Friday, 25 July 2025

தூக்கமும் மரணமும்

 

தூக்கமும் மரணமும்

..

இன்று இரவு நாம் தூங்க செல்கிறோம்.இதோடு நம் வாழ்க்கை முடிந்தது.இனி நாளை காலை நாம் கண்விழிக்க மாட்டோம். தூக்கத்திலேயே உயிர்போய்விடும். அதன் பிறகு எதுவும் நமக்குத் தெரியாது.நம்மையும் நமக்குத்தெரியாது,வெளி உலகமும் தெரியாது,எதுவுமே தெரியாது.அப்படியே தூக்கத்திலேயே மாண்டுவிடுவோம் என்று வைத்துக்கொள்வோம்.

இன்று இரவு யாராவது தூங்க செல்வார்களா?

நாளை நாம் கண்விழிக்கப்போகிறோம் என்ற எண்ணம் இருப்பதால்தான் இன்று தூங்கச் செல்கிறோம். நாளை கண்விழிக்க மாட்டோம் என்று தெரிந்தால்,யாரும் தூங்க செல்ல மாட்டார்கள்.

தூக்கம் என்பது, அதுவும் தொடர்ந்த தூக்கம் என்பது நல்லதுதானே அப்படி இருக்கும்போது நாம் ஏன் தொடர்ந்த நிலையான தூக்கத்தை விரும்புவதில்லை?

ஏனென்றால் அதுதான் உயிரின் இயல்பு. நிலையான தூக்கம் என்பது மரணம்.

அந்த மரணத்தை எந்த உயிரும் விரும்புவதில்லை.

..

தூக்கத்திலேயே உயிர்போய்விட வேண்டும் என்று சில நேரங்களில் மனிதர்கள்

கூறுவார்கள்.ஆனால் உள் மனதில் அப்படி எதுவும் நடந்துவிடக்கூடாது என்ற எண்ணமும் இருக்கும்.

எவ்வளவுதான் துன்பங்கள் வந்தாலும் அதை தாங்கிக்கொண்டு வாழவேண்டும் என்றுதான் ஒவ்வொரு உயிரும் ஆசைப்படுகிறது.

ஒரு சாதாரண எறும்பை நசுக்கினால்கூட அது எப்படியாவது மீண்டும் வாழவேண்டும் என்றே துடிக்கிறது.

இதுதான் உயிரின் இயல்பு.

உயிரின் இயல்பை மாற்ற முடியாது.

..

சிலர் இந்த உலக வாழ்க்கை முடிந்த பிறகு அப்படியே தூங்கிவிடுவோம். அது ஆனந்தமானது. நல்லது. என்று நினைக்கிறார்கள். ஆனால் சிறிது நேரம் பொறுமையாக யோசித்து பார்த்தால், நாம் இல்லாத வாழ்வை நாம் விரும்ப மாட்டோம் என்பது புரியும்.

மீண்டுவராத தூக்கத்தில் ”நான்-உணர்வு இல்லை. இந்த ”நான்-உணர்வுஇல்லாத எதையும் நாம் விரும்பமாட்டோம்.

சமாதி நிலையில் ”நான் இருக்கிறேன் என்ற உணர்வு இருக்கும். ஆனால் தூக்கத்தில் அது இருக்காது.

தற்காலிக தூக்கத்தை மனிதர்கள் விரும்புவார்கள். நிரந்த தூக்கத்தை விரும்புவதில்லை.

..

இந்த நிரந்த தூக்கத்தை ”சூன்யம் என்று சொல்லாம். சமாதி நிலையில் ஏற்படுவது பூர்ணம் அல்லது முழுமை.

..

சிலர் பெரும் பாவத்தை செய்கிறார்கள். அந்த பாவத்தை பிறருக்கு அனுப்ப முடியுமா?

அனுப்ப முடியும். புண்ணியத்தை பிறருக்கு அனுப்ப முடியும்போது பாவத்தை ஏன் அனுப்ப முடியாது?

பெரும் பாவம் செய்தவர்களின் பாவத்தை அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் அனுபவிப்பார்கள். பாவிகளிடமிருந்து வாங்கி உண்டவர்கள் அந்த பாவத்தை அனுபவிப்பார்கள்.

தீயவர்களின் எச்சில் பட்ட உணவை உண்ணக்கூடாது. தீயவர்களிடமிருந்து எதையும் வாங்கி உண்ணக்கூடாது. தீயவர்களிடம் பழகக்கூடாது. இதனால் தீயவர்களின் பாவம் நமக்கு வருகிறது.

..

சிலர் மறுபிறப்பை நம்புவதில்லை. இந்த ஒரு பிறவி மட்டும்தான் உண்டு. எனவே இந்த ஒரு வாழ்க்கையில் பிறரை ஏமாற்றியாவது கொள்ளையடித்து,அனைத்து இன்பங்களையும் அனுபவித்துவிட்டு நிரந்த தூக்கத்திற்கு சென்றுவிட வேண்டும் என்று கூறுகிறார்கள்.

அவர்கள் இந்த நிரந்தர தூக்கம்பற்றிய கருத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். இறந்த பிறகு உங்களுக்கு என்னவாகும் என்று கேட்டால், நிரந்த தூக்கத்திற்கு சென்றுவிடுவோம் என்கிறார்கள்.

..

ஒரு அரசியல்வாதி, கடவுளையும் நம்பவில்லை,கர்மாவையும் நம்பவில்லை,நல்வினைகளையும் நம்பவில்லை.அவன் நம்புவது எப்படியாவது இந்த உலகில் உள்ள அனைத்து இன்பங்களையும் அனுபவித்துவிட வேண்டும்.அதற்காக எப்படிப்பட்ட குறுக்கு வழியையும் பின்பற்றலாம்,யாரையும் ஏமாற்றலாம்.இறந்த பிறகு மறுபடி பிறப்பும் கிடையாது.எதுவும் கிடையாது. கடவுளும் கிடையாது. நிரந்த தூக்கத்திற்கு அல்லது சூன்யத்திற்கு சென்றுவிடுவோம் .இப்படிப்பட்ட ஒரு சிந்தனையோடு வாழ்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அவன் இறந்த பிறகு என்னவாகும்?

அவன் நினைத்ததுபோல நடக்குமா? அவன் மறுபடி பிறப்பானா?அல்லது சூன்யமாகிவிடுவானா? நிரந்த தூக்கத்திற்கு செல்வாயா?

..

முதலில் இப்படிப்பட்டவர்களின் வாழ்வை ஆராய வேண்டும்.

பிறருக்கு துன்பத்தை ஏற்படுத்தாமல்,பிறரின் இறப்புக்கு தான் காரணம் ஆகாமல்,பிற குடும்பத்தை வறுமையில் தள்ளாமல் இப்படிப்பட்டவர்களால் வாழ முடியமா? முடியாது.

குறுக்கு வழியில் செல்பவன் பலரை துன்பத்திற்கு உள்ளாக்கிவிட்டே முன்னேறுகிறான்.

 

ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர் செயல் உண்டு. அந்த எதிர் செயலை நிறுத்தினால் மட்டும்தான் தூக்கம் வரும்.

யாருக்கும் எந்த கெடுதலும் செய்யாத நல்லமனிதனுக்கு தூக்கம் வரும். யாருக்கும் எந்த கெடுதலும் செய்ய முடியாத அளவுக்கு உள்ள முட்டாளுக்கும் தூக்கம் வரும். பிறருக்கு தீமை செய்து வாழும் மனிதனுக்கு எப்படி தூக்கம் வரும்.

வாழும் நாட்களிலேயே அவர்களுக்கு தூக்கம் வரவில்லை.தூக்கமாத்திரைகளையும்,மதுவையும் குடித்து சிறிது நேரம் தூக்கலாம். அதன் பிறகு மீண்டும் அதே மனத்துடன் போராட வேண்டியிருக்கிதே. அவர்கள் இறந்த பிறகு எப்படி நிரந்த தூக்கம் வரும்.

..

ஒவ்வொரு நிமிடமும் நாம் யார் யாருக்கு தீமை செய்தோம், யார் யாரை கொலை செய்தோம்,யார் யாரை கொலை செய்ய ஆள் அனுப்பினோம் போன்ற எண்ணங்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். இந்த எண்ணங்கள் இருக்கும்வரை நிரந்ததூக்கம்வராது.

எனவே அவர்கள் நினைப்பது போல நித்திய தூக்கம் அவர்களுக்கு வராது.

இறந்த பிறகு அவர்களது சூட்சும உடல் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கும். அது ஏற்கனவே செய்த பாவங்களுக்காக வருந்திக் கொண்டிருக்கும்.

.

அப்படிப்பட்டவர்கள் சொர்க்கத்தை நம்பாமல் இருக்கலாம் நரகத்தை நம்பாமல் இருக்கலாம். ஆனால் இறந்த பிறகு அவர்களது ஆவி சாந்தி அடையாமல் சுற்றிக்கொண்டேதான் இருக்கும்.

அது பல்வேறு தீய கனவுகளை கண்டுகொண்டே இருக்கும். அந்த ஆவியை சாந்தப்படுத்த மனிதர்கள் இருக்க மாட்டார்கள். சொந்தங்கள் அந்த ஆவிக்கு உணவு அளிக்க மாட்டார்கள். அவர்கள் சேர்த்து வைத்த சொத்து.பணம் அனைத்தையும் அபகரித்து சென்றுவிடுவார்கள்.

இவைகள் அனைத்தையும் அந்த ஆவி பார்த்துக்கொண்டே இருக்கும். பிறரை ஏமாற்றி சேர்த்த சொத்துக்கள் அனைத்தும் செல்கிறதே என்று வேதனையில் அழுதுகொண்டெ இருக்கும்.

இவைகள் எல்லாம்தான் நரக வேதனை.

இதுதான் நரகம்.

எங்கோ தூரத்தில் உள்ள ஒரு நரக லோகத்திற்கு சென்று எண்ணை சட்டியில் வறுபட்டால்தான் நரகம் என்று அர்த்தம் அல்ல. தீயவர்களின் மனம் அவர்களுக்கு கொடுக்கும் வேதனைகூட நரகவேதனைதான்.

..

எனவே தீயவர்கள் தண்டிக்கப்படமாட்டார்கள் என்று நினைக்காதீர்கள். அவர்களது கர்மமே அவர்களை தண்டிக்கும். அவர்களது மனமே அவர்களை தண்டிக்கும். வாழும்போது தண்டிக்க தவறினால் இறந்த பிறகு தண்டிக்கும்.

..

சுவாமி வித்யானந்தர் 25-7-2025

Monday, 21 July 2025

ஆன்மீகமும்-விஞ்ஞானமும்-பாகம்-19

 ஆன்மீகமும்-விஞ்ஞானமும்-பாகம்-19

..

அணுக்களாக நாம் மாறாமல் அணுவை பார்க்க முடியாது.

..

நாம் எதைப் பார்க்கிறோமோ அதுவாக ஆகிறோம்.நாமே அதுவாக இருக்கிறோம்,பிறகு அதையே நாம் பார்க்கிறோம் என்று நமது தத்துவங்கள் கூறுகின்றன. 


நம்மைசுற்றியுள்ள அணுக்களை நம்மால் ஏன் காண முடிவதில்லை? நாம் அணுக்களாக மாறினால் அதைக் காணமுடியும்.

ஒரு நுண்ணோக்கி மூலமாக அணுவைப் பார்க்கும்போது குறிப்பிட்ட அந்த நேரத்திற்கு நாம் ஒரு அணுவாக இருக்கிறோம். நாம் அணுவாக இருப்பதால்தான் நம் கண்களுக்கு அணுக்கள் தெரிகின்றன. அதேபோல பிரபஞ்சத்தில் உள்ள galaxy யை பார்க்கும்போது நாம் galaxy. ஆக இருக்கிறோம்.

இது பற்றி விஞ்ஞானிகள் சிறிதும் யோசிப்பதில்லை.அதனால்தான் அவர்களால் பல கேள்விகளுக்கு விடைகாண முடிவதில்லை.

மகான்கள் மிகப்பெரிய சூரியன்களையும், கிரகங்களையும் தியானத்தில் ஆழந்திருந்தபோது கண்டதாக கூறியிருக்கிறார்கள். அவர்களால் எப்படி முடிந்தது?

அவர்கள் தங்களை தற்காலிகமாக மிகப்பெரியதாக மாற்றிக்கொண்டார்கள். சிலர் galaxy. அளவுக்கு தங்களை பெரிதாக்கிக்கொண்டார்கள். அதனால் அவர்களால் பலவற்றைக் காண முடிந்தது. மனிதனால் இப்படி பெரிதாக முடியுமா?

தொலை நோக்கி மூலம் மனிதன் பார்க்கும்போது தற்காலிகமாக மனிதன் விரிவடைகிறான் பெரிதாகிறான்.

.

நம் தத்துவம் என்ன சொல்கிறது பார்ப்போம். 

ஆத்மாவால் ஆத்மாவை உணர வேண்டும். நீ எப்போது ஆத்மாவாக மாறுகிறாயோ அப்போதுதான் பரமாத்மாவை உணர்வாய். ஆத்மாவும் பரமாத்மாவும் ஒன்றுதான் என்பதை அப்போது உணர்வாய் என்று கூறுகின்றன.

.

மனிதன் புறப்பொருட்களை ஆராயும்போது அந்த புறப்பொறுள் மயமாக ஆகிவிடுகிறான்.அதனால் அகமுகமாக ஆராய முடிவதில்லை. அகமுகமாக ஆராயும்போது புறப்பொருட்கள் அவனைப்பொறுத்தவரை மறைந்துவிடுகின்றன.

..

மனிதன் இந்த சிறிய உடலுக்குள் மட்டும்தான் இருக்கிறானா?

இந்த உலகத்தில் எதையெல்லாம் நாம் பார்க்கிறோமோ அது அனைத்துமாக நாமே இருக்கிறோம்.

இவைகள் எல்லாம் வெறும் கருத்துக்கள் மட்டும் அல்ல. மகான்கள் இதை அனுபவப்பூர்வமாக உணர்கிறார்கள், அனுபவிக்கிறார்கள். அவர்கள் அனுபவித்ததை நமக்கு கூறியிருக்கிறார்கள்.

.

.

நாம் கனவு காணும்போது,அந்த கனவில் வரும் அனைத்தையும் உருவாக்கிறது நாம்தான். இருந்தாலும் கனவு காணும்போது அதை நாம் அறிவதில்லை.கனவு கலைந்த பிறகுதான் அதுபற்றியஅறிவு நமக்கு வருகிறது.

கனவு காணும்போது கனவில் ஒரு பகுதியாக நாம் மாறிவிடுவதால் கனவுபற்றிய முழு அறிவும் நடக்கு கிடைப்பதில்லை.இருந்தாலும் கனவில் வரும் அனைத்தையும் உருவாக்கியது நாம் தான்.

.

அதேபோல இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் உருவாக்கியது நாம்தான் என்பதை நாம் விழிப்படையும்போது உணர்வோம். அப்போது இந்த பிரபஞ்சம் நம் கண்களுக்குத் தெரியாது. மீண்டும் இந்த பிரபஞ்சத்திற்குள் நுளையும்போது விழிப்புநிலை மறந்துவிடுகிறது. நாம்தான் இந்த பிரபஞ்சத்தைப் படைத்தோம் என்பது மறந்துவிடுகிறது. கனவில் எப்படி அல்லல்படுகிறோமோ அப்படி உழல்கிறோம்.

தினமும் இந்த உண்மையை கனவின் மூலம் ஆன்மா நமக்கு உணர்த்துகிறது.

..

பல்வேறு உடல்கள் மூலம் ஒருவரே இந்த அனைத்து கனவுகளையும் கண்டுகொண்டிருக்கிறார்.ஒருவர் கனவிலிருந்து விழிப்படைந்தாலும் இந்த கனவு தொடர்ந்துகொண்டேதான் இருக்கும். இதனால்தான் இதை மாயை என்கிறார்கள்.

கடவுள் கனவு காண்பதில்லை. அவர் விழிப்புநிலையில் இருக்கிறார். நாம் விழிப்படையும்போது கடவுளாகிறோம்.

ஆனாலும் கனவு நடந்துகொண்டேதான் இருக்கும். எப்படிப்பட்ட கனவு நடந்துகொண்டிருக்கிறது என்பதைக் காணவேண்டுமானால் விழிப்படைந்தவர் மீண்டும் கனவுக்குள் வந்தாக வேண்டும். அதாவது இந்த பிரபஞ்ச மாயைக்குள் வந்தாக வேண்டும். அப்போது நான் கடவுள் என்பது மறைந்துவிடும். கடவுள் மாயைக்குள் வருவதில்லை.

யார் மாயைக்குள் வந்தாரோ அவர் கடவுள் அல்ல.

..

இந்த தத்துவத்தை புரிந்துகொள்வது மிகவும் கடினம். ஆனாலும் புரிந்துகொள்ள முடியும் விழிப்படைந்தவர்களால் முடியும்.

.

உங்கள் சந்தேகங்களை 9360209541 என்ற வாட்ஸ்அப் எண்ணில் மெசேஜ் மூலமாக கேட்கலாம்

சுவாமி வித்யானந்தர்-கன்னியாகுமரி(5-7-2025)

இந்தியா உலகின் வல்லரசாக மாறும் காலம் வந்துகொண்டிருக்கிறது.

 இந்தியா உலகின் வல்லரசாக மாறும் காலம் வந்துகொண்டிருக்கிறது.

..

ஒரு மனிதன் வெற்றிபெற வேண்டுமானால் தன்னளவில் நல்லவனாகவும்,நேர்மையானவனாகவும் இருக்க வேண்டும். வெளிஉலகில் அதிக அளவில் எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். 

ஏன் எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டும்? சக்தியை அதிகரித்துக்கொள்ள இதுதான் வழி.

ஒவ்வொரு மனிதனிடமும் ஒரு குறிப்பிட்ட அளவு சக்தி உள்ளது. தீயவர்களிடமும் ஓரளவு சக்தி உள்ளது.

இந்த உலகில் ஒருவன் சாதிக்க வேண்டுமானால் அவனுக்கு நிறைய சக்தி தேவை.

.

ஒரு நல்லவனை தீயவன் எதிர்க்கும்போது, தீயவனின் சக்தி நல்லவனிடம் வருகிறது.

அதேபோல ஒரு தீயவனிடம் நல்லவன் சமாதானமாக போகும்போது,அல்லது எதிர்க்காதபோது நல்லவனின் சக்தி தீயவனிடம் போகிறது. இதனால்தான் பிரபலமான  சில நல்லவர்கள் ஒரு காலத்தில் தீயவர்களின் சகவாசம் காரணமாக காணாமல் போய்விடுகிறார்கள். அவர்களது சக்தியை தீயவர்கள் அபகரித்துக்கொள்கிறார்கள்.

எனவே தீயவனிடம் சமாதானம் செய்வது நல்லவனுக்கு நல்லதல்ல

..

நல்லவனை தீயவன் தொடர்ந்து துன்புறுத்தும்போதும், அவமதிக்கும்போதும். தீயவனுடைய சக்தி நல்லவனுக்கு வருகிறது. இவ்வாறு நல்லவன் அதிக சக்தியைப்பெற்று. நாட்டை ஆளும் தலைவனாகிறான்.

அந்த நல்லவன் தொடர்ந்து தீயவர்களை எதிர்த்துக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த உயர்ந்த பதவியில் நிலைத்து நிற்க முடியும். மேலும்மேலும் உயர்ந்த நிலையை அடைய முடியும்.

சில தலைவர்கள் செய்யும் தவறு இதுதான். பதவிக்கு வந்ததும் தீயவர்களோடு சமாதானம் செய்துகொள்கிறார்கள்.

இது அவர்களை அழிவுப்பாதைக்கு அழைத்து செல்லும்.

..

இதே விதி ஒரு நாட்டிற்கும் பொருந்தும். இந்தியாவிற்கு சிறப்பாக பொருந்தும்.

இந்தியா இந்த உலகில் உள்ள தீவிரவாதம் நாடுகளை, ஏகாதிபத்திய நாடுகளை ,அதர்ம வழியில் செல்லும் நாடுகளை,  தொடர்ந்து எதிர்க்க வேண்டும். அவர்களும் தொடர்ந்து இந்தியாவை எதிர்த்துக்கொண்டே இருப்பார்கள்.

இந்தியாவை அழிப்பதற்கு பல்வேறு சதி திட்டங்களை தீட்டுவார்கள். ஆனால் இந்திய தலைவர்கள் நல்லவர்களாகவும், இந்திய மக்களுக்காக உண்மையில் உழைப்பவர்களாகவும், மக்களை சுரண்டி பிழைக்காதவர்களாகவும் இருக்க வேண்டும்.

..

இப்படி இந்தியாவை தொடர்ந்து தீயசக்தி கொண்ட நாடுகள் எதிர்க்கும்போது. அந்த நாடுகள் தங்கள் சக்தியை இழப்பார்கள். இந்தியா சக்தியை பெருக்கிக்கொண்டே செல்லும். இதுதான் இந்தியா சக்தியை பெருக்கும் வழி.

எப்போது நாம் எதிர்ப்பதை நிறுத்திக்கொண்டு ,தீய நாடுகளிடம் சமாதானம் ஏற்படுத்துகிறோமோ அப்போது நமக்கான அழிவு ஏற்பட்டுவிடும். எனவே எதிர்ப்பதை ஒருபோதும் நிறுத்தக்கூடாது.

இப்படி எதிர்க்கும்போது சில போர்களையும் சந்திக்க வேண்டியிருக்கும்.

நம்மை சுற்றியிருக்கும் நாடுகளை இரண்டாக பிரிக்க வேண்டும். அதர்மநாடுகள், தர்மநாடுகள்.

அதர்ம நாடுகளை எதிர்க்க வேண்டும். தர்மநாடுகளுடன் சமாதானம் செய்ய வேண்டும்.

..

சத்தியத்திற்காக தர்மத்திற்காக போரிடுபவர்கள் வெற்றிபெறுவார்கள்.அவர்களுக்கு தெய்வங்கள் துணைநிற்கும் என்றே சாஸ்திரங்கள் கூறுகின்றன.

இந்தியாவை அழித்துவிட வேண்டும் என்று ஒட்டுமொத்த உலகமும் திரண்டு வந்தாலும் இந்தியாவை அழிக்க முடியாது.

இந்தியா எதுவரை தர்மத்தில் பாதையில் செல்கிறதோ அதுவரை இந்தியாவை அழிக்கும்சக்தி உலகத்தில் யாருக்கும் இல்லை.

..

இந்தியா இந்த உலகிற்கு செய்ய வேண்டிய செயல் ஒன்று உள்ளது. ஒட்டுமொத்த உலகிற்கும் ஆன்மீகத்தை வழங்கும் மையமாக இந்தியா திகழப்போகிறது. முற்காலத்தில் பாரத்தில் வாழ்ந்த ரிஷிகள் அனைவரும் அந்த நாளை ஆவலுடன் எதிர்நோக்கி  காத்திருக்கிறார்கள். அவர்கள் அழியவில்லை. சனாதன தர்மம் மீண்டும் பரவ இருப்பதை எண்ணி ஆனந்தத்தில் இருக்கிறார்கள்.

..

உலகம் முழுவதும் விரைவில் பெரும் போர்களை சந்திக்க இருக்கினறன என்பதை பலர் முன்னறிவித்திருக்கிறார்கள். இதை தவிர்க்க முடியாது. வலிமை பொருந்திய நாடுகள் தங்கள் எல்லைகளை விரிவுபடுத்திக்கொள்ள துடிக்கின்றன. சிறிய நாடுகள் காணாமல் போகப்போகின்றன. சில பெரிய நாடுகள் பல துண்டுகளாக சிதறப்போகின்றன. முற்காலத்திலும் பல முறை இப்படித்தான் நடந்திருக்கின்றன.

..


சுவாமி வித்யானந்தர்-2-7-2025

வேதங்களின் பார்வையில் யார் பிராமணன்? சாமவேதம்- வஜ்ரஸுசிகோபநிடதம்

 வேதங்களின் பார்வையில் யார் பிராமணன்?

-

சாமவேதம்-  வஜ்ரஸுசிகோபநிடதம்

-

1.ஓம். வஜ்ரஸுசீ என்ற உபநிடதத்தை கூறுகிறேன்.அது அஞ்ஞானத்தைப் பிளக்கும் சாஸ்திரம். ஞானமில்லாதவர்களுக்கு தூஷணமாகவும் ஞானக்கண் படைத்தவர்களுக்கு பூஷணமாகவும் விளங்குவது அது

-

2. பிராமணர் சத்திரியர்  வைசியர் சூத்திரர் என்று நான்கு வர்ணங்கள் அவற்றுர் பிராமணர் முக்கியமானவர் என்று வேதத்தின் கருத்தையொட்டி ஸ்மிருதிகளும் கூறும்.அதைப்பற்றி ஆராயவேண்டும். பிராமணன் என்றால் யார்? ஜீவனா,தேகமா,ஜாதியா,ஞானமா,கர்மமா,தர்மமா?

-

3.முதலில் ஜீவன் பிராமணன் என்றால் அது வருவதும் போவதுமாக பல பிறவிகள் பிறக்கிறது.பல தேகங்களில் ஜீவன் ஒரே வடிவாயிருப்பதாலும்,ஒருவனேயாயிருப்பதாலும்,கர்ம வசத்தால் பல உடல்கள் ஏற்படுவதாலும்,எல்லா உடல்களிலும் ஜீவன் ஒரேமாதிரி இருப்பதாலும் ஜீவனை பிராமணன் என்று கூற இயலாது.(ஜீவன் பல பிறவிகளில் பல உடல்களில் பிறக்கிறது.சில பிறவிகளில் மிருக உடல்கள்கூட கிடைக்கலாம். ஆகவே ஜீவன்.பிராமணன் அல்ல)

-

4. ஆனால் தேகம் பிராம்மணன் என்று நினைத்தால் அதுவும் பொருந்தாது. உயர்ஜாதிமுதல் தாழ்ந்தசாதிவரை உள்ள அனைவருக்கும் உடல் ஒரே வடிவாக பஞ்சபூதங்களால் ஆக்கப்பட்டிருக்னகிறது. பிறப்பு.இறப்பு.முதுமை போன்றவை ஒரேபோலவே இருப்பதாலும், ஒவ்வொரு ஜாதியினரின் உடலும் தனித்தனி வண்ணமாக இல்லாமல் ஒரே போல் இருப்பதாலும். உடலை அடிப்படையாக கொண்டு ஒருவனை பிராமணன் என்று கூறமுடியாது

-

5.ஆனால் பிறப்பால் வந்த  ஜாதியால் ஒருவன் பிராமணனா என்றால்,அதுவும் இல்லை. பிற  ஜாதிகளிலும்,அனேக ஜாதிகளிலும் பல ரிஷிகள் தோன்றியிருக்கிறார்கள்.வால்மீகி, வியாசர், வசிஷ்டர் உட்பட பலர் கீழ்ஜாதியில் பிறந்திருக்கிறார்கள்.ஆகையால் பிறப்பின் அடிப்படையில் வரும் ஜாதியால் ஒருவனை பிராமணன் என்று கூறமுடியாது

-

6.அறிவால் ஒருவனை பிராமணன் என்று அழைக்கலாமா என்றால் அதுவும் பொருந்தாது. சத்திரியர் முதலான பிற ஜாதியிலும் மிக்கஅறிவு பெற்றவர்கள் பலர் இருக்கிறார்கள்.ஆகையால் அறிவால் ஒருவனை பிராமணன் என்று அழைக்க முடியாது

-

7. செய்யும் தொழிலை(கர்மத்தை) வைத்து ஒருவனை பிராமணன் என்று அழைக்கலாமா என்றால் அதுவும் இல்லை. எல்லா உயிர்களுக்கும் பிராரப்தம் ஸஞ்சிதம் ஆகாமி என்ற மூன்று கர்மங்களும் பொதுவாக இருக்கிறது. முன்ஜன்மத்தால் தூண்டப்பட்ட மக்கள் பலர் கிரியைகளை செய்கிறார்கள்.ஆகையால் கர்மத்தால் பிராமணன் இல்லை

-

8.தர்மம் செய்பவர்கள் பிராமணன் என்று கூறலாமா என்றால் அதுவும் இல்லை. சத்திரியர் உட்பட பிறரும் தர்மம் செய்கிறார்கள்.

-

9.அப்படியானால் யார்தான் பிராம்மணன்? இரண்டற்ற சச்சிதானந்த ஸ்வரூபனாகவும் ஜாதி,குணம்,கிரியை அற்றதும்,பிறப்பு,இறப்பு முதலிய ஆறு நிலைகள் அற்றதும் சத்தியம்,ஞானம்,ஆனந்தம் என்ற ஸ்வரூபமுடையதும்,தோசங்கள் அற்றதும் , தான் நிர்விகல்பமாயும் எல்லா கற்பனைகளுக்கும் ஆதாரமாயும்,எல்லா உயிர்களுக்கு உள்ளே நின்று இயங்குவதாயும்,ஆகாயத்தைபோல் உள்ளும் வெளியும் வியாபித்துப் பிளவுபடாமல்  ஆனந்த வடிவாயும் மனதிற்கெட்டாததாயும்,அனுபவத்தில் மட்டும் அறியக்கூடியதாயும்,அபரோக்ஷமாய் பிரகாசிப்பதாயும் உள்ள ஆத்ம வடிவினனாயும்,விரும்பு வெறுப்பு முதலிய தோசங்கள் அற்றவனாயும். சமம்,தமம் முதலியவைகளுடன் கூடி மாச்சர்யம்,ஆசை,மோகம் முதலியவை நீங்கியவனாயும் அகங்காரம் முதலியவற்றால் தொடப்படாதவனாகவும் முக்தலக்ஷணம் வாய்ந்தவன் எனனோ அவனே பிராம்மணன் என்பது வேதம்,ஸ்மிருதி,புராணம்,இதிகாசம் முதலியவற்றின் முடிவான கருத்து. இதற்கு புறம்பாக பிராமணத் தன்மை இல்லவே இல்லை. இரண்டற்ற ஸச்சிதானந்தமானதுமான பிரம்மமாக ஆத்மாவை உணவவேண்டும்.

-

இங்ஙனம் சாமவேதத்தில் இடம்பெற்றுள்ள  - வஜ்ரஸுசிகா உபநிடதம் கூறுகிறது.

-

சாரம்சம்

-

1.ஒரே ஜீவன்தான் பல பிறவிகளில் பிறந்தாலும் ஜீவன் பிராம்மணன் அல்ல.2.எல்லோரது உடலும் ஒரேபோல் இருப்பதால் உடல் பிராம்மணன் அல்ல.3.எல்லா ஜாதியிலும் ரிஷிகள் பிறப்பதால்.பிறப்பால் ஒருவன் பிராம்மணன் அல்ல.4.எல்லா ஜாதியிலும் அறிவாளிகள் இருப்பதால் அறிவை வைத்து ஒருவனை பிராம்மணன் என்று கூறமுடியாது. 5. செய்யும் தொழிவை வைத்து பிராமணன் என்று கூறமுடியாது. ஏனென்றால் அந்த தொழிலை எல்லோராலும் செய்ய முடியும்.6.தான தர்மங்கள் எல்லோரும் செய்கிறார்கள்.அதனால் அதைவைத்தும் கூறமுடியாது 7. பிரம்மத்தை உணர்ந்து,உடல் இருந்தாலும் உடலற்ற நிலையில் ஜீவன்முக்தனாக வாழ்பவன்தான் பிராமணன்.

ஆன்மீகமும்-விஞ்ஞானமும்-பாகம்-18

 ஆன்மீகமும்-விஞ்ஞானமும்-பாகம்-18

..

ஆண்பெண் தேடல்

..

இயற்கை படைப்பில் மிருகங்களைப் பொறுத்தவரை ஆண் தனியாகவும்,பெண் தனியாகவும் படைக்கப்பட்டுள்ளது.

பெண்ணைத்தேடி ஆண் அலையவேண்டும்,அப்போது போட்டி,போராட்டம்,பொறாமை அனைத்தும் ஏற்படவேண்டும் என்ற ரீதியில் உள்ளது. ஆனால் தாவரங்களைப் பொறுத்தவரையில் பெரும்பாலான தாவரங்கள் ஆண்தன்மை,பெண்தன்மை இரண்டும் சேர்ந்தே படைக்கப்பட்டுள்ளது. அதனால் இனப்பெருக்கத்திற்கான போட்டி,போராட்டம் இல்லை ஆனால் அவைகளால் இடம்பெயர முடியாது. வெயிலோ,பனியோ,புயலோ அவைகளிலிருந்து தப்பித்து செல்ல முடியாது. அவைகள் இயற்கையின் அடிமைகளாக இருக்கின்றன. சுதந்திரம் இல்லை. மிருகங்களுக்கு ஓரளவு சுதந்திரம் இருக்கிறது,ஆனால் முழுமைநிலையில் இல்லை.

.

மனிதன் விலங்கின் வகையை சேர்ந்தவன் என்பதால் ஆண் தனியாகவும். பெண் தனியாகவும் படைக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஒரு உயிர் உருவாகும் ஆரம்பக் கட்டத்தைப் பார்த்தால் அது ஆணாகவும் இல்லை,பெண்ணாகவும் இல்லை. உயிரின் ஆரம்பப்புள்ளியில் பால் வேறுபாடு இல்லை.

..

படைப்பின் ஆரம்பத்தில் முழுமை இருந்தது. அந்த முழுமை இரண்டாக பிரிந்து ஒன்று கவரும் சக்தியாகவும் இன்னொன்று விலக்கும் சக்தியாகவும் மாறியது. மனிதனின் ஒன்று ஆணாகவும் இன்னொன்று பெண்ணாகவும் ஆனது.

..

இந்த உலகில் ஆண் பெண்ணைத்தேடவேண்டும், பெண் ஆணைத்தேட வேண்டும் என்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

மனிதன் ஒரு பிறவியில் ஆணாகப்பிறக்கிறான்,இன்னொரு பிறவியில் பெண்ணாகப் பிறக்கிறான். அதனால் நிறைநிலை அடையும் மனிதனுக்கு ஆண்மனத்தின் இயல்புகளும் தெரியும்,பெண் மனத்தின் இயல்புகளும் தெரியும் ஏனென்றால் அவன் பல பிறவிகளை கடந்து வந்துவிட்டான்.

.

ஆன்மாவின் இயல்பு என்னவென்றால் இந்த ஆண்மை,பெண்மை இரண்டையும் முழுமையாக பெற்றிருப்பதுதான்.

எந்த மனிதன் ஆண்மை,பெண்மை இரண்டையும் முழுமையாக பெற்றிருக்கிறானோ அவனால்தான் ஆன்மாவை அடைய முடியும்.

..

ஸ்ரீராமகிருஷ்ணரிடம் இந்த இரண்டு குணங்களும் முழுமையாக இருந்தது. அவரைப் பார்க்கவரும் பெண்கள்,அவரை பெண்ணாகவே கருதினார்கள். தங்கள் மனத்தில் உள்ள எதையும் அவர்கள் மறைக்காமல் அவரிடம் பேசுவார்கள்.

.

ஸ்ரீராமகிருஷ்ணரின் சிஷ்யையாக,சேவகியாகவே சாரதாதேவி தன்னை கருதினாள்.

ஸ்ரீராமகிருஷ்ணருக்கு மனைவியின் தேவை இல்லை. அவர் ஏற்கனவே முழுமையாக இருந்தார்.

யார் முழுமைபெறவில்லையோ அவர்கள்தான் இன்னொரு துணையைத்தேடி அலைவார்கள்.

பின்னாளில் சாரதாதேவியும் முழுமைநிலையை அடைந்தார்.அவர் ஸ்ரீராமகிருஷ்ணரை குழந்தையாக பாவித்தார்.

..

இந்த பிரபஞ்சத்தில் எங்கெல்லாம் இயக்கம் இருக்கிறதோ,அங்கெல்லாம் முழுமை இல்லை. எதையோ ஒன்றைத்தேடியே அனைத்தும் அலைந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு அணுவும் முழுமை பெறுவதற்காக போராடிக்கொண்டிருக்கிறது. ஆனால் அவைகளால் முழுமைபெற முடிவதில்லை.

.

அன்புதான் ஆணையும் பெண்ணையும் ஒன்றாக இணைக்கிறது. முழுமையான அன்பில் ஆண்பெண் வேறுபாடு இருக்காது. காமம்தான் மனிதர்களை ஆண்தனியாகவும், பெண் தனியாகவும் பிரிக்கிறது.இந்த உலக இயக்கத்திற்கு காமம்,அன்பு இரண்டுமே தேவை.இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கம்போல சேர்ந்தே இருக்கிறது. ஆனால் அன்பு வெளிப்படும்போது காமம் வெளிப்படாது. அன்பை வளர்க்க வேண்டும் அப்படி வளர்த்தால்,காமம் தலை காட்டது.ஆனால் காமம் இருக்கும்,அது வெளிப்படாது.

.

ஆன்மாவை அடைய அன்பை வளர்த்துக்கொள்வதே வழி.யாரிடம் முழுமையான அன்பு உள்ளதோ அவரை நேசிக்க வேண்டும்,அவரிடம் அன்பு காட்ட வேண்டும். அப்படி செய்தால் அன்பு வளரும். மனிதர்களிடம் முழு அன்பை எதிர்பார்கக் முடியாது. அவர்களிடம் காமமும் இருக்கும் அன்பும் இருக்கும். ஒரு பெண்ணிடம் ஆண் காட்டும் அன்பிலும், ஒரு ஆணிடம் பெண் காட்டும் அன்பிலும் காமம் கலந்திருக்கும். அவர்கள் காமத்தை மட்டுப்படுத்தவில்லை. அதனால் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் காமம் வெளிப்பட்டு,உண்மையான அன்பு மறைந்துவிடுகிறது.

..

காதலர்கள் தங்கள் காதலை தூய புனிதமான காமம் இல்லாத காதல் என்றுதான் ஆரம்பத்தில் நினைக்கிறார்கள்.ஆனால் நாள் ஆகஆக அதில் காமம் கலந்துவிடுகிறது. ஒருவேளை அவர்கள் காதலில் காமம் கலக்காமல் இருந்தால் அவர்கள் தெய்வநிலையை அடைந்துவிடுவார்கள்.

.

ஆன்மா மட்டுமே முழுமையாக இருக்கிறது. யார் இந்த ஆன்மாவை அடைகிறார்களோ அவர்களிடம் மட்டுமே முழுஅன்பு வெளிப்படுகிறது. அவர்களையே நாம் இஷ்டதெய்வமாக,குருவாக வணங்க வேண்டும்.

ஒரு குரு, சீடனை ஆசீர்வதிக்கும்போது குருவின் சக்தி சீடனிடம் செல்கிறது.இதனால் குருவின் மனம் சற்று கீழ்நிலைக்கு செல்கிறது.சீடன் பாவியாக இருந்தால் குருவின் மனம் மிகவும் கீழ்நிலைக்கு சென்றுவிடும். அப்படி சென்றால் குரு வீழ்ச்சியை அழைய நேரும். அவர் காமத்திற்கு வசப்படநேரும்,அவரிடமுள்ள அன்பு மறைந்துவிடும்.

அதனால்தான் சீடனின் தகுதி முக்கியமாக கவனத்தில் கொள்ளப்படுகிறது.

..

இல்லறம் என்பதே இந்த அன்பை வளர்த்துக்கொள்வதற்கான இடம்தான். நமது தர்மசாஸ்திரம் முழுவதும் அதைத்தான் சொல்கிறது. அன்பை வளர்த்துக்கொள்வதன் மூலம் இல்லறத்தில் இருந்தே ஆன்மாவை அடைய முடியும்.

..

உங்கள் சந்தேகங்களை 9360209541 என்ற வாட்ஸ்அப் எண்ணில் மெசேஜ் மூலமாக கேட்கலாம்

சுவாமி வித்யானந்தர்-கன்னியாகுமரி(19-6-2025)

ஐந்தாம் வேதம் எது?

 ஐந்தாம் வேதம் எது?

..

மிகப்பழைய காலத்தில் வேதங்கள் தொகுக்கப்படவில்லை. பிறகு பல்வேறு இடங்களில் வாழ்ந்த பல்வேறு ரிஷிகளிடம் வெளிப்பட்ட வேதத்தை தொகுத்தார்கள்.இதுதான் ”இருக்” வேதம். இருக்கு என்ற வார்த்தை இதிலிருந்துதான் உருவானது.

..

பிறகு பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு இன்னும் பல ரிஷிகளிடம் வெளிப்பட்ட உண்மைகளை யஜுர்வேதம் என்ற பெயரில் தொகுத்தார்கள். இது மிகப்பெரிய வேதத்தொகுப்பு.இதை மனப்பாடம் செய்வதில் சிரமம் இருந்ததால் இதை இரண்டாக பிரித்தார்கள். அவை சுக்ல யஜுர்வேதம்,கிருஷ்ண யஜுர்வேதம். இன்னும் சில ஆயிரம் ஆண்டுகள் கழித்து சாம வேதத்தை தொகுத்தார்கள். மகாபாரத காலத்தில் அதர்வண வேதம் தொகுக்கப்படவில்லை. மகாபாரதத்தில் பல இடங்களில் மூன்று வேதங்கள் பற்றித்தான் சொல்லப்பட்டுள்ளது.

மகாபாரத காலத்திற்கு பிறகு அதர்வணவேதம் தொகுக்கப்பட்டது.

.

மகாபாரதபோர் நிறைவடைந்ததும் கலிகாலம் துவங்கியது. மனப்பாடம் செய்யும் அளவுக்கு மக்களுக்கு நினைவாற்றல் இருக்காது என்பதால் முதன்முதலில் மகாபாரதம் எழுத்துவடிவில் வந்தது.

விநாயகர் இதை எழுதினார்.

பிறகு இதிலிருந்து பல பிரதிகள் எடுத்துக்கொண்டார்கள்.

இதில் பழைய காலத்து ரிஷிகள் பலரது அறிவுரைகள் உள்ளன.

.

வேதங்களின் சாரமான பகவத்கீதை அதில்தான் உள்ளது. மேலும் அறம்,பொருள்,இன்பம்,வீடு பற்றிய விளக்கங்கள் பிரம்மச்சர்யம்,இல்லறம்,வானப்பிரஸ்தம்,சன்னியாசம் பற்றி  கூறப்பட்டுள்ளது.

கர்மயோகம்,ராஜயோகம்,பக்தியோகம்,ஞானயோகம் பற்றிய பல அற்புத கருத்துக்கள் உள்ளன.

இதோடு நான்கு வர்ணங்களான பிராமணன்,சத்திரியன்,வைசியன்,சூத்திரன் பற்றியும்,அவர்களது கடமைகள் பற்றியும் விளக்கமாக உள்ளது.

அரசனின் கடமை குடிமக்களின் கடமை பற்றி விளக்கப்பட்டுள்ளது.

இதில் விளக்கப்படாத விஷயங்களே இல்லை என்று சொல்லலாம்.

.

திருக்குறள் போன்ற தமிழ் நூல்கள் எல்லாம் மகாபாரதத்தை படித்த பிறகு எழுதப்பட்டவை என்பதை இரண்டையும் படித்தவர்கள் புரிந்துகொள்வார்கள். அந்த அளவுக்கு திருக்குறளின் அளநெறி கருத்துக்கள் அனைத்தும் அப்படியே மகாபாரத அறநெறி கருத்துக்களுடன் ஒத்திருக்கின்றன.ஆன்ம தத்துவம்,பிரபஞ்ச தத்துவம் போன்ற உயர்ந்த தத்துவங்கள் திருக்குறளில் இல்லை.

.

மகாபாரதம் என்றவுடன் அதில் உள்ள கதைகள்தான் பலருக்கு நினைவிற்கு வரும்.ஆனால் அதில் உள்ள உபதேசப்பகுதிகள் மிகப்பெரியவை. கிட்டத்தட்ட மூன்றில் ஒருபகுதி உபதேங்களால் ஆனவை. மிகவுயர்ந்த தத்துவங்கள் அனைத்தையும் பற்றி இந்த உபதேசப்பகுதிகளில் விளக்கப்பட்டுள்ளது.

.

பல உயர்ந்த தத்துவங்கள் மகாபாரதத்தில் இருப்பதால் மகாபாரதத்தை ஐந்தாம் வேதம் என்கிறார்கள்.

விஷ்ணுசகஷ்ரநாமம்,சிவ சகஸ்ரநாமம், போன்றவை இதில் உள்ளன.பகவத்கீதை,அனு கீதை,ஹம்ச கீதை போன்ற பல கீதைகள் இதில் உள்ளன.

.

இவ்வளவு உயர்ந்த கருத்துக்கள் நிறைந்த மகாபாரதம் - சிறந்த சனாதன சாஸ்திரம்.

இந்த ஐந்தாம்வேதம் இதுவரை மக்களிடம் கொண்டு செல்லப்படவில்லை. இது அனைவரையும் சென்றடையவேண்டும். 

உலகம் முழுவதையும் சென்றடையவேண்டும். அதற்கு உங்கள் அனைவரின் உதவியும் தேவை

..

சுவாமி வித்யானந்தர்-கன்னியாகுமரி

ஆன்மீகமும்-விஞ்ஞானமும்-பாகம்-17

 ஆன்மீகமும்-விஞ்ஞானமும்-பாகம்-17

..

மனத்தின் மூலம் சாப்பிடுவது

..

உடலை வளர்த்தேன் மனத்தை வளர்த்தேன். மனத்தை வளர்த்தேன் உடலை வளர்த்தேன் என்ற கருத்து ஒன்று உண்டு.

நல்ல சுவையான சத்தான உணவுகளை சாப்பிடும்போது மனம் சந்தோசமடைகிறது. உடல் வளர்கிறது.

இதை இப்படி மாற்றி யோசித்துப் பாருங்கள் மனத்தால் நன்றாக சுவையான உணவுகளை உண்டு பாருங்கள், அப்போது உடல் வளர்கிறதா? உடலால் எதையும் சாப்பிடவில்லை. மனத்தால் மட்டுமே சாப்பிடுகிறோம். இப்படி சாப்பிட முடியுமா? முடியும் சிலரால் முடியும். அப்படி மனத்தால் சுவைமிகுந்த உணவுகளை சாப்பிட முடிபவர்களால் உடல் வளரும். உடலுக்கு தனியாக உணவளிக்க வேண்டியதில்லை.

..

மனம் என்பது சூட்சுமஉடல். வெறும் எண்ணங்களை மட்டுமே நாம் மனம் என்று நினைக்கிறோம்.ஆனால் இந்துமத தத்துவங்களின்படி மனம் என்பது சூட்சும உடல். நமது உடலுக்கு எப்படி உருவம் உள்ளதோ அதுபோல மனத்திற்கும் ஒரு உருவம் உண்டு. அது வளர்கிறது,தேய்கிறது. கருக்கிறது, ஒளிர்கிறது, ஈர்க்கப்படுகிறது,விலக்கப்படுகிறது. காலத்தில் விரைவாக செல்கிறது,மெதுவாக செல்கிறது. பல்வேறு பரிமாணங்களில் அது வேலை செய்கிறது.

..

நாம் காணும் தூலஉடலிலிருந்து பெரும் உணவிலிருந்துதான் சூட்சும உடல் அதற்கான உணவைப்பெறுகிறது.

ஆனால் சிலர் பல ஆண்டுகள் உணவு சாப்பிடாமல் நல்ல ஆரோக்கியமாக வாழ்கிறார்கள். உடலுக்கு உணவு கொடுக்காவிட்டால் அது இறந்துவிடும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அப்படி இருக்கும்போது உணவு உண்ணாமல் சிலர் எப்படி வாழ்கிறார்கள்? மற்றவர்கள் வேலை செய்வதுபோல அவர்கள் வேலை செய்கிறார்கள்.ஆகால் தண்ணீர் குடிப்பதில்லை,உணவு உண்பதில்லை. அவர்களுக்கான உணவு மனத்திலிருந்து கிடைக்கிறது. மனம் தேவையான உணவை உண்கிறது.அந்த உணவு உடலை வளர்க்கிறது.

..

இது ஒரு சுழற்சிபோல உள்ளது மகான்கள் சூட்சும உடலோடு வாழ்கிறார்கள். தேவைப்படும்போது அவர்கள் தூலஉடலை எடுத்துக்கொள்கிறார்கள். சாதாரண மனிதர்கள் தூலஉடலோடு வாழ்கிறார்கள். இறந்த பிறகு சூட்சு உடலை எடுத்துக்கொள்கிறார்கள்.

..

மனதால் நாம் செய்யும் செயல்கள் உடலை பாதிக்கிறது. உடலால் நாம் செய்யும் செயல்கள் மனத்தை பாதிக்கிறது. இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது.

மனோவிஞ்ஞானம் என்ற ஒன்று இருக்கிறது. மனத்தை பலப்படுத்தினால் உடலில் தோன்றியிருக்கும் நோய்களை குணப்படுத்திவிடலாம். உடலில் தோன்றும் நோய்கள் மனத்தை பாதிக்கிறது.

பழைய காலத்தில் மருத்துவ சிகிச்சை செய்யும்போது மந்திரங்களை பயன்படுத்துவார்கள். இதற்கான காரணம் நோயாளியின் மனத்தை முதலில் திடகார்த்தமாக்க வேண்டும். அவனுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டும். கீழ்நிலையில் உழன்றுகொண்டிருக்கும் மனத்தை மேல்நிலைக்கு கொண்டுவர வேண்டும். அவனது குண்டலினி சக்தியை மேலே உயர்த்த வேண்டும். அப்படி அவனது மனம் மேல் நிலைக்கு உயரும்போது. அவனது உடல் நோய்கள் படிப்படியாக விலகிவிடும்.

..

இந்து மதத்தில் இடம்பெறும் பல்வேறு வகையான நோன்புகள்.விரதங்கள் போன்றவற்றின் நோக்கம் மனத்தை உயர்நிலைக்கு உயர்த்துவதே. உதாரணமாக கோவில்களில் நடக்கும் ”தீ” மிதிக்கும் நிகழ்வை பார்ப்போம்.

”தீ” மிதிக்கும்போது சில நொடிகளுக்கு அவனது குண்டலினி சக்தி மேல்நோக்கி எழுகிறது. இந்த சமயத்தில் தெய்வீக ஆவேசம் வந்தவன்போல அவன் செயல்படுகிறான். அவனது மனம் உயர்நிலையை அடைவதால் உடலும் உயர்நிலையை அடைகிறது. உடல் நோய்கள் ஓரளவுக்கு நீங்குகிறது. மனத்தை அதிகநேரம் உயர்நிலையில் நிறுத்தி வைக்க முடியுமானால் இன்னும் உடல்சார்ந்த பல பிரச்சினைகளை தீர்க்க முடியும்.

..

சபரி மலைக்கு விரதம் இருந்து நடந்தே செல்வதைப் பார்க்கிறோம். நடந்துசெல்லும் பாதை பயணம் மிகவும் கடினமானது. மனத்தை நன்றாக திடப்படுத்திக்கொண்டு இறைவன் நாமத்தை உச்சரித்துக்கொண்டே நடந்தால் மனம்மேல் நிலையை அடைகிறது. பக்தியோடு செல்பவர்கள் கரடுமுரடான பாதையின் கஷடங்களை உணரமாட்டார்கள்.உடல் உணர்ச்சியற்றநிலையை அடைகிறது. அப்போது அவர்கள் மனதால் எண்ணுவது நடக்கும்.அவர்களது ஆசைகள் நிறைவேறும்.

..

மனத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும். இதற்கு பக்தியும் பயிற்சியும் சேர்த்து கொடுக்கப்படுகிறது.

வெறும் உடல்பயிற்சி மட்டும் இருந்தால் மனிதனுக்கு நம்பிக்கை வராது. மனிதமனம் எதையும் எளிதில் நம்பாது. எனவே கோவிலை சுற்றி அங்கபிரதட்சிணம் செய்,இறைநாமத்தை தொடர்ந்துசொல் நன்மை நடக்கும் என்று சொல்கிறார்கள். அப்படியே நடக்கிறது. சிலர் எவ்வளவுதான் முய்றிசசெய்தாலும் பயிற்சி செய்தாலும் துன்பங்கள் விலகவில்லை என்று சொல்வார்கள். இதற்கு காரணம் அவர்களது மனம் உயர்நிலையை அடையவில்லை, குண்டலினி சக்தி மேல்நிலையை அடையவில்லை. எது முக்கியமோ அதைவிட்டுவிட்டு வெறும் இயந்திரம்போல் வேலை செய்வதால் என்ன பயன்?

..

இறைநாமத்தை தொடர்ந்து ஜெபம் செய்தால் நினைப்பது நடக்கும் என்று சொல்கிறார்கள். ஜெபம் செய்யும்போது எதையும் நினைக்கக்கூடாது என்பதை மறந்துவிடுகிறார்கள். மனதில் பல்வேறு சிந்தனைகள் ஓட எத்தனை ஆண்டுகள் ஜெபம் செய்தாலும் ஒன்றும் நடக்காது. பத்து நிமிடம் எந்த சிந்தனையும் இல்லாமல் ஜெபம் செய்ய முடியுமா?

..

உடலும் மனமும் நெருங்கிய தொடர்பு உடையது. உடல் பலமாக இருந்தால் மனம் பலமாக இருக்கும். மனம் பலமாக இருந்தால் உடல் பலமாக இருக்கும். மனம் பலவீனமாக உள்ளவர்கள் முதலில் செய்ய வேண்டிய வேலை எதுதேரியுமா? உடலை பலப்படுத்துவதுதான். நல்ல சத்தான உணவை உண்டு. பல்வேறு உடற்பயிற்சிகள் செய்து உடலை பலப்படுத்தவேண்டும். போர்களத்திற்கு செல்லும் வீரனின் உடல் எப்படி பலமாக இருக்குமோ அப்படிஉடலை பலப்படுத்த வேண்டும். அப்படி செய்தால் மனம் பலமடையும்.

இதைவிட்டுவிட்டு வேறு என்ன செய்தாலும் மனம் பலமடையாது. பல்வேறு சிந்தனைகள் மனத்தில் ஓடி அவர்கள் வாழ்க்கையே நரகமாகிவிடும்.

இதேபோல உடல் ஆரோக்கியமாக இருப்பவர்கள், மனத்தை பலப்படுத்துவதற்காக ஆன்மீக கருத்துக்களை சிந்திக்க வேண்டும். ஆன்மாவைப்பற்றி கேட்க வேண்டும். கேட்டதை எப்போதும் சிந்திக்க வேண்டும். இப்படி செய்தால் மனம் பலப்படும். உடல் கட்டுப்பாட்டிற்குள் வரும். ஒழுக்கமான வாழ்க்கை அமையும்.

..

உங்கள் சந்தேகங்களை 9360209541 என்ற வாட்ஸ்அப் எண்ணில் மெசேஜ் மூலமாக கேட்கலாம்

சுவாமி வித்யானந்தர்-கன்னியாகுமரி(17-6-2025)

தலாய்லாமா மறுபிறப்பின் ரகசியம் என்ன?

 தலாய்லாமா மறுபிறப்பின் ரகசியம் என்ன?

..

சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு முஸ்லீம்களின் படையெடுப்பு காரணமாக பௌத்தர்கள் மலை பகுதிகளை நோக்கி செல்ல நேர்ந்தது.நேபாளம்,பூடான்,திபெத்,அருணாச்சல்,லடாக் போன்ற பகுதிகளில் வாழ்ந்த புத்தமதத்தினர் வஜ்ராயன புத்தமத பிரிவை சேர்ந்தவர்கள். வஜ்ராயன பௌத்தத்தை நிறுவியதில் குரு பத்மசாம்பவா.

வஜ்ராயன பௌத்தம் என்பது மஹாயான புத்தமத பிரிவுகளில் ஒன்று. இலங்கை,பர்மா,தாய்லாந்து,வியட்னாம் போன்ற நாடுகளில் உள்ளது ஹீனயான புத்தமதம்.சீனா,ஜப்பான்,கொரியாவில் உள்ளது மஹாயான புத்தமதம்.

..

வஜ்ராயன பௌத்தத்தை நிறுவியதில்  பத்மசாம்பவா தான் முதல் குரு. அவரே மறுபடி மறுபடி பிறந்து வந்துள்ளார்.

இன்றைய தலாய்லாமாவும் பத்மசாம்பவா ஒருவரே,உடல்தான் மாறுபட்டுள்ளது.

..

பத்மசாம்பவா வெறும் குரு மட்டுமல்ல அவர் முழு வஜ்ராயன பௌத்தர்களுக்கும் அரசரும் அவரே.

லாமா என்றால் மொட்டையடித்த துறவி. தலை என்பது தலைவர். லாமாக்களின் தலைவர்- தலைலாமா.

வஜ்ராயன பௌத்தத்தை பொறுத்தவரை லாமாக்களுக்கு மறுபிறப்பு கிடையாது. அவர்கள் நிர்வாண நிலையை அடைவதற்காக வாழ்நாள் முழுவதும் தவத்தில் ஈடுபடுவார்கள்.

குடும்ப வாழ்வில் ஈடுபட்டுள்ள மக்கள் மறுபடிமறுபடி பிறக்க வேண்டும்.பொதுவாக ஒவ்வொடு குடும்பத்திலும் ஒருவரை சிறுவயதிலேயே லாமாவாக அனுப்பி விடுவார்கள்.இதனால் லாமாக்களின் புண்ணியம் அந்த குடும்பத்திற்கு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

..

எல்லா குருமார்களும் தனது சீடர்கள் முக்தி அடைவதற்காக தான்மட்டும் முக்தி அடையாமல் காத்திருப்பார்கள். எல்லா சீடர்களும் முக்தி அடைந்த பிறகு குரு முக்தி அடைவார். 

.

பத்மசாம்பவா குரு மட்டுமல்ல அவர் மக்களை ஆளும் அரசரும்கூட, எனவே மக்களை காப்பதற்கும்,மடங்களை காக்கவும், லாக்களுக்கு வழிகாட்டியாக இருக்கவும் அவர் மீண்டும் மீண்டும் மனித உடலில் பிறக்க தீர்மானித்தார்.

சூட்சும உடலில் இருந்து வழிகாட்ட முடியாதா? முடியும்.

அப்படி செய்தால் பல குருமார்கள் புதிதாக உருவாவார்கள். மதம் பல துண்டுகளாக பிரிந்துபோகும். மக்கள் பல பிரிவுகளாக பிரிந்துபோவார்கள்.

இந்து மதத்தில் பல குருக்கள் இருக்கிறார்கள்.அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு புதிய மதத்திதை நிறுவியுள்ளார்கள்.

திபெத்தில் இதற்கு வாய்ப்பு இல்லை. தலாய்லாமாவை மிஞ்சி யாரும் வளர்ச்சியடைய முடியாது.

இது மதத்தின் சுதந்திரமற்ற சர்வாதிகாரபோக்கை காட்டுகிறது.இயற்கை எல்லா நியதிகளையும் உடைத்தெறியும் தன்மை கொண்டது. எல்லா சட்டதிட்டங்களும் ஒரு காலத்திற்கு பிறகு இல்லாமல்போய்விடும்.

சீனாவின் ஆக்கிரமிப்பு தலாய்லாமாவின் அரசபதவியை பறித்துவிட்டது.இப்போது இந்தியாவில் அவர் ஒரு விருந்தினராகவே உள்ளார்.

..

தலாய்லாமா மீண்டும் எப்படி பிறப்பார்?

..

தலாய்லாமா இறுதி கட்டத்தை நெருங்கும்போது தனது தூலஉடலைவிட்டு  சூட்சும உடலுக்கு சென்றுவிடுகிறார்.

தொடர்ந்து அவர் வசித்த ஆசிரமத்திலேயே சூட்சும உடலில் வாழ்கிறார். பிறகு ஞானம் கொண்ட லாமாக்கள் சிலர் சேர்ந்து தலாய்லாமா மீண்டும் எங்கே பிறந்துள்ளார் என்பதை அறிய பல இடங்களில் தேடுகிறார்கள்.

உண்மையில் தலாய்லாமா மீண்டும் பிறப்பதில்லை.அவர் சூட்சுஉடலில் அங்கேயே வாழ்ந்துகொண்டிருப்பார்.

சத்துவ குணம் கொண்ட சிறுவன் ஒருவனை தேடுவதுதான் லாமாக்களின் பணி. இருப்பவர்களில் யார் சிறந்தவனோ அவனை நேர்ந்தெடுத்து ஆசிரமத்திற்கு அழைத்துவருவார்கள்.

அந்த சிறுவனை உடலே புதிய தலாய்லாமா என்று ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

சில நாட்கள் மடத்தில் தங்க வைப்பார்கள், அவனது உடலையும் மனத்தையும் பக்குவப்படுத்துவார்கள்.இதற்கு பல்வேறு மந்திரங்கள்,சடங்குகள் செய்வார்கள். 

.

ஏற்கனவே சூட்சும உடலில் வசிக்கும் தலாய்லாமாவின் ஆன்மா சிறுவனின் உடலுக்குள் சென்று தன்னை அதனோடு ஐக்கியப்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு சில காலம் பிடிக்கும்,அவ்வாறு முழுமையாக பழைய ஆன்மா புதிய உடலுக்குள் சேர்ந்த பிறகு அந்த சிறுவனின் உடலிலும் மனதிலும் மாற்றங்கள் தென்படும்.முகத்தில் பொலிவும்,ஞானமும் சிறுவனிடம் வெளிப்படும் .அதன் பிறகு அவரை புதிய தலைவராக தேர்ந்தெடுப்பார்கள்.

..

இந்த நடைமுறை என்பது பழைய காலத்தில் நமது நாட்டில் உள்ள பழக்கம்தான். மேல் உலகில் வாழும் தெய்வங்கள் பக்தனின் உடலில் குடிகொண்டு ஆசி வழங்கும் முறை இது. 

..

உங்கள் சந்தேகங்களை 9360209541 என்ற வாட்ஸ்அப் எண்ணில் மெசேஜ் மூலமாக கேட்கலாம்

சுவாமி வித்யானந்தர்-கன்னியாகுமரி(7-7-2025)

இல்லறத்தார்கள் முக்தி பெறுவதற்கான வழிகள்

இல்லறத்தார்கள் முக்தி பெறுவதற்கான வழிகள்

..

இதற்கு முன்பு உள்ள ஒரு கட்டுரையில் முக்தி பெறுவதற்கான இரண்டு வழிகள் பற்றி குறிப்பிட்டிருந்தேன்.அவை 1.அனைத்தையும் விடும் வழி மற்றும் 2.அனைத்தையும் ஏற்கும் வழி

.

அப்படியென்றால் இல்லறத்தார்களுக்கு இல்லறத்தில் இருந்தபடியே முக்தி பெற வழி இல்லையா?

இருக்கிறது.

இல்லறத்தில் இருந்தபடியே அனைத்தையும் விடும் வழியை பயிற்சி செய்தால் பல தொந்தரவுகள் ஏற்படும் என்று முன்பு உள்ள கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.

ஏற்கனவே அதை படிக்காதவர்கள் ஒருமுறை படிக்கவும்.

இது அதன் தொடர்ச்சி கட்டுரை

..

அனைத்தையும் ஏற்கும் வழியை இல்லறத்தார்கள் பயிற்சி செய்யலாம்.

அதில் பல பிரிவுகள் இருக்கின்றன.

1.பலன் கருதாமல் நற்கர்மங்கள் செய்து அதன் மூலம் முக்திபெறலாம்

2.இஷ்ட தெய்வத்திடம் பக்தி செய்வதன் மூலம் முக்தி பெறலாம்

3.குரு பக்தி மூலம் முக்தி அடையலாம்

4.கணவனை  தெய்வமாகவோ அல்லது மனைவியை தெய்வமாகவோ நினைத்து பணிவிடைகள்புரிந்து முக்தி அடையலாம்

5.குழந்தைகளை தெய்வமாக நினைத்து அவர்களை வளர்த்து முக்தி அடையலாம்.

இன்னும் பல வழிகள் உள்ளன.

இவை அனைத்தும் அன்பை அடிப்படையாகக்கொண்டது. இந்த வழியில் முக்தியை நோக்கி செல்கிறோமோ இல்லையா என்பதை நாம் பரிசோதித்துக்கொள்ள முடியும்.

நம்மிடம் அன்பு வளர்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். முன்பைவிட அன்பு வளர்கிறதா? அப்படியானால் சரியான பாதையில் செல்கிறோம்.

அன்பு என்று சொல்லும்போது கண்டிப்பும் தேவை. பிறர் செய்யும் தவறுகளை கண்டும் காணாமலும் இருப்பது அன்பு அல்ல. பிறரது நலத்திற்காக கண்டிப்போடு நடப்பதும் அன்புதான்.

ஞானமும் அன்பும் ஒன்றுக்கொன்று இணைந்தவை. அன்பு வளரும்போது ஞானமும் வளரும். பல ஆன்மீக கருத்துக்கள் தானாக புரிய ஆரம்பிக்கும். சந்தேகங்கள் படிப்படியாக விலக ஆரம்பிக்கும்.

ஒரே குரு,ஒரே பாதை,ஒரே மனத்தை உடையவர்களிடம் நட்பு வைத்துக்கொள்ள வேண்டும். 

பல்வேறு குருக்களின் உபதேசங்களைப் படித்தால் குழப்பம் ஏற்படும்.

..

இல்லறத்தார்கள் அன்பு வழயில் செல்லும்போது படிபப்டியாக பற்றற்றநிலை ஏற்படும். ஞானம் ஏற்படும்.அன்பு விரிவடையும் முக்தி ஏற்படும்.

இல்லறத்தில் இருந்தபடியே அன்றாட கடமைகளை செய்தபடியே இந்த நிலையை அடையலாம்.

உலகியலில் உழன்றுகொண்டிருக்கும் மக்களிடமிருந்து சற்று விலகியிருக்க வேண்டும். உலகியல் மக்கள் ஆன்மீகத்தை விரும்ப மாட்டார்கள்.ஆன்மீக வழியில் செல்பவர்களை ஏமாற்ற நினைப்பார்கள் அல்லது அவர்களை அலட்சியமாக நினைப்பார்கள்.

..

முக்தியத் தேவைகள்

1.முக்தி அடையவேண்டும் என்ற தீவிர ஏக்கம்

2.பாவத்தை உருவாக்கும் தவறுகள் செய்யாமல் இருக்கவேண்டும்.

3.ஏதாவது ஒரு பாதையை தீவிரமாக பின்பற்ற வேண்டும். பல பாதைகளில் கால் வைக்கக்கூடாது.

4.ஞானிகளின் உபதேசங்களை படித்து ஞானத்தை பெற முயற்சிக்க வேண்டும்.

..

இல்லறத்தார்கள் முயன்றால் முக்தி அடையலாம். ஆனால் முக்தி அடைய வேண்டும் என்ற ஆசை உள்ளவர்கள் மிகக்குறைவே. யாருக்கு இது கடைசி பிறவியோ அவர்களுக்குத்தான் முக்தி அடைய வேண்டும் என்ற தீவிர ஏக்கம் ஏற்படும்.

இல்லற வாழ்க்கை என்பதே முக்தி அடைவதற்காக ஏற்படுத்தப்பட்டதுதான் என்பதை பலர் அறிவதில்லை. இல்லறத்தை துறந்தால்தான் முக்தி அடைய முடியும் என்று தவறாக நினைக்கிறார்கள்.

ஆனால் இது மெதுவான,பலமான பாதை.இதில் வெற்றி அடைவதற்கான வாய்ப்பு அதிகம்.

இல்லறத்தை துறப்பவர்கள் வேகமாக முக்தியை நோக்கி செல்வார்கள்,அதேநேரம் அதில் தோல்வியடைவதற்கும் வாய்புகள் அதிகம்.

இல்லறம் என்பது கோட்டைக்குள் இருந்து எதிரிகளுடன்(புலன்களுடன்) போரிடுவது போன்றது.

துறவறம் என்பது திறந்த வெளியில் நின்று எதிரிகளுடன்(புலன்களுடன்)  போரிடுவது போன்றது.

கோட்டைக்குள் நின்று போரிடுவது வசதியானது. வெற்றிக்கான வாய்ப்புகளும் அதிகம் என்று ஸ்ரீராமகிருஷ்ணர் கூறுவார்.

முக்தி என்பது என்ன?

 முக்தி என்பது என்ன?

..

நமது ஆன்மா, பரமாத்மாவுடன் இணைவதுதான் முக்தி.

வெளிநாடுகளில் இருந்து வந்த மதங்களில் முக்தி பற்றிய கருத்து கிடையாது.

சொர்க்கம் செல்வது முக்தி அல்ல.

ஆசைகள் உள்ளவர்கள் புண்ணிய பலனின் காரணமாக சொர்க்கதில் சென்று அந்த ஆசைகளை அனுபவிக்கலாம் என்று நமது மதம் கூறுகிறது.

புண்ணியம் தீர்ந்தவுடன் மறுபடியும் மனிதனாக பிறக்க வேண்டும்.

நூற்றுக்கணக்கான சொர்க்கங்கள் உள்ளன.

சக்தி வாய்ந்த மகான்கள் தங்கள் தவ வலிமையால் சொர்க்கம் மற்றும் நரகத்தை தோற்றுவிக்கிறார்கள்.

இந்த சொர்க்கங்கள் காலத்தால் அழியும் தன்மை கொண்டது.

புராணங்களில் குறிப்பிடப்படும் பல்வேறு சொர்க்கங்கள் தற்போது இல்லை.

இது பற்றி விரிவாக தேவைப்படுபவர்கள் சந்தேகங்களைக் கேட்கலாம்.

..

முக்தி என்பதில் பல வகைகள் உள்ளன.

.

கைலாயம், வைகுண்டம்,சத்தியலேகம்,ரிஷிலோகம், போன்ற உயர்ந்த உலகங்களுக்கு செல்பவர்கள் உடனடியாக முக்தி அடைவதில்லை. அந்த உயர்ந்த லோகத்தில் பல லட்சம் ஆண்டுகள் அல்லது பல ஆயிரம் ஆண்டுகள் தவத்தில் மூழ்கியிருப்பார்கள். அல்லது சிவன்,விஷ்ணு போன்ற தெய்வங்களுக்கு சேவை செய்துகொண்டிருப்பார்கள்.

இதேபோல பல உயர்லோகங்கள் உண்டு.

சிலர் அங்கிருந்தபடியே படிப்படியாக முக்தி அடைவார்கள் அதற்கு கிரமமுக்தி என்று பெயர்.

சிலர் ஆண்டவன் ஆணையை ஏற்று பூமியில் மனிதனாகப்பிறந்து பக்தியை நிலைநாட்டிவிட்டு மறுபடியும் வந்த இடத்திற்கே திரும்பி செல்வார்கள். உதாரணமாக சுந்தரர் போன்றவர்கள்.இவர்களை ஈஸ்வரகோடிகள் என்று அழைப்பார்கள்.

சிவனை இஷ்ட தெய்வமாக வணங்கும் மக்களிலேயேகூட பல பிரிவுகள் உண்டு. 

அதேபோல விஷ்ணுவை தெய்வமாக வணங்கும் மக்களிலேயேகூட பல பிரிவினர் உண்டு.

இவர்கள் அனைவரும் ஒரே சொர்க்கத்திற்கு செல்வதில்லை.

உதாரணமாக சைதன்யரை குருவாக ஏற்கும் வைணவர்கள் செல்லும் இடமும், ராமானுஜரை குருவாக ஏற்கும் வைணவர்கள் செல்லும் இடமும் ஒரே இடமாக இருக்காது.

பூமியில் எப்படி பல நாடுகளும்,பல மாகாணங்களும் உள்ளனவோ அதேப்போல சொர்க்கத்திலும் நரகத்திலும் பல மகாணங்கள் உள்ளன.

எல்லோரும் ஒரே சொர்க்கத்திற்கு செல்கிறார்கள். எல்லோரும் ஒரே நரகத்திற்கு செல்கிறார்கள் என்று எண்ணுவதுதான் குழப்பத்திற்கு காணம்.

..

அன்னை சாரதாதேவி ஒரு விஷயத்தை கூறியிருக்கிறார். ஸ்ரீராமகிருஷ்ணரை இஷ்டதெய்வமாக வணங்கும் பக்தர்கள்,முக்தி அடைய விரும்பாதவர்களுக்காக ஸ்ரீராமகிருஷ்ணர் புரிய சொர்க்கத்தை உருவாக்கியிருக்கிறார். அதற்கு ஸ்ரீராமகிருஷ்ண லோகம் என்று பெயர்.ஸ்ரீராமகிருஷ்ணரின் தொண்டர்கள் அங்கே பல ஆண்டுகள் தவத்தில் ஈடுபட்டிருப்பார்கள் என்று கூறுகிறார்.

..

இவ்வாறு மகான்களால் புதிய சொர்க்கத்தை உருவாக்க முடியும்.

..

இவைகள் எல்லாம் நேரடியாக முக்தியைக் கொடுக்காது.

ஆனால் படிப்படியாக முக்தியைக்கொடுக்கும்.

மிகச்சிலரால் மட்டும்தான் இந்த இடங்களுக்குச் செல்ல முடியும்.

..

ரிஷிலோகம் என்று ஒரு இடம் இருக்கிறது. பல ரிஷிகள் அங்கே லட்சக்கணக்கான ஆண்டுகளாக மரபொம்மைகள்போல தவம் செய்துகொண்டிருக்கிறார்கள்.

தவம் செய்வதில் கிடைக்கும் பிரம்மானந்தத்தை அவர்கள் அனுபவித்துக்கொண்டிருப்பார்கள்.

..

நேரடி முக்தி என்பது இந்த உலகத்தில் வாழும்போதே அல்லது மரண தருவாயில் பரமாத்மாவுடன் இணைவது.

இதனால் எல்லையற்ற ஆனந்தம் கிடைக்கும்.

முக்தி அடைபவர்கள் மீண்டும் பிறப்பதில்லை.

முக்தி அடைபவர்கள் இறப்பதில்லை.அதை இறப்பு என்று கூறமுடியாது. அது என்னெற்றும் வாழும் நிலை.

கனவிலிருந்து விழிப்பதுபோல இந்த உலக வாழ்விலிருந்து விழிக்கிறோம்.

அப்படி விழக்கும்போது நாம் மட்டுமே இருப்போம். அப்போது நாம் கடவுளாக இருப்போம்.

மனிதனாக பிறந்ததோ,வாழ்ந்ததோ,கனவு கண்டதோ எந்த நினைவும் இருக்காது.

அது பரம ஆனந்த நிலை.

இந்த உலகத்தின் எதிர்காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதா?

 இந்த உலகத்தின் எதிர்காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதா?

-

சிலர் எதிர்காலத்தை கணித்து சொல்வதை பார்க்கிறோம்.சிலர் 500 ஆண்டுகளுக்கு முன்பே பலவற்றை கணித்திருக்கிறார்கள்.அதன்படிதான் நடக்கவும் செய்கிறது.எதிர்காலத்தில் நடப்பதை அவர்கள் எப்படி அறிந்துகொண்டார்கள்?

-

இந்த உலகம் தோன்றி பல கோடி ஆண்டுகள் ஆகிவிட்டன.ஒடுக்கம் அல்லது கல்பம் முடிய இன்னும் பலகோடி ஆண்டுகள் இருப்பதாக கூறுகிறார்கள்.உதாரணமாக நாம் இதை 10 கோடி ஆண்டுகள் என்று எடுத்துக்கொள்வோம்.ஏற்கனவே பாதி முடிந்துவிட்டது.கடந்த காலத்தில் நடந்த நிகழ்வுகள் எல்லாம் அப்படியே யாருக்கும் தெரியாமல் அழிந்துபோயிருக்குமா? 

-

பழைய காலத்தில் நிகழ்ந்தவை அனைத்தும் முற்றிலும் யாருக்கும் தெரியாமல் அழிந்துபோயிருந்தால் எப்படி ஒருவரால் 500 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை சொல்ல முடிகிறது. எப்படி ஒருவரால் 500 ஆண்டுகளுக்கு பின்பு நடக்க இருப்பதை சொல்ல முடிகிறது? 

-

எப்படியென்றால் இவைகள் பிரபஞ்சமனம் அல்லது மஹத் என்ற நினைவுகளில் இருக்கும்.இந்த கல்பத்தின் 10 கோடி ஆண்டுகள் ழுழுவதும் அந்த நினைவுகளில் இருக்கும்.அவைகளில் பாதியை நாம் கடந்திருக்கலாம்.மீதி என்ன நடக்க வேண்டும் என்பது அங்கே இருக்கும்.அதன்படி எதிர்காலத்தில் நடக்கும்

-

ஒரு உதாரணம் பார்ப்போம்...ஒன்றாம் வகுப்பு படிக்க சிலர் செல்வதாக வைத்துக்கொள்வோம்.அங்கு இதற்கு முந்தைய வருடம் எப்படி சொல்லிக்கொடுத்தார்களோ,அதேபோல் இந்த வருடமும் சொல்லிக்கொடுப்பார்கள்.அடுத்த வருடமும் அதேபோல்தான்.ஆனால் ஆனால் பாடம் படிக்க வரும் மாணவர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள்.பாடம் நடத்துபவர்கூட மாறலாம்.ஆனால் ஒன்றாம் வகுப்பு எப்படி நடக்கவேண்டும் என்று ஏற்கனவே நிச்சயிக்கப்ட்டுள்ளதோ அதேபோல்தான் எப்போதும் நடக்கும்.

-

அதேபோல் இந்த பிரபஞ்சத்தில் நடக்கும் நிகழ்வுகள் எல்லாமே ஏற்கனவே நிச்சயிக்கப்ட்டுள்ளன.அதில் வந்திருக்கும் ஆன்மாக்கள் மட்டும் வேறு.சம்பவங்கள் அதேதான்.இந்த 10 கோடி ஆண்டுகளில் நடக்கக்கூடிய சம்பவங்கள் அனைத்தும் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டவைதான்

-

-

நாம் மேலே குறிப்பிட்ட சம்பவங்கள் உண்மைதான்,கற்பனை கதையல்ல என்பது எப்படி தெரியும்? ஒரு மனிதன் யோகப்பாதையின் வழியாக சென்று முக்தியடையவேண்டுமானால் பிரபஞ்சத்தின் வாழ்க்கை முழுவதையும் ஒரே ஆயுளில் வாழ்ந்து முடிக்க வேண்டும்.ஏற்கனவே நடந்து முடிந்த 5 கோடி ஆண்டுகளையும்.இனி நடக்க இருக்கின்ற 5 கோடி ஆண்டுகள் வாழ்க்கையையும் அவன் இந்த ஒரே பிறவியில் வாழ்ந்து முடித்திருக்க வேண்டும்.இதன் மூலம் அவன் இவைகளைபற்றி தெரிந்துகொள்கிறான்.அவரது வாழ்க்கை அனுவத்தை அடிப்படையாக கொண்டே இந்த கருத்து உண்மை என்பதை நாம் அறிகிறோம்.

-

இவ்வாறு 10 கோடி ஆண்டுகள் வாழ்க்கையையும் முழுவதும் வாழ்ந்தபின்தான் இறைவனாகின்ற தகுதியை அந்த யோகி பெறுகிறான்.பிரபஞ்ச மனத்தை பற்றி தெரிந்தவனாகிறான்.அப்படிப்பட்டவன்தான் 500 ஆண்டுகளுக்கு பின்பு என்ன நடக்கும் 500 ஆண்டுகளுக்கு முன்பு என்ன நடந்தது என்பதை சொல்ல முடியும்.ஆனால் இந்த விபரங்களை அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டினால் அவனால் முக்திபெற முடியாது.உயரத்தை எட்டமுடியாது.எனவே சூட்சுமமாக சில குறிப்புகளை எழுதிவைத்துவிட்டு இறந்துபோகிறார்கள்.மற்றவர்கள் ஏதோ அதிலிருந்து சிலவற்றை தெரிந்துகொள்கிறார்கள்

-

இந்த கல்பத்தின் ஆயுள் 10 கோடி என்று ஒரு உதாரணத்திற்கு கூறினேன்.இந்த கல்பம் முடியும்போது.இந்த பிரபஞ்சம் ஒடுங்கிவிடும்.பிறகு அடுத்த கல்பம் துவங்கும் 10கோடி ஆண்டுகள் நடக்கும்.பின் அது ஒடுங்கும்.இப்படி லட்சக்கணக்கான முறை நடந்திருக்கிறது.இன்னும் லட்சக்கணக்கான முறை நிகழும்.இதற்கு ஒரு முடிவே இல்லை.

-

இப்போது நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த கல்பம் என்பது ஏற்கனவே லட்சக்கணக்கான கல்பங்களுக்கு முன்பு இருந்த ஒரு கல்பத்தின் மறுஉருவாக்கம்தான். இப்போது நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் முன்பு உள்ள சில கல்பத்தில் ஏற்கனவே நடந்ததுதான்.ஆனால் இதில் பயணம்செய்யும் ஆன்மாக்கள்தான் வேறுபடுகின்றன.

-

ஒரு ராட்டினம் இருக்கிறது.அதில் பல தொட்டில்கள் இருக்கின்றன.அது எப்படி சுழலவேண்டும் என்பதும் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அதில் பயணம் செய்பவர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள்.தொட்டில்கள் மாறாது.உடல் என்பது தொடடில். உங்கள் உடம்பும் என் உடம்பும் ஒரு தொட்டில்.தொட்டில் மாறாது பயணிப்பவர்கள் மாறுகிறார்கள்.உங்களது உடலும் எனது உடலும் புதிதாக இப்போது படைக்கப்பட்டதல்ல. இதேபோன்ற உடல் ஏற்னகவே பலமுறை இந்த உலகத்தில் பிறந்துள்ளது.ஆனால் அந்த உடலுக்குள்ளே பயணம் செய்த ஆன்மாக்கள்வேறு

-

இந்த உலகத்தின் கடந்த காலம் எதிர்காலம் அனைத்தையும் அறிந்தவர் யார்?இந்த உலகத்தின் பதிவுகள் அனைத்தும் ஒரு பெரிய ஹார்ட் டிஸ்க்-ல் ஏற்கனவே பதியப்பட்டுள்ளது.அதற்கு பிரபஞ்சமனம் அல்லது மஹத் என்று பெயர்.. அந்த ஹார்ட்டிஸ்க்-ல் என்ன நடக்க வேண்டும் என்பது ஏற்கனவே புரோகிராம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி எல்லாம் நடந்துகொண்டிருக்கிறது.இவை அனைத்தையும் அறிய வேண்டிய அவசியம் இல்லை.ஒருவன் அவ்வாறு அதை அறிவதில் ஆர்வம்காட்டினால் .அதுவே அவனுக்கு ஒரு தடையாகமாறிவிடும்.ஆன்மீகத்தில் முன்னேற முடியாது.

இப்போது நடக்கும் கம்பியூட்டர் உலகம் பற்றியெல்லாம் ஏற்கனவே பிரபஞ்ச மனத்தில் பதியப்பட்டிருக்குமா? இதற்கு முன்பு வாழ்ந்த மகான்கள் யாரும் அதைப்பற்றி எதுமே சொல்லவில்லையே!

..

மகான்கள் எதிர்காலத்தில் நிகழப்போகும் நிகழ்வுகளை அறிந்துகொள்ள ஆர்வம் காட்டமாட்டார்கள்.அதை அவர்கள் அறிந்து கூறினால் அது பிரபஞ்ச ரகசியத்தை மீறும் செயலாகிவிடும்.

அதனால்,அவர்கள் உயர்ந்த நிலையிலிருந்து,தாழ்வு நிலையை அடையக்கூடும்.பின்னர் எதிர்காலத்தை அறியும் ஆற்றல் அவர்களைவிட்டு அகன்றுவிடும்.

..

ஸ்ரீராமகிருஷ்ணர் தன் சீடர்களுக்கு சில ரகசியங்களைக்கூற முற்படுவார். அப்போது அவரது வாயை யாரோ அடைப்பதுபோல இருக்கும். அவர் அழுதுகொண்டே சீடர்களிடம் கூறுவார். இதோ பாருங்கள் நான் எல்லா ரகசியங்களையும் உங்களிடம் சொல்ல விரும்புகிறேன்.ஆனால் யாரோ என் வாயை அடைப்பதுபோல உள்ளது. ரகசியங்களை வெளியில் சொல்ல தேவி அனுமதிக்கவில்லை. நான் என்ன செய்யட்டும் என்று சீடர்களிடம் கூறுவார்கள்.

..

பிரபஞ்ச ரகசியங்கள் ரகசியங்களாகவே இருக்கின்றன. அதை அறிபவர் அதை ரகசியமாகவே வைத்திருக்க வேண்டும்.

-

பிரபஞ்ச ரகசியங்களை மனிதர்கள் அறிந்துகொண்டால் பிறகு அவர்கள் செயல்புரிய மாட்டார்கள். வாழவே ஆசைப்பட மாட்டார்கள்.பிறகு படைப்பு என்பது எப்படி நிகழும்? மனிதர்கள் எதுவரை அறிவற்றவர்களாகவே இருக்கிறார்களோ அதுவரைதான் படைப்பு நிகழும்.

..

மகான்கள் சில ரகசியத்தை சொன்னால்கூட மக்கள் அதை நம்பமாட்டார்கள்.அப்படி மக்களின் மனத்தை மாயை சூழ்ந்துள்ளது.

.

இப்போது ஒரு முக்கியமான ரகசியத்தைப் பார்ப்போம். இந்த உலகம் என்பது உண்மையில் நாம் நினைப்பதுபோல இல்லை.இந்த உலக வாழ்வில் நிகழும் அனைத்தும் மஹத் என்ற பிரபஞ்ச மனத்தின் கற்பனைகள்தான்.நாம் உண்மையில் உடலும் அல்ல மனமும் அல்ல. இந்த உடலாகவும் மனமாகவும் இருப்பதாக நினைப்தே மிகப்பெரிய கற்பனை.

நமக்கு ஒரு உடல் இருப்பதாகவும்,நாம் பல செயல்களை செய்வதாகவும் கனவு கண்டுகொண்டிருக்கிறோம் என்று ஒரு உண்மையை மகான் சொன்னால் எத்தனைபேர் நம்புவார்கள்? அப்படி உண்மையிலேயே நம்புபவர்களின் வாழ்க்கை என்னவாகும்? உண்மையில் இதை நம்பினால் அவர்கள் வாழ்க்கை முடிந்துபோகும். மாயை அவர்களை விட்டு அகன்றுவிடும்.அவர்கள் விழிப்படைந்துவிடுவார்கள்.

..

ஆனால் இந்த ரகசியத்தை யாரும் நம்பிவிடக்கூடாது என்பதற்காக மாயை மனிதனை அஞ்ஞானத்தில் ஆழ்த்தி வைத்துள்ளது.

சில உயர்ந்த உண்மைகளை நாம் கூறும்போது சிலரால் அதை தாங்கிக்கொள்ளவே முடிவதில்லை. நமது குழுவைவிட்டு உடனே வெளியேறிவிடுகிறார்கள்.இது தான் மாயையின் வேலை.

..

ஒருமுறை நமது குழுவில் உள்ள ஒருவர் ஒரு மெசேஜ் அனுப்பியிருந்தார். உங்கள் குழுவைவிட்டு உடனே வெளியேறுகிறேன். உங்கள் குழுவில் இனிமேலும் இருந்தால் இந்த உலக வாழ்வில் என்னால் வாழ முடியாது.

.

ஞானம் பெற மனிதர்கள் விரும்பமாட்டார்கள். இயற்கை அல்லது மாயை மனிதன் ஞானம் பெற அவ்வளவு எளிதில் அனுமதிக்காது. 

-

சுவாமி வித்யானந்தர்(23-5-2018)

சாப்பிட்டு முடித்தபிறகு அவ்வப்போது சூடான நீர் சிறிது குடியுங்கள்.

சாப்பிட்டு முடித்தபிறகு அவ்வப்போது சூடான நீர் சிறிது குடியுங்கள்.எத்தனை முறை குடிக்கலாம்? காலையில் சாப்பிடுவதற்கு முன்பு கால் டம்ளர். சாப்பிட்டு அரை மணிநேரம் கழித்து கால் டம்ளர். அடுத்த அரை மணிநேரம் களித்து அரை டம்ளர். மதியம் இதேபோல சாப்பிட்ட பிறகு இரண்டு தடவை. இரவு சாப்பிட்ட பிறகு இரண்டு தடவை. இதனால் இரத்தத்தின் வேகம் அதிகரிக்கும். இரத்தத்தில் உள்ள,கொழுப்பு மற்றும் உப்பு கரையும்.இரத்தம் சுத்தமாகும்.ஜீரண சக்தி அதிகரிக்கும். எப்போதுமே சூடாகத்தான் குடிக்க வேண்டுமா? இல்லை. இரண்டுமுறை சூடான நீர் குடித்தபிறகு சிறிது இடைவெளி விட்டு தேவைக்கு ஏற்றாற்போல தண்ணீர் குடிக்கலாம்.  உடல் உழைப்பு குறைவாகவும், மனஉழைப்பு அதிகமாகவும்,அதிக நேரம் ஏ.சி யில் உள்ளவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். அதிக உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு இது பொருந்தாது.

..

நான் பல வருடங்களாக இதை பின்பற்றி வருகிறேன்.(சுவாமி வித்யானந்தர்

இந்த பதில் கண்டிப்பாக உங்களின் பல சந்தேகங்களைத் தீர்க்கும்.

 

இந்த பதில் கண்டிப்பாக உங்களின் பல சந்தேகங்களைத் தீர்க்கும்.

..

ஒருநாள் தட்சிணேசுவரத்தில் சுவாமி நிரஞ்ஜனானந்தருடன் நானும்(சுவாமி சாரதானந்தர்)மனிதனுக்குச்

 சுயேச்சை சிறிதளவாவது உள்ளதா இல்லையா அனைத்தும் ஏற்கனவே திட்டமிட்டபடிதான் நடக்கிறதா என்பது குறித்து நீண்ட விவாதத்தில் ஈடுபட்டிருந்தோம். வெகுநேரத்திற்குப் பிறகும் பிரச்சினைக்கு ஒரு சரியான

தீர்வு கிட்டாததால் நேராக குருதேவரிடம் (ஸ்ரீராமகிருஷ்ணர்) சென்றோம். குருதேவர் எங்கள்

விவாதத்தைக் குறும்புடன் கேட்டார். பின்னர் கம்பீரமாக, ‘யாருக்காவது சுயேச்சை

என்றெல்லாம் ஒன்று இருக்கிறதா என்ன? கடவுளின் விருப்பத்தால் மட்டுமே

உலகில் அனைத்தும் நடக்கின்றன, இனிமேலும் நடக்கும். நாளாக நாளாகத்தான்

மனிதன் இதைப் புரிந்து கொள்கிறான்.

 

பசு ஒன்று நீளமான கயிற்றால் ஒரு

கம்பத்தில் கட்டப்பட்டுள்ளது என்று வைத்துக் கொள்வோம். அந்தப் பசுவால்

கயிறு எவ்வளவு நீளமோ அவ்வளவு தூரம் போகவும் இயலும்.

ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் பசு தன் விருப்பம்போலப் படுத்துக் கொள்ளட்டும்,

நிற்கட்டும் அல்லது நடக்கட்டும் என்ற எண்ணத்தோடு மனிதன் நீளமான கயிற்றில் அதைக் கம்பத்தில்

கட்டுகிறான்.

கயிற்றின் நீளம் எவ்வளவோ அந்த அளவு நீளத்திற்கு அதனால் சுதந்திரமாக செயல்பட முடியும்.ஆனால் கயிற்றின் நீளத்தை தாண்டி இருக்கும் இடங்களுக்குப்போக முடியாது. அங்கே உள்ள புல்லை  தின்ன முடியாது.

..

கடவுளும் மனிதனுக்கு ஓரளவு சக்தியை அளித்து அந்த எல்லைக்குள்

அவன் விருப்பப்படிச் செயல்படட்டும் என்று விட்டுவிடுகிறார். அதனால்தான் மனிதன்

தன்னால் சுயேச்சையுடன் செயல்பட முடியும் என்று எண்ணுகிறான். ஆனால் கயிறு

கம்பத்தில் கட்டப்பட்டுள்ளதை மறந்துவிடக் கூடாது. ஒரு எல்லைக்குள் மட்டுமே அவனால் சுதந்திரமாக செயல்பட முடியும்.முழு சுதந்திரம் அவனுக்கு இல்லை. ஒருவன் கடவுளிடம் மனமுருகி,

ஏங்கி பிரார்த்தனை செய்தால் அவரால் கட்டைத் தளர்த்த முடியும்; கயிற்றின்

நீளத்தை அதிகப்படுத்த முடியும்; விரும்பினால் கயிற்றை ஒரேயடியாக அவிழ்த்து

விடவும் முடியும்என்று குருதேவர் சொன்னார்.

..

இதைக் கேட்ட நாங்கள், ‘அப்படியானால் ஆன்மீக சாதனைகள் பழகுவதில் கூட

சுய முயற்சிக்கு இடம் இல்லையா? எல்லாம் இறைவன் திருவுளப்படி என்றால்

இறைவன் விருப்பப்படித்தான் நான் எல்லாம் செய்கிறேன்என்று ஒவ்வொருவரும்

சொல்லக் கூடுமே?’ என்று வினவினோம்.

 

அதற்கு குருதேவர் கூறினார்: ‘சாதனை புரிவது சுய முயற்சியால் மட்டுமே

நிகழ்வதானால் எல்லோரும் அதைச் செய்திருக்கலாமே? ஆனால் எல்லோராலும்

முடிவதில்லை, ஏன்? அதன் பொருள் என்ன தெரியுமா? இறைவன் உனக்குக்

கொடுத்துள்ள சக்தின் காரணமாக உன்னால் அதை செய்ய முடிகிறது. சிலருக்கு அந்த சக்தி கொடுக்கப்படவில்லை அதனால் அவர்களால் சாதனை செய்ய முடியவில்லை. மேலும் உனக்கு தந்துள்ள சக்தியைச் சரிவரப் பயன்படுத்தாவிடில் மேலும் சக்தியை அவர்

தரமாட்டார். இதனால்தான் முயற்சியும் தளராமையும் இன்றியமையாதவை.

இறைவனின் அருளைப் பெறுகின்ற தகுதி அடைய யாராக இருந்தாலும் ஓரளவாவது

முயற்சி செய்தே தீர வேண்டும். முயற்சிகளில் ஈடுபட்டால், அவர் அருளால்,

பத்துப் பிறவிகளில் அனுபவிக்க வேண்டியவை அனைத்தும் ஒரே பிறவியில்

அனுபவிக்கப்பட்டு வினைப்பயன்கள் தீர்ந்து விடுகின்றன.

எல்லாம் இறைவன் விருப்பபடி நடக்கின்றன என்று நினைத்துக்கொண்டு எந்தவித சுயமுயற்சியும் செய்யாதவர்கள் இருந்த இடத்திலேயே இருப்பார்கள். முன்னேற மாட்டார்கள். இறைவன் அவர்களை கட்டுகளிலிருந்து விடுவிக்க மாட்டார் என்று கூறினார்

..

 

 சுயமுயற்சிதான் எல்லாவற்றிற்கும் காரணம் என்றால் இறைவனிடம் நம்பிக்கை வைப்பதால் என்ன பயன்? என்று கேட்டோம்.

ஒரு கதையைக் கேளுங்கள் என்றுகூறி இதை எங்களுக்கு விளக்கினார்.

.

வைகுண்டத்தில் மகாவிஷ்ணு வீற்றிருந்தார். அங்கே நாரதர் வந்தார்.நாரதர் செய்த சிறு பிழைக்காக நரகத்திற்குச்

செல்லுமாறு சாபமிட்டுவிட்டார் விஷ்ணு. அதனால் மிகவும் கவலை கொண்ட நாரதர்,

விஷ்ணுவைப் பலவாறு புகழ்ந்து தோத்திரங்கள் பாடி மகிழ்வித்து அவரிடம்,

எம்பெருமானே, நரகம் எங்கே இருக்கிறது? அது எப்படி இருக்கும்? எத்தனை

வகையான நரகங்கள் உள்ளன? தயைகூர்ந்து எனக்குக் கூறுங்கள்என்று கேட்டார்.

மகாவிஷ்ணு ஒரு  தரையின் மீது சுவர்க்கம், நரகம்,

பூமி ஆகியவற்றை வரைந்து நாரதரிடம் காட்டி, ‘நாரதா, இதோ, இது சொர்க்கம்,

 இது நரகம்என்றெல்லாம் விளக்கினார். உடனே நாரதர், ‘அப்படியா? இதோ நான்

 நரகத்திற்குச் செல்கிறேன்என்று சொல்லிக் கொண்டே, தரையில் வரையப்பட்டிருந்த

 நரகப்பகுதியின் மேல் விழுந்து, புரண்டு எழுந்து நின்று மகாவிஷ்ணுவை

வணங்கினார். இதைப் பார்த்த மகாவிஷ்ணு புன்னகை புரிந்தவாறே, ‘என்ன இது?

இது எப்படி நரகத்திற்குச் செல்வது ஆக முடியும்?’ என்று கேட்டார். அதற்கு நாரதர்,

ஏன் சுவாமி? சுவர்க்கமும் நரகமும் தங்கள் படைப்பு அல்லவா? நீங்கள் இங்கு

தரையில் வரைந்து அதற்கு நரகம் என்று பெயரிட்டால் அது உண்மையிலேயே நரகமாகி

விடுகிறது. அதன் மேல் நான் விழுந்து புரண்டதில் நான் நரகவேதனையை

அனுபவித்தவனும் ஆகிவிட்டேன்என்றார்.

.

நாரதர் விஷ்ணுவை ஏமாற்றவில்லை. உண்மையிலேயே அதை நரகம் என்று நம்பி அதில் விழுந்து புரண்டார்.திட நம்பிக்கையுடன் இவ்வாறு செய்தார். நாரதரின் திடநம்பிக்கையை கண்டு மகிழ்ந்த விஷ்ணுவும்

அப்படியே ஆகட்டும்நீ நரக துன்பத்தை அனுபவித்து முடித்துவிட்டாய் என்று கூறிவிட்டார். ஆனால்

தரையில் வரையப்பட்டிருந்த நரகம் என்ற படத்தின் மீது நாரதர் உண்மையான

 நம்பிக்கையோடு விழுந்து புரள வேண்டியிருந்தது. நாரதர் நம்பிக்கையுடன் செய்த

சிறு முயற்சியால் அவர் அனுபவிக்க வேண்டிய நரகவேதனை அத்துடன் தீர்ந்தது.

.

கடவுளின் கருணையில் கூட தனிப்பட்ட மனிதனின் முயற்சிக்கும் தளராமைக்கும்

இடம் உண்டு என்ற கருத்தை குருதேவர் இந்தக் கதையின் மூலம் எங்களுக்கு

விளக்கினார்.

.

குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர் வாழ்க்கை வரலாறு புத்தகத்திலிருந்து...

 

தூக்கமும் மரணமும்

  தூக்கமும் மரணமும் .. இன்று இரவு நாம் தூங்க செல்கிறோம்.இதோடு நம் வாழ்க்கை முடிந்தது.இனி நாளை காலை நாம் கண்விழிக்க மாட்டோம். தூக்கத்திலே...