சீக்ஷா (அதாவது சிக்ஷா) என்றால் கல்வி; வல்லீ என்றால் பகுதி. கல்விபற்றி சிறப்பாகக் கூறுவதால் இந்தப் பகுதி சீக்ஷா வல்லி என்று அழைக்கப்படுகிறது.
மனிதனுக்கு இரண்டு வகையான தேவைகள் உள்ளன. உணவு, உடை, தங்குமிடம் போன்றவை முதல் வகை; இவை அடிப்படைத் தேவைகள். ஆனால் இவற்றால் மட்டும் அவனால் திருப்தியுற்று நின்றுவிட முடிவதில்லை. அன்பு வேண்டும், ஆற்றல் வேண்டும், இன்பம் வேண்டும், அறிவு வேண்டும், இறைவனை நாட வேண்டும் - இவ்வாறு எத்தனையோ வேண்டியுள்ளன. ஒரு கோணத்தில் பார்க்கும் போது, அடிப்படைத் தேவைகளைவிட இவை முக்கியமானவை. இவை வாழ்க்கைத் தேவைகள் (ஞுதுடிண்tஞுணtடிச்டூ ணஞுஞுஞீண்). இந்த இரண்டுவகைத் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்குத் துணை செய்கின்ற கல்வியே முழுக்கல்வியாக முடியும். அத்தகைய கல்வியையே நாம் வாழ்க்கைக் கல்வி என்கிறோம்.
வேத கால இந்தியாவில், ஏன், அன்னியர் படையெடுப்புகளால் நமது கலாச்சாரம் தடுமாறும்வரை இந்தியாவில் அத்தகைய கல்வியே நிலவியது. அதுவே குருகுலக் கல்வி முறை, புறச் சூழ்நிலை காரணமாகவும், பெற்றோர், சமுதாயம் என்று பலரது ஆதிக்கம் காரணமாகவும் மனம் ஒரு நிறம் பெறுமுன்னரே. அதாவது மிகச் சிறு வயதிலேயே சிறுவர்கள் அறிவொளி பெற்ற குருவின் வீட்டில் அவரது பொறுப்பில் விடப்பட்டனர். வேதங்கள் மட்டுமல்ல, வில் வித்தை போன்ற உபவேதங்கள்,
(உப வேதங்கள் நான்கு. அவை ஆயுர்வேதம் (மருத்துவம்), தனுர்வேதம் (வில்வித்தை போன்ற போர்க் கலைகள்), கந்தர்வ வேதம், (இசை போன்ற நுண்கலைகள்), அர்த்த சாஸ்திர்ம (ஆட்சிக் கலை).
ஜோதிடம் போன்ற வேதாங்கங்கள் (வேதாங்கங்கள் ஆறு. அவை சிக்ஷை (உச்சரிப்பு), வியாகரணம் (இலக்கணம்), சந்தஸ் (செய்யுள் அமைப்பு), நிருக்தம் (அகராதி), ஜ்யோதிஷம் (வானவியல், ஜோதிடம்), கலபம் (சடங்குகள்). முதலியவையும் அவர்களுக்குக் கற்பிக்கப்பட்டன. இயற்கையுடன் இயைந்து வாழ்தல், இறைவனைச் சார்ந்து வாழ்தல் போன்றவை இயல்பாகவே அவர்களது வாழ்வின் அங்கமாகத் திகழ்ந்தன. எனவே குருகுலத்திலிருந்து அவர்கள் நிறைமனிதர்களாக வெளிவந்தனர். அவர்களால் வாழ்க்கையைச் சிறப்பாக எதிர்கொள்ள முடிந்தது. அடிப்படைத்தேவைகளுடன் வாழ்க்கைத் தேவைகளையும் பூர்த்தி செய்தபடி அவர்கள் சமுதாயத்தின் சிறந்த அங்கங்களாகத் திகழ்ந்தனர்.
ஆன்மீகத்தின் உச்சகங்களைக் கண்ட உபநிஷத முனிவர்களைப் போலவே உலகியல் துறைகளிலும் மாமேதைகளை பாரதம் உருவாக்கியது. இந்த வாழ்க்கைக் கல்வியால்தான் மருத்துவத்தில் சரகர், சுச்ருதர்: வானவியலில் ஆரிய பட்டர், பாஸ்கரர், கணிதத்தில் பாஸ்கரர், லீலாவதி; ஜோதிடத்தில் வராக மிகிரர், அரசியலில் சாணக்கியர் என்று நீள்கிறது. அத்தகைய மேதைகளின் பட்டியல், பிற நாடுகளிலிருந்தும் கடல் கடந்து மாணவர்கள் வந்து படிக்கும் நாடாகத் திகழ்ந்தது. பாரதம், பொருளாதாரத்திலும் வாணிபத்திலும் ஈடினையற்றுத் திகழ்ந்தது நம் நாடு. அதற்கெல்லாம் அடிப்படையாகத் திகழ்ந்தது இந்த வாழ்க்கைக் கல்வி.
சமீப காலத்தில் இந்தக் கல்வியை வற்புறுத்தியவர் யுக ஆச்சாரியரான சுவாமி விவேகானந்தர். அனைவருக்கும் கல்வி அளிப்பதன்மூலம்தான் இந்தியாவில் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும் என்ற முதல் குரல் எழுந்தது அவரிடமிருந்துதான். ஆனால் அவர் கூறுவது தற்போதைய பல்கலைக் கழகங்களில் நிலவுகின்ற கல்வியை அல்ல; நாம் மேலே கூறிய வாழ்க்கைக் கல்வியையே என்பதை நினைவில்கொள்வது இன்றியமையாதது.
கல்வி என்ற மந்திரத்தால் தீர்க்க முடியாத பிரச்சினையே இல்லை.... உண்மையான கல்வி என்பது தகவல்களைச் சேகரிப்பதல்ல; அது மனத்தின் இயல்பான ஆற்றலை வளரச் செய்வது: அது மனத்தின் இயல்பான ஆற்றலை வளரச் செய்வது: அல்லது மனிதனைச் சரியாக. திறமையாகச் சிந்திக்கப் பயிற்றுவிப்பது.... கல்வி என்பது என்ன? அது புத்தகப் படிப்பா? இல்லை. அது பலவகைப் பட்ட அறிவைத் தேடிக் கொள்வதா? அதுவும் இல்லை. சங்கற்பத்தின் (தீடிடூடூ) போக்கையும் வெளிப்பட்டையும் ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, பயனளிக்குமாறு செய்கின்ற பயிற்சியே கல்வி.... நம் மாணவர்கள் பெறும் கல்வி எதிர்மறையானதாக உள்ளது. மாணவன் புதிதாக ஒன்றையும் கற்பதில்லை; அதே வேளையில் தன்னிடம் உள்ளவற்றையும் இழக்கிறான்.... ஐம்பது ஆண்டுகளாக இருக்கும் இத்தகைய கல்வி, சுயசிந்தனையுள்ள ஒருவனைக்கூட தோற்றுவிக்கவில்லை... எதனால் அவர்கள் சுயமாகச் சிந்திக்கக் கற்றுக் கொள்வார்களோ, அதில் அவர்களுக்கு ஆர்வத்தை ஊட்ட வேண்டும். இந்த அடிப்படைக் கருத்தை மறந்ததுதான் இந்தியாவின் இழிநிலைக்குக் காரணம். மாணவர்களுக்கு இத்தகைய கல்வி அளிக்கப்படுமானால் அவர்கள் மனிதர்கள் ஆவார்கள்; வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தாங்களே தீர்த்துக் கொள்வதற்கான ஆற்றல் பெறுவார்கள்.... தற்போதைய நாகரீக நாடுகளின் அறிஞர்கள் அதை ஆராய்வதில் ஈடுபட்டிருக்கிறார்கள். நமது நாட்டிலோ பல்லாயிர வருடங்களுக்கு முன்பு இது ஆராய்ந்து முடிவு செய்யப்பட்டு விட்டது.... அதற்குப் பண்டைய குருகுல வாசம் முதலியவை வேண்டும்.
இவ்வாறு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டு, நமது நாட்டை உன்னதங்களில் திளைக்கச் செய்த குருகுலக் கல்வியான வாழ்க்கைக் கல்வியின் சில அடிப்படை அம்சங்களையே உபநிஷதத்தின் இந்த முதற்பகுதியில் காண்கிறோம்.
1. பிரார்த்தனை
உபநிஷதம் காட்டும் வாழ்க்கைக் கல்வியின் முதல் அம்சம் பிரார்த்தனை உயர்ந்த எதையும் சாதிப்பதற்கு பிரார்த்தனைபூர்வமான வாழ்க்கை தேவை, இயற்கையை அணுகும்போது சரி, இறைவனை நாடும் போதும் சரி, பணிவுடனும் பிரார்த்தனையுடனும் முயற்சிகளைச் செய்தால் பாதை சுலபமாகிறது. வாழ்க்கையை அணுகுகின்ற இந்த உபநிஷதமும் பிரார்த்தனையுடன் தொடங்குகிறது.
பல்வேறு தேவர்களிடம் பிரார்த்திப்பதாக இந்தப் பிரார்த்தனை அமைந்துள்ளது. காண்கின்ற புற உலகை இயக்குகின்ற தூல சக்திகளாயினும் சரி, காணாத அக உலகை இயக்குகின்ற சூட்சும சக்திகளாயினும் சரி ஒவ்வொன்றையும் ஒவ்வொரு தெய்வமாகக் கண்டனர் உபநிஷத ரிஷிகள். இந்த தெய்வங்கள் அபிமானி தேவதை எனப்பட்டனர். ஒவ்வொரு தேவதையும் பிரபஞ்சத்தில் ஒன்றையும் மனிதனில் ஒன்றையும் இயக்குவதாகக் கொள்ளப்பட்டனர். உதாரணமாக சூரியனுக்கும் கண்ணுக்கும் அபிமானி தேவதை அர்யமான் பகலுக்கும் பிராணனுக்கும் அபிமானி தேவதை மித்ரன். இந்த தெய்வ சக்திகள் நினைத்தால் நம்மிலும் பிரபஞ்சத்திலும் நமக்கு அனுகூலமான சூழ்நிலையை உருவாக்க முடியும். அப்போது முயற்சிகள் தடையின்றி நிறைவேறும். எனவே அந்த தேவர்களிடம் பிரார்த்திக்கிறார் உபநிஷத முனிவர்.
இந்தப் பிரார்த்தனையின்மூலம் இயற்கையுடன் இயைபு (டச்ணூட்ணிணதூ தீடிtட ணச்tதணூஞு) என்கின்ற கருத்தும் சுட்டிக்காட்டப் படுகிறது. நாம் ஒவ்வொருவரும் சமுதாயத்தில் ஓர் அங்கம். மனிதர்கள் மட்டுமல்ல; மிருகங்கள், செடிகொடிகள், நதிகள், மலைகள் என்று இயற்கையில் காணப்படுகின்ற அனைத்துமே சமுதாயத்தின் அங்கங்கள் இவற்றுடன் இயைந்து வாழும்போதே வாழ்க்கை அதன் முழுப் பரிமாணத்துடன் திகழும். எனவே இயற்கையைப் போற்றுவதற்கு முதலில் போதிக்கப்படுகிறது.
மனித வாழ்வு வளம்பெற வேண்டுமானால் இந்த இயற்கை சக்திகளை வளம்பெறச் செய்ய வேண்டும். அதாவது மனிதன் இயற்கையுடன் இயைந்து வாழ வேண்டும். உலகில் எத்தனை கோடி உயிரினங்கள் இருந்தாலும் அத்தனைக்கும் உணவும் வாழ வசதியும் வழங்குவதற்கு இயற்கையன்னை தயாராகவே இருக்கிறாள். ஆனால் அதற்கு அவளுடன் இயைந்து வாழ்வது இன்றியமையாதது. இயற்கையை நாம் அழித்தால் நாமும் அழிவோம். மாறாக, நாமும் இயற்கையும் பரஸ்பரம் பேணி வாழ்ந்தால் இயற்கையும் வாழும். நாமும் வாழ்வோம்.
இயற்கைச் சக்திகளான அந்த தேவர்களிடம் பிரார்த்தனை செய்வதாக அமைந்துள்ள மந்திரம். இவ்வாறு இயற்கையுடன் இயைந்து வாழ்வதற்கு வற்புறுத்துகிறது.
ஓம் சன்னோ மித்ரா: சம் வருண: சன்னோ பவத்வர்யமா
சன்ன இந்த்ரோ ப்ருஹஸ்பதி: சன்னோ விஷ்ணுருருக்ரம:
நமோ ப்ரஹ்மணே நமஸ்தே வாயோ த்வமேவ ப்ரத்யக்ஷம்
ப்ரஹ்மாஸி த்வாமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்ம வதிஷ்யாமி ரிதம்
வதிஷ்யாமி ஸத்யம் வதிஷ்யாமி தன்மாமவது தத்வக்தாரமவது
அவது மாம் அவது வக்தாரம் ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி://1//
மித்ர: - மித்ரன்: ந: - நமக்கு: சம் - நன்மை செய்யட்டும்: வருண: - வருணன்: சம் - நன்மை செய்யட்டும்: அர்யமா - அர்யமான்: ந: - நமக்கு: சம் பவது - நன்மை செய்யட்டும்: இந்த்ர: - இந்திரனும்: ப்ருஹஸ்பதி: - பிருகஸ்பதியும்: ந: - நமக்கு: சம் - நன்மை செய்யட்டும்: உருக்ரம: விஷ்ணு: - எங்கும் நிறைந்தவராகிய விஷ்ணு: ந; - நமக்கு: சம் - நன்மை
செய்யட்டும்: ப்ரஹ்மணே - பிரம்மனை; நம;- வணங்குகிறேன்; வாயோ - வாயு தேவனே; நமஸ்தே - வணங்குகிறேன்; த்வம் ஏவ - நீயே; ப்ரத்யக்ஷம் - கண்கண்ட; ப்ரஹ்ம - தெய்வமாக; அஸி - இருக்கிறாய்: ப்ரத்யக்ஷம் - கண்கண்ட; ப்ரஹ்ம - தெய்வம் என்று; த்வாம் ஏவ - உன்னையே; வதிஷ்யாமி - போற்றுகிறேன்; ரிதம் - ரிதம் என்று; வதிஷ்யாமி - போற்றுகிறேன்; ஸத்யம் - சத்தியம் என்று; வதிஷ்யாமி - கூறுகிறேன்; தத் - அந்தப் பரம்பொருள்; மாம் - என்னை; அவது - காப்பாராக; தத் - அவர்; வக்தாரம் - ஆசிரியரை: அவது - காப்பாராக; மாம் -என்னை; அவது - காப்பாராக; வக்தாரம் - ஆசிரியரை; அவது - காப்பாராக.
1. மித்ரன் நமக்கு நன்மை செய்யட்டும், வருணன்
நமக்கு நன்மை செய்யட்டும், அர்யமான் நமக்கு
நன்மை செய்யட்டும். இந்திரனும் பிருகஸ்பதியும்
நமக்கு நன்மை செய்யட்டும், எங்கும் நிறைந்த
வராகிய விஷ்ணு நமக்கு நன்மை செய்யட்டும்
பிரம்மனை வணங்குகிறேன். வாயு தேவனே,
உன்னை வணங்குகிறேன். நீயே கண்கண்ட தெய்வ
மாக இருக்கிறாய். கண்கண்ட தெய்வம் என்று
உன்னைப் போற்றுகிறேன்; ரிதம் என்று போற்று
கிறேன்; சத்தியம் என்று கூறுகிறேன். அந்தப் பரம்
பொருள் என்னைக் காப்பாராக! அவர் ஆசிரியரைக்
காப்பாராக! என்னைக் காப்பாராக! ஆசிரியரைக்
காப்பாராக!
பிராணனுக்கும் பகலுக்கும் அபிமானி தேவதை மித்ரன். அபானனுக்கும் இரவுக்கும் அபிமானி தேவதை வருணன். கண்ணுக்கும் சூரியனுக்கும் அபிமானி தேவதை அர்யமான். கைகளுக்கும் வலிமைக்கும் அபிமானி தேவதை இந்திரன். வாக்கிற்கும் புத்திக்கும் அபிமானி தேவதை பிருகஸ்பதி, பாதங்களுக்கு அபிமானி தேவதை விஷ்ணு.
ரிதம் என்பது பிரபஞ்ச இயக்கத்தின் ஒழுங்குமுறை நியதி. அதற்கு அடிப்படையான உண்மையே சத்தியம். பிரபஞ்சம் இயங்குகிறது, ஏனெனில் இறைவன் அதனைப் பின்னின்று இயக்குகிறார். பிரபஞ்சம் என்பது இயற்கை சக்திகளின் ஒட்டுமொத்தம்.
இவ்வாறு இயற்கை சக்திகளாகவும் அவற்றைப் பின்னின்று இயக்குபவராகவும் விளங்குகின்ற இறைவன் மாணவனையும் ஆசிரியரையும் காக்கட்டும் என்று இந்த மந்திரத்தில் பிரார்த்திக்கப்படுகிறது.
2. வேதம் ஓதுதல்:
வாழ்க்கைக் கல்வியின் அடுத்த அம்சமாக வருவது வேத பாராயணம், அதாவது வேதங்களை ஓதுதல் இதன் முக்கியத்துவம் பற்றி ஏற்கனவே (பக்.18) கண்டோம். வேதங்களை ஓதும்போது கவனத்தில்கொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்கள் இங்கே கூறப்படுகின்றன.
சீக்ஷாம் வ்யாக்யாஸ்யாம: வர்ண; ஸ்வர: மாத்ரா பலம்
ஸாம ஸந்தான: இத்யுக்த: சீக்ஷாத்யாய://2//
சீக்ஷாம் - உச்சரிப்புபற்றி; வ்யாக்யாஸ்யாம: - விளக்குவோம்: வர்ண: - ஒலி; ஸ்வர: - ஏற்ற இறக்கம்: மாத்ரா - நீட்டல்-குறுக்கல்; பலம் - உச்சரிப்பதற்கான முயற்சி; ஸாம: - நிறுத்தம் விவரம்: ஸந்தான: -தெளிவான உச்சரிப்பு; இதி - இவ்வாறு: சீக்ஷா அத்யாய: - உச்சரிப்பு பற்றிய பாடம்: உக்த: - சொல்லப்பட்டது.
2. உச்சரிப்புபற்றி விளக்குவோம். ஒலி, ஏற்ற
இறக்கம், நீட்டல்-குறுக்கல், உச்சரிப்பதற்கான
முயற்சி, நிறுத்தும் விவரம், தெளிவான உச்சிரிப்பு
ஆகியவை உச்சரிப்புபற்றிய பாடங்கள் ஆகும்.
ஒலி: ஒவ்வோர் எழுத்துக்கும் உரிய ஒலி சரியாக உச்சரிக்கப்படுதல்.
ஏற்ற இறக்கம்: இதுபற்றி ஏற்கனவே (பக் 16) கண்டோம். ரிக், யஜுர், அதர்வண வேதங்களில் இவ்வாறு மூன்று சுரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. சாம வேதத்தில் ஏழு சுரங்கள், அதாவது ஏழு விதமான ஏற்ற இறக்கங்கள் பயன்படுகின்றன.
நீட்டல்-குறுக்கல்: குறல் (ஹ்ரஸ்வம்), நெடில் (தீர்கம்) மற்றும் இரு மடங்கு நெடில் (ப்லுதம்) ஆகியவை வேத பாராயணத்தில் பயன்படுகின்றன.
உச்சரிப்பதற்கான முயற்சி: தேவையான இடங்களில் தேவையான எழுத்துக்களை அழுத்தி உச்சரிப்பதன்மூலம் வார்த்தையின் பொருளைச் சிறப்பாக வெளிப்படுத்துதல்.
நிறுத்தும் விவரம்: நிறுத்தம் இடங்களில் உரிய கவனம் செலுத்துதல், உதாரணமாக இந்த மந்திரத்தை வர்ண: ஸ்வர: மாத் ராபலம்/ ஸாமஸந் தான:/ என்றெல்லாம் படிக்காமல் இருத்தல்.
தெளிவான உச்சரிப்பு: ஒவ்வோர் எழுத்தும் தெளிவாக உச்சரிக்கப்பட வேண்டும். கும்பகர்ணன் நித்தியத்துவம் கேட்க விரும்பினான், ஆனால் அவன் கேட்டது, உச்சரிப்பில் தெளிவின்மை காரணமாக நித்திரத்துவம் என்று ஆகி விட்டது. அவன் தொடர்ந்து தூங்க வேண்டியவன் ஆனான் என்பார்கள். எனவே உச்சரிப்பு தெளிவாக இருக்க வேண்டும்.
வேதங்களை ஓதும் போது இவையெல்லாம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் இந்த விளக்கங்கள் ஆசிரியரிடமிருந்து மாணவர்கள் நேரடியாக அறிய வேண்டியவை எனவே இங்கே அவை விரிவாகக் கூறப்படவில்லை.
3. மனப் பயிற்சி: என்னைப் பொறுத்தவரையில் கல்வியின் சாரம் மன ஒருமைப்பாடே தவிர, தகவல்களைச் சேகரிப்பதல்ல. நான் மீண்டும் படிக்க நேர்ந்தால், ஒருபோதும் தகவல்களைச் சேகரிக்க மாட்டேன். முதலில் மன ஒருமைப்பாட்டையும் பற்றின்மையையும் வளர்த்துக்கொண்டு, பின்னர் அந்தப் பரிபூரணமான கருவியால் நான் விரும்பும்போது தகவல்களைச் சேகரித்துக் கொள்வேன். குழந்தையை வளர்க்கும்போது இந்த இரு ஆற்றல்களையும் அவர்களிடம் வளர்க்க வேண்டும். என்பார். சுவாமி விவேகானந்தர். உபநிஷதம் காட்டும் வாழ்க்கைக் கல்வியின் ஓர் அம்சமாக மனப்பயிற்சி வைக்கப்பட்டுள்ளது.
மன ஒருமைப்பாட்டின் மூலமாக எதையும் சாதிக்க முடியும். மலைகளைக்கூட அணு அணுவாக உடைத்தெறிய முடியும். மன ஒருமைப்பாடே எல்லா அறிவின் சாரமாகும். மனம் குவியாமல் எதுவும் செய்ய முடியாது. சாதாரண மனிதனில் தொண்ணூறு சதவீதம் எண்ண ஆற்றல் வீணாகிறது. ஆகையால் அவன் அடிக்கடி தவறு செய்கிறான். பயிற்சி பெற்ற மனிதனோ மனமோ தவறே செய்வதில்லை. மனம் ஒருமுகப்பட்டு, தன்னை நோக்கித் திரும்பும்போது. நம்முள் உள்ள எல்லாமே நமது பணியாளர்களாகி விடுகின்றன; நமது எஜமானர்களாக இருப்பதில்லை. எனவே வாழ்க்கையில் உயர்ந்த எதையாவது சாதிக்க வேண்டுமானால் மனத்தை ஒருமைப்படுத்த வேண்டும்.
ஆனால் எடுத்த எடுப்பில் மனத்தை ஒருமைப்படுத்த முயன்றால் அது பொதுவாக தோல்வியிலேயே முடியும். ஏனெனில் மன ஒருமைப்பாடு என்பது படிப்படியாக மனத்தைச் சிறு எல்லைக்குள் கட்டுப்படுத்துதல் என்பதை நாம் மறந்துவிடுகிறோம். இங்கே உபநிஷதம் மன ஒருங்கிணைப்பு, உணர்வின் விரிவு, தியானம் என்று மூன்று படிகளாக இதனைச் செய்யுமாறு கூறுகிறது. அனைத்திற்கும் அடிப்படையாக பிரார்த்தனையும் வேள்வியும் வைக்கப்படுகின்றன.
சங்கல்பம்: ஆசிரியரும் மாணவரும் செய்கின்ற சங்கல்பத்துடன் இந்தப் பயிற்சிகள் தொடங்குகின்றன. அன்றாட வாழ்க்கையில் நாம் தவறுகளையும் தோல்விகளையும் சந்திப்பதுண்டு. இதற்குப் பொதுவாக மூன்று காரணங்களைச் சொல்லலாம் -1. தன்னறிவு (சங்கல்ப ஸூக்தம் (சுக்ல யஜுர்வேதம், வாஜஸனேயீ ஸம்ஹிதை, வேத மந்திரங்கள்.) (ண்ஞுடூஞூ-ச்தீச்ணூஞுணஞுண்ண்) இன்றி ஒரு செயலைச் செய்வது; 2. ஒரு லட்சியத்திற்காக அல்லாமல் ஏனோதானோ என்று ஒரு காரியத்தைச் செய்வது; 3. திட சங்கல்பம் (தீடிடூடூ) இல்லாமல் வேலை செய்வது இந்த மூன்றிலும் முக்கியமானது திட சங்கல்பம். இது மற்ற இரண்டிற்கும் அடிப்படை சங்கல்பத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்ற ஒரு பகுதியே யஜுர்வேதத்தில் உள்ளது. எனவே ஆசிரியரும் மாணவர்களும் அத்தகையதொரு சங்கல்பத்தை இந்த மந்திரத்தில் செய்துகொள்கிறார்கள்.
ஸஹ நௌ யச: ஸஹ நௌ ப்ரஹ்ம வர்ச்சஸம் அதாதஸ்-
ஸக்ம்ஹிதாயா உபநிஷதம் வ்யாக்யாஸ்யாம: //3.1//
ஸஹ நௌ - நாம் இருவரும்; யச; - பெருமை பெறுவோம்; ஸஹ நௌ - நாம் இருவரும்; ப்ரஹ்ம வர்ச்சஸம் - புனிதப் பேரொளி; அத அத: - இப்போது; ஸம்ஹிதாயா - சேர்க்கைபற்றிய; உபநிஷதம் -பயிற்சிகளை; வ்யாக்யாஸ்யாம; - விளக்குவோம்.
3.1. நாம் இருவரும் (அதாவது ஆசிரியரும்
மாணவரும்) பெருமை பெறுவோம், நாம் இருவரும்
புனிதப் பேரொளி பெறுவோம் என்று மாணவர்கள்
கூறுகின்றனர். பிறகு ஆசிரியர், இப்போது நாம்
பயிற்சிகளை விளக்கத் தொடங்குவோம் என்கிறார்.
உயர்ந்த சிந்தனைகளும் தூய வாழ்வுமே பெருமையையும் புனிதப் பேரொளியையும் தர முடியும். எனவே அத்தகைய வாழ்க்கை வாழ்வோம். என்று ஆசிரியரும் மாணவர்களும் சங்கல்பம் செய்துகொள்வதாக இந்த மந்திரம் அமைந்துள்ளது.
மன ஒருங்கிணைப்புப் பயிற்சி ஐந்து சிந்தனைகள் (3.2-3.7)
அடிப்படை: ஜபம், தியானம் என்று மனம் சம்பந்தமான பயிற்சிகளைச் செய்ய அமர்ந்ததும், சாதாரணமாக அனைவரும் உணர்கின்ற உண்மை ஒன்று உண்டு. மனம் சிதறிக் கிடக்கின்ற உண்மைதான் அது. அலுவலகம், நண்பர்கள், வழியில் கண்ட காட்சிகள் என்று மனம் பல்வேறு துண்டுகளாகக் கிடக்கும். மனம் சிதறிக் கிடக்கிறது - ஒரு பகுதி டாக்காவிற்குப் போயிருக்கிறது. ஒரு பகுதி டில்லிக்கு, மற்றொரு பகுதி கூச்பிகாருக்கு. இந்த மனத்தைத் திரட்ட வேண்டும். திரட்டி ஓரிடத்தில் குவிக்க வேண்டும். பதினாறு அணா விலை உள்ள துணி வேண்டுமென்றால், துணிக்காரனுக்குப் பதினாறு அணாவையும் கொடுக்க வேண்டும் அல்லவா? என்று இதனை விளக்குகிறார் ஸ்ரீராமகிருஷ்ணர்.
எனவே, சிதறிக் கிடக்கின்ற மனத்தை ஒருங்கிணைப்பதே முதற்படி, இதற்காக இங்கே 5 சிந்தனைகள் தரப்பட்டுள்ளன. நாம் தொடர்பு கொண்ட பொருட்களிலும் மனிதர்களிலும் இடங்களிலும் சுற்றுகின்ற மனத்தை ஒரு குறிப்பிட்ட வட்டத்தில் கொண்டுவர இந்தச் சிந்தனைகள் துணை செய்கின்றன. ஒரு புள்ளியில் குவிப்பதற்கு முன்பு மனத்தை, ஒரு வட்டத்தில் கொண்டு வருவதற்கான முயற்சி இது. இது மனப் பயிற்சியின் முதற்படி.
மொழிக்கு இலக்கணம் முக்கியம். இலக்கணத்தில் சந்தி அல்லது இரண்டு எழுத்துக்களின் சேர்க்கை ஓர் அடிப்படைப் பகுதி, மகேசுவரன் என்ற சொல், மகா என்ற சொல்லும், ஈசுவரன் என்ற சொல்லும் சேர்ந்தது, இதில் மகா முற்பகுதி அல்லது கீழ்ப்பகுதி, ஈசுவரன் பிற்பகுதி அல்லது மேற்பகுதி இந்தச் சேர்க்கையை அடிப்படையாகக் கொண்டு சிந்தனைப் பயிற்சிகளை இங்கே விவரிக்கிறார். உபநிஷத முனிவர்.
பஞ்சஸ்வதிகரணேஷு அதிலோகமதிஜ்யௌதிஷ-
மதிவித்யமதிப்ரஜமத்யாத்மம் தா மஹாஸக்ம்ஹிதா
இத்யாசக்ஷதே //3.2//
பஞ்சஸு - ஐந்துவிதமான; அதிகரணேஷு - விஷயங்கள் உடையது; அதிலோகம் - பிரபஞ்சம் ; அதிஜ்யௌதிஷம் - ஒளிப்பொருள்; அதிவித்யம் - கல்வி; அதிப்ரஜம் - உயிர்களின் உற்பத்தி; அத்யாத்மம் - உடம்பு; தா: - அவை: மஹாஸம்ஹிதா: - முக்கியமான சேர்க்கை; இதி - என்று; ஆசக்ஷதே -கூறப்படுகிறது.
3.2 சேர்க்கையை அடிப்படையாகக் கொண்ட
இந்தப் பயிற்சி ஐந்து விதமாக விளக்கப்படுகிறது.
பிரபஞ்சம், ஒளிப்பொருள், கல்வி, உயிர்களின்
உற்பத்தி, உடம்பு ஆகியவற்றை ஆழ்ந்து சிந்திப்பதே
அந்து ஐந்து முக்கியமான பயிற்சிகள்.
நமது மனம் ஒரு கணம்கூட இடையீடின்றி சிந்தித்துக் கொண்டு தான் இருக்கிறது; ஆனால் அது பல்வேறு பொருட்களைப்பற்றி சிந்திக்கிறது. அவ்வாறு சிந்திப்பது சிரமமான காரியமும் அல்ல. ஆனால் ஏதேனும் ஒரு பொருளைப் பற்றியோ, ஒரு கருத்தைப்பற்றியோ தொடர்ந்து சிந்திப்பது அவ்வளவு எளிதல்ல. அவ்வாறு ஒரு பொருள் அல்லது கருத்தை எடுத்துக் கொண்டு அதன் பல்வேறு அம்சங்களைத் தொடர்ந்து சிந்திக்கும்போது, மனம் ஒரு புள்ளியில் குவிக்கப்படவில்லை என்றாலும் ஒரு வட்டத்திற்குள் சுழலுமாறு செய்யப்படுகிறது. இதன் மூலம் மனம் ஒருங்கிணைக்கப்படுகிறது.
No comments:
Post a Comment