்த தூலஉடலால் அதைத்தாங்கிக்கொள்ள முடியாது.அது வெடித்துவிடும்போல உள்ளது.இன்னும் அதிக நாட்கள் இந்த தூலஉடல் தாங்காது என்று கூறியுள்ளார்.

மகான்கள் தங்கள் சூட்சுஉடலை விரிவடைய செய்யும்போது அது தூலஉடலைவிட்டு வெளியேறிவிடுகிறது.

சூட்சுஉடல் என்பது மனித உடலைவிட மிகப்பெரியது என்பது தெரிகிறது.

தேவர்கள் வானத்திலிருந்து பூமாரி பொழிவதை மனிதர்கள் பூமியிலிருந்து பார்ப்பதாக நாம் படிக்கிறோம்.

அப்படியென்றால் அவர்களின் உடல் எவ்வளவு பெரியது.

..

சிறு தெய்வ வழிபாடும் ஆவி வழிபாடும் ஒன்றா?

..

சிறுதெய்வ வழிபாடுகள் பலவகைப்படும்.

1.திருமணமாகாமல் அகாலமரணமடைந்தவர்களை வீட்டில் வைத்து வழிபடுவது. இதை கன்னிவழிபாடு என்பார்கள்.

2.நல்லபடியாக வாழ்ந்து முடித்து,அதேநேரத்தில் சில ஆசைகளோடு இறக்கும் பெற்றோரை வீட்டில் வைத்து வழிபடுவார்கள்.

3.முற்காலத்தில் ஊரைகாவல் காக்கும் வீரன் ஒருவன் எதிரிகளிடம் போரிட்டு வீரமரணம் அடைந்தால்,ஊருக்கு வெளியே கோவில்கட்டி அவனை வழிபடுவார்கள்.

4.சுடுகாட்டில் பிணங்களை எரித்தபிறகு அந்த ஆவிகளை கட்டுப்படுத்தி சுடுகாட்டிற்குள்ளேயே வைத்திருக்க வேண்டும். அந்த ஆவிகள் சுடுகாட்டைவிட்டு வெளியேறி மறுபடியும் வீட்டிற்கு வந்துவிடக்கூடாது.

எனவே இதற்காக சுடுகாட்டு தலைவன் ஒருவன்தேவை.அவனுக்கு சுடலைமாடன் என்று பெயர்.இந்த வழிபாடும் உள்ளது.

4.முற்காலத்தில் குளங்களை நம்பித்தான் மனிதர்கள் குளிப்பது,விவசாயம்,மாடுகளுக்கு குடிநீர் போன்றவை நடந்தன.

எதிரிகள் இரவுநேரத்தில் அந்த குளத்தில் விஷத்தை கலந்துவிடாமல் தடுப்பதற்காக குளத்தை காப்பாற்ற காவல் தெய்வங்கள் உள்ளன.இந்த வழிபாடும் உள்ளது.

5.இதேபோல அணைகளை பாதுகாக்க தெய்வங்கள் உள்ளன.

6.அரசர்கள் மிகப்பெரிய கோவிலை கட்டியபிறகு அந்த கோவிலை எதிரிகளிடமிருந்தும், எதிரிநாட்டு ஆவிகளிடமிருந்தும் காப்பாற்ற நான்கு மூலையிலும் காவல் தெய்வங்களை நிறுவுவார்கள். இந்த வழிபாடும் உள்ளது.

7.அரசர்கள் இறந்துவிட்டால் தங்களுக்கென்று கோவில் கட்டிக்கொள்வார்கள். அந்த கோவிலின் அடியில் அரசர்களின் உடல் புதைக்கப்பட்டிருக்கும்.(கோ-என்றால் அரசன் இல்-என்றால் இல்லம்) முற்காலத்தில் இருந்த சிறுசிறு கோவில்கள் அரசர்களின் உடல் புதைக்கப்பட்ட இடமாகும்.அங்கும் அரசருக்கான வழிபாடுகள் நடைபெறும்

8.போரில் ஈடுபடும் முன்னர் சில வீரர்கள் தங்கள் உடலை தியாகம் செய்து, ஆவிகளாக மாறுவார்கள். இரவு நேரங்களில் நடக்கும் தாக்குதல்களில் அவர்கள் ஈடுபடுவார்கள். இந்த வீரர்களுக்கான வழிபாடும் உள்ளது.

இது தவிர இன்னும் பலவகையான வழிபாடுகள் உள்ளன.

இவைகள் எல்லாமே இறந்த முன்னோர்களின் வழிபாடுதான்.

இந்த வழிபாடுகளில் பல வேறுபாடுகள் இருக்கும்

இந்த ஆவிகளின் சக்தியில் வேறுபாடு இருக்கும்.

..

மேலே கூறப்பட்ட வழிபாடுகளில் அரசன் மற்றும் அரசியின் வழிபாடு சற்று உயர்வானது.

இன்னும் சித்தர் வழிபாடு போன்ற பல வழிபாடுகள் உள்ளன.

..

தொடரும்...

..

உங்கள் கேள்விகளை +919360209541 வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பவும்,

டைப்செய்து அனுப்பலாம் அல்லது குரல் பதிவில் அனுப்பலாம்.

உங்களிடமிருந்து வரும் கேள்விகள் நின்றுவிட்டால் இந்த தொடர் நின்றுவிடும்.

 

..

சுவாமி வித்யானந்தா-KANYAKUMARI (22-4-2025)

No comments:

Post a Comment

பித்ருக்களுக்கு தினமும் உணவிட வேண்டும்

  பித்ருக்களுக்கு தினமும் உணவிட வேண்டும் .. துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை. -திருக்குறள் ...