ஆன்மீகமும்-விஞ்ஞானமும்-பாகம்-11
.
அதிஷ்டம்
(luck) என்ற ஒன்று இருக்கிறதா?
..
சிலர்
வாழ்க்கையில் திடீரன்று கோடீஸ்வரர் ஆகிவிடுகிறார்.லாட்ரியில் பணம் கிடைப்பதாலோ அல்லது
வேறு வழிகளிலோ இது கிடைக்கலாம். அவருக்கு அதிஷ்டம் அடித்திருக்கிறது என்கிறோம்.
எற்றாவது
ஒருநாள் நாம் கோடீஸ்வரர் ஆக மாட்டோமா என்ற ஆசையில் சிலர் எல்லா பணத்தையும் இழக்கிறார்கள்.
சிலர் தங்களுக்கு என்றாவது ஒருநாள் அதிஷ்டம் அடிக்கும் என்று காலம் முழுவதும் காத்திருக்கிறார்கள்.ஆனால்
அவர்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை. சிலர் ஒருதடவை முயற்சி செய்ததும் அதிஷ்டம் அடித்துவிடுகிறது.
..
எந்த
செயலும் அதற்கான முந்தைய செயலுடன் தொடர்புடையதுதான். புதிதாக எதுவும் நிகழ்வதில்லை
என்று விஞ்ஞானம் சொல்கிறது. நமது கர்மகோட்பாடும் இப்படியே சொல்கிறது. அப்படி இருக்கும்போது
திடீரென்று எப்படி பணம் கிடைத்தது?
..
இதற்கான
விடை மகாபாரதத்தில் உள்ளது. திரௌபதி யுதிஷ்டிரரிடம் கூறுகிறாள். சிறிதளவு முயற்சியிலேயே
சிலருக்கு நிறைய செல்வம் கிடைக்கிறது. இதை அவர்கள் அதிஷ்டம் என்கிறார்கள். ஆனால் இந்த
அதிஷ்டம் அவர்கள் முந்தைய பிறவியில் செய்த செயல்களின் பலனாக கிடைத்தது.அல்லது அவர்களது
முன்னோர்கள் செய்த புண்ணிய பலத்தினால் கிடைத்தது என்பதை அவர்கள் அறிவதில்லை.
முயற்சி
எந்த அளவு உள்ளதோ அந்த அளவுக்குத்தான் அதன் பலன் கிடைக்கும் என்று கூறுகிறாள்.
நமது
சாஸ்திரத்தில் பல இடங்களில் இந்த கருத்து அடிக்கடி கூறப்படுகிறது. அதிஷ்டம் என்பது
முந்தைய பிறவிகளில் நாம் செய்த புண்ணியத்தின் பலனே தவிர புதிதாக எதுவும் வருவதில்லை
..
இந்த
பிறவியில் கடினமாக உழைத்தால் அதற்கான பலன் இந்த பிறவியில் கிடைக்காவிட்டாலும் அடுத்த
பிறவியில் கண்டிப்பாக கிடைக்கும் என்பதையே இது காட்டுகிறது. சிலருக்கு திடீரென்று பணம்
கிடைக்கிறது. கிடைத்த வேகத்திலேயே அது அவர்களைவிட்டு போய்விடுகிறது. சிலர் தவறான வழிகளில்
திடீரன்று நிறை பணம் சம்பாதிக்கிறார்கள்.இதெல்லாம்
அதிஷ்டம் அல்ல. இந்த பணம் வந்தவேகத்தில் திரும்பி சென்றுவிடும். திரும்பபோகும்போது
நம்மிடம் ஏற்கனவே உள்ள பணத்தை சேர்த்துகொண்டு சென்றுவிடும்.
..
நேர்மையாக
நாம் உழைத்தது மட்டுமே நமக்கு சொந்தம்.மற்றவைகள் வந்ததுபோலவே திரும்ப சென்றுவிடும்.
நீதிமன்றங்கள்
திருடர்களை தண்டிக்காமல் இருக்கலாம், கொலை செய்பவர்களை தப்பிக்கவிடலாம், கொள்ளையடிப்பவர்களை
தண்டிக்காமல் இருக்கலாம் ஆனால் விஞ்ஞான விதிப்படி ஒவ்வொரு செயலும் அதற்கான பலனை கொண்டு
வந்தே தீரும். ஒருவேளை அதை அவர்கள் இந்த பிறவியில் அனுபவிக்காவிட்டால் அடுத்த பிறவியில்
அனுபவிப்பார்கள்.
..
இந்த
பிறவியில் நிறைய தவறுகள் செய்து குறுகிய காலத்தில் அதிக இன்பங்களை அனுபவிப்போம், இனிவரும்
பிறவியைப்பற்றி கவலைப்பாமல் இருப்போம்.அது வெறும் மூடநம்பிக்கை என்று சிலர் சொல்லலாம்.
நீங்கள்
ஒன்று ஆன்மீகத்தை நம்பவேண்டும். அல்லது விஞ்ஞானத்தை நம்பவேண்டும். இரண்டையுமே நம்பாவிட்டால்
உங்களைப்போன்ற முட்டாள் வேறுயாரும் இருக்க மாட்டார்கள்.
..
நமது
சாஸ்திரம் ஒரு விஷயத்தைக் கூறுகிறது. மனிதன் ஏன் தொடர்ந்து தீயவனாகவே இருக்கிறான் என்று
கேட்டதற்கு அது கூறும் பதில் இதுதான். முதலில் மனிதனின் மனதில் அகங்காரம் எழுகிறது.
பின்பு அந்த அகங்காரம் புத்தியை மறைக்கிறது. அவர்களது மனம் தவறானதை சரியானதாகவும்,
சரியானதை தவறானதாகவும் காட்டி அவர்களை குழப்புகிறது. மனத்தின் இந்த மாயையை உண்மை என்று
நம்பி அவர்கள் தொடர்நது தவறு செய்கிறார்கள். தான் செய்வது சரியா தவறா என்பதை அவர்களக்குள்
இருக்கும் மனசாட்சியான ஆன்மா அறியும். எப்போது அந்த தீயவர்கள் அமைதியான மனநிலையை அடைகிறார்களோ
அப்போது அவர்களது மனசாட்சி அவர்கள் முன்பு செய்த எல்லா செயல்களையும் திரையிட்டு அவர்கள்
முன் காட்டுகிறது.அதைக்கண்டு அவர்கள் நடுங்கிப்போகிறார்கள். ஏனென்றால் இந்த பிறவியில்
அவர்கள் பிறருக்கு செய்த கொடுமைகளை அடுத்த பிறவியில் அவர்கள் அனுபவிக்க வேண்டும் என்பது
அவர்களுக்கு உணர்த்தப்படுகிறது.
..
தீயவர்கள்
என்ன நினைக்கிறார்கள் என்றால், இந்த ஒரு வாழ்வுதான் இருக்கிறது. எப்படியாவது விரைவாக
பணம் சம்பாதித்து எவ்வளவு அதிக இன்பத்தை இந்த உலகத்தில் அனுபவிக்க முடியுமோ அத்தனையையும்
அனுபவித்துவிடவேண்டும். அனுபவிக்காமல் எதையும் விட்டுவிடக்கூடாது. ஏனென்றால் இந்த ஒரு
வாழ்க்கை மட்டுமே நமக்கு உள்ளது. எப்படியாவது நீதிமன்றத்தை ஏமாற்றிவிட வேண்டும். குறுகிய
வழியில் பணம் சம்பாதிக்க வேண்டும் பிறகு அந்தப் பணத்தைக்கொண்டு மேல்அதிகாரிகளுக்கு
லஞ்சம் கொடுக்க வேண்டும், நீதிபதிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் இப்படி செய்தால்
எல்லாவற்றிலிமிருந்தும் தப்பித்துவிடலாம். கடைசி காலம் வரை இன்பத்தை அனுபவித்துக்கொண்டே
சாகலாம். அதன் பிறகு நாம் ஒன்றுமே இல்லாமல் அழிந்துவிடுவோம் என்று நினைக்கிறார்கள்.
..
இவர்களது
சிந்தனையின் பின்னே எந்த அறிவியலும் இல்லை. இது அவர்களது நம்பிக்கை. முட்டாள் ஒருவிஷயத்தை
நம்புகிறான்.அதன் படி வாழ்க்கை முழுவதும் வாழ்கிறான்.இதனால் அவன் நம்பியதுதான் உண்மை
என்றாகிவிடுமா?
இதுதான்
உண்மை என்றால் நமக்கு முன் பல ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த பல லட்சம் முன்னோர்கள் கூறிய
வார்த்தைகள் எல்லாம் பொய்யா?
திருடன்
சொல்லும் வார்த்தை உண்மையா அல்லது நல்லவர்களான ரிஷிகள் சொன்ன வார்த்தை உண்மையா?
கண்டிப்பாக
திருடனின் வார்த்தையை நம்ப முடியாது. அவர் வாழ்க்கையில் ஒருபோதும் உண்மையை பேசியதே
இல்லை. எனவே வார்த்தைகள் எல்லாமே பொய்யிலிருந்து எழுவதுதான். ரிஷிகள் உண்மையை மட்டுமே
பேசி வாழ்ந்தவர்கள் எனவே அவர்கள் பொய் சொல்ல முடியாது. குறுகிய வழியில் அதிக பணம் சம்பாதித்து
வாழ்ந்தால் அதிக இன்பம் அடையலாம் என்பது நமது முன்னோருக்கு தெரிந்திருந்தால் அவர்கள்
அந்த வழியிலேயேதான் சென்றிருப்பார்கள். எதற்காக கஷ்டப்பட்டு நல்லவனாக வாழவேண்டும்.
..
பிறரை
கொல்வதும், கொள்ளையடிப்பதும்,பொய் சொல்வதும் மிகவும் எளிது. நல்லவனாக வாழ்வதும், திருடாமல்
இருப்பதும்தான் வாழ்க்கையில் கஷ்டமான காரியம். நமது முன்னோர்கள் ஏன் கஷ்டமான வழியை
பின்பற்றினார்கள்?
ஏனென்றால்
அவர்கள் இரண்டு வழிகளையும் பற்றி நன்கு அறிந்திருந்தார்கள்.
..
தவறு
செய்பவன்,கொள்ளையடிப்பவன், அனுபவிக்கும் இன்னல்கள் என்ன அவனது மனஓட்டம் என்ன என்பதைப்
பார்ப்போம்.
..
1.எந்த
நேரத்திலும் அதிகாரிகள் நம்மை கைதுசெய்து சிறையில் அடைக்கலாம். எனவே அவர்களிடமிருந்து
எப்படி நம்மை காத்துக்கொள்வது என்று சிந்தித்துக்கொண்டிருப்பார்கள்.
2.நம்மிடமே
இருக்கும் கூட்டாளிகள் ஏதாவது வழியில் நமது பணத்தை அபகரிக்க திட்டம்போடலாம் எனவே அவர்களை
நம்பக்கூடாது,அவர்களிடம் விழிப்பாக இருக்க வேண்டும்.
3.நமது
எதிராளி எந்த நேரமும் நம்மைத்தாக்கி நமது உயிரை எடுக்க முடியும். எனவே நமது கூட்டாளிகளின்
எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அவர்களுக்கு கொள்ளையடித்த பணத்தில் பங்குகொடுக்க வேண்டும்.
4.அரசில்வாதிகளின்
சாதுர்யத்தால் நாம் சிக்கலில் மாட்டலாம் எனவே அவர்களை கைக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.
கொள்ளையடித்த பணத்தில் அவர்களுக்கு அதிகம் பங்கு கொடுக்க வேண்டும்.
5.திடீரென்று
நமது கூட்டாளி கைதாகிவிட்டால்,அல்லது எதிராளியிடம் அதிக பணத்தைப்பெற்று நமது எதிராக
செயல்பட்டால்,போலீசில் நம்மை காட்டிக்கொடுத்துவிட்டால், அவனை தீர்த்துக்கட்ட சதி செய்ய
வேண்டும்.
6.மனனைவி
மக்களை எப்போதும் பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும். எதிராளி முதலில் அவர்களைத்தான்
தாக்குவான். எனவே அவர்களைப்பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
7.பாதிக்கப்பட்டவர்கள்
நமக்கு எதிராக ஒன்றுகூடுவார்கள்.அதைவிடக்கூடாது. பத்திரிக்கையாளர்களுக்கு பணம் கொடுத்து
அதை வெளியில் வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அதையும் மீறி யாராவது நாம் செய்த தவறுகளை
வெளியில் கொண்டுவர முயற்சி செய்தால் அவர்களுக்கு எதிராக பல சதித்திட்டங்களை தீட்டுவது,அல்லது
அவர்களை தீர்த்துக்கட்டுவது எப்படி என்று யோசித்துக்கொண்டிருப்பான்.
8.நம்மைப்பற்றி
புகழந்து பேச சிலர் வேண்டும். எனவே சமுதாயத்தில் நல்லவர்கள் என்று மதிப்புபெற்ற சிலருக்கு,சில
ஆன்மீக பேச்சாளர்களுக்கு, கொஞ்சம் பணத்தைக்கொடுத்து.அவர்களிடம் நல்லவன்போல நடந்துகொள்ள
வேண்டும். அப்படி செய்தால் அவர்கள் போகின்ற இடங்களில் எல்லாம் நம்மை புகழ்ந்து பேசுவார்கள்.
9.சம்பாதிக்கும்
பணத்தை எப்படி மறைப்பது? பூமிக்குள் புதைக்கலாமா? கிணற்றுக்குள் இறக்கலாமா, சவத்தின்
உடலில் வைக்கலமா? வீட்டின் பாழறைந்த பொருட்கள் வைக்கும் இடத்தில் வைக்கலாமா? மறைத்து
வைத்த பணத்தைப்பற்றி யாரிடம் சொல்வது? மனையிடம் சொல்லலாமா? அவளும் நம்மைப்போல கெட்டவள்தான்
நமக்கு எதிராக மாறிவிட்டால் என்ன செய்வது? இந்த குழப்பம்வேறு.
10.அதிக
இன்பம் வேண்டும் என்று விபச்சாரிகளிடம் மாட்டிக்கொண்டால்.அவள் பல கேமராக்களை மறைத்துவைத்து.அதை
படமாக எடுத்து மிரட்டுவாள்.
11.அதிக
அளவு சிந்திப்பதால் ரத்தஅழுத்தம், கண்டபடி உண்டதால் சர்க்கரைவியாதி, இரவு முழுவதும்
தூங்காததால்,தூக்கமின்மை,பதட்டம்.இதோடு எப்போதும் பரபரபரப்பாக இருப்பதால் ஒரு இடத்தில்
ஒருமணிநேரம்கூட தனியாக உட்காரமுடியாத நிலைமை.
12.இவ்வளவு
சம்பாதித்த பணத்திலிருந்து அவன் சாப்பிடுவது மிகக்கொஞ்சம். அவனது உறவினர்கள் சாப்பிடுவது
கொங்சம் அதிகம். அவனது கூட்டாளிகள் சாப்பிடுவது இன்னும்கொஞ்சம் அதிகம்.அதிகாரிகள் சாப்பிடுவது
அதிகம். நீதியிடமிருந்து தப்பிக்க அதிகம் பணம் கொடுக்க வேண்டும்.
13.
அவன் சாப்பிடப்போகும் கொஞ்சம் சாப்பாட்டிற்கும், படுத்து தூங்குவதற்கான கொஞ்சம் இடத்திற்கும்
இவ்வளவு கஷ்டங்கள் தேவையா? என்று எப்போதாவது அவனது மனசாட்சி அவனை கேட்காமல் இருக்காது.
14.
நாள் ஆகஆக அவன் உடல்ரீதியாக பலமிழளக்கத்தொடங்குவான். பிள்ளைகள் சொத்துக்காக ஒருவரை
ஒருவர் வெறுக்க ஆரம்பிப்பார்கள். இவனுக்கு பல கள்ளமனைவிகள் இருப்பார்கள். அவர்கள் எப்படியாவது
இந்த சொத்துக்களை தன்பக்கம் கொண்டுவர நினைப்பார்கள்.அதோடு நீதிமன்ற வழங்குகளில் பணம்
தண்ணீரைப்போல செலவாகும்.
15.ஒரு
நீதிபதிக்கு பணத்தை கொடுத்து சாதகமான ஒருதீர்ப்பை பெற்றுவிடுவான். அடுத்த நீதிபதி அதை
தவறு என்று கூறிவிடுவான். இனி அடுத்த நீதிபதிக்கு இன்னும் அதிகம் பணம் கொடுக்க வேண்டும்.
பிறகு அதுவும் நிற்காமல் போய்விடும். அதுத்த நீதிபதிக்கு பணம்கொடுக்க வேண்டும். இப்படி
சம்பாதித்த பணம் எல்லாம் அங்கேயே போய்க்கொண்டிருக்கும். புதிதாக பணம் சம்பாதிக்கலாம்
என்றால் அமைச்சர் பதவியில் இருந்தும் நீக்கிவிடுவார்கள்.
இப்போது
என்ன செய்வது?
16.தான்
இதுவரை சம்பாதித்த பணம், கொரவம்.மதிப்பு, அதிகாரம், எல்லாம் தன் கண் எதிரே ஒவ்வொன்றாக
விலகி செல்லும்போது அவன் துடிக்கின்ற துடிப்பு இருக்கிறே அதை சொல்ல முடியாது.
அது
வெளியில் தெரியாது. அவனை சுற்றியிருப்பவர்களுக்குக்கூட தெரியாது. தான் எப்போதும்போல
இன்பத்தில் இருப்பதாகவும், தனக்கே வெற்றி என்றும் காட்டிக்கொள்வான். ஆனால் மரம் உள்ளுக்குள்
உழுத்துக்கொண்டே இருக்கிறது என்பது அவனது மனசாட்சிக்கு மட்டும்தான் தெரியும்.
17.இந்த
குழப்பத்தில் அவன் பதுக்கி வைத்திருக்கும் பணத்தை எப்படி எடுப்பது என்று அவனிடம் இதுவரை
வாழ்ந்துவந்த கூட்டாளிகள் சதி ஆலோசனையில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதும் அவனுக்குத்தெரியும்.
அதைப்பற்றி
யாரிடம் சொல்வது என்ற கவலைவேறு.
.
தீயவன்,கொடியவனின்
மனநிலையை சற்றுதான் கூறியிருக்கிறேன். அவன் மரணமடையும்போது என்ன நிகழும், தரணத்திற்குப்பிறகு
என்ன நிகழும் எப்பதையெல்லாம் கூறினால் இந்த கட்டுரை பெரிதாக மாறிவிடும்.
..
உங்கள்
கேள்விகளை +919360209541 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பவும்
சுவாமி
வித்யானந்தர்-கன்னியாகுமரி(26-5-2025)
No comments:
Post a Comment