அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-6
-
ஏன் திருமணம் செய்துகொள்ளக்கூடாது? திருமணம் செய்துகொண்டால் ஆன்மீக வாழ்க்கை வாழ முடியாதா என்ன! எல்லாம் மனத்தைப் பொறுத்ததே அல்லவா? குருதேவர் என்னைத் திருமணம் செய்துகொண்டு வாழவில்லையா?
-
திருமணம் செய்துகொள்ளாமல் மடத்தில் வாழ நினைக்கிறான். ஒருவேளை சிரமப்படாமல் வாழலாம் என நினைக்கிறானோ என்னவோ! சிரமங்களையும் கஷ்டங்களையும் அனுபவித்தும் இறைவனை விடாமல் பற்றியிருப்பவர்கள் கட்டாயமாக அவரைப் பெறுவார்கள்
-
பாரம்மா! மிகவும் உயர்ந்த ஆன்மீக நிலையில் உள்ளவர்கள் மட்டுமே துறவிகளாகி எல்லா தளைகளிலிருந்தும் விடுபட முடியும். சிலர் உலக இன்பங்களை அனுபவிப்பதற்கென்றே பிறக்கிறார்கள்.இன்பங்களையெல்லாம் அனுபவித்துத் தீர்த்துவிடுவதுதான் நல்லதென்று நான் சொல்கிறேன்
-
திருமணம் செய்துகொள்.எல்லாவற்றையும் அனுபவித்து தீர்த்துக்கொள்.இல்லாவிட்டால் எங்கிருந்து என்ன ஆசை வந்து முளைக்கும் என்று சொல்ல முடியாது.ஆனால் ஒன்றை புரிந்துகொள் குருதேவர் எப்போது ஒருவனை (துறவியை) பிடித்துக்கொள்கிறாரோ அப்போது அவனுக்கு வீழ்ச்சி என்பதே கிடையாது.
-
எம்பெருமானே! இவர்களுக்கு நன்மை செய்யுங்கள்.இவர்கள் உங்களை உயிரினும் மேலாக நேசிக்கிறார்கள்.எவ்வளவோ சிரமப்பட்டு உங்களை நாடி வந்திருக்கிறார்கள். என்று அன்னை பிரார்த்தித்தார்
-
யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். நீ எதை சரியென்று நினைக்கிறாயோ அதை கடவுளை நினைத்தபடி செய்.மக்களை வெறும் புழுக்களாக நினை என்பார் குருதேவர்.அதாவது அவர்களின் அலட்சிய வார்த்தைகளை பொருட்படுத்தாதே
-
எப்போதும் குருதேவரின் அமுதமொழிகளை நினைவில் கொள்.மனம் தானாக அமைதியடைவதைக் காண்பாய்
-
என்னைத்தவிர வேறோர் அம்மா இருக்கிறாளா என்ன? எல்லாப் பெண்களிலும் நனே இருக்கிறேன்.எல்லா அன்னையரிலும் இருப்பது நானே.யார் எங்கிருந்தாலும் சரி.அனைவரும் என் பிள்ளைகளே.இது அறுதி சத்தியம்.
-
அம்மா என்று அழைத்துக்கொண்டு என்னிடம் வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் என் பிள்ளைகளே
-
மகளே, எல்லாவற்றையும் புரிந்துகொள்வதற்கான காலம் இன்னும் உனக்கு வரவில்லை.அதனால்தான் என் பிள்ளைகள் அறிவற்றவர்கள்போல் பேசுகிறார்கள்.உரிய காலத்தில் எல்லாவற்றையும் புரிந்துகொள்வாய்
-
குடும்ப வாழ்வில்தான் எவ்வளவு கஷ்டம்.இந்த கஷ்டங்களைக் கண்டுதானே பகவான் மீண்டும்மீண்டும் இறங்கி வருகிறார்.ஆனால் அவதாரபுருஷர் வாழும்போது சிலரால்தான் அவரை அறிந்துகொள்ள முடியும். அவர் போன பிறகே படிப்படியாக புரிந்துகொள்கிறார்கள்.
-
குழந்தைகள் கள்ளம்கபடம் இல்லாதவர்கள்.அதனால்தான் குழந்தை உள்ளத்துடன் அழைத்தால் தேவி ஓடி வருவாள் என்று குருதேவர் கூறினார்
-
ஆனா குருதேவர் ஒரு குழந்தை உள்ளத்துடன் இருந்தார்.“அம்மா அம்மா” என்று தேவியை அழைத்தாள் ஓடி வருவாள் என்பதை தமது வாழ்க்கையில் வாழ்ந்துகாட்டி உலகிற்கு நிரூபித்தார்.
-
’குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணரின் வாட்ஸ் அப் குழு- 9003767303
No comments:
Post a Comment