அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-7
-
கவலை எதற்கு அம்மா? குடும்பச் சுமையையும் குருதேவர்தானே தந்துள்ளார்! குடும்பத்திலுள்ள வேலைகளைச்செய்வது உங்கள் கடமை. கடமைகள் முடிந்தால்தானே இறைவனிடம் வரமுடியும்.
-
ஆசைப்படுவதால் மட்டும் எல்லாம் நடந்துவிடாது அம்மா! ஆசைகள் நிறைவேறுவது மனிதனின் கையில் இல்லை. இறைவனின் திருவுள்ளத்தால்தான் எல்லாம் நடக்கிறது.
-
குடும்ப வாழ்க்கையில் இருந்தால் குருதேவரின் அன்பு,பாசம்.அருள் கிடைக்காதா? இப்படி ஓர் எண்ணம் உன் மனத்தில் எவ்வாறு எழுந்தது? துறவியரைவிட அவர் இல்லறத்தார்களுக்காவே அதிகம் கவலைப்பட்டார்.இல்லறத்தார்களின் துயரம் அளவற்றது. அதனால்தான் குருதேவர் காளியிடம் “அம்மா அவர்களின் மனத்தில் பக்தியை நிரப்பு.அவர்கள் அமைதிபெறட்டும்” என்று பிரார்த்தனை செய்வார்
-
ஒரு கையால் பகவானைப் பிடித்துக்கொள் மறு கையால் கடமைகளைச் செய் என்று குருதேவர் கூறுவதை நீ அமுதமொழிகளில் படித்ததில்லையா?
-
துறவிகள் பகவானுக்காக அனைத்தையும் துறந்து சம்சாரத்திலிருந்து வெளியே வந்துவிட்டார்கள்.அவர்களுக்கு குடும்பத்தில் பற்று இல்லை.இல்லறத்தார்களின் விசயம் அப்படியா? எத்தனை மாயை,எத்தனை மோகம்,எத்தனை பொறுப்பு,எத்தனை கடமைகளுக்கு இடையில் அவர்கள் வாழவேண்டியிருக்கிறது
-
இறைவன் அந்தர்யாமி.அனைவரின் இதயத்திலும் அவர் எப்போதும் இருக்கிறார். நீ உள்ளத்தில் பிரார்த்தனை செய்வாயானால் அவர் அதைப் புரிந்துகொள்ளவே செய்வார்.
-
குடும்பத்தில் வேலை என்று சொன்னாய்.அந்த வேலைகளை நீயா செய்கிறாய்? அவர் அல்லவா செய்விக்கிறார்.குடும்பமும் அவருடையதே அல்லவா?
-
இறைவனைக் காணவேண்டும் என்ற ஏக்கம் உன் உள்ளத்தில் எழுந்துள்ளதே அது அவரது திருவுள்ளத்தால்தான் நிகழ்ந்தது.யார் அவரை நேசிக்கிறார்களோ அவர்களை அவர் காக்கிறார்.
-
நீங்கள் அவரை கொஞ்சம் நினைத்தாலும் போதும், கொஞ்சம் தியானித்தாலும் போதும்.ஆனால் செய்வதை உள்ளமும் உயிரும் இணைந்து செய்யுங்கள்.மன ஏக்கத்துடன் அவரை அழையுங்கள்.
-
அவரை நினையுங்கள்.அவரை தியானியுங்கள்.நாள் முடியும் வேளையில் இரண்டு சொட்டு கண்ணீருடன் நாமஜபம் செய்யுங்கள்.இந்த இரண்டுசொட்டு கண்ணீரைத்தவிர உங்களிடம் வேறு என்ன உஎள்ளது?
-
பயம் எதற்கு அம்மா? குருதேவர் இந்த முறை வந்தது உங்களுக்காகத்தான். நீங்கள் பகவானைப் பெறுவதற்கு இந்தச் சுலபமான பாதையைக் காட்டிச் சென்றுள்ளார் அவர்
-
நடப்பதெல்லாம் குருதேவரின் திருவுள்ளத்தால்தான் நடக்கிறது என்பதை ஏனம்மா மறந்துபோகிறாய்? இதோ என்னிடம் வருகிறாய்.இதுவும் அவரது திருவுள்ளம்தானே
-
பகவானை நேசிப்பதற்கு குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுங்கள்.பகவான் என்னுடையவர் என்ற எண்ணத்துடன் அவர்கள் அவரை நேசிக்க கற்றுக்கொள்ளட்டும்.
-
முற்பிறவி வினைகளின் பயனையும்கொண்டுதானே பூமியில் ஒவ்வொருவனும் பிறக்கிறான்.அதனால்தான் சிலர் சிறுவயதிலிருந்தே இறைவனை நேசிப்பதைக் காண்கிறோம்.
-
அவரது அருள் இருக்குமானால்.தாம் எழுதியதை அவரே அழித்துவிடுவார்.அவர் எழுதியது,அவரே அழிப்பார்.அதனால்தானே அவர் கபால மோசனர் என்று அழைக்கப்படுகிறார்.எல்லாம் அவருடைய கையில். எனவே அவரிடம் உன்னை சமர்ப்பித்துவிடு
-
’குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணரின் வாட்ஸ் அப் குழு- 9003767303
No comments:
Post a Comment