Thursday, 11 October 2018

ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசங்கள்-அமுதமொழிகள் புத்தகம்-2-பாகம்-1



ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசங்கள்-அமுதமொழிகள் புத்தகம்-2-பாகம்-1
-
எல்லோரும் இல்லறத்தை துறப்பது நல்லதல்ல.சுகபோகங்களை அனுபவித்துத் தீர்க்காதவர்கள் வாழ்க்கையைத் துறக்கக் கூடாது.அவர்கள் பற்றின்னறி கடமைகளைச் செய்ய முயற்சிக்க வேண்டும்
-
பணம்,பொன்,புகழ்,உடல்சுகம் இவற்றை ஒருமுறை அனுபவிக்காவிட்டால்,இந்த சுகபோகங்களை அனுபவித்துத் தீர்க்காவிட்டால் இறைவனுக்காக மன ஏகக்ம் ஏற்படுவதில்லை
-
பணக்கார வீட்டு வேலைக்காரி தன் சொந்த வீட்டையே நினைத்துக்கொண்டிருப்பாள். அதேபோல் இல்லறத்தார்கள்
பற்றின்றி பணி செய்ய வேண்டும்.மனத்தை இறைவனிடம் வைக்க வேண்டும். மனத்தளவில் உலகத்தை துறக்க வேண்டும்.
-
வித்யா சக்தியான பெண்களும் உள்ளனர்.அவித்யா சக்தியான பெண்களும் உள்ளனர்.வித்யா சக்தியான பெண் இறைநெறியில் நம்மை அழைத்துச் செல்கிறாள்.அவித்யா சக்தியான பெண்ணோ நாம் தெய்வத்தை மறக்கும்படி செய்துவிடுகிறாள்.உலகியல் வாழ்க்கையில் நம்மை மூழ்கடிக்கிறாள்
-
அவித்யா மாயை என்பது பஞ்சபூதங்களும்,புலன்களின் சுகபோகங்களுக்கு காரணமான உருவம்,சுவை,மணம்,ஸ்பரிசம்,ஓசை என்பவவும் ஆகும்.புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும் நாம் இறைவனை மறக்கும்படி செய்கின்றன.
-
வித்யா மாயை என்பது சத்சங்கம்,ஞானம்,பக்தி,பிரேமை வைராக்கியம் இவையெல்லாம்.வித்யா மாயையை சரணடைந்தால் இறைவனை அடையலாம்
-
தீமையை இறைவன் ஏன் படைத்திருக்கிறான்?அது அவருடைய விளையாட்டு.இருள் இல்லாவிட்டால் ஒளியின் பெருமையை உணர முடியாது.துன்பம் இல்லாவிட்டால் இன்பத்தை புரிந்துகொள்ள முடியாது.தீமை இருப்பதால்தான் நன்மையை அறிய முடிகிறது
-
தோல் இருப்பதால்தான் மாங்காய் பக்குவம் அடைகிறது.பழம் பழுத்துவிட்டால் தோலை எறிந்துவிடலாம்.மாயையாகிய தோல் இருப்பதால்தான் பிரம்மஞானம் உண்டாகிறது.வித்யாமாயை,அவித்யா மாயை இரண்டும் மாம்பழத்தின் தோலுக்கு சமம்
-
உங்களுக்கு உருவ வழிபாடு பிடிக்காமல் இருக்கலாம்.ஆனால் ராதைக்கு கண்ணனிடம் இருந்த ஈர்ப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்.அந்த மனநிலையை ஏற்றுக்கொள்ளுங்கள்.காளி பக்தர்கள் அம்மா அம்மா என்று எப்படி உள்ளம் உருகி அழைக்கிறார்கள்.அந்த ஏக்கத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்.
-
சுகபோக நாட்டம் தணியாவிட்டால் வைராக்கியம் தோன்றாது.குழந்தைக்கு மிட்டாயும் பொம்மையும் கொடுத்து தாயை மறக்கும்படி செய்யலாம்.அதன்மீது ஆர்வம் இருக்கும்வரை அந்த குழந்தை தாயை தேடாது.
-
சச்சிதானந்தம்தான் குரு.குரு வடிவில் ஒரு மனிதர் உன் மனத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவாரானால்,சச்சிதானந்தமே அந்த வடிவில் வந்திருக்கிறார் என்று அறிந்துகொள்.குரு ஒரு நண்பனைப்போல கையைப்பிடித்து அழைத்துச் செல்கிறார்.இறைக்காட்சிக்குப் பிறகு குரு-சீடன் உறவு இருக்காது.
-
அருவம்.உருவம் இரண்டும் உண்மை.அருவத்தை மட்டும் ஏற்றுக்கொள்வது எதைப்போன்றது தெரியுமா? ஏழு துளையுள்ள புல்லாங்குழல் இருந்தும் அதைக் கொண்டு ஒரே சுருதியை ஒருவன் வாசிப்பதுபோன்றது.மற்றொருவன் அதில் எத்தனையெத்தனையோ ராகங்களை எழுப்புகிறான்
-
எபப்டியாவது அமுதக்கடலில் விழ வேண்டும்.இறைவனைத் துதித்துப் பாடியோ.அல்லது வேறு ஒருவர் உன்னைப் பிடித்துத் தள்ளுவதாலோ,அல்லது நீயாகவோ விழுவதாலோ எப்படியாவது அந்த அமுதக்கடலில் விழுந்தால் போதும்.மரணமில்லாப்பெருநிலை கிடைத்துவிடும்.
-

No comments:

Post a Comment