Tuesday, 15 April 2025

ஆவி உலகம்-தொடர்-பாகம்-6

 

ஆவி உலகம்-தொடர்-பாகம்-6

..

ஆவி உலகம் தொடர் மீண்டும் வரவேண்டும் என்று பலர் கூறியிருந்தீர்கள்.

ஆவிகளை கட்டுப்படுத்தி ஆணி அறைந்து வைப்பது

செம்பு கலயத்திற்குள் அடைத்துவைப்பது சமாதியைவிட்டு வெளியேறாமல் அடைத்துவைப்பது போன்றவற்றை கேள்விப்பட்டிருப்பீர்கள்.

இதை எப்படி செய்கிறார்கள்?

..

ஆவிகளுக்கு தேவையானது உணவு. உணவுக்காக அவைகள் பல இடங்களில் அலைந்துகொண்டிருக்கும். யார் இறைச்சி வைத்து உணவு படைக்கிறார்களோ அவர்கள் சொல்வதை கேட்கும் அவர்கள் பின்னால் சுற்றும்.

எனவே மந்திரவாதிகள் இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி  திருமணமாகாமல் இறந்த ஆவி,அல்லது தீய ஆவி, வீட்டில் உள்ளவர்களால் கைவிடப்பட்ட ஆவி இவைகளில் எது அவர்களுக்கு சாதகமாக இருக்குமோ அந்த ஆவி வசிக்கும் இடத்தை அறிந்துகொண்டு அதற்கு உணவு படைத்து அவர்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடுகிறார்கள்.

பிறகு அந்த ஆவியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து தங்களுக்குத் தேவையான பல காரியங்களை சாதித்துக்கொள்வார்கள்.

..

ஆவிகளால் பிறரது மனத்தை அறிந்துசொல்ல முடியும்.முற்காலத்தில் நடந்தவைகளை சொல்ல முடியும். சில ஆவிகளால் எதிர்காலத்தில் என்ன நடக்க இருக்கிறது என்பதையும் ஓரளவுக்கு சொல்ல முடியும். எனவே குறிசொல்பவர்கள் ஆவிகளை இதற்காக பயன்படுத்துகிறார்கள்.

குடுகுடுப்பைக்காரர்கள் தங்களுடன் ஒரு ஆவியை வைத்திருப்பார்கள். அது அந்த வீட்டில் நடந்தது,இனி நடக்க இருப்பது,வீட்டில் உள்ள பிரச்சினைகள் இவைகளை சொல்லும்.

ஆவி எப்படி சொல்லும்?

ஆவி மந்திரவாதியிடம் சொல்லும்.

இது எப்படி நடக்கும் என்றால் சூட்சும உடலில் வசிக்கும் ஆவி,மந்திரவாதியின் சூட்சும உடலுக்கு பதில் சொல்லும்.

அது மற்றவர்களுக்கு கேட்காது.அதைக்கேட்டு அவர் பிறருக்கு சொல்லிக்கொண்டிருப்பார்கள்.

குறி சொல்பர்கள் வசிக்கும். இருக்கும் இடத்திற்கு சென்றால் அங்கே சிறுதெய்வ வழிபாடு ஒன்று இருப்பதை பார்க்கலாம்.

இவ்வாறு ஆவிகளை வசப்படுத்தி தங்கள் நன்மைக்காக பயன்படுத்திக்கொள்பவர்கள் முடிவில் அந்த ஆவிகளாலோ அல்லது பில ஆவிகளால் அழிந்துபோவார்கள் என்பது அந்த மந்திரவாதிக்குத் தெரியாது.

..

சில ஆவிகள் பிறருக்கு தொந்தரவு கொடுக்கும். அந்த ஆவிகளையும்  கட்டுப்படுத்தி பிறகு அவைகளை செப்பு கலயத்திற்குள் அடைத்து மண்ணில் மிக ஆழமாக புதைத்துவிடுவார்கள். அவ்வாறு அடைக்கப்பட்ட ஆவி தீண்ட காலம் நரக வேதனையை அங்கே அனுபவித்துக்கொண்டிருக்கும். பிறகு அதன் பாவங்கள் தீர ஆரம்பித்தபிறகு கலசத்திலிருந்து வெளியேறும்.

..

சிலர் தீய ஆவிகளை மரபொம்மைக்குள் ஏற்றி மரத்தில் ஆணியால் அறைந்து வைப்பார்கள்.பல ஆண்டுகள் இதில் கட்டப்பட்டு சித்திரவதையை அனுபவித்து பிறகு பாபம் நீங்கிபிறகு விடுதவை அடையும்.

..

கிராமங்களில் ஒவ்வொரு தெருவிற்கும் ஒரு சிறுதெய்வ கோவில் இருக்கும். நாம் அந்த கோவில்களை கடந்துபோக நேர்ந்தால் சிறு காணிக்கையை அந்த தெய்வத்திற்கு வழங்கிவிட்டு அந்த வழியே செல்வது நல்லது.

சிறுதெய்வங்களை அலட்சியப்படுத்துவதோ அல்லது அவர்கள் மனம்புண்படும்படி நடந்துகொள்வவோ கூடாது.

..

இந்து சமுதாயத்தில் தோன்றிய மகான்கள் அனைவரும் ஆவி வழிபாடுகளை எதிர்த்தே பேசியிருக்கிறார்கள்.ஆவிகளை வழிபடாதீர்கள். அவர்களை அவர்கள் வழிலேயே விட்டுவிடுங்கள்.இறந்தவர்களை நினைத்து அழாதீர்கள்.அவர்கள் அடுத்த பிறவிக்குள் செல்லவிடுங்கள் என்றே கூறியிருக்கிறார்கள்.

மிக பண்டைய காலத்திலிருந்து இன்றுவரை இந்த உபதேசம் நடந்துகொண்டேதான் இருக்கிறது. என்றாலும் சிறுதெய்வ வழிபாடு ஆவி வழிபாடு போன்றவை தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கிறது.

..

எனவே நாம் ஆவிகளை வழிபட்டாலும் சரி வழிபடாவிட்டாலும் சரி அவைகளைப்பற்றிய அறிவை வளர்த்துக்கொள்வது நல்லது.

ஒன்றைப்பற்றி தெரியாதவரைதான் பயம் இருக்கும். தெரிந்துகொண்டால் பயம் விலகிவிடும்.

..

எனக்கு தெரிந்த கிறிஸ்தவர் ஒருவர் இந்துதெய்வங்களை வெறுப்பவர்.

ஒருநாள் இரவில் சிறுதெய்வம் வசிக்கும் கோவில் ஒன்றின்முன் நின்று வேண்டுமென்றே சிறுநீர் கழித்தார்,பிறகு சாத்தானே அப்பால்போ! நான் ஏசுவை நம்புபவர் என்று கூறிவிட்டு அங்கிருந்து வீட்டிற்கு வந்தார். ஆனால் அன்று இரவு அவர் கடும் காய்ச்சலால் துன்புற்றார். சர்ச்சில் சென்று எவ்வளவோ ஜெபம் செய்து பார்த்தார்கள்.மருத்துவமனையில் வைத்து பார்த்தார்கள் ஆனால் காய்ச்சல் சரியாகவில்லை. கடைசியில் உடம்பு துரும்பாக மாறி இளைத்து இறந்துவிட்டார்.

இந்துக்கள் ஒருபோதும் இப்படி சிறுதெய்வங்களை அலட்சியப்படுத்த மாட்டார்கள்.

..

ஒருமுறை ஒருவர் மலை அடிவாரத்தில் இருந்த ஒரு காட்டிலிருந்து  நிறைய பொருட்களை எடுத்து வீட்டிற்கு வந்துவிட்டார்.

அதன் பிறகு அவரால் தூங்க முடியவில்லை.ஏதேதோ பேச ஆரம்பித்துவிட்டார். ஏதோ ஆவி அவருடன் வந்திருப்பதை வீட்டில் உள்ளவர்கள் உணர்ந்துகொண்டார்கள்.உடனே மந்திரவாதியை அழைத்து பூசைபோட்டு, உடுக்கை அடித்து பார்த்தார்கள்.அப்போது அந்த காட்டில் பாதுகாவலாக இருந்த ஆவி ஒன்று இவரின் உடம்பிற்குள் ஏறி இவரை தொந்தரவு செய்தது தெரிந்தது. ஆவி பிடித்த மனிதர் மலையாளத்தில் பேசினார் . எனக்கு காட்டில் இருக்க பிடிக்கவில்லை.இங்கே கோவில் கட்டி ஆண்டுக்கு ஒருமுறை பூசை வைத்தால் இவரைவிட்டு வெளியேறுகிறேன் என்றது. அது கூறியதை ஏற்றுக்கொண்டு சிறியதாக கோவில்கட்டி பூசை வைத்தார்கள்.அந்த ஆவி அவரைவிட்டு விலகிவிட்டது. இது நடந்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போதும் அந்த குடும்பத்தினர் ஆண்டுக்கு ஒருமுறை அங்கே பூசை வைத்து வழிபாடு நடத்துகிறார்கள். ஒருவேளை வழிபாடு நடத்தாவிட்டால் என்னவாகும்? பழைய படி அந்த ஆவி குடும்பத்தில் உள்ள யாரையாவது தொந்தரவு செய்யும்.

..

முற்காலத்தில் அணைகள் அல்லது பெரிய குளங்கள்,ஏரிகள் கட்டும்போது எதிரிகளிடமிருந்து ஏரிகளை,அணைகளை காப்பதற்காக திருமணமாகாத யாரையாவது பலி கொடுத்து, அவர்களுக்கு கோவில் எழுப்பி, ஆண்டுதோறும் விழா எடுப்பார்கள். எனவே நீங்கள் தெரியாத ஊர்களுக்கு செல்லும்போது அங்கே உள்ள குளங்களின் அருகில் உள்ள கோவிலின் அருகே செல்ல நேர்ந்தால் சிறு காணிக்கையை செலுத்துங்கள்.

..

 

தொடரும்...

..

இன்னும் நீங்கள் கேட்ட பல கேள்விகளுக்கு பதில் சொல்லவில்லை.

அடுத்துவரும் பதிவுகளில் பதில் சொல்கிறேன்.

உங்கள் கேள்விகளை +919360209541 வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பவும்,

டைப்செய்து அனுப்பலாம் அல்லது குரல் பதிவில் அனுப்பலாம்.

 

..

சுவாமி வித்யானந்தா-KANYAKUMARI (14-4-2025)

 

No comments:

Post a Comment

பித்ருக்களுக்கு தினமும் உணவிட வேண்டும்

  பித்ருக்களுக்கு தினமும் உணவிட வேண்டும் .. துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை. -திருக்குறள் ...