Sunday, 8 June 2025

ஆன்மீகமும்-விஞ்ஞானமும்-பாகம்-15

 

ஆன்மீகமும்-விஞ்ஞானமும்-பாகம்-15

..

இந்த உலகத்தில் எந்த செயல் நிகழ்ந்தாலும் அதற்கு பிரதியாக இன்னொரு செயலும் கூடவே நிகழ்ந்துவிடுகிறது. இந்த எதிர்செயலை நிறுத்த முடியாது.நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாம் எந்த செயலைச்செய்தாலும் அதற்கு பிரதியாக இன்னொரு செயல் ஏற்பட்டுவிடுகிறது. நாம் நல்லது என்று நினைத்து செய்யும் செயல்கள் சிலருக்கு நல்லதாகவும் சிலருக்கு தீயதாகவும் அமைந்துவிடுகிறது.எப்படி இருந்தாலும் நம்மால் செயல்புரியாமல் இருக்க முடியாது.

..

மனிதன் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் செயல்களினால் பிறருக்கு துன்பம் ஏற்படுகிறது. இதனால் பாவம் என்ற எதிர்வினை ஏற்படுகிறது.

இதை நீக்குவதற்கு பிராயசித்தம் என்று பெயர்.

முக்கியமாக மூன்று வழிகளில் இந்த பாவத்தை நீக்க முடியும்

.

1.பாவத்திற்கான பலன் நோய்,மனத்துயரம்,வறுமை இன்னும் பல. இதை நீக்க உடல் ரீதியாக துன்பத்தை ஏற்றுக்கொள்ளுதல் ஒரு வழி. உதாரணமாக பல நாட்கள் விரதம் இருந்து நீண்ட தூரம் உள்ள கோவிலுக்கு நடந்தே செல்லுதல், அல்லது காவடி ஏந்நி செல்லுதல், பால்குடம் ஏந்தி செல்லுதல், அங்கப்பிரதட்சணம் செய்தல், தொடர்ந்து ஜபம் செய்தல் போன்ற பல வழிகளில் உடலையும் மனத்தையும் வருத்திக்கொள்வதால் பாவம் தீர்ந்துபோகும்.

..

2.நம்மிடம் இருக்கும் செல்வத்தை நல்லவர்களுக்கு தானம் வழங்குதல், நற்பணிகள் செய்யும் மடங்களுக்கு தானம் வழங்குதல்,நற்பணிகள் செய்யும் கோவில்களுக்கு தானம் வழங்குதல், நல்ல திட்டங்களுக்காக அரசிற்கு தானம் வழங்குதல்,

.

இவ்வாறு தகுதி வாய்ந்தவர்களுக்கு தானம் வழங்குவதால் அந்த பாவம், தானம் ஏற்பவர்களுக்கு செல்கிறது. தானம் ஏற்பவர்கள் அந்த பணத்தை முறையாக செலவு செய்தால் அந்த பாவம் நீங்கும். அப்படி இல்லாமல் பணத்தை சேர்த்துக்கொண்டு, சொத்து சேர்த்துக்கொண்டிருந்தால் அவர்கள் பாவியாக மாறி ஒரு காலத்தில் அழிந்துபோவார்கள்.

கோவில்களுக்கு பலர் தானம் செய்கிறார்கள். அவப்படி தானம் செய்யப்பட்ட பணத்தைக்கொண்டு பல நலதிட்டங்களை கோவில் நிர்வாகம் செய்ய வேண்டும். அப்படி செய்யாமல் வெறுமனே பணத்தை சேர்த்துக்கொண்டிருந்தால் என்றாவது ஒருநாள் அந்த கோவில் பணம் தீயவர்களால் களவாடப்படும். அதுதான் தற்போது பல இடங்களில் நடந்துகொண்டிருக்கிறது.

.

எதையுமே சேர்த்துவைக்கக்கூடாது. அதை ஒரு சுழற்சியில் விடவேண்டும். கோவிலுக்கு வரும் பணத்தைக்கொண்டு பல நற்பணிகள் செய்துகொண்டே இருக்க வேண்டும். புதிதாக பணம்  வந்துகொண்டே இருக்கும். இதைச் செய்யாமல் பணத்தையும், தங்கத்தையும் சேர்த்துவைத்தால் அது பாவத்தை சேர்த்து வைப்பதாகும்.

..

3. பிறரிடம் பணத்தையும், நிலத்தையும் கொடுப்பதற்கு பதிலாக, நானே முன்னின்று பல நற்பணிகளை செய்வதன் மூலம் தன்னிடம் சேர்ந்துள்ள பாவத்தை தீர்த்துக்கொள்ள முடியும். இதை செய்யும்போது மிகவும் கனவமாக செய்ய வேண்டும். தன்னால் பலன் அடைபவர்கள் யார் என்பதைப் பார்க்க வேண்டும். தான் செய்யும் நற்பணிகளால் நல்லவர்கள் பலன் அடைகிறார்களா அல்லது தீயவர்கள் பலன் அடைகிறார்களா என்பதை கவனிக்க வேண்டும்.

தீயவர்கள் பலன் அடைந்தால் பாவம் போகாது,அதற்கு பதிலாக புதிதாக பாவம்தான் வரும்.

இது தொடர்பான ஒரு கதை உள்ளது.

பிறரை கொலைசெய்து அவர்களின் பணத்தை கொள்ளையடிக்கும் கொள்ளைக்காரர் ஒரு முறை நீண்ட தூரம்பயணம் செய்தார்கள். வழியில் ஒரு இடத்தில் தர்மவான் ஒருவர் வருகின்ற வழப்போக்கர்களுக்கு அன்னதானம் வழங்கிக்கொண்டிருந்தார். இந்த கொலைகாரர்கள் தங்களை நல்லவர்கள்போல காட்டிக்கொண்டு அங்கே அமர்ந்து நன்றாக உணவு உண்டார்கள். பிறகு அன்று இரவு அந்த ஊரில் பல இடங்களில் மனிதர்களைக்கொன்று பணத்தை களவாடிச்சென்றார்கள். இதனால் கொலைகாரர்களுக்கு அன்னமிட்டவர்களுக்கு மிகப்பெரும் பாவம் வந்தது.

எனவே மிகவும் திறமை வாய்ந்தவர்களால் மட்டுமே சுயமாக நற்பணிகள் செய்ய முடியும்.

வருகிறர்களுக்கும் போகிறவர்களுக்கும் தானமிடுவதால் புண்ணியம் கிடைக்காது.

இதுவரை யாருக்கும் தீமை செய்யாத,இனிமேலும் தீமை செய்ய மாட்டார்கள் என்ற நிலையில் உள்ள நல்லவர்கள் யாரோ அவர்களுக்கு மட்டுமே உதவவேண்டும்.

லாழ்க்கையில் பல்வேறு அனுபவங்களைப்பெற்ற, அனுபவசாலிகளால் மட்டும்தான் யார் நல்லவன்,யார் கெட்டவன் என்று பிரித்தறிய முடியும். சாஸ்திரங்களைக்கற்ற பிராமண குடும்பத்தில் பிறந்தவர்கள்கூட தீயவர்களாக,நாட்டுக்கு எதிராக சதிசெய்பவர்களாக  இருப்பதை இந்தகாலத்தில் பார்க்க முடிகிறது.

..

இந்த மூன்று வழிகளில் ஏதேனும் ஒன்றை பின்பற்றி பாவத்தை தீர்த்துக்கொள்ள முடியும்.

விதி என்பது முற்பிறவிகள் செய்த பாவத்தின் பலன்.

அந்த விதியை நீக்க இந்த பிறவியில் நாம் முயற்சி செய்ய வேண்டும்.

முயற்சியினால் விதியை வெல்லலாம் என்பதே நமது சாஸ்திரங்கள்கூறும் அறிவுரையாகும்.

இதற்கு உதாரணமாக பல சம்பவங்களை சாஸ்திரம்கூறுகிறது.

சோம்பேரிகள் மட்டுமே விதியின் கைப்பிடியில் மாட்டி அவதிப்படுகிறார்கள்.

புத்திசாலிகள் விதியை தனது தற்கர்மத்தால் சென்று சாதித்துகாட்டுகிறார்கள்.

....

உங்கள் கேள்விகளை ‪+919360209541 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பவும்

சுவாமி வித்யானந்தர்-கன்னியாகுமரி(1-6-2025)

No comments:

Post a Comment

பித்ருக்களுக்கு தினமும் உணவிட வேண்டும்

  பித்ருக்களுக்கு தினமும் உணவிட வேண்டும் .. துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை. -திருக்குறள் ...