மனுஸ்மிருதி என்னும் மனு தர்ம சாஸ்திரம்(முழுவதும்)-பாகம்-2
….
21.
பிரம்மா தன்னால் படைக்கப் பட்ட அனைத்துக்கும் வேதத்திலுள்ளபடி பெயர்களைச் சூட்டினார். அவைகளுக்கான வெவ்வேறு விதமான காரியங்களையும் வேதங்கள் கூறியபடியே ஏற்படுத்தினார்.
................
22.
பிரம்மா, கர்மாத்மாக்களான தேவர்களையும், பிராணிகளையும், சாத்யர்களையும், யக்ஞங்களையும் படைத்தார்.
.................
23.
யக்ஞங்கள் வேதங்களைக் கொண்டே நிறைவேற்றக் கூடியவை என்பதால், யக்ஞங்களுக்காக வேண்டி, ருக், யஜுர், சாமம் என்னும் வேதங்களை , அக்நி, வாயு, சூரியர்களிடமிருந்து கிரகித்தார்.
...........
24.
பிரம்மா, காலத்தையும், மாதங்கள், ருதுக்கள், வருடங்கள் முதலான கால அளவுகளையும், நட்சத்திரங்களையும், கிரகங்களையும் , நதிகளையும், கடல்களையும், மலைகளையும், படைத்தார்.
...............
25.
அவ்வாறே சமவெளியையும், மேடு பள்ளங்களையும், தவம், வாக்கு, சிரத்தை, காமம், கோபம் முதலானவற்றையும் படைத்தார்.
.....................
26.
செய்யத்தக்கது இது. தகாதது இது என்னும் அறிவைப் பெறுவதற்காக தர்மங்களையும் அதர்மங்களையும் வேறு படுத்தினார். மேலும் மக்களை சுகம், துக்கம் என்னும் இரட்டைகளோடும் விருப்பு, வெறுப்பு என்னும் இரட்டைகளோடும் இணைத்தார்.
...................
27.
பஞ்ச பூதங்களின் சொரூபங்களோடு, இனி சொல்லப்போகின்ற அனைத்தையும் படைத்தார்.
.........................
28.
பிரம்மா, முதன் முதலில், ஆதியில் சிருஷ்டித்தபோது எந்தெந்த காரியங்களைச் செய்வதற்காக எந்தெந்த வர்ணங்களைப் படைத்தாரோ, அந்தந்த வர்ணங்கள் மீண்டும் படைக்கப் படும் போதும் பழைய படியே ஒழுகுகின்றன.
( இங்கே வர்ணம் என்பதே இப்போதைய நடைமுறையில் ஜாதி என்று கூறப் படுகிறது. ஆனால் இப்போதுள்ள ஜாதிகளை மனு கூறவேயில்லை. காரணம், பிரம்மா. இவைகளை உருவாக்க வில்லை. மேலும் இந்த நூலைப் படிக்கப் படிக்க இந்த விஷயத்தை நன்கு புரிந்து கொள்ள முடியும்)
................
29.
சிருஷ்டியின்போது பிரம்மா ஹிம்சிக்கும் குணம், அஹிம்சை, மிருதுவான குணம் , குரூர குணம், தர்மம், அதர்மம், பொய் உண்மை முதலானவைகளை எவை எவைகளுக்கு எவை என்று நியமித்தாரோ, அதே போன்றே அவையவை மீண்டும் படைக்கப் படும் போது ம் அதே குணங்களோடு ஒழுகுகின்றன.
....................
30.
எவ்வாறு ருதுக்கள் தாமே தத்தமது குணங்களை அடைகின்றனவோ அவ்வாறே பிராணிகளும் தத்தமது குணங்களை அடைகின்றன.
( ஒரு வருடத்தை ஆறு ருதுக்களாகக் கூறுகிறோம். அந்தந்த காலத்தில் அந்தந்த தன்மைகள் ஏற்படுவதைப் பார்க்கிறோம். அதாவது கோடையிலும் வெளிலும், குளிர் காலத்தில் குளிரும். பனிக் காத்தில் பனியும் என்று இயற்கையாகவே நாம் அந்தந்த மாற்றங்களைப் பார்க்கிறோம். இதையே அந்தந்த ருதுக்களுக்குரிய குணங்கள் அல்லது தன்மைகள் என்று இங்கு கூறப்பட்டுள்ளது. அவ்வாறே பிராணிகளுக்கும் வெவ்வேறான தன்மைகள் படைக்கப் பட்டுள்ளன. புலிக்கு இருக்கும் தன்மை வேறு. பூனைக்கு இருக்கும் தன்மை வேறு. அரக்களுக்கு இருக்கும் தன்மை வேறு. மனிதனுக்கு இருக்கும்தன்மை வேறு. அந்தந்தப் பிராணிகளும் தத்தமக்குரிய குணங்கள் அடைகின்றன என்பதன் பொருள் இதுவேயாகும்.
.................
31.
உலகைப் படைத்த பிரம்மா அது பல்கிப் பெருகும் பொருட்டு, உலகம் உய்யும் பொருட்டு நான்கு வகையினரை- நான்கு வருணத்தாரைப் படைத்தார்.
....................
32.
பரம் பொருளானவர், தம் தேகத்தை இரண்டாகப் பிரித்துக் கொண்டு ஒரு பாகம் ஆணாகவும், மற்றொரு பாகம் பெண்ணாகவும் மாறினார். அந்த ஆண், அந்தப் பெண்ணிடம் ” விராட்” புருஷனை சிருஷ்டித்தார்.
( அகில உலகங்களையும் தம் சரீரமாகக் கொண்ட விஸ்வரூபிக்கு விராட் புருஷன் என்று பெயர்)
..................
35.
இப்போது மனுபகவான், பிரம்ம தேவர் தம் கூற்றாக மனுவுக்கு எப்படி உரைத்தாரோ, அதை அவ்வாறே இப்போது எடுத்துரைக்கிறார்.
நானே விராட் புருஷனின் தவத்தால் தோன்றிய பிரம்மா. உலக சிருஷ்டியை செய்வதற்காக விராட் புருஷனால் படைக்கப் பட்டவன்.
நான் பிரஜைகளை சிருஷ்டிப்பதற்கான அளப்பரிய சக்தியை அடைவதற்காக கடும் தவமியற்றினேன்.முதலில் பத்து பிரஜாபதிகளை சிருஷ்டித்தேன். ( பிரஜாபதி என்பவர்கள், உலகில் சிருஷ்டியை செய்வதற்காக பிரம்மாவால் படைக்கப் பட்டவர்கள்)
மரீசி, அத்ரி, அங்கிரஷ், புலஸ்தியன், புலஹன்,க்ரது, பிரசேதஸ், வசிஷ்டன், பிருகு, நாரதன் என்னும் பத்துப்பேர்களே முதலில் நான் படைத்த பிரஜாபதிகள்” இவ்வாறு பிரம்ம தேவர் கூறினார்.
........................
36.
தேஜஸ் மிகுந்த அவர்கள், தங்களைப் போல் தேஜஸ் கொண்ட ஏழு மனுக்களையும், தேவர்களையும் , தேவ உலகங்களையும், மிகுந்த தேஜஸ் கொண்டமகரிஷிகளையும் சிருஷ்டித்தனர்.
......................
37.
யக்ஷர்கள், ராட்சதர்கள், பிசாசர்கள், கந்தர்வர்கள் , அப்சரஸ்கள், அசுரர்கள், நாகர்கள், சர்ப்பங்கள், கருடன், முதலான பறவைகள் முதலாக பித்ருக்களுடைய பல்வேறு கணங்களையும் படைத்தனர்.
..............
38.
மின்னல்கள், இடிகள், மேகங்கள், ரோஹிதம் எனப்படும் நீண்ட நட்சத்திரம், வானவிற்கள், வால் நட்சத்திரங்கள், உற்பாதங்கள், எரி நட்சத்திரங்கள் முதலான பலவித நட்சத்திரங்களையும் படைத்தனர்.
....................
39.
கின்னரர்கள், வானரர்கள், மீன்கள்,விதவிதமான பறவைகள்,பசுக்கள், மான்கள், கொடிய மிருங்கள், மனிதர்கள் முதலான வற்றை படைத்தனர்.
..............
40.
கிருமிகள், புழு பூச்சிகள், வண்டுகள்,விட்டில் பூச்சிகள், பேன்கள், ஈக்கள், கொசுக்கள், முதலானவற்றையும் மரங்களையும், மலைகளையும் கூட படைத்தனர்.
.................
..
தொடரும்…
…
மேலும் தொடர்ந்துபெற வாட்ஸ்அப் 9789374109
No comments:
Post a Comment