ஆவி
உலகம்-தொடர்-பாகம்-1
..
மனிதர்களுக்கும்
ஆவிகளுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
ஆவிகளுக்கும்
தெய்வங்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
தெய்வங்களைப்பற்றி
இப்போது பார்க்கப்போவதில்லை.அது உயர்வானது.அது ஆன்மீகம்.
இப்போது
பார்ப்பது தாழ்ந்தது.
..
ஒரு
மனிதனை எடுத்துக்கொண்டால் அவன் பல உடல்களால் ஆக்கப்பட்டிருக்கிறான்
பஞ்ச
பூதங்களால் ஆன தூலசரீரம். இது திடம்,திரவம்,வாயு,அக்னி,ஆகாசம் என்ற பஞ்ச பூதங்களால்
ஆனது.
இந்த
உலகத்தில் நாம் காணும் எல்லாமே இதேபோல பஞ்ச பூதங்களால் ஆனதுதான்.
இந்த
பஞ்சபூதத்திற்கு தூல பூதம் என்று பெயர்.கண்களால் காணக்கூடியது.
..
இந்த
பஞ்சபூதங்கள் சூட்சுநிலையிலும் உள்ளன.இதே திடம்,திரவம்,வாயு,அக்னி,ஆகாசம் இவைகள் கண்ணுக்குத்
தெரியாமல் சூட்சுமமாகவும் உள்ளது. இதனால் இதற்கு சூட்சும பஞ்ச பூதங்கள் என்று பெயர்.
..
தூலம்,சூட்சுமம்
என்ற இரண்டு வார்த்தைகள் அடிக்கடி பயன்படுத்தப்படும் என்பதால் இந்த இரண்டு வார்த்தைகளின்
பொருள்பற்றி முதலில் தெரிந்துகொள்ளுங்கள். தூலபிரபஞ்சம்,சூட்சும பிரபஞ்சம். ஒரே பொருள்தான்
இரண்டு விதங்களில் தெரிகிறது.
..
மனிதன்
காண்பது தூலபிரபஞ்சம். ஆவிகள் காண்பது சூட்சும பிரபஞ்சம்.
இதே
கல் மண்,மரம் செடி,கொடி,மனிதர்கள்,விலங்குகள்,கட்டிடங்கள் உட்படி அனைத்தும் நமக்கு
தூலமாக தெரிகிறது. ஆவிகளுக்கு அதே பொருட்கள் சூட்சுமமாக தெரிகின்றன.
..
தூல
பொருட்களை நம்மால் காண முடியும். ஆனால் ஆவிகளால் அவற்றைக் காண முடியாது.
சூட்சும
பொருட்களை நம்மால் காண முடியாது.ஆனால் ஆவிகளால் காண முடியும்.
நமக்கு
இந்த உலகம் எப்படி தெரிகிறதோ அதேபோல ஆவிகளுக்கு இந்த உலகம் தெரியாது.
அது
சற்று வேறுவிதமாக தெரியும்.
..
சூடு,குளிர்
இந்த இரண்டும் நமது உடலை பாதிக்கிறது. ஆவி உடலை அவைகள் பாதிக்காது.அவைகளால் அவற்றை
உணர முடியாது. அப்படியானால் எது அவர்களை பாதிக்கும். ஒளி,இருள் இந்த இரண்டும்.
ஒளியை
ஆவிகளால் தாங்கிக்கொள்ள இயலாது. எனவே இருள் சூழ்ந்த இடங்களையே அவை தேர்ந்தெடுக்கும்.
..
மனிதனின்
உடல் ஒரு வடிவம் கொண்டது.
ஆவிகளின்
உடல் எப்படிப்பட்ட வடிவம் கொண்டது.
ஒருமுறை
மனிதர்களின் முற்பிறவிகளை அறிந்துசொல்லும் பெண்மருத்துவர் ஒருவர் ஒரு நடிகையின் முற்பிறவிகளைப்பற்றி
கேட்டுக்கொண்டே வந்தால் அப்போது ஒரு பிறவியில் அந்த பெண் கூறுகிறாள்.
இதோ
நான் பிறந்த வீட்டைப் பார்க்கிறேன், தெருவைப் பார்க்கிறேன், கோவில் கோபுரத்தை பார்க்கிறேன்.
அப்போது
இடை மறித்து அந்த ஆவிமருத்துவர் சரி உன்னைப்பார் உனது உடல் எப்படி இருக்கிறது. நீ ஆணா
பெண்ணா? என்று கேட்கிறாள்.
அப்போது
அந்த பெண் அழுதுகொண்டே கூறுகிறான். எனது உடலை பார்க்க முடியவில்லை. எனக்கு உடல் இல்லை
என்றாள். அப்போது அந்த மருத்துவர் அழாதே நீ ஆவி உடலில் இருக்கிறாய் என்று கூறுகிறார்.
..
ஆவிகளுக்கு
ஒரு உருவம் கிடையாது. காற்றிற்கு எப்படி சரியான உருவம் இல்லையோ அதேபோல ஆவிகளுக்கும்
சரியான உருவம் இல்லை. பழைய கால படங்களில் புகைபோன்ற வெள்ளைநிற தலையும் சிறியதாக வாலும்
இருப்பதை பார்த்திருக்கிறோம். ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு செல்லும்போது பார்ப்பதற்கு
இதேபோலவே தெரியும்.
..
நான்
ஆவியை நேராக பார்த்ததில்லை. ஆனால் பத்துவருடங்களுக்கு முன்பு ஒருவருடன் பேரும் வாய்ப்பு
கிடைத்தது.அவர் கல்லூரியில் படிக்கும் காலத்தில் பில்லி,சூன்யம் வைக்கும் நபர் ஒருவருடன்
பழக்கம் ஏற்பட்டது.அவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்வர். அங்கு இறந்தவர்களை புதைப்பது வழக்கம். அந்த கிராமத்திற்கென்று
ஒரு பொது இடம் உள்ளது.புதைத்த இடத்தில் ஒரு மரத்தை நட்டுவைப்பார்கள். இரவில் அந்த பகுதிகளுக்குள்
யாரும் செல்ல மாட்டார்கள். பில்லி சூன்யம் செய்பவர்கள் இந்த இடங்களில் இரவில் உலவுவார்கள்.
..
இந்த
மாணவனும் இன்னும் சில மாணவர்களும் சேர்ந்து பேயை காணவேண்டும் என்று மந்திரவாதியிடம்
கூறியிருக்கிறார். அவர் இரவில் வா நான் காட்டுகிறேன் என்றார். ஆனால் அவர்கள் பகவில்
காட்டுங்கள் என்று பிடிவாதம் பிடித்தார்கள். சரி மதியம் 12 மணிக்கு வாருங்கள். ஆனால்
புதைகாட்டிற்கு வெளியில்தான் நிற்க வேண்டும். உன்ளே வரக்கூடாது. அதுமட்டுமல்ல.எது நடந்தாலும்
யாரும் பயந்து அந்த இடத்தைவிட்டு ஓடிவிடக்கூடாது. சிறிது நேரம் அப்படியே நிற்க வேண்டும்.
பகல் நேரத்தில் ஆவிகள் வெளியே வராது. அப்படி வந்தால் கடும்கோபத்துடன் வெளியே வரும்
எனவே கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரித்தான். அதன்படி எல்லோரும் மதியம் 12 மணிக்கு
அங்கே சென்றார்கள். அவர்களைத்தவிர அந்த பகுதியில் வேறு யாரும் இல்லை.
.
மந்திரவாதி
ஒரு கோழி,தேங்காய்,பழம்,உடுக்கை போன்ற சில பொருட்களுடன் உள்ளே சென்றார். ஒரு மரத்தின்
அடியில் சென்று சிறிது நேரம் உட்கார்ந்து கோழியை பலியிட்டு இரத்தத்தை மரத்தின் வேரில்
ஊற்றி லேசாக உடுக்கையை அடித்தார் .
..
அப்பபோது
வெளியில் நின்றுகொண்டிருந்தவர்கள்.ஒவ்வொரு மரத்தின் அடியிலிருந்தும் கோபத்துடன் ஆவிகள்
வெளியே வந்ததை பார்த்தார்கள்.வெள்ளை தலையும் சிறிய வாலும் ஒடைய உருவங்கள் ஒள்ளிருந்து
பறந்து வந்தன.
அதைக்கண்ட
அவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஒரே ஓட்டமாக வீட்டிற்கே ஓடிவிட்டார்கள்.இன்னும் கொஞ்சநேரம்
நின்றிருந்தால் அதிர்ச்சியில் இறந்தேபோயிருப்போம் என்று அதை பார்த்தவர் கூறினார்.
..
அந்த
மந்திரவாதி பயப்படவில்லை.அடுத்தநாள் இவர்களைப்பார்த்து கடும்கோபத்தில் திட்டியிருக்கிறார்.
நீங்கள்
பயப்படக்கூடாது என்று நான் கூறியதை அலட்சியம் செய்துவிட்டீர்கள்.உங்களால் நான் சாகவேண்டியது.
நான் சற்று கவனக்குறைவாக இருந்திருந்தால் என்னை அடித்தே கொன்றிருக்கும் என்றாராம்.
..
இப்படி
பலபேர் பல கதைகளை வைத்திருப்பார்கள். எல்லா ஆவிகளும் இதேபோல்தான் இருக்குமா என்றால்
இல்லை.
பகவான்
ஸ்ரீராமகிருஷ்ணர் தனது சீடர்களுடன் ஒரு ஊருக்கு சென்றார்.இரவு நேரமாகிவிட்டதால் அங்கிருந்த
ஒரு வீட்டில் இரவு தங்குவதற்கு ஏற்பாடு செய்தார்கள். முதலில் உள்ளே சென்ற ஸ்ரீராமகிருஷ்ணர்
வேகமாக வெளியே வந்துவிட்டார்.இங்கு தங்க வேண்டாம் வேறு இடத்திற்கு போகலாம் என்று கூறி
வேறு இடத்திற்கு சென்றுவிட்டார்கள். மறுநா்ள் காலையில் சீடர்கள் ஏன் அந்த இடம் வேண்டாம்
என்றீர்கள் என்று கேட்டார்கள்.
அவர்
கூறினார் நான் உள்ளே சென்ற போது அருவருப்பான உடலில் கால்கள் இல்லாமல் இரண்டு பேய்கள்
நின்று கொண்டிருந்தன். அவைகள் என்னைப்பார்த்து நாங்கள் பாவிகள்.நீங்கள் புண்ணிய ஆத்மா.இது
நாங்கள் வசிக்கும் இடம். உங்கள் உடலிலிருந்து எழும் ஒளி எங்களை வேதனைப்படுத்துகிறது.கடும்
வேதனையை நாங்கள் உணர்கிறோம்.தயவுசெய்து இங்கிருந்து சென்றுவிடுங்கள் என்று கெஞ்சி கேட்டுக்கொண்டன.அதனால்தான்
இரவில் அங்கே தங்கவில்லை என்றார்.
இதைக்கேட்ட
சீடர்கள். இரவில் இதை எங்களிடம் சொல்லியிருந்தால் நாங்கள் பயத்தில் அலறியிருப்போம்
என்றார்கள்.
..
இங்கே
ஸ்ரீராமகிருஷ்ணர் முன்பு பார்த்துபோன்ற உடலைப்பார்க்கவில்லை. மிகவும் கோரமன முகம்,
தொங்கிய சதைகள் கொட்ட உடல்,கால்கள் இல்லை.அருகில் உள்ள கசாப்புகடைகளில் உள்ள மாமிசத்தை
முகர்த்து அதிலிருந்து வெளிப்படும் வாடையை ருசித்து வாழ்ந்து வந்துள்ளது.
..
தொடரும்....
..
மனிதன்
இறந்த பிறகு உடலிலிருந்து வெளியேறும் ஆவிகளின் நிலை என்ன?
இன்னும்
பல விசயங்கள் அடுத்து பார்க்கலாம்.
எழுத்துப்பிழைகளைப்
பொருட்படுத்தாதீர்கள்.
உங்கள்
கேள்விகளை 9360209541 வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பவும்,
டைப்செய்து
அனுப்பலாம் அல்லது குரல் பதிவில் அனுப்பலாம்.
..
சுவாமி
வித்யானந்தா(8-4-2025)
No comments:
Post a Comment