அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-9
-
வினைப்பயனை அனுபவித்தேயாக வேண்டும்.ஆனால் கால் துண்டாகப் போகவேண்டும் என்று ஒருவனுக்கு விதி இருப்பதாக வைத்துக்கொள்வோம்,பகவானின் நாமத்தை ஜெபிப்பதால் காலில் ஒரு முள் தைப்பதோடு அவன் தப்பித்துவிட நேரலாம்
-
நீ செய்வதை செய்துகொண்டிரு.வேறென்ன செய்ய முடியும்?ஆனால் குருதேவர் உன்னுடன் இருக்கிறார்,நானும் இருக்கிறேன் என்பதை நினைவில் வைத்துக்கொள்
-
மகளே! உன்னிடம் நான் என்ன சொல்வேன்? எனக்கோ எதுவும் தெரியாது. நீ குருதேவரின் படம் ஒன்றை அருகில் வைத்துக்கொள்.அவர் உண்மை.அவர் உன் அருகில் இருக்கிறார் என்பதை நினைவில்கொள்.கண்ணீருடன் உன் கவலைகளை அவரிடம்கூறு.
-
மன ஏக்கத்துடன் குருமஹராஜ்! எனக்கு உனது நிழலில் தஞ்சம்தாரும்.என் மனத்திற்கு அமைதியை தாரும் என்று அவரிடம் பிரார்த்தனை செய்.இவ்வாறு தொடர்ந்து பிரார்த்தனை செய்யும்போது உன் மனத்தில் தானாக அமைதி ஏற்படும்
-
பயம் எதற்கு அப்பா? உங்கள் அனைவரின் பின்னாலும் குருதேவர் இருக்கிறார்.இதனை என்றென்றைக்குமாக மனத்தில் பதித்துக்கொள்.நானும் இருக்கிறேன்.
-
மனிதனின் அறிவு எவ்வளவு அற்பமானது.எதுவோ வேண்டும்,ஆனால் எதையோ கேட்பான்.கடைசியில் பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காய் முடியும்.கடவுளைச் சரணடைந்து வாழ்வது நல்லது.எப்போது எது வேண்டுமோ அப்போது அதை அவர் தருவார்.ஆனால் பக்தியை கேட்க வேண்டும்.ஆசையின்மையை கேட்க வேண்டும்
-
இல்லறத்தார்களுக்கு புறத்துறவு வேண்டாம்.அவர்களுக்கு வேண்டியது அகத்துறவு,அதுவும் இயல்பாக ஏற்பட வேண்டும்.ஆனால் சிலருக்கு புறத்துறவு தேவை.ஏன் பயப்படுகிறீர்கள்? குருதேவரை சரணடைந்து வாழுங்கள்.
-
சத் சங்கத்தை நாடு,நல்லவனாக முயற்சி செய். படிப்படியாக எல்லாம் சரியாகும். குருதேவரிடம் பிரார்த்தனை செய்.நானும் இருக்கிறேன்.இந்தப் பிறவியிலேயே உனக்கு முக்தி கிடைக்கும்.பயம் எதற்கு?
-
மக்களின் துன்பங்களை எல்லாம் கண்டு நான் படும் வேதனை சொல்லித் தீராது.ஆனால் நான் என்ன செய்வேன்,என் மகளே! யாரும் முக்தியை விரும்புவதில்லை
-
கடவுள் பக்தர்களிடம் இருக்கிறார்.உண்மையான பக்தர்கள் நடந்த இடத்திற்குப் போனால் போதும்,சாதாரண மக்களின் மனத்தில் உள்ள மாசுகளெலல்ாம் அகன்றுவிடும்
-
நீ குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கிறாய்.முறைப்படியான பூஜையை உன்னால் செய்ய முடியவில்லையா? கவலைப்படாதே.குருதேரிடம் மன ஏக்கத்துடன் பிரார்த்தனை செய்.உனக்கு வேண்டிதை அவரே செய்வார்
-
மனிதன்தான் தெய்வமாகிறான்.வேலை செய்தால் எல்லாம் நடக்கும்.குருதேவர் கூறியதைப்போல விலக்க வேண்டிதை விலக்கி ஏற்கவேண்டியதை ஏற்று.இஷ்ட தெய்வத்திடம் ஒருமுகமான ஈடுபாட்டுடன் மனத்தை நிலைநிறுத்தி பிரார்த்தனை செய்தால் எல்லாம் நடக்கும்
-
ஸ்ரீராமகிருஷ்ணரின் கருத்துக்களை தினமும் பெற வாட்சப் குழு 9003767303
-
No comments:
Post a Comment