மனுஸ்மிருதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (முழுவதும்)-பாகம்-6
...
101.
பிராம்மணன் தன்னுடைய செல்வத்தையே தான் அனுபவிக்கிறான். தன்னுடைய ஆடைகளையே தான் உடுத்துகின்றான். தன்னுடைய செல்வத்தையே பிறர்க்கு அளிக்கின்றான்.
(இந்த உலகமே பிராமணனுக்கு சொந்தமானது என்பதை இதற்கு முந்தைய ஸ்லோகத்தில் பார்த்தோம்.பிராமணன் என்பவன் யார் என்பதற்கான விளக்கத்தையும் பார்த்தோம்)
...............
102.
ஞானியான ஸ்வாயம்புவ மநு, பிராம்மணனுடையனவும், மற்றவர்களுடையனவுமான தர்மங்களை தெரிவிப்பதற்காக இந்த தர்ம சாஸ்திரத்தை வழங்கினார்.
........
103.
இந்த மனு தர்ம சாஸ்திரத்தை படிப்பதனால் அடையும் பலன்களை அறிந்து பிராம்மணன் இந்த தர்ம சாஸ்திரத்தை நன்கு முயற்சியோடு படிக்க வேண்டும். சிஷ்யர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும்.
.....
104.
இந்த சாஸ்திரத்தை மிக்க நியமத்தோடு படிக்கும் பிராம்மணனுக்கு மனத்தாலும் வாக்காலும் உடலாலும் ஏற்படும் எந்த பாபமும் அண்டாது. அதாவது இதைப் படித்து அறிந்த பிறகு பாபமே செய்ய மாட்டான்.
........................
105.
இந்த சாஸ்திரத்தை படித்து ஓதுபவன் தன்னுடைய முன்னோர்களில் ஏழு தலை முறையினரையும், தனக்குப் பின் ஏழு தலைமுறையினரையும் புனித மாக்குகிறான். இந்தப் பூமண்டலம் முழுவதையும் தானம் பெறுவதற்கும் அருகதையுடையவனாகிறான்.
...................
106.
இந்த தர்ம சாஸ்திர அத்யயனம், மநோரதங்களை பூர்த்தியாக்கும். இந்த தர்ம சாஸ்திரம் மிகவும் சிரேஷ்டமானது. ஞானத்தை பெருக்குவது, புகழைத் தருவது, தீர்காயுளைத் தருவது. மோட்சமடைய மேலான சாதனமானது.
...............
107.
இந்த தர்ம சாஸ்திரத்தில் அனைத்து தர்மங்களும் கூறப் பட்டுள்ள, செய்யத் தக்கவைகளும், தகாதவைகளுமான தர்ம விஷயங்களும், அதர்ம விஷயங்களும் அவற்றின் பலன்களும் கூறப் பட்டுள்ளன. மேலும் நான்கு வர்ணத்தார் நித்தியமாக கடைப்பிடிக்க வேண்டிய ஆசார விஷயங்களும் கூறப் பட்டுள்ளன.
.......................
108.
வேதங்களிலும் ஸ்மிருதிகளிலும் கூறப்பட்ட ஆசாரங்களே மேலான தர்மங்கள். எனவே மக்களின் நலன் கோரும் துவிஜன் ஆசார விஷயங்களில் எப்போதும் முயற்சியுடன் ஈடுபட்டவனாக இருக்க வேண்டும்.( பிராம்மணன், க்ஷத்ரியன், வைசியன் என்னும் மூவர்ணத்தாரும் துவிஜர்கள்)
..................
109.
ஆசாரத்திலிருந்து விலகிய பிராம்மணனுக்கு, வேதாத்ய யனத்தால் பலன் கிட்டாது. ஆசாரமானவனே ஸம்பூர்ணமான பலனை ப் பெறுவான். ஆசாரம் என்பது தூய்மை, தூய்மையான அனுஷ்டானங்களை, பூஜைகளை தினமும் செய்பவனே ஆசார சீலன்.
.................
109.
இவ்வாறாக ஆசாரத்தை ஆதாரமாகக் கொண்டு தர்மம் இருப்பதை உணர்ந்து, எல்லா தவங்களுக்கும் ஆசாரமே முதல் முக்கியமானது என்று முனிவர்கள் தெரிவித்தார்கள்.
.....................
111.
உலக உற்பத்தியும், ஸ்ம்கார முறைகளும், விரத முறைகளும், பிரம்மசரிய விரத முறைகளும் இந்த தர்ம சாஸ்திரத்தில் கூறப் பட்டுள்ளன.
...............
112.
விவாஹ முறைகளையும், விவாஹத்துக்கான லக்ஷணங்களையும், யக்ஞங்களின் லக்ஷணங்களையும், சிராத்த விஷயங்களையும், இந்த தர்ம சாஸ்திரம் கூறுகிறது.
..................
113.
ஜீவனம் நடத்துவதற்கான தொழில்களின் லக்ஷணங்களையும் இல்லறத்தானின் நியமங்களையும்,சாப்பிடத்தக்கவை எவை, தகாதவை எவை என்ற விஷயங்களைப் பற்றியும், மரண காலங்களில் ஏற்படும் தீட்டுகளைப் பற்றிய விவரங்களையும் பொருட்களுக்கு தண்ணீர் முதலியவற்றால் கிடைக்கும் சுத்தி முறைகளைப் பற்றியும் இந்த தர்ம சாஸ்திரம் விளக்குகிறது.
..............
114.
பெண்களுக்குரிய தர்ம விஷயங்களும், வான பிரஸ்தர்களுக்குரிய தர்ம விஷயங்களும், சந்யாஸ தர்ம விஷயங்களும், மன்னனுக்குரிய தர்ம விஷயங்களும், மோக்க்ஷத்துக்குரிய விஷயங்களும் இந்த தர்ம சாஸ்திரத்தில் விளக்கப் பட்டுள்ளன.
......................
115.
சாட்சிகளை விசாரிக்கும் முறைகளும், பெண்களும் ஆண்களும் நடந்து கொள்ள வேண்டிய முறைகள், பாகப் பிரிவினை , சூதாட்டம், குற்றவாளிகளைத் தண்டித்தல் முதலான விஷயங்களும் இந்த தர்ம சாஸ்திரத்தில் கூறப் பட்டுள்ளன.
....................
116.
வைசியர்கள் சூத்திரர்கள் முதலானோரின் தர்ம அனுஷ்டான முறைகள், கலப்பு திருமணங்கள், ஆபத்துக் காலங்களில் கடைப் பிடிக்க வேண்டிய விதி முறைகள், பிராயச்சித்த முறைகள் முதலான விஷயங்களும் இந்த தர்ம சாஸ்திரத்தில் கூறப் பட்டுள்ளன.
...................
117.
தேகத்தை விடுதல், மூன்று வகையான கர்ம வினைகள் ஏற்படுதல், சாஸ்திரத்தில் செய்யச் சொன்ன, செய்யக் கூடாது என்று சொன்ன விஷயங்களின் பலாபலன்கள் முதலானவையும் இந்த தர்ம சாஸ்திரத்தில் கூறப் பட்டுள்ளன.
.......................
118.
தேச தர்மங்கள், ஜாதி தர்மங்கள், குல தர்மங்கள், வேதத்துக்கு விரோதமானவர்களின் தர்மாதர்மங்கள், முதலானவற்றையும் இந்த தர்ம சாஸ்திரத்தில் எடுத்துரைத்துள்ளார்.
........................
119.
முனிவர்களே, நான் வினாவியபோது, மனுவானவர் எனக்கு இந்த தர்ம சாஸ்திரத்தை எவ்வாறு உபதேசித்தாரோ அவ்வாறே அதை உங்களுக்கு எடுத்துரைக்கிறேன். கேளுங்கள்.
..................................
அத்தியாயம் ஒன்று நிறைவுற்றது...இனி இரண்டாவது அத்தியாயத்தை பார்க்கலாம்
..
..
தொடரும்…
…
மேலும் தொடர்ந்துபெற வாட்ஸ்அப் 9789374109
..
No comments:
Post a Comment