ஆவி உலகம்-தொடர்-பாகம்-8
..
ஆவி அடிக்குமா? ஆவி அடித்து சாகிறார்களா? பொருட்களை
ஆவியால் தூக்க முடியுமா?
..
நான் சிறுவயதாக இருக்கும்போது எங்கள் ஊரில் ஒரு பெண்ணை இரவில் ஆவி அடித்துகொன்றுவிட்டதாக பேசினார்கள். முதுகில் பெரிய கைத்தடம் இருந்ததாக பேசிக்கொண்டார்கள்.மனிதனுடைய கையைவிட பெரிய கைத்தடம்.
ஆவி மருத்துவர் ஒரு பெண்ணின் முற்பிறவிகளைப்பற்றி விசாரித்துக்கொண்டிருக்கும்போது. முற்பிறவியில் ஒரு சர்ச்சிக்குள் இரவு நேரத்தில் ஒரு ஆவி அடித்து அவள் இறந்துவிட்டதாக கூறியிருந்தாள்.அந்த வீடியோ கிளிப் இன்னும் என்னிடம் உள்ளது.
..
ஆவி சூட்டசும உடலோடு கூடியது அப்படி இருக்கும்போது தூவஉடலில் உள்ள மனிதனை எப்படி அடிக்க முடியும்?
..
குறிசொல்பவர் ஒருவர் ஒரு ஆவியின் உதவியால் எலுமிச்சம் பழம் ஒன்றை நீண்ட தூரத்திற்கு உருட்டிசெல்வதை நான் பார்த்திருக்கிறேன். பெரிய முக்கோணம் ஒன்றை தரையில் வரைந்தார் அந்த எலுமிச்சம் பழம் பெதுவாக அந்த முக்கோணத்தின்மேல் உருண்டு சென்றது. அந்த எலுமிச்சம்பழம் அவர் கொண்டு வந்தது அல்ல. எங்களிடம் வாங்கியது.
குட்டிசாத்தான்தான் இதை செய்தது என்று அவர் கூறினார். அது உண்மைதான் ஏனென்றால் வேறு எந்த வகையிலும் அதை அப்படி உருட்டி விளையாட்டு காட்ட முடியாது.
ஆவியை வைத்து மக்களை மிரட்டி பணம் சம்பாதிப்பதுதான் அவரது நோக்கம். அவர் விரும்பியபடியே மக்கள் பயந்து அவர் கேட்ட காணிக்கைகளை கொடுத்தார்கள்.
..
ஆவிகளால் பொருட்களை தூக்க முடியும் என்பதை பல இடங்களில் கேள்விப்பட்டிருக்கிறேன். சுவாமி விவேகானந்தர்மீது ஒரு ஆவி மணலை வாரி எறிந்தது. ஸ்ரீராமகிருஷ்ணர் வாழ்வில் ஆவி ஒன்று பெரிய மரக்கிளையை முறித்த சம்பவம் ஒன்று உண்டு.
..
மனிதனுக்கு தூலஉடல்,சூட்சுமஉடல் என்று இரண்டு உடல்கள் உள்ளன. அதற்கு பின்னால் ஆன்மா உள்ளது.
ஆவி களுக்கு சூட்சும உடலும் அதற்கு பின்னால் ஆன்மாவும் உள்ளது. ஆன்மா பற்றிய தத்துவம் தனி.
.
இரவு நேரத்தில் மனிதர்களுக்கு இயல்பாகவே பயம் இருக்கும். பகல் நேரத்தில் நல்ல தைரியம் இருக்கும்.
பகல்நேரம் மனிதர்களுக்கு என்றும் விடியற்காலையும் மாலையும் தேவர்களுக்கு உரிய நேரம் என்றும் நடுஇரவு பேய்பிசாசுகளுக்கு உரிய நேரம் என்றும் சாஸ்திரம் சொல்கிறது.
..
எனவேதான் முற்காலத்தில் நடு இரவு நேரத்தில் தனியாக வெளியே போகக்கூடாது என்று சொல்வார்கள்.
சூட்சும உடலில்தான் மனம் இயங்குகிறது. இரவு நேரத்தில் தனியாக வெளியே செல்லும்போது நமது மனம் இயல்பாகவே பயம்கொள்கிறது. உடல் எவ்வளவு வலிமையாக இருந்தாலும், மனம் முக்கியம்.
ஆவிகளுக்கு இரவு தைரியமான நேரம்.அதனால் பலவீனமான மனிதனை அவர்களால் தாக்க முடியும்.
மனிதனது சூட்சு உடலை அது தாக்குகிறது. தூல உடலிலும் அது பிரதிபலிக்கிறது.
நமது கண்ணுக்குத்தெரியும் மரம் தூலஉடல்,அதற்குப்பின்னால் மரத்திற்கு சூட்சும உடலும் இருக்கிறது.
ஆவிகள் சூட்சும உடலில் இருக்கும் கிளையை உடைக்கிறது. அதனால் தூலஉடலில் உள்ள கிளை உடைந்துவிழுகிறது.
..
சூட்சும உடலுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அது தூலஉடலையும் பாதிக்கும். தூலஉடலில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அது சூட்சும உடலையும் பாதிக்கும்.
எனவே ஆவியின் கண்களுக்கு தூலப்பொருட்கள் தெரியாது.
எலுமிச்சம் பழம் நமக்கு தெரிவதுபோல் அதற்குத்தெரியாது. ஆனால் எலுமிச்சம் பழத்தின் கூட்சுமஉருவம் அதற்குத்தெரியும். சூட்சும உருவத்தை அது உருட்டுகிறது. அதனுடன் சேர்ந்து தூல உருவம் உருள்கிறது.
..
இவ்வளவு பெரிய கோவிலை மனிதர்கள் எப்படி கட்டினார்கள் என்று நான் சிறுவனாக இருந்தபோது தாத்தாவிடம் கேட்பேன். பூதங்கள்தான் இவைகளை கட்டின என்று அவர் பதில் சொல்வார்.
முன்பெல்லாம் அதை நான் நம்புவதில்லை. ஆனால் தற்போது அதை நம்புகிறேன்.
பூதங்களை கட்டுப்படுத்தி அதை தங்கள் பணிகளுக்கு பயன்படுத்திக்கொள்வர்கள் முற்காலத்தில் இருந்திருக்கிறார்கள்.
மிகப்பெரிய பொருட்களை எளிதாக பூதங்களால் தூக்க முடியும் என்பதற்கு ஒரு உதாரணம் கூறுகிறேன்.
..
நான் சிறுவயதாக இருக்கும்போது நான் பார்த்த சம்பவம் இது
ஒருவர்மீது பேய்பிடித்திருப்பதாக கூறினார்கள்.
பேய் ஓட்டுபவர் வந்து அவரை சிறு கம்பு வைத்து அடித்துக்கொண்டிருந்தார்.
அவர்மீது ஒருபேய் அல்ல மூன்று பேய்கள் பிடித்திருந்தது.
அவர் கம்பு வைத்து அந்த நபரை அடித்து அடித்து நீ யார்? உனக்கு என்ன வேண்டும் என்று கேட்பார்.
அப்போது அந்த ஆவி இதற்கு முன்பு அந்த ஊரில் அகால மரணமடைந்த தனது பெயரைக் கூறும்.
மூன்று ஆவிகள் இதேபோல வேறுவேறு விதங்களில் பதில் சொல்லும்.
ஆவி ஓட்டுபவர் குச்சியால் அந்த நபரை அடிக்கும்போது வலியால் இந்த ஆவிகள் அழும்.
இவரது உடலைவிட்டு வெளியே போ வெளியே போ என்று மீண்டும்மீண்டும் அடிப்பார். ஆனால் அவைகள் போகிறேன் போகிறேன் என்று சொல்லும் ஆனால் போகாது.
கடைசியாக ஒரு பெரிய உரல் ஒன்று இருந்தது. அதை தலைக்கு மேலே தூக்கு என்று அவரை அடித்தார்.
முதலில் முடியாது,முடியாது என்று கூறிய ஆவிகள் கடைசியல் அந்த உரலை அந்த மனிதரின் தலைக்கு மேலே தூக்கின. பிறகு உடலை கீழே போட்டுவிட்டு அவரது உடலை விட்டு ஓடிவிட்டன.
..
அந்த உரலை யாராலும் தலைக்குமேலே தூக்க முடியாது. நம்மால் அதை உருட்டிதான் கொண்டு செல்ல முடியும்.
அதிக பட்சமாக முழங்கால்வரை தூக்கலாம்,அல்லது இடுப்புவரை தூக்கலாம். ஆனால் பேய்பிடித்தவர் தலைக்குமேலே தூக்கினார்.
.
இரவு நேரங்களில் ஆவிகளுக்கு மனிதர்களைவிட பலம் அதிகம் உள்ளது. எனவே பொருட்களை ஆவிகளால் தூக்க முடியும் என்பது தெரிகிறது.
..
பேய் பிடித்திருந்தால் அதை ஓட்டுவதற்கான வழி, மனத்தை தைரியமாக்குவதுதான். யாருக்கு பலவீனமான மனம் இருக்கிறதோ அவர்களைத்தான் பேய் பிடிக்கும்.
..
நான் மடத்தைவிட்டு வெளியே வந்த பிறகு 5 ஆண்டுகள் கேபிள்டிவியில் எடிட்டிங் வேலை பார்த்துவந்தேன். பல இடங்களில் பயியாற்றினேன்.இரவு வேளைகளில்தான் எனக்கு வேலை. 5 ஆண்டுகளும் தனியாகவே இரவு வேளைகளில் இருந்திருக்கிறேன். ஒரு இடத்தில் வேலை பார்க்கும்போது நடந்த சம்பவம் இது.
..
ஒரு பெரிய வீடு அந்த வீட்டின் கீழ்தளத்தில் சில அலுவலகங்கள் இருந்தன.இரவில் அவைகள் மூடிவிடும்.
மேல் மாடியில் மூன்று அறைகள் இருந்தன.இரண்டு அறைகள் நான் பணியாற்றிய டிவி.அலுவலகம். இன்னொரு அறை வேறொரு டிவி சேனலுக்கு உரியது.
பொதுவாக இரவு 8 மணி ஆனால் எல்லோரும் போய்விடுவார்கள். நான் இரவு 2 மணிவரை வேலைபார்த்துவிட்டு. பிறகு படுத்துக்கொள்வேன். காலை 8 மணிக்கு இன்னொருவர் வந்ததும் வீட்டிற்கு வந்துவிடுவேன்.
..
பொதுவாக இரவில் வெளியில்தான் படுப்பது வழக்கம்.
எங்கள் அறைக்கு பக்கத்தில் இருந்த அறைக்கு வெளியே நான் படுத்துக்கொள்வேன்.
அந்த அறையில் பகலில் ஆட்கள் இருப்பார்கள்.இரவில் இருக்கமாட்டார்கள்.
பல மாதங்கள் இவ்வாறு தொடர்ந்தது. ஒவ்வாரு நாளும் இரவு நன்றாக தூக்கம் வந்ததா என்று கேட்பார்கள்.
நானும் ஆமாம் என்பேன்.எதற்காக இப்படி கேட்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது.
இவ்வாறு பல மாதங்களுக்குப்பிறகு ஒரு நாள் இரவில் மூன்றாவது ரூமில் ஒருவர் படுத்திருந்தார்.
அவருக்கு முன்பாக வெளியே நான் படுத்திருந்தேன்.
இரவு 3 மணியிருக்கும் திடீரென்று கதலை திறந்து கொண்டு அவர் வெளியே ஓடினார். எனக்கு ஒன்றும் புரியவில்லை.
எங்கே போகிறீர்கள் என்று கேட்டேன். அது ஒன்றுமில்லை. நீங்கள் படுத்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.
அடுத்த நாள்தான் எனக்கு விஷயம் தெரிந்தது. அந்த ரூமில் ஒரு பெண் தற்கொலைசெய்து இறந்திருக்கிறாள்.
அதனால்தான் அந்த வீட்டில் இருந்தவர்கள் வீட்டை பல்வேறு அலுவலகத்திற்கு வாடகைக்கு விட்டுவிட்டு சென்றுவிட்டார்கள்.
அன்று இரவு என்ன நடந்தது என்றால் அவர் கட்டிலின்மேல் படுத்திருந்தாராம் அவரை தூக்கி தரையில் வீசியதாம் அந்த ஆவி. இப்படி இதற்கு முன்பே அங்கு நடந்திருக்கிறது.அதனால்தான் அந்த யாரும் இரவில் தங்குவதில்லை.குறிப்பாக அந்த ரூமிற்குள் செல்லவே பயப்படுவார்கள்.
..
நான் கிட்டதட்ட ஒருவருடம் அந்த ரூமிற்கு முன்னால் படுத்துதூங்கியிருக்கிறேன்.
இரவு தனியாக அங்கே நடந்திருக்கிறேன்.
என்னை அந்த ஆவி ஒன்றும் செய்யவில்லை. எந்த தொந்தரவும் கொடுக்கவில்லை.
இரவில் எனக்கும் பயம் உண்டு. ஆனால் நான் எப்போதும் அன்னை சாரதாதேவியின் டாலர் ஒன்றை பாக்கெட்டில் வைத்திருப்பேன்.
இரவில் படுக்கும்போது அந்த டாலரை பக்கத்தில் வைத்திருப்பேன். தூக்கம்வரும்வரை இரவு ஜெபம் செய்துகொ்ண்டே இருப்பேன். ஏற்கனவே இரவில் அதிகநேரம் வேலை செய்ததால் நல்ல தூக்க கலக்கம் வேறு இருக்கும்.
ஒருபக்கம் தனியாக இருப்பதில் பயம் இருந்தாலும்,அந்த பயமே எனக்கு பக்திஉணர்வை தூண்டிவிடும். அன்னையின் அருகில் இருப்பதுபோன்ற உணர்வை ஏற்படுத்திவிடும். எவ்வளவுக்கு எவ்வளவு பயம் ஏற்படுகிறதோ அந்த அளவுக்கு அதிகமாக அன்னை என் அருகில் இருக்கிறார் என்ற உணர்வும் ஏற்படும்.இதுதான் எனது மனதைரியத்திற்கு காரணம்.
..
அதன்பிறகு அந்த இடத்தில் நான் அதிக நாட்கள் வேலை செய்யவில்லை. வெளியில் தூங்கவும் இல்லை.
..
பயந்த மனம்கொண்டவர்களைத்தான் ஆவிகளால் பயமுறுத்த முடியும்.
நான் இறைவனின் தொண்டன்,அல்லது நான் இறைவனின் பக்தன் என்னை எந்த ஆவியாலும் எதுவும் செய்ய முடியாது என்ற மனவுறுதி வேண்டும். இஷ்டதெய்வத்திடமோ, குருவிடமோ நெருக்கமான உறவை வைத்துக்கொள்ள வேண்டும்.
பயம் தோன்றும்போது, இன்னும் இன்னும் இறைவனின் அருகில் நான் இருக்கிறேன் என்ற உணர்வை கொண்டுவாருங்கள்.அப்போது எந்த ஆவிகளாலும் எதுவும் செய்ய முடியாது.
..
நடுஇரவு நேரத்தில் யாரும் இல்லாத சுடுகாட்டில் பிணங்கள் எரிந்துகொண்டிருக்கும்போது,தனியாக அதன் அருகே அமர்ந்து ஸ்ரீராமகிருஷ்ணர் தியானம் செய்வார். தேவி எப்போதும் என்னுடன் உள்ளாள் என்ற உணர்வுதான் அவரை அவ்வாறு செய்ய வைத்தது.
சுடுகாட்டில் தியானம் செய்தால் உலகிலுள்ள பற்றுகள் விரைவில் மறைந்துவிடும். இறைக்காட்சி விரைவில் கிடைக்கும் என்று சாஸ்திரம் சொல்கிறது. ஆனால் இது மிகவும் ஆபத்தான வேலை. கொஞ்சம் தவறினாலும் உயிர்போய்விடும்.
..
தொடரும்...
..
இன்னும் நீங்கள் கேட்ட பல கேள்விகளுக்கு பதில் சொல்லவில்லை.
அடுத்துவரும் பதிவுகளில் பதில் சொல்கிறேன்.
உங்கள் கேள்விகளை +919360209541 வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பவும்,
டைப்செய்து அனுப்பலாம் அல்லது குரல் பதிவில் அனுப்பலாம்.
..
சுவாமி வித்யானந்தா-KANYAKUMARI (16-4-2025)
No comments:
Post a Comment