Sunday, 11 May 2025

விஞ்ஞானமும்-ஆன்மீகமும்-பாகம்-2

 

விஞ்ஞானமும்-ஆன்மீகமும்-பாகம்-2

.

ஆற்றல் மாறா விதி:

.

ஆற்றல் ஒருபோதும் அழிக்கப்படாது, மாறாக அது ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு வடிவத்திற்கு மாறும். அதாவது, ஆற்றலை உருவாக்கவோ அழிக்கவோ முடியாது, ஆனால் ஒரு வகை ஆற்றல் இன்னொரு வகையாக மாறும்.

இந்த கொள்கை, பண்டைய இந்திய தத்துவங்களான யோகா, சாங்க்யம், வைஷைஷிகம் மற்றும் ந்யாயம் போன்ற தத்துவங்களில் காணலாம்.

.

இப்போது ஒவ்வொரு உயிர்களையும் எடுத்துக்கொள்வோம். ஒவ்வொரு உயிர்களிடமும் ஆன்மா இருக்கிறது.எல்லா ஆன்மாக்களிலும் சமமான அளவு சக்தி உள்ளது. ஆனால் அது வெளிப்படும்போது வெள்வேறு விதமாக வெளிப்படுகிறது.

.

மனிதனால் பறக்க முடியாது. பறவையால் பறக்க முடியும்.ஆனால் மனிதனால் ஆறாவது அறிவை பயன்படுத்த முடியும்.பறவைகளால் முடியாது.எறும்புகளால் மண்ணுக்கு அடியில் அற்புதமான புற்று உருவாக்க முடியும்.மனிதனால் முடியது.பறவையாலும் முடியாது. தேனீக்களால் தேன்கூடு கட்ட முடியும். அதில் சேகரிக்கப்படும் தேன் கீழே சிந்துவதில்லை. மனிதர்களாலோ,பறவைகளாலோ அவ்வாறு செய்ய முடியாது.மீன்களால் கடலில் நீண்டதூரம் செல்ல முடியும்.

ஒவ்வொரு இனத்திற்கு உள்ள சிறப்பு இன்னொரு இனத்திற்கு இல்லை.

ஆன்மாவில் அடங்கியுள்ள சக்தி ஒவ்வொரு உயிர்களிடமும் ஒவ்வொருவிதமாக வெளிப்படுகிறது.

..

இப்போது மேலே உள்ள ஆற்றல்மாறாக் கொள்கையை பார்ப்போம்.

ஆற்றலை புதிதாக உருவாக்க முடியாது.

இந்த உயிரினங்களுக்கு சக்தி எங்கிருந்து வருகிறது? அது ஏற்கனவே ஆன்மாவில் உள்ளது.

ஒரு ஆற்றல்தான் இன்னொரு ஆற்றலாக மாறும் என்ற விதியின்படி.

எறும்புவிடம் இருக்கும் அதே ஆற்றல்தான் பறவையிடம் பறக்கும் ஆற்றலாக மாறியிருக்கிறது. அதே ஆற்றல்தான் ஒரு மீனிடம் வெளிப்பட்டுள்ளது.மனிதனிடம் அதே ஆற்றல்தான் சிந்திக்கும் சக்தியாக வெளிப்பட்டுள்ளது.

இன்னொன்று பார்க்க வேண்டும். எல்லோரிடமும் சமமான அளவு ஆற்றல்தான் வெளிப்பட்டுள்ளது.ஆனால் அதன் தன்மைதான் வேறுபட்டுள்ளது.

ஒரு சக்தி(ஆற்றல்) இன்னொரு சக்தியாக மாறியிருக்கிறது.

..

இப்போது இந்த கோட்பாட்டை மனிதர்களிடம் இணைத்துப் பார்ப்போம்.

ஒருவனுக்கு உடல் பலம் அதிகம் இருக்கிறது.இன்னொருவனுக்கு சிந்திக்கும் சக்தி அதிகம் இருக்கிறது. இன்னொருவனுக்கு தியானம் செய்யும் சக்தி உள்ளது.

தியானம் செய்யும் சக்தியுள்ள மனிதனுக்கு உடல் பலம் இல்லை. உடல் பலம் உள்ளவனால் சிந்திக்க முடிவதில்லை.

ஆன்மாவிலிருந்து வெளிப்படும் ஒரே ஆற்றல்தான் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொருவிதமாக வெளிப்பட்டுள்ளது.

..

இப்போது ஒரு தீயமனிதனையும் ஒரு நல்ல மனிதனையும் இந்த கோட்பாட்டின்படி பார்ப்போம்.

ஆன்மாவிலிருந்து வெளிப்படும் ஆதே ஆற்றல்தான் ஒரு மனிதனிடம் தீமையை வெளிப்படுத்தியுள்ளது. அதே ஆற்றல்தான் ஒரு மனிதனிடம் நன்மையை வெளிப்படுத்தியுள்ளது.

இரண்டும் சம அளவு ஆற்றல்தான்.ஒன்றை நல்லது என்கிறோம் இன்னொன்றை தீயது என்கிறோம்.

..

இப்போது இந்த பிரபஞ்சம் முழுவதற்கும் இதை இணைத்துப்பார்த்தால்.

ஒரு அணுவில் எந்த அளவு ஆற்றல் இருக்கிறதோ அதே அளவு ஆற்றல்தான் ஒரு சூரியனிலும் இருக்கிறது.அதே அளவு ஆற்றல்தான் பூமியிலும்,சந்திரனிலும் இருக்கிறது.

அணுவில் அதன் வெளிப்பாடு நம் கண்களுக்குத் தெரிவதில்லை.அதனால் அதுகுறித்து சந்தேகப்படுகிறோம்.

ஆனால் அந்த அணுவிலும் அதே ஆன்மாதான் இருக்கிறது.

அணுவை துளைத்து துளைத்து கடைசியில் சென்றால் கடவுள் துகள் என்ற ஒன்றை அடைகிறோம்.

அந்த கடவுள் துகளை கட்டுப்படுத்த முடிந்தால் இந்த பிரபஞ்சமே அழிந்துவிடும்.

அந்த அளவு சக்தி அதற்குள் இருக்கிறது.

..

இப்போது இந்த கருத்தை நடைமுறை வாழ்வில் பார்ப்போம். நமக்குள்ளே ஆன்மாவின் எல்லையற்ற சக்தி உள்ளது. அதை நாம் எப்படி பயன்படுத்துகிறோமோ அதைப்பொறுத்து அது வெளிப்படுகிறது.ஆனால் எல்லோரிடமும் அது சமமாகவே வெளிப்பட்டுள்ளது. ஒரு மருத்துவரிடம் அந்த சக்தி எப்படி வெளிப்பட்டுள்ளதோ அதே அளவுதான் ஒரு விஞ்ஞானியிடமும் வெளிப்பட்டுள்ளது.அதே அளவு சக்திதான் ஒரு டிரைவரிடமும். ஒரு காய்கறி வியாபாரியிடம் வெளிப்பட்டுள்ளது.

செய்யும் தொழிலைவைத்து ஒருவரை நாம் உயர்ந்தவர் என்றும் இன்னொருவரை தாழ்ந்தவர் என்றும் சொல்கிறோம்.

அது ஏன்? நமது அறியாமைதான் இதற்குக் காரணம்.

ஒரு மகான் அப்படி பார்க்க மாட்டார். அவரது கண்களுக்கு ஒரு மருத்துவரும்,ஒரு விஞ்ஞானியும், ஒரு காய்கறி வியாபாரியும் ஒன்றுதான். எல்லோரிடமும் ஒரே ஆன்மாதான் உள்ளது. அதே ஆன்மாதான் ஒவ்வொருமனிதரிடமும் ஒவ்வொருவிதமாக வெளிப்பட்டுள்ளது.எல்லாமே சமம்

..

பன்மை நிறைந்த இந்த உலகில் ஒருமையைக் காண்பவன் யாரோ அவனே உண்மையைக் காண்பவன்.அவன் எங்கும் இறைவனையே காண்கிறான் என்று வேதம் கூறுகிறது.

நவீன விஞ்ஞானமும் ஆன்மீகமும் எப்படி ஒன்றிணைந்துள்ளது பாருங்கள்.

..

உங்கள் கேள்விகளை +919360209541 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பவும்

சுவாமி வித்யானந்தர்-கன்னியாகுமரி(10-5-2025)

 

No comments:

Post a Comment

பித்ருக்களுக்கு தினமும் உணவிட வேண்டும்

  பித்ருக்களுக்கு தினமும் உணவிட வேண்டும் .. துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை. -திருக்குறள் ...