Thursday, 29 November 2018

அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-29

அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-29
-

தவறு செய்த ஒருவருக்குத் தண்டனை கொடுக்குமாறு அன்னையிடம் கூறியபோது அன்னை , நான் அவனது தாய் . நான் அவனுக்கு எப்படி தண்டனை கொடுக்க முடியும்?  என்று கேட்டார்ஒரு பக்தரிடம்  போக்கை ப்பற்றி  யோகின்மா அன்னையிடம் கூறி  அம்மா  அந்த பக்தரை சற்று கண்டித்து  வையுங்கள் . இல்லாவிட்டால் அவா் இன்னும் மோசமாகப் போவார்” என்றார். அதற்கு அன்னை கூறினார். யோகின் நான் கண்டிப்பேன் என்று தோன்றவில்லை. நான் சொன்னாலும்  அதன் படி அவனால்  வாழ இயலாது. நான் அவனது குரு .  என் பேச்சைத் தட்டி நடக்க நோ்ந்தால் அது அவனுக்குத் தீமை செய்யும். அன்னையின் சீடரானஇளைஞா்  ஒருவரின் நடத்தையில் தவறு நோ்ந்தது.  வயதான பக்தர் ஒருவா் அன்னையிடம்  இதைக்கூறி  இனி அவரை அங்கே வர விடக் கூடாது. என்று கேட்டுக் கொண்டார்.  அதற்கு அன்னை கூறினார்.  என்னிடம் வராவிட்டால் வேறு யாரிடம் போவான்.? நான் என்ன நல்லவா்களுக்கு மட்டும் தானா அன்னை?தீயவா்களுக்கு நான் அன்னை இல்லையா என்ன? பிரபல நடிகைகளான தின்கடியும் தாரா சுந்தரியும்  அவ்வப்போது  அன்னையைத் தரிசிக்க வருவதுண்டு. ஆனால் அவா்கள் பூஜையறையின் உள்ளே  செல்வதோ  அன்னையைத் தொட்டு வணங்குவதோ கிடையாது. பூஜையறையின் வெளியே நின்று கொண்டு  மிகுந்த பணிவுடன் அன்னையை வணங்குவார்கள். அன்னையும் பிரசாதம்பெற்று செல்லுமாறு கூறுவார். பிரசாதம் சாப்பிட்ட பிறகு அன்னை தமது கைகளால் வெற்றிலை சுருள் கொடுப்பார். கவனமாக அன்னையைத்தொடாமல் அவா்கள்அதைப்பெற்று கொள்வார்கள்.ஒரு நாள் அவா்கள்  சென்ற பிறகு அன்னை கூறினார். இவா்களுடையது தான் உண்மையான பக்தி . பகவானைக் கொஞ்சமே நினைத்தாலும் , மனப்பூா்வமாக  ஒருமைப்பட்ட மனத்துடன் நினைக்கிறார்கள்.எப்படி ஜபம் செய்வது?  எத்தகைய சிந்தனையுடன் ஜபம் செய்கிறாயோ  அந்தச்சிந்தனைதான் உன் மனத்தை ஆக்கிரமித்திருக்கும். குருதேவா் என்னுடையவா் என்று எப்போதும் நினை.  மனிதன் என்றால் தவறுகள்  செய்யத்தான் செய்வான். அவற்றை நாம் பொருட்படுத்தக் கூடாது. பிறரது குற்றங்களை க் காண்பதால்  ஒருவன் தனக்குத் தானே தீங்கு செய்து கொள்கிறான். குற்றங்களைக் கண்டுபிடித்து கண்டுபிடித்து  கடைசியில் அது அவனது  இயல்பாகவே ஆகிவிடும். யாருடைய குற்றங்களையும் காணாதே. பிறரது குற்றங்களை க் காண த் தொடங்கினால் அதுவே கடைசியில் உன் இயல்பாகி விடும். ஒரு பக்தை தனக்கும்  தனது தோழிக்கும் இடையே  ஏற்பட்ட மனஸ்தாபத்தைப்பற்றி  அன்னையிடம் தெரிவித்தார். அதற்கு அன்னை கூறினார். இதோ பாரம்மா  மனிதா்களை நேசித்தால்  துன்பமும் துயரமும் அனுபவித்தே யாக வேண்டும். யாரால் பகவானை நேசிக்க முடியுமோ  அவன் பாக்கியவான். அவனுக்கு துன்பமோ  துயரமோ இல்லை. ஒரு பக்தர் அம்மா நான் எவ்வளவோ ஜபதவங்கள்  செய்கிறேன் . ஆனால்  எதுவும் கிடைக்கவில்லை.கிடைப்பதற்கோ விலைகொடுத்து  வாங்குவதற்கோ கடவுள் மீனோ ,காய்கறியோ அல்லவோ! ஒரு பக்தா் அம்மா மனதில் கெட்ட எண்ணங்கள் ஏன் எழுகின்றன.?சாதாரண மனத்தின் இயல்பு கீழ்நோக்கி ப் போவது தான். மனத்தைப் பலவந்தமாக பிடித்து அணை போட்டு வைக்கிறான் மனிதன். ஆனாலும்அதுஅவ்வப்போது உடைத்துக் கொண்டு வெளியேறிவிடுகிறது. ஆனாலும் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும்.  நல்லவா்களின் தொடா்பாலும்  நல்ல விஷயங்களை சிந்திப்பதாலும்  மனம் உயா்ந்த நிலையை  நாடுவது உண்மை.  மிகக் கீழானவா்களின் மனம் கூட  சாதுக்களின் அருளால் தன் போக்கை மாற்றி விடும். பிருந்தாவனத்திலுள்ள அந்தச் சாதுவின் விஷயம் உனக்குத் தெரிந்தது தானே? அவா் பொன்னைத் தேடித் திரிந்தார்.  ஒரு மகானின் அருளால் அவருக்கு  ஞானம்  உண்டாகியது. அதன் பிறகு எந்த  உலோகத்தையும்பொன்னாக்கக்கூடிய  பரிச மணி கிடைத்தும்  அதைத் தூக்கி எறிந்து விட்டாரே!ஒரு வேடன் சாதுவாக வேடமிட்டுக்கொண்டு  பறவைகளைப் பிடிக்க ச் சென்றான். சென்ற இடத்தில்  பறவைகளின்  சரளமான இயல்பையும்  பயமின்மையும் கண்டான். அதைக் கண்ட போது  அவனுக்கு வைராக்கியம் தோன்றி விட்டது.  வேடத்தொழிலை விட்டு விட்டான்.  அதனால் தான் சத்சங்கம் அவசியமாகிறது.  நேரம் கிடைக்கும் போதெல்லாம்  தூயவா்களின் துணையை நாடு. அத்தகை தொடா்பு கிடைக்கவில்லை என்றால்  நல்ல நூல்களைப் படி . மகான்களின் வாழ்க்கையைச் சிந்திக்கும் தோறும்  மனம் தூய்மை பெறுகிறது. தண்ணீா் எப்போதும்  பள்ளத்தை நோக்கியே பாய்கிறது. ஆனால் சூரியனுடையகிரணங்களின்தொடா்பு பெற்றால்  அதே தண்ணீா்  ஆகாயத்தை நோக்கி எழுகிறது.  மலைகளின் உச்சியில்  பனியாக தங்குகிறது.  மழை,நதி, அருவி என்றெல்லாம்  வந்து உயிர்களுக்கு எவ்வளவோ நன்மை செய்கிறது. குருதேவர் பெரியவரா ? அன்னை பெரியவரா?  சீ, இதெல்லாம்  ஒரு பேச்சா?(சிறிது நேரத்திற்குப் பிறகு) உனக்கு எப்படி தோன்றுகிறது.?  சிவ பெருமானின் மீது நிற்பவள் அல்லவா காளி!  அன்னை (மென்னையாக ச் சிரித்தபடி ) நீ அப்படியே நினைத்துக் கொள்ளலாம் அம்மா உங்களை மக்கள் பகவதி என்கிறார்களே!  மக்கள் என்ன சொல்வது நானே சொல்கிறேன். பலரும் குருதேவரை பகவான் என்கிறார்கள் . நீங்கள் யார்? அவா் பகவான் என்றால் நான் பகவதி .அம்மா!  பல அவதாரங்களில் அவதார புருஷா்கள்  தங்கள் சக்தி அதாவது மனைவி  மறைந்த பிறகே  உடம்பை விட்டார்கள். ஆனால் இந்த முறை  ஏன் குருதேவர் உங்களுக்கு முன் சென்று விட்டார்.? மகனே! குருதேவர் உலகையே அன்னை வடிவாகக் கண்டார். தாய்மை என்பதை உலகிற்கு எடுத்துக் காட்டவே என்னை விட்டு ச் சென்றார். .


அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-28

அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-28
-
மனத்தின் பலவீனங்களைப் பற்றி  அன்னையிடம்  கூறியதற்கு அவா் பதிலளித்தார். மகனே! அமாவாசையும் பெளா்ணமியும் வருவது எப்படி இயற்கையின் நியதியோ  அது போலவே மனத்தின் பலவீனமும்.  சில வேளைகளில் அமைதியாகவும் சில வேளைகளில் தூய்மையற்று சஞ்சலமாகவும் இருப்பது மனத்தின்  இயற்கை நியதி. அம்மா! இந்த உலகில் உருப்படியாக எதையும் சாதிக்க முடியாது.மகனே! இந்த உலகம் ஒரு பெரிய சேற்றுக் குட்டை . அதில் விழுந்தால் கரையேறுவது மிகவும் கடினம். பிரம்மாவும் விஷ்ணுவும் அதில் விழுந்து மூச்சு வாங்குகிறார்கள். பாவம். மனிதனைப் பற்றி என்ன சொல்ல  இருக்கிறது. இறைவனின் திரு நாமத்தை சொல் ,  நாமஜபம் செய்ய ச்செய்ய அவரே உன்னை இந்த உவகியலிலிருந்து விடுவிப்பார். மகனே! அவரே விடுவிக்காவிட்டால்  யாராலாவது முக்தி பெற முடியுமா! அவரிடம் அசைக்க முடியாத  நம்பிக்கை கொள் . எப்படி குழந்தைகளுக்கு தந்தையும் தாயும் புகலிடமாக விளங்குகிறார்களோ , அப்படி குருதேவரை க்கருது. நம்பிக்கை பற்றிய பேச்சு வந்தது. மகனே! புத்தகங்களைப் படிப்பதால் அந்த நம்பிக்கை வரும்என்றா நினைக்கிறாய்.? அதிகம் படித்தால் குழப்பம் தான் அதிகமாகும்.உலகம் உண்மையற்றது. இறைவன் மட்டுமே உண்மை,  சாஸ்த்திரங்களை படித்து புரிந்து கொள்ள வேண்டியது இதை மட்டுமே என்பார் குருதேவர்,  இன்ன இன்ன சாமான்களை யெல்லாம்வாங்கி வா  என்று நான் உனக்கு ஒரு கடிதம் எழுதுவதாக வைத்து கொள்.  உனக்கு அந்த கடிதம் எதுவரை தேவை? அதில் என்ன இருக்கிறது என்பதை அறியும் வரை, அறிந்த பிறகு அந்த கடிதத்தால் என்ன பயன். கடிதத்தில் கண்ட பொருட்களை வாங்க வேண்டும்.கொண்டு வந்து என்னிடம் தர வேண்டும். அவ்வளவு தான், அதைச் செய்யாமல் இரவு பகலாக உட்கார்ந்து அந்த கடிதத்தைப் படித்து கொண்டிருப்பதில் என்ன பயன்? ஒரு நாள் பக்தர் ஒருவா் சற்று நொந்த மனத்துடன் அன்னையிடம் அம்மா உங்களிடம் இவ்வளவு வந்து போகிறேன். ஆனால் ஆன்மீகத்தில் எந்த முன்னேற்றத்தையும் நான் காணவில்லையே! எப்படி இருந்தேனோ அப்படியே இருக்கிறேன் என்று தான் எனக்கு த்தோன்றுகிறது என்று சொன்னார். அதற்கு அன்னை கூறினார்.   மகனே! நீ ஒரு கட்டிலில் தூங்கி கொண்டிருப்பதாகவைத்து க் கொள்வோம் ,  அப்போது ஒருவா் வந்து உன்னை க் கட்டிலுடன்  தூக்கி ச் சென்று வேறோர் இடத்தில்  வைத்த விடுகிறார். நீ வேறோர் இடத்திற்கு  வந்திருக்கிறாய்  என்பது விழித்தவுடனே  உனக்குத் தெரியுமா?  தெரியாது.தூக்கம் நன்றாக க் கலைந்து , சற்று கழிந்த பிறகு தான் அது உனக்குத் தெரியும். மகனே! நான் உங்களுக்கு எதைத்தர வேண்டுமோ, எதைச் செய்ய வேண்டுமோ அதைதீட்சை வேளையிலேயே செய்து விடுகிறேன் . உடனடியாக அதன் பலனை நீங்கள் அறிய வேண்டுமானால் , உடனடியாக அமைதி பெற வேண்டுமானால் தவத்திலும் சாதனைகளிலும்  தீவிரமாக ஈடுபட வேண்டும், இல்லாவிட்டால்  எல்லாம்  வாழ்வின் இறுதி வேளையில் தான் கிடைக்கும்.அம்மா! தம்மிடம் வருபவா்களுக்கு  இது தான் கடைசி பிறவி  என்று குருதேவா் கூறினார். உங்களிடம் வருபவா்களின் நிலை என்ன? வேறு என்ன? இங்கும் அது தான் நடக்கும். அம்மா! உங்களிடம் மந்திர தீட்சை பெற்றவா்கள்  எந்தச் சாதனைகளும் செய்யாவிட்டால் என்ன நடக்கும்?  என்ன நடக்குமப்பா! ஆ, மாம், நீ ஏன் இது பற்றியெல்லாம் இவ்வளவு கவலைப்பட வேண்டும்?  மனத்தில் எழும் ஆசைகளையெல்லாம் பூா்த்தி செய்து கொள், பிறகு ராமகிருஷ்ண லோகத்தில் சென்று நிலைத்த அமைதியை அனுபவிக்கலாம், குருதேவா் உங்களுக்காகப்புதியதோர் உலகத்தையே படைத்துள்ளார். ஒரு பக்தர் கை விரல்களால்  எண்ணி மந்திர ஜபம் செய்வதை மறந்துவிட்டிருந்தார். அதை விளக்குமாறு கேட்டு கடிதம் எழுதி அதை என்னிடம் தந்திருந்தார். அதைத் தெரிவித்த போது அன்னை கூறினார். இதிலெல்லாம் என்ன இருக்கிறது? எப்படியாவது ஒரு முறையை வைத்து கொண்டு ஜபம் செய்தால் போதும், முறைகளும் வழிகளும்  எல்லாம் மனத்தை வசப்படுத்துவதற்காக மட்டுமே. தீட்டு பற்றிய பேச்சு வந்தது. அன்னை  கூறினார். பாரப்பா! குருதேவர்  மிக மென்மையாக வயிறு படைத்தவா். நான் நகபத்தின் தங்கி அவருக்கான சமையலை ச் செய்து வந்த காலம் அது. விலக்கு நாட்களில் நான்  சமையல் செய்வதில்லை. அந்த நாட்களில்  அவா் காளி கோயில் பிரசாத  உணவை சாப்பிடுவார்.ஆனால் அது  அவரது  வயிற்றுக்குச் சிறிதும் ஒத்து வராது.வயிற்று வலியால் அவதிப்படுவார். ஒருமுறை என்னிடம் , “ இதோ பார் , விலக்கு நாட்களில் சமைக்கக் கூடாதென்று யார் சொன்னது ? நீ எனக்காக சமயலையைச் செய் . அதில் தவறில்லை . ஒரு விஷயம் இந்த விலக்கு , தீட்டு போன்றவையெல்லாம் மனத்தில்தான் உள்ளன . புறத்தில் அவை எதுவும் இல்லை ” என்றார் அதன்பிறகு  நான் எல்லா நாட்களிலும் சமைக்கத் தெடங்கினேன் .ஒரு முறை அன்னை  கோயல்பாராவில் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார்.ஒரு சீடா் அவருக்காக சா்பத் தயாரித்துக் கொடுப்பது வழக்கம்.கொடுக்கு ம் முன் எல்லாம் சரியாக சோ்க்கப்பட்டுள்ளதா என்பதை ச் சோதிப்பதற்காக த் தாமே ருசி பார்த்து விட்டுத்தான் கொடுப்பார்.இது அன்னைக்குத் தெரியாது. ஓரிரு நாட்களுக்குப் பிறகு அன்னை தாமாக அவரிடம்  பாரப்பா அன்புக்கு உரியவர்களுக்கு ஏதாவது கொடுக்க நோ்ந்தால்  சற்று சுவைத்துப் பார்த்து விட்டு கொடுப்பது நல்லது, என்றார். அதற்கு அந்த சீடா் அம்மா நான் அப்படித்தான் உங்களுக்கு தந்துவருகிறேன், என்றார். உடனே அன்னை நல்லது செய்தாய் மகனே, நேசிப்பவா்களுக்கு அப்படித்தான் கொடுக்க வேண்டும்இடைச்சிறுவா்கள் தாங்கள் சுவைத்துப்பார்த்து  விட்டுத்தான்  கண்ணனுக்கு பழங்களை கொடுத்தார்கள். என்று நீ கேள்விப்பட்டதில்லையா ? என்றார். அம்மா சில வேளைகளில் ரோட்டில் போகும் போது  சிலரைப் பார்க்க  நோ்கிறது.  அவா்களை முதன்முறையாக ப் பார்த்தாலும் ஏதோ பல காலமாக  அவா்களைத் தெரிந்தது போல்  தோன்றுகிறது. பிறகு விசாரித்துப் பார்த்தால்  அவா்கள் குருதேவரின் பக்தா்களாகவோ உங்கள் பக்தா்களாகவோ இருப்பார்கள்..இது எப்படி? பச்சைப்பாசி பற்றி குருதேவா் கூறுவது உனக்கு நினைவில்லையா? அது பரவலாகப் படர்ந்திருக்கும். ஒரு நுனியை இழுத்தால்  மொத்தச்செடியும் சோ்ந்தே வரும். அவையெல்லாம் ஒன்றோடொன்று  இணைக்கப்பட்டவை

அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-27

அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-27
-
பணம் பணம் என்று அடித்து க் கொள்கின்ற  உறவினா் களிடம் ஒரு முறை அன்னை கூறினார். நீங்கள் ஒன்றோ இரண்டோ பிள்ளைகளை பெற்று கொண்டு  இவ்வளவு சலித்து போய் விட்டீா்கள். அவா்களை மனிதா்களாக வளா்க்க உங்களால் இயலவில்லை. நானோ பெறாமல்  பலரின் தாயாக உள்ளேன். ஆயிரமாயிரம் பிள்ளைகளை மனிதா்களாக்க வேண்டியுள்ளது. சிலா் நல்லவா்கள். சிலா் கெட்டவா்கள். சிலரோ மனத்தில்  சமநிலை கெட்டு போய் என்னிடம்  வந்து  அம்மா என்னை கரையேற்றுங்கள் என்கிறார்கள். இதெல்லாம் உங்களுக்கு எங்கே புரிய ப் போகிறது?  அவா்களுக்கு வேறு கதி இல்லை.  உங்களுக்கு தெரிந்ததெல்லாம் பணம், காசு, சொத்து, வீடு, வாசல் இவை தான்.எப்படி  வந்தீா்களோ அப்படி யே  தான் நீங்கள் போவீா்கள் , மனிதப்பிறவி வாய்ப்பது பெரும் பேறு என்கிறார்கள். அப்படிப்பட்ட மனிதப் பிறவியைப் பெற்று நீங்கள் என்ன தான் சாதித்தீா்கள்.?வங்க மொழியில் எல்லா உச்சரிப்புகளுக்கும்ஒவ்வோர்  எழுத்து தான் உள்ளது. சில வேளைகளில் இரண்டு எழுத்து இருக்கலாம். ஆனால் ஸ” மட்டும் மூன்று  ச,ஷ,ஸ-1 அதாவது பொறுமையாக இரு ,பொறுமையாக இரு,பொறுமையாக இரு, என்று குருதேவா் கூறுவதுண்டு. அன்னை உவமைகாட்டிஇதனை விளக்குவார். பூமியைப் போன்ற பொறுமை வேண்டும். பூமிக்கு எவ்வளவு துன்பம் செய்கிறார்கள். எவ்வளவு தொந்தரவு தருகிறார்கள். ஆனால் பூமி அனைத்தையும் சமநிலையுடன் பொறுத்துக் கொள்கிறது.  அத்தகைய பொறுமை மனிதனுக்குத் தேவை. அம்மா உங்கள் உடல்நிலை சரியாக இல்லை தொடா்ந்து கஷ்டப்படுகிறீா்கள். உங்களுக்காகச் சமைப்பவரைப்பற்றி உங்களுக்கு எல்லாம் தொரியும்.தயைகூா்ந்து  நீங்கள் சம்மதித்தால்  அந்த ஆளை விட்டு விடலாம். எனது இந்த பேச்சைக்  கேட்டதும் அன்னை கம்பீரமானார். பிறகு கூறினார்.  நீங்கள் விடுவதானால் விட்டுவிடுங்கள். ஆனால் நான் விட்டால்  அவனுக்கு வேறு புகலிடம் ஏது?. ரயில் பயணம் போன்றவற்றில் பயணம் செய்யும் போது எவ்வாறு ஜபம் செய்வது.? மனத்திற்குள் செய், மகனே,போகப் போக கை, வாய் எல்லாம் செயல்படுவது நின்று விடும். எல்லாம் மனத்தின் உள்ளே நடைபெறும். கடைசியில் மனமே குருவாக ஆகிவிடும். அம்மா மனம் மிகவும் சஞ்சலமாக உள்ளது. எவ்வளவு முயன்றும்  அதை நிலைப்படுத்த இயலவில்லை. புயற்காற்று  அடித்தால் மேகங்கள் கலைந்து மறைந்து விடுகின்றன. அது போல் நாமஜபத்தால் உலகியல் மேகத்தை த் துரத்திவிடலாம். அம்மா , பலா் சிவபூஜை  செய்கின்றனா். நாங்களும் செய்யலாமா? துா்க்கா பூஜை, காளி பூஜை என்று எல்லா  பூஜைகளையும் நான் தந்த மந்திரத்தால் செய்யலாம். யாராவது விரும்பினால்  அந்தப் பூஜைகளைக் கற்றுக் கொண்டு   செய்யலாம். ஆனால் உங்களுக்கு அதெல்லாம் தேவையில்லை.அதையெல்லாம்  செய்யும் போது  பொறுப்புகள் அதிகரிக்கும். குருதேவருக்கு  நைவேத்தியம் செய்வதற்கான எந்த மந்திரமோ  முறைகளோ எனக்கு த் தெரியாது ,என்ன செய்வது? பூஜை முறைகளெல்லாம் தெரிய வேண்டியதில்லை. இஷ்ட மந்திரத்தைச் சொல்லியே அதனை செய்யலாம்.அம்மா நான் பரம ஏழை . உங்களை தரிசிப்பதற்குஅடிக்கடி வர வேண்டும்என்று மிகுந்த விருப்பம் உண்டு. ஆனால் எதுவும்  வாங்கி வர முடியாதே என்பதற்காகத்தான் நான் வருவதில்லை. மகனே! உனக்கு தோன்றும் போதெல்லாம் தாராளமாக வா, ஒரு நெல்லிக்காய் மட்டும் எடுத்து வா. அது போதும்,மகளே ! ஒரு போதும்  சும்மா இருக்காதே. ஏதாவது வேலை செய்து கொண்டிரு. ஏதாவது வேலையில்  ஈடுபட்டிருக்கவேண்டும். சோம்பிய மனத்தில் ஏதேதோ எண்ணங்கள் எழுந்து அலை க்கழிக்கும்.. பெண்கள் நாணமே ஆபரணம் . சுய கௌரவம் இல்லாத ப் பெண்ணைப் பெண்ணென்றே கூற முடியாது. வாழ்க்கையில் ஒவ்வோர்  அடி வைக்கும் போதும் குருதேவரை  நினைத்துக் கொள். அப்போது எந்த க் கஷ்டமும் கஷ்டமாக த் தெரியாது. யாருடைய வாழ்க்கையில் தான் துன்பமும் துயரமும்  இல்லை? அவை இருக்கவே செய்யும். அவருடைய திருநாமத்தை ச் சொல் . அவரைச் சரணடைந்து வாழ். அப்போது  அவா் ஆற்றலைத் தருவார்.கஷ்டமோ பிரச்சனைகளோ எதுவும் அப்போது உன்னை அலைக்கழிக்க முடியாது. காமத்தை முற்றிலுமாக யாராவது விலக்க முடியுமா? உடம்பு என்ற  ஒன்று இருக்கும் வரை  அதுவும் இருந்தே  தீரும். ஆனால் ஒன்று இருக்கும் வரை  அதுவும்  இருந்தே  தீரும் . ஆனால் ஒன்று . மந்திரத்தில் நாகம் கட்டுண்டு மதி மயங்கிக் கடப்பது போல் காமத்தையும் தலைதூக்காமல் செய்ய முடியும். துறவி அம்மா குருதேவர் மறுவுலகிற்கு மட்டும் தானா? இல்லை அவா் இகவுலகிற்கும் மறுவுலகிற்கும் உரியவா்.துறவி அம்மா .  குடும்பம். தாய் தந்தை,உற்றார் உறவு  என்று அனைத்தையும் துறந்து ஆசிரம வாழ்க்கையைத்தொடங்கினேன். ஆனால் இன்னும் குடும்பத்தைப்போல்  பொறுப்பும் கடமைகளும் சண்டை சச்சவுகளும்  எல்லாம் உள்ளனவே! அன்னை மகனே ஆசிரமும் இரண்டாம் குடும்ப வாழ்க்கை தான். ஆனால் இங்கே சண்டை சச்சரவுகளின் இடையிலும் இறைவனின் சான்னித்தியத்தை அதிகமாக உணர முடியும், பக்தா் அம்மா  குடும்பத்தில் எவ்வளவோ பிரச்சனைகள் . அதற்கு மேல் அலுவலக வேலை, இதில் ஜப தியானம் எதுவும்  நடைபெறவில்லை, எந்த முன்னேற்றமும் இல்லை. என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும். கடைசி நேரத்தில் குருதேவர்  வந்தேயாக வேண்டும். அதை அவரே கூறியுள்ளார். அவரது வார்த்தைகள் வீணாகுமா என்ன? முடிந்ததை செய்தபடியே வாழ்க்கை நடத்து. அம்மா உங்களிடம் தீட்சை பெற்றவா்கள் மீண்டும் பிறக்க வேண்டாமா?  வேண்டாம் , உங்கள் பின்னால் ஒருவா் இருக்கிறார் என்பதை  எப்போதும் நினைவில்  கொள்ளுங்கள். உங்கள் அருள் கிடைத்துள்ளது. இது தான் எங்கள் ஒரே நம்பிக்கை. கவலை எதற்கு ? மகனே! உங்கள் அனைவரின் நினைவும் எனக்கு எப்போதும் உண்டு. ஜப தியானத்திற்கு என்று ஒரு குறிப்பிட்டநேரத்தை ஒதுக்குவது மிகவும் அவசியம். சரியான நேரம் எப்போது வாய்க்கும் என்று சொல்ல முடியாது. யாரும் எதிர்பார்க்காத வேளையில்  அந்த நேரம் திடீரென்று வந்து விடும்.  பணத்தாலும் மனித பலத்தாலும்  சாதிக்க இயலாத பலவற்றை க் காலத்தின் மகிமை சாதித்து விடும்.எனவே எவ்வளவு தான் பிரச்சனைகள் அழுத்தினாலும் சில நியமங்களைப் பின்பற்றுவது மிகவும் அவசியம். வேலைகள் ஒரு பக்கம் , நோய் போன்றவை இன்னொரு பக்கம் . இப்படி பல காரணங்களால் தான் எதையும்  சரியாக பின்பற்ற முடியாமல் போகிறது. ஆம் நோய் மனிதனின் கட்டுபாட்டில் இல்லை.  இனி உண்மையிலேயே நீ வேலைகளின் சுமையால்  அழுத்தப்படுவதனால் இஷ்ட தெய்வத்தை மனத்தால் நினைத்து வணங்கு. வேறென்ன செய்யமுடியும்.  சாதனைகளுக்குத் தகுந்த காலம் எது? சந்தியாவேளைகள்,  அந்த நேரங்களில் இறைவனை நினைப்பது மிகவும் நல்லது.  இரவு கழிந்து பகல் வரும் வேளையும்,  பகல் கழிந்து இரவு வரும் வேளையுமே சந்தியா நேரம். அந்த நேரத்தில் மனம் இயல்பாகவே தூய்மையாக இருக்கிறது. 

அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-26

அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-26
-

பூக்களை தொடா்ந்து கையில் வைத்திருந்தால்  மணம் கிடைக்கும். சந்தணத்தை கல்லில் உரச,உரச வாசம் வீசும். அது போல் தெய்வீக  விஷயங்களை ச் சிந்திக்க ,சிந்திக்க ஆன்மீக விழிப்புணா்வு  உண்டாகும். ஆசைகள் அற்றவனாகி விட்டால்  அந்தக் கணமே இறையனுபூதி கிடைத்துவிடும்.அன்னை பூஜை அறையில்  அமர்ந்து இருந்தார். பூஜை நிறைவுற்றிருந்தது. துறவி ஒருவா் அன்னையிடம் அம்மா குருதேவரை நீங்கள் எப்படி பார்க்கிறீா்கள்.? என்று கேட்டார். அன்னை சிறிது நேரம் மௌனமாக இருந்தார்.பிறகு கம்பீரமாக  குழந்தையாக காண்கிறேன் என்றார்.அன்னையின் தினசரி பூஜைக்காக நான் தினமும் பூக்கள் . லில்வ இலை , துளசி இலை  போன்றவை பறித்து க் கொண்டு வருவது வழக்கம். ஒரு நாள் துளசி இலை கொண்டு  வர மறந்துவிட்டேன். அன்னை மிகவும் வருத்தமுற்று துளசி கொண்டு வரவில்லையா? துளசி இலை எவ்வளவு புனிதமானது தெரியுமா ? எதில் துளசி இலையை இட்டாலும் அது தூய்மையாகிவிடும். என்றார்.  நான் மிகவும் வருத்தத்துடன் சென்று துளசி இலையை பறித்து வந்தேன். ஒவ்வொருநாளும்  பூஜை முடிந்த பிறகு அன்னை  தரையில் தலை படும் படி வீழ்ந்து குருதேவரை வணங்குவார். அதன் பிறகு தீா்த்தம் சாப்பிடுவார். இரண்டொரு துளசி இலைகளையும் வில்வ இலைகளையும்  வாயில் இட்டுக் கொள்வார். இல்லறத்தார் ஆன்மீக வாழ்க்கையை க் காரணம் காட்டி கடமைகளை ஏனோ தானோ என்று செய்வதை அன்னை சிறிதும் விரும்புவ தில்லை. குடும்பம் பகவானுடையது. நம்மை எங்கே எந்த வேலையில் அவா் வைத்திருக்கிறாரோ  அந்த வேலையை அவரை நம்பி  நம்மால் இயன்ற அளவு  நன்றாகச்செய்ய முயற்சிக்க  வேண்டும்என்பார் அவா். கடமைகளை ஒழுங்காக.ச் செய்யாமல்  தம்மிடம் வருபவா்களைப் பற்றி அன்னை கூறுவார். கடவுளே! கடவுளே! கட்டிய துணியை ஒழுங்காக வைத்திருக்க த் தெரியவில்லை. அவனுக்கு என்னைப் பற்றி எவ்வளவு கவலை! தபாலில் அன்னைக்கு பக்தா்கள் பணம் அனுப்புவார்கள். தபால் காரன் கொண்டு வருவான். அன்னை கைநாட்டு வைப்பார். அதில் ஒருவா் ஸ்ரீசாரதாதேவியின் கைநாட்டு என்று  எழுதுவார். பணத்தை எண்ணி தபால்காரன் கொடுப்பான்.அன்னை கைகளில் வாங்கி அப்படியே  அறையில் கொண்டு போய் வைப்பார். தபால்காரருக்கு ப் பிரசாதம் கொடுத்து அவரிடம்  இனிமையாக ப்பேசி  அனுப்புவார். யார் பணம் அனுப்பியது , எவ்வளவு பணம் போன்ற விவரங்கள்வேறு யாருக்கு ம் தெரியாது. அதன் பிறகுநேரம் கிடைக்கும் போது அன்னை பணம் அனுப்பியவருக்குக் கடிதம் எழுதுவார். ஆசிகளைத் தெரிவிப்பார்.  சில வேளைகளில்  சேவகா்கள்  யாராவது இருந்து அவா்கள் பணத்தை பெற நேரும்.  அவா்கள் பணத்தைப் பெற்று  அதனை ப் பலரும்  பார்க்கும் படி வைத்து எண்ணி னால் அன்னை மகனே  பணம் எண்ணும் போது எழுகின்ற  சலசலப்பு ச் சத்தத்தை த் கேட்டாலே ஏழையின் மனத்தில் ஆசை தோன்றிவிடும். கண்டாலோ மரப் பொம்மைகூட ஆ என்று வாய் பிளக்கும். பணம் அப்படிப்பட்ட பொருள் என்பார். உள்ளே கொண்டு எசன்று  எண்ணுமாறு கூறுவார். அன்னையின் உறவுப் பையனான பங்கிம்  சிறு வயதில் துறவியாகி வீட்டைவிட்டுப் போய் விட்டான்.அதைக் கேட்டு அன்னை கூறினார். துறவியாகி இருக்கிறான். நல்வ காரியம் செய்தான்! எலும்பும் சதையும் சோ்ந்த இந்த உறையில்  என்ன உள்ளது. என் கதையையே பாரேன்- வாத நோயால் பிராணன்  போகிறது. இந்த உடம்பில் தான் என்ன இருக்கிறது? எதற்காக இப்படி ஒரு மாயையில் உழல வேண்டும். ?  எல்லாம் இரண்டு நாட்களுக்குத் தானே! பிறகு எல்லாம் முடிந்து விடும். உடம்பை எரித்த பிறகு  எஞ்சுவது ஒரு பிடிச் சாம்பல் மட்டுமே. இந்த உடம்பு ஒருபிடி ச் சாம்பலைத் தவிர வேறென்ன ? பங்கிம் சாதுவாகியுள்ளான். பகவானின் பாதையில் போகிறான். நல்லது செய்தான்,நல்லது செய்தான்.ஒரு முறை அன்னை ஜெயராம்பாடியில் இருந்தார். உடல் நிலை சரியில்லாமல் இருந்து அப்போது தான் கொஞ்சம் தேறியிருந்தார். அப்போது கபில் மகராஜ் அன்னையிடம் கல்கத்தாவிற்கு போகுமாறு மீண்டும் மீண்டும் வற்புறுத்தினார். அன்னை அவரது பேச்சை காதில் போட்டுகொள்ள வில்லை. அவர் சென்ற பிறகு மற்றவர்களிடம் கூறினார்.
 அவனுக்கென்ன சொல்லி விட்டான்.அவா்கள் ஒன்றுமில்லாத  துறவிகள் .எழு என்றால்  எழலாம் , உட்கார் என்றால் உட்காரலாம். எந்த கவலையும் இல்லை.குழப்பமும் இல்லை. துண்டைத் தோளில் போட்டுக்கொண்டால்  போதும், புறப்பட்டுவிடலாம்.என்னால் அப்படி முடியுமா? எவ்வளவு விஷயங்களைஆலோசித்து நடக்க வேண்டியிருக்கிறது! யாருக்கும் எந்தச் சிரமமும் இல்லாமல் காரியங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது.!ஒரு பக்தை அன்னைக்குச் சேவை செய்ய விரும்பினார். தமது ஆா்வத்தை அன்னையிடம் தெரிவித்த போது அன்னைகூறினார். வேண்டாம் அம்மா! இது குருதேவரின் பூஜை நடைபெறுகின்ற இடம் . எனவே நீ இங்கே சேவை செய்ய முடியாது.  நான் நல்லவனுக்கும் தாய். கெட்டவனுக்கும் தாய். நல்லவளுக்கும் தாய்.கெட்டவளுக்கும் தாய்.தான். ஆனால் குருதேவரின சேவையில் அது எடுபடாது.  முற்றிலும் தூய பெண்கள் எத்தனை போ்? விரல் விட்டு எண்ணி விடலாம். ஜெயராம்பாடி அன்று அன்னையின் பிறந்த நாள்.அன்னையின் உடல் நிலை சரியில்லை. எனவே அன்று குளிக்க வேண்டாம் என்று  எண்ணியிருந்தார். ஆனால் உடல்நிலைப்பற்றி அறிந்தால் பக்தா்கள்  வருந்துவார்கள் என்பதற்காக குளித்தார். இதன் காரணமாக மாலையில் அவருக்கு காய்ச்சல்  அதிகமாகியது. நான் அவரை காண சென்ற போது என்னிடம்  ”பாரப்பா, மனத்தில் தோன்றுகின்ற சமிக்ஞைகளை அலட்சியம் செய்ய கூடாது. மனம் தான் முதல் குரு. இதோ பாரேன்! இன்று காலையில் நான் எழுந்ததும் , உடல்நிலை சரியில்லை, இன்று குளிக்க வேண்டாம் என்ற எண்ணம் தோன்றியது. ஆனால் பல காரணங்களை நினைத்து குளித்து விட்டேன். இப்போது பலனையும் அனுபவிக்கிறேன் என்றார். சூடாக சாப்பிட வேண்டும், மிருதுவான படுக்கையில் தூங்க வேண்டும் என்று குருதேவர் கூறுவதாக அன்னை குறிப்பிடுவார்

அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-25

அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-25
-

ஒருநாள் உறவினர்  சிலருடன் ஒரு பக்தை அன்னையைக் காண ச் சென்றார்.பிற்பகலில் அன்னையுடன் அமர்ந்து பிரசாதமும்  சாப்பிட்டார். பெண்கள் ஓா் அறையில்  அன்னையுடனும் ஆண்கள் மற்றோர் அறையிலுமாக உண்டனா். சாப்பிட்டு முடித்த பிறகு அந்த பக்தையின்  வீட்டிற்கு ஒரு பாத்திரத்தில் கொஞ்சம்  பிரசாதம்  அனுப்புமாறு ஒருவரிடம் கூறினார்அன்னை.  அவா் வருவதற்குச்  சற்று தாமதானதும்  அன்னையே எழுந்தார். உடனே யோகின்மா , அம்மா நீங்கள் ஏன் எழுகிறீா்கள்? பாத்திரம் ஏதாவது கிடைக்குமா என்று பார்த்து அலம்பி கொண்டு வர வேண்டும் அல்லவா1! அதனால் தான் தாமதமாகிறது என்றார். பிறகு சற்று சிரித்து விட்டு  உங்கள் தந்தை வீட்டிலிருந்து வண்டி வண்டியாகப் பாத்திரங்கள் வந்தன அல்லவா? அதனால் தான் எல்லோருக்கும்  பாத்திரத்தில்  பிரசாதம் அனுப்ப நினைக்கிறீா்கள் போலும்.  என்றார். அன்னையும் சிரித்து விட்டு  வீட்டிலுள்ள பிள்ளைகளும்  பிரசாதம் பெற வேண்டும் அல்லவா! அதனால் தான் என்றார்.உங்களை எங்களுக்குத் தெரியாதா ?  முடிந்தால் உலகிலுள்ள அனைவரையும் அமர வைத்து சாப்பாடு போடுவீா்கள். நீங்கள். உட்காருங்கள் நான் போய் பார்த்து வருகிறேன். என்று கூறிவிட்டு எழுந்து சென்றார்.யோகின்மா ஒரு பாத்திரத்தில் பிரசாதம் கொண்டு வந்து  அந்த பக்தையிடம் தந்தார். அதைக் கண்ட போது அன்னையின் முகத்தில் தான் என்னவோ ஆனந்தம்  என்னவொரு திருப்தி!ஒரு விதவைக்கு த் தீட்சை தந்து விட்டு அன்னை கூறினார்.இதோ பாரம்மா பொதுவாக இளம் விதவைகளுக்கு நான் தீட்சை கொடுப்பதில்லை. ஆனால் நீ நல்லவள் என்று தோன்றியதால் உனக்கு தந்தேன். நான் வருந்தும் படி எதையும் செய்து விடாதே. சிஷ்யையின்  பாவம் குருவைச் சேரும். கடிகாரத்தின் முள் சுற்றுவதை நிறுத்தாது போல் எப்போதும் ஜபம் செய்.புகுந்த வீட்டிற்கு ச் செல்ல இருந்த ஒரு பக்தையிடம் அன்னை கூறினார். யாருடனும் நெருங்கி ப் பழகாதே . யாருடைய பிரச்சனைகளிலும்  தலையிடாதே.வேறெரு வீடு தேடி வீணிலே அலைய வேண்டாம்.  மாறுதல் இன்றி உந்தன் மனையிலே வாழ்வாய் நெஞ்சே என்ற பாடலை நீ கேட்டதில்லையா,? குருதேவருக்கு த் தேங்காய் லட்டு மிகவும் பிடிக்கும்.. ஊருக்கு போகும் அதை செய்து அவருக்கு நைவேத்தியம் செய். ஜபதியானத்தை அதிகப் படுத்து.குருதேவரை பற்றிய நூத்கள் எல்லாவற்றையும் படி. அன்னை ஒரு விதவையிடம் கூறினார்.இதோ பாரம்மா ஆண்களை ஒரு போதும்  நம்பாதே. சொந்த தகப்பனோ சகோதரனோ ஆனால் கூட நம்பக்கூடாது.  இதில் மற்ற ஆண்களைப்பற்றி நான் சொல்ல வேண்டாம். அல்லவா? அவ்வளவு தூரம் ஏன் ! சாட்சாத் கடவுளே உன் முன் ஆணாக வந்தால் அவரைக் கூட நம்பாதே. துறவியா் வசிக்கின்ற மடத்திற்குப் பெண்கள் அதிகம் செல்வதை அன்னை தடுத்தார். இதோ பார் . நீ ங்கள் நல்ல மனத்துடன் பக்தியுடன் தான் செல்வீா்கள் .ஆனால் நீங்கள் போவதால் ஒரு வேளை அந்த த் துறவியரின் மனம் தூய்மை கெடலாம்.அப்படிநேர்ந்தால் அது உங்களுக்கும் பாவத்தை உண்டாக்கும்.எப்போது வேண்டுமானாலும் யாருடனும் தீா்த்த யாத்திரை செல்வதை அன்னை ஆமோதிக்கவில்லை. அவா் கூறினார் . கையில் நாலு காசு உள்ளதென்றால் பத்தோ இருபதோ ஏழைகளுக்கு ச் சாப்பாடு போடு .(அருகில் இருந்த ஒரு பக்தையைக் காட்டி ) இவளைப் பார் இவள் இப்படித்தான். தீா்த்த யாத்திரை போனாள் . ஏமாற்றப் பட்டு திரும்பினாள். தீா்க்க யாத்திரை துக்க யாத்திரை மனமும் சஞ்சலப்படும்.மனம் மட்டும்  உன் வசம் இருந்தால் தீா்த்த தலத்தை விட உன் வீட்டில் அதிகம் புண்ணியம் பெறலாம். என்ற பாடலை நீ கேட்டதில்லையா.? ஒரு நாள் நாலைந்து பெண்கள் ஒரு குறிப்பிட்ட பெண்ணை விமா்சித்து கொண்டிருந்தார்கள். அதைக் கேட்ட அன்னை ஒரு பக்தையிடம்  அவா்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும்  ஆனால் நீ அவளிடம் மரியாதை காட்ட வேண்டும். ஏனெனில் அவளால் தான் நீ இங் கே வர முடிந்தது. என்றார். அன்னையிடம் ஒருவா் மந்திர தீட்சை பெற்றதை அறிந்த போது  குல குரு அந்த பக்தரை ச் சபித்தார். அதை அன்னைக்கு எழுதினார்.அந்த பக்தா்.நீ பயப்பட வேண்டாம் . குருதேவரை சரணடைந்தவரை எந்த சாபமும் ஒன்றும் செய்யாது. என்று பதில் எழுதினார் அன்னை. வயதான பக்தை ஒருவா் ஒருமுறை  இப்போது மடம் (பேலூா் மடம்) கிடம் எல்லாம்  வெறும் பெயரளவிற்கு தான் உள்ளே ஒன்றுமில்லை. என்று கூறினார். இதை அன்னையிடம் தெரிவித்த போது  அவா் திகைத்து விட்டார். தா்மம் ஆன்மீகம் என்று ஏதாவது இருக்குமானால் அது இங்கு தான்  மடத்தில் தான் உள்ளது என்றார்.அவா்,மாணவன் ,அம்மா எத்தனை முறை ஜபம் செய்ய வேண்டும்.  ஆயிரமா .பத்தாயிரமா. அல்லது அதை விட அதிகமா,  நீங்கள் மாணவா்கள் . எவ்வளவோ பாடங்கள் படிக்க வேண்டியிருக்கும்.பரீட்சை  எழுத வேண்டியிருக்கும். எனவே உங்களால் அதிகம் ஜபம் செய்ய இயலாது. பின்னால் நேரம் கிடைக்கும் போது  படிப்படியாக எண்ணிக்கையை அதிகப்படுத்து.  ராமகிருஷ்ணநாமத்தை ப் பத்து முறை ஜபித்தாலே போதும் . அதுவே பெரிய விஷயம். என்று குருதேவரே என்னிடம் கூறியுள்ளார். உலகின் நன்மைக்காக தாமே கடின தவம் செய்து  உலகின் இறையுணா்வை  விழித்தெழ செய்துள்ளார். உள்ளுணா்வு  மன ஏக்கம்  தீவிர அன்பு புத்துணா்ச்சி ஆகியவற்றுடன் சாதனை செய்தால் இப்போது மிகச் சிறிய முயற்சியிலேயே  வெற்றி கிடைத்து விடும். ஜெயராம்பாடியில் சென்றால் அவ்வளவாக பக்தா் கூட்டம் இருக்காது. எனவே அன்னையைச் சுலபமாக தரிசிக்கலாம்  என்றெண்ணி  நானும் எனது நண்பரும் அங்கே சென்றோம். நாங்கள் இருவரும் சுவாமி பிரமானந்தரிடம்  மந்திர தீட்சை பெற்றவா்கள்.நாங்கள் போகின்ற விவரத்தை  எழுதி தெரிவிக்க வேண்டும்.  என்று ஏனோ எங்களுக்கு த் தோன்றவில்லை. ஆனால் அங்கே சென்ற பிறகு  அது தேவையில்லை என்பதை ப் புரிந்து கொண்டோம்.  அன்னை அதை அறிந்திருந்தார். நாங்கள் போகுமுன்னரே அங்குள்ளவா்களிடம்  இன்று ராக்காலின் சீடா்கள் இருவா் வருகிறார்கள் . அவா்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறியிருந்தார். சாப்பாடு வேளை முடிந்து நாங்கள் சென்ற போதும் எங்களுக்கு ச் சாப்பாடு வைத்திருந்தார்.எங்களுக்கு பரிமாறி விட்டு நாங்கள் சாப்பிட்டு முடியும்வரை அன்னை அருகிலேயே அமா்ந்திருந்தார்.நாங்களும் சாப்பிட்டபடியே அவரிடம் பேசினோம். சாப்பாடு முடிந்தும் எச்சில் இலையை எடுக்க எத்தனித்தோம். ஓ, என்ன செய்கிறீா்கள்.? எச்சில் இலையை எடுக்கிறோம். இங்கே விட்டு செல்ல முடியாது அல்லவா? வீட்டில் உங்கள் அம்மா அருகில் இருந்தால் என்ன செய்வீா்கள்? நாங்கள் என்ன எசய்ய வேண்டும் என்பது புரிந்து விட்டது. எனவே எழுந்து சென்றோம்.அன்னை தாமே இலைகளை எடுத்து விட்டு அந்த இடத்தை ச் சுத்தம் செய்தார்,அம்மா !இறையனுபூஎவ்வாறு கிடைக்கும்? பூஜை ,ஜபம் ,தியானம் ஆகியவற்றால் எல்லாம் கிடைக்குமா? கிடைக்காது ,எதனாலும் கிடைக்காது. எதனாலும் கிடைக்காதா? எதனாலும் கிடைக்காது. அப்படியானால் எப்படித்தான் கிடைக்கும். இறைவனின் அளுளால் மட்டுமே கிடைக்கும். ஆனால் ஜபதியானம் செய்ய வேண்டும். இந்த சாதளைகளின் முலம் மனம் தூய்மை பெறுகிறது. பூஜை . ஜபம்,தியானம்  போன்ற சாதனைகளைச் செய்ய வேண்டும். 

அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-24

அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-24
-


கேகோகேஎந்த நேரம் வேண்டுமானாலும் வெள்ளம் வந்து வீட்டை அடித்து ச் செல்லலாம்.. பாம்பு பாம்பை க் காண நேர்ந்தால்  உடனடியாக எச்சரிக்கை கொள்ள      வேண்டும். அது என்ன செய்யும். எப்போது கொத்தும்  என்பது தெரியாது.  துறவியின் ஒரு சொல்  ஏன் ஓர் எண்ணம் கூட  உங்களுக்கு த் தீங்கு விளைக்கலாம். இது உங்களுக்குப் புரிவதில்லை.அவர் களை க் கண்டால் வணங்க வேண்டும்.வார்த்தைகளால் அவர் களை  அவமதிக்கக் கூடாது.காசியில் ஒரு நாள் அன்னையின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.அன்று  சுவாமி கேசவானந்தரின் தாய் வந்திருந்தார்.யாரோ உறவினா் ஒருவரின்  மரணத்தை நினைத்து அவர் அழுது கொண்டிருந்தார். அதை கண்ட அன்னை . சீ! இன்று யாராவது அழுவார்களா! இன்று ஆனந்த திருநாள் ஆயிற்றே! என்றார்.ஒருநாள் அன்னையும்
-
என்று கூறினார்.அன்னையிடம் இருந்து தீட்சை பெற்ற சில நாட்களுள் லால்மோகனின் (சுவாமி கபிலேசுவரானந்தர்) மனத்தில் ஒரு சந்தேகம் எழுந்தது. என்ன செய்து தொலைத்தேன். ஒரு பெண்ணிடம் தீட்சை பெற்று விட்டேனே!.என்ற எண்ணம் அவரை தொடர்ந்து அலைக்கழித்தது.

-
கோலாப்மா அன்னையிடம்  அம்மா எண்ணெய் தேய்த்து கொள்ளுங்கள் என்றார்.அதற்கு அன்னை வேண்டாம் என்று மறுத்தார். அதற்கு காரணம் கேட்ட போது நான் தேய்த்துகொண்டால் பிறரும் அப்படியே செய்வார்கள்.எண்ணெய் தேய்த்து கங்கையில் குளிக்ககூடாது என்றார்.ஒரு நாள் ஒரு பெண் வந்து அன்னையிடம் அம்மா எங்களுக்கு என்ன வழி என்று கேட்டாள்.இந்த கேள்வி அன்னையை மிகவும் வெறுப்படைய செய்தது.சற்று கடுகடுத்த குரலில்  உங்களுக்குஎன்ன வழி ! வருடம் தவறாமல் பிள்ளை பெற்று கொள்கிறீர்கள் . கட்டுபாடு என்பது கடுகளவும் இல்லை. என்னிடம் வந்து என்ன வழி  ? என்று கேட்பதால் மட்டும் எல்லாம் ஆகிவிடுமா? என்று கேட்டார்.ஒரு முறை ராதுவிற்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்தது.அவளுக்கு ஒரு தாயத்து கட்டியதும் ஏதோ தெய்வத்திற்கு  வேண்டி கொண்டு சிறிது பணமும் ஒதுக்கி வைத்தார். அது மிகுந்த ஆச்சரியத்தை தரவே  ஒரு பக்தை அவரிடம்  அம்மா இது என்ன நீங்கள் ஏன் இப்படி செய்ய வேண்டும்?உங்கள் சங்கல்பத்தினால் அல்லவா எல்லாம் நடக்கிறது.  என்று கேட்டார். அதற்கு அன்னை நோய்கள் வரும் போது இவ்வாறு தெய்வங்களிடம் வேண்டிகொள்வதால் பெரிய ஆபத்துகள் விலகுகின்றன. மேலும் உரிய தை உரியவருக்குக் கொடுக்கத்தானே வேண்டும் !என்றார். மாணிக்தலா என்ற இடத்தில் ஒரு பக்தரின் வீட்டில்கௌரிமா ஒருமுறை வைசூரி நோய் கண்டு படுத்திருந்தார்.அது  ஒரு தொற்று நோய் என்பதையும் பொருட்படுத்தாமல் அந்த பக்தரின் தாயும்  வேறு பலரும் அவருக்கு  மிகவும் சேவை செய்தனர். அதை க் கேட்ட போது அன்னை  அந்த தாய் இந்த பிறவியிலே யே முக்தி பெற்று விடுவாள். கௌரியின் நோயின் போது அவளுக்காக  ஒரு விளக்கை த் தூண்டியவர்கள்  கூட  முக்தி பெற்று விடுவார்கள் என்றார்.மிகவும் மனம் தளர்ந்தவராக  துறவி ஒருவர் எழுதிய கடிதத்தைக் கேட்டு அன்னை கூறினார்.இது என்னப்பா பேச்சு! குருதேவரின் திரு நாமம் என்ன சாதாரண விஷயமா? அது எப்படி வீணாக ப் போகும்? பலனளிக்காமல்  இருக்கவே  இருக்காது?குருதேவரை  நினைத்தபடி இங்கே யாரெல்லாம் வருகிறார்களோ அவர் களுக்கு இறைக்காட்சி கட்டாயமாக க் கிடைக்கும். மரண வேளையிலாவது  கிடைக்து தீரும்.ஒரு பக்தர் மனப்பிரச்சனைகளால் நிலைகுலைந்து போனார் . குருதேவரும் அன்னையும் இருந்தும் தனக்கு எதுவும்செய்யவில்லையே என்று அவருக்கு த் தோன்றியது.எனவே இனி அன்னையிடம் போகக்கூடாது.என்று முடிவு செய்தார்.அவர், ஆனால் நண்பர்கள் வற்புறுத்தியதன் காரணமாக ஒரு நாள் உத்போதனுக்கு ச் சென்றார்.அவர் சென்ற போது ஏராளமான  பக்தர்கள் காத்திருந்தனர்.ஒவ்வொருவராக ச் சென்று வணங்கினர்.அன்னை யாரிடமும் எதுவும் பேச வில்லை .ஆனால் பக்தர் சென்று வணங்கியதும் என்னப்பா எப்படி இருக்கிறாய்?என்று கனிவுடன் கேட்டார் . அவரது அன்பில் நெகிழ்ந்த  பக்தர் உணர்ச்சி வசப்பட்டு நன்றாக இருக்கிறேன் அம்மா என்றேன்.அன்னை மென்னையாக ச் சிரித்தவாறே அது எப்படி யப்பா ? மனத்தில் .இயல்பே அப்படித்தானே! அதற்காக இப்படியொரு முடிவெடுப்பார்களா,என்று கேட்டார். அந்த பக்தர் சட்டப் படிப்பு படித்துக்கொண்டிருந்தார்.ஒருநாள் அன்னையை வணங்கிய போது அம்மா என் மனமோ இந்த நிலைமையைில் உள்ளது. இதில் வக்கீல் தொழிலுக்கு வேறு போகிறேன்.என் தலையெழுத்து என்னவாகுமோ தெரியவில்லை என்றார்.அதற்கு அன்னை உறுதியாக நீ ஏன் பயப்பட வேண்டும்,மகனே! அது ஒரு தொழில் அவ்வளவு தானே? என்று கூறினார்.அன்னையிடம் தீட்சை பெற்ற  சில நாட்களுள்  லால்மோகனின் (சுவாமி  கபிலேசுவரானந்தர் ) மனத்தில் ஒரு சந்தேகம் எழுந்தது.என்ன செய்து தொலைத்தேன்.ஒரு பெண்ணிடமிருந்து தீட்சை பெற்று விட்டேனே!என்ற எண்ணம் தொடா்ந்து அவரை அலைகழித்தது.மெள்ள மெள்ள அது ஒரு மனப்போராட்டமாகவே ஆகிவிட்டது. கடைசியில் இன்னும் ஒரு நாள் பொறுப்பேன். அதற்குள் குருதேவரே ஒரு வழிகாட்டாவிட்டால் இந்த மந்திரத்தை ஜபிப்பதை  விட்டுவிடுவேன்.என்று தமக்குள் முடிவு செய்துகொண்டார்.மறுநாள் உத்போதனில் பால் கொடுப்பதற்காக சுவாமி பிரேமானந்தர் லால்மோகனை அனுப்பினார்.பாலைக் கொடுத்து விட்டு அன்னையும் வணங்கினார்லால்மோகன். வணங்கி எழுந்ததும் அவரிடம்  இதோ பார்  உனக்கு மந்திரம் தந்தது நான் அல்ல ,குருதேவரே உனக்கு தந்தார். என்று கூறினார் அன்னை. சிலநாட்கள் எல்லாம் சரியாகியது போல் இருந்தது. ஆனால் மீண்டும் அதே போராட்டம் தலைதூக்கியது. மீண்டும் லால்மோகன் தமக்குள் ஒருசெய்தார்.ஹரேன் பாபு என்னிடம் வந்து  அன்னையிடமிருந்து எனக்கு சக்தி கிடைத்தது. என்று கூறுவாரானால் அன்னை என்னிடம் கூறியதை நான் ஏற்று க்கொள்வேன்.என்பதே அந்த முடிவு. சில நாட்களில் ஸ்ரீராமகிருஷ்ண ஜெயந்தி விழா வந்தது.அப்போது ஹரேன் அவரிடம் வந்து அவர் நினைத்ததை அப்படியே கூறினார். லால் மோகனின் சந்தேகம் தெளிந்தது.ஏதோ ஒரு காரணத்திற்காக  உத்போதனில் உள்ள சமையல்காரனை வேலையை நிறுத்த வேண்டியிருந்தது. உடனடியாக நிறுத்தினால் அன்னையின் சேவைக்கு இடையுறு நேருமே என்பதற்காக அற்குள்ள தலைமை சுவாமிகள் அவனை நிறுத்துவதற்கு த் தாயங்கினார். விஷயம் அன்னைக்குத் தெரிந்த போது அவர் கூறினார். நீங்களெல்லாம்  துறவிகள்  அனைத்தையும் விடுவ தே உங்கள் லட்சியம்.இப்போது ஒரு சமையல்காரனை விட முடியவில்லையா, பேலூா் மடத்திலுள்ள துறவி ஒருவா் வேலைக்காரனை அடித்துவிட்டார்.அதை கேள்விப்பட்ட அன்னை கூறினார்.அவர்கள் துறவிகள் நியாயப்படி அவர்கள் மரத்தடியில் களில் வாழவேண்டும். இப்போதோ பெரிய மடங்கள் கட்டிடங்கள் ,வேலைக்காரர்கள் எல்லாம் வந்து விட்டன. இப்போது வேலைக்காரனை அடிக்கும் அளவிற்கு போய்விட்டார்கள்,

அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-23

அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-23
-


இது ஒரு விதமான ஈர்ப்பு தான். ஆனால் இதில்  மாயை இல்லை. இந்த  ஈர்ப்பின் காரணமாகத் தான் மீண்டும் மீண்டும் வந்து போக வேண்டியிருக்கிறது. புரிகிறதா?. ஆம் அம்மா. போ இனி போய் தூங்கு. எழுதி க் கொள்கிறேன். உலகில் வேறு யாரும் உனக்கு சொந்தமானவர்கள்அல்ல என்பது.ஒரு நாள் உனக்கு தெரிய வரும். இந்த ஈர்ப்பு உண்மையில்என்ன என்பதை அப்போது நீ சரியாக புரிந்து கொள்வாய்.குடும்ப சண்டைகள் கூட அன்னையிடம் வருவதுண்டு. அவரும்  பொறுமையாக அவர்களிடம்  பேசி  சமாதானப்படுத்துவார். ஒரு முறை குருதேவரிடம்  சீடர் ஒருவரும் அவரது மனைவியும்  இவ்வாறு வந்தனர். வயதான தம்பதியினர்.இவர்கள் கூறியதையெல்லாம் கேட்ட பிறகு அன்னை  அந்த பக்தரிடம்கூறினார். இந்த வயதில் இதெல்லாம்  நன்றாகவா இருக்கிறது?  மகன் கல்லூரியில் படிக்கிறான் .இன்றோ நாளையோ திருமணம் செய்து கொள்ளும் வயதாகி விட்டது. மருமகள் வந்து இதெல்லாம் பார்த்தால் , அப்போதுதான் திருந்துவீர்கள் போல் இருக்கிறது. இனி இப்படி நடக்கக்கூடாது. நான் சொல்கிறேன் புரிகிறதா?. சரியம்மா, இனி அப்படி நடக்காது. என்று கூறினார் அந்த பக்தர். அன்னை தொடர்ந்தார்.
-
மனைவி என்பவள் வீட்டு மகா லட்சுமி. அவள் ஒரு விதத்திலும் மனம் நோகும் படி நடக்க கூடாது. அவள் என்ன தனக்காகவா எல்லாம் செய்கிறாள். உங்கள் மனைவியை பொறுத்த வரையில் , அவள் கை கொஞ்சம் தாராளம்.அவ்வளவு தான். அதனால் என்ன வந்துவிட்டது. எல்லாம் பக்தர்களின் குடும்பமே அல்லவா? அவளை நன்றாக வைத்து கொள்ளுங்கள். கணவனும் மனைவியும் சென்றனர். அதன் பிறகு அவர்களின் வீட்டில் எந்தப் பிரச்சனையும் இல்லை.லலித்  சட்டோபாத்யாயர் என்பவரைப் பற்றி பேச்சு வந்தது. அன்னையின் அருள் பெற்றவராக இருந்தும் அவரால் குடிபழக்கத்தை விட முடியவில்லை. ஆனால் அன்னையிடம் அவர் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். அவரைப் பற்றி பேசிக் கொண்டிருந்த போது அன்னை கூறினார், ராட்டினத்தில் பல வண்ண நூல்களைச் சுற்றி வைக்கிறோம். முதலில் சிவப்பு நிறம் ,பிறகு நீலம் என்ற வரிசையில் சுற்றுவதாக வைத்துக்கொள்வோம். அதை மீண்டும்  எடுக்கும் போது அதே வரிசையில் தான் வெளி வரும். ஆனால் இரண்டிற்கும் வேறுபாடு உண்டு. முதலில் சுற்றும் போது பிணைக்கப்படுகிறது. இரண்டாவது சுற்றில் பிணைப்பில் இருந்து விடுபடுகிறது.ஆனால் பார்ப்பதற்கு ஒரு போலவே இருக்கும். அம்மா நான் முதலில் குருதேவரை  தரிசித்தபோது அவரது திருமேனியிலிருந்து ஒளி வந்து கொண்டிருந்தது.ஒரு கண்ணாடி துண்டில் சூரியனது கதிர்கள் விழுந்தால் எப்படி ஒளிக்கிரணங்கள் புறப்படுமோ அத்தகைய ஒளி அது. உண்மைதான் மகளே ! நீ கண்டது உண்மை தான்.அவரது உடம்பில்எண்ணெய் தேய்க்கும் போது சில வேளைகளில் நானும் அத்தகைய ஒளியைக் கண்டதுண்டு. தீட்சை பெற்ற பக்தர் ஒருவர் மடத்திலுள்ள சாது ஒருவரிடம்  வாக்குவாதம் செய்ய நேர்ந்தது.அதை கேள்விப்பட்ட அன்னை கூறினார். ஒருவர் மூன்று விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.1.ஆற்றின் கரையிலுள்ள வீடு,

அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-22

அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-22
-


இந்த உடம்பின் முலம்  என்னென்ன செய்ய வேண்டும் என்று குருதேவர் திருவுளம் கொண்டிருந்தாரோ  அதெல்லாம் நிறைவுற்று  விட்டதென்று தான் தோன்றுகிறது. இப்போது மனம் எப்போதும் அவரையே நாடுகிறது. வேறெதுவும் பிடிக்கவில்லை.ஏன் இவ்வளவு கவலைப்படுகிறாய் ! உங்களையெல்லாம்  அவரது திருப்பாதங்களில் அல்லவா சமர்ப்பித்திருக்கிறேன். நீ ங்கள் அந்த வட்டத்திற்குள் தான் சுழன்றாக வேண்டும் .வேறெங்கும் போக முடியாது,உங்களை அவர் எப்போதும் காத்துகொண்டிருக்கிறார்.
தாய்க்கு பணிவிடை செய்வது என்பது  ஒவ்வொருவருடைய கடமை . அதிலும் மனித குலத்திற்கே சேவை செய்வதற்காக இங்கே வந்துள்ள நீங்கள் கட்டாயம் தாயை போற்றியாக வேண்டும். உன் தந்தை பணம் வைத்து விட்டு தான் சென்றுள்ளார்.இல்லாவிட்டால் நீ வேலை தேடி சம்பாதித்து உன் தாயை ப் பராமரிக்குமாறு சொல்லியிருப்பேன்.நேர்மையான வழியில் பணம் சம்பாதிப்மது மிகமிக கடினம். பணம் மனத்தை மாசுபடுத்துகிறது.இயன்ற அளவு விரைவில் பண விவகாரங்களை முடித்து விடுமாறு அதனால் தான் உனக்கு சொல்கிறேன்.சற்று நீண்ட காலம் பண விவகாரங்களை க்கையாண்டால் போதும்  தானாக அதில் ஒரு ஈர்ப்பு வந்து விடும்.பணம் அத்தகைய பொருள் எனக்கு அப்படியொன்றும்  பணத்தில் பற்று இல்லை. ஒரு முறை விட்டது விட்டது தான்.
-
நினைக்கும் போது அதிலிருந்து என்னால் விலகமுடியும் , என்று நீ நினைக்கலாம். இல்லை மகனே ஒரு போதும் அப்படி எண்ணாதே. அது நீ அறியாமலே உன் கழுத்தை ப் பற்றி நெரிக்கும்.குருதேவரால் பணத்தை தொடக்கூட முடியாது. அவரது திருநாமத்தை ஏற்றுக்கொண்டு நீ வெளியே வந்துள்ளாய். எனவே அவரது வார்த்தைகளை எப்போதும் மனத்தில் வை. உலகின் தீமைகள் அனைத்திற்கும் மூலகாரணம் பணம்! உனக்கு சிறு வயது.கை யில் பணம் இருந்தால் மனம் கட்டாயம் அதில் பற்று வைக்கும்!. கவனமாக இரு.ஒரு நாள் அன்னையின் புகைப்படம் (15-12) ஒன்று கொண்டு வரப்பட்டது. அது எப்படி இருக்கிறது என்பதை அறிவதற்காக அன்னையிடம் கொடுக்கப்பட்டது.அன்னை இரண்டு கைகளையும் நீட்டி அதை வாங்கி கொண்டு . பய பக்தியுடன் தம் தலை மீது வைத்தார்.  இதைக் கண்டு எல்லோரும் சிரித்தார்கள். படத்தை திருப்பி வாங்கிய பிறகு அவரிடம் ஒரு பக்தை கேட்டார்.அது யாருடைய படம் அம்மா? ஏன் என்னுடையது தான். இந்த பதிலைக்கேட்டதும் அந்த பக்தை வாய் விட்டு சிரித்தார். ஏன் சிரிக்கிறாய் ? உங்கள் படமானால் ஏன் தலையில் வைத்தீர்கள்.இதை கேட்டதும் அன்னையும் சிரித்து விட்டு ஏன் இதனுள்ளும் குருதேவர் தானே இருக்கிறார் என்றார்.
-
குருதேவரின் பூஜையை முடித்து விட்டு அன்னை தமக்குள் மூழ்கியவராய் அமர்ந்திருந்தார்.அருகில் புதிய பிரம்மசாரி ஒருவர் இருந்தார். அவரிடம் அன்னை பேச ஆரம்பித்தார். நீ குருதேவரை சியாம்புகூரில் பார்த்திருக்கிறாய் அல்லவா ?.ஆம் அப்போது எனக்கு வயது ஐந்து . பக்கத்து வீட்டு பெண்களெல்லாம் குருதேவரை தரிசிக்க சென்றனர் . என் தாயும் என்னை இடுப்பில் எடுத்துக் கொண்டு சென்றார். ஆமாம் இது உங்களுக்கு எப்படி தெரியும்? உறியிலிருந்து லட்டு எடுத்து உங்களுக்கு த் தருமாறு குருதேவர் சைகை காட்டினாரே ! அப்போது உனக்கு லட்டு தந்தது யார், நினைவிருக்கிறதா? ஆம் ஒரு பெண்மணி கொண்டு வந்து தந்தார். அந்த பெண்மணி நான் தான். நீங்களா? பிரம்மசாரி திகைத்து போனார்.
-
மற்றொரு முறை யும் நீ அவரை தரிசித்திருக்கிறாய். அப்படித்தானே? ஆம் அது குருதேவரின் மகாசமாதிக்கு நீண்ட நாட்கள் பிறகு புரி கோயிலில். நீ கைகளை நீட்டி அவரை அழைத்தாய். அவர் அழைத்தார் நானும்  அழைத்தேன். பை யனுக்கு தெய்வ தரிசனம்  கிடைத்து விட்டது. என்று கோயிலில் ஒரே அமர்களமாகி விட்டது. இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும். அங்கேயும் நான் இருந்தேன்.
-
பிரம்மச்சாரி பேச்சு மூச்சற்றவனாக அன்னையின் திருபாதங்களில் விழ இருந்தார். அன்னை அவரை அமைதிப் படுத்தி மந்திர தீட்சை அளித்தார் .முக வாயைத் தொட்டு ஆசீர்வதித்தார்.சைதன்ய லீலை என்ற நாடகத்தை க் காண அன்னை சென்றிருந்தார்.அது பற்றி மறுநாள் கூறினார்.அந்த பெண் எவ்வளவு இயல்பாக நடித்தாள்.நல்ல பக்தையாக இருக்க வேண்டும்.இல்லாவிட்டால் இப்படி நடிக்க முடியாது. அப்படியே அவள் சைதன்யராக மாறிவிட்டிருந்தாள் என்று தான் சொல்ல வேண்டும்.ஒரு பெண் ஆண் வேடத்தில் நடிப்பதாக யாராவது சொல்ல முடியுமா.? பிறகு அந்த நாடகத்தில் நடித்த ஜகாய் ,மதாய் பற்றி கூறினார். அவர்களைப் போல் பக்தர் யார்? ராவணனைப் போல பக்தன் யார்?ஹிரண்யகசிபுவைப்போல் பக்தன் யார்?கிரீஷ் பாபு குருதேவரை எவ்வளவு திட்டுவார்.இருந்தாலும் அவரை போன்ற பக்தர் யார்?.அவர்கள் பக்தர்களாகவே பிறந்தவர்கள்.பக்தனாக இருப்பது சாதாரண விஷயமா என்ன?பக்தி சும்மா வந்து விடுமா? (லட்சுமியின் பக்கம் திரும்பி) ஆமாம் லட்சுமி , அது ஒரு பாடல் – நான் முக்தி தந்தாலும் தருவேன்.? லட்சுமி அந்த ப் பாடலை ராகத்துடன் பாடினார்.

அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-21

அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-21
-



அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்(உபதேசங்கள்)-பாகம்-21
-
அன்னை ஒரு துறவியைப்பார்த்து கூறினார் இல்லற வாழ்வின் பிரச்சனைகளிலிருந்து உன்னை விடுவித்து தமது பாத கமலங்ககளில்  குருதேவர் வைத்துள்ளார்.இது என்ன சாதாரண பாக்கியமா? ஜப தியானம் செய்கிறேன், அல்லது செய்யாமல் போகிறேன். குடும்பத்தின் பிக்கல் பிடுங்கலிலிருந்து விடுபட்டுள்ளேனே என்பான் யோகேன். என்னைப் பாரேன் !ராதுவின் காரணமாக இந்த மாயையில் என்ன அவதிப்படுகிறேன்.எத்தனையோ பிறவிகளின் வினைப்பயன் பாக்கி இருந்தது. இப்போது அவற்றைஅனுபவிக்க வேண்டியிருக்கிறது. எல்லா அலைகளும் ஓய்ந்து விட்டால் இந்த பிறவியிலேயே முக்தி கிடைத்து விடும். குருதேவர்கூட வினைப்பயனை அனுபவிக்க வேண்டியிருந்தது அல்லவா?.
-
மந்திரத்தை தந்தவர் தான் குரு. அந்த மந்திரத்திலிருந்துதான் படிப்படியாக தியாகம் , வைராக்கியம் , சன்னியாசம் எல்லாம் கிடைக்கிறது. மந்திரம் தந்த குருவையே தியானம் செய்.. அப்பா! நீ என் வேலையைச் செய்கிறாய் .குருதேவரின் வேலையைச் செய்கிறாய், இது என்ன தவத்தை விட  குறைந்த விஷயமா?.
-
ஒரு சீடர் கூறினார்-அம்மா சில வேளைகளில் எங்கே முழ்கிவிடுவோமோ என்று பயமாக  இருக்கிறது.அந்த அளவிற்கு மனம் சஞ்சலப்படுகிறது.
அன்னை கூறினார்- அது எப்படியப்பா?நீ எப்படி மூழ்குவாய் ? குருதேவரின் குழந்தைகளான நீங்கள் மூழ்கமுடியுமா? ஒரு போதும் இல்லை . குருதேவர் உங்களைக் காப்பார். சாதனையும் தவமும் ஒருவன் எவ்வளவு பழகுகிறானோ அவ்வளவு விரைவில் இறைகாட்சி பெறுவான். சிறிது சிறிதாகப் பழகினாலும் அவரது திருக்காட்சி கிடைக்கவே செய்யும். ஆனால் அது இறுதி வேளையிலாக இருக்கும்.எதுவும்  செய்யாமல் வெறுமனே ஆரவாரம் செய்பவர்களுக்குத் தாமதமாகவே நடக்கும்ஆன்மீக சாதனைகள் செய்வதற்காகவே நீ துறவியாகி இருக்கிறாய்.எப்போதும் சாதனையில் ஈடுபட உன்னால் முடியவில்லை. அதனால் வேலைகளை  குருதேவரின் திருப்பணியாக எண்ணிச் செய்.இறைவனின் திரு நாமத்தில் ஈடுபடுவதற்காக நீ உலகைத் துறந்தாய்.ஆனால் இங்கோ  பணிகள் என்ற பெயரில் இன்னோர் உலகை உருவாக்கி அதில் முழ்கி கிடக்கிறாய்.
-
குடும்பத்தையும் சொந்த பந்தங்களையெல்லாம் விட்டு விட்டு மடத்தில் துறவிகளாக சேர்க்கிறார்கள். ஆனால் மடத்தைப்பற்றி பிடித்துக்கொண்டு  அதை விட்டு விலக மறுக்கிறார்கள். ஆன்மீக சாதனைகள் செய்வதற்காகவே நீ துறவியாகி இருக்கிறாய்..எப்போதும் சாதனையில்  ஈடுபட உன்னால் முடியவில்லை. அதனால் வேலைகளை குருதேவரின் திருப்பணியாக எண்ணி வேலை செய்.
-
அன்னை சாரதாதேவி-ஸ்ரீராமகிருஷ்ணர் வாட்ஸ்அப் குழு 9003767303