Friday, 11 April 2025

ஆவி உலகம்-தொடர்-பாகம்-4

 

ஆவி உலகம்-தொடர்-பாகம்-4

..

எண்பது வயதுடைய நல்லவர்கள் அல்லது ஆன்மீகவாதிகள் மரணமடையும்போது என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்.

உலகியல் பற்றுள்ள மனிதர்களின் மரணகாலத்தில் என்ன நடக்குமோ அதற்கு மாற்றாக எல்லாமே நடக்கும்.

கடைசி காலத்தில் உறவினர்கள் அவரிடம் அன்புடன் நடந்துகொள்வார்கள்.அவர் யாரை பார்க்க வேண்டும் என்று நினைக்கிறாரோ அந்த தூரத்து உறவினர்கள் திடீரென்று அவரை பார்க்க வருவார்கள். அவரை கடைசி காலத்தில் பக்கத்தில் இருந்து கவனிக்க யாராவது ஒருவர் இருப்பார்.அவரது மனதில் இறைவன் நாமம் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும். வீட்டில் உள்ளவர்கள் நல்லபடி இருக்க வேண்டும் என்று வாழ்த்திக்கொண்டிருப்பார்.

..

மரணமடையவேண்டிய நாள் வரும்போது அவருக்கே தெரிந்துவிடும்.தெய்வங்களின் காட்சி அவருக்கு கிடைக்கும்.

நல்ல மனத்தெளிவு காணப்படும். முகத்தில் அன்பும் கருணையும் இருக்கும்.

அவரது இஷ்டதெய்வத்தின் காட்சி கிடைக்கும் நேரத்தில் சூட்சுமஉடல்(உயிர்) தூலஉடலைவிட்டு புறப்படும்.

..

உறவினர்கள் இறுதி சடங்குகளை செய்வார்கள். அப்போது வீட்டில் அமைதியான,  ஆன்மீக சூழல்நிலவும்.

அன்று முழுவதும் வீட்டில் இறைவனின் நாமஜபம் அல்லது பஜனை நடந்துகொண்டிருக்கும்.வீட்டில் உள்ளவர்கள் உபவாசம் இருப்பார்கள். யாரும் அழமாட்டார்கள்.

வீட்டில் உள்ளவர்கள் அழுதால் இறந்தவரின் ஆவி இந்த வீட்டைவிட்டு நிம்மதியாக செல்லது என்பதால் யாரும் அழமாட்டார்கள்.இறந்தவர் முக்தி அடைய வேண்டும் என்று வேண்டிக்கொள்வார்கள்.

..

 உடல் எரிக்கப்படலாம் அல்லது புதைக்கப்படலாம். அனைத்தும் முடிந்த பிறகு . இறைதூதர்கள் அல்லது தெய்வங்கள் அந்த புண்ணி ஆத்மாவை அவரது இஷ்டதெய்வத்திடம் அழைத்துசெல்வார்கள்.அந்த ஆன்மா மேல் உலகத்தை அடையும். அவர் அவருக்கு முக்தியை அருள்வார் அல்லது புண்ணிய ஆத்மாக்கள் வாழும் மேல்உலகில் அவர் வாழ்வார்.அதன்பிறகு அவர் மீண்டும் இந்த மனித உலகிற்கு வரமாட்டார்.

..

இப்படிப்பட்ட புண்ணிய ஆத்மாக்கள் மிகமிகக்குறைவு. எப்போதும் இறை சிந்தனையுடன் வாழ்பவர்கள். ஆசைகள் அனைத்தையும் வென்றவர்கள்,புலன்களை அடக்கியவர்கள் இப்படிப்பட்டவர்களுக்கே இப்படிப்பட்ட முடிவு ஏற்படும்.

..

இதற்கு சற்று கீழ்நிலையில் உள்ளவர்கள் அதாவது நல்லவர்கள் அதேநேரத்தில் குடும்பத்தில் சற்று பற்றும்பாசமும் உள்ளவர்கள். இவர்கள் மரணமடையும்போது என்ன நடக்கும்?

இவர்கள் உடலைவிட்டு ஆவி பிரியும்போது இதற்கு முன்பு இறந்த ஆவிகளை அவர் அங்கே பார்ப்பார்.

உறவினர்கள் அழுவார்கள்.குடும்பத்தில் உள்ள யாரோ ஒருவரிடம் அவருக்கு பற்று இருக்கும்.அவரது பிரிவை தாங்க முடியாமல் குடும்பத்தினர் தவிப்பார்கள். எனவே அந்த வீட்டைவிட்டு அவரது ஆவி வேறு எங்கும் செல்ல விரும்பாது.

வீட்டில் இருந்துகொண்டே குடும்பத்தினருக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று அந்த ஆவி விருப்பம் கொள்ளும்.

..

நல்ல சகுனம் அல்லது கெட்ட சகுனங்களை அறிந்து முன்கூட்டியே வீட்டிள் உள்ளவர்களுக்கு எச்சரித்தல் அல்லது கனவின் மூலம் வந்து உணர்த்துதல், தீய ஆவிகள் வீட்டின் அருகில் வரவிடாமல் தடுத்தல்.வீட்டைவிட்டு யாராவது வெளியே செல்லும்போது அவருடனே அவருக்கு பாதுகாப்பாக செல்லுதல் போன்ற காரியங்களை அந்த ஆவி செய்யும்.

இது எதுவரை நடக்கும் என்றால் குடும்பத்தில் உள்ளவர்கள் அவரை நினைக்கும்வரை.அவரை நினைத்து அழும்வரை.

படிப்படியாக  ஒரு காலகட்டத்தில்  அவரை மறந்துவிட்டால் அந்த ஆவி அதன்பிறகு பாவபுண்ணியத்திற்கு ஏற்ப அந்த வீட்டில் மனிதனாகவோ அல்லது செல்லபிராணியாகவோ பிறவி எடுக்கும்.

..

ஆவிகள் சாபம் கொடுக்குமா,ஆசீர்வாதம் கொடுக்குமா? என்ற கேள்விக்கு பதில் சொல்லிவிட்டேன்.

 உடலை எரித்தால் ஆவிகள் வராது என்பது உண்மையா? அகால மரணத்தில் இறப்பவர்கள்தான் ஆவிகளாக வருவார்களா? சிலர் ஒரு வருடம் நம்மைசுற்றி வாழ்வார்கள் பிறகு நம்மை விட்டு வெளியேறி விடுவார்களா?

இந்த கேள்விக்கான பதில்

..

நமது மதத்தை பொறுத்தவரை உடலை எரித்தாலும் புதைத்தாலும் பலன் ஒன்றுதான்.

ஆரியர்கள் உடலை எரிப்பதற்கு ஒரு காரணம் இருந்தது.

யாகங்கள் மூலம் தனக்கு பிடித்தவற்றை தேவர்களுக்கு வழங்குவதுதான் பண்டைய ஆரியர்களின் பழக்கம்.

அந்த வகையில் உடலை அக்னியில் தியாகம் செய்வது மிகஉயர்ந்த யாகமாக முற்காலத்தில் கருதப்பட்டது.

இப்படி செய்தால் உடல்மீது உள்ள பற்று மறையும் இறந்தவனின் ஆவி இந்த உலகிலிருந்து மேல் உலகிற்கு உடனே செல்லும் என்று நம்பினார்கள்.

..

பண்டைய காலத்தில் முன்னோர்கள் வாழ்வதற்கான பல லோகங்கள் இருந்தன.அவற்றுள் முக்கியமானது பித்ருலோகம். முறையதாக உபநயனம் மேற்கொண்டு அதன்படி வாழும் மேலானவர்களுக்கு மட்டுமே பித்ருலோகத்தில் இடம் அளிக்கப்பட்டது. அவர்கள் மட்டுமே தான் உடலைவிட்ட பிறகு பித்ருலோகத்தில் வாழ்வேன் என்று முழுநம்பிக்கையோடு வாழ்ந்துவருவார். ஆரிய சம்பிரதாயத்தை பின்பற்றாதவர்கள் பித்ருலோகம் செல்வதில்லை.அவர்களின் ஆவி இந்த உலகத்திலேயேதான் சுற்றும்.

..

பித்ருலோகம் பற்றி சிறிது பார்ப்போம்.

..

பித்ருலோகம் என்பது ஆரியர்களின் முன்னோர்கள் வாழும் உலகம். இதை தென்புலத்தார் என்பார்கள். வடபுலத்தார் என்றால் இமயமலை உச்சியில் வாழ்பவர்கள்.

இமயமலையின் பனிமூடிய சிகரத்திற்கு மேலே தேவலோகம்,கைலாயம்,வைகுண்டம்,கந்தர்வலோகம் போன்ற பல உயர்ந்த லோகங்கள் இருப்பதாக முன்னோர் கூறியிருக்கிறார்கள். இந்த உலகங்கள் பூமியை விட்டு வெளியே வேகு தூரத்தில் இருப்பதாக நினைக்ககூடாது. அது அப்படி அல்ல.

நாம் வாழும் உலகம் தூல உலகம். தேவர்கள் வாழும் உலகம் ஒளி உலகம். பேய்கள்,ஆவிகள் வாழும் உலகம் இருள் உலகம்..எல்லாமே இந்த பூமியில்தான் இருக்கின்றன. தேவர்களின் உடல் மனித உடலைவிட பல மடங்கு பெரியது ஒளிவீசக்கூடியது. அவர்களிடம் பல சக்திகள் இருக்கும்.

அதேநேரம் ஆவிகளின் உடல் மனித உடலைவிட பலமடங்கு சிறியது. புண்ணிய பாப பலக்களுக்கு ஏற்ப சிறிய உடல் பெரிய உடல் அமைகிறது.

..

இங்கே வடபுலத்தார் என்பது தேவர்கள் வாழும் உலகத்தை குறிக்கிறது.இது இமயமலையின் உச்சியில் பனிமூடிய பகுதியில் உள்ளது. தற்போது உள்ள திபெத்தின் மேற்பகுதி என்றும் சொல்லலாம்.

தென்புலத்தார் என்பது பித்ருக்கள் வாழும் உலகம். இதுவும் மேல் உலகம்தான்.இங்கு வாழும் பித்ருக்களும் மனிதனைவிட பெரிய உடல்கொண்டவர்கள் ஒளிவீசும் உடல்கொண்டவர்கள்.இவர்களும் ஒளிஉலகத்தில்தான் வாழ்கிறார்கள்.ஆனால் இவர்கள் வாழும் இடம் இமயமலை பகுதிக்கு தெற்கே உள்ள பகுதியில் அமைந்துள்ளது.

பழைய காலத்தில் ஆரியர்கள் இமயமலைக்கு தெற்கே இருப்பது தென்திசை என்றும் இமயமலையை வடதிசை என்றும் கருதினார்கள்.

எனவே பித்ருலோகம் என்பது மனிதர்கள் வாழும் உலகத்திற்கு மேல் உள்ள பரந்த உலகம்.

முறையான உபநயனம் மேற்கொண்டு வாழும் ஒருவர், மறுபடி பிறக்க வேண்டும் என்ற ஆசைகொண்ட ஒருவர் இறக்கும்போது. மேல் உலகத்தில் உள்ள பித்ருக்கள் அவரிடம் வருகிறார்கள்.

ஆன்மீக மனிதர்கள் இறக்கும்போது தேவதூதர்கள் அவரிடம் வருகிறார்கள்.

சாதாரணமனிதர்கள் இறக்கும்போது ஏற்கனவே இறந்த ஆவிகள் அவரிடம் வருகின்றன.

இங்கே ஆரிய சம்பிரதாயத்தின்படி வாழ்பவர் இறக்கும்போது பித்ருக்கள் அவரிடம் வருகிறார்கள்.

..

உடலை எரித்தபிறகு அந்த பித்ருக்கள் அந்த புனிதஆவியை பித்ருலோகத்திற்கு அழைத்துசெல்கிறார்கள்.அவருக்கு தேவர்களுக்கு சற்று இணையான ஒளிஉடல் கிடைக்கிறது

அங்கே அவர் தனது முன்னோர்களை காண்பார்.அவர்களுடன் சந்தோசமாக நீண்ட ஆண்டுகள் வாழ்வார்.

பித்ருலோகத்தில் ஒரு நாள் என்பது மனித உலகில் ஓராண்டுக்கு சமம்.

பித்ருலோகத்தில் அவர் சந்தோசமாக வாழவேண்டுமானால் பூலோகத்தில் அவரது வாரிசுகள் அவருக்கு தினமும் உணவு படைக்க வேண்டும். பித்ருக்களுக்கு உணவும், தேவர்களுக்கு உணவும் தினமும் படைக்க வேண்டும். அவர்களுக்கு படைத்த உணவையே மற்றவர்கள் சாப்பிட வேண்டும்.இதுபற்றி விதிரகள் விரிவாக மனுஸ்மிருதியில் உள்ளது.

..

ஆரியர் அல்லாதவர்களுக்கு,ஆரிய சம்பிரதாயத்தை பின்பற்றாதவர்களுக்கு இந்த விதி பொருந்தாது.

ஆரிய பழக்க வழக்கங்களை பின்பற்றுபர்களால் மட்டுமே பித்ருலோகம் செல்ல முடியும்.

..

ஒருவேளை ஆரிய சம்பிரதாயத்தை பின்பற்றும் ஒருவர் பாவம் அதிகம் செய்துவிட்டால் அவரால் பித்ருலோகம் செல்ல முடியுமா? அந்த வீட்டில் உள்ளவர்கள் பாவபரிகாரங்களை செய்தால் போக முடியும் இல்லாவிட்டால் இந்த உலகத்தில் ஆவியாக சுற்ற வேண்டியதுதான்.

 

....

தொடரும்

..

 

பேய் ஓட்டுபவர்கள் ஆவிகளை வைத்து என்ன செய்கிறார்கள்? ஆவிகள் மனிதனை பழிவாங்குமா?

இன்னும் பல கேள்விகள் இருக்கின்றன.

இறைநாமத்தை சொல்லிக்கொண்டே இரவில் செல்பர்களை ஆவிகள் தொந்தரவு செய்யுமா?

தீயஆவிகள் நல்ல ஆவிகள் என்று உள்ளதா?

உங்கள் கேள்விகளை +919360209541 வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பவும்,

டைப்செய்து அனுப்பலாம் அல்லது குரல் பதிவில் அனுப்பலாம்.

உங்கள் கேள்விகளுக்கான பதில்கள் இனிவரும் பதிவுகளில் வரும்

..

சுவாமி வித்யானந்தா-KANYAKUMARI (11-4-2025)

 

No comments:

Post a Comment

பித்ருக்களுக்கு தினமும் உணவிட வேண்டும்

  பித்ருக்களுக்கு தினமும் உணவிட வேண்டும் .. துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை. -திருக்குறள் ...