Thursday, 5 November 2020

பாரதம் முழுவதையும் ஒரே அரசன் ஆட்சி செய்தானா

 இந்துமதம் வகுப்பு

பாரத தேசம்

 ..

பாரதம் முழுவதையும் ஒரே அரசன் ஆட்சி செய்தானா?

பாரதம் என்ற பெரும் நிலப்பரப்பிற்குள் பல சிறு தேசங்கள் இருந்தன.குறுநில மன்னர்கள் இருந்தார்கள்.மகாபாரத யுத்தத்தில் கலந்துகொண்ட அரசர்களும் அவர்களது தேசங்கள் பற்றியும் பாரதம் கூறுகிறது.

..

அப்படியானால் ஒரே நாடு.ஒரே அரசர் இல்லையா?

உண்டு. 

இந்த பாரத தேசத்தை முழுவதும் ஆளும் தகுதி உள்ளவன் சக்கரவர்த்தி.அஷ்வமேத யாகம் என்ற யாகம் நடத்தக்கூடிய அளவுக்கு யாருக்கு வலிமை உண்டோ அவர்தான் பாரதம் முழுவதற்கான சக்கரவர்த்தி. 

யுதிஷ்டிரர் உட்பட பல அரசர்கள் அஷ்வமேத யாகம் புரிந்து சக்கரவர்த்திகளாக ஆகியுள்ளார்கள்.

-

பாரதம் என்ற மிகப்பெரிய நாடு.அதற்குள் பல சிறிய நாடுகள். 

பாரதத்தை ஆள ஒரு சக்கரவர்த்தி. சிறிய தேசங்களை ஆள பல அரசர்கள்,குறுநில மன்னர்கள்

இது தான் பண்டைய இந்தியா

..

திருதராஷ்டினன் சஞ்சயனிடம் கேட்டான்

-

எது பரதனின் பெயரால் அழைக்கப்படுகிறதோ, அப்படிப்பட்ட இந்த கண்டத்தை - பாரதக்கண்டத்தைக் குறித்த உண்மையை (ஓ! சஞ்சயா) எனக்குச் சொல்வாயாக 

 நீ புத்திக்கூர்மையுள்ளவன் என்பதால், இதை எனக்குச் சொல்வாயாக."

சஞ்சயன் கூறத்தொடங்கினான்

-

நான் இப்போது உமக்கு, பரதனின் பெயரால் அறியப்படும் நிலப்பகுதியைக் {பாரதக்கண்டத்தைக்} குறித்துச் சொல்கிறேன்.

 நான் குறிப்பிடப்போகும் மாகாணங்களின் பெயர்களைக் குறித்துக் கேளும். 

குரு-பாஞ்சாலம், சால்வம், மாத்ரேயம், ஜாங்கலம், சூரசேனம், கலிங்கம், போதம், மாலம், மத்ஸ்யம், சௌவல்யம், குந்தலம், காசிகோசலம், சேதி, கரூசம், போஜம், சிந்து, புளிந்தகம், உத்தமம், தசார்ணம், மேகலம், உத்கலம், பாஞ்சாலம், கௌசிஜம், நைகபிருஷ்டம், துரந்தரம், சோதம், மத்ரபூஜிங்கம், காசி, அதிகாசி {அபரகாசி}, ஜடரம், குகுரம், 


ஓ! பாரதா {திருதராஷ்டிரரே}, குந்தி, அவந்தி, தசார்ணம், அதிகுந்தி {அபரகுந்தி}, கோமந்தம், மந்தகம், சண்டம், விதர்ப்பம், ரூபவாஹிகம், அஸ்வகம், பான்சுராஷ்ட்ரம், கோபராஷ்ட்ரம், கரீதியம், அதிராஜ்யம், குலாத்யம், மல்லராஷ்டிரம், கேரளம், வாரத்ராஸ்யம், ஆபவாஹம், சக்ரம், வக்ரதபம், சகம், விதேகம், மகதம், ஸ்வக்ஷம், மலயம், விஜயம், அங்கம், வங்கம், களிங்கம், யகிருல்லோமம், மல்லம், சுதேளம், பிரனராதம், மாஹிகம், சசிகம், பாஹ்லீகம், வாடதானம், ஆபீரம், காலஜோஷகம், அபராந்தம், பராந்தம், பாநாபம், சர்மமண்டலம், அடவீசிகரம், மகாபூதம், 

ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, உபாவிருத்தம், அநுபாவிருத்தம், சுராஷ்ட்ரம், கேகயம், குதம், மாஹேயம், கக்ஷம் சமுத்ரநிஷ்குடம், ஆந்திரம், 


மேலும் ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மலையில் இருக்கும் பல மலை நாடுகள், மலைகளின் அடிவாரத்திலும் வெளிப்புறத்திலும் உள்ள பல நாடுகள், அங்கமலஜங்கள், மானவர்ஜகம், பிராவிருஷேயம், பார்க்கவம்,

 ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, புண்ட்ரம், பர்க்கம், கிராதம், சுதேஷ்ணம், யாமுனம், சகம், நிஷாதம் {நிஷதம்}, ஆனர்த்தம், நைருதம், துர்க்காலம், பிரதிமத்ஸ்யம், குந்தலம், குசலம், தீரக்ரஹம், ஈஜிகம், கன்யககுணம், திலபாரம், சமீரம், மதுமாதம் {மதுமான்}, சுகந்தகம், காஸ்மீரம், சிந்துசௌவீரம், காந்தர்வம், தர்சகம், அபீசாரம், உதூலம், சைவலம், பாஹ்லிகம், தார்வி, வானவம்தர்வம், வாதகம், அமாரதம், உரகம், பஹுவாத்யம், கௌரவ்யம், சுதாமானம், சுமல்லிகம், வத்ரம், கரீஷகம், களிந்தம், உபத்யகம், பதயானம், குசபிந்து, கச்சம், கோபாலகக்ஷம், குருவர்ணகம், கிராதம் பர்ப்பரம், சித்தம், வைதேஹம், தாம்ரலிப்தகம், ஔண்ட்ரம், பௌண்ட்ரம், சைசிகடம், பார்வதீயம் ஆகியன இருக்கின்றன.


மேலும், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, தெற்கில் பிற நாடுகளும் இருக்கின்றன. அவை, திராவிடம், கேரளம், பிரச்யம், மூஷிகம், வனவாசிகம், கர்நாடகம், மஹிஷகம், விகல்பம், மூஷகம், ஜில்லிகம், குந்தலம், சௌன்ருதம், நளகானனம், கான்குட்டகம், சோழம் {சோழ நாடு}, மாலவயகம், சமங்கம், கனகம், குகுரம், அங்கார-மாரிஷம், திவஜினி, உத்ஸவம், ஸங்கேதம், திரிகர்த்தம், சால்வசேனம், வகம், கோகரகம், பாஷ்திரியம், லாமவேகவசம், விந்தியசுலிகம், புளிந்தம், வல்கலம், மாலவம், வல்லவம், அதிவல்லவம் {அபரவல்லவம்}, குளிந்தம், காலவம், குண்டௌகம், கரடம், மிருஷகம், தனபாலம், சனீயம், அளிதம், பாசிவாடம், தநயம், சுலன்யம், ரிஷிகம், விதர்ப்பம், காகம், தங்கணம், அதிதங்கணம் {அபரதங்கணம்} ஆகிய நாடுகள் இருக்கின்றன.

மேலும் இங்கே(பாரதகண்டத்தில்), சூத்திர-ஆபீரம், தரதம், காஸ்மீரம், பட்டி, காசீரம், ஆத்ரேயம், பரத்வாஜம், ஸ்தனபோஷிகம், புஷோகம், களிங்கம், பல்வேறு இனங்களைச் சேர்ந்த வேடர்கள் வசிக்கும் நாடு, தோமரம், ஹன்சமார்க்கம், கரமஞ்சகம் ஆகியவையும் இருக்கின்றன. இவையும், இன்னும் பிற நாடுகளும் கிழக்கிலும் வடக்கிலும் இருக்கின்றன

..

(மகாபாரதம்-பீஷ்ம பர்வம்)

..

காஷ்மீர் முதல் கண்டி (இலங்கை)வரையிலும்,காந்தாரம்(ஆப்கான்)முதல் பர்மா வரையிலும் பாரததேசம் பரவியிருந்தது.


முற்காலத்தில் பாரததேசம் முழுவதும் செழிப்பான காடுகளால் நிறைந்திருந்தது.


எண்ணற்ற சிற்றரசுகள் இருந்தன. தற்காலத்தைப்போல போக்குவரத்து வசதிகள் இல்லாததால்,ஒவ்வொரு பகுதியும் பிற பகுதிகளிலிருந்து சற்று தனித்தே இருந்தது.

..

காசி,ரிஷிகேஷ்,ராமேஸ்வரம் போன்ற பல புண்ணிய ஸ்தலங்கள் பாரத தேசம் முழுவதும் காணப்படுகிறது.

இந்த இடங்களுக்கு செல்லும் யாத்ரீகர்கள்,துறவிகள் போன்றோர் சுதந்திரமாக அனைத்து நாடுகளையும் கடந்துசெல்ல அனுமதிக்கப்படார்கள்.அத்துடன் அனைத்து நாடுகளிலும் அவர்கள் விருந்தினராக கருதி உபசரிக்கப்பட்டார்கள்.

..

பாரதகண்டம் முழுவதும்  ஒரேவிதமான  கலாச்சாரம் இருந்ததே இதற்கு காரணம்.

தற்காலத்தில் ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருப்பதுபோல முற்காலத்தில் பாரத கண்டம் முழுவதும் பிராமணமொழி அல்லது பிராமி மொழி இணைப்பு மொழியாக இருந்தது. பண்டிதர்கள் அனைவரும் தங்கள் தாய்மொழியுடன் பிராமிமொழியையும் கற்றிருந்தனர்



இந்து மதத்தைத் தோற்றுவித்தவா்

 இந்துமதம் வகுப்பு

2.இந்து மதத்தைத் தோற்றுவித்தவா்.


இந்தியாவில் தோன்றிய ஒவ்வொரு தீர்க்கதரிசியும் ஒவ்வொரு மதத்தை உருவாக்கியுள்ளார்கள்.

ஒவ்வொரு நூற்றாண்டிலும் பல மதங்கள் புதிதாக தோன்றுகின்றன.

பெரிய மதங்கள் பல பிரிவுகளாக பிரிவதுண்டு,

சைவம்,வைணவம் போன்ற மதங்கள் பல பிரிவுகளாக பிரிந்து வளர்ந்தது

அதேபோல காலப்போக்கில் பல மதங்கள் ஒன்றிணைந்து ஒரே மதமாக உருவாதும் உண்டு.

ஆதிசங்கர் வாழ்ந்த காலத்தில் வேதத்தை அடிப்படையாகக் கொண்ட 78 மதங்கள் இருந்தன.

ஆதி சங்கரர் அவைகளை ஒன்றிணைத்து ஆறு மதங்களுக்குள் கொண்டு வந்தார்.

பல மதங்கள் காலப்போக்கில் அழிந்துபோனதும் உண்டு

..

வேதத்தை சாராத மதங்களும் இந்தியாவில் இருந்தன.அவைகளில் முக்கியமானது புத்தமதம்,சமணமதம்

இந்தியாவில் எண்ணற்ற மதங்கள் தோன்றியுள்ளன.இனியும் பல மதங்கள் தோன்றும் என்பதைப் பார்க்கிறோம்.

..

எண்ணற்ற மதங்கள் புதிதாக தோன்றும்போது அவைகளுக்குள் சண்டைகள் ஏற்படுவதும் இயல்பானதுதான்.

வெளிநாடுகளில் இப்படி புதிய மதம் தோன்றும்போது,தங்களுக்குள் அடித்துக்கொண்டு இறந்துபோவார்கள்.

இந்தியாவிலும் ரிக் வேத காலத்திலேயே இந்த பிரச்சினைகள் உருவாக ஆரம்பித்துவிட்டது.

அந்த காலத்தில் இதற்கான தீர்வும் கண்டுபிடிக்கப்பட்டது.

அதுதான் “ஏகம் சத் விப்ரா பகூதா வதந்தி”

இறைவன் ஒருவன்தான்.மகான்கள் பல பெயர்களில் அழைக்கிறார்கள். 

ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு பாதையைக் காட்டுகிறது.

எல்லா நதிகளும் சமுத்திரத்தை சென்றடைந்து அதில் ஒன்றாகிவிடுகிறது.

எனவே மதத்தின் பெயரில் யாரும் சண்டையிடத்தேவையில்லை.

எல்லா பாதைகளும் அந்த ஒரே இறைவனையே சென்று சேர்கின்றன.

என்பதை ரிஷிகள் ஆதி காலத்திலேயே கண்டு,மக்களிடம் போதித்துள்ளார்கள்.

எனவே இந்தியாவில் அனைத்து மதத்தினரும் ஒன்றுமையாக வாழ முடிகிறது.

..

இந்தியாவில் தோன்றிய ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு பாதையை காட்டினாலும்,

சில அடிப்படைகள் அனைத்திலும் ஒன்றுபோலவே இருக்கின்றன.

இவைகள் எக்காலத்திலும் மாறுவதில்லை. 

உதாரணமாக மறுபிறப்புக்கொள்கை,கர்மகோட்பாடு,முக்தி,பிறருக்கு சேவை செய்வது,உயிர்களிடம் கருணை,நற்குணங்கள்,விருந்தினர்களை உபசரிப்பது,உயிர்களைக் கொல்லாமை போன்ற பலவற்றை கூறலாம்.

இந்த தர்மம் என்பது எப்போதுமே மாறுவதில்லை

ஒரு மனிதன் மதம் மாறலாம்.ஆனால் தர்மங்கள் மாறுவதில்லை. 

உதாரணமாக உயிர்களைக்கொல்வது பாவம் என்ற தர்மம் நிரந்தரமான உண்மை. 

எந்த மதத்தை ஒருவன் பின்பற்றினாலும் இது பொருந்தும்.

பொய் சொல்வது பாவம் என்ற தர்மம் எல்லா மதத்திற்கும் பொதுவானது.

எனவே எண்ணற்ற மதங்கள் இந்தியாவில் தோற்றினாலும், இந்த தர்மங்கள் என்றும் நிலையாக இருக்கின்றன.

எனவே இதற்கு சனாதன தர்மம் என்று பெயர்

இந்தியாவில் ஒருவன் ஒரு மதத்தைவிட்டு இன்னொரு மதத்திற்கு மாறினால்கூட பாவமாக கருதப்படுவதில்லை.

அவனுக்கு பிடித்த பாதையை தேர்ந்தெடுத்துள்ளான் என்று விட்டுவிடுகிறோம்.ஆனால் தர்மத்தை விட்டுவிட்டால் அது பாவமாகக் கருதப்படுகிறது.

..

இந்த சனாதன தர்மம் என்பதைத்தான் இந்துமதம் என்று அழைக்கிறோம்.

சைவம்,வைணவம்,சாக்தம்,கௌமாரம்,புத்தம்,சீக்கியம் என்று எத்தனை மதங்கள் இருந்தாலும்,இவைகள் அனைத்தும் சனாதன தர்மத்திற்கு உட்பட்டவைதான்.

சனாதன தர்மம் நிரந்தரமானது.தொன்றுதொட்டு வருவது.

இவைகளை எந்த மனிதனும் தோற்றுவிப்பதில்லை.

பொய் சொல்வது பாவம்,உயிர்களைக்கொல்வது பாவம் என்பதை ஒரு மனிதன் கண்டுபிடிக்கத்தேவையில்லை.

இவைகள் நிரந்தரமான உண்மைகள்.

எனவே இந்துமதம் என்பது மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்ட மதம் அல்ல.

அது காலம் காலமாக இருந்துவருகின்றன தர்மம்

..

இந்தியாவில் தோன்றிய,இனி தோற்றப்போகின்ற அனைத்து மதங்களையும் ஒருங்கிணைக்கும் ஒரு வார்த்தைதான் சனாதன தர்மம் அல்லது இந்துமதம்.

மதம் என்றால் என்ன? நம்பிக்கை

இந்தியாவின் நம்பிக்கை என்ன?

இறைவன் ஒருவன்தான்.பாதைகள் வேறு வேறு.

இதுதான் ஹிந்துமதம்.

ஹிந்து மதம் என்ற உடன் தனியான வழிபாடு,சடங்குள்,கடவுள் என்று எதுவும் இல்லை.

இறைவன் ஒருவன்தான்.பாதைகள் வேறு வேறு என்று யாரெல்லாம் நம்புகிறார்களோ அவர்கள் எல்லாம் ஹிந்துக்கள்.

அவர்கள் சிவனை வழிபடலாம்,விஷ்ணுவை வழிடலாம்,காளியை வழிபடலாம்,  மேலான ஒளியை வழிபடலாம் எப்படி இருந்தாலும் அவர்கள் அனைவரும் நம்பிக்கையால் ஹிந்துக்கள்.

-

எனது மதம்தான் உயர்ந்தது. எனது கடவுள்தான் உயர்ந்தவர். எனது பாதைதான் உயர்ந்தது.மற்றது எல்லாமே தாழ்ந்தது.மற்ற வழிபாடுகள் தாழ்ந்தது.பிற பாதைகள் தாழ்வானவை அல்லது தவறானவை என்று யாரெல்லாம் நினைக்கிறார்களோ அவர்கள் அறிவில்லாதவர்கள்.மூடநம்பிக்கை உடையவர்கள்.கொள்கை வெறி பிடித்தவர்கள்.அவர்களை நாம் அலட்சியப்படுத்திவிட வேண்டும்

-

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது ஹிந்து என்பது யாரைக்குறிக்கும்? 

என்ற கேள்வி ஆட்சியல் இருந்தவர்களிடம் ஏற்பட்டது. 

அப்போது அவர்கள் அதற்கு ஒரு தெளிவாக விளக்கத்தை கொடுத்துள்ளார்கள்.

இந்தியாவில் வசிக்கும் மக்களில் முஸ்லீம்கள்,கிறிஸ்தவர்கள்,பார்சிகள்,யூதர்கள் அல்லாத அனைவரும் ஹிந்துக்கள்.

இதை நாம் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் படி யாரெல்லாம் ஹிந்துக்கள்?

முஸ்லீம்கள்,கிறிஸ்தவர்கள்,பார்சிகள்,யூதர்கள் தவிர வேறு எல்லோரும் ஹிந்துக்கள்

-

ஹிந்துக்கள் ஒற்றுமையாக இருந்தால் இந்தியாவை நம்மால் கைப்பற்ற முடியாது என்ற எண்ணத்தில் வெளிநாட்டு சக்திகள் செயல்பட்டு வருகின்றன.

அவர்களின் எண்ணங்களை இங்குள்ள அரசில்வாதிகள்மூலம் செயல்படுத்த நினைக்கிறார்கள்.


அதாவது சைவர்கள் ஹிந்துக்கள் அல்ல. வைணவர்கள் ஹிந்துக்கள் அல்ல. தென்னிந்தியாவில் வசிப்பவர்கள் ஹிந்துக்கள் அல்ல.சிறு தெய்வங்களை வணங்குபவர்கள் ஹிந்துக்கள் அல்ல.ஹிந்துதமதம் என்பது பிராமணமதம்,அது இந்தியாவின் மதம் அல்ல,அது தமிழ்நாட்டின் மதம் அல்ல இதுபோல பொய் பிரச்சாரத்தை இப்போது முன்னெடுத்துள்ளார்கள்.

இது ஒருபோதும் வெற்றி பெறக்கூடாது





இந்துமதம் என பெயர் வரக்காரணம்

இந்துமதம் வகுப்பு

1.இந்துமதம் என பெயர் வரக்காரணம்

..

வடமொழியில் ஹிந்து என்பதை தமிழில் இந்து என்று அழைக்கிறோம்

தமிழில் இந்து என்றால் நிலா என்று ஒரு அர்த்தம் உள்ளது.

பாரசீகர்கள் பாரததேசத்தை சிந்துநதியை மையப்படுத்தி அழைத்தார்கள். 

சிந்துஸ்தான் என்று அழைத்தார்கள் பின்பர் அது மருவி ஹிந்துஸ்தான் என்று ஆனது.

பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான்,உஸ்பெகிஸ்தான்,கஜகிஸ்தான் போன்ற பெயர்களில் வரும் ஸ்தான் என்பது ஸ்தலம்(இடம்) என்ற வடமொழியின் மருவு ஆகும்.ஆங்கிலத்தில் ஸ்டான்ட் என்று மருவியுள்ளது.

..

சிந்து நதியின் மறுகரையில் வாழ்ந்த மக்களை அழைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட வார்த்தை ஹிந்துஸ்தான்.

இந்த வார்த்தை பிற்காலத்தில் பாரதம் முழுவதும் வாழ்ந்த மக்களை குறிக்கும் வார்த்தையாக மாறிவிட்டது.

.

வெளிநாட்டு மக்களைப்பொறுத்தவரை பாரதத்தில் வாழ்ந்த மக்கள் ஹிந்துக்கள்.

ஹிந்துக்கள் பின்பற்றிய மதம் ஹிந்துமதம். 

.

பாரசீகர்கள்,அரேபியர்கள்,யூதர்களுக்கு ஒரு மதம்தான் இருந்தது. பிறமதங்கள் வளர்ச்சியடையாமல் நசுக்கப்பட்டுவிட்டன.

ஆனால் பாரததேசத்தில் பல மதங்கள் பலரால் பின்பற்றப்பட்டு வந்தது. 

அவைகள் பற்றி பாரசீகர்களுக்கு தெரியாது. பொதுவாக அனைவரையும் ஹிந்துக்கள் என்றும் அவர்கள் பின்பற்றும் மதத்தை ஹிந்துமதம் என்றும் அழைத்தார்கள்.

..

பாரசீகர்களின் பார்வையில் புத்தமதம்,சமண மதத்தை பின்பற்றியவர்களும் ஹிந்துக்கள்தான்.

ஆப்கானிஸ்தானில் அந்த காலத்தில் புத்த மத்தினரே அதிகம் வாழ்ந்தார்கள்.முஸ்லீம்களால் அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். அங்கு ஒரு மலை இருக்கிறது.அந்த மலைக்கு ஹிந்துகுஷ் என்றே பெயர்.ஹிந்துக்கள் கொலை செய்யப்பட்ட மலை என்று பெயர்.

..

தற்போது பாரசீகர்கள் மிகசிறிய அளவில்தான் இருக்கிறார்கள்.மற்றவர்கள் முஸ்லீம்களாக மதம்மாறிவிட்டார்கள்.ஆனால் ஒரு காலத்தில் ஆசியாவின் பெரும்பகுதியை பாரசீகர்கள் ஆண்டுவந்தார்கள்.

பல பாரசீக அறிஞர்கள் அந்த காலத்தில் வாழ்ந்தார்கள்

..

பாரசீகர்கள்,முகமதியர்கள்,யூதர்களின் பார்வையில் பாரததேசத்தின் பெயர் ஹிந்துஸ்தான்.

பாரசீகர்கள்,முகமதியர்கள்,யூதர்களின் பார்வையில் ஹிந்துஸ்தானில் வாழ்ந்த மக்கள் ஹிந்துக்கள்

பாரசீகர்கள்,முகமதியர்கள்,யூதர்களின் பார்வையில் ஹிந்துஸ்தானின் மதம் ஹிந்துமதம்

..

முஸ்லீம்கள் ஹிந்துஸ்தானிற்குள் வந்தபோது அவர்கள் பார்வையில் எல்லோருமே அவர்களுக்கு எதிரிகளாகவும்,காபிர்களாகவும், கொலைசெய்யப்பட வேண்டிவர்களாகவும்,அவர்களது வழிபாட்டு தலங்கள் அழிக்கப்பட வேண்டிவையாகவுமே தெரிந்தது.அவர்களது மதம் அதைத்தான் போதிக்கிறது


எனவே முஸ்லீமாக மதம் மாறாதவர்கள் அனைவரும் கொலை செய்யப்படவேண்டும்,அவர்கள் வழிபாட்டு தலங்கள் அனைத்தும் இடிக்கப்பட வேண்டும் என்ற முழக்கத்துடன் ஹிந்துஸ்தானிற்குள் வந்தார்கள்.

அவர்களால் ஹிந்துஸ்தானில் உள்ள அனைவரும் பாதிக்கப்பட்டார்கள். புத்தமதம்,சமணமதம்,வேதமதத்தை பின்பற்றிவர்கள் என்று எல்லோரும் பாதிக்கப்பட்டார்கள்.

-

புத்த மதத்தினர் பலர் படுகொலை செய்யப்பட்டார்கள் சிலர்.திபெத்,பூடான்,இமாச்சல் போன்ற மலைவாழ் பகுதிகளுக்கு தப்பிச்சென்றார்கள்.

பிராமணர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டார்கள் சிலர் தென்இந்தியா பக்கம் வந்தார்கள்.

இது தவிர உயிருக்கு பயந்து மதம் மாறியவர்கள் ஏராளம்

.

பெண்கள் அடிமைகளாக பிடிக்கப்பட்டு வெளிநாட்டு சந்தைகளில் ஏலம் விடப்பட்டார்கள்.

மதம் மாற மறுத்த ஆண்கள் அனைவரும் கொலை செய்யப்பட்டார்கள்.

பொருட்கள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டது.

ஹிந்துக்களின் தலைகள் மலைகள் அளவுக்கு பல்வேறு இடங்களில் குவிக்கப்பட்டன.

..

ஐநூறு ஆண்டுகால முகமதியர்களின் கொடுமையால் வடஇந்தியாவில் பெரும்பாலான இடங்களில் இந்துக்களே இல்லை.

அதன் பின்னர் வடஇந்தியாவில் பல்வேறு மகான்கள் தோன்றினார்கள்.மதம்மாறியவர்களை மீண்டும் படிப்படியாக தாய் மதத்திற்கு கொண்டு வந்தார்கள்.அவர்களின் கடின முயற்சியால் ஓரளவு ஹிந்துக்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

..

ஹிந்துமதம் என்ற பெயரை நாம் விரும்பி ஏற்றுக்கொள்ளவில்லை.அன்னியர்கள் நம்மீது திணித்த வார்த்தை இது. எனவே இதை நீக்க வேண்டுமா?

.

சைவர்களுக்கு சைவன் என்ற பெயர் இருக்கிறது. வைணவர்களுக்கு வைணவன் என்று பெயர் உள்ளது. சீக்கியர்களுக்கு சீக்கிய மதம் உள்ளது. இப்படி இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மதத்தினருக்கும் ஒவ்வொரு பெயர் இருக்கிறது.அப்படி இருக்கும்போது ஹிந்துமதம் என்ற பெயரை ஏன் அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்?

.

ஹிந்துமதம் என்ற ஒரு தனியான மதம் இல்லாதபோது அந்த பெயரை ஏன் எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்?

.

ஒவ்வொரு செயலுக்கும் சமமான எதிர் செயல் உண்டு என்பது தான் விதி. 

காபிர்கள் என்ற முத்திரையோடு  கோடிக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளார்கள். 

அவர்களின் சாபம் இன்னும் நீங்கவில்லை. 

..

இந்த சம்பவத்தை நீங்கள் உங்கள் மனக்கண் முன்னால் கொண்டுவர முயற்சி செய்ய வேண்டும்.

ஒரு கும்பல் கையில் வாளுடன், அல்லாகு அக்பர் என்ற முழக்கத்துடன் வந்து வீட்டில் உள்ள ஆண்களைக்கொன்று,பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கி,அவர்களையும்,குழந்தைகளையும் கையில் விலங்கு பூட்டி மிருகங்களை இழுத்து செல்வதுபோல சென்று வெளிநாட்டுசந்தைகளில் வியாபாரம் செய்யப்படுதை உங்கள் மனக்கண்முன் கொண்டுவரவேண்டும். 

அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? 

தன் கண்முன் கணவன் கொலை செய்யப்படுவதையும்,குழந்தைகள் தங்களிடமிருந்து பிரிக்கப்படுவதையும், வலுக்கட்டாயமாக பாலியல் உறவுக்கு உட்படுத்துவதையும் சந்திக்கும் பெண்ணின் மனநிலை எப்படி இருக்கும்.

இவைகளை மறக்க வேண்டுமா?

ஒன்றிரண்டுபேர் அல்ல சுமார் 500 ஆண்டுகளுக்கும்மேலாக  கோடிக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.

இந்த வரலாறுகளைப்பற்றி விரிவாக படித்து தெரிந்துகொள்ள வேண்டும்.

..

இறந்தவர்களின் சாபம் நீங்கும்வரை நாம் ஹிந்துக்களாகவே இருப்போம்.

அதன் பிறகு வேண்டுமானால் வேறு பெயரை வைத்துக்கொள்ளலாம்.

அதற்கு முன்பு யாராவது ஹிந்து என்ற பெயரை மாற்ற முயற்சிசெய்தால் உயிரிழந்த கோடிக்கணக்கான மக்களின் சாபம் அவர்களை தண்டிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அது மட்டுமல்ல இந்து என்ற பொதுப்பெயரிலிருந்து விலகி தனியாக செல்லும் மதங்கள் படிப்படியாக அழிவையே சந்திக்கும் என்பதில் சந்தேகம் இல்லை





 

ராமர் சம்பூகனை வதம் செய்தது சரியா?

 ❓கேள்வி-ராமாயணத்தில் ராமர் சம்பூகனை வதம் செய்தது சரியா? 

சம்பூகன் எந்த தவறும் செய்யவில்லை. 

சூத்திரன் தவம் செய்தான் என்பதற்காக ராமர் அவனைக்கொன்றது சரியா?

..

✍️பதில்-சூத்திரன் தவம் புரிந்தான் என்பதற்காக ராமர் அவனைக் கொல்லவில்லை. 

 சபரி என்ற சூத்திரபெண்  காட்டில் கடுமையான தவமியற்றி பலகாலம் வாழ்ந்தாள்.ராமர் அவளைச் சென்று பணிந்தார்.அவள்  கடித்து எச்சில்பட்ட பழங்களை ராமர் உண்டார். இங்கே ராமர் ஜாதியும் பார்க்கவில்லை,சூத்திரன் தவம் செய்யக்கூடாது என்றும் கூறவில்லை.

.

வால்மீகி வழிப்பறிக் கொள்ளை செய்து வந்தவர். அவரும் சூத்திர குலத்தை சேர்ந்தவர்தான். அவரை தவம் செய்யும்படி நாரதர் கூறினார். வால்மீகி பல காலம் தவம்புரிந்தார். பின்பு ராமருக்கு வேண்டிவரில் ஒருவரானார்

இங்கே சூத்திரன் தவம் புரியக்கூடாது என்று யாரும் சொல்லவில்லை. வால்மீகி சூத்திரகுலத்தில் பிறந்ததால் யாரும் அவரை விலக்கிவைக்கவும் இல்லை.

.

குகன் சூத்திரகுலத்தை சேர்ந்தவன்.ராமர் அவனை தனது சகோதரனாக ஏற்றுக்கொண்டார். சூத்திரன் என்பதற்காக அவனை ஒதுக்கிவைக்கவில்லை.

..

தற்செயலாகவோ அல்லது இயற்கை சீற்றம் காரணமாகவோகூட கணவனைவிட்டு மனைவி தனியாக இன்னொருவரின் வீட்டில் ஒருநாள் இரவை கழித்தாலும்கூட அவனை விலக்கி வைக்கவேண்டும் என்றவிதி அந்த காலத்தில் அயோத்தியில் நிலவிவந்தது.

சீதை பலநாட்கள் இராவணனின் அசோக வனத்தில் சிறைபிடிக்கப்பட்டிருந்தாள்.ராவணனைக்கொன்று சீதையை ராமர்மீட்டார். சீதை அனைவர் முன்னிலையிலும் தீக்குளித்து தான் ஒரு புனிதவதி என்பதை நிரூபித்தாள்.

அப்படியிருந்தும் அயோத்தியில் உள்ள ஒரு சூத்திரன் சீதையைக்குறித்து தவறாகப்பேசினான் என்பதற்காக அந்த நாட்டு சட்டப்படி சீதையை கானகத்திற்கு அனுப்பியவர் ராமர்.

இதில் சூத்திரனையும் தன்னுடைய பிரஜையாகவே அவர் பார்த்தார்.

..

அப்படியென்றால் எதற்காக சம்பூகளை கொன்றார்?

..

அதிக சக்தியைப்பெறுவதற்காக அசுரர்கள் தவம்புரிவார்கள். அவர்கள் தவம்புரிந்து குறுக்கு வழியில் சக்திகளைப்பெற்றபிறகு நாட்டில் உள்ள மக்களை துன்புறுத்துவார்கள். இப்படி குறுக்கு வழியில் சக்தியைப்பெறுவதற்காக தவம்புரிபவர்களை அரசர்கள் கொல்வது தர்மம். 

சம்பூகன் குறுக்கு வழியில் தவம்செய்து அதிகசக்தியைப்பெற நினைத்தான்.அதனால் நாட்டில் பல துர்சகுணங்கள் ஏற்படத்தொடங்கின.பிராமணரின் குழந்தை எந்த காரணமும் இல்லாமல் இறந்துபோனது.இவைகளை ஆராய்ந்தபிறகு சம்பூகன் அதிக சக்திவேண்டி தவம்புரிவதே இதற்குக்காரணம் என முடிவுக்கு வந்தார்கள்.

நாரதரே இதனை ராமரிடம் தெரிவித்தார். எனவே ராமர் அவனைக் கொன்றார்.

..

சாஸ்திரவிதிப்படி ஒருவர் தவம் செய்வதை யாரும் தடுப்பதில்லை.

ஒருவர் சூத்திரகுலத்தில் பிறந்திருந்தாலும், குருவிடம் சரணடைந்து குருவின் வழிகாட்டுதலின்படி தவம் செய்யலாம். இதற்கு பல உதாரணங்கள் உள்ளன.

வால்மீகி நாரதரை குருவாக ஏற்று தவம்புரிந்தார்.


..

சுவாமி வித்யானந்தர்

Monday, 15 June 2020

சுவாமி விவேகானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு-பாகம்-42

சுவாமி விவேகானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு-பாகம்-42

🌸

ஓவிய நுணுக்கம்

........................................

 அந்தக் காலத்தில் பிரெஞ்சு ஓவியக் கலையில் மிகவும் புகழ் பெற்றிருந்த ஓவியர் ஒருவர், சுவாமிஜியின் வேதாந்தக் கருத்துக்களில் ஆர்வம் கொண்டிருந்தார். அவர் தாம் வரைந்த ஓவியங்கள் இடம் பெற்ற நாடகத்திற்கு சுவாமிஜியைச் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார். சுவாமிஜிக்கு பிரெஞ்சு மொழி தெரியும்.ஆதலால் அவர் நாடகத்தைக் கூர்ந்து கவனித்தார். நாடகத்தின் நடுவில் திரையில் தெரிந்த ஓர் ஓவியத்தில் ஒரு தவறு இருப்பதை சுவாமிஜி கண்டார். அது ஒரு தொழில் நுட்பத் தவறு. அந்தத் தவறு சரி செய்யப் பட்டிருந்தால், நாடகம் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும் என்று சுவாமிஜி கருதினார்.

 நாடகம் முடிந்தது. சிறப்பு விருந்தினராகியசுவாமிஜியிடம் நாடகம் பற்றிய கருத்தை அறிய அந்த ஓவியரும் அரங்கின் நிர்வாகியும் வந்தார்கள்.

 அப்போது சுவாமிஜி தாம் நாடகத்தை மிகவும் ரசித்ததை அவர்களிடம் தெரிவித்தார். அதோடு, அவர் தாம் கண்ட தொழில் நுட்ப த் தவறையும் அவர்களுக்குச் சுட்டிக் காட்டினார். அதைக்கேட்டதும், பிரெஞ்சு நாட்டின் புகழ் பெற்ற அந்த ஓவியருக்கு ஒரே ஆச்சரியம்! ஏனென்றால் ஓவியக் கலையில் தேர்ச்சி  பெற்ற ஒருவர் மட்டுமே அந்தத் தவறைப் புரிந்து கொள்ள முடியும்! அந்த ஓவியர் சுவாமிஜி எடுத்துக் காட்டிய தவறையும், அவர் கூறிய பொருத்தமான திருத்தங்களையும் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார்.

 

 பிரான்சிஸ் சுவாமிஜியால் மிகவும் கவரப்பட்டவர்களில்  ஒருவர் ரிச்சலியு இளவரசர் . அவர் அப்போது சிறுவனாக இருந்தார். சுவாமிஜி அங்கிருந்து புறப்படத் தயாரானபோது ஒருநாள் அந்த இளவரசரிடம், நீங்கள் ஏன் உலகைத் துறக்கக் கூடாது? ஏன் என்னுடன்  உங்கள் வாழ்க்கையைத் தொடரக் கூடாது? என்று கேட்டார். அதற்கு அந்த இளவரசர், சுவாமிஜி, உலகைத் துறப்பதால் எனக்குக்  என்ன கிடைக்கும்? என்று கேட்டார். நீங்கள் அதனால் மரணத்தைநேசிக்க வல்லவர் ஆகலாம் என்றார் சுவாமிஜி. இளவரசருக்குப் புரியவில்லை. சுவாமிஜி தொடர்ந்தார். இதன் பொருள் என்னவென்றால் நீங்கள்   மரணத்தைக் கண்டு அஞ்சாத நிலையை உங்களுக்கு  என்னால் தர முடியும். மரணம் உங்கள் முன்னால் நிற்கும்போது, அதைப் பார்த்து நீங்கள் சிரிக்க வல்லவர் ஆவீர்கள். ஆனால் ஏனோ அப்போது அந்த இளவரசர் சுவாமிஜி கூறியதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் உலக வாழ்வையே  நாடினார்.

….

 தொடரும் பயணங்கள்

.....................................................................

 அக்டோபர் 24-ஆம் நாள் நண்பர்களுடன் பாரிஸை விட்டுப் புறப்பட்டார் சவாமிஜி. அவருடன் மெக்லவுட், கால்வே, ஜுல்போயி, லாயிஸன் தம்பதிகள் ஆகியோர் சென்றனர். வியன்னா, கான் ஸ்டான்டி நோபிள் வழியாக அவர்கள் சென்றனர். கான்ஸ்டான்டிநோபிளில் சுவாமிஜி பொதுச்  சொற்பொழிவுகள் ஆற்ற அனுமதி கிடைக்கவில்லை. ஆனால் இரண்டு இடங்களில் வகுப்புச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்.

 அடுத்ததாக அவர்கள் சென்ற இடம் கிரீஸ். அங்குள்ள பல கோயில்களுக்கும் அவர்களை அழைத்துச்சென்ற சுவாமிஜி அதன் வரலாற்று முக்கியத்துவத்தை அவர்களுக்கு எடுத்துக் கூறினார். அந்தக்கோயில்களின் மகத்துவத்தையும் உட்பொருளையும் விளக்கினார். அங்கிருந்த பலி பீடங்கள்  வழியாகவும் எங்களை அழைத்துச்சென்று அங்கு நடந்த சடங்குகள் போன்றவற்றையும் விளக்கினார் என்று எழுதுகிறார் கால்வே.

 அடுத்தது எகிப்து, எகிப்தின் தலை நகரான கெய்ரோ வில் உள்ள கண்காட்சியைக் காண மிகவும் விரும்பினார் சுவாமிஜி. அவற்றைப் பார்த்ததுடன் பிரமிடுகள், ஸ்பிங்ஸ் போன்றவற்றையும்  கண்டார். கெய்ரோவில் நடந்த ஒரு நெகிழ்ச்சியூட்டும் சம்பவத்தைக் கால்வே கூறினார்.

….

 விலை மகளிருக்கு அருள்

............................................................

 ஒரு நாள் கெய்ரோவில் சுவாரசியமாகப்பேசிக்கொண்டே சென்றதில் வழி தவறி விட்டனர். சுற்றி ச்சுற்றி க் கடைசியில் விலை மகளிர் வசிக்கின்ற ஒரு தெருவில் நுழைந்து விட்டனர். சிதிலமான ஒரு வீட்டின் அமர்ந்திருந்த பெண்கள் சிலர் சுவாமிஜியையும் அழைக்கலாயினர். சுவாமிஜியுடன் சென்றவர்கள் அந்த இடத்தை விரைவாகக் கடந்து விடலாம் என்று வேகமாக நடக்குமாறு அவரிடம் கூறினர்ஆனால் சுவாமிஜி அவர்களைப்பொருட்படுத்தாமல் அந்தப் பெண்களிடம் சென்றார். பிறகு கருணையால் நெகிழும் குரலில் அவர்களிடம், பரிதாபத்திற்குரிய ஜீவன்கள், பாவம்! தங்கள் தெய்வீகத்தை அழகிலட வெளிப்படுத்தினார்கள்........  இப்போது  இவர்களின் நிலைமையைப்பாருங்கள் என்று கூறினார். அவர்களின் நிலைமையைக்கண்டு சுவாமிஜியின் இதயம் நெகிழ்ந்தது. கண்கள் குழமாயின. சிறிது நேரத்தில் அவர் அழவே ஆரம்பித்து விட்டார். கண நேரத்தில் அந்தச்சூழ்நிலை முற்றிலுமாக மாறிவிட்டது. அந்தப் பெண்கள் ஒரு தெய்வ மனிதரின் முன்பு தாங்கள் நிற்பதை  உணர்ந்தனர். அவர்களில் ஒருத்தி சுவாமிஜியின் முன்னால் மண்டி யிட்டு அவரது அங்கியின் நுனியை முத்தமிட்டு, ஸ்பானிஷ்  மொழியில் இவர் தெய்வ மனிதர், இவர் தெய்வ மனிதர் என்று கண்ணீருடன் கூறினாள்..  ஒரு தெய்வ மனிதரின் முன் நிற்பதற்குத் தான் தகுதியில்லாதவள் என்று எண்ணிய மற்றொருத்தி கைகளில் முகத்தைப் புதைத்துக் கொண்டு  அழ ஆரம்பித்தாள். அவர்கள் அனைவரையும் ஆசீர்வதித்து விட்டு அங்கிருந்து அகன்றார் சுவாமிஜி.

 பாரிஸிலிருந்து புறப்பட்ட போது, எகிப்து முதலான இடங்களைப் பார்த்துவிட்டு, மீண்டும் பாரிஸிற்கு வந்து சில சொற்பொழிவுகள் செய்ய வேண்டும் என்று தான் எண்ணியிருந்தார் சுவாமிஜி. ஆனால் இறைவன் திருவுளத்தையும், அது ஒன்றையே சார்ந்து வாழும் இறைவனின் திருக் குழந்தைகளின் செயல்பாட்டையும் போக்கையும் அறிய வல்லவர் யார்? உள்ளத்தளவில் நான் ஓர் இறையுணர்வாளன் . எனது விவாதங்கள், சர்ச்சைகள் எல்லாம் வெறும் தோற்றம் மட்டுமே. நான் உண்மையில் எப்போதும் சில தெய்வீக அறிகுறிகளையும் அது போன்ற சிலவற்றையும் நாடுகிறேன் என்று சுவாமிஜியே தம்மைப் பற்றி கூறியதுண்டு. இறையாணை பெற்றே அவர் எதையும் செய்தார்.

 கெய்ரோவிலிருந்த போது திடீரென்று தாம் இந்தியா திரும்பப்போவதாக அறிவித்தார் சுவாமிஜி. அங்கே அவருக்கு உடல்நிலை சரியில்லமல் போயிற்று. ஒரு முறை மாரடைப்பும் தாக்கியது. அவர் திடீரென்று புறப்பட முடிவு செய்ததற்கு இவை காரணமாக இருக்கலாம். அது மட்டுமின்றி, அவரது வாழ்க்கையில் ஒன்றி விட்டவரும், இமய மலையில் மாயாவதியில் அத்வைத ஆசிரமத்தில் வாழ்ந்தவருமான சேவியர் அக்டோபர் 28-ஆம் நாள் மரணமடைந்தார். இந்தச் செய்தி சுவாமிஜியைச்சென்று சேர முடிய வில்லை. அவர் உடல் நலமற்றிருப்பது சுவாமிஜிக்குத்  தெரியும். ஏதோ உள்ளுந்தலின் காரணமாக அவருக்கு திடீரென்று சேவியரைக்காண வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. அதுவும் சுவாமிஜியைத் துரிதப்படுத்தியிருக்கலாம்.

 ஆனால் சுவாமிஜியின் இந்தத் திடீர் முடிவு அவருடன் இருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சுவாமிஜியும்  அவர்களைப் பிரிவதில் வருந்தவே செய்தார். ஆனாலும் போக முடிவு  செய்து விட்டார். கால்வே அவரிடம் சென்றார்.

 கால்வே-

 சுவாமிஜி, ஏன் வருத்தமாக இருக்கிறீர்கள்?

 சுவாமிஜி-

 என் சகோதரத் துறவிகளுடன் வாழ வேண்டும் என்று தோன்றுகிறது எனவே நான் இந்தியாவிற்குத் திரும்ப வேண்டுமு்.

 கால்வே-

 இவ்வளவு தானா! நீங்கள் போக வேண்டும். அவ்வளவு தானே! உங்கள் பயண ச் செலவை நானே தருகினே். ஆனால், சுவாமிஜி, நீங்கள் ஏன் எங்களைவிட்டுப் பிரிய நினைக்கிறீர்கள்?

 சுவாமிஜியின் கண்கள் குளமாயின. உலகின் தலைசிறந்த பாடகியருள்  ஒருவராகத் திகழ்ந்த கால்வேயின் பரந்த மனம் சுவாமிஜியை நெகிழச்செய்தது. தழுதழுத்த குரலில் கூறினார்.

 நான் இந்தியாவிற்குப்போக வேண்டும். அங்கே மரணம் எனக்காகக் காத்திருக்கிறது. நான் என் சகோதர்களுடன் வாழ வேண்டும்.

 கால்வே-

 ஆனால், சுவாமிஜி நீங்கள் இறக்க முடியாது. எங்களுக்கு நீங்கள் வேண்டும்.

சுவாமிஜி-

 ஜுலை 4-ஆம் நாள் என் இறுதி நாளாக இருக்கும்-

 அதன் பிறகு அருகிலுள்ள பல இடங்களைக் காண மெக்லவுட் முதலானோர் சென்றனர். ஆனால் சுவாமிஜி போகவில்லை. அதில் எந்த ஆர்வமும் காட்டவில்லை. அவரதுமுடிவை மாற்ற இயலாது என்பது தெரிந்த போது அவரது  பயணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். பாதி வருத்தத்துடனும் பாதி இறைவன் திருவுளத்தைச் சார்ந்தசரணாகதி நிலையிலும்,  கப்பலில் நின்று எங்களை நோக்கி கையசைத்து, ஆசிகளைத் தெரிவித்தபடி எங்களிடமிருந்து பிரியாவிடை பெற்றார் அவர், என்று எழுதுகிறார் ஒருவர். சுவாமிஜி புறப்பட்ட நாள் 1900 நவம்பர் 26.

….

 கப்பலில்

.............................

 கப்பலில் சுவாமிஜியின் தோற்றத்தால் கவரப்பட்ட பலரும் அவரை அணுகி அவருடன் பல விஷயங்களைப்பேசினர். அவர்களில் ஒருவரான கால்கின்ஸ் சுவாமிஜியின் சிகாகோ சொற்பொழிவுகளைக்கேட்டார். ஆங்கிலேயரான டிரேக் பிராக்மேன் என்பவர் சுவாமிஜியிடம் பல முறை வாதங்களில் ஈடுபட்டார். அவரது அறிவுக் கூர்மையை வெகுவாக ரசித்தார்.ஆனாலும், இந்தியாவிற்கு யாரும் ஆன்மீகத்தைக் கற்பிக்க வேண்டியதில்லை என்று சுவாமிஜி  கூறிவதை டிரேக்கினால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

 இந்தப் பயணம் சாதாரண பயணம் அல்ல. உலக அரங்கிற்கு அவர் விடை கொடுத்த பயணம் ஆகும். உலக அரங்கில் அவரது பணிகளை இப்போது பார்ப்போம்.

..................

மேலை நாட்டுப் பணி

.......................................................

மேலை நாட்டில் எனது பணி அதிகமாக இருக்கும். அதன் எதிரொலி இந்தியாவில் கேட்கும்  என்று ஒரு முறை துரியானந்தரிடம் கூறினார் சுவாமிஜி.சுவாமிஜி இரண்டு முறை மேலை நாடுகளுக்குச் சென்றார். முதலில் 1893 ஜுலை இறுதி முதல் 1896டிசம்பர் வரை சுமார் மூன்றரை வருடங்கள். இரண்டாவதாக 1899 ஜுன் முதல் 1900 நவம்பர் வரை சுமார் ஒன்றரை வருடங்கள். மொத்தமாக சுமார் 5 வருடங்கள் அவர் மேலை நாடுகளில் செலவிட்டார். ஒரு மூலையிலிருந்து மறு மூலைக்கு என்று ஆயிரக்கணக்கான மைல்கள் அவர் அங்கே ஓடி ஓடி உழைத்தார். அந்தக் காலத்தில் ஒலிபெருக்கி போன்ற வசதிகள் கிடையாது என்பதையும் மனத்தில் கொள்ள வேண்டும். எத்தனை பெரிய கூட்டமானாலும் அத்தனை பேருக்கும் கேட்குமளவிற்கு உரக்கக் கத்திப்பேச வேண்டும். இப்படி ஒரு நாள் அல்ல, இரண்டு நாட்கள் அல்ல. ஐந்து வருடங்கள் பணி செய்தார்.

 இரண்டு முறை மேலை நாடுகளில் அவர் பயணம் செய்த மொத்த தூரம் சுமார் 1,07, 396 கி.மீ. ஆற்றிய சொற்பொழிவுகள் சுமார் 317. வகுப்பு ச்சொற்பொழிவுகள் சுமார் 431, கலந்து கொண்ட கருத்தரங்கம் போன்றவை சுமார் 26, பிரமிப்பாக இருக்கிறது! இந்த விவரம் கூட இது வரை மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் படி உள்ள தகவல்கள் மட்டுமே. மேலை நாடுகளில் சுவாமிஜியின் பணி பற்றிய ஆராய்ச்சி இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

 இந்த அயராத உழைப்பின் விளைவு என்ன?

...

 அமெரிக்கப் பணியின் தாக்கம்.

......................................................

 ஹெலன் ஹன்டிங்டன் என்பவர் பிரம்ம வாதின் பத்திரி கைக்கு ஒரு கடிதம் எழுதினார். சுவாமி விவேகானந்தரின் தாக்கம் அமெரிக்காவில் ஆழமான, ஆற்றல் மிக்க ஆன்மீக விழிப்புணர்ச்சிக்கு  வித்திட்டு விட்டது. இந்த விழிப்புணர்ச்சி வெளியிலும் மக்களிடையே நன்றாகத்தெரிய ஆரம்பித்து விட்டது. வேதாந்த இலக்கியங்கள் மிகவும் விற்பனையாகின்றன. ஆன்மா போன்ற வார்த்தைகள் பத்திரிகைகளிலும் பரவ லாகப் பயன்படுத்தப் படுகின்றன. ஹக்ஸ்லி, ஸ்பென்சர் போன்ற  பெயர்களைப்போலவே சங்கரர், ராமானுஜர் போன்ற பெயர்களும் பிரபலமாகி விட்டன. இந்தியாவைப் பற்றிய நூல்கள் என்றல்ல. இந்தியாவைப் பற்றிய குறிப்புகள் அடங்கிய நூல்களைக்கூட நூல் நிலையங்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்குகின்றன. ஷோபனேரின் இலக்கியங்கள் எவ்வளவு வறட்டுத்தனமாக, சலிப்பைத் தருவனவாக இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் வேதாந்தப் பின்னணி இருக்கின்ற ஒரே காரணத்தால்  அவரது நூல்களைக் கூட இப்போதுமக்கள்  விரும்பிப் படிக்கத் தொடங்கி விட்டனர்.

 இப்படி ஆரம்பிக்கின்ற கடிதத்தை அவர் சற்றே நகைச்சுவை ததும்ப இவ்வாறு நிறைவு செய்கிறார். சுவாமிஜி எங்களுக்குச் சொந்தம் என்று இந்தியா இப்போதே அறிவித்து விடுவது நல்லது. ஹோமர் ஒரு காலத்தில் தெரு வழியாகப் பிச்சை எடுத்துத் திரிந்தார். ஆனால் அதேஹோமர் தங்கள் நாட்டில் பிறந்ததாக பின்னாளில் ஏழு நாடுகள் சொந்தம் கொண்டாடின. அது போல் எங்கள் குரு நாதரையும் (சவாமிஜி) எல்லோரும் சொந்தம் கொண்டாடும் நாள் ஒன்று வரும். இந்தியா தனது இணையற்ற புதல்வன் ஒருவன் மீது தனது உரிமையை இழக்க நேரும்.

....

இங்கிலாந்து பணியின் தாக்கம்.

.........................

 இனி இங்கிலாந்தில் சுவாமிஜியின் தாக்கம் பற்றி பார்ப்போம். பிரபல தேசியத் தலைவரும், பிரம்ம சமாஜத் தலைவர்களில் முக்கியமான ஒருவருமான பி.சி. பால் 1898- இல் கூறியது இது. சுவாமி விவேகானந்தர் இங்கிலாந்தில் ஆற்றிய சொற்பொழிவுகளால் பெரிய விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை. அவரது அன்பர்களும் நண்பர்களும் சாதாரண விஷயத்தைப் பெரிது படுத்து கிறார்கள் என்று சிலர் இந்தியாவில் கூறுகிறார்கள். ஆனால் நான்  இங்கே இங்கிலாந்திற்கு வந்த பிறகு அவரது பணியின் தாக்கத்தை எங்கும் காண்கிறேன். விவேகானந்தரை மிகவும் மதிக்கவும் போற்றவும் செய்கின்ற பலரை நான்  இங்கிலாந்தின் பல பகுதிகளிலும் சந்தித்தேன். நான் விவேகானந்தரின் மதப் பிரிவைச் சார்ந்தவன் அல்ல. எனக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடுகள் பல உண்டு. இருந்தாலம் விவேகானந்தர் இங்கே பலரது கண்களை த் திறந்துள்ளார். இதயத்தை விரிவு படுத்தியுள்ளார் என்பதை நான்  சொல்லியே ஆகவேண்டும். அவரது போதனைகளால் இங்குள்ள பலரும் பண்டைய இந்து சாஸ்திரங்களிலுள்ள அற்புதமான ஆன்மீக உண்மைகளை நம்புகிறார்கள். அது மட்டுமல்ல அவர்  இங்கிலாந்திற்கும் இந்தியாவிற்கும் இடையே ஓர் உன்னதமான தொடர்பை உருவாக்குவதிலும் வெற்றி பெற்றுள்ளார்.

 ஒரு முறை தெற்கு லண்டனுக்குப் போயிருந்தேன். அங்கே ஒரு தெருவில் சாதாரண பெண் ஒருத்தி தனது மகனிடம் என்னைக் காட்டி. அதோ பார் சுவாமி விவேகானந்தர் என்றாள். நான்  அணிந்திருந்த காவித் தலைப்பாகையின் காரணமாகத் தான் அவள் அவ்வாறு கூறுகிறாள் என்பதை புரிந்து கொண்டேன். இவ்வாறு சாதாரண மனிதர்களும் விவேகானந்தரை அறிந்திருப்பதைக் கண்டேன்.


சுவாமி விவேகானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு-பாகம்-41

சுவாமி விவேகானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு-பாகம்-41

🌸

சான்பிரான்சிஸ் கோவில்

.................................

 கேம்ப் இர்விங்கில் இரண்டு வாரங்கள் தங்கிவிட்டு அங்கிருந்து மீண்டும் சான் பிரான்சிஸ் கோவிற்கு வந்தார் சுவாமிஜி. இங்கே ஹேன்ஸ்ப்ரோ விடை பெற்றுக் கொண்டார். சுவாமிஜிடாக்டர் லோகன் என்பவரின்  வீட்டில் தங்கினார். மிக நல்லவரும் சுவாமிஜியிடம் அளவற்ற பக்தி கொண்டவருமான லோகன் அவருக்காக எதையும் செய்யத் தயாராக இருந்தார். ஆனால் அவரது மனைவி, சகோதரி மற்றும் குடும்பத்தினர் யாரும் சுவாமிஜியிடம் ஈடுபாடு காட்டவோ அவரது சொற்பொழிவுகளைக்கேட்கவோ செய்யவில்லை. அவர் அங்கே தங்குவதையே  அவர்கள் விரும்பவில்லை எனலாம். அத்தகைய சூழ்நிலையிலும் சுவாமிஜி அங்கே தங்கியது லோகனின் பக்தி ஒன்றிற்காகவே. சுவாமிஜி எங்கள் வீட்டிலிருந்து சென்ற பிறகு வீடு வீடாகவே இல்லை.ஏ தோ எல்லா தெய்வங்களும் எங்களைக் கைவிட்டுவிட்டன போல் இருந்தது. எனக்கு அவர் ஏசுநாதரே என்று பின்னாளில் எழுதினார் லோகன்.

 சுவாமிஜி அங்கிருந்த போது சான் பிரான்சிஸ்கோ வேதாந்த சங்கத்தின் கூட்டம் ஒன்று  நடைபெற்றது. அதில் அவர் கீதை பற்றி பேசினார். இன்னும் ஓரிரு சொற்பொழிவுகளும் நடைபெற்றன. அவையும் கீதை மற்றும் கிருஷ்ணர் பற்றியவையாக இருந்தன. மே 30-ஆம் நாள் சுவாமிஜி அங்கிருந்து விடைபெற்றார். அத்துடன் சுவாமிஜியின் கலிபோர்னியா பயணம் நிறைவு க்குவந்தது.

 

ஜுன் இரண்டாம் நாள் சிகாகோ வந்த சுவாமிஜி நாலைந்து நாட்கள் அங்கே தங்கினார். தம் வாழ்வில் நீங்கா இடம் பெற்ற ஹேல் குடும்பத்தினரைச் சென்று கண்டார். காலை சிகாகோவிலிருந்து புறப்படும் நாள் காலை சுவாமிஜியின் அறைக்கு வந்தார் மேரி ஹேல்.சுவாமிஜி கவலையே வடிவானவராக அமர்ந்திருந்தார். அவரது படுக்கை கலையாமல் இருந்தது. காரணம் கேட்டபோது இரவு முழுவதும் தூங்கவில்லை என்றார். பிறகு மெல்லிய குரலில், ஓ, மனித உறவுகளைப் பிரிவது எவ்வளவு சிரமமாக உள்ளது என்றார்.ஹேல் குடும்பத்தினரைப் பிரிய அவர் அவ்வளவு சிரமப் பட்டார். உனக்கும் சகோதரிகளுக்கும் அம்மாவிற்கும் ஆசிகள். அபஸ்வரங்கள் நிறைந்த, ஓசை மிகுந்த என் வாழ்வில் நீங்களே இன்னிசை நாதங்களாக இருந்து வந்துள்ளீர்கள் என்று ஒரு முறை மேரிக்கு அவர் எழுதினார்.

....

 நியூயார்க்கில்

...................

 சிகாகோவிலிருந்து ஜுன் 7- ஆம் நாள் நியூயார்க்கை அடைந்தார். வேதாந்த சங்கத்தில் தங்கினார். அங்கே ஏற்கனவே இருந்த துரியானந்தரும் அபேதானந்தரும் சுவாமிஜியைக் கண்டு மிகவும் மகிழ்ந்தனர். நிவேதிதையும் அங்கே இருந்தார். வேலைகளைப் பொறுத்தவரை அவ்வளவு திருப்திகரமாக இல்லை நான் இங்கு வந்த போது  சங்கம் ஏறக்குறைய சிதறிச் சின்னாபின்னமாகி விட்டிருந்தது- எல்லோரும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்டிருந்தனர். எல்லாவற்றையும் ஒட்ட வைக்க வேண்டியிருந்தது என்று எழுதுகிறார் சுவாமிஜி. அவரது நண்பர்களில் பலர் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்தனர்.சிலர் முற்றிலுமாகத் தொடர்பை விட்டிருந்தனர். பழைய நண்பர்களைக் காண்பதில் சுவாமிஜி மகிழ்ந்தார். சுவாமிஜி வந்திருப்பது பத்திரிகைகளில் பிரசுரிக் கப் பட்டன. சுவாமிஜி பல சொற்பொழிவுகள் செய்தார்.

.....

 சொற்பொழிவுகள்

................

நான் வெறுமனே, பேசுகிறேன் என்று நினைக்கிறீர்களா?கேட்பவர்களுக்காக. அவர்கள்  உணரத்தக்க ஒன்றை நான் கொடுக்கிறேன். அப்படி ஒன்றை நான் கொடுக்கிறேன் என்பதை அவர்களும் உணர்கிறார்கள் என்று தமது சொற்பொழிவைப் பற்றி சுவாமிஜி ஒரு முறை கூறினார். தியான வேளையில் எப்படி ஆன்மீக சக்தி விழித்தெழுமோ அப்படி அவரது சொற்பொழிவுகளைக்கேட்டு கொண்டிருக்கும் போதும், ஆன்மீக சக்தி விழித்தெழுவதை நான்  உணர்ந்திருக்கிறேன் என்று ஒரு முறை அபேதானந்தர் கூறினார்.

 ஒரு முறை சுவாமிஜியின் சொற்பொழிவிற்குப் பிறகு அபேதானந்தர் கேள்வி- பதில் நிகழ்ச்சி ஒன்றை நடத்த விரும்பினார். இதற்குப் பிறகு ஒரு கேள்வி-பதில் நிகழ்ச்சியா? என் சொற்பொழிவு ஏற்படுத்திய தாக்கத்தைக்கெடுக்க விரும்புகிறாயா? என்று கேட்டார் சுவாமிஜி. இதனை கூறிவிட்டு அபேதானந்தர், ஓ, உலகிற்காக சுவாமிஜியிடம் ஸ்ரீராமகிருஷ்ணர் எத்தகைய மாபெரும் ஆற்றலை விட்டுச் சென்றிருக்கிறார்! உலகின் சிந்தனைப் போக்கையே அவர் மாற்றிவிட்டார் என்றார்.

 சுவாமிஜியின் கேள்வி- பதில் நிகழ்ச்சிகளில் சிலர் சிறந்த கேள்விகள் கேட்பார்கள். சிலரது கேள்வியே வளவளவென்று நீண்ட சொற்பொழிவு போல் இருக்கும். சுவாமிஜியிடமிருந்து கேட்பதைவிட, தாங்கள் சொல்வதிலேயே அவர்கள் கவனமாக இருப்பார்கள். ஆனால் சுவாமிஜி  அதன் பிறகு  ஓரிரு வார்த்தைகளிலேயே அவர்களை அடக்கி அமரச் செய்து விடுவார்.

 இந்த நாட்களில் கலிபோர்னியாவில் சுமார் 160 ஏக்கர் கொண்ட தமது சொந்த இடத்தை மிஸ் மின்னி புக் என்பவர் வேதாந்த இயக்கத்திற்காக அளித்தார்.

 

 அந்த இடத்தில் ஓர் ஆசிரமத்தை நிறுவி அதன் பொறுப்பை துரியானந்தர் வகிக்க வேண்டும் என்று சுவாமிஜி விரும்பினார். நீ அதன் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது தேவியின் திருவுளம் என்றார் சுவாமிஜி. துரியானந்தர் மெள்ள சிரித்து விட்டு, தேவியின் திருவுள்ளம்? ஏன் , உங்கள் திருவுளம்  என்று சொன்னாலே போதுமே! இந்த விஷயத்தில் தேவி தனது திருவுளத்தை உங்களிடம் சொன்னாளா? நீங்கள் கேட்டீர்களா? என்று கேட்டார். அதற்கு சுவாமிஜி, ஆம், அவள் சொன்னாள், நான் கேட்டேன். உனது நரம்புகளும் மிக மிக நுண்மை பெறுமானால்  நீயும் தேவியின் வார்த்தைகளை நேரடியாகவே கேட்கலாம் என்றார். ஏறக்குறைய ஓர் ஆண்டிற்கு முன்பு துரியானந்தர் மேலை நாட்டிற்கு வர மறுத்தபோது, தமது அன்பு ஒன்றினால் அவரை வசப் படுத்தியது போலவே இம்முறையும் அவரைச் சம்மதிக்கச்செய்தார் சுவாமிஜி.

 

 புறப்படுமுன் துரியானந்தர் சுவாமிஜியிடம், எனக்கு ஏதாவது அறிவுரை கூறுங்கள் என்று கேட்டார். சுவாமிஜி கூறினார். போ, கலிபோர்னியாவில் சென்று ஓர் ஆசிரமத்தை ஏற்படுத்து, ஆன்மீகக்கொடியை அங்கே பறக்கவிடு. இந்தக் கணத்திலிருந்து இந்தியா பற்றிய நினைவுகளைக் கூட உன் சிந்தனையிலிருந்து அழித்துவிடு! அனைத்திற்கும் மேலாக! வாழ்க்கையை வாழ், மற்றதை தேவி கவனித்துக் கொள்வாள், இது தான்  ”சாந்தி ஆசிரமம் என்று பின்னாளில் உருவாகியது.

 ஜுலை 3-ஆம் நாள் நியூயார்க்கிலிருந்து டெட்ராய்ட் சென்றார் சுவாமிஜி. கிறிஸ்டைனையும் அவரது தாயாரையும்  சந்திப்பது அவரது முக்கிய நோக்கமாக இருந்தது. அங்கே கிறிஸ்டைனின் வீட்டில் தங்கினார். ஏழைகளாக இருந்தாலும் அவர்கள் தங்களால் இயன்ற அளவு சுவாமிஜிக்கு வேண்டியவற்றைச்செய்தனர். அங்கே பொதுவாக ஓய்விலேயே தமது நாட்களைக் கழித்தார் சுவாமிஜி.

.....

 உடற் சிறையில்

..................................

நெருங்கிய அன்பர்களுக்காக ஓரிரு கூட்டங்களில் கலந்து கொண்டார். சுவாமிஜி அங்கே அறிந்திருந்த மற்றொருவர் மேரி ஃப்ங்கே. சுவாமிஜி மிகவும் மெலிந்திருந்ததாகவும், உலகம் சாராத ஒரு மென்மை அவரிடம் மிளிரத் தொடங்கியிருந்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார். அந்த மாபெரும் ஆன்மா இனிமேலும் உடற்சிறையில் நீண்ட நாட்கள் தங்காது என்று தோன்றியது. அது தான் உண்மை என்பது நன்றாகத் தெரிந்திருந்தும் ஏதோ அசட்டு நம்பிக்கைகளில் எங்களைப் புதைத்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டோம் என்று எழுதுகிறார் அவர். இங்கு  சுவாமிஜி மூன்று நான்கு நாட்கள் தங்கினார். இங்கும் கிறிஸ்டைன் முதலானவர்களிடம் தமது அன்பு மழையைப்பொழிந்தார். அவர்களுக்குச் சமைத்தார். சாப்பிடச்செய்தார். பின்னர் மீண்டும் நியூயார்க் திரும்பினார்.

ராமகிருஷ்ண மிஷனின் சின்னம்

 

... நியூயார்க்கில் சுவாமிஜி  வேதாந்த சங்கத்தின் கட்டிடத்திலேயே தங்கினார். சங்கத்திற்காக ஓர் அறிக்கை தயார் செய்த சுவாமிஜி அதில் சின்னம் ஒன்று வேண்டும் என்றுவிரும்பினார். அப்போது தான்  வந்திருந்த கடிதத்தின் உறை ஒன்றைக் கிழித்து அதன் உட்பகுதியில் அவர் ஒரு சின்னத்தை வரைந்தார். பிறகு அதை அங்கிருந்த ஹென்றி வான் ஹாகன் என்பரிடம் கொடுத்து, அதனைத் தகுந்த அளவுகளில் வரையுமாறு கேட்டுக்கொண்டார். ஹாகன் வரைபடங்கள் வரைவதிலும், அச்சுக்கலையிலும்  தேர்ச்சி பெற்றவர். சுவாமிஜியின் பிரம்மச்சாரி சீடர்களில் ஒருவர் அவர். அவர் தான் அந்தச் சின்னத்தை வரைந்து பூர்த்தி செய்தவர். அது தான் இன்று ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷனின் சின்னமாக விளங்குகிறது.

 அலைவீசும்  தண்ணீர் கர்மத்தையும், தாமரைபக்தியையும், உதய சூரியன் ஞானத்தையும் சுற்றிக்கொண்டிருக்கும் பாம்பு யோகத்தையும் எழுப்பப்பட்ட குண்டலினி ஆற்றலையும் அன்னம் இறைவனையும் குறிக்கிறது. எனவே இந்தப் படத்தின் திரண்ட கருத்து, ஞானம்,கர்மம், பக்தி, யோகம் ஆகிய நான்கின் இணைப்பால் இறைக் காட்சியைப் பெறுவதாகும் என்று அந்தச் சின்னத்தை விளக்குகிறார் சுவாமிஜி.

......

 சிவனின்  பூதகணங்கள்

...................

 ஒரு நாள் சுவாமிஜி நடப்பதற்காக வெளியில் சென்றார். தெருவில் அழுக்கான கோலத்தில் நின்றிருந்த ஏழைச்சிறுவன் ஒருவன் சுவாமிஜியிடம் எப்படியோ ஒட்டிக்கொண்டான். சுவாமிஜியும் மிகுந்த  பாசத்துடன் அவனையும் அழைத்துக் கொண்டு வேதாந்த சங்கத்திற்கு வந்தார். வரும் வழியில் அவனைப்போன்ற மற்ற ஓரிரு சிறுவர்களும் சேர்ந்து கொள்ள, ஓர் ஏழைச் சிறுவர் பட்டாளத்துடன் சுவாமிஜி மடத்திற்குள் நுழைந்தார். அங்கு நின்றிருந்த கிறிஸ்டைன், இப்படிப்பட்டவர்களை எல்லாம் ஏன் இவர் கவர்கிறார்? என்று தமக்குள் நினைத்தார். அவர் நினைத்தது தான் தாமதம். பளிச்சென்று வந்தது சுவாமிஜியின் பதில். இதோ பார், இவர்கள் சிவபெருமானின் பூத கணங்கள்.

 மற்றொரு முறை தெரு வழியாகச்சென்று கொண்டிருந்த இரண்டு ஏழைகளைப் பார்த்து, ஆ, இவர்கள் தோற்றுவிட்டார்கள். வாழ்க்கை இவர்களை வென்றுவிட்டது. என்று நெகிழ்ந்த குரலில் கூறினார்.

......

 அமெரிக்காவிற்கு விடை

...............................

 கலிபோர்னியாவில் பண்கள் நிறைவுற்றதும் அங்கிருந்து நேராக இந்தியாவிற்குத் திரும்பவே விரும்பினார் சவாமிஜி. ஆனால் லெக்கட் தம்பதிகள், மெக்லவுட், சாரா, நிவேதிதை போன்றோர் ஏற்கனவே பாரிஸ் சென்றிருந்தனர். உடல் நலமற்றிருந்த மிசஸ் லெக்கட்டிற்கு அங்குதான் சிகிச்சை நடைபெற்றது. அவர்கள் மிகவும் வற்புறுத்திக்கேட்டுக்கொண்டதன்பேரில் பாரிஸ் செல்ல இசைந்தார் அவர்.

 இவ்வாறு சுவாமிஜியின்  அமெரிக்க நாட்கள் நிறைவிற்கு வந்தன. 1900ஜுலை 26-ஆம் நாள் நியூயார்க்கிலிருந்து அவர் புறப்பட்டார்.

.........................

உலக அரங்கிற்கு விடை

...................................................

 பாரிஸ் உலகக் கண்காட்சி

.....................................

 நவீன நாகரீகத்தின்  தலைநகரும், ஆடம்பரம், வேடிக்கை, வினோதம், சுகபோகம் ஆகியவற்றின் சொர்க்கமும், கலை மற்றும் விஞ்ஞானிகளின்  மையமும் ஆகிய  இடம்  பாரிஸ்.அங்கே அமெரிக்கா முதலான பல நாடுகளும் பங்கேற்கின்ற உலகக் கண்காட்சி ஒன்று  நடைபெற இரந்தது. 549 ஏக்கர் மைதானத்தில் அது நடைபெற்றது. விஞ்ஞானம், மதம் என்று பல துறைகளும் அதில் பங்கு பெற்றன. இந்திய விஞ்ஞானியான டாக்டர் ஜகதீஷ் சந்திரபோஸும் அதில் ஒரு  கட்டுரை வாசிக்க இருந்தார். சிகாகோ போலவே அங்கும் சர்வமத மகாசபை ஒன்று ஏற்பாடு செய்யவே முதலில் அமைப் பாளர்கள் விரும்பினர். ஆனால் சிகாகோ போல் கீழை நாட்டு மதக் கருத்துக்கள் ஓங்கி, கிறிஸ்தவ மதத்திற்குப் பின்னடைவு ஏற்பட்டு விடுமோ என்று பயந்த ரோமன் கத்தோலிக்கர்கள் அதனை எதிர்த்தனர். எனவே மதங்களின் வரலாறு பற்றிய ஒரு மாநாடு நடத்த முடிவு செய்தனர்.

 

 1900 ஜுலை 26- ஆம் நாள் நியூயார்க்கிலிருந்து கப்பலில் புறப்பட்ட சுவாமிஜி ஆகஸ்ட் 3-ஆம் நாள் வெள்ளியன்று பாரிசை அடைந்தார். சுவாமிஜி பிரான்ஸிற்கு வருவது இது  நான்காவது முறையாகும். 1895-இல் ஒரு முறை, 1896- இல் இரு முறை அவர் ஏற்கனவே வந்திருந்தார். ஆனால் அந்த மூன்று முறையுமாகச்சேர்த்து மொத்தம் நான்கு மாதங்களுக்கும் குறைவாகவே தங்கியிருப்பார். ஆனால் இந்த முறை தொடர்ந்து 83- நாட்கள் தங்கினார்.

 ஆரம்பத்தில் லெக்கட் தம்பதியினருடனும் வேறு இடங்களிலும் தங்கிய சுவாமிஜி செப்டம்பர் மாதத்தில் ஜுல் போயி என்ற பிரெஞ்சு க் காரருடன்  தங்க ஆரம்பித்தார். இடையில் இரண்டு முறை பிரிட்டனிக்குச்  சென்று அங்கே தங்கியிருந்த சாராவைச் சந்தித்து வந்தார். ஜுலுக்கு ஆங்கிலம் தெரியாது. சுவாமிஜி ஓரளவு பிரெஞ்சு மொழியைக் கற்றிருந்தார். சுமார் 8 வருடங்களுக்கு முன்பு போர் பந்தரில் அவர் சிறிது பிரெஞ்சு கற்றுக் கொண்டதும்  அதிலேயே தமது சகோதரத் துறவிகளுக்குக் கடிதம் எழுதியதும் நினைவிருக்கலாம்.பின்னர் சிகாகோவில் இருக்கும் போதும் ஒரு முறை அவர் பிரெஞ்சு மொழியைக் கற்றிருந்தார். 1900 செப்டம்பர் 15- ஆம் நாள் அவர்  கிறிஸ்டைனுக்கு ”விரைவின்பிப்ஆபசினால் என்னால் பிரெஞ்சு மொழியைப் புரிந்து கொள்ள முடிகிறது என்று எழுதினார். ஆகஸ்ட் 24-ஆம் நாள் அவர், இந்து மதமும் தத்துவமும் என்ற சொற்பொழிவு ஆற்றினார். ஆனால் அது ஆங்கிலத்திலா பிரெஞ்சிலா என்பது தெரியவில்லை.

 

 செப்டம்பர் 29-ஆம் நாள் மத்தியக் காலங்களில் மிகவும் பிரபலமாக இருந்த கிறிஸ்தவ மடம்  ஒன்றைச்சென்று கண்டார் சுவாமிஜி. அவருடன் சாரா, மெக்லவுட்,ஜுல் போயி ஆகியோர் சென்றனர். அருகில் குற்றவாளிகளை அடைத்து வைப்பதற்கான இருள் குகைகள் இருந்தன. அதனைப் பார்த்துவிட்டு சுவாமிஜி, ஆ, தியானத்திற்கு எவ்வளவு உகந்த இடம்! என்று கூறினாராம்.

 எந்திரத் துப்பாக்கியைக் கண்டு பிடித்தவர் ஹிராம் மாக்ஸிம். அதே வேளையில் அதற்காக வருத்தப் பட்ட வரும்கூட, நான் வேறு எதையும் கண்டு பிடிக்கவில்லையா என்ன? இந்த அழிவுச்சாதனத்தை மட்டுமே என்னுடன் தொடர்பு படுத்துகிறார்களே! என்று அவர் வருத்தப் பட்டதுண்டு. உண்மையில் அவர் வேறு பலவற்றையும் கண்டு பிடித்தார். எடிசன் மின்சார பல்பைக் கண்டு பிடித்த அதே வேளையில்இவரும் கண்டு பிடித்தார்.ஆனால் துரதிர்ஷ்டவசமாக எடிசன் முந்திக்கொண்டு, அதனை அரசாங்கத்தில் பதிவு செய்துவிட்டார்.பறக்கும் எந்திரம ஒன்றையும் 1894- இல் இவர் கண்டு பிடித்தார். இவர் சுவாமிஜியிடம்  மிகுந்த ஈடுபாடு உடையவர். அவரது சிகாகோ சொற்பொழிவைக்கேட்டவர். பாரிஸில் இவரைச் சந்தித்தார் சுவாமிஜி. இவர்பல்வேறு வகைத் துப்பாக்கிகளை விக்கர்ஸ் என்பவருடன் கண்காட்சியில் வைத்திருந்தார். வேறு ஓரிரு நண்பர்களையும் சுவாமிஜி சந்தித்தார். பாரிஸின் தலை சிறந்த ஓவியர்கள், சிற்பிகள் போன்றோரையும் சந்தித்தார்.

......

 கண்காட்சியில்

..................

 உலக க் கண்காட்சியைப் பல முறை பார்த்தார் சுவாமிஜி. மின்சாரத்தின் மாயா ஜாலங்கள், அப்போது தான் கண்டு பிடிக்கப் பட்டிருந்த எக்ஸ்-ரே போன்றவை மக்களைமிகவும் கவர்ந்தன. பௌதீக இயல்பகுதி சுவாமிஜியை மிகவும் கவர்ந்தது. ஏனெனில் அங்கு தான் டாக்டர் போஸ் தமது  கட்டுரைகளைப் படித்தார். ஓர் இந்தியரின் வெற்றியில் மிகவும் மகிழ்ந்தார் சுவாமிஜி. அந்த இளம் பௌதீக இயல் விஞ்ஞானி, தனி மனிதனாக மின்னல் வேகத்தில் வந்து தனது அறிவாற்றல் மூலம் மேலை நாட்டு மக்களை மகிழ்ச்சி  வெள்ளத்தில் ஆழ்த்தினார். மின்சாரம் பாய்ச்சியது போன்ற இந்தச்செயல் அரைப் பிணமாகக் கிடந்த நமது தாயகத்திற்குப் புத்துயிர் அளித்தது! பௌதீகத் துறை விஞ்ஞானிகளுள் தலை சிறந்து விளங்குபவர் ஜகதீஷ் சந்திரபோஸ். அவர் ஓர் இந்தியர். ஒரு வங்காளி! நற்செயல் புரிந்தீர். வீரரே!  டாக்டர் போஸும், அவரது லட்சிய மனைவியும் எந்த நாட்டிற்குச் சென்றாலும் அங்கெல்லாம் இந்தியாவில் புகழைப் பரப்புகின்றனர். நற்பேறு பெற்ற தம்பதியர் என்று எழுதுகிறார் சுவாமிஜி.

 சுவாமிஜி கண்காட்சியின் புற அழகுகள் எதிலும் பெரிதாக ஈடுபட வில்லை. அவரை ப் பொறுத்தவரை இந்த நாட்களில் தியானம் நன்றாகக் கைகூடியதாக எழுதுகிறார். எல்லாம் தேவியின் திருவுளம். எதைச்செய்ய வேண்டும் என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும்.அவள் எதையும் பேச மாட்டாள். மௌனமாக இருந்து விடுகிறாள் ஒரு மாத காலமாக எனது ஜபமும் தியானமும் மிக நன்றாக நடந்து வருகிறது.

......

 எம்மா கால்வே

.................

 சுவாமிஜியின் இந்தப் பயணத்தில் பிரபல பாடகியான எம்மா கால்வே கலந்து கொண்டார். கால்வே சுவாமிஜியைக் கிறிஸ்தவ முறைப்படி ஃபாதர் என்றே அழைத்தார். ஒருநாள் கால்வேயின் பாடல் நிகழ்ச்சிக்கும் மிஸ்டர் லெக்கட்டுடன் சென்று வந்தார் சுவாமிஜி. அன்றைய நிகழ்ச்சி தான் கால்வேயை உலகப் புகழ்பெற்ற பாடகி ஆக்கியது. நிகழ்ச்சி முடிந்தபிறகு சுவாமிஜி அவரை ஒப்பனை அறையில் கண்டு வாழ்த்தினார். மறுநாள் கால்வே சுவாமிஜி தங்கியிருந்த லெக்கட் தம்பதியினரின் வீட்டிற்கு வந்த போது அவர்களுக்காக பிரெஞ்சு தேசிய கீதத்தைப் பாடினார்.

 உலகக் கண்காட்சியின் ஒரு பகுதியான சமய வரலாறு மாநாடு செப்டம்பர் 3 முதல் 8 வரை 6 நாட்கள் நடைபெற்றது. சுவாமிஜி செப்டம்பர் 7-ஆம் நாள் இரண்டு முறை அதில் பேசினார். முதற் சொற்பொழிவில் சிவ லிங்கம், சாளகிராமம்,  போன்றவை காமத்துடன் தொடர்புடைய சின்னங்கள் அல்ல என்பதை எடுத்துக் கூறினார். இரண்டாவது சொற்பொழிவில் இந்தியாவில் சமயக் கருத்துக்களின்  பரிணாமம் பற்றி பேசினார். அவர் பிரெஞ்சு மொழியில் பேசுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், உண்மையில் என்ன மொழியில் பேசினார் என்பது தெரியவில்லை.


சுவாமி விவேகானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு-பாகம்-40

சுவாமி விவேகானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு-பாகம்-40

🌸

அற்புதமான அமைதி நிலை!

..........................

 இங்கிருந்து தான் சுவாமிஜி அந்த  அற்புதமான, படிக்கின்ற யாரையும் சிறிது நேரமாவது அவரது உணர்வுகளில்திளைக்கச்செய்கின்ற கடிதத்தை மெக்லவுடிற்கு  எழுதினார்.இதோ சில பகுதிகள். வேலை செய்வது எப்போதுமே கஷ்டமானது தான். ஜோ, எனது வேலைகள் என்றென்றைக்குமாக நின்று போகட்டும் என்றும், என் முழு ஜீவனும் தேவியிடம் லயித்திருக்கட்டும் என்றும் பிரார்த்தனை செய், தேவியின் வேலைகள், தேவியே அறிவாள்.

 நான் நலமாக இருக்கிறேன். மனத்தளவில் மிகவும் நலமாக இருக்கிறேன். உடலின் ஓய்வைவிட மனத்தின் ஓய்வை அதிகமாகவே உணர்கிறேன். போர்கள் நடந்தன. சில தோல்வி அடைந்தன. சில   வெற்றி பெற்றன. நான் என் பொருட்களை மூட்டைக் கட்டிக்கொண்டு. மாபெரும் விடு விப்பவனுக்காகக் காத்திருக்கிறேன். ”சிவபெருமானே , ஓ சிவபெருமானே, என் படகை மறுகரைக்குக் கூட்டிச்செல்.

 கடைசியாகப் பார்க்கும்போது ஜோ, நான் வெறும் சிறுவன், தட்சிணேசுவர ஆலமரத்தின் அடியில்  ஸ்ரீராமகிருஷ்ணரின் அற்புத மொழிகளை ஆச்சரியமான பரவசத்துடன் கேட்டுக்கொண்டிருந்த அந்தச் சிறுவனே! அதுவே எனது உண்மை இயல்பு. வேலைகளும், திட்டங்களும், நன்மை செய்வதும் இவைபோன்ற எல்லாம் என்மீது ஏற்றப் பட்டவை. இப்போது மீண்டும் அவரது குரல் எனக்குக்கேட்கிறது. என் ஜீவனைப் பரவசப்படுத்துகின்ற பழைய அதே குரல்!  பந்தங்கள் அறுகின்றன. அன்பு சாகிறது. வேலைகள் சுவையற்றதாகின்றன. வாழ்விலிருந்தமாய வசீகரம் போய்விட்டது. குருதேவரின் குரல் அழைப்பது மட்டுமே உள்ளது- நான் வருகிறேன். அப்பா, நான் வருகிறேன்! செத்தவர்கள் செத்தவர்களைப்புதைத்துக்கொள்ளட்டும். நீ என்னைப் பின் தொடர்ந்து வா- நான் வருகிறேன்- என் அன்பான ஐயா, நான் வருகிறேன்.

ஆம், நான் வருகிறேன். நிர்வாணம் என் முன்னால் உள்ளது- அதே எல்லையிலா அமைதிக் கடல், ஒரு  சிற்றலையும் இல்லாமல், மூச்சுக் காற்றுகூட இல்லாமல் உள்ளது. அவ்வப்போது அதை நான் உணர்கிறேன். நான் பிறந்ததற்காக மகிழ்கிறேன். இவ்வளவு கஷ்டப் பட்டதற்காக மகிழ்கிறேன். பெரிய தவறுகளைச் செய்ததற்காக மகிழ்கிறேன். அமைதியில் புகுவதற்காக மகிழ்கிறேன். யாரையும் நான் பந்தப்பட்டவராக விட்டுப்போகவில்லை. பந்தம் எதையும் நான் ஏற்றுச்செல்லவும் இல்லை. இந்த உடல் வீழ்ந்து என்னை விடுவிக்குமோ அல்லது இந்த உடலிலேயே  நான் முக்தியினுள் பிரவேசிப்பேனோ, எப்படியானாலும் சரி, பழையவன் போய்விட்டான், என்றென்றைக்குமாகப் போய்விட்டான். ஒருபோதும் வராதவாறு போய் விட்டான். வழிகாட்டி, குரு, தலைவன், ஆசாரியன் காலமாகிவிட்டான், சிறுவன், மாணவன், ஏவலன், எஞ்சியுள்ளான்.

நோக்கம் எதுவுமின்றி நான் மிதந்து சென்ற நேரங்களே என் வாழ்க்கையின் மிக இனிமையான காலங்கள். மீண்டும் நான் மிதந்து கொண்டிருக்கிறேன். மேலே ஒளி வீசுகின்ற வெப்பக் கதிரவன், சுற்றிலும் கூட்டம் கூட்டமாகப் பயிர் பச்சைகள். இந்த வெப்பத்தில் எல்லாம் அசைவற்றிருக்கின்றன. அமைதியில் திளைத்திருக்கின்றன. நான் மந்த கதியில் மிதந்து கொண்டிருக்கிறேன். நதியின் கதகதப்பான மார்பின் மீது மிதந்து கொண்டிருக்கிறேன். என் கைகளாலோ கால்களாலோ நீரைத்  துழாவ நான் துணியவில்லை. அந்த அற்புதமான அமைதி நிலையை, அது ஒரு மாயத்தோற்றம் என்று நம்மை  நிச்சயமாக உணர வைக்கின்ற அந்த அமைதி நிலையைக் கெடுத்து விடுவேனே என்ற அச்சம் தான் அதற்கு காரணம்.

 என் பணிக்குப் பின்னால் ஆசை இருந்தது. என் அன்பிற்குப் பின்னால் ஆளுமை இருந்தது. என் தூய்மைக்குப் பின்னால் பயம் இருந்தது.நான் வழி காட்டியதன் பின்னால் அதிகார வேட்கை இருந்தது. இப்போது அவை மறைகின்றன. நான் மிதந்து கொண்டிருக்கிறேன். நான் வருகிறேன். அம்மா, நான் வருகிறேன். உன் கதகதப்பான மார்பில், நீ என்னை எங்கு எடுத்துச்சென்றாலும், அங்கு மிதந்த  வண்ணம் ஒலியிலா அந்த அற்புதப் பிரதேசத்தில், ஒரு சாட்சியாக, ஒரு போதும் நடிகனாக அல்லாமல், நான் வருகிறேன்.

 ஓ, எல்லாம் அமைதியில் ஆழ்ந்துள்ளது. என் எண்ணங்கள்   இதயத்தின் ஆழங்களில் எங்கோ தொலை தூரத்திலிருந்து  வருவனபோலுள்ளன, ஏதோ மெல்லிய, தூரத்த முணு முணுப்புகள் போல் ஒலிக்கின்றன. அனைத்திலும் அமைதி தவழ்கிறது. இனிமையான, மிக இனிமையான அமைதி அது- உறக்கத்தில் ஆழ்வதற்குச் சற்று முன்னதாக ஒரு சில கணங்கள் உணர்கிறோமே அப்படிப்பட்ட அமைதி. அங்கே எல்லாம் நிழல்கள் போல் காணப்படுகின்றன. உணரப் படுகின்றன. அங்கே அச்சமில்லை. அன்பு இல்லை, உணர்ச்சியின்  எழுச்சி இல்லை. சிலைகளும் சித்திரங்களும் சூழ இருக்கும்போது, அந்த த் தனிமையில் ஒருவன் உணர்கின்ற அந்த அமைதி அது. நான் வருகிறேன். பிரபோ நான் வருகிறேன்!

 உலகம் உள்ளது, அது அழகாகவும் இல்லை, அழகற்றும் இல்லை. உணர்ச்சிகள் எதையும் எழுப்பாத அதிர்வுகளாக உள்ளது. ஓ, ஜோ, அதன் இன்பத்தை என்னென்பேன்! எல்லாம் நல்லவை, எல்லாம் அழகானவை,ஏனெனில் என்னைப் பொறுத்தவரை பொருட்கள் தங்கள் சார்புப் பரிமாணங்களை  இழந்து வருகின்றன. அதில் முதன் முதலாக என் உடம்பின் பரிமாணமே விலகத் தொடங்கிவிட்டது. ஓம் தத் ஸத்!

.....

 இதயத்தை எதிர்த்து இழுக்க

.........................

 அலமேடாவிலிருந்து சிகாகோ செல்வது சுவாமிஜியின் திட்டமாக இருந்தது. இருப்பினும் அஸ்பினால் தம்பதிகளின் அழைப்பை ஏற்று அருகிலுள்ளகேம்ப் இர்விங் என்ற இடத்திற்குச் செல்ல எண்ணினார் அவர். ஹேன்ஸ்ப்ரோ,  வழியில் சாஸலித்தோ என்ற இடம் வரை சென்று, அங்கே சுவாமிஜியை வழியனுப்பிவிட்டு, லாஸ் ஏஞ்ஜல்ஸ் சென்று மகளைக் காண விரும்பினார். ஆனால் அவர் தம்முடன் வர வேண்டும் என்று சுவாமிஜி விரும்பியதால் அவரும் உடன் சென்றார்.அலமேடாவிலிருந்து முதலில் ஒரு ரயிலில் சென்று, பிறகு படகில் சான் பிரான்சிஸ்கோ ஏரியைக் கடந்து, மீண்டும்  படகில் சாஸலித்தோ வரை சென்று அங்கிருந்து மீண்டும்  ரயிலில் கேம்பை அடைய வேண்டும்.

ஹேன்ஸ்ப்ரோ மற்றும் ஓரிருவருடன் உண்மை இல்லறத்திலிருந்து  கிளம்பினார் சுவாமிஜி. கால தாமதம் காரணமாக முதல் ரயிலை தவற விட்டனர். சற்று தூரம் சென்றால் மற்றொரு ரயில் கிடைக்கும் என்று கேள்விப்பட்டதும் அனைவருமாக அங்கே சென்றனர். அவர்கள் செல்லும் போது அந்த ரயில் புறப்படத் தொடங்கியிருந்தது. சற்று நிறுத்துமாறு நடத்துனரை நோக்கிக் கத்தினார் ஹேன்ஸ்ப்ரோ, நீங்கள் ஓடி வந்தால் ரயிலைப் பிடித்துவிடலாம். என்று திரும்பிக் கத்தினார் நடத்துனர். அவர்களுக்கும்  ரயிலுக்கும் சில அடி தூமே இருந்தது. ஓடினால் பிடித்து விடலாம், ஹேன்ஸ்ப்ரோ சுவாமிஜியைப் பார்த்தார். நடந்து கொண்டிருந்த  சுவாமிஜி அசையாமல் நின்று கொண்டு, நான் ஓட மாட்டேன் என்று கூறிவிட்டார். அடுத்தரயில் மாலையில் தான். எனவே அனைவரும் உண்மை இல்லத்திற்குத் திரும்பினர்.

 தாம் கேம்ப் இர்விங்கிற்குச் செல்ல விரும்பாததுபற்றி சுவாமிஜியிடம் விவாதித்தது தான் தாமதத்திற்கான காரணம் என்பது ஹேன்ஸ்ப்ரோவிற்குத் தெரியும். அதே வேளையில் சுவாமிஜி ஓடியிருந்தால் ரயிலைப் பிடித்திருக்கலாம் என்பதும் உண்மை. இரண்டையும் தொட விரும்பாத ஹேன்ஸ்ப்ரோ, நாம் சென்ற காரின் எஞ்ஜின்சரியில்லை. தாமதமானதால் தான் ரயிலைத் தவறவிட நேர்ந்தது என்றார். உடனே சுவாமிஜி ஹேன்ஸ்ப்ரோவை நோக்கித் திரும்பி, இது அது எதுவும் காரணமல்ல, உன் இதயம் லாஸ் ஏஞ்ஜல்ஸில் இருந்ததால் தான் நாம் போக முடியவில்லை. இதயத்தை எதிர்த்து இழுக்க இந்த உலகில் எந்த இஞ்ஜினும்  இல்லை. ஒரு வேலை செய்யும்போது அதில் முழு இதயத்தையும் ஈடுபடுத்தி வேலை செய். உன்னை எதுவும் தடுக்க முடியாது என்றார். என் வாழ்நாளில் மறக்க முடியாத உபதேசம் அது. இன்றும் அது என் மனத்தில் பசுமையாக உள்ளது என்று பின்னாளில் கூறினார் ஹேன்ஸ்ப்ரோ.

 

 இந்தக் குழப்பம் முடிவதற்குள் ஹேன்ஸ்ப்ரோவின் பெட்டி தவறியிருப்பது தெரிய வந்தது.  ஏற்கனவே சென்ற ஆஸ்பினால் தம்பதிகள் அதைக்  கொண்டு சென்று விட்டிருந்தனர். ரயிலைத்தவறவிட்ட அந்த இடைவெளியில்ஹேன்ஸ்ப்ரோவின் மனத்தில்,  இதுவும் நல்லது தான்.  நான் இனி லாஸ் எஞ்ஜல்ஸிற்குப் போகலாம்என்ற எண்ணம் எழுந்தது. ஆனால் இப்போது பெட்டி ஏற்கனவேகேம்ப் இர்விங்கை அடைந்துவிட்டது தெரிந்த போது சுவாமிஜி, ஆச்சரியம்! நீயோ கேம்பிற்குப் போகாமல் இருக்க  உன்னால் இயன்ற அளவு முயற்சி செய்கிறாள். ஆனால் தேவியோ உன்னை அங்கே இழுக்கிறாள் என்றார். எப்படியோ, உண்மை இல்லத்திற்குத்திரும்பிய அவர்கள் ஒரு வாரத்திற்குப் பிறகே கேம்பிற்குச் சென்றனர்.

 இரண்டு பெரிய தொலை நோக்கிகளையும்  அவர்கள் கொண்டு சென்றனர். ரூர்பாக் அவற்றைச் சுமந்து சென்றார். அதற்கு அவர் மிகவும் சிரமப்படுவதைக் கண்ட சுவாமிஜி ” வெறும் உருளைக் கிழங்கும் கீரையும் சாப்பிட்டால் இப்படித்தான் திணற வேண்டியிருக்கும் என்றார்.

 

 சாஸலித்தோவிலிருந்து அழகிய இயற்கைக் காட்சிகள் நிறைந்த பகுதி வழியாக ரயில் சென்றது. காட்சிகளை ரசிப்பதற்காகவே  ஜன்னல் ஓரமான இருக்கையைத்தேர்ந்தெடுத்தார் சுவாமிஜி. ஓய்வாக உட்கார்ந்தபடி, நான் நானாக இருப்பதை உணர ஆரம்பிக்கிறேன் என்றார்.

கேம்ப் இர்விங் ஓர் அழகிய இடம். குற்றுச்செடிகள். புதர் மண்டிய பகுதிகள், அழகியநீரோடைகள் என்று அந்தப் பகுதி வன வாழ்க்கையை நினைவூட்டியது.அங்கே அவர்கள் கூடாரங்களில் தங்கினார். முதல் நாள் இரவே அங்கு ஒரு மரத்தடியில் சுவாமிஜி தீ வளர்த்தார். எல்லோரும் அதைச் சுற்றி அமர்ந்தனர். மிக அமைதியான இரவு அது. சுவாமிஜி பாடினார். சுகரையும் வியாசரையும் பற்றிய கதைகள் சொன்னார். பிறகு, ஆழ்ந்த ஓர் அமைதி நிலையிலிருந்து பேசினார்.

 

 இந்தியக் காடுகளில்  வாழ்கின்ற யோகிகளாக உங்களை நினைத்துக் கொள்ளுங்கள். உங்கள் பட்டணங்களையும் மற்ற அனைத்தையும் மறந்து விடுங்கள். கடவுளை மட்டுமே நினையுங்கள். அவரை மட்டுமே காணுங்கள். இதோ பாய்கிறதே நீரோடை. இது தான் கங்கை. இதோ வளர்கின்ற தீ, இதுதான் புனித அக்கினி.

 அதன் பிறகு எப்படி ஜபம் செய்வது, எப்படி தியானம் செய்வது என்பதைக் கற்பித்தார் சுவாமிஜி. பிறகு மெல்லிய குரலில், ஹர, ஹர, வ்யோம், வ்யோம், ஹர, ஹர வ்யோம், வ்யோம் என்று  ஓதினார். அந்த நாதம் எங்கள் மனங்களையெல்லாம் விழித்தெழச் செய்தது. எங்கள் நினைவிலிருந்து  உலகம் மறைந்தது. ஆன்மாவோ,  இது வரை அறிந்திராத வெளிகளில் சிறகடித்துப் பறந்தது என்று எழுதுகிறார் அங்கே சுவாமிஜியுடன் இருந்த ஒருவர்.

 அதன் பிறகு அனைவரையும் தியானம் செய்யும் படி கூறிய சுவாமிஜி, நீங்கள் விரும்புகின்ற எதைவேண்டுமானாலும் தியானிக்கலாம். நான் ஒரு சிங்கத்தின் இதயத்தைத் தியானிக்கப்போகிறேன். அது சக்தியைத் தரும் என்றார்.

 சிலவேளைகளில் ” உறுதி பயமின்மை போன்ற கருத்துக்களை கூறி, அவற்றைத் தியானம் செய்யுமாறு கூறுவார்.

 அது  ஒரு மறக்க முடியாத இரவு. காட்டில் நிலவிய ஆழ்ந்த அமைதி. கொழுந்து விட்டெரியும் அக்கினியின்  அழகு. அனைத்தையும் விட  அந்தச் சூழ்நிலைக்கே உயிருணர்வு ஊட்டியபடி கம்பீரமாக அமர்ந்திருந்த சுவாமிஜி! அவரது பொலிவே விளக்க இயலாததாக இருந்தது என்று எழுதுகிறார் மற்றொருவர்.

......

 துப்பாக்கியால் சுடுதல்

...............................................

 ஒரு நாள் சுவாமிஜி வெளியில் நடக்கச் சென்றிருந்தார். அழகிய நீரோடையின் கரை வழியாகச் சென்று கொண்டிருந்தார். வழியில் பாலம் ஒன்று குறுக்கிட்டது. அங்கே சில இளைஞர்கள் துப்பாக்கியால் குறிவைத்து சுடுவதற்குப் பழகிக் கொண்டிருந்தனர். நீரோடையில் மிதக்க விடப்பட்ட முட்டை ஓடுகள் அவர்களது குறியாக இருந்தன. அவற்றை ஒரு நூலில் கோர்த்து கல் ஒள்றில் கட்டி வைத்திருந்தனர். நீரின் விரைவிற்கு ஏற்ப மேலும் கீழுமாக அசைந்த முட்டை ஓடுகளைச் சுடவேண்டும். அதுவே நோக்கம். ஆனால் யாரும் அதில் வெற்றி பெறவில்லை. சுவாமிஜி சிறிது நேரம் அவர்களது முயற்சியைப் பார்த்தார், அவர்களது தோல்வியைக் கண்டு சிரித்தார். இதைக் கண்ட அந்த இளைஞர்களில் ஒருவன் அவரை அணுகி, நீங்கள் நினைப்பது போல்  இது அவ்வளவு சாமானிய காரியம் அல்ல. முயன்று பாருங்கள். உங்களுக்கே புரியும் ” என்றான். சவாமிஜி துப்பாக்கியைக்கையில் எடுத்தார். வரிசையாக சுமார் ஒரு டஜன் ஒடுகளைச் சுட்டுத் தள்ளினார். இளைஞர்களால் வியப்பைக் கட்டுப்படுத்திக்கொள்ள இயலவில்லை. நீங்கள் துப்பாக்கிசுடுவதில் நல்ல பயிற்சி உள்ளவராக இருக்க வேண்டும் சரிதானே! என்று கேட்டார்கள் அந்த இளைஞர்கள்! அதற்கு சுவாமிஜி மௌனமாகப் புன்முறுவல் செய்தபடி, நண்பர்களே, என் வாழ்நாளில் இன்றுதான் முதன் முறையாகத் துப்பாக்கியைத் தொடுகிறேன்! என்றார். அந்த இளைஞர்களால் நம்பவே முடியவில்லை. சுவாமிஜி விளக்கினார், எல்லாம் மன ஒருமைப் பாட்டில் தான் இருக்கிறது. மன ஒருமைப்பாட்டுடன் செய்கின்ற எதுவும்  வெற்றியைத் தருகிறது.

.....

கேம்ப் இர்விங்- வாழ்க்கை முறை

...................

 கேம்ப் இர்விங் வாழ்க்கை ஏறக்குறைய கேம்ப்  பெர்சி, ஆயிரம் தீவுப் பூங்கா போன்ற இடங்களின் வாழ்க்கைமுறையைப் போன்றதாகவே இருந்தது. சூரிய உதயமாகின்ற ஐந்து மணிக்கு சுவாமிஜி எழுந்து விடுவார். மெல்லிய குரலில், ஏகம் ஸ்த் விப்ரா பஹுதா வதந்தி. போன்ற மந்திரங்களை ஒதுவார். கூடாரத்தின் அருகில் நிற்பவர்களுக்கு அந்த வேத நாதம் இனிமையாகக்கேட்கும். அருகில் ஓடிய நீரோடையில் மற்றவர்கள் குளிப்பார்கள். குளிர் அதிகம் என்பதற்காக சுவாமிஜி அதில் குளிப்பதில்லை. காலை எட்டு மணியளவில் காலை உணவை முடிப்பார். பத்து மணிக்கு கூட்டு தியானம் நடைபெறும். திறந்த வெளியிலும் மரத்தடியிலும் அவர்கள் தியானம் செய்வார்கள்.

 சிலவேளைகளில் சுவாமிஜி சமைப்பார். மசாலாவை அவரே அரைப்பார். அவர் அரைப்பது மிகவும் மென்மையாக இருக்கும். சமையலில் வழக்கம்போலவே காரம் தூக்கலாக இருக்கும். அந்தக்காரமே மற்றவர்களுக்குச் சாப்பிட சிரமமாக இருக்கும். சுவாமிஜியோ பக்கத்தில் தனியாகக்கொஞ்சம் மிளகுகளை வைத்துக் கொள்வார். ஒரு மிளகைக் கையில் எடுத்து,கையில் சுழற்றி மேலே எறிந்து, ஓர் உல்லாச இளைஞனைப்போல் வாயால் கௌவிச் சாப்பிடுவார். ஒருநாள் ஆன்சலிடம் மிளகு ஒன்றைக்கொடுத்து , இதைச் சாப்பிடு, இது உனக்கு நல்லது செய்யும் என்றார். சுவாமிஜி தருவதானால்விஷத்தைச் சாப்பிடவும் நாங்கள் தயாராகவும் இருந்தோம். எனவே அவர் தந்ததை அப்படியே சாப்பிட்டேன். அவ்வளவு தான் காரத்தைத் தாங்காமல் நான் பட்ட அவஸ்தையைப் பார்த்து உரக்கச் சிரித்தார் அவர். அது மட்டுமல்ல, பிறகும் என்னைக் காணும்போதெல்லாம்  என்ன, இன்னும் அடுப்பு  எரிகிறதா? என்று கேட்டுச் சிரிப்பார்.

 

 ஒரு நாள் ஆன்சல், மிஸ் பெல்லிற்காகக் கற்கண்டு பானகம் தயாரித்துக்கொண்டிருந்தார். கற்கண்டுத் துண்டுகளை உருகவைத்து அதனை நன்றாகக் கிளறி விட்டுக் கொண்டிருந்தார் ஆன்சல். சுவாமிஜி அருகில் நின்று கவனித்தபடியே, நன்றாகக்கொதிக்கவிடு. சர்க்கரையைக் கொதிக்க வைக்கின்ற அளவிற்கு வெண்ணிறமாகும். அந்த அளவிற்கு அதன் அழுக்குவிலகும் என்றார்.

 சுவாமிஜி கடுகு சேர்த்து ஒரு பானகம் தயாரிப்பார். மாலை வேளைகளில் சப்பாத்தி செய்வார். இதற்காக நீரோடையின் கரையிலேயே அவர் ஒரு நிலக்கரி அடுப்பை உருவாக்குவார். அந்தத் தண்ணீரிலேயே மாவைப்பிசைந்து, தட்டி, அடுப்பில் சுட்டுக்கொடுப்பார். தண்ணீர் வேண்டியிருந்தால் ஒரு கரண்டியில் நேராகவே நீரோடையிலிருந்து எடுத்துக்கொள்வார்.

 சுவாமிஜி நிலக்கரி அடுப்பைத்தயார் செய்வதிலும் ஒரு நேர்த்தி இருந்தது. ஒரு நாள் ரூர்பாக் அடுப்பைத் தயார் செய்தார். நிறைய கரி வைத்ததில் அது மிகவும் பெரியதாகி விட்டது. சுவாமிஜி வந்து பார்த்துவிட்டு, அடேயப்பா! இது சப்பாத்திக்காகச்செய்யப்பட்ட அடுப்புபோல் தோன்றவில்லை. இதில் இருக்கிற விறகையும் கரியையும் வைத்து ஒரு சிதையையே தயாரித்து விடலாம் என்றுகூறி அதனைக் கலைத்து விட்டு , தாமே சிறியதாக ஒன்றைத் தயார் செய்தார்.

 பொதுவாக பெண்களே சமையல் செய்தனர். சில வேளைகளில் சுவாமிஜி அவர்களின் சமையலைக் கற்றுக்கொள்வார் அவர் எங்களைப்  பொறுத்த வரையில் எங்களுக்கு ஒரு குழந்தையாகவே இருந்தார். அவருக்காக எதையும் செய்ய நாங்கள்  தயாராக இருந்தோம். அவரது ஆரோக்கியத்தை நாங்கள் அனைவருமே கவனித்துக் கொண்டோம் என்கிறார் மிசஸ் ரூர்பாக்.

 ஒரு முறை சுவாமிஜிக்கு உடல் நிலை சரியில்லை. சுவாமிஜி ஒரு குழந்தைபோல். ”நான் ஓர் ஈயை விழுங்கி யிருப்பேன் என்று தோன்றுகிறது. அதனால் தான் உடல் நிலை சரியில்லை என்றார். அனைவரும் வயிறு வலிக்கச் சிரித்தனர்.

 மாலை வேளைகளில் பலரும் நடக்கச்செல்வதுண்டு.பொதுவாக சுவாமிஜி அமைதியாக கூடாரத்திலேயே இருப்பார். மிசஸ் ரூர்பாக் எழுதுகிறார், நாங்கள் செல்லும் வழியில் விறகு வெட்டிகள் பலர் வேலை செய்து கொண்டிருப்பார்கள். அவர்கள் அவ்வளவு நல்லவர்கள் அல்ல. அந்த வழியாக நான் நடந்து செல்வேன். கடைக்குச்செல்லும்  வழியிலோ பாம்புகள் ஏராளம்.ஆனால் எதுவும் எனக்கு பயத்தைத் தந்ததில்லை. தெய்வ மனிதர் ஒருவரின் சன்னதியில் நான் இருக்கிறேன் என்ற எண்ணம் எப்போதும் என்னுள் இருந்தது. அது எனக்கு ஆற்றலைத் தந்தது.

.....

 சுவாமிஜி பயந்தார்!

.......................................

 இந்தக் கூடாரங்களில் என்ன  நடைபெறுகிறது. இங்கு யார் தங்குகிறார்கள் என்றெல்லாம் அந்த  இடத்திற்கு அருகில் உள்ளவர்களுக்கு ஆர்வம் எழுவது இயல்பு தான். சில வேளைகளில்  அவர்களில் சிலர் எள்ளே வந்து  எட்டிப் பார்ப்பதுண்டு. ஒருநாள் ஒரு பெண் இப்படித்தான் உள்ளே வந்தார். சுவாமிஜி அவனை ஒரு பார்வை பார்த்தார்.அவளில் என்ன கண்டாரோ! ஒரு பேயைப் பார்த்து நடுங்குவது போல் அதிர்ச்சியுடன் கூடாரத்திற்குள் சென்று அமர்ந்துவிட்டார். ஒரு நாள் தியானத்திற்காக  தரத்தடிகளை நோக்கி அனைவரும் சென்று கொண்டிருந்தனர். வழியில் சீப்பு ஒன்று கிடந்தது. சுவாமிஜி அதைக் கையில் எடுத்து, இது உங்களில் யாருடையதாவதா? என்று கேட்டார். அவர்கள், இல்லை, என்றதும் ஏதோ தீயைத் தொட்டவர்போல் அதனைத் தூக்கி எறிந்து விட்டார்.

 ஒரு நாள் தியானத்திற்குப் பிறகு மிஸ் பெல் சுவாமிஜியிடம் கூறினார்.

 பெல்- சுவாமிஜி, இந்த உலகம் ஒரு பழைய பள்ளி என்று எனக்குத்தோன்றுகிறது. இங்கு நாம் அனைவரும் பாடங்கள் படிக்க வந்திருக்கிறோம்.

 சுவாமிஜி-

 அப்படி யார் சொன்னது? எனக்கு அப்படித்தோன்றவில்லை. என்னைப் பொறுத்தவரை இந்த உலகம் ஒரு சர்க்கஸ் கூடாரம். நாம் அனைவரும் கோமாளிகள், கூத்தாடுகிறோம். விழுகிறோம்.

 பெல்-

 ஏன் விழுகிறோம்?

சுவாமிஜி-

 ஏனெனில் விழுவதை நாம் விரும்புகிறோம். விழுவதில் களைப்பு ஏற்படும் போது விடைபெறுகிறோம்.

 சுவாமிஜியின் சான் பிரான்சிஸ்கோ சொற்பொழிவுகளில் இத்தகைய ஒரு மன நிலையைக் காண முடியும். இந்த பிரபஞ்சமே ஒரு மாபெரும் விளையாட்டு விளையாட்டு.

 எல்லாம் வல்ல இறைவன் விளையாடுகிறார். எல்லாம் விளையாட்டே. நீங்கள் விளையாடுகிறீர்கள். உலகங்களுடன் விளையாடுகிறீர்கள்................ எல்லாம் வேடிக்கை. வேறு எந்த நோக்கமும் இல்லை. தூக்கில் தொங்குவதற்காக நிற்பவன் நானே. எல்லா தீயவர்களும் நானே. நரகங்களில் வாட்டப்படுவனும் நானே. அதுவும் ஒரு விளையாட்டுத்தான். என்றெல்லாம் அவர் லட்சியம் என்ற தமது சொற்பொழிவில் அவர் கூறுகிறார்.