இந்தியா உலகின் வல்லரசாக மாறும் காலம் வந்துகொண்டிருக்கிறது.
..
ஒரு மனிதன் வெற்றிபெற வேண்டுமானால் தன்னளவில் நல்லவனாகவும்,நேர்மையானவனாகவும் இருக்க வேண்டும். வெளிஉலகில் அதிக அளவில் எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
ஏன் எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டும்? சக்தியை அதிகரித்துக்கொள்ள இதுதான் வழி.
ஒவ்வொரு மனிதனிடமும் ஒரு குறிப்பிட்ட அளவு சக்தி உள்ளது. தீயவர்களிடமும் ஓரளவு சக்தி உள்ளது.
இந்த உலகில் ஒருவன் சாதிக்க வேண்டுமானால் அவனுக்கு நிறைய சக்தி தேவை.
.
ஒரு நல்லவனை தீயவன் எதிர்க்கும்போது, தீயவனின் சக்தி நல்லவனிடம் வருகிறது.
அதேபோல ஒரு தீயவனிடம் நல்லவன் சமாதானமாக போகும்போது,அல்லது எதிர்க்காதபோது நல்லவனின் சக்தி தீயவனிடம் போகிறது. இதனால்தான் பிரபலமான சில நல்லவர்கள் ஒரு காலத்தில் தீயவர்களின் சகவாசம் காரணமாக காணாமல் போய்விடுகிறார்கள். அவர்களது சக்தியை தீயவர்கள் அபகரித்துக்கொள்கிறார்கள்.
எனவே தீயவனிடம் சமாதானம் செய்வது நல்லவனுக்கு நல்லதல்ல
..
நல்லவனை தீயவன் தொடர்ந்து துன்புறுத்தும்போதும், அவமதிக்கும்போதும். தீயவனுடைய சக்தி நல்லவனுக்கு வருகிறது. இவ்வாறு நல்லவன் அதிக சக்தியைப்பெற்று. நாட்டை ஆளும் தலைவனாகிறான்.
அந்த நல்லவன் தொடர்ந்து தீயவர்களை எதிர்த்துக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த உயர்ந்த பதவியில் நிலைத்து நிற்க முடியும். மேலும்மேலும் உயர்ந்த நிலையை அடைய முடியும்.
சில தலைவர்கள் செய்யும் தவறு இதுதான். பதவிக்கு வந்ததும் தீயவர்களோடு சமாதானம் செய்துகொள்கிறார்கள்.
இது அவர்களை அழிவுப்பாதைக்கு அழைத்து செல்லும்.
..
இதே விதி ஒரு நாட்டிற்கும் பொருந்தும். இந்தியாவிற்கு சிறப்பாக பொருந்தும்.
இந்தியா இந்த உலகில் உள்ள தீவிரவாதம் நாடுகளை, ஏகாதிபத்திய நாடுகளை ,அதர்ம வழியில் செல்லும் நாடுகளை, தொடர்ந்து எதிர்க்க வேண்டும். அவர்களும் தொடர்ந்து இந்தியாவை எதிர்த்துக்கொண்டே இருப்பார்கள்.
இந்தியாவை அழிப்பதற்கு பல்வேறு சதி திட்டங்களை தீட்டுவார்கள். ஆனால் இந்திய தலைவர்கள் நல்லவர்களாகவும், இந்திய மக்களுக்காக உண்மையில் உழைப்பவர்களாகவும், மக்களை சுரண்டி பிழைக்காதவர்களாகவும் இருக்க வேண்டும்.
..
இப்படி இந்தியாவை தொடர்ந்து தீயசக்தி கொண்ட நாடுகள் எதிர்க்கும்போது. அந்த நாடுகள் தங்கள் சக்தியை இழப்பார்கள். இந்தியா சக்தியை பெருக்கிக்கொண்டே செல்லும். இதுதான் இந்தியா சக்தியை பெருக்கும் வழி.
எப்போது நாம் எதிர்ப்பதை நிறுத்திக்கொண்டு ,தீய நாடுகளிடம் சமாதானம் ஏற்படுத்துகிறோமோ அப்போது நமக்கான அழிவு ஏற்பட்டுவிடும். எனவே எதிர்ப்பதை ஒருபோதும் நிறுத்தக்கூடாது.
இப்படி எதிர்க்கும்போது சில போர்களையும் சந்திக்க வேண்டியிருக்கும்.
நம்மை சுற்றியிருக்கும் நாடுகளை இரண்டாக பிரிக்க வேண்டும். அதர்மநாடுகள், தர்மநாடுகள்.
அதர்ம நாடுகளை எதிர்க்க வேண்டும். தர்மநாடுகளுடன் சமாதானம் செய்ய வேண்டும்.
..
சத்தியத்திற்காக தர்மத்திற்காக போரிடுபவர்கள் வெற்றிபெறுவார்கள்.அவர்களுக்கு தெய்வங்கள் துணைநிற்கும் என்றே சாஸ்திரங்கள் கூறுகின்றன.
இந்தியாவை அழித்துவிட வேண்டும் என்று ஒட்டுமொத்த உலகமும் திரண்டு வந்தாலும் இந்தியாவை அழிக்க முடியாது.
இந்தியா எதுவரை தர்மத்தில் பாதையில் செல்கிறதோ அதுவரை இந்தியாவை அழிக்கும்சக்தி உலகத்தில் யாருக்கும் இல்லை.
..
இந்தியா இந்த உலகிற்கு செய்ய வேண்டிய செயல் ஒன்று உள்ளது. ஒட்டுமொத்த உலகிற்கும் ஆன்மீகத்தை வழங்கும் மையமாக இந்தியா திகழப்போகிறது. முற்காலத்தில் பாரத்தில் வாழ்ந்த ரிஷிகள் அனைவரும் அந்த நாளை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். அவர்கள் அழியவில்லை. சனாதன தர்மம் மீண்டும் பரவ இருப்பதை எண்ணி ஆனந்தத்தில் இருக்கிறார்கள்.
..
உலகம் முழுவதும் விரைவில் பெரும் போர்களை சந்திக்க இருக்கினறன என்பதை பலர் முன்னறிவித்திருக்கிறார்கள். இதை தவிர்க்க முடியாது. வலிமை பொருந்திய நாடுகள் தங்கள் எல்லைகளை விரிவுபடுத்திக்கொள்ள துடிக்கின்றன. சிறிய நாடுகள் காணாமல் போகப்போகின்றன. சில பெரிய நாடுகள் பல துண்டுகளாக சிதறப்போகின்றன. முற்காலத்திலும் பல முறை இப்படித்தான் நடந்திருக்கின்றன.
..
சுவாமி வித்யானந்தர்-2-7-2025
No comments:
Post a Comment