Saturday, 19 April 2025

ஆவி உலகம்-தொடர்-பாகம்-11

 

ஆவி உலகம்-தொடர்-பாகம்-11

..

ஆவியால் பாதிக்கப்பட்ட மனிதனை குணப்படுத்துவது எப்படி?

..

ஆவிகளைப்பற்றி நாம் தொடர்ந்து பார்த்துவருகிறோம்.

மனிதனுக்கு தூலஉடல் சூட்சுஉடல் இருப்பதைப்பார்த்தோம்.

ஆவிகளுக்கு தூலஉடல் இல்லை. சூட்சும உடல் மட்டுமே இருப்பதையும் விளக்கியிருக்கிறேன்.

சில நேரங்களில் பலவீனமான மனிதனின் உடலுக்குள் இந்த ஆவிகள் புகுந்து,அந்த தூலஉடலை தங்கள் உடலாக கருதத்தொடங்கிவிடுகின்றன.

ஏற்கனவே ஒரு சூட்சுஉடல் உள்ளது,அத்தோடு இந்த ஆவிகளின் சூட்சுமஉடலும் அதற்குள் வந்துவிடுகிறது.

இப்போது ஒரு தூலஉடலுக்குள் இரண்டு சூட்சுமஉடல் வந்துவிட்டது.

..

இதனால் மனிதன் சாதாரணநிலையிலிருந்து அவ்வப்போது விபரீதமான மனநிலைக்கு சென்றுவிடுகிறான்.

தேவையிலலாமல் கத்துவது,கோபப்படுவது, எதையெதையோ கண்டு பயப்படுவது.பிறர்மீது எரிச்சலடைவது போன்ற மனிநிலைக்கு அவ்வப்போது செல்கிறான்.

சில ஆவிகள் அதிகம் ஆக்ரோசமாக இருக்கும் எனவே அந்த உடலை ஆட்டிப்படைக்கும். இதனால் ஆவி பாதிக்கப்பட்டவர்களால் ஓரிடத்தில் சும்மா இருக்கமுடியாது. இதையே பேயாட்டம் என்கிறார்கள்.

சில ஆவிகள் சாந்தமானவை,அதனால் அதன் தாக்கம் வெளியில் அதிகம் தெரியாது.

..

இப்படி ஆவியால் பாதிக்கப்பட்டவரை உடனடியாக அதன் ஆதிக்கத்திலிருந்து மீட்கவேண்டும். காலம் தாழ்ந்துவிட்டால் பிறகு ஆவி அந்த உடலைவிட்டு வெளியே செல்லாது.

கேரளாவில் உள்ள சோட்டாணிக்கரை பகவதிஅம்மன் கோவில் போன்ற இடங்களில் ஆவியை பிடித்து கட்டுப்படுத்தி மரத்தில் ஆணியால் அறைந்துவைக்கும் வழக்கம் உள்ளது.

இன்னும் சிலர் அந்த வேலைகளை செய்யலாம்.அதுபற்றி எனக்குத்தெரியாது.

ஒரு மனிதனின் உடலில் அப்படி ஆவி புகுந்து தொந்தரவு செய்வதை ஏற்க முடியாது.

அதற்காக ஆவிகளை தண்டிக்க வேண்டும்.

..

சில வழிகளை நான் பார்த்திருக்கிறேன்.

முதலில் ஆவிக்கு சூடாக மாமிசம் வைத்து படையல்போடுவார்கள். அந்த உணவை சாப்பிடுவதற்காக ஆவி அந்த மனிதனின்  உடலைவிட்டு வெளியேறும். அந்த நேரத்தில் ஆவியால் பாதிக்கப்பட்ட நபரை அங்கிருந்து அப்புறப்படுத்தி சக்தி வாய்ந்த கோவிலுக்குள் தங்கியிருக்கும்படி வைக்க வேண்டும்.

பிறகு ஆவியால் பாதிக்கப்பட்ட மனிதருக்கு மனதைரியத்தை வரவழைக்கவேண்டும்.

சிவன்,விஷ்ணு அல்லது உயர் தெய்வங்களின் ஏதாவது மந்திரங்களை தொடர்ந்து உச்சரிக்கும்படி கூறவேண்டும்.

ஏதாவது ஒரு தெய்வத்திடம் ஆழ்ந்த பக்தி செலுத்தும்படி கூறவேண்டும்.

இவ்வாறு அந்த மனிதன் பாதுகாப்பாக கோவிலில் தங்கியிருக்கும்போது இவைகள் எல்லாவற்றையும் செய்ய வேண்டும்.

தேவையான அளவு நல்ல உணவு உண்டு. ஓய்வெடுத்து,ஆன்மீகத்தில் ஈடுபாடுகொண்டபிறகு வீட்டிற்கு வரலாம்.

வீடு முழுவதும் தெய்வீக நிலை இருக்கும்படி பாரத்துக்கொள்ளவேண்டும். அகால மரணமடைந்தவரின் படங்களை  வீட்டிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும்.

இவ்வாறு சில நாட்கள் தொடர்ந்து பக்தி மார்க்கத்தில் பயணித்தால் பிறகு ஆவிகளின் தொந்தரவு ஏற்படாது.

..

ஒருவேளை ஆரம்பத்திலேயே இதை கண்டுபிடிக்கவில்லை. நாட்கள் கடந்துவிட்டது.

இப்போது என்ன செய்வது? மருத்துவர்கள் இதற்காக சில மாத்திரைகளை கொடுக்கிறார்கள்.

அந்த மாத்திரை சாப்பிட்ட சிறிது நேரத்தில் நிலமை கட்டுக்குள் இருக்கும்.

மாத்திரையின் வீர்யம் குறைந்ததும் மீண்டும் ஆவியின் செயல்பாடு எழ ஆரம்பிக்கும்.

ஆயுள் முழுவதும் இந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.

ஆவியால் பாதிக்கப்பட்டவரால் மற்றவர்கள் போல எல்லா வேலைகளையும் செய்ய முடியாது.

இந்த மாத்திரை மனத்தை மந்தநிலைக்கு ஆழ்த்துகிறது.

இது நிரந்தரதீர்வாக இருக்காது.

..

அந்த ஆவியை வலுக்கட்டாயமாக விரட்டினால் விளைவு விபரீதமாக இருக்கும். மனிதன் இறந்துபோகவும் வாய்ப்பு உள்ளது.

எனவே ஆன்மீக சாதனைகள் மூலம் ஆவியின் செயல்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும்.

தவங்கள், விரதங்கள்,ஆன்மீக கருத்துக்களை கேட்டல், ஆன்மீகத்தைக்குறித்து சிந்தித்தல்,கோவில்களில் உழவார பணிகள் செய்தல்  போன்றவைகள் மூலம்மனத்தை படிப்படியாக உயர்ந்த நிலைக்கு கொண்டுவர வேண்டும்.

இதனால் ஆவி வெளியாறேிவிடுமா? வெளியேறாது. ஆவியும் ஆன்மீகத்தின் பக்கம் திரும்பிவிடும்.

அதுவும் படிப்படியாக சாந்தமாகிவிடும்.

இது ஒரு நல்ல வழி. ஆனால் ஆரம்பத்தில் இதற்காக கடும் முயற்சி செய்ய வேண்டும்.

ஆவியால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆரம்பத்திலேயே தியானம்,ஜெபம் போன்றவற்றை பழகக்கூடாது.

அதை ஆவிகளால் தாங்க இயலாது.

ஆரம்பத்தில் கோவில்களில் உழவாரப்பணிகள் செய்ய வேண்டும். கோவிலை சுற்றி தினமும் சுத்தமாக வைத்தல், இறைவனுக்கு  மாலைகள் தொடுத்தல் போன்ற உடல்வேலைகளையே ஆரம்பத்தில் செயய் வேண்டும்.

இப்படி தொடந்து செய்ய பிறகு ஆன்மீக பாடல்களை கேட்டல்,பாடுதல் இப்படி படிப்படியாக உயரவேண்டும்.

..

ஆவி பாதிக்கப்பட்டவர்கள் மனத்தை ஒருநிலைப்படுத்த முடியாது. எந்த அளவுக்கு இதை உறுதியோடு செய்ய முடியும் என்று தெரியாது. இருந்தாலும் முடிந்த அளவு இந்த வேலைகளை செய்யவேண்டும்.

தினசரி ஒரு ஒழுங்கு முறையுடன் தொடர்ந்நு ஆன்மீக வேலைகளை செய்தால் ஆக்ரோசமாக ஆவிகள்கூட அடங்கிடும்.

..

ஒருவேளை இந்த முறைகள் எதுவுமே எடுபடாவிட்டால், அவர்களை அப்படியே விட்டுவிடுங்கள்.

அவர்களை அன்போடு நடத்துங்கள். அவர்கள் செய்யும் சிறுசிறு தவறுகளை மன்னித்துவிடுங்கள்.

அவர்களை திருத்த முயலாதீர்கள். கண்டிப்பாக அடிக்காதீர்கள்.

அவர்களை கோபப்படுத்தக்கூடாது. முடிந்த வரை அவர்கள் கூறுவதற்கு எதிர்வாதம் செய்யாமல் இருக்க வேண்டும்.

சில இடங்களில் ஆவி பாதித்த நபரை சங்கிலியால் கட்டிப்போடுகிறார்கள்.

சற்று அன்போடு கவனித்தால் சங்கிலியால் கட்டிப்போட தேவை இல்லை.

அன்புக்கு எல்லாமே அடிமையாவிடும். மிருகங்கள் கூட அன்புக்கு அடிமையாகிவிடும்.

அப்படியிருக்கும்போது ஆவிகள் எம்மாத்திரம்? அவர்களும் இதற்கு முன்பு மனிதர்களாக இருந்தவர்கள்தானே.அவர்களது பிடிவாத குணத்தினால்,அறிவற்ற தன்மையினால்.பாவத்தின் விளைவுகளால் ஆவிகளாக சுற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அன்பே அனைத்திற்கும் மருந்து.

..

இந்த கட்டுரை உங்களுக்கு எந்த அளவுக்கு பிடிக்கும் என்று எனக்குத்தெரியாது.

..

மேலும் ஆவிகள் தொடர்பான கேள்விகள் இருந்தால் கேளுங்கள்.

அடுத்துவரும் பதிவுகளில் விளக்குகிறேன்.

..

தொடரும்...

..

உங்கள் கேள்விகளை +919360209541 வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பவும்,

டைப்செய்து அனுப்பலாம் அல்லது குரல் பதிவில் அனுப்பலாம்.

 

..

சுவாமி வித்யானந்தா-KANYAKUMARI (19-4-2025)

 

பித்ருக்களுக்கு தினமும் உணவிட வேண்டும்

  பித்ருக்களுக்கு தினமும் உணவிட வேண்டும் .. துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை. -திருக்குறள் ...