ஆவி
உலகம்-தொடர்-பாகம்-2
..
ஒருவர் இறக்கும் சமயம் என்னவாகிறது?
..
ஒருவர் தூக்க
மாத்திரைகளை அதிகம் சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்று வைத்துக்கொள்வோம்.
அப்போது என்ன நடக்கிறது?அவர் நிம்மதியாக இறந்துவிட்டார் என்று சிலர் கூறுவார்கள்.அது தவறு. தூக்கமாத்திரை சாப்பிட்டவுடன் நன்றாக தூக்கம் வந்துவிடும்.அதன்பிறகு மனம் கனவுகாண ஆரம்பிக்கும்.வேதனையான கனவுகள் வந்துகொண்டே இருக்கும்.அப்போது அந்த கனவிலிருந்து விழிப்பதற்காக மனத்தின் இன்னொரு பகுதி முயற்சிசெய்யும்.கை கால்களை அசைப்பதற்கு முயற்சி செய்யும்.ஆனால் முடியாது. உடலை எழுப்புவதற்கு முயற்சி செய்யும் ஆனால் முடியாது.இந்த முயற்சி கடுமையான நரகவேதனையைக் கொடுக்கும். மனம் பதபதைக்கும். ஒருபக்கம் கொடுமையான கனவு வந்துகொண்டே இருக்கும், இன்னொரு பக்கம் மனம் உடலை எழுப்ப முயற்சி செய்யும். ஒவ்வொரு நொடியும் ஒருவருட வேதனையை ஒரேநேரத்தில் வந்திப்பதுபோல இருக்கும். உடலின்மேல் பெரிய பாரத்தை வைத்து யாரோ அழுத்துவதுபோல இருக்கும்.
..
மனம் பதபதைத்துக்கொண்டிருந்தாலும் மூளை தூக்கமாத்திரை காரணமாக தூக்கத்தில் இருந்துகொண்டிருக்கும். உடலை எழுப்புவதற்காக கட்டளைகள் அங்கிருந்து வராது. கை கால்களை அசைப்பதற்கான கட்டளைகளை மூளையால் இட முடியாது.
..
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் மூளை செயல்படாமல் நின்றால்கூட மனம் இயங்கிக்கொண்டே இருக்கிறது. மனத்தில் பல கனவுகள் வந்துகொண்டே இருக்கிறது என்பதுதான். ஒருவர் கேட்ட கேள்விக்கான பதில் இதுதான். இறந்த பிறகு மூளையும் இறந்துவிடுமே அப்போது மனம் எப்படி இயங்கும்?
இதற்கான பதில் மேலே உள்ள சம்பவத்தில் விளக்கியிருக்கிறேன்.
..
நாம் காணும் உடல் தூலமானது.இதேபோல இன்னொரு உடல் உள்ளது.அது சூட்சுமமானது. தூலமான மூளை இருப்பதுபோல சூட்சுமமான மூளையும் உள்ளது.
..
மேலே உள்ள சம்பவத்தை தொடர்வோம். இப்போது தூக்கமாத்திரையின் வீர்யத்தின் காரணமாக மூளையிலிருந்து உடலுக்கு வரவேண்டிய கட்டளைகள் வராமல் போவதால் மூசு்சு படிப்படியாக நிற்க ஆரம்பிக்கும்.அதைத்தொடர்ந்து ரத்த ஓட்டம் நிற்க ஆரம்பிக்கும், இதயம் நின்றுவிடும். உள் உறுப்புகள் செயல்படாமல் நின்றுவிடும்.
மூளை கட்டளை இட்டால்தான் உடலின் உறுப்புகள் இயங்க ஆரம்பிக்கும் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்
..
நான் ஆன்மீக பயிற்சிகளில் தீவிரமாக இருந்த காலத்தில் ஒருநாள் ஆத்மாவின் தரிசம் கிடைத்தது.அப்போது உடல் எல்லையைக் கடந்து எல்லையற்ற நிலையை அடைந்ததை உணர்ந்தேன்.குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணரின் அருளால் அவரது கோவில் இது நடந்தது.அதன் பிறகு சாதாரண நிலைக்கு வந்துவிட்டேன். ஆனால் மனத்தில் எண்ணங்கள் எதுவுமே எழாத ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது. மனத்தில் எந்த எண்ணங்களும் எழாததால் மூச்சு நிற்க ஆரம்பித்து விட்டது. மூச்சு நின்றதால் இதயம் நிற்க தொடங்கியது.
..
உடனே நான் மூச்சுக்காக சிறிது தூரம் நடப்பேன். எதையாவது சிந்திக்கவேண்டுமே என்று எதையாவது சிந்திப்பேன் சிறிது நேரத்தில் மூச்சு வந்துவிடும். கொஞ்சேரம் கழிந்ததும் மீண்டும் மனத்தில் எந்த சிந்தனையும் இல்லாமல் நின்றுவிடும். மறுபடியும் மூச்சு நின்றுவிடும்.
காலை மாலை இரவு என்று மூச்சுக்காக நான் தவித்த காலம் அது. எதிர்கால திட்டம் எதுவும் இல்லாமல் வாழ்ந்த நாட்கள் அவை. இப்படியே சென்றால் உடலை காப்பாற்ற முடியாது என்பது புரிந்தது. எனவே எதிர்கால திட்டம் ஒன்று தேவை என்பதை உணர்ந்தேன்.
குருதேவரின் கருத்துக்களையும் விவேகானந்தரின் கருத்துக்களையும் மக்களிடையே பரப்புவேன் என்று குருதேவர் முன் சங்கல்பம் செய்துகொண்டேன். அதற்கான திட்டங்களைப்பற்றி மனத்தில் யோசிக்க ஆரம்பித்தேன். அதன் பிறகு மூச்சு சீராகியது. மனத்தில் எண்ணங்கள் வரத்தொடங்கியது.
..
இதிலிருந்து நான் புரிந்துகொண்டது என்னவென்றால் சிந்தனை நின்றுவிட்டால் மூளை செயல்படுவதை நிறுத்திவிடும். மூளை செயல்படுவதை நிறுத்திவிட்டால் இரத்த ஓட்டம் நின்றுவிடும். இதயம் நின்றுவிடும். உடல் உறுப்புள் செயல்படாமல் நின்றுவிடும். அனைத்து கட்டளைகளும் மூளையிலிருந்தே வருக்கின்றன.
..
இப்போது ஏற்கனவே கூறிய சம்பவத்திற்கு வருவோம். தூக்க மாத்திரைகளை அதிகம் சாப்பிட்டவரின் மூளை செயல்படவில்லை. எனக்கு என்ன அனுபவம் ஏற்பட்டது. மூளை நின்றாலும் நான் சாகவில்லை. எனது உணர்வு சாகவில்லை. என்பதை கூறினேன். அதேபோல தூக்கமாத்திரை சாப்பிட்டவரின் மூளை நின்றுவிட்டாலும் அவர் சாகவில்லை. அவரது உணர்வு சாகவில்லை. எனது அனுபவத்தில் நான் மனத்தின் எண்ணங்களை நிறுத்திவிட்டடேன்.அதனால் மனம் அமைதியாக இருந்தது. ஆனால் தூக்க மாத்திரை சாப்பிட்டவர் எத்தனைனோ கவலைகள் காரமாக மனவேதனையில் தவித்து வந்துள்ளான். எனவே மனம் அவருக்கு மிகவேகமாக இயங்கிக்கொண்டெ இருக்கும். மனத்தில் பற்பல சிநதனைகள் எழுந்துகொண்டே இருக்கும்.
..
ஏற்கனவே அவர் கனவுலகில் சஞ்சரித்துக்கொண்டிருப்பதால் அந்த கனவுகளிலிருந்து வெளியே வரவே முடியாது. மனத்தின் ஒரு பகுதி உடலை எழுப்ப முயற்சி செய்துகொண்டே இருக்கும்.மனத்தின் ஒரு பகுதி பல வேதனையான கனவுகளை கண்டுகொண்டெ இருக்கும். இது ஒரு தொடர்ந்துகொண்டே இருக்கும்.
..
சரி உடல் இறந்துவிட்டது.அதற்கான இறுதி சடங்குகள் செய்ய துவங்கிவிட்டார்கள்.உறவினர்கள் சுற்றி அமர்ந்து அழுதுகொண்டிருக்கிறார்கள். இப்போது அந்த மனிதரின் நிலை எப்படி இருக்கும்?.இப்போதும் அவர் அதே கனவுலகிலேதான் சஞ்சரித்துக்கொண்டிருப்பார். இங்கு நடக்கும் சம்பவங்கள் எதுமே அவருக்கு தெரியாது.
அவர் உடலை தொடர்ந்து எழுப்ப முயற்சிப்பதும் அது முடியாமல் மனவேதனை அடைவதும்,கனவில் நிகழும் சம்பவங்களைக்கண்டு கடும் வேதனை அடைவதும் இப்படியே நடக்கும்.
..
உடலை மயானத்திற்கு கொண்டுசென்று எரித்துவிட்டார்கள் என்று வைத்துக்கொள்வோம்.அப்போது?
அப்போதும் அந்த நபர் அதை உணரமாட்டார். கனவுலகிலிருந்து அவரால் வெளியே வரவே முடியாது.
எத்தனை நாட்கள் இது தொடரும்?
அனைத்திற்கும் ஒரு முடிவு உண்டு. அந்த மனிதரின் பாவ சம்ஸ்காரங்கள் ஓரளவு முடியும்வரை இது தொடர்ந்துகொண்டே இருக்கும். சம்ஸ்காரம் என்றால் பல பிறவியில் சேர்த்து வைத்துள்ள புண்ணியபாவ பலன்கள்.
தீய சம்ஸ்காரம் அதிகம் இருப்பவர் அதிக நாட்கள் இதேபோல கனவிலேயே நீடிப்பார்.
..
அவர்களைப் பொறுத்தவரை ஒருமணிநேர வேதனை என்பது உதாரணமாக நாம் மனித உடலில் ஒரு மாதம் அனுபவிக்கும் வேதனைக்கு ஈடாக இருக்கும்.அவர்கள் சிலமாதம் அனுபவிக்கும் வேதனை என்பது மனிதன் பல பிறவிகளில் அனுபவிக்கும் வேதனைக்கு ஈடாக இருக்கும். எனவே சில நாட்களிலேயே ஓரளவு பாவ சம்ஸ்காரம் முடிந்த பிறகு அந்த கனவுகள் குறைந்து மனம் விழிப்பு ஏற்பட்டுவிடும். தான் இறந்துவிட்டோம் என்பது அவர்களுக்கு புரிய ஆரம்பிக்கும். அதன் பிறகு எங்கு இறந்தார்களோ அந்த இடத்திலேயே சுற்றிக்கொண்டிருப்பார்கள்.
..
வேதனை மிகுந்த, ஏக்கம் நிறைந்த,இருள் படிந்த ஓர் உடலில் அவர்கள் அலைவார்கள்.அதன்பிறகு தனக்கு அன்பானவர் யார்? அவரை உண்மையிலேயே நேசித்தது யார்? அவர்களைப்பற்றிய எண்ணங்கள் வரத்தொடங்கும். அவர்கள் இருக்கும் இடம் எது? அதைத்தேடும்.
..
ஆனால் ஆவிகளுக்கு பல நெருக்கடிகள் உள்ளன. அவர்களால் சில இடங்களுக்கு செல்ல முடியாது. பல ஆவிகளின் தொடந்தரவை சந்திக்க வேண்டியிருக்கும். பலர் இந்த ஆவிகளை அடிமைப்படுத்த நினைப்பார்கள்.
இதுபற்றி இனி வரும்பதிவுகளில் பார்க்கலாம்...
..
தொடரும்....
..
இன்னும்
பல விசயங்கள் அடுத்து பார்க்கலாம்.
எழுத்துப்பிழைகளைப்
பொருட்படுத்தாதீர்கள்.
உங்கள்
கேள்விகளை 9360209541 வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பவும்,
டைப்செய்து
அனுப்பலாம் அல்லது குரல் பதிவில் அனுப்பலாம்.
உங்கள்
கேள்விகளுக்கான பதில்கள் இனிவரும் பதிவுகளில் வரும்
..
சுவாமி
வித்யானந்தா(9-4-2025)
No comments:
Post a Comment