ஆவி
உலகம்-தொடர்-பாகம்-5
..
எந்த
வீட்டில் உயிர் பிரிகிறதோ அந்த வீட்டில்தான் ஆவி அலைந்து கொண்டிருக்குமா?
வெளிநாட்டில்
முன்னோர்களுக்கு உணவு படைக்கலாமா?
ஒரு
கும்பத்தில் இறந்த முன்னோர் அதே வீட்டில் மீண்டும் பிறக்க வாய்ப்பு உண்டா?
திடீதென்று
சிலர் இறந்துவிடுகிறார்கள். அவர் இறக்கும் தினத்தன்று அவருக்கு இன்று ஏதோ நடக்கப்போகிறது
என்பது தெரியுமா? முன் அறிவிப்புகள் உண்டா?
..
கணவன்
மனைவி அன்பாக வாழ்ந்துகொண்டிருக்கும் நிலையில் யாராவது ஒருவர் அகால மரணம் அடைந்தால்
அவர்களது ஆவி அந்த வீட்டிலேயே வாழும். உதாரணமாக கணவன் இறந்துவிட்டார் என்று வைத்துக்கொள்வோம்.
அவரது ஆவி அந்த வீட்டிலேயே வாழும். அதனால்தான் கணவன் இறந்தால் மனைவி இன்னொரு திருமணம்புரிவதில்லை.இது
கற்புள்ள பெண்களுக்கு பொருந்தும்.
அப்படி
அந்த வீட்டிலேயே வாழும் ஆவி அந்த வீட்டில் உள்ளவர்களது கனவில் அடிக்கடி வருவதுண்டு.
முக்கியமாக விடியற்காலையில் காணும் கனவில் வருவதுண்டு.இதைவைத்து அவரது ஆவி அங்கே வசிக்கிறது
என்பதை தெரிந்துகொள்ளலாம்.
..
பிற
மதங்களைப்பொறுத்தவரை இறந்த ஆவி மீண்டும். அங்கே வருவதில்லை. இறந்த ஆவியை சாத்தான் என்று
கூறி அதை அவமதிப்பார்கள்,வெறுப்பார்கள். அத்தோடு கணவன் இறந்ததும் மனைவி இன்னொரு திருமணம்புரிந்துகொள்கிறாள்.
இறந்த கணவனின் பொருட்களை அகற்றிவிடுவார்கள்.அவனது நினைவுகளை மனதிலிருந்து அகற்றிவிடுவார்கள்.
எனவே பிற மதங்களைப்பொறுத்தவரை இறந்தவரின் ஆவியிடம் யாரும் அன்புகொள்வதில்லை. சாத்தான்
என்ற போர்வையில் அதை விலக்கிவிடுகிறார்கள்.
..
ஆனால்
நமது மதத்தில் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பல கடமைகள் உள்ளன.அதில் ஒன்று இறந்த முன்னோர்களுக்கு
செய்ய வேண்டி கடன் அல்லது கடமை. பித்ரு காரியம். இதை இல்லறத்தான் தினமும் செய்ய வேண்டும்.
சில
ஆவிகள் பித்ருலோகத்திற்கு சென்றுவிடும்
சில
ஆவிகள் வீட்டிலேயே தங்கிவிடும்
சில
ஆவிகள் வீட்டைவிட்டு வெளியேறி மனிதர்கள் வசிக்காத வீடுகளில் தங்கும்
சில
ஆவிகள் சுடுகாடு,கடற்கரை போன்ற பல இடங்களில் அலையும்.
சில
தீய ஆவிகள் அதேபோன்ற பிற ஆவிகளுடன் கூட்டுசேர்ந்து பிறருக்கு தொந்தரவு கொடுக்கும்.
..
பித்ருலோகத்தில்
வாழும் ஆவிகளுக்கு தினமும் உணவு படைக்கவேண்டும் .அந்த உணவை பித்ருக்கள் சாப்பிடுவதில்லை.
ஏனென்றால் பித்ருலோகத்தில் ஒருநாள் என்பது நமக்கு ஒரு வருடம். ஆனாலும் தினமும் பித்ருக்களை
நினைக்க வேண்டும் என்பதற்காகவும், பித்ருக்ள் அங்கே நீண்டநாள் வாழவேண்டும் என்பதற்காகவும்
தினமும் பித்ருக்களுக்கு உணவு படைக்க வேண்டும். அந்த உணவை மற்றவர்கள் சாப்பிடலாம்.
அது தூய உணவு.
..
அடுத்து
வீட்டில் உள்ளவர்களின் அன்பில் கட்டுப்பட்டு வீட்டிலேயே தங்கிவிடும் ஆவிகளுக்கு தினமும்
உணவு படைக்க வேண்டும். அந்த உணவை அவர்கள் சாப்பிடுவார்கள். ஒவ்வாரு உணவிலும் தூலம்,சூட்சுமம்
என்று இரண்டு உள்ளது. நமது உடலில் எப்படி தூலம்,சூட்சுமம் உள்ளதோ அதுபோல உணவிலும் தூலம்,சூட்சுமம்
உள்ளது.
தூல
உணவு உடலை வளர்க்கும், சூட்சும உணவு மனத்தை வளர்க்கும்.
..
ஆவிகளால்
தூல உணவை சாப்பிட முடியாது. ஆனால் சூட்சும உணவை சாப்பிட முடியும்.
நாம்
படைக்கும் உணவை அவர்கள் சாப்பிடுவார்களா? இல்லையா என்ற கவலை வேண்டாம். அவர்களால் சாப்பிட
முடியும். உணவிலுள்ள சூட்சுதன்மைகளான மணம்,சுவை இவைகளை அவர்கள் சாப்பிடுகிறார்கள்.
நல்ல
சூடான உணவையே அவர்களுக்கு படைக்க வேண்டும்
வீட்டில்
இவ்வாறு உணவை படைத்தபிறகு அதை நாம் உண்ணக்கூடாது. ஏனென்றால் அது எச்சிலாக்கப்பட்ட உணவு.அது
நமது சூட்சம உடலுக்கு கேடுவிளைவிக்கும். எனவே அதை பறவைகளுக்கோ விலங்குகளுக்கோ கொடுக்கலாம்.
ஆனால்
பித்ருலோகத்தில் உள்ளவர்களுக்கு படைக்கப்பட்ட உணவு அப்படியல்ல.அதை உண்ணலாம்.
..
எனவே
வீட்டில் வசிக்கும் ஆவிகளுக்கு தினமும் உணவு படைக்க வேண்டும். அது அந்த ஆவிகளுக்கு
நன்மை செய்யும். இது அவர்களது மனத்தை அமைதியடைய செய்யும். வீட்டில் இருந்த படியே அவர்கள்
வீட்டில் உள்ளவர்களின் நன்மைக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்வார்கள், ஜெபம் செய்வார்கள்.
ஒருவர்
சூட்சும உடலாகிவிட்டால் அதன் பிறகும் அவர்
ஆன்மீக ரீதியாக முன்னேற முடியும். அதன்பிறகும் அவர்களால் மற்றவர்களுக்கு உதவ முடியும்.
சூட்சும உடலில் இருப்பர்களால் அந்த குடும்பத்தின் நிலையை உயர்த்த முடியும்.
சகுணங்கள்
மூலமாகவும்,கனவுகள் மூலமாகவும் எச்சரிக்க முடியும்.
எனவே
நல்ல ஆவி வீட்டில் வசிப்பது நல்லது.
அத்தோடு
வீட்டில் உள்ளவர்கள் ஜபம்,தியானம், பக்தி பாடல்களை பாடுவது என்று நல்ல சம்ஸ்காரங்களை
மேற்கொள்ள வேண்டும்.
நாம்
கொஞ்சநேரம் ஜபம் செய்துவிடடு நிறுத்திவிடுவோம் ஆனால் சூடசும உடலில் வசிப்பர்கள் தொடந்து
ஜபம் செய்பர்கள்.
நான்
கொஞ்சம் அதிகமாக கதை அளப்பதாக நினைக்காதீர்கள்.
ஆன்மீக
உணர்வுடன் வாழும் மனிதர்கள் இறந்த பிறகும் அவர்கள் ஆன்மீக செயல்களில் ஈடுபட்டுக்கொண்டே
இருப்பார்கள்.
..
காசியில்
நீண்ட ஆண்டுகளாக வசித்த ஒரு வயதான சாதுவை ஒருமுறை பார்க்க நேர்ந்தது.
இரவு
நேரத்தில் ஒரு பெண் ஆவி அவரிடம் பேசுமாம். அத்தோடு பக்தி பாடல்களை பாடிக்கொண்டே இருக்குமாம்.
இரவு
முழுவதும் இவருக்கு தூக்கமே வராதாம்.
தனக்கு
முக்தி கிடைக்க வேண்டும் என்பதற்காக இறைவனிடம் பிரார்த்திக்கும்படி அது கூறுமாம்.
என்னை
பார்த்த பல மாதங்கள் கழிந்தபிறகு அந்த சாது இறந்துவிட்டார் என்ற தகவல் எனக்கு கிடைத்தது.
அந்த
நேரத்தில் நான் ஜயோ பாவம் என்று நினைத்துக்கொண்டேன்.
இப்போது
என்ன புரிகிறது என்றால் அந்த சாது முக்தியடையும்போது கூடவே அந்த பெண்ஆவியும் முக்தி
அடைந்திருக்கும்.
எனவே
ஆன்மீகவாதிகள் அகால மரணமடைந்தால் ஜபம்,தியானம்,பக்திபாடல்களை பாடுவது போன்றவற்றை சூட்சும
உடலில் இருந்தபடியே செய்துகொண்டிருக்கும்.
..
ஒருவர்
இறந்துவிட்டால் உயிர் அந்த வீட்டில்தான் இருக்குமா? அல்லது உறவினர்கள் வேறு இடம் சென்றுவிட்டால்
அதுவும் வேறு இடத்திற்கு வந்துவிடுமா?
இதை
இரண்டுவிதமாக பார்க்கலாம்.
எனக்கு
தெரிந்த ஒரு பெண்ணின் அக்கா காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொண்டு இறந்துவிட்டள்.
பல வருடங்களாக அக்காவின் நினைவில் தங்கை வாழ்ந்துவந்தான். அவள் திருமணம் செய்யவில்லை.
அக்காவில் ஆவி அந்த வீட்டிலேயே சுற்றி வந்தது. அக்காவைப்போலவே இவளும் பலமுறை தற்கொலைக்கு
முயற்சி செய்தாள். காப்பாற்றிவிட்டார்கள். எதற்காக சாகபோகிறாய் என்று கேட்டால் தெரியாது
அக்கா தனியாக இருக்கிறாள் என்று மடடும் கூறுவாள். அக்காவின் ஆவி அவளுக்குள் வந்து அவளையும்
தற்கொலைக்கு தூண்டிக்கொண்டெ இருந்துள்ளது. சில ஆண்டுகள் இப்படியே நடந்தது. பிறகு அனைவரும்
அந்த வீட்டை விட்டு சென்னைக்கு சென்றுவிட்டார்கள்.
அங்கு
சென்ற பிறகு இந்த பெண்ணின் மனநிலையில் நற்றமாற் ஏற்பட்டது. திருமணத்திற்கு ஒத்துக்கொண்டாள்.திருமணமும்
நடந்தது. பழைய பிரச்சினைகள் எதுவும் இல்லை.
இது
எதை காட்டுகிறது என்றால் இறந்தவர்கள் தாங்கள் வாழ்ந்த பழைவீட்டை விட்டு எங்கோ தூர இடத்திற்கு
வர விரும்புவதில்லை.
..
ஆவிகளால்
பல தொல்லைகள் இருந்தால் பழைய வீட்டைவிட்டு,தூர இடத்தில் வசிப்பது நல்லது.
..
வெளிநாட்டில்
உள்ளவர்கள் இறந்தவர்களை நினைத்து உணவு படைக்கலாமா?
கண்டிப்பாக
படைக்கலாம். ஆனால் ஆவிகளால் அங்கே சென்று அதை உண்ண முடியாது.
மனிதர்களுக்கு
எப்படி பல எல்லைகள் உள்ளதோ அதேபோல கட்டுப்பாடுகளும்
எல்லைகளும் ஆவிகளுக்கு உண்டு.
..
ஆவிகளால்
அவர்கள் வசிக்கும் வீடு,வீட்டை சுற்றியுள்ள இடங்கள்,மற்றும் ஆவிகளின் சொந்தக்காரர்கள்
வசிக்கும் அருகில் உள்ள இடங்கள் போன்றவற்றிற்கே செல்ல முடியும். நீண்ட தூரம் செல்ல
முடியாது.
ஆவி
உடல் என்பது ஒரு உடல். நினைத்த நேரத்தில் எங்கும் செல்லும் அளவுக்கு அவை அசாத்தியமானவை
அல்ல.
ஆனால்
தேவர்கள்,ரிஷிகள் அப்படி அல்ல. அவர்களால் செல்ல முடியும்.
..
முற்காலத்தில் வெளியூர் செல்லும்போது தங்கள் குலதெய்வத்தை
கூடவே அழைத்து செல்வார்கள்.நீண்ட தூரம் நடந்துசெல்ல வேண்டியிருக்கும். இரவில் மண்டபங்களில்
தங்க வேண்டியிருக்கும். எனவே அவர்கள் தங்களுடன் குலதெய்வத்தை அழைத்துசெல்வார்கள்.மற்ற
ஆவிகளால் எந்த துன்பமும் வராமல் காப்பாற்றும். திருடர்கள் வந்தால் முன்கூட்டியே எச்சரிக்கும்.
..
தொடரும்..
இன்னும்
நிறைய சொல்ல வேண்டியுள்ளது.
..
தற்கொலை
செய்து கொண்டவர்களின் ஆவி பூமியில் அவர்கள் aayulkaalam முடியும் வரை இருக்குமா?
இதுபோன்ற
கேள்விகள் உஙகளுக்கு எழுந்தால் கேளுங்கள்.
..
உங்கள்
கேள்விகளை +919360209541 வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பவும்,
டைப்செய்து
அனுப்பலாம் அல்லது குரல் பதிவில் அனுப்பலாம்.
உங்கள்
கேள்விகளுக்கான பதில்கள் இனிவரும் பதிவுகளில் வரும்
..
சுவாமி
வித்யானந்தா-KANYAKUMARI (13-4-2025)
No comments:
Post a Comment