ஆவி
உலகம்-தொடர்-பாகம்-3
..
ஆவிகள் சாபம் கொடுக்குமா,ஆசீர்வாதம் கொடுக்குமா? இந்த உலகத்திலே
சுற்றுமா, உடலை எரித்தால் ஆவிகள் வராது என்பது உண்மையா? அகால மரணத்தில் இறப்பவர்கள்தான்
ஆவிகளாக வருவார்களா? சிலர் ஒரு வருடம் நம்மைசுற்றி வாழ்வார்கள் பிறகு நம்மை விட்டு
வெளியேறி விடுவார்களா?
இறைநாமத்தை சொல்லிக்கொண்டே இரவில் செல்பர்களை ஆவிகள் தொந்தரவு
செய்யுமா? சும்மா இருப்பவர்களை ஆவிகள் தொந்தரவு செய்யுமா?
..
இப்படி பல கேள்விகள்.
இதுபோன்று இன்னும் பல கேள்விகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.
கேள்விகள் பிறக்க பிறக்க அதற்கான தேடல்கள் உருவாகும்.
..
எண்பது வயதான ஒருவர் இறக்கும் தருவாயில் என்ன நடக்கிறது
என்பதை பார்ப்போம்.
இரண்டு நபர்களை உதாரணமாக எடுத்துக்கொள்வோம்.
ஒருவர் எப்போதும் இறைசிந்தனையுடனே வாழக்கூடிய ஆன்மீக மனிதர்.
இன்னொருவர் எப்போதும் உலகியல் சிந்தனையுடன் வாழக்கூடிய
சாதாரண மனிதர்
இரண்டுபேருக்கும் என்ன நடக்கும் என்பதை தனித்தனியாக பார்ப்போம்.
..
முதலில் உலகியல் மனிதன்.
உலகியல் மனிதனின் கடைசி காலம் கண்டிப்பாக மிக மோசமாக இருக்கும்.
பல்வேறு நோய்கள் வந்து தாக்கும். உதவினர்கள் அவரை கவனிக்க
மாட்டார்கள்.
பல மாதங்கள் அல்லது பல வருடங்கள் நடக்க முடியாமல் ஒரே இடத்திலேயே
வாழும்படியான சூழ்நிலை இருக்கும்.
ஆறுதல் கூறுவதற்கு ஆள் இருக்காது.இதுவரை யாருக்காக வாழ்ந்தாரோ
அந்த மகன்,மகள்,உறவினர்கள் பக்கத்தில் வரக்கூட மாட்டார்கள்.
இவரது உயிர் எப்போதுபோகும் நாம் எப்போது நிம்மதியாக இருக்கலாம்
என்று நினைப்பார்கள்.
அதனால் அவர் இருமும்போது, கட்டிலிலே சிறுநீர் கழிக்கும்போதோ
எரிச்சல் அடைந்து ஏசுவார்கள்.
வாழ்வதைவிட சாவது எவ்வளவோ மேல் என்று அந்த வயதானவருக்குக்கு
தோன்றும் ஆனால் உயிர்போகாது.
..
மனத்தில் பழைய காலத்தில் வாழ்ந்த வாழ்க்கை நினைவுகள் வந்துகொண்டே
இருக்கும். இதிலும் சான் மகனுக்காக எப்படியெல்லாம் கஷ்டப்பட்டேன் மகளுக்காக எப்படி
கஷ்டப்பட்டேன் இப்போது என்னை திட்டுகிறார்களே என்ற நினைவுகள்வரும். மனவேதனையில் அவர்கள்
அழக்கூட செய்வார்கள். ஆனால் என்ன செய்ய முடியும்?
ஒவ்வொரு நொடியும் நோயில் வேதனைகளும், அன்பில்லாதவர்களின்
அலட்சியத்தால் வரும் வேதனைகளும் மனத்தை வாட்டி எடுக்கும். அடிக்கடி ஏக்க பெருமூச்சுவிடுவார்கள்.
..
ஒவ்வொரு நாளும் ஒரு யுகம்போல் கழியும்.இறைவனின் நாமத்தை
எப்போதும் ஜபிக்கும் அளவுக்கு மனதில் தெம்பு இருக்காது. உடல் நோய்கள் காரணமாகவும் வயது
முதிர்வு காரணமாகவும் மனம் தளர்வாக இருக்கும்.அதனால் இறைசிந்தனையை வலுக்கட்டாயமக கொண்டுவர
முடியாது.
எவ்வளவுதான் முயற்சிசெய்தாலும் மனம் கட்டுக்குள் இருக்காது.
தானாகவே பழைய சிந்தனைகளில் மூழ்கிப்போதும்.
மனம் பல்வேறு சிந்தனைகளில் தானாக செல்லும்போது அதன்போக்கிலே
அவர்கள் செல்வார்கள்.அதனால் வேதனை மட்டுமே மிஞ்சும்.
கண்ணைத் திறந்தால் உறவினர்களின் முகத்தை பார்ப்பதால் வரும்
எரிச்சல்.கண்களை மூடினால் பழைய காலத்து சிந்தனைகளால் வேதனை.நீங்கள் நல்லா இருக்க மாட்டீர்கள்
நாசமாக போவீர்கள் என்று அவரது வாயிலிருந்து சாபம் வந்துகொண்டே இருக்கும். ஆனால் அது
வெளியே கேட்காது. ஒருவேளை அதை அவர்கள் கேட்டுவிட்டால் சாப்பாடுகூட தரமாட்டார்கள் என்ற
பயம்தான் காரணம். ஆனாலும் மனதிற்குள் தொடர்நு சாபமிட்டுக்கொண்டே இருப்பார்கள்.
வாழ்வின் கடைசி காலத்தில் மனமறிந்து கொடுக்கும் சாபம் பலிக்கும்.
இவர் இவரது பெற்றோர்களை இப்படித்தான் தவிக்க விட்டிருப்பார்.அவர்கள் கொடுத்த சாபம்
இவரைப் பிடித்திருக்கிறது.இப்போது இவர் கொடுக்கும் சாபம் இவரது பிள்ளைகளை பிடிக்கப்போகிறது.
..
இதுதான் கடைசி காலத்தில் உலகியல் மனிதன் அனுபவிக்கும் நரகவேதனை.
இவ்வளவு வேதனைகளை அவர் அனுபவித்தாலும்.அவரை சுற்றியிருப்பவர்களால்
இதை ஒருசிறிதும் உணர முடியாது.
அவரது வலியை புரிந்துகொள்ள யாருமே இருக்க மாட்டார்கள்.
அவரிடம் அன்பாக பேச யாருமே இருக்க மாட்டார்கள்.
..
எப்படியோ ஒருவழியாக கடைசி காலம் வந்துவிட்டது.
உயிர் இழுத்துக்கொண்டே இருக்கிறது.
உடலைவிட்டு போவதா வேண்டாமா என்று ஊசலாடிக்கொண்டிருக்கிறது.
இந்த நாட்களில் சுயநினைவு இருக்காது.அப்படியானால் மனம்
அமைதியாக இருக்கும் என்று அர்த்தமா? அதுதான் இல்லை. மனத்தில் தொடர்ந்து எதேதோ எண்ணங்கள்
வந்துகொண்டே இருக்கும்.
திரைப்படம் பார்க்கும்போது,அதிவேகத்தில் அந்த படத்தை ஓட்டினால்
எப்படி படங்கள் கணிக்க முடியாத அளவுக்கு வேகமாக செல்லுமோ அதேபோல மனத்தில் எழும் உருவங்கள்
கணிக்க முடியாதபடி வேகவேகமாக வந்துகொண்டிருக்கும். அமைதியான குளத்தில் தொடர்ந்து கல்லை
எறிந்துகொண்டிருந்தால் எப்படி குளம் அதிர்ந்துகொண்டே இருக்குமோ அதேபோல மனத்தில் பல
எண்ணங்கள் ஓடிக்கொண்டெ இருக்கும்.
மூளைவீங்கி புடைத்துபோயிருக்கும். மூளையில் அதீதவலி ஏற்படும்.
..
தன்னை சுற்றி நின்றுகொண்டிருக்கும் உறவினர்களின் முகம்
தெரியாது. தன்னை சுற்றியிருப்பவர்கள் பேசுவது கேட்காது. உடல் உணர்வுகூட நின்றுபோயிருக்கும்.
தானாக சிறுநீர் வழியும். பேதி தானாக போகும்.அதை கட்டுப்படுத்த முடியாது. இப்படியே உடலிலிருந்து
உயிர் வெளியேறும்.
அப்படி வெளியேறும்போதுகூட அவரது மனம் பல எணண்ங்களை ஏற்படுத்திக்கொண்டேதான்
இருக்கும்.
நான் இறந்துவிட்டேன். உயிர்போய்விட்டது போன்ற எண்ணங்களை
அவரது மனம் உண்டாக்கும்.
படிப்படியாக அவர் அந்த வேதனையிலிருந்து சிறிதுசிறிதாக விலகி
இறந்துபோன தனது உடலை பார்ப்பார்.
நாம் பார்ப்பதுபோல ஆவிகளால் பார்க்க முடியாது.
..
இருள்படிந்த மங்கலான உடலையும் உடலைசுற்றியுள்ள சில இடங்களை
மட்டுமே அப்போது பார்க்க முடியும்.
கூடவே எங்கும் மயான அமைதியும் தன்னந்தனியான உணர்வும் ஆவியின்
மனதில் நிறைந்து ஏக்கமும் வேதனையுமாக இருக்கும். ஆவிகளுக்கும் மனம் உண்டு என்பதை மறந்துவிடாதீர்கள்.
அந்த மனம் மயான தனிமையாலும் ஏக்கத்தாலும் இருண்ட எதிர்காலத்தாலும் நிறைந்திருக்கும்.
இப்போதுதான் இறைவனைப்பற்றிய சிந்தனை லேசாக எழும். இறைவா!
என்று மனம் கதறும். கதறி அழும்.
..
உடலை சுற்றியிருக்கும் மனிதர்கள் செய்யும் கடைசி காரியங்கள்
எல்லாம் அந்த ஆவிகளால் பார்க்க முடியும். ஏற்கனவே இறந்துபோன ஆவிகள் அப்போது அங்கே வந்துவிடும்.
அவை அவருக்கு ஆறுதலாக நிற்கும்.
அவரை மீண்டும் எதிர்பார்க்க அந்த வீட்டில் யாரும் இல்லை.
எனவே அந்த ஆவிக்கு அங்கே இடம் இல்லை.
அன்பில்லாதவர்கள் வீட்டில் அந்த ஆவி எப்படி தங்க முடியும்.
..
எனவே அந்த உடலுக்கு இறுதி காரியங்கள் அனைத்தும் செய்த பிறகு
சிலர் சுடுகாட்டில் கொண்டு சென்று எரித்துவிடுவார்கள்,சிலர் இடுகாட்டில் சென்று புதைத்துவிடுவார்கள்.
இந்த நிகழ்வுகள் அனைத்தையும் ஆவி பார்த்துக்கொண்டே இருக்கும்.
முடிவில் ஏற்கனவே அங்கே கூடியிருக்கும் ஆவிகள் அவரை அழைத்துக்கொண்டு
தாங்கள் இருக்கும் இடத்திற்கு சென்றுவிடும்.
பெரும்பாலும் அந்த ஆவிகள் கோவிலை சுற்றியுள்ள இடங்களில்
அதிகம் உலவும். மனிதர்களுக்கு எப்படி இறைவன் கடைசி புகலிடமோ அதேபோல ஆவிகளுக்கும் கடைசி
புகலிடம் இறைவன்தான். எனவே மனிதர்களைவிட பல மடங்கு ஆவிகள் இறைசிந்தனையுடன் வாழும்.
இறைவனை நினைத்து தொடர்ந்து பிரார்த்தனை செய்யும்.
இந்த ஆவி வாழ்க்கையிலிருந்து விடுபட்டு நல்ல வாழ்க்கை வரவேண்டும்
என்று கோவிலை சுற்றி வலம் வந்துகொண்டிருக்கும்.இப்படியே பல ஆண்டுகள் ஆவிகளின் வாழ்க்கை
சென்றுகொண்டிருக்கும்.
..
அங்கே கோவில் கொண்டுள்ள இறைவனுக்கு மனிதர்களைவிட இந்த ஆவிகளிடம்
கருணை அதிகம் உண்டு.
மனிதர்களுக்கு புண்ணியம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.
ஆனால் அவன் அதை பயன்படுத்துவதில்லை.ஆவிகளால் புண்ணியம் சம்பாதிக்க முடியாது. பாவத்தின்
பலனை மட்டுமே அனுபவிக்க முடியும். பாவம் குறையக்குறைய ஆவிகளின் மனதில் நிம்மதியும்,இறைசிந்தனையும்
அதிகம் ஏற்படும்.
இப்படி பக்குவப்பட்டிருக்கும் ஆவிகளைப்பற்றி அங்கே குடிகொண்டிருக்கும்
இறைவன் அறிவார்.
..
பிள்ளை வரம்வேண்டி சிலர் அங்குள்ள கோவிலை சுற்றுவார்கள்.அப்போது
இறைவன் ஏதாவது ஒரு ஆவியை அழைத்து அங்கே பிள்ளைவரம்வேண்டி கோவிலை சுற்றிக்கொண்டிருக்கும்
பெண்ணின் வயிற்றில் பிறக்கும்படி கூறி அந்த ஆவிக்கு புதிய வாழ்க்கையைக் கொடுக்கிறார்.
..
தொடரும்....
..
இன்னும் பல விசயங்கள் அடுத்து பார்க்கலாம்.
எழுத்துப்பிழைகளைப் பொருட்படுத்தாதீர்கள்.
உங்கள் கேள்விகளை +919360209541 வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பவும்,
டைப்செய்து அனுப்பலாம் அல்லது குரல் பதிவில் அனுப்பலாம்.
உங்கள் கேள்விகளுக்கான பதில்கள் இனிவரும் பதிவுகளில் வரும்
..
சுவாமி வித்யானந்தா-KANYAKUMARI (10-4-2025)
No comments:
Post a Comment