ஆன்மீகமும்-விஞ்ஞானமும்-பாகம்-13
..
பிரபஞ்சமே இறைவன்.
.
உணவிலிருந்து உயிர்கள் உருவாகின்றன. ஓர் உயிர் இன்னொரு உயிருக்கு உணவாகிறது.
உயிர் என்றால் என்ன? எங்கெல்லாம் உணர்வு உள்ளதோ அவையெல்லாம் உயிர்.
உயிர் உள்ள இடத்தில் எல்லாம் உணர்வு உள்ளது.
கல்லுக்கும் கட்டைக்கும் உயிர் உண்டா? மேம்போக்காக பார்த்தால் உயிர் இல்லை.
ஆனால் கல்லும் கட்டையும் அணுக்களால் ஆக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அணுவுக்கும் உயிர் உண்டு.
அணுவுக்கு எப்படி உயிர் இருக்க முடியும்?
ஒவ்வொரு அணுவுக்குள்ளும் ஆத்மா இருக்கிறது. அந்த ஆத்மாவே உயிர். ஆத்மாவே உணர்வு.
எனவே இந்த ஒட்டுமொத்த உலகமும் உணர்வுகளால் ஆனது.
உணர்வு அல்லது உயிர் இல்லாத பொருள் ஒன்றுகூட இந்த உலகத்தில் இல்லை.
.
ஒரு மனிதனுக்கு ஓர் உயிர் இருப்பதாக சொல்கிறோம். இன்னும் சற்று கூர்ந்து பார்த்தால் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பலகோடி பாக்டீரியாக்களும், வைரஸ்களும், ஒட்டுண்ணிகளும் உள்ளது. இவைகளும் உயிர்தான். அந்த ஒவ்வொரு ஒட்டுண்ணியையும் பார்த்தால் அதற்குள் கணக்கற்ற உயிர்கள் இருக்கினறன.
அவைகளை ஆராய்ந்தால் இன்னும் கணக்கற்ற உணிர்கள் அதற்குள் உள்ளன.
பலகோடி உயிர்களின் தொகுதியாக மனிதன் இருக்கிறான். அந்த மனிதனுக்கு தனியாக ஒரு உணர்வு உண்டு.
..
இந்த உயிர்குலம் முழுவதையும் சுமந்துநிற்கும் இந்த பூமிக்கும் உயிர் உண்டு. சந்திரனுக்கு உயிர் உண்டு, சூரியனுக்கும் உயிர் உண்டு. அதாவது உணர்வு உண்டு. பல கோடி கிரகங்களுக்கும் உயிர் உண்டு.
நமது சூரிய மண்டலத்தை சுமந்து நிற்கும் பால்வெளி Galaxy க்கும் உணர்வு உண்டு.
பல கோடி Galaxy களை வைத்திருக்கும் ஒட்டுமொத்த பிரபஞ்சத்திற்கும் உணர்வு உண்டு.
..
இவ்வாறு இருக்கும் ஒட்டுமொத்த Galaxy களையும் சேர்த்து நாம் பிரபஞ்சம் என்கிறோம்.
இந்த பிரபஞ்சத்திற்கு ஓர் உயிர் அல்லது ஓர் உணர்வு உண்டு.
அதைத்தான் நாம்,அந்த உணர்வைத்தான் நாம் இறைவன் என்கிறோம்.
பிரபஞ்சத்திலிருந்து ஒரு அணுவைக்கூட தனியாக பிரிக்க முடியாது.
பிரபஞ்சத்தை நாம் ஜடப்பொருளாகப் பார்த்தால் அதில் உள்ள உணர்வை காணமுடியாது.
அனைத்தையும் உணர்வாகப் பார்த்தால் ஜடப்பொருளைக் காணமுடியாது.
..
இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சமும் ஓர் உணர்வுத்தொகுதியாக ரிஷிகளின் கண்களுக்குதம்தெரிகிறது.
அவர்கள் அதை இறைவன் என்கிறார்கள். அந்த இறைவனுக்குள்ளேயே எல்லாம் இருக்கிறது.
தூலபிரபஞ்சம், சூட்சுப் பிரபஞ்சம், காரணபிரபஞ்சம், மகாகாரணம் அல்லது பிரப்பிரம்மம் அனைத்தும் அந்த இறைவனுக்குள்ளேயே இருக்கிறது. இறைவனுக்கு வெளியே எதுவும் இல்லை.
இறைவனைத்தவிர வேறு எதுவும் இல்லை.
இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் ஒன்றாகக் காண்பவன் இறைவனைத்தவிர வேறு எதையும் காண்பதில்லை.
..
உங்கள் கேள்விகளை +919360209541 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பவும்
சுவாமி வித்யானந்தர்-கன்னியாகுமரி(30-5-2025)
No comments:
Post a Comment