Friday, 18 April 2025

ஆவி உலகம்-தொடர்-பாகம்-10

 

ஆவி உலகம்-தொடர்-பாகம்-10

..

பாம்பு புற்று வழிபாடு

நாகராஜா,நாகராணி போன்ற வழிபாடுகளின் பின்னணி என்ன?

ஆவி பாதித்த மனிதனை காப்பாற்ற என்ன வழி?

.

திருமணம் ஆகாத ஆண் அல்லது பெண் பாம்பு கடித்து இறந்தால் அவர்களை நாகதேவதையாக,நாகராஜாவாக வழிபடும் பழக்கம் முற்காலத்தில் இருந்துள்ளது.

நாய் கடித்து இறப்பவன் கடைசி நாளில் நாயைப்போல கத்திகத்தி சாவதை போல. பாம்பு கடித்து இறப்பவரின் சூட்சும உடல் பாம்பின் குணங்களால் பாதிப்படைகிறது. இறந்தவரின் சூட்சுமஉடல் பாதி மனித குணமாகவும் பாதி பாம்பின் குணமாகவும் மாறிவிடுகிறது.

பாம்பு தொல்லைகள் ஏற்படாமல் இருப்பதற்காக மக்கள் நாகதேவதை வழிபாடுகளை செய்வார்கள்.

 

..

பெரும்பாலான கடவுளின் உடலில் பாம்பு மாலைபோல சுற்றிக்கொண்டிருக்கிறதே! விஷ்ணு பாம்பின்மீது படுத்திருப்பதுபோல ஓவியங்கள் உள்ளனவே இதற்கு பின்னால் உள்ள கருத்து என்ன?

..

அது உண்மையில் பாம்பு இல்லை. அது ஒரு தத்துவத்தை விளக்குவதற்காக வரையப்பட்ட ஓவியங்கள்.

நாகம் என்றால் ந+அகம் என்று பிரித்து படிக்க வேண்டும். ”அகம் என்றால் நான். ”ந என்றால் இல்லை என்று அர்த்தம். அகம் இல்லாதது. நான் இல்லாதது என்று அர்த்தம். நான் என்பது ஆன்மா. மாயை என்பது நான் இல்லாதது

நான் என்பது மாயையுடன் சேரும்போது உருவம்,மனம், தூலஉருவம்,சூட்சுமஉருவம் எல்லாம் ஏற்படுகிறது.

நான் மட்டும் தனியாக இருந்தால் அது கடவுள்.

நான் என்பதுடன் மாயை சேர்ந்தால் அது உயிர்கள்

இறைவன் மாயையை கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார்.

என்பது இதன் அர்த்தம்.

பாம்பு எப்படி வந்தது?

..

மனிதனின் உடலில் மாயை என்பது குண்டலினி சக்தியாக இருப்பதாக சாஸ்திரம் கூறுகிறது.

இந்த குண்டலினி சக்தி பாம்புபோல் சுருண்டுகிடப்பதாக யோக சாஸ்திரம் கூறுகிறது.

மூலாதாராரத்தில் பாம்புபோல சுருண்டு கிடக்கும் குண்டலினி சக்தி படிப்படியாக முதுகுத்தண்டின் மையம் வழியாக மேலேறி மூளையை அடைகிறது.

அப்போது மாயை ஒடுங்குகிறது. மாயையின் பிடியிலிருந்து ஆன்மா விடுபட்டு கடவுளை அடைகிறது.

..

இதை விளக்குவதற்காக இறைவன் பாம்பின்மேல் படுத்திருப்பதாகவும்.பாம்பை கச்சையாக அணிந்திருப்பதாகவும் ஓவியம் வரையப்பட்டுள்ளது.

யோக சாஸ்திரம் இன்னும் சிலவற்றைக் கூறுகிறது. குண்டலினி சக்தி வாயுபோலவும்.சிலநேரங்களில் பறவைபோலவும்,சிலநேரங்களில் குரங்குபோலவும்  முதுகுத்தண்டின் வழிபாக செல்லும் என்று சொல்லப்பட்டுள்ளது.

இருந்தாலும் பெரும்பாலானவர்கள் குண்டலினி சக்தி பாம்புபோல மேலே செல்வதாக கூறியிருக்கிறார்கள்.

..

இந்த தத்துவத்தை விளக்குவதற்காகத்தான் பாம்பின்மேல் படுத்திருப்பதாக ஓவியம் வரையப்பட்டுள்ளது.

இறைவன் மாயையைக் கடந்தவர். மாயையை கட்டுப்படுத்தக்கூடியவர் என்பது அர்த்தம்.

..

தொடரும்...

..

ஆவி பாதித்த மனிதனை காப்பாற்ற என்ன வழி? என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்

உங்கள் கேள்விகளை +919360209541 வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பவும்,

டைப்செய்து அனுப்பலாம் அல்லது குரல் பதிவில் அனுப்பலாம்.

 

..

சுவாமி வித்யானந்தா-KANYAKUMARI (18-4-2025)

 

No comments:

Post a Comment

பித்ருக்களுக்கு தினமும் உணவிட வேண்டும்

  பித்ருக்களுக்கு தினமும் உணவிட வேண்டும் .. துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை. -திருக்குறள் ...