சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-4
சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள்-4 - ஓர் அடி கிடைத்தால்,இரட்டிப்பு கோபத்துடன் பத்து அடி திருப்பி அடிக்கவேண்டும்.அப்படி செய்தால்மட்டுமே அவன் ஓர் ஆண்மகன் - எனது ஆனந்தத்திற்கு வேறுயாரும் தேவையில்லை.காலம்காலமாக நான் தனியாகவே உள்ளேன்.ஏனெனில் நான் முக்தனாகவே இருந்தேன் - யார் தன்னில் மட்டும் ஆனந்தம் காண்கிறானோ,தன்னுள்ளேயே ஆசைகளின் நிறைவைக் காண்கிறானோ அவன்தான் பாடங்களைக் கற்றவன் - இது ஒரு கனவுலகம்.இங்கே ஒருவன் இன்பத்தை அனுபவிக்கிறானா,துன்பத்தை அனுபவிக்கிறானா என்பது பொருட்டே அல்ல.இரண்டும் கனவுகள் - பற்று வைப்பது, பற்றை விடுவது இரண்டும் பூரணமாக வளர்க்கப்பட்டால் அவை மனிதனை உயர்ந்தவனாக மகிழ்ச்சி நிறைந்தவனாக ஆக்கும் - தன் முயற்சியாலேயே தன்னை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்பது எல்லா விஷயங்களிலும் உண்மையாக பொருந்தும் - எல்லா செயல்களிலும் ஆரம்பத்தில் பல தடைகள் இருக்கத்தான்செய்யும்.காலப்போக்கில் பாதை சீராகிவிடும் - உன்னிடம் எல்லையற்ற பொறுமையும்,விடாமுயற்சியும் இருக்குமானால் வெற்றி வந்தே தீரும் - இதயத்தின் நாடிகள் 108 அதில் கருணை மையம் என்று அழைக்கப்படும் இடம் உள்ளதே அங்குதான் ஆன்மாவின் கோட்டை உள்ள...