Sunday, 22 June 2025

பித்ருக்களுக்கு தினமும் உணவிட வேண்டும்

 

பித்ருக்களுக்கு தினமும் உணவிட வேண்டும்

..

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்

இல்வாழ்வான் என்பான் துணை. -திருக்குறள்

..

துறந்தார்க்கும் என்றால் துறவிகளுக்கு, துவ்வாதவர் என்றால் உணவு இல்லாதவர்களுக்கு,இறந்தார் என்றால் முன்பு வீட்டில் இறந்துபோன பித்ருக்களுக்கு இல்வாழ்வான் என்பான் துணை என்றால் தினமும் சாப்பாடு வழங்க வேண்டும் என்று அர்த்தம்.

.

பித்ருக்களுக்கு தினமும் சாப்பாடு படைக்க வேண்டும் என்பது நமது சாஸ்திரம் சொல்லும் செய்தி.

திருக்குறளை பலர் மொழியெர்த்திருக்கிறார்கள். ஆனால் யாரும் பித்ருக்களுக்கு தினமும் சாப்பாடு படைக்க வேண்டும் என்பதைப்பற்றி பேசவில்லை.இதற்கு காரணம் நமது சாஸ்திரங்களைப்பற்றி அவர்கள் படிக்காததுதான் காரணம்.

.

திருக்குறளை படிப்பதற்கு முன்பு மனுஸ்மிருதி,மகாபாரதத்தில் வரும் நீதி மொழிகள் இவைகளைப் படித்திருந்தால் திருக்குறள் இன்னும் நன்றாக புரியும்.

..

நாம் பல பழங்கங்களை மறந்துவிட்டோம். அதில் முக்கியமான ஒன்று தினமும் தெய்வத்திற்கும்,பித்ருக்களுக்கும் உணவு படைக்க வேண்டும் என்பது. சிலர் தெய்வத்திற்கு தினமும் உணவு படைப்பார்கள். ஆனால் பித்ருக்களுக்கும் உணவு படைக்க வேண்டும். நிறைவேறாத ஆசைகளோடு இறந்தவர்கள் சூட்சும உடலோடு வாழ்ந்துகொண்டிருப்பார்கள். அவர்களுக்கு நமது உதவி தேவை.

அவர்களுக்கு நம்மால் உதவ முடியும். உணவு படைக்கும்போது எல்லா பித்ருக்களையும் மனதில் நினைத்து உணவு படைக்க வேண்டும். அது அவர்களுக்கு மனஅமைதியைக்கொடுக்கும்.

.

எத்தனைகாலம் பித்ருக்கள் ஆவி உடலில் வாழவேண்டும் என்று சிலர் கேட்டிருந்தார்கள்.

.

சில பித்ருக்கள் ஆவி வாழ்க்கையில் சில ஆண்டுகள் வாழ்ந்து பிறகு அப்படியே முக்தி அடைந்துவிடுவார்கள்.

அந்த பித்ருக்களின் பாவங்களை அவர்களது வீட்டில் உள்ளவர்கள் ஏற்றுக்கொண்டால் அந்த ஆவி முக்தி அடைந்துவிடும். மீண்டும் பிறக்கத்தேவையில்லை.

இதனால்தான் நமது நாஸ்திரங்கள் தினமும் பித்ருக்களை நினைத்து உணவு படைக்கும்படி கூறுகின்றன.

ஒருவர் இறந்துபோன பிறகும் நம்மால் அவர்களுக்கு உதவ முடியும்.

பித்ருக்களின் பாவத்தை ஏற்றுக்கொள்ள முடியும். அதேபோல வீட்டில் உள்ளவர்களின் பாவத்தையும் பித்ருக்களால் ஏற்றுக்கொள்ள முடியும். சிலர் இறந்த பிறகும் சூட்சும உடலோடு தவத்தில் ஈடுபட்டிருப்பார்கள். அப்படிப்பட்ட பித்ருக்கள் எந்த வீட்டில் வசிக்கிறார்களோ அவர்களால் அந்த வீடே நன்மையடையும். அந்த வீட்டில் யாராவது தெரியாமல் பாவச்செயல்களை செய்தால் சூட்சும நிலையில் உள்ள பித்ருக்கள் அதை ஏற்றுக்கொண்டு, அதற்காக அவர்கள் துன்பப்படுவார்கள்.

..

அல்ப ஆயுளில் இறந்தவர்களின் ஆவி துன்பத்தில் துடித்துக்கொண்டிருக்கும். அவர்களை நினைத்தும் உணவு படைக்கலாம். அது அவர்களது ஆவியை சாந்தப்படுத்தும். வேதனையைக் குறைக்கும்.

இப்படி செய்யாவிட்டால் இறந்தவர்களின் ஆவியால் ஏற்படும் சாபம் ஏற்படும்.

குடும்பத்தில் நிம்மதி இருக்காது.

அதேநேரம் மிக்கொடியவர்கள் மகாபாவிகள் யாராவது குடும்பத்தில் இறந்துவிட்டால் அவர்களை அப்படியே மறந்துவிடுவது நல்லது. அவர்களுக்கு உணவு படைக்கக்கூடாது. அப்படி செய்தால் அவர்கள் வாழ்நாளில் செய்த பாவங்கள் அனைத்தும் உணவு படைப்பவருக்கு வந்து சேரும்.அந்த குடும்பம் வறுமையில் வாடும்.

..

எல்லோரும் நல்லவர்களாக இருக்க முடியாது. தெரியாமல் செய்யும் தவறுகளுக்கு பரிகாரங்கள் உண்டு. தெரிந்து செய்யும் தவறுகளுக்கு தண்டனைகள்தான் உண்டு. தண்டனைகளை அனுபவிப்பதன் மூலம்தான் அந்த பாவம் சரியாகும்.

எனவே பித்ருக்களில் யார் நல்லவர்களோ அவர்களை மட்டுமே வழிபடவேண்டும். தீயவர்களை கண்டிப்பாக வழிபடக்கூடாது. இதை சிலர் மறந்துவிடுகிறார்கள். கெட்டவனை நினைப்பது மனிதனைக்கெடுக்கும். கெட்டவனுக்கு உணவிடுவது குடும்பத்தைக்கெடுக்கும்,கெட்டவளை வாழவைப்பது நாட்டைக்கெடுக்கும்.

..

பித்ருக்களுக்கு உணவு படைப்பது எப்படி?

.

1.வீட்டின் ஒரு அறையில், காற்றோட்டமான வெளிச்சமான இடத்தில்,வாசலைப் பார்த்து,ஒரு மூலையில்,ஒரு மேஜைமீது ஒரு விளக்கு ஏற்றிவைக்க வேண்டும்.2.ஒரு இலை அல்லது ஒரு தட்டு வைத்து அதில் மதியம் சமைக்கும் சூடான உணவிலிருந்து சிறிது வைக்கவேண்டும்.சைவம் உண்பவர்கள் சைவம் படைக்கலாம். அசைவம் உண்பவர்கள் அசைவம் படைக்கலாம். பக்கத்தில் டம்ளரில் சிறிது தண்ணீர் வைக்கவேண்டும். 3. இன்னும் சாந்தியடையாமல் இருக்கும் முன்னோர்களை(நல்லவர்களை),ஒருவரை அல்லது பலரை மனதால் நினைத்து, வாருங்கள் வந்து உண்ணுங்கள் என்று வேண்டிக்கொள்ள வேண்டும்.4. இதன்பிறகு நாமும் மற்றவர்களும் உணவு உண்ணத்தொடங்க வேண்டும்.வீட்டில் உள்ள எல்லோரும் உணவு உண்டு முடிதத்பிறகு. 5. பித்ருக்களுக்கு படைக்கப்பட்ட உணவை யாரும் உண்ணக்கூடாது. அதை அப்படியே எடுத்து காகங்களுக்கும்,பறவைகளுக்கும் இடவேண்டும்.

பித்ருக்களுக்கு படைக்கப்பட்ட உணவை ஏன் உண்ணக்கூடாது? பித்ருக்கள் அந்த உணவின் சூட்சும பகுதியை உண்பார்கள். அதனால் அது எச்சிலாக்கப்பட்ட உணவு. அந்த உணவை நாம் உண்டால் நமது பக்திக்கு பாதிப்பு ஏற்படும் என்று ஸ்ரீராமகிருஷ்ணர் கூறுவார். எனவே பித்ருக்களுக்கு படைக்கப்பட்ட உணவை எச்சில் உணவாகக் கருதி அதை பறவைகளுக்கு அல்லது மிருகங்களுக்கு கொடுக்கலாம்.

6. பித்ருக்களுக்கு படைக்கும் பாத்திரங்களை மற்றவர்கள் பயன்படுத்தாமல் அதை தனியாக எடுத்து வைக்க வேண்டும்.

7. தினமும் கண்டிப்பாக இதை பின்பற்ற வேண்டும். பண்டிகை நாட்களில் புதிய உடைகள் வாங்கி அடை பித்ருக்களுக்கு படைக்கலாம். பிறகு அதை ஏழைகளுக்கு(நல்லவர்களுக்கு) வழங்கிவிட வேண்டும்.

8.பித்ருக்களுக்கு முக்தி கிடைக்க வேண்டும் என்று மனதால் நினைத்து, அவர்களுக்காக விரதம் இருக்கலாம்.

கோவில்களில் வழிபடும்போது பித்ருக்களுக்கு முக்தி கிடைக்க வேண்டும் என்று நினைத்து வழிபடலாம், இப்படி செய்தால் பித்ருக்கள் விரைவில் முக்தி அடைவார்கள்.

9.பித்ருக்களின் பாவங்கள் தீர்வதற்காக வருடத்திற்கு ஒருமுறை நல்லவர்களுக்கு அன்னதானம் இடலாம், அல்லது நல்ல ஏழை குழந்தைகள் படிப்பதற்கு பணஉதவி செய்யலாம். அல்லது நல்லவர்கள் நடத்தும் அமைப்புகளுக்கு பணஉதவி செய்யலாம்.

..

மேலே சொல்ப்பட்டுள்ள விசயங்களை நன்றாக படித்து புரிந்துகொண்டு. நமது சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளதுபடி, எந்த ஜாதியை சேர்ந்தவர்களதக இருந்தாலும் பின்பற்றலாம்.

1.தெய்வங்களுக்கும்,2.துறவிகளுக்கும்,3.பித்ருக்களுக்கும்,4.வறியவருக்கும்,5.மிருகங்களுக்கும் உணவிட வேண்டும்.

இதை செய்தால் எல்லா நன்மைகளும் ஏற்படும்.

..

சுவாமி வித்யானந்தர் (23-6-2025)

Sunday, 8 June 2025

ஆன்மீகமும்-விஞ்ஞானமும்-பாகம்-16

 

ஆன்மீகமும்-விஞ்ஞானமும்-பாகம்-16

.

முக்தி பெற வீட்டைத் துறக்க வேண்டுமா?

..

ஒருவர் முக்தியடைய வேண்டுமானால் இரண்டு வழிகளில் ஏதாவது ஒன்றை முயற்சிக்க வேண்டும். ஒன்று சக்தியை இழக்கும் வழி. இன்னொன்று சக்தியை ஏற்கும் வழி. சக்தியை இழக்கும் வழியில் தன்னிடம் உள்ள எல்லா சக்தியையும் இழக்க வேண்டும். அதற்கு உலகத்தை துறந்து பிச்சை ஏற்று வாழும் வழியை தேர்ந்தெடுக்க வேண்டும்.

..

பழைய காலத்தில் காசியில் சென்று வாழ்ந்தால் முக்தி என்று சொல்வார்கள்.பிறகு காசியில் இறந்தாலே முக்தி என்ற சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

பழைய காலத்தில் அறுபது வயதை கடந்த ஒருவர் குடும்பப் பொறுப்பை மகனிடம் ஒப்படைத்துவிட்டு காசியில் சென்று வாழ ஆரம்பிப்பார்.காசியில் எங்கும் ஞானம் பற்றிய பேச்சுதான் நடந்துகொண்டிருக்கும்.அதை தொடர்ந்துகேட்டுக் கொண்டிருப்பார்கள். சுமார் பத்து,இருபது ஆண்டுகள் தொடர்ந்து அங்கேயே வாழ்வார்கள். காசியைவிட்டு நீங்கி வேறு எங்கேயும் செல்லமாட்டார்கள்.

காசியில் தங்குவதற்கு எந்த ஏற்பாடும் இருக்காது. மழையோ,வெயிலோ,குளிரோ அனைத்தும் உடலை பாதிக்கவே செய்யும்.இதனால் வரும் துன்பங்களை அனுபவிக்கும்போது பாவம் தொலைகிறது.

அதோடு எந்த மரியாதையும் இருக்காது. யாரும் அவர்களை கண்டுகொள்ள மாட்டார்கள். ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு பிச்சையாக கிடைக்கும். ஒரு நாய்க்கும் மனிதனுக்கும் எந்த வேறுபாடும் இல்லாத நிலை. இந்த நிலையில் வாழும்போது அகங்காரம் அகல்கிறது. நான் உடல்,நான் மனம், நான் இப்படிப்பட்ட அந்தஸ்து உடையவன் என்ற நிலை மறைகிறது.

1.அனைத்தையும் துறத்தல் 2.ஆணவத்தை அகற்றுதல் 3.பாவத்தை தொலைத்தல் இந்த மூன்றும் காசியில் தொடர்ந்து தங்குவதால் நிகழ்கிறது.

இவ்வாறு பல ஆண்டுகள் காசியில் தங்கியபிறகு மனிதனிடம் சேர்ந்துள்ள சக்தி, அதாவது ஆத்மாவை மறைத்துள்ள சக்தி அவனை விட்டு அகல்கிறது. ஆன்மா தனது சொந்த இயல்பில் நிலைபெறுகிறது.

இது சக்தியை இழக்கும் வழி.

..

காசியில் சென்று வாழ்ந்தால்தான் இந்த நிலையை அடைய முடியுமா? வீட்டில் வாழ்ந்தால் அடைய முடியாதா?

வீட்டையே காசியாக மாற்றிக்கொண்டு வாழ்ந்தால் வீட்டிலிருந்தே முக்தி அடைய முடியுமா?.

ஆனால் அது நல்லதா? வீட்டில் வாழ்ந்தால் வீட்டில் உள்ளவர்களும் வறிய நிலைய அடைய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஏனென்றால் இந்த வழி சக்தியை இழக்கும் வழி. சக்தியை இழப்பது என்பது தரித்திர வழி. எல்லாமே தன்னைவிட்டு அகன்றுவிடும். வீட்டில் தங்கியிருந்தால் அந்த தரித்திரம் வீட்டில் உள்ளவர்களையும் பற்றும்.

வீட்டில் செல்வம் தங்காது. வீட்டில் உள்ளவர்கள் நோய்களால் துன்பப்பட நேரும்.

..

இதனால்தான் பழைய காலத்தில் முக்தி அடைய விரும்புபவர்கள் வீட்டைத்துறக்க வேண்டும் என்று கண்டிப்பாக கூறுகிறார்கள்.

..

அப்படியென்றால் இல்லறத்தில் இருந்துகொண்டே முக்தி அடைய முடியும் என்று மகான்கள் சொல்லியிருக்கிறார்களே அது எப்படி?

..

அதுதான் சக்தியை சேர்க்கும் வழி.

இந்த வழியில் இருக்கும் இல்லறத்தார் ஒருவர், தொடர்ந்து பற்றில்லாமல் வேலை செய்துகொண்டே இருக்க வேண்டும்.இதனால் அதிக அளவு புண்ணியம் கிடைக்கிறது.

அடுத்து ஞானம் மிகவும் முக்கியம் நான் சிறிய உடல் அல்ல. நானே பிரபஞ்சம். இந்த பிரபஞ்சமே எனது உடல் என்று நினைக்க வேண்டும்.

பிறரிடமிருந்துவரும் துன்பங்களை பொறுத்துக்கொள்ள வேண்டும். இதனால் சக்தி பெருகுகிறது. தீயவன் நல்லவனை துன்புறுத்தினால் தீயவனிடமுள்ள சக்தி நல்லவனிடம் வருகிறது. இந்த வழியில் செல்பவர்கள் அதிக எதிர்ப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். பலர் வேண்டுமென்றே தொந்தரவு தருவார்கள். பல்வேறு சூழ்ச்சிகள் செய்வார்கள்.

பொறுமையாகவும் புத்திசாலித்தனமாகவும் அனைத்தையும் கடக்க முடிந்தால் அவர்களிடமுள்ள சக்தி நமக்கு வரும். இதனால் சக்தியில் அளவை விரிவுபடுத்த முடியும். எந்த அளவுக்கு சக்தி தேவை என்றால், பிரபஞ்ச அளவுக்கு சக்தி தேவை. என்னால் எதையும் செய்ய முடியும். சூரியர்களை உதிக்காமல் செய்ய முடியும், பூமியை சுற்றாமல் செய்ய முடியும், காற்றை நிறுத்த முடியும், இயற்கை சக்தியை தன் கட்டுப்பாட்டில் வைக்க முடியும் என்ற அளவுக்கு சக்தி தேவை. இதையும் தாண்டி சக்தி தேவை. கடவுளிடம் எந்த அளவுக்கு சக்தி உள்ளதோ அந்த அளவுக்கு சக்தி தேவை.

இந்த நிலையை அடைந்துவிட்டால் ”நான் கடவுள் என்ற நிலை கிடைத்துவிடும்.

.

இந்த சிறிய உடல் எனது பிரபஞ்ச உடலின் ஒரு பகுதி. இந்த உடலிலன் மனம் எனது பிரபஞ்ச உடலின் ஒரு பகுதி. இவ்வாறு எப்போதும் தியானிக்க வேண்டும். இப்படி செய்தால் நான் இந்த உடல் என்ற எண்ணம் மறையும். இவ்வாறு அகங்காரத்தை விரிவுபடுத்தவேண்டும். அகங்காரத்தில் அளவை எல்லையற்றதாக்க வேண்டும். நீயும் நானும் ஒன்று. எல்லா மனிதர்களும் நானும் ஒன்று. எல்லா விலங்குகளும் நானும் ஒன்று. நானே எல்லாம். இந்த அளவுக்கு அகங்காரத்தை விரிவுபடுத்த வேண்டும்.

.

அடுத்ததாக இந்த உலகத்தில் உள்ள எல்லோருக்கும் நன்மை செய்வதற்காக பாடுபட்டுக்கொண்டே இருக்க வேண்டும். உடல்,மனம்,பிராணன் எல்லாவற்றையும் பிறர் நன்மைக்காக இழக்கவும் தயாராக இருக்க வேண்டும்.இதனால்

மிகப்பெரிய அளவு புண்ணியம் கிடைக்கும். பிரபஞ்சம் உள்ளவரை மனிதர்கள் அந்த செயலை நினைவுகூர்ந்தடியே இருப்பார்கள். அப்படிப்பட்ட மிகப்பெரிய தியாகத்தை செய்ய வேண்டும்.

.

 இதில் மூன்று முக்கிய விசயங்கள் கவனிக்க வேண்டும்

1.அனைத்தையும் ஏற்றுக்கொள்ளுதல் 2. அகங்காரத்தை விரிவுபடுத்துதல் 3.புண்ணியத்தைப் பெறுதல்

..

வீட்டில் இருந்தபடியே முக்தியை அடைய நினைப்பவர்கள் இந்த வழியை பின்பற்ற வேண்டும்.

இந்த வழி புண்ணியத்தின் வழி. இதனால் வீட்டில் அமைதியான நிலை ஏற்படும். ஊருக்கு நல்லது நடக்கும். நாட்டிற்கும் நல்லது நடக்கும்.

..

ஒருவேளை இந்த வழியில் செல்லும் ஒருவர். இந்த முயற்சியில் வெற்றி பெறாமலே இறந்துவிட்டால் என்ன செய்வது?

கவலையில்லை. அடுத்த பிறவியில் விட்ட இடத்திலிருந்தே தொடங்கலாம். முற்பிறவியில் செய்ய புண்ணியத்தின் பலனால் இனிவரும் பிறவி நல்லதாகவே அமையும்.

..

சக்தியைப்பெறும் இந்த வழியில் முக்தி பெற ஒரு பிறவி போதாது. பல பிறவிகள் தேவைப்படும்.

யாரை நாம் ரிஷி என்றும் முனிவர் என்றும் அழைக்கிறோமோ அவர்கள்தான் இந்த வழியில் சென்று முக்தி பெற்றுள்ளார்கள்.

ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஒரு சிலரே இந்த வழயில் சென்று முக்தி பெறுகிறார்கள்.

இருந்தாலும் அதற்கான மனம் தளரவேண்டாம். முயற்சி செய்துகொண்டே இருக்க வேண்டும். இந்த பிறவியில் முடியாவிட்டால்.இன்னொரு பிறவி, அதிலும் முடியாவிட்டால் இன்னொரு பிறவி .கண்டிப்பாக ஏதாவது ஒரு பிறவியில் இது சாத்தியப்படும்.

..

பல பிறவிகளில் காத்திருந்து முக்தியை அடைவதில் எனக்கு உடன்பாடில்லை. இந்த பிறவியிலேயே முக்தியை அடைய வேண்டும் என்றால் சக்தியை இழக்கும் வழியைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கு வீட்டை துறந்துதான் ஆகவேண்டும். இல்லாவிட்டால் வீட்டில் உள்ளவர்களும் துன்பப்படநேரும். எப்படியும் ஒருநாள் அவர்களாகவே வீட்டைவிட்டு துரத்திவிடுவார்கள்.

அந்த அளவுக்கு போவதற்கு முன்பாகவே காசியோ,பிருந்தாவனமோ அல்லது திருவண்ணாமலையோ எங்காவது ஒரு இடத்தில் தங்கி வாழலாம். சாப்பாட்டிற்கு குறை இல்லை. ஆனால் தங்குவதற்கு இடம் கிடைக்காது. ஒரு நாய்கூட நம்மைவிட நன்றாக வாழ்கிறதே என்று தோன்றும்.

ஒருமுறை நான் திருவண்ணாமலையில் தங்கியிருந்தபோது ஒரு சாது ஒரு தெரு நாயைப் பார்த்து என்னிடம் கூறினார். இந்த நாய்க்கு வந்த வாழ்வைப் பாருங்கள். வேளை வேளைக்கு நல்ல சாப்பாடு கிடைக்கிறது. தங்குவதற்கு இடம் கிடைக்கிறது. நம்மைவிட எவ்வளவோ வசதியாக அது வாழ்கிறது என்றார்.

ஒரு தெரு நாய் வாழும் வாழ்வைவிட பிச்சை ஏற்று வாழும் வாழ்க்கை சற்று கடினமானதுதான்.

..

சுவாமி வித்யானந்தர்-கன்னியாகுமரி(8-6-2025)

ஆன்மீகமும்-விஞ்ஞானமும்-பாகம்-15

 

ஆன்மீகமும்-விஞ்ஞானமும்-பாகம்-15

..

இந்த உலகத்தில் எந்த செயல் நிகழ்ந்தாலும் அதற்கு பிரதியாக இன்னொரு செயலும் கூடவே நிகழ்ந்துவிடுகிறது. இந்த எதிர்செயலை நிறுத்த முடியாது.நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாம் எந்த செயலைச்செய்தாலும் அதற்கு பிரதியாக இன்னொரு செயல் ஏற்பட்டுவிடுகிறது. நாம் நல்லது என்று நினைத்து செய்யும் செயல்கள் சிலருக்கு நல்லதாகவும் சிலருக்கு தீயதாகவும் அமைந்துவிடுகிறது.எப்படி இருந்தாலும் நம்மால் செயல்புரியாமல் இருக்க முடியாது.

..

மனிதன் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் செயல்களினால் பிறருக்கு துன்பம் ஏற்படுகிறது. இதனால் பாவம் என்ற எதிர்வினை ஏற்படுகிறது.

இதை நீக்குவதற்கு பிராயசித்தம் என்று பெயர்.

முக்கியமாக மூன்று வழிகளில் இந்த பாவத்தை நீக்க முடியும்

.

1.பாவத்திற்கான பலன் நோய்,மனத்துயரம்,வறுமை இன்னும் பல. இதை நீக்க உடல் ரீதியாக துன்பத்தை ஏற்றுக்கொள்ளுதல் ஒரு வழி. உதாரணமாக பல நாட்கள் விரதம் இருந்து நீண்ட தூரம் உள்ள கோவிலுக்கு நடந்தே செல்லுதல், அல்லது காவடி ஏந்நி செல்லுதல், பால்குடம் ஏந்தி செல்லுதல், அங்கப்பிரதட்சணம் செய்தல், தொடர்ந்து ஜபம் செய்தல் போன்ற பல வழிகளில் உடலையும் மனத்தையும் வருத்திக்கொள்வதால் பாவம் தீர்ந்துபோகும்.

..

2.நம்மிடம் இருக்கும் செல்வத்தை நல்லவர்களுக்கு தானம் வழங்குதல், நற்பணிகள் செய்யும் மடங்களுக்கு தானம் வழங்குதல்,நற்பணிகள் செய்யும் கோவில்களுக்கு தானம் வழங்குதல், நல்ல திட்டங்களுக்காக அரசிற்கு தானம் வழங்குதல்,

.

இவ்வாறு தகுதி வாய்ந்தவர்களுக்கு தானம் வழங்குவதால் அந்த பாவம், தானம் ஏற்பவர்களுக்கு செல்கிறது. தானம் ஏற்பவர்கள் அந்த பணத்தை முறையாக செலவு செய்தால் அந்த பாவம் நீங்கும். அப்படி இல்லாமல் பணத்தை சேர்த்துக்கொண்டு, சொத்து சேர்த்துக்கொண்டிருந்தால் அவர்கள் பாவியாக மாறி ஒரு காலத்தில் அழிந்துபோவார்கள்.

கோவில்களுக்கு பலர் தானம் செய்கிறார்கள். அவப்படி தானம் செய்யப்பட்ட பணத்தைக்கொண்டு பல நலதிட்டங்களை கோவில் நிர்வாகம் செய்ய வேண்டும். அப்படி செய்யாமல் வெறுமனே பணத்தை சேர்த்துக்கொண்டிருந்தால் என்றாவது ஒருநாள் அந்த கோவில் பணம் தீயவர்களால் களவாடப்படும். அதுதான் தற்போது பல இடங்களில் நடந்துகொண்டிருக்கிறது.

.

எதையுமே சேர்த்துவைக்கக்கூடாது. அதை ஒரு சுழற்சியில் விடவேண்டும். கோவிலுக்கு வரும் பணத்தைக்கொண்டு பல நற்பணிகள் செய்துகொண்டே இருக்க வேண்டும். புதிதாக பணம்  வந்துகொண்டே இருக்கும். இதைச் செய்யாமல் பணத்தையும், தங்கத்தையும் சேர்த்துவைத்தால் அது பாவத்தை சேர்த்து வைப்பதாகும்.

..

3. பிறரிடம் பணத்தையும், நிலத்தையும் கொடுப்பதற்கு பதிலாக, நானே முன்னின்று பல நற்பணிகளை செய்வதன் மூலம் தன்னிடம் சேர்ந்துள்ள பாவத்தை தீர்த்துக்கொள்ள முடியும். இதை செய்யும்போது மிகவும் கனவமாக செய்ய வேண்டும். தன்னால் பலன் அடைபவர்கள் யார் என்பதைப் பார்க்க வேண்டும். தான் செய்யும் நற்பணிகளால் நல்லவர்கள் பலன் அடைகிறார்களா அல்லது தீயவர்கள் பலன் அடைகிறார்களா என்பதை கவனிக்க வேண்டும்.

தீயவர்கள் பலன் அடைந்தால் பாவம் போகாது,அதற்கு பதிலாக புதிதாக பாவம்தான் வரும்.

இது தொடர்பான ஒரு கதை உள்ளது.

பிறரை கொலைசெய்து அவர்களின் பணத்தை கொள்ளையடிக்கும் கொள்ளைக்காரர் ஒரு முறை நீண்ட தூரம்பயணம் செய்தார்கள். வழியில் ஒரு இடத்தில் தர்மவான் ஒருவர் வருகின்ற வழப்போக்கர்களுக்கு அன்னதானம் வழங்கிக்கொண்டிருந்தார். இந்த கொலைகாரர்கள் தங்களை நல்லவர்கள்போல காட்டிக்கொண்டு அங்கே அமர்ந்து நன்றாக உணவு உண்டார்கள். பிறகு அன்று இரவு அந்த ஊரில் பல இடங்களில் மனிதர்களைக்கொன்று பணத்தை களவாடிச்சென்றார்கள். இதனால் கொலைகாரர்களுக்கு அன்னமிட்டவர்களுக்கு மிகப்பெரும் பாவம் வந்தது.

எனவே மிகவும் திறமை வாய்ந்தவர்களால் மட்டுமே சுயமாக நற்பணிகள் செய்ய முடியும்.

வருகிறர்களுக்கும் போகிறவர்களுக்கும் தானமிடுவதால் புண்ணியம் கிடைக்காது.

இதுவரை யாருக்கும் தீமை செய்யாத,இனிமேலும் தீமை செய்ய மாட்டார்கள் என்ற நிலையில் உள்ள நல்லவர்கள் யாரோ அவர்களுக்கு மட்டுமே உதவவேண்டும்.

லாழ்க்கையில் பல்வேறு அனுபவங்களைப்பெற்ற, அனுபவசாலிகளால் மட்டும்தான் யார் நல்லவன்,யார் கெட்டவன் என்று பிரித்தறிய முடியும். சாஸ்திரங்களைக்கற்ற பிராமண குடும்பத்தில் பிறந்தவர்கள்கூட தீயவர்களாக,நாட்டுக்கு எதிராக சதிசெய்பவர்களாக  இருப்பதை இந்தகாலத்தில் பார்க்க முடிகிறது.

..

இந்த மூன்று வழிகளில் ஏதேனும் ஒன்றை பின்பற்றி பாவத்தை தீர்த்துக்கொள்ள முடியும்.

விதி என்பது முற்பிறவிகள் செய்த பாவத்தின் பலன்.

அந்த விதியை நீக்க இந்த பிறவியில் நாம் முயற்சி செய்ய வேண்டும்.

முயற்சியினால் விதியை வெல்லலாம் என்பதே நமது சாஸ்திரங்கள்கூறும் அறிவுரையாகும்.

இதற்கு உதாரணமாக பல சம்பவங்களை சாஸ்திரம்கூறுகிறது.

சோம்பேரிகள் மட்டுமே விதியின் கைப்பிடியில் மாட்டி அவதிப்படுகிறார்கள்.

புத்திசாலிகள் விதியை தனது தற்கர்மத்தால் சென்று சாதித்துகாட்டுகிறார்கள்.

....

உங்கள் கேள்விகளை ‪+919360209541 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பவும்

சுவாமி வித்யானந்தர்-கன்னியாகுமரி(1-6-2025)

பித்ருக்களுக்கு தினமும் உணவிட வேண்டும்

  பித்ருக்களுக்கு தினமும் உணவிட வேண்டும் .. துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை. -திருக்குறள் ...