Sunday, 8 June 2025

ஆன்மீகமும்-விஞ்ஞானமும்-பாகம்-14

 

ஆன்மீகமும்-விஞ்ஞானமும்-பாகம்-14

.

வேதமந்திரங்களும் இயற்கையை கட்டுப்படுத்தும் வழிகளும்

..

வேதம் என்பது வார்த்தை. வார்த்தை என்பது அதிர்வுகளால் ஆனது. வார்த்தை என்பது எண்ணங்களின் வெளிப்பாடு. எனவே வேதம் என்பது அதிர்வு. அந்த அதிர்வு எண்ணகளால் ஆனது. இந்த பிரபஞ்சமே அதிர்வுகளால் ஆனது. இந்த பிரபஞ்சமே எண்ணங்களால் ஆனது. குறைந்த அதிர்வு ஜடப்பொருளாகிறது. நடுத்தர அதிர்வு  எண்ணங்களாகிறது. உயர்தர அதிர்வு உயிராகிறது. அதிர்வு ஒரு எல்லையைத் தாண்டும்போது அதிர்வற்றநிலையை அடைகிறது.அதை ஆன்மா என்கிறோம்.

..

வேதம் அதிர்வுகளால் ஆனது. மனிதனது உடலில் குறைந்த அதிர்வு உடலாகிறது. நடுத்தர அதிர்வு மனமாகிறது.உயர்ந்த அதிர்வு உயிராகிறது. இந்த பிரபஞ்சம் அதிர்வுகளிலிருந்து உருவானது. இதை இப்படியும் சொல்லலாம். வேதத்திலிருந்து இந்த பிரபஞ்சம் வெளிப்பட்டது. கண்ணால் காணும் பொருட்கள் முதல் அனைத்தும் வேதத்தின் வெளிப்பாடு.வேதம் வார்த்தையாக வெளிப்படுகிறது.

.

முற்காலத்து முனிவர்கள் இந்த உண்மையை அறிந்திருந்தார்கள். எனவே சிறந்த அதிர்வுகள் கொண்ட வார்த்தையை உருவாக்கினார்கள்.அதை வேதமந்திரங்கள் என்று அழைத்தார்கள்.

வேதமந்திரத்தை சரியான அதிர்வுகளுடன் உச்சரித்தால் அது விரும்பும் பலனைக் கொடுக்கும்.

ஏனென்றால் இந்த உலகமே வேதத்தின் வெளிப்பாடு. வார்த்தை எண்ணமாகிறது. எணண்ம் செயல்வடிவம் பெறுகிறது.

..

முற்காலத்தில் பிரமணர்களின் முக்கிய வேலை வேதமந்திரத்தை உச்சரிப்பது. அதையும் சரியாள வேளையில் சரியான முறையில் உச்சரிக்க வேண்டும்.  தகுதியற்ற நபர்கள் அதை உச்சரித்தால் எந்த பலனும் கிடைக்காது.

வேதமந்திரத்தை உச்சரிப்பதற்கு பயிற்சி மிகஅவசியம். சிறுவயதிலிருந்தே பயிற்சிபெற்றிருக்க வேண்டும்.

மனம் தூய்மையாக இருக்க வேண்டும். நல்லவனாக உண்மையே பேசுபவனாக இருக்க வேண்டும்.

..

வேதமந்திரத்தை உச்சரிக்கும்போது குண்டலினிசக்தி விழிப்படைகிறது. மூலாதாரத்திலிருந்து படிப்படியாக சகஸ்ராரம் வரை கொண்டுசெல்ல வேண்டும். ஒரே மந்திரத்தை பற்றபல அதிர்வுகளில் உச்சரிக்க வேண்டும்.

மிகமேல் நிலைக்கு செல்லும்போது வார்த்தை வெளிப்படாது. வெறும் அலாபனைகள் வெளிப்படும்.

ஒரு ரிஷி வேதமந்திரத்தை உரியமுறையில் உச்சரித்தால் அவர் நினைக்கும் பலனை அடைய முடியும்.

ரிஷிநிலையை அடையாத பல பிராமணர்கள் ஒன்று சேர்ந்து வேதமந்திரத்தை உச்சரித்தாலும் உரிய பலனை அடைய முடியும். புனிதமற்றவர்கள் வேதமந்திரத்தை உச்சரித்தால் உந்த பலனும் விளையாது.

..

இது ஒரு விஞ்ஞானம். அதிர்வுகளுடன் ஒரு மாயாஜாலம். உலகத்தை வசப்படுத்தும் வித்தை. இதை முறைப்படி பயில வேண்டும். தொடர்ந்து பயிற்சிசெய்ய வேண்டும்.

பிராமணர்களின் ஒரே ஆயுதம் வேதமந்திரம். இந்த உலகத்தில் உள்ள ஆயுதங்களில் சக்தி வாய்ந்தது அன்பு .

அன்பு உயிருடன் தொடர்புடையது. மிகஉயர்ந்த அதிர்வைக் கொண்டது உயிர். உயிரை வசப்படுத்தும் ஆற்றல் வேதமந்திரத்திற்கு உண்டு. வேதமந்திரத்தை பயன்படுத்தியே முற்கால முனிவர்கள் தங்களுக்கு வேண்டியதைப்பெற்றார்கள்.

..

வேத மந்திரங்களின் வலிமையால்தான் ரிஷிகள் சக்கரவர்த்திகளைவிட உயரத்தில் இருந்தார்கள்.

வேதமந்திரங்களுக்கு கட்டுப்படாதது எதுவும் இல்லை.

.

வேதமந்திரத்தை உச்சரித்து பிராமணர்கள் எவ்வாறு தங்களை தூய்மைப்படுத்திக்கொள்கிறார்கள்?

பிராமணர்கள் அரசர்களிடமிருந்தும்,வைசியர்களிடமிருந்தும் தானம் பெறுகிறார்கள் இதனால் அவர்களது பாவம் பிராமணர்களை வந்து சேர்கிறது. பாவத்தின் பலன் தீமை, துன்பம், நோய்,மரணம் எல்லாம்.

இப்படி பாவம் பிராமணர்களை பற்றிக்கொள்கிறது.

பிராமணர்கள் சுயநலமற்றவர்கள். தங்களிடம் உள்ளதை மற்ற பிராமணர்களுக்கு பகிர்ந்துகொடுத்துவிட்டு ஏழையாகவே வாழ்பவர்கள். எனவே அரசர்களிடமிருந்து பெறும் பாவம் அனைத்து பிராமணர்களுக்கும் பகிர்ந்து கொடுக்கப்படுகிறது.

சீடர்களுக்கு வேதம் கற்பித்தல், மக்களின் நன்மைக்காக யாகம் செய்தல் என்ற இரண்டு செயல்கள் மூலம் அவர்கள் புண்ணியத்தை ஈட்டுகிறார்கள். அந்த புண்ணியபலன் தானம் பெறுவதால் வரும் பாவத்தை சரிப்படுத்திவிடுகிறது.

..

பிராமணர்களுக்கு ஆறு கடமைகள் முக்கியமானது.

தனக்காக வேதம் பயிலுதல், சீடர்களுக்கு வேதம் கற்பித்தல், தனக்காக யாகம் செய்தல், பிறருக்காக யாகம் செய்தல். தகுதிவாய்ந்தவர்களிடமிருந்து தானம் பெறுதல், தகுதிவாய்ந்த பிராமணர்களுக்கு தானம் கொடுத்தல்.

..

இதில் தானம் பெறுவதால் வரும் பாவத்தை, கற்பித்தல் மற்றம் யாகம் செய்தல் மூலம் சரிப்படுத்திவிடுகிறார்கள்.

..

கோவில்களில் பிராமணர்களால் தொடர்நது வேதமந்திரங்கள் ஓதப்பட வேண்டும். வேதமந்திர அதிர்வுகள் அந்த இடத்தைசுற்றி நல்ல அதிர்வுகளை உருவாக்கும். பல்வேறு மனிதர்களால் களங்கப்படும் கோவிலின் புனிதம் மீட்கப்படும்

..

வேதமந்திரங்கள் மூலம் இயற்கையை கட்டுப்படுத்தும் வழிகள்பற்றி அதிகம் சொல்லவில்லை. இன்னொரு கட்டுரையில்  அதுபற்றி எண்ணம்தோன்றினால் பார்ப்போம்.

..

உங்கள் கேள்விகளை +919360209541 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பவும்

சுவாமி வித்யானந்தர்-கன்னியாகுமரி(31-5-2025)

 

No comments:

Post a Comment

பித்ருக்களுக்கு தினமும் உணவிட வேண்டும்

  பித்ருக்களுக்கு தினமும் உணவிட வேண்டும் .. துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை. -திருக்குறள் ...