Friday, 21 September 2018

அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-10


அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்-பாகம்-10
-
மகனே கவலைப்படாதே.உலகின் உறவுகள் நிலையற்றவை.இன்று அவையே எல்லாம்போல் தோன்றும்.நாளை மறைந்துவிடும். உனது உண்மையான உறவு இறைவனுடன்,குருதேவருடன்.
-
இறைவனின் திருநாமம் புலன்களின் வலிமையைவிட ஆற்றல்மிக்கத.முறையாக ஜபதியானம் செய்துவந்தால் எல்லாம் சரியாகிவிடும்.உன்னை வழிநடத்துபவர் குருதேவர்.அவரை எப்போதும் நினை.தவறுகளை எண்ணி கவலைப்பட்டுக்கொண்டிருக்கதே
-
உனது பயிற்சி.பேச்சு,செயல் அனைத்திலும் நேர்மையாக இரு.நீ எவ்வளவு பேறுபெற்றவன் என்பதை அப்போது உணர்வாய்
-
நேர்மை,உண்மை,அன்பு ஆகியவற்றையே கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கிறார்.வெறும் வாய்ஜாலங்கள் அவரைத் தொடுவதில்லை
-
உண்மையான ஆர்வத்துடன் முயற்சி செய்தால்,மற்ற எல்லா எண்ணங்களையும் விலக்கி,உன் இதய ஆழங்களிலிருந்து அவரிடம் பிரார்த்தனை செய்தால் அவர் கேட்பார்.அவரது அருளால் அந்த பிரார்த்தனைகள் நிறைவேறும்
-
ஆபத்து காலத்தில்  உயிர்போய்விடுமோ என்ற நிலை வரும்போது உங்களிடம் எப்படிப்பட்ட மனநிலை தோன்றவேண்டும் தெரியுமா?பரிபூரணமாக பொறுப்பை இறைவனிடம் ஒபப்டைத்துவிட்டு,சிறு குழந்தையைப்போல் அவரிடம் முற்றிலும் சரணடைந்து வாழவேண்டும்.ஆபத்தைப்பற்றி அறியாத குழந்தை தாயின் மடியில் கவலையற்று இருப்பதுபோல இருக்க வேண்டும்
-
பக்தர்களின் இதயங்களில் தாம் நூறு வருட காலம் நுண்ணுடலில் வாழப்போவதாக அவர் கூறினார்.தமக்கு வெளிநாட்டு பக்தர்கள் பலர் வருவார்கள் என்றும் அவர் சொன்னார்
-
ஈசுவரகோடிகள் எல்லா ஆசைகளும் நிறைவேறப்பெற்றவர்கள்.எனவே அவர்களால் இறைவனிடம் பக்திக்காக பக்தி செலுத்த முடியும்.ஆசை இருந்தால் பக்திக்காக பக்தி என்பது சாத்தியம் இல்லை
-
மகனே, ஒரு லட்சிய வாழ்க்கைக்கு எவ்வளவு செய்ய வேண்டுமோ அதைவிட அதிகமாகவே நான் உழைத்துவிட்டேன்.
-
மகனே, நீங்களெல்லாம் தெய்வங்களே. கடவுளுக்காக எல்லாவற்றையும் துறக்க யாரால் முடியும்? கடவுளிடம் சரணடைந்துவிட்டால் விதியின் தலைவிதியே மாறிவிடுகிறது.தான் எழுதியதை விதி தன் கையாலேயே அழிக்க நேர்கிறது.
-
இறையனுபூதி பெற்றவனுக்கு என்ன இரண்டு கொம்புகளா முளைக்கின்றன? இல்லை. அவனுக்கு உண்மை- உண்மையற்றது பற்றிய விவேகம் வருகிறது,விழிப்பணர்வு ஏற்படுகிறது.அவன் பிறப்பு-இறப்பை கடந்து செல்கிறான்
-
நரேன் ஒருமுறை என்னிடம்,அம்மா,குருவின் தாமரைத் திருவடிகள் உண்மையல்ல, என்று காட்டும் ஞானம் ஞானமல்ல,அது அஞ்ஞானம்.குரு இல்லாவிட்டால் ஞானம் எதை ஆதாரமாகக் கொள்ளும்? என்று சொன்னான்.பக்தி இல்லாத வறட்டு தத்துவங்களை விட்டுவிடு.
-
ஸ்ரீராமகிருஷ்ணரின் கருத்துக்களை தினமும் பெற வாட்சப் குழு 9003767303
-
-

No comments:

Post a Comment